-
Tell a friend
-
Similar Content
-
By கிருபன்
அரசாங்கத்திடம் செல்வாக்கிழந்த கருணா ! கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனம் இரத்து
By Battinews
நீண்டகாலமாக அம்பாறை தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் இன்னும் இழுபறி நிலையில் காணப்படுகின்றது . வெள்ளிக்கிழமையன்று கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனத்தை நிறுத்தும்படி அம்பாறை அரச அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது
கடந்த அரசாங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கணக்காளர் நியமனம் வழங்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன .
பாராளுமன்றத்தில் இது பேசும் பொருளாக காணப்பட்டது. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிழக்கிற்கு வந்திருந்த வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர் .
கடந்த பாராளமன்ற தேர்தலில் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா ) கல்முனையை தர முயர்த்தி தருவேன் என பிரச்சாரங்களில் கூறி வந்தார் . இதனை நம்பி கல்முனை பிரதேச மக்களும் தேர்தலில் கணிசமான வாக்குகளை அளித்திருந்தனர் . இதனால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ் பிரநிதித்துவம் இல்லாமல் போனதுடன் அதாவுல்லா எம்.பி ஆகியுள்ளார் .
இதனையடுத்து ஆளுநர் பதவி கிடைக்கும் என்றும் நம்பியிருந்தனர் கடைசியில் அதுவும் ஏமாற்றமே . பின்னர் பிரதமர் மஹிந்தவின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் ஆனால் கல்முனை தரமுயர்த்தல் தொடர்பில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை .
நிறுத்தப்பட்ட கணக்காளர் நியமனத்தை தட்டி கேட்க திராணியற்றவராக விளங்குகிறார் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் பணியே அவருக்கு வழங்கப்பட்ட்தாகவும் அதை அவர் செய்து விட்டார் இப்பொழுது இருக்கும் மஹிந்த அரசாங்கத்தில் இவரை கணக்கெடுப்பதில்லை என கூட்டமைப்பினர் விமர்சிக்கின்றனர்.
தேர்தல் பிரசாரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவே பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார் ஆனால் தற்போதைய அரசாங்கம் ஹாரிஸ் எம்.பி போன்றவர்களை மதிக்கும் அளவிற்கு கருணாவை கணக்கெடுப்பதில்லை .
அம்பாறை தமிழ் மக்கள் கருணாவின் தேர்தல் கால உறுதிமொழியைக் கேட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என நம்பி கடைசியில் ஏமாற்றமே அடைந்துள்ளனர் .
http://www.battinews.com/2020/12/blog-post_24.html
-
By கிருபன்
கொரோனா முடிந்ததும் முதலாவது வேலை கல்முனையை தரமுயர்த்துவது தான் என்கின்றார் கருணா
Published: November 11, 2020 Thuyavan Mathi
நீண்டகாலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து தனித்துவத்தை காட்டியுள்ளோம் எனவும் இந்த தேர்தலில் நான் தோற்கவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வேப்பையடி பகுதியில் பிரதமரின் இணைப்பாளர் அலுவலகத்தை இன்று(11) காலை திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரை விரட்டியடித்து நாம் தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளோம். குறிப்பாக கல்முனை பகுதியில் 89 வீதம் வாக்குகளை பெற்றமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எம்மை பாராட்டினார். கல்முனை தொகுதி மக்களிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பொத்துவிலில் சிறிய மாற்றம் இருந்திருந்தால் நாம் நிச்சயம் வென்றிருப்போம்.தேர்தலின் பின்னர் நான் ஓடி ஒளிந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். நிறைவாகும் வரை மறைவாக இருக்க வேண்டுமென சொல்வார்கள். அதற்காக சிறிது இடைவெளி ஏற்பட்டது.
இருந்த போதிலும் நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார். இந்த அடிப்படையில் மட்டக்களப்பு அம்பாறையை என்னை நம்பி ஒப்படைத்துள்ளார். இந்த அதிகாரங்களை பயன்படுத்தி மேலும் பல மாற்றங்களை இந்த பிரதேசங்களில் கொண்டு வருவேன்.
மக்களுக்காக தொடரந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்காக மாத்திரம் நாம் மக்களை ஏமாற்ற கூடாது. எனக்கு கிடைத்த அதிகாரம் மிக்க பதவி ஊடாக மக்களிற்கு உதவி செய்வேன். இதற்கு தற்போது தடையாக உள்ளது கொரோனா நோய். இந்த நோய் காரணமாக அமைச்சுக்கள் செயலிழந்து உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று தோல்வியடைந்த கலையரசன் என்பவருக்கு தேசிய பட்டியல் கொடுத்துள்ளது. அவர் வாகனத்தில் பவனி வருகின்றார். அவர் ஒரு வேலைத்திட்டம் அம்பாறையில் செய்தால் நான் திரும்பிச்சென்று இருப்பேன். ஒன்றுமே செய்யபோவதில்லை. மக்களை ஏமாற்றவே இருப்பை தக்க வைக்க முயல்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது குழப்பம். கலையரசனுக்கு பதவி வழங்கியதால் கூட்டமைப்பின் செயலாளரின் பதவி பறிபோனது. எங்கள் அம்பாறை மாவட்ட மக்களை எமது இதயத்தில் இருந்து பிரிக்க முடியாது. நானும் கைவிட்டு போக மாட்டேன் என கூற விரும்புகின்றேன்.
அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனை ஒரு இனவாதமாக எவரும் பார்க்க கூடாது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று எமது மக்கள் அவர்களுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளனர். எனவே தான் எதிர்வரும் தேர்தல்களில் எம்முடன் ஒரே சின்னத்தில் இணைந்து போட்டியிட கோடிஸ்வரன்இ கலையரசன் ஆகியோர் உணர்ந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.
கல்முனை விவகாரம் பற்றி பிரதமரிடம் பேசினேன். துறைசார்ந்த அமைச்சர் சரத் வீரசேகரவிடமும் பேசினேன். கொரோனா முடிந்ததும் அவர் கல்முனைக்கு வருவார். கொரோனா முடிந்ததும் முதலாவதாக கல்முனையை தரமுயர்த்துவோம் என குறிப்பிட்டார்.
https://www.meenagam.com/கொரோனா-முடிந்ததும்-முதலா/
-
By முதல்வன்
எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பேன். அதேவேளை, முஸ்லிம் மக்கள் எமது எதிரிகள் அல்லர் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன் என தமிழர் மகா சபை சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனூடாகத் தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெற வேண்டும். இதனை ஓர் இனவாதமாக எவரும் பார்க்கக் கூடாது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புவழங்க வேண்டும்.
இன்று எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குச் சாட்டை அடி கொடுத்துள்ளனர். இதனை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
போராளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இந்தத் திட்டத்தை எமது புலம்பெயர் மக்களின் உதவியுடன் மேற்கொள்ளத் தற்போது தீர்மானித்துள்ளோம்.
முதலில் சுய தொழில் முயற்சி வாய்ப்புக்களை ஏற்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சில கிராமங்களில் மக்களுக்கு அரசியல் தெளிவின்மை காணப்படுகின்றது.
கடந்த காலத் தேர்தல்களின்போது சில தரப்பினர் சாராயப் போத்தல்கள் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றார்கள். இதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரின் தோல்வியைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.
விளையாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டமை வரவேற்கக் கூடியது. இது எமது இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புக்களை வழங்கக் கூடியதாக இருக்கும். அந்தவகையில் அமைச்சர் நாமல் ராஜபக்சவை விமர்சிக்க முடியாது. நாங்கள் சொல்கின்ற கருத்துக்களை அரசு ஏற்றுக்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
https://www.tamilwin.com/politics/01/255946?itm_source=parsely-api?ref=recommended3
-
By sudaravan
கருணாவுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் இடமளிக்கப்படும் என் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் பொது செயலாளர்கள், இந்த விடயத்தை தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தேர்தலுக்கு பின்னர் தமக்கு தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் கருணா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.pathivu.com/news/41509/57//d,article_full.aspx
-
-
Topics
-
Posts
-
By மல்லிகை வாசம் · Posted
எம்மவர்கள் இப்படியான கலைகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். நம்மூரிலும் பல நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான உரிய மதிப்புக்கொடுக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை. நல்ல இசைக்கான பரந்துபட்ட ரசிகர்கள் கூட்டம் அங்கு இல்லை என நினைக்கிறேன். ஒரு காரணம், நாம் வைத்தியர், பொறியாளர், கணக்காளர், தகவல் தொழிநுட்ப வேலையில் உள்ளோர், அரசாங்க வேலையில் உள்ளோர் இப்படியானவர்களையே மதிக்கிறோம்; அப்படியான வேலைகளைத் தேடியே ஓடுகிறோம். ஒருவர் கலைத்துறை சார்ந்த கல்வியைத் தொடர விரும்பினால், Artஆ என ஏளனமாகப் பார்த்தும், அது உனக்குச் சோறு போடாது எனவும் கூறி அந்தக் கனவை வீணடித்துவிடுகிறோம். கலைத்துறை சார்ந்தோர் பொதுவாகவே வேலைக்காகத் திண்டாடுபவர்கள் என்பது உண்மை தான். கர்நாடக இசை போன்ற பாரம்பரிய இசைக்கு மதிப்பு பெரிதாக இல்லை; மக்களின் ரசனையும் குறைந்துவிட்டது. இதனால் தான் கலைஞர்களுக்கான தேவை மற்றய துறைகளை விட மிக மிகக் குறைவு. இருந்தாலும், வேலைவாய்ப்புக்காக ஓடுவது என்பதை மட்டும் வாழ்வின் இலட்சியமாக் கொள்ளாது, இசை போன்ற நல்ல கலைகளையும் பயிலுதல், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கலை நிகழ்வுகளில் பங்கு பெறுதல் இவை மூலம் நம்மவர்களும் தம் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். மிக முக்கியமான ஒன்று பெற்றோர் தம் குழந்தைகளை சிறு வயதிலேயே இதற்காகத் தயார் பண்ணுவது; பல இந்தியர்கள் இதைச் செய்து தான் நல்ல பல இசைக் கலைஞர்களை உருவாக்குகிறார்கள். குழந்தைக்கு ஆர்வம் இருந்தால் அதை ஊக்குவித்து, நல்ல ஆசிரியர் ஒருவரிடம் முறையாகப் பயிற்றுவித்து, பிள்ளையும் அதை மிகுந்த ஈடுபாட்டுடன் இடைவிடாது பயின்று கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தினால் அதுவும் வளர்ந்து பெரிய கலைஞனாகலாம். ஆனால் புலமைபரிசில் பரீட்சை, சா/த, உ/த பரீட்சை, பல்கலைக்கழகம், தொழில், திருமணம், குழந்தை பெறுதல் என முடிவில்லாத வாழ்க்கை ஓட்டத்தில் பலரின் கலையார்வம் குன்றுகுறது/ முடக்கப்படுகிறது/ முற்றிலும் மறக்கடிக்கப்படுகிறது. இந்தியர்களுக்குள்ள இன்னொரு அனுகூலம், இசைப்பரம்பரையில் காலம்காலமாக ஊறி வந்த குழந்தைக்கு சங்கீதஞானம் இயற்கையாகவே வந்துவிடுகிறது. எனவே இசைக்கல்வி மூலம் அதனை வளர்த்து மெருகூட்டுவது எளிது. கூடவே அவர்களின் வாழ்க்கை முறையோடு கலந்தது இசை; திருமண விழாக்களில் இசைக்கச்சேரி முக்கிய அம்சமாக இருக்கும்போதும், சுப தினங்களில் இசை மூலம் இறைவனை வழிபடும்போதும், மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் இசை பெரிதாகக் கொண்டாடப்படும்போதும் அச்சூழலில் வாழும் குழந்தையும் இசையை நோக்கி இயல்பாக ஈர்க்கப்படுகிறது. அது இசையைப் பயில சமூகம் ஊக்குவிக்கிறது; அது இசை நிகழ்ச்சி வைக்கும்போது சமூகம் கொண்டாடுகிறது. இதனால் இசைக்கலைஞர்கள் பலர் இந்தியாவில் உருவாவதும், கொண்டாடப்படுவதும் அதிசயமல்ல. அத்துடன் இன்று வளர்ந்துவரும் / புதிய கலைஞர்கள் கைவசம் வேறு தொழிலையும் வைத்திருக்கின்றனர். பலர் பகுதி நேரகமாக இசை நிகழ்வுகளை வழங்குகின்றனர். எனவே நம்மவர்கள் இசை போன்ற கலைகளை மதித்துப், பரந்த அளவில் கொண்டாடினால், அவற்றைப் பயில்வது ஊக்குவிக்கப்பட்டால், கலைஞர்களுக்கான வாய்ப்புக்களும் பெருமளவில் பல்வேறு நிகழ்வுகளில் வழங்கப்பட்டால் நம்மிலும் நல்ல பல கலைஞர்கள் உலக அரங்கில் பிரகாசிக்கமுடியும். இன்றைய இயந்திர வாழ்வில் மனிதத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தக் கலைகள் மிகவும் உதவும் என்பதும் என் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே கலைகளை இயன்றால் பயில்க, ஆற்றுகை செய்க! இல்லாவிட்டால் ரசித்தலுடன், ஊக்கமும் தருக! -
தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது .... ஆகவே நீங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள்.🤗
-
அது ஒன்றும் இல்லை நிகே புதிய பதவி ஏற்பாளர்கள் பைடன் மற்றும் கமலாக்காவோடு நின்றுட்டம்.🖐️ 😄
-
நன்றி பகிர்வுக்கு, உங்கள் முறை வித்தியாசமாக இருக்கு. நாங்கள் வெள்ளை அரிசி மா கலந்து தான் செய்வது வழமை (அரிசி மா 4கப், 2கப் கடலை மா, 1தேக்கரண்டி நெய், எள், பச்சைதண்ணி) உங்கள் முறையில் செய்து பார்க்கனும் எள், ஓமம் இல்லாமல் செய்யலாம் சிறி, சும்மா பச்சிப்படாமல் சுட்டு சாப்பிடுங்கள், முறுக்கு சுடுவது வெகு சுலபம்
-
கொக்கட்டிச் சோலை வந்தவனே தேவா! நீ அமர்ந்து அருள் மழை பொழியும்..
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.