எம் செல்வங்களின் தியாகத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் ! பசீர் காக்கா

By
கிருபன்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Similar Content
-
By கிருபன்
இன்று மாவீரர் தினம்!
November 27, 2018 இன்று மாவீரர் தினம்
ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளை பெற்று, சுதந்திர இனமாக வாழ வேண்டுமென்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் நாள்.
ஈழ விடுதலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் மொத்தமான 30,000 வரையான மாவீரர்கள் ஆகுதியாகியுள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த முதல் மாவீரன் லெப். சங்கர் (சத்தியநாதன்) உயிர்நீத்த நவம்வர் 27ம் திகதியையே புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினார்கள்.
தமது அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களின் உடல்களை எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் சிக்க அனுமதிக்ககூடாது, உயிர்நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் விதைப்பது, அவர்களை ஆத்மார்த்தமாக அஞ்சலிப்பது என விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து உயரிய நடைமுறையை புலிகள் பேணினார்கள். இதுவே, 1989ஆம் ஆண்டு மாவீரர் தினமாக பரிணமித்தது.
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில் புலிகளின் முதலாவது மாவீரர்தினம் அனுட்டிக்கப்பட்டது. மணலாற்று காட்டுக்குள் இருந்த ஜீவன் முகாமின் ஒரு பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறைகள் இருந்தன. அங்குதான் முதலாவது மாவீரர்தினம் அனுட்டிக்கப்பட்டது.
அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாக அனுட்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால், மாவீரர்தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
மாவீரர் வாரத்தில் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட அந்த குடும்பங்களின் நலனோம்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு மாவீரர் தினத்திலும், அந்த வருடத்தின் மாவீரர் தொகையை புலிகள் வெளியிடுவார்கள். உரிமைகோர முடியாத தாங்குதல்களில் மரணமானவர்கள், அப்படியான விபத்துக்களில் மரணமானவர்கள் தொகையை இதில் இணைப்பதில்லை. அது புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.
2008ஆம் ஆண்டு மாவீரர்தினமே புலிகளால் அனுட்டிக்கட்ட இறுதி மாவீரர்தினமாகும். அந்த வருடத்தின் ஒக்ரோபர் 30ம் திகதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவடைந்ததாக புலிகள் அறிவித்தனர்.
2009 மே 19ம் திகதி வரையான யுத்தத்தின் இறுதிநாள் வரை சுமார் 30,000 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கலாமென கருதப்படுகிறது.
2009 ஜனவரியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி துயிலுமில்லத்தையும் இராணுவம் கைப்பற்றியது. இதன் பின்னர் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் இரணைப்பாலையில் விதைக்கப்பட்டன. 2009 பெப்ரவரி இறுதியில் அந்த பகுதியும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வர, அதன் பின்னர் இரட்டைவாய்க்கால் சந்திக்கு அண்மையாக இருந்த கடற்புலிகளின் தளத்திற்கு அருகில் உடல்கள் விதைக்கப்பட்டன.
இந்த பகுதிக்கும் இராணுவம் வந்ததன் பின்னர், புலிகளின் இறுதி துயிலுமில்லத் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் அமைக்கப்பட்டது. 2009 மே 13ம் திகதி காலை வரை இந்த துயிலுமில்லத்தில் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் விதைக்கப்பட்டன.
2009 யுத்தம் முடிந்த பின்னர், உயிர்நீத்த மறவர்களை அஞ்சலிப்பதை தடுக்க அரசுகள் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டன. சட்டம், பாதுகாப்புத்துறை ஆன மட்டும் முயற்சித்தன. கல்லறைகளும், நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. இருந்தாலும், தமிழர்கள் நெஞ்சில் சுமக்கும் துயிலுமிடங்களில் அந்த தியாகிகளை விதைத்து அஞ்சலித்து வருகிறார்கள்.
http://www.pagetamil.com/25248/
-
By கிருபன்
மாவீரர் கனவு நிறைவேறும் வரை எங்களுடைய போராட்டங்களை தடுக்க முடியாது...
தமிழ் இனத்தின் மீது அடக்குமுறை கூடக்கூட தமிழ் மக்களின் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடிச்செல்லும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘எம் மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும் நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் நிகழ்வு தொடர்பிலான நீதிமன்றத் தடையுத்தரவு மற்றும் வாகரை பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலே மாவீரர் துயிலுமில்லங்களை பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் வருடாவருடம் எமது மாவீரர்களின் நினைவுகூரலை செய்வதற்காக மாவீரர் துயிலுமில்லங்கைளை அப்பிரதேச மக்களுடன் இணைந்து துப்பரவுசெய்து வருகின்றோம்.
கார்த்திகை 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரைக்குமான காலப்பகுதியில் வேறு நிகழ்வுகளைத் தவிர்த்து எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடி, அவர்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூருவதற்காக எமது மக்கள் ஆயத்தமாகிக் கொண்டிருப்பார்கள்.
அந்த அடிப்படையிலே இவ்வருடமும் வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் மக்கள் தங்களின் உறவுகளை, மாவீரர்களை நினைவுகூருவதற்கான பணிகளை ஆரம்பிக்கின்ற வேளை பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து நீதிமன்றத் தடையுத்தரவினால் தடுத்தும் வருகின்றார்கள்.
அந்தவகையில், நேற்று வாகரை மாவீரர் துயிலுமில்லத்தின் நிலைப்பாடு தொடர்பாக அறிவதற்காக நான் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். அவ்வேளையில் அத்துயிலுமில்லத்தைச் சூழ பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு யாருமே செல்லமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது.
இருப்பினும் நான் அங்கு சென்று வருகின்ற வழியில் என்னை மாங்கேணியில் வைத்து வாகரைப் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றார்கள். இனிமேல் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது, மக்களைத் தூண்டக் கூடாது என்றவாறு கடுமையான தொனியில் விரட்டினார்கள். அதற்கான பதிலை அவர்களுக்குத் தெரிவித்தேன். பின்னர் சுமார் எட்டு மணியளவில் என்னை விடுவித்தார்கள்.
கெடுபிடிகள் மூலம் என்னை அடக்கலாம். ஆனால், எம்மக்களின், எமது இனத்தின் உணர்வை அடக்க முடியாது. எங்களது உணர்வுகளைத் தடுக்கத்தடுக்க மீண்டும் மீண்டும் உங்கள் மீது, உங்கள் இராணுவத்தின் மீது, அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீது சர்வதேச அழுத்தங்கள் கூடுமே தவிர என்றும் குறையாது.
எங்களை அடக்கி ஒடுக்க முற்படுவது முட்டாள்தனமான வேலை. எங்களைப் பொருத்தவரையில் எத்தடைகள் வந்தாலும் வருடந்தோறும் எங்களுக்காக உயிர் நீர்த்தவர்களை நாங்கள் பூசிப்போம், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம், அவர்களை நினைவுகூருவோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இந்த நாட்டின் நீதித்துறை பெரும்பான்மை இனத்தை மையப்படுத்தியதாக இருந்தாலும் நாங்கள் எங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.
எமது மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும், எமது நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
https://www.thaarakam.com/news/2cc60352-8b65-43a3-a3d3-bd9243f8b2cc
-
By கிருபன்
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்
வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.
1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி,
நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.
"எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளில் விளக்கேற்றுவேன்.
இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.
எனவே நான் வீட்டில் மனக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
https://www.ibctamil.com/srilanka/80/154728?ref=home-imp-parsely
-
By கிருபன்
எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற காலம் மாவீரர் வாரம் நவம்பர் 21....27
தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவிற்கொள்வது தொன்று தொட்டு வந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாயகத்தில் இன அழிப்பினை மேற்கொண்ட பேரினவாத சிறீலங்கா அரசு அதன் பின்னர் தமிழர்களின் சுதந்திரங்ளை பறிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்போரின் போது முதற்க களச்சவாவடைந்த லெப்ரினன் சங்கர் அவர்களின் நினைவாக நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தோறும் மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரமாக 21-27 வரை கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் மாவீரர் எழுச்சி நாட்களாக 25,26,27 ஆம் நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன இந்த நாட்களில்தான் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுவதும் வீதிகள் தோறும் அலங்காரம் செய்வதும் மாவீரர்களின் எழுச்சி நாளுக்காக
மக்கள் அனைவரும் எழுச்சி பதாகைகைள கட்டுவதுமாக தாயகம் அன்று எழுச்சிகோலம் பூண்ட காலம்.
இன்று அடக்கு முறைக்கு மத்தியில் சிங்கள இனவெறியர்கள் மாவீரர்களை புதைத்த இடங்களில் நிலைகொண்டுள்ளதுடன் மாவீரர்களின் தடையங்கள் அனைத்தும் சிங்கள காடையர்களால் அழிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டு துடைத்தொழிக்கப்பட்ட நிலையில் சிங்கள காடையர்களின் நினைவுத்தூபிகள் அங்காங்கே எழுந்து நிக்கின்றன அது இனவெறியின் அடையாளமாக இன்றும் தமிழ்மக்களால் காணக்கூடியதாக இருக்கின்றது.
போரில் உயிரிழந்தவர்கைள நினைவிற்கொள்ள எவரும் தடைவிதிக்கமுடியாது என்று உலகநாடுகள் சொன்னாலும் பேரினவாத சிறீலங்கா அரசாங்கம் பல அடக்குமறைகளை மறைமுகமாக கையாள்கின்றது. இன்னிலையில் உலகையே அச்சுறுத்தும் கொரோன மத்தியிலும் 2020 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளை தமிழ் மக்கள் தங்கள் வீடுகளில் நினைவிற்கொள்வார்கள்
கார்த்திகை பூ பூக்கின்ற மாதம் எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற மாதம்,வானம் மழைத்துளியாய் கண்ணீர் சிந்துகின்ற காலம் இது மாவீரர் வாரம் வீரம் செறிந்த மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எங்கள் தெய்வீக பிறவிகளை நினைவிற்கொள்ளும் மாவீரர் வாரம் நவம்பர் 21.
https://www.thaarakam.com/news/21d1a2b6-e6eb-4851-9d47-2c5ead9ddf6e
-
By கிருபன்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 அறிவித்தல் - பிரித்தானியா
இன்று உலகில் பரவி வரும் கொல்லுயிரி ((COVID 19) பிரித்தானியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. அதன் விளைவாக பிரித்தானிய அரசின் சட்ட விதிகளுக்கமைய இந்த வருடம் எம் புனிதர்களைப் பூசிக்கும் நிகழ்வான தமிழீழத் தேசிய மாவீரர் நாளை நாம் ஒன்று கூடி பேரெழுச்சியுடன் நடாத்த முடியாமல் உள்ளது. ஆயினும்
பிரித்தானிய சட்ட விதிகளுக்கு அமைவாக கடந்த காலங்களில் நாம் எப்படிப்பட்ட பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்தோமோ அதே பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 27ம் திகதி காலை 11.30 மணிக்கு நேரலை ஊடாக தமிழ் தொலைக்காட்சி இணையம் TTN, இணையத்தளங்கள் மற்றும் அனைத்து சமூக ஊடகங்கள் வழியாகவும் நீங்களும்; உங்கள் வீடுகளில் இருந்து இணைந்து மாவீர தெய்வங்களுக்கான வணக்கத்தினை செய்யும் புகைப் படத்தினை tccukinfo@gmail.com எனும் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் நேரலையில் உங்களையும் இணைத்துக்கொண்டு நாம் என்றென்றும் அவர்கள் வழி நடப்போம் என்ற உறுதியையும் உலகிற்கு எடுத்துரைப்போம்.
அன்பான உறவுகளே வழமையாக நாங்கள் மண்டபத்தில் வணக்கத்திற்கு வைக்கப்படும் அனைத்து மாவீரர் திருவுருவப் படங்களும் அன்றைய தினம் வைக்கப்படும். அத்துடன் உங்கள் உறவுகளின் படங்கள் இன்னும் வைக்கப்படாமல் இருப்பின் நீங்கள் கீழ்காணும் மின்னஞ்சலுக்கு 21-11-20 முன்னர் மாவீரரின் திருவுருவப் படத்தினை அனுப்பி வைத்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
– நன்றி –
மாவீரர் பணிமனை – பிரித்தானியா
eelam27uk@gmail.com
020 3371 9313 / 0796882208
https://www.thaarakam.com/news/5388e808-e79d-4228-8bf2-d7747eeb986d
-
-
Topics
-
Posts
-
கெலவி:- தம்பி சுமந்திரா குழல் புட்டு அவிச்சு வைச்சிருக்கிறன் திண்டுட்டு போ ராசா. சுமந்திரா:- இப்ப வேண்டாமணை பசிக்கேக்கை வாறன் எணை...
-
உங்களை யார் இலங்கையின் நீதித் துறையில் நம்பிக்கை வைக்கச் சொன்னது.. ? நம்பிக்கை வைத்தது உங்கள் தவறல்லவா..🤥 பயமுறுத்தப்பட்டதால் சாட்சிகள் முன்வரவில்லை என்கிறீர்கள்..👍 நன்றி...👏👏
-
By nunavilan · பதியப்பட்டது
அரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்!!! -
By Ahasthiyan · Posted
மிகவும் பயனுள்ள தகவல்கள் நாதமுனி, மற்றும் கருத்தாளர்களுக்கு நன்றி . அடுத்த 15 வருடத்தில் வளர்ச்சி காணவிருக்கும் சில தொழில் நுட்பங்கள்: 1. மாற்று எரிபொருள் (eg Hydrogen energy) 2. 5G, 6G 3. AI 4. Nano technology etc இன்றைய இளம் தலைமுறையினர் இந்த துறைகள் சார்ந்தும் படிக்கலாம்.நீண்ட கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இவை அனைத்திற்கும் மென் பொருளின் பாவனைகள் மிக மிக அவசியம். 90 இல் இலத்திரனியல் படித்தேன், Power Electronics இல் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கின்றேன். 90 இல் இருந்த தொழில் நுட்பம் இப்போ நன்றாக மாறி விட்டது. உதாரணமாக இந்த மாற்றங்களில் சிலவற்றை கற்றதால் (medical LASER (Ruby, YAG ), IPL, SMPS, Power factor correction, LABVIEW etc) மேலும் அடுத்த 10 வருடங்களுக்கு இந்த துறையில் நீடிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வளவு உடலை வருத்த தேவையில்லை. மேலே பலர் சொன்னது போல், உங்கள் வேலை அன்றாட தேவைகளுக்கு பயன்படும் பயிட்சிகளை பெறுங்கள் , உதாரணம் கணக்கியல் XERO , நீங்கள் சிறு நிறுவனம் வைத்திருந்தால் அதன் கணக்கு வழக்குகளை நீங்களே பார்க்கலாம். -
By சுவைப்பிரியன் · Posted
உண்மையில ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் அரசியல் தலைவர்கள் எள்று சொல்ப்படுவர்களால் தமது வாக்கு வங்கிற்க்காக இளைஞர்களை உசுப்பேத்தினது தான் ஆரம்பம்.பின்பு உணர்வு ரீதியாக ஆயுதப் போராட்டம் வடிவு பெற்றது வேறு விடையம்.சிங்கள தலைமைகள் எப்படி இன வாதத்தை தமது வாக்கிற்க்காக பாவித்தார்களோ அதுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை தமிழ் தலைமைகளின் ஊசுப்பேத்தல்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.