-
Tell a friend
-
Similar Content
-
By Justin
கோவிட் 19: மாறும் வைரசும், மாறாத மனிதர்களும்!
தென்கிழக்கு இங்கிலாந்தின் நகரங்களில் புதிதான நிலை 4 கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப் பட்டிருக்கின்றன. இதற்குக் காரணமாக, புதிதாக விகாரமடைந்த நவீன கொரனா வைரஸ் அங்கே இனங்காணப் பட்டிருப்பது சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
வைரசுகளுக்கு மாற்றமே வாழ்க்கை!
வைரசுகள் ஆர்.என்.ஏ (RNA) அல்லது டி.என்.ஏ (DNA) எனப்படும் நியூக்கிளிக் அமிலங்களால் ஆக்கப் பட்டவை. ஆர்.என்.ஏ வைரசுகள் இயற்கையாகவே பெருகும் போது விகாரமடைந்து புதிய விகாரிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. தடுப்பூசி இது வரை கண்டு பிடிக்கப் படாத எயிட்ஸ் வைரசான எச்.ஐ.வி (HIV) வேகமாக விகாரமடைவதில் பிரபலமான ஒரு வைரஸ் குடும்பம். இன்னொரு வேகமாக மாறும் தன்மை கொண்ட ஆர்.என்.ஏ வைரசு வருடா வருடம் எம்மைத் தாக்கும் இன்ப்ளூழுவன்சா ஏ வைரஸ். இதனால் தான் இன்புழுவன்சாக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தயாரித்துப் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
நவீன கொரனா வைரசும் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ். எச்.ஐ.வி அல்லது இன்புழுவன்சா போல வேகமாக விகாரமடையா விட்டாலும், விகாரமடையக் கூடிய வைரஸ் தான் இந்த நவீன கொரனா வைரஸ். கடந்த வருடம் கண்டறியப் பட்டதில் இருந்து 4000 வரையான விகாரங்கள் நவீன கொரனா வைரசில் அடையாளம் காணப் பட்டிருக்கின்றன.
ஏன் மாற்றங்களும் விகாரங்களும்?
"மாறாததெல்லாம் மண்ணோடு" என்ற கோச்சடையான் வரிகள் தான் இந்தக் கேள்விக்கு ஒரு வரிப் பதில். வைரசுகளின் வாழ்க்கை என்பது ஏனைய சிக்கலான உயிர்கள் போன்றது அல்ல. வைரசுகளின் வாழ்வுக்கு ஒரே நோக்கம் "நிலைத்திருப்பது" தான்!. அப்படி நீண்ட காலம் நிலைத்திருக்க இரண்டு வேலைகள் செய்ய வேண்டும்:
ஒன்று - தாம் தங்கிப் பெருக்கக் கூடிய உயிர்களைத் தேடி அடைய வேண்டும்.
இரண்டு: அப்படியான ஒரு உயிர் கிடைக்கும் போது வேகமாகப் பெருக வேண்டும்.
இந்த இரண்டாவது வேலையை ஆர்.என்.ஏ வைரசுகள் செய்யும் போது, ஒரு சிக்கல் ஏற்படுகிறது. வேகமாக பெருகும் அவசரத்தில், தங்கள் ஆர்.என்.ஏ மூலக் கூறுகளைப் பிரதி செய்வதில் சில தவறுகளை விடுகின்றன. இது நாம் பார்த்தெழுதல் போட்டியில், வேகமாக எழுதும் போது சில எழுத்துப் பிழைகள் விடுவது போன்ற ஒரு நிலைமை. மேலே நாம் பார்த்த நவீன கொரனா வைரசின் 4000 விகாரங்களில் பெரும்பகுதி இப்படியான தவறுகள் தான்.
இந்த தவறுகளில் சில வைரசைப் பலவீனப் படுத்தி அது தப்பி வாழ இயலாதவாறு மாற்றி விடக் கூடியவை: எனவே இந்த விகாரங்களால் நவீன சார்ஸ் வைரஸ் பலமிழந்தால் அது மனிதனின் அதிர்ஷ்டம்.
அப்படியல்லாமல், இந்த விகாரங்களில் சில வைரசின் தப்பி வாழும் திறனை அதிகரித்தால், வைரசுக்கு அதிர்ஷ்டம், மனிதனுக்கு ஆப்பு!
மனிதனுக்கு ஆப்பு!
இப்போது தென்கிழக்கு இங்கிலாந்தில் நடந்திருப்பது இது தான்: செப்ரெம்பர் மாதத்தில் இருந்து தென்கிழக்கு இங்கிலாந்தின் 60 நிர்வாகப் பிரிவுகளில் VUI202012/01 என்ற விகாரி வைரஸ் பரவலாக அதிகரித்து வந்திருக்கிறது. அப்படியானால் ஏன் செப்ரெம்பரிலேயே அரசு எச்சரிக்கை செய்யவில்லை என்ற கேள்வி எழலாம்! பதில் - செப்ரெம்பர் மாதத்தில் இந்த விகாரி வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டாலும், அதைத் தொடர்ந்து கண்காணித்து வந்த போது தான் இந்த விகாரி வைரசின் பரவல் அதிகமாக இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதில் ஒழிப்பு மறைப்பு எதுவும் இல்லை, இது சாதாரணமாக நடக்கும் epidemiological surveillance என்ற ஆய்வு நடவடிக்கை. இது வரை இந்த விகாரி வைரசில் 17 வெவ்வேறு விகாரங்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.
இந்த 17 மாற்றங்களில் முக்கியமானது, N502Y எனப்படும் விகாரமாக இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட மாற்றம் நவீன சார்ஸ் வைரசு எங்கள் உடலில் உள்நுழையப் பயன்படுத்தும் வைரசின் புரத (spike protein) மூலக்கூற்றில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்த விகாரி வைரஸ் எங்கள் உடலில் இலகுவாக நுழைந்து கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறது. முன்னர் இருந்த நவீன கொரனா வைரசுகளோடு ஒப்பிடுகையில், இந்த விகாரி வைரஸ் 70% அதிக தொற்றும் திறனைக் கொண்டிருக்கிறது.
தொற்றும் திறனில் 70% அதிகரிப்பு, எங்களுக்கு என்ன விளைவுகள்?
70% அதிகரிப்பு என்பது கிட்டத்தட்ட இந்த விகாரி வைரஸ் தன் தொற்றும் திறனை இரட்டிப்பாக்கியிருக்கிறது என்று கொள்ள முடியும். இது வரை வைரசைக் காவிய ஒருவர் இருவருக்கு தன் வைரசுத் தொற்றை வழங்கி வந்திருந்தால், இந்த விகாரியால் தொற்றப் பட்ட ஒருவர் , இனி 4 பேருக்கு தன் தொற்றைக் கடத்துவார் என்று அண்ணளவாகக் கூற முடியும்!.
இதனால் தொற்றுக்கள் மிக வேகமாகப் பரவும். இப்படிப் பரவும் போது, மருத்துவக் கவனிப்புத் தேவையான தொற்றுக்களும், மரணங்களும் அதிகரிக்கும். எனவே, இந்த விகாரி வைரஸ் கோவிட் நோயின் தீவிரத்தை நோயாளியில் அதிகரிக்கா விட்டாலும் அதிகரித்த பரவலால் மருத்துவமனைகள் மீதான சுமையும், மரணங்களும் அதிகரிக்கும் என்பது முக்கியமான ஒரு விடயம்!
யார் மேல் தவறு?
இந்த விகாரி வைரஸ் மிகப் பெரும்பான்மையாக தென்கிழக்கு இங்கிலாந்தில் தான் காணப்படுகிறது. அதனால் இது அந்தப் பிரதேசத்திலேயே உருவாகியிருக்கிறது என்பது தான் தற்போதைய முடிவு. இது வைரசின் தன்னிச்சையான மாற்றத்தினால் உருவாகியிருப்பதால், மனிதர்களின் நேரடியான தவறால் இது உருவானதாகக் கூற இயலாது. ஆனால், நவீன கொரனா வைரஸ் கட்டுப் பாடின்றிப் பரவ மனிதர்கள் இடங்கொடுக்கும் போது தான் இப்படியான விகாரங்கள் நடக்கவும் மேடை அமைக்கப் படுகிறது. தொற்ற வாய்ப்புகள் இல்லையேல், வைரசுக்கு தன்னைப் பெருக்கிக் கொள்ளவும் தேவையும் சந்தர்ப்பமும் இல்லாமல் போய் விடுகிறது. எனவே, மனித நடத்தைகள் மறைமுகமாக புதிய விகாரிகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.
என்ன செய்யலாம்?
மேலே குறிப்பிட்டிருப்பது போல: மனித நடத்தையை நாம் இதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டியதே ஒரே வழி. அதிர்ஷ்டவசமாக, இந்த விகாரி உடலுக்கு வெளியே தப்பி வாழும் கால அளவு, சவர்க்காரத்தினால் அழிக்கப் படும் இயல்பு என்பவற்றை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே, நாம் அதே சமூக இடைவெளி பேணல், கைகளைக் கழுவுதல் போன்ற தடுப்பு முறைகளைப் பின்பற்றுவதே போதுமானது.
என் புலம்பல்!
இங்கே விஞ்ஞானத் தகவல்களில் இருந்து நகர்ந்து என் தனிப்பட்ட அவதானங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கிலாந்து வாசிகள் மன்னித்தருள்க!
கோவிட் 19 இனைக் கையாண்ட விதத்தைப் பொறுத்தவரை, நான் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்த நாடு பிரிட்டன் (குறைவாக எடை போட்டு ஆச்சரியப் பட்ட நாடு: சிறிலங்கா). ஆயிரக்கணக்கான ஆய்வுப் பல்கலைக் கழகங்களை வைத்துக் கொண்டு அமெரிக்கா செய்யும் அறிவியல் சாதனைகளை சில டசின் பல்கலைக் கழகங்களை வைத்துக் கொண்டே சமம் செய்யும் வினைத் திறன் கொண்ட நாடு பிரிட்டன். இத்தகைய அறிவியல், மருத்துவ பாரம்பரியம் கொண்ட நாட்டில் ஆரம்பக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர தலைமை விஞ்ஞானியாக இருந்தவர் காரணமின்றித் தயங்கியதும், பின்னர் அடுத்தடுத்து அரசு அறிவுறுத்தலில் விட்ட தவறுகளும் நியாயப் படுத்த முடியாத தோல்விகள்!
பிரிட்டனின் மையக் கட்டுப்பாடு குறைபாடாக இருந்தாலும், மக்கள் நடந்து கொண்ட விதத்தினால் கோவிட் 19 இனை கொஞ்சம் வீரியமற்றதாக மாற்றியிருக்க முடியும். நடந்ததோ எதிரானதாக இருந்தது: கோடை கால விடுமுறைக்கு வழமை போல சென்று, பிரிட்டன் திரும்பி, தனிமைப் படுத்தலையும் நிராகரித்து பிரித்தானிய, பிரதானமாக இங்கிலாந்து வாசிகள் நடந்து கொண்டது கோவிட் 19 கட்டுப்பாட்டில் ஏற்பட்ட இரண்டாவது பாரிய ஓட்டை!
இப்போது இருக்கும் கேள்வி: இந்த பரவல் சக்தி கூடிய வைரசின் பின்னராவது பிரித்தானிய, இங்கிலாந்து வாசிகள் தங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைத் தவிர்த்து பரவலைத் தடுப்பார்களா என்பது தான்!
தொகுப்பு : ஜஸ்ரின்
மூலங்களும், மேலதிக தகவல்களும்:
1. விகாரி வைரஸ் பற்றிய தகவல்கள்: https://www.bmj.com/content/371/bmj.m4857
2. இன்னொரு விகாரம் பற்றிய அறிக்கை https://pubmed.ncbi.nlm.nih.gov/32697968/
-
By Justin
யானை சறுக்கும் போது எலியும் ஒரு உதை விடுமாம்!
"பூமியில் மனிதனின் இருப்பிற்கு ஒரேயொரு பாரிய சவால் வைரசுகளே!" - டாக்டர். ஜோஷுவா லெடபெர்க், (மருத்துவ நோபல் பரிசு 1958).
கோவிட் 19 கடந்த டிசம்பரில் ஆரம்பித்து ஒரு உலக வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப் படி, 2020 குளிர் காலத்திலும் கோவிட் தொற்று எங்களோடு இருக்கப் போவதாகவே நம்பப் படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் , நாம் இன்னும் சில வைரஸ் நோய்களால் சுவாசப் பாதிப்பிற்குள்ளாவது வழமை. இன்புழுவன்சா எனப்படும் fபுளூ வைரஸ் தான் இந்த குளிர்கால சுவாசத்தொற்றுகளின் பிரதான காரணி. இன்புழுவன்சாவோடு சேர்ந்து முக்கியத்துவம் குறைந்த மூன்று வகையான கொரனாவைரசுகளும், றைனோ வைரஸ் எனப்படும் மூக்கொழுகல் வைரசும், RSV எனப்படும் இன்னொரு வகையான வைரசும் எம்மைக் குளிர்காலங்களில் தாக்குகின்றன.ஆனால், எல்லா வைரசுகளும் ஒன்றாக ஒரே காலத்தில் இப்படி வலம் வரும் போது, கோவிட் தொற்றையும் இவற்றையும் எப்படி இனம்பிரித்து அறிவது?
இன்புழுவன்சாவுக்கு தனியான பரிசோதனை உண்டு
அதிர்ஷ்டவசமாக இன்புழுவன்சா வைரஸ் எங்கள் மூக்கில்/தொண்டையில் இருக்கிறதா என்று 15 நிமிடங்களில் கண்டறிந்து கொள்ளக் கூடிய பரிசோதனைகள் ஏற்கனவே புளக்கத்தில் இருக்கின்றன. சாதாரணமாக வலம் வரும் இன்புழுவன்சா அனேகமானோரில் தீவிரம் குறைந்த நோயை மட்டுமே ஏற்படுத்துவதால், இந்த பரிசோதனையைச் செய்யாமலே இது காலவரை நாம் சமாளித்து வந்திருக்கிறோம். எதிர் வரும் குளிர்காலம் வித்தியாசமாக இருக்கப் போகிறது. சுவாச அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இந்த இன்புழுவன்சா பரிசோதனையை அதிகம் செய்ய வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வெறும் பரிசோதனையோடு மட்டுமன்றி, மக்களும் சில விடயங்களில் அதிகம் கவனம் செலுத்துவதால், கோவிட் இன்புழுவன்சாக் குழப்பங்களைக் குறைக்கலாம்!
இன்புழுவன்சா தடுப்பூசி
ஒவ்வொரு ஆண்டும், உலகில் வலம் வரும் மூன்று வகையான இன்புழுவன்சா வைரசுகளுக்கெதிராக தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் தயார் செய்து வழங்குகின்றன. இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒருவருக்கு, இன்புழுவன்சா தொற்று ஏற்பட்டால் அவருக்கு நோய் வரலாம், ஆனால் தீவிர நோயாக அது இருக்காது. எனவே தான், வருடாந்தம் இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொண்ட 50% பேரில் நோய் வந்தாலும் கூட, அது தீவிர நோயையோ, மரணத்தையோ ஏற்படுத்தாமல் தடுப்பதால், இன்புழுவன்சா தடுப்பூசி என்பது ஒரு உயிர் காப்பு மருந்து போலக் கருதப் படுகிறது. இன்புழுவன்சா தடுப்பூசியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு காரணம் herd immunity எனப்படும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி". எந்த சமூகத்திலும் இன்புழுவன்சா நோயினால் அதிகம் பாதிக்கப் படக்கூடிய ஆனால் மருத்துவ காரணங்களால் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள முடியாத மக்கள் சிலர் இருப்பர். அவர்கள் இன்புழுவன்சா நோயினால் தாக்கப் படாமல் இருக்க வேண்டுமெனில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான உடல் நிலை கொண்டோர் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால், சமூகத்தில் இன்புழுவன்சா வைரசு பரவுவது குறைந்து, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டோர் காக்கப் படுவர்! இது தான் herd immunity இன் பயன் பாடு!
இன்புழுவன்சாவிற்கு மருந்து இருக்கிறது.
1970 களில் இருந்தே இன்புழுவன்சா நோய் தீவிரமாக வரக் கூடிய ஆட்களில் பயன் படுத்தக் கூடிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பாவனைக்கு வந்து விட்டன. நோய் குணங்குறிகள் வெளிப்பட்ட 48 மணிநேரத்திற்குள் வழங்கப் பட்டால், இந்த மருந்துகள் நோய் முற்றாமல் தடுக்கும் சக்தியுடையவை. சில சமயங்களில், இன்புழுவன்சா தொற்று வராமல் தடுக்க வேண்டிய நோயாளிகளில், முன் கூட்டிய (prophylaxis) தடுப்பு மருந்துகளாகவும் இவை பயன்படுத்தப் படலாம்!.
யானையை உதைக்கும் எலியாக இன்புழுவன்சா மாறுமா?
இரண்டு நாட்கள் முன்பு சீனாவில் இருந்து வந்திருக்கும் ஒரு தகவல் கோவிட் பற்றிய கவனத்தை கொஞ்சம் குறைத்து இன்புழுவன்சாவின் பக்கம் ஈர்த்திருக்கிறது. பன்றிகளில் இருந்து வெகுவாக மனிதனுக்குத் தொற்றும் வாய்ப்புள்ள ஒரு இன்புழுவன்சா வைரசு இனங்காணப் பட்டிருக்கிறது. இது மனிதனில் பெருந்தொற்றாக உருவாகும் வாய்ப்பு என்னவென்று தெரியாத போதும், எச்சரிக்கையுணர்வு ஏற்பட்டிருக்கிறது. உண்மை என்னவெனில், இன்புழுவன்சா வைரஸ் கோவிட் 19 இனை உருவாக்கும் வைரசை விட 30 மடங்கு வேகமாக மாறக் கூடியது! இதனால் தான் சாதாரண இன்புழுவன்சா வைரசுக்கே ஒவ்வொரு வருடமும் புதிதாக தடுப்பூசி தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. காலத்திற்குக் காலம் இன்புழுவன்சா வைரசு மிக வீரியம் பெற்று பெருந்தொற்றை ஏற்படுத்தி வருவது நடக்கிறது. மிகப் பாரிய 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் H1N1 என்ற வீரியம் மிக்க இன்புழுவன்சாவினால் உருவானது. முப்பது முதல் ஐம்பது மில்லியன் மக்கள் ஸ்பானிஷ் காய்ச்சலால் இறந்தனர். இதே போன்ற இன்னொரு H1N1 வடிவத்தில் வந்த 2009 பெருந்தொற்றில் அரை மில்லியன் மக்கள் வரை இறந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எனவே , இது மீண்டும் நிகழலாம்.
ஆனால், நிலைமை பயப்படும்படி பயங்கரமாக இல்லை. மனிதர்களில் இந்த புதிய இன்புழுவன்சா வராமல், தடுப்பூசி அதற்கெதிராக தயார் செய்து வழங்குவார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால், இந்த புதிய வைரஸ் இன்புழுவன்சா எதிர்ப்பு மருந்துகளால் கொல்லப் படக்கூடியதாகவே இருக்கும் என்பதால், தீவிர நோய், மரணம் என்பன தவிர்க்கப் படக் கூடியவையாக இருக்கும்.
இதை விடவும், அனைத்து இன்புழுவன்சா வைரசுகளும், கோவிட் 19 இன் வைரசு போலவே சவர்க்காரத்தினாலும், அல்ககோல் கொண்ட தொற்று நீக்கிகளாலும் இலகுவாக அழிக்கப் படக் கூடியவை என்பதால், நாம் இப்போது பயன் படுத்தும் தொற்று தடுப்பு முறைகளும் எம்மை எந்த இன்புழுவன்சா வைரசுகளில் இருந்தும் பெரிதும் காக்கும்!
எனவே, எதற்கும் இந்தக் குளிர்காலத்தில் இன்புழுவன்சா தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், கோவிட் 19 தொற்றுத் தடுப்பு வழிகளைப் பின்பற்றுங்கள். சுவாசக் குணங்குறிகள் ஏற்பட்டால் வைத்தியரை நாடி ஒரு தடவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்! இவையே இப்போதைக்கு இன்புழுவன்சா எமக்கு மேலதிக தலையிடி தராமல் இருக்க நாம் எடுக்கக் கூடிய இலகு வழிகள்!
தொடர்பு பட்ட செய்தி: https://www.sciencemag.org/news/2020/06/swine-flu-strain-human-pandemic-potential-increasingly-found-pigs-china
நன்றி
-ஜஸ்ரின்
-
-
Topics
-
Posts
-
By மல்லிகை வாசம் · Posted
இல்லை தோழர். படம் வெளியாகி நான் அதைப் பார்க்காமல் அப்படிச் சொல்லக்கூடாது! 😀 இருந்தாலும் கடந்த 10, 15 வருடகாலத்தில் வெளியான மணிரத்னம் படங்களை வைத்துப் பார்க்கும்போது (ஒரு சில படங்களைத் தவிர) அதிக எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது! நூலை இன்னும் முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. படம் வெளிவந்த பிறகு வாசித்தால் அந்த வாசிப்பு அனுபவம் கூட ஆறுதலாக இருக்குமோ என்னவோ! 😃 -
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
மணிரத்னதின் இருட்டுபடத்தை விட "வெப் சீரிஸ்" கொஞ்சம் வெளிச்சமாக இருக்கும் என்டு சொல்ல வாறியல்..👌 101 % உண்மை தோழர்..👍 ☺️..😊 -
மாலை வேலை ஆலையில் முடிந்து, வாழைச்சேனையில் உள்ள சுங்காங்கேணிக்குச் செல்ல இரவு 10மணிக்கு மேலாகிவிடும். ச.கு னாவின் பெற்றோல் செற்றுக்கு அப்பால் எங்கள் வீடு செல்லும் வீதி ஒரே கும்மிருட்டாக இருக்கும். ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் எங்களைத் தூரத்தில் வரும் நண்பனின் தேவாரப் பாடல்கள் எழுப்பிவிடும், மிகவும் பயந்தவன், அவன் சைக்கிளுக்கு லைற்ரும் இல்லை. அந்த மாலை வேலை அவனுக்கு தேவாரம், திருவாசகம், புராணம் என பல பாடல்களை பாடவைத்து இறையருளையும் பெற வைத்தது.
-
By மல்லிகை வாசம் · Posted
திரைப்படம், வெப் சீரிஸ் என இரு வேறு தளங்களுக்காக பொன்னியின் செல்வன் உருவாவது ரசிகர்களுக்குப் பெருவிருந்தே என நினைக்கிறேன். அத்துடன் வெப் சீரிஸில் இக்கதையை மிக விரிவாகக் காட்சிப்படுத்தும் அனுகூலம் இருக்கலாம். திரைப்பட வடிவம் இரு பாகங்களாக வெளியாகுமென அறிந்தேன். 4 மணி நேரப்படமாம். இரு பாகங்களையும் சேர்த்தோ தெரியவில்லை. -
By தனிக்காட்டு ராஜா · Posted
உங்க நாட்டுல என்ன முழு அடைப்பா ?? அல்லது படம் பார்க்கலயா சாமி விமர்சனத்திற்கு இந்த மனுசன் தான்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.