Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதயநிதி கைது: தலைவர்கள் கண்டனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உதயநிதி கைது: தலைவர்கள் கண்டனம்!

spacer.png

 

வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை தலைமைக் கழக அறிவிப்பின்படி இன்று (நவம்பர் 20) கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் தொடங்கிய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருக்குவளையில் பேசி முடித்து மேடையில் இருந்து கீழே இறங்கியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

உதயநிதிகைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் திமுகவினர் சாலைமறியலில் இறங்கினர். இந்நிலையில் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை சில மணித்துளிகளில் போலீஸார் விடுவித்தனர்.

இதற்கிடையில் உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

“தமிழகம் மீட்போம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரைப் பயணத்தை திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. பரப்புரைப் பயணத்தை, தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்கு வித்திட்ட தமிழ் ஒளிவிளக்காம் முத்தமிழறிஞர் எங்கள் தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை வீட்டில் இருந்து கால் பதித்து அங்கிருந்து தொடங்கினார். பயணம் தொடங்கிய இடத்திலும், வழியெங்கும் குவிந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிமுக அரசு, காவல்துறையின் துணையோடு இந்தப் பயணத்தை நசுக்க முடிவெடுத்துள்ளது. உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடக்க இருந்த முதற்கட்ட பயணத்தை தொடங்கிய இடத்திலேயே மறித்த அதிமுக அரசின் அராஜக போக்குக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நித்தமும் ஒரு மாவட்டத்துக்குப் போய்,அரசு நிகழ்ச்சி,ஆய்வு என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளை தரம் தாழ்ந்து விமர்சித்து தனது அரசியல் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பேட்டிகள் கொடுப்பது, கலந்தாலோசனைகள் செய்வது என்பதை அவரோ அமைச்சர்களோ அவர்களது கட்சியோ நிறுத்தவில்லை. ஆனால் திமுக நடத்தும் கூட்டங்களாக இருந்தால் அதற்கு அனுமதி மறுப்பதை வழக்கமாக வைத்துள்ளது அரசு. ஆளுநர் மாளிகை நோக்கிய மகளிர் பேரணியைத் தடுத்து, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோரைக் கைது செய்தது இந்த அரசு. ஆனால் அமைச்சர்களுக்கோ, ஆளும்கட்சிக்கோ எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

இதை வைத்துப் பார்க்கும் போது, திமுகவின் தேர்தல் பணிகளைத் தடுக்கும் நோக்கத்துடன் தான் கொரோனா கட்டுப்பாட்டுகள் என்ற திரைமறைவுக் கட்டுப்பாடுகளை எடப்பாடி பழனிச்சாமி தொடர்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது.இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி கைது செய்யப்பட்டாலும், இந்த பரப்புரை பயணம் நிற்காது” என்று தெரிவித்துள்ளார்.

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி, “முதலமைச்சர் எடப்பாடி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் திமுக தலைவர்களோ எங்கும் செல்லக்கூடாது. அடிமை அதிமுக அரசுக்கு திமுகவின் பிரச்சாரத்தின் முதல் நாளே பயம் தொற்றி விட்டது. கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி கைதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவருடைய பிரச்சார பயணம் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள் செய்தியில், “திருக்குவளையில் பொதுமக்களைச் சந்திக்க முயன்ற, திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்தது, கடும் கண்டனத்திற்கு உரியது.

கருத்து உரிமையை, பேச்சு உரிமையை யாராலும் தடுக்க முடியாது. மிசா, தடா, பொடா போன்ற சட்டங்களாலும் முடியவில்லை. நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி என்ற அச்சத்தில், எடப்பாடி பழனிச்சாமி அரசு, இத்தகைய அடக்குமுறையில் ஈடுபட்டு உள்ளது. ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது, எதிர்க்கட்சிகளின் கடமை. அதற்காக, பொதுமக்களைச் சந்திக்கும்போது பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர, சந்திக்க விடாமல் தடுக்க, எந்த அதிகாரமும் இல்லை. ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது; அண்ணா தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கவும் முடியாது”என்று கூறியுள்ளார்.

 

https://minnambalam.com/politics/2020/11/20/40/udhayanithi-arrest-leaders-reactions

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நிலவரத்தை அடுத்து இத்தாலியிலும் இவ்வாறான சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இது உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம். இதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம். எவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியிலும் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றமையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இதனை முற்றாக ஒழிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டளவில் போதைப்பொருள் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இலங்கை தங்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லை என்றும் இலங்கையில் தங்களின் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது என்றும் வெளிநாடுகளுக்கு அவர்கள் சென்றார்கள். பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் நோக்கத்திற்காக அவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டார்கள். தற்போது நாம் இதற்கெதிராக செயற்பட்டவுடன், மீண்டும் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். இது ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டியப் பிரச்சினைக் கிடையாது. மாறாக இதற்கு நீண்ட கால செயற்றிட்டமொன்று அவசியப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளும்போது, சில சவால்களுக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளது. தற்போது இதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, விரைவில் மஹர சிறைச்சாலை தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய | Athavan News
    • புயல் காலமென்பதால் - புயல் பகிடி ..👍 கோபி - சுதாகர் ..👌
    • மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன? - கைதிகளின் வன்முறைக்கான காரணம்   மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது சிறைச்சாலை வைத்தியசாலையில் மருந்துகளை வைத்திருந்த கட்டிடத்தை உடைத்து சில மருந்துகளை கைதிகள் அருந்தியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (கட்டுப்பாட்டு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபட்ட கைதிகளினால் சிறைச்சாலையின் பல்வேறு சொத்துக்களுக்கு சோதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் 2,750 கைதிகள் உள்ளதாகவும் அவர்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 1600 கைதிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உணவு உண்ணும் இடத்தில் ஒன்றுகூடிய குறித்த 1600 கைதிகளும் கதவுகளை உடைத்து வௌியில் வந்து தங்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது சிறைச்சாலை அதிகாரி மற்றும் மேலும் சில அதிகாரிகள் கலந்துரையாட சென்றுள்ள போதிலும் கைதிகள் அவர்களை சுற்றிவளைத்து தாக்க முற்பட்டுள்ளதுடன் கற்களை வீசி எறிந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதிகளுக்கு அறிவுறுத்தி போதிலும் அவர்கள் அடங்காத காரணத்தினால் ரபர் குண்டுகளால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்த அவர் இதனையடுத்து சிறைச்சாலையில் மருந்துகள் வைத்திருந்த கட்டிடத்தில் இருந்த மனநோய் சம்பந்தமான மருந்துகள் மற்றும் மேலும் சில மருந்துகளை கைதிகள் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் மேலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் சிறைச்சாலையின் பல சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கைதிகளே இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மருந்துகள் வைத்திந்த கட்டிடத்தில் மன அழுத்தம் மற்றும் தூக்க மருந்துகள் 21,000 இருந்ததாகவும் அவற்றை கைதிகள் அருந்தியுள்ளதாகவும் இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் பித்து பிடித்தவர்கள் போல் நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த மருந்துகள் எந்த காரணத்திற்காக எடுத்துவரப்பட்டன என்பன தொடர்பில் விசாரணைகள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன? - கைதிகளின் வன்முறைக்கான காரணம் (adaderana.lk)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.