Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் :: கொரோனா இடர் காலத்திலும் கருவாடு பதனிடுதலில் சாதிக்கும் பெண்கள்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார்: கொரோனா இடர்காலத்திலும் கருவாடு பதனிடுதலில் சாதிக்கும் பெண்கள்.!

Screenshot-2020-11-19-12-15-37-827-com-a 

தற்போதைய கொரோனா இடர் காலத்தில் பொருளாதார சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் கருவாடு பதனிடும் செயற்பாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ பெண்கள் குழுவினர் தற்போதைய சூழ் நிலையில் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைவாக தமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தற்போது பிரதான தொழிலாக கொண்ட மீன் பிடித் தொழிலில் மீன்கள் ஏற்றுமதி  இன்மையால் மீன்களை நியாய விலையில் கொள்வனவு செய்து அவற்றினை கருவாடாக பதனிட்டு புதிய சந்தை விற்பனையை ஏற்படுத்துவதற்காக தமது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமானது நாட்டில் ஏட்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பாதுகாப்பு செயன் முறையினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

அதற்கமைய கோவிட்-19 தொற்று காரணமாக மீனவர்கள் தமது மீன்களை ஏற்றுமதி மற்றும் சந்தை படுத்துவதில் தொடர்ச்சியாக பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இக்காலப்பகுதியில் மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் வடமாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீனவ பெண்கள் குழுக்களினூடாக சந்தை படுத்த முடியாத மீன்கள் சிலவற்றை மன்னாரில் நியாய விலையில் கொள்வனவு செய்யப்பட்டு கருவாடு பதனிடும் செயட்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறாக பதனிடப்படட கருவடுகள் பொதி செய்யப்பட்டு சந்தைப்படுத்தலுக்கு தயாராகியுள்ளது. குறித்த பணியில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த நடவடிக்கைகள் மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குற்பட்ட மீனவ கிராமங்களிலும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக படங்கள் 

Screenshot-2020-11-19-12-14-26-533-com-a

Screenshot-2020-11-19-12-14-53-495-com-a

Screenshot-2020-11-19-12-15-15-033-com-a

Screenshot-2020-11-19-12-13-26-264-com-a

http://aruvi.com/article/tam/2020/11/19/19411/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நிலவரத்தை அடுத்து இத்தாலியிலும் இவ்வாறான சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இது உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம். இதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம். எவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியிலும் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றமையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இதனை முற்றாக ஒழிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டளவில் போதைப்பொருள் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இலங்கை தங்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லை என்றும் இலங்கையில் தங்களின் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது என்றும் வெளிநாடுகளுக்கு அவர்கள் சென்றார்கள். பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் நோக்கத்திற்காக அவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டார்கள். தற்போது நாம் இதற்கெதிராக செயற்பட்டவுடன், மீண்டும் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். இது ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டியப் பிரச்சினைக் கிடையாது. மாறாக இதற்கு நீண்ட கால செயற்றிட்டமொன்று அவசியப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளும்போது, சில சவால்களுக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளது. தற்போது இதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, விரைவில் மஹர சிறைச்சாலை தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய | Athavan News
    • புயல் காலமென்பதால் - புயல் பகிடி ..👍 கோபி - சுதாகர் ..👌
    • மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன? - கைதிகளின் வன்முறைக்கான காரணம்   மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது சிறைச்சாலை வைத்தியசாலையில் மருந்துகளை வைத்திருந்த கட்டிடத்தை உடைத்து சில மருந்துகளை கைதிகள் அருந்தியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (கட்டுப்பாட்டு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபட்ட கைதிகளினால் சிறைச்சாலையின் பல்வேறு சொத்துக்களுக்கு சோதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் 2,750 கைதிகள் உள்ளதாகவும் அவர்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 1600 கைதிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உணவு உண்ணும் இடத்தில் ஒன்றுகூடிய குறித்த 1600 கைதிகளும் கதவுகளை உடைத்து வௌியில் வந்து தங்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது சிறைச்சாலை அதிகாரி மற்றும் மேலும் சில அதிகாரிகள் கலந்துரையாட சென்றுள்ள போதிலும் கைதிகள் அவர்களை சுற்றிவளைத்து தாக்க முற்பட்டுள்ளதுடன் கற்களை வீசி எறிந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதிகளுக்கு அறிவுறுத்தி போதிலும் அவர்கள் அடங்காத காரணத்தினால் ரபர் குண்டுகளால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்த அவர் இதனையடுத்து சிறைச்சாலையில் மருந்துகள் வைத்திருந்த கட்டிடத்தில் இருந்த மனநோய் சம்பந்தமான மருந்துகள் மற்றும் மேலும் சில மருந்துகளை கைதிகள் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் மேலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் சிறைச்சாலையின் பல சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கைதிகளே இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மருந்துகள் வைத்திந்த கட்டிடத்தில் மன அழுத்தம் மற்றும் தூக்க மருந்துகள் 21,000 இருந்ததாகவும் அவற்றை கைதிகள் அருந்தியுள்ளதாகவும் இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் பித்து பிடித்தவர்கள் போல் நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த மருந்துகள் எந்த காரணத்திற்காக எடுத்துவரப்பட்டன என்பன தொடர்பில் விசாரணைகள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன? - கைதிகளின் வன்முறைக்கான காரணம் (adaderana.lk)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.