Jump to content

சிவாஜிலிங்கத்தை தீண்டியது பாம்பு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்தை தீண்டியது பாம்பு

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
spacer.png

வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்றிரவு (20.11.2020) மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் வாயிற்கதவிலிருந்த  பாம்பு ஒன்று, அவரின் கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டதையடுத்து, அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் சிகிச்சையளிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/94876

Link to post
Share on other sites
 • Replies 52
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

https://i.postimg.cc/VLJjNGSp/AD038806-27-D1-45-D7-B1-D5-EEAD18846-A62.jpg

இது விசக் கடி பற்றியது இல்லை, ஆனால் இப்படி ஒன்று எனக்கும் நடந்தது. 11 அல்லது 12 வயதிருக்கும், கடுமையான இருமல் வந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. ஆனானப்பட்ட டொக்டர் பிலிப் ப

இருக்கலாம். ஆனால் உறுதி செய்யப் பட்ட தகவல்களையும் உதாசீனம் செய்து விட்டுத் தான் சில பாரம்பரிய மருத்துவங்கள் முன் நிறுத்தப் படுகின்றன. உதாரணம்: மஞ்சளில் இருக்கும் குகுமினை மனித உடல் உறிஞ்சிக் கொள்

 • கருத்துக்கள உறவுகள்

பாம்புக் கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கம் தப்பினார்! கடித்த பாம்பு உயிரிழந்தது!

 • November 22, 202012:47 pm

பாம்பு கடிக்கு இலக்கான வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆபத்தான கட்டத்தைக் கடந்து சாதாரண நிலைக்கு வந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 
நேற்றிரவு வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்காக அலுவலகத்தின் கதவை அவர் மூடியபோது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியது.

ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் தற்போது சாதாரண நிலைக்கு வந்துள்ளார்.

இதேவேளை, அவருக்குக் கடித்த பாம்பைப் போத்தில் ஒன்றில் அடைத்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அது உயிரிழந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.IMG_9552-300x199.jpg

https://www.meenagam.com/பாம்புக்-கடிக்கு-இலக்கான/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி நலம் பெற வேண்டுகின்றோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kavi arunasalam said:

தூரிகையோடு வந்த தோழருக்கு வணக்கம்கள்..👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

சிவாஜி நலம்பெற வேண்டுகின்றேன்.....ஆனால் அந்தப் பாம்பு செத்தது பரிதாபம்.....!  😁

ஓவியமும் கருத்தும் அருமை.....காண்பது சந்தோசம் கவி அருணாசலம்......!  👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவிஅருகாச்சலம் உங்களை இங்கு மீன்டும் கன்டது மிக்க மகிழ்ச்சி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

கவி அருணாசலம் ஐயாவை மீண்டும் நல்லதோர் கருத்துப்படத்தோடு காண்பதில் மகிழ்ச்சி😁

Link to post
Share on other sites

பாம்பை அடித்தே  கொன்று விட்டார்களா அல்லது ஐயாவின் விஷம் பாம்புக்கு ஏறிட்டுதா:unsure:
 
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே சிறந்த ஒளதடமாக விளங்குவது பாம்பின் விடம். அது இப்போ சிவாயிலிங்கம் அவர்களின் இரத்தத்தில் கலந்து அவரது உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தியைப் பலமடங்காக அதிகரித்துள்ளது. இனி அவரை எந்தப் பாம்பு தீண்டினால் என்ன! கொரோனாதான் அவருள் புகுந்தாலென்ன! எதுவுமே நடக்காது அவர் நலமுடன் பல்லாண்டு வாழ்வார்!!. 💐🤣    

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

பாம்பை அடித்தே  கொன்று விட்டார்களா அல்லது ஐயாவின் விஷம் பாம்புக்கு ஏறிட்டுதா:unsure:
 
பாம்பிற்குத் தேவையில்லாத வேலை. 

😂

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

பாம்பிற்குத் தேவையில்லாத வேலை. 

😂

அவரை மாதிரி.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 ஒருவர் உயிரை விட்டு மற்றவரை காத்தார் நல்ல பாம்பாக இருக்கும்..... வாழ்பவரை வாழ்த்துவோம். வாழ்க நலமுடன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

அவரை மாதிரி.

உங்கள் கருத்துப்படி அவர் தேவை இல்லாத விடயங்களில் தலையிடுகிறார். இருக்கலாம்.

Link to post
Share on other sites

இதை வாசித்ததில் இருந்து என் மனதை அரிக்கும் கேள்வி:

பாம்பை ஏன் போத்தலில் போட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன பாம்பு கடித்தது? அதன் விஷத்தை முறிக்க எந்த மருந்து கொடுக்கவேண்டும்? என்பதை மருத்துவர் விரைவாக, நேரத்தை விரயமாக்காமல் சிகிச்சையை ஆரம்பிப்பதற்காக  என நினைக்கிறேன். கண்ணாடிபோத்தலில் இருக்கும் பாம்பை கண்டுகொள்வதற்கு இலகு. 

Link to post
Share on other sites

பழைய காலத்தில் தான் பாம்பை முடிந்தால் அடித்து கடி வாங்கியவருடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. இப்போது polyvalent antivenom என்று நாகம், புடையன், கண்டங்கருவளை என பல பாம்புகளின் விஷத்தை முறிக்கும் மருந்து ஒன்றாகவே பாவனையில் இருக்கிறது. 

இந்த மருந்துகளை பாம்புக் கடி வாங்கிய நாய்களுக்கு ஏற்றிய அனுபவம் இருக்கிறது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் பற்றிக்கலோ மோட்டர் கராச்சிற்குரிய அறை ஒன்றில் நான் சிலகாலம் தங்கியிருக்கவேண்டி வந்தது. அந்தக் கராச்சில் வாகனங்கள் கழுவும் வேலைபார்த்த ஒருவர் செய்வினை, பில்லி, சூனியங்கள் எடுப்பவர் என்று அங்குள்ளவர்கள் சொன்போது நான் நம்பவில்லை.  அவருக்கு விசக்கடி வைத்தியமும் தெரியும் என்று சொன்னார்கள். ஒருநாள் ஒரு சிறுவன் அவரிடம் ஓடிவந்து அண்ணனைப் பூச்சி கடித்துவிட்டது என்று சொன்னான். சிறுவனைப் பார்த்ததும் அவர் பயப்படவேண்டாம் அது சாரைப்பாம்பு என்று சொல்லி சில இலைகளின் பெயரைச் சொல்லி அவற்றின் சாற்றைக் கொடுக்கும்படி கூறினார். அடுத்த சில நாட்களில் சிறுவனின் அண்ணன் வந்து அவருக்கு நன்றிசொல்லி தன்னைச் சாரைதான் கடித்தது என்று சொல்லிப் பணமும் கொடுக்க முயன்றபோது அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். இந்த நிகழ்வை நேரில்கண்ட எனக்கே இன்றும் நம்புவதற்குக் கடினமாக உள்ளது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

மட்டக்களப்பு மாந்திரீகம் என்பது இதுதானோ .... 😂😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

மட்டக்களப்பு மாந்திரீகம் என்பது இதுதானோ .... 😂😂

பாயோட பசை வைக்கிறயும் சொல்லல இந்த யாழ்ப்பாணத்தாருக்கு சூனியம் வச்சு என்னத்தையா கண்டம் நாங்கள் மட்டு வந்தவர்கள் விட்டு போக மனமில்லாமல் இருப்பதற்கு அங்க உள்ளவன் வச்ச சேதி தான் அது 🤣

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பாயோட பசை வைக்கிறயும் சொல்லல இந்த யாழ்ப்பாணத்தாருக்கு சூனியம் வச்சு என்னத்தையா கண்டம் நாங்கள் மட்டு வந்தவர்கள் விட்டு போக மனமில்லாமல் இருப்பதற்கு அங்க உள்ளவன் வச்ச சேதி தான் அது 🤣

கிடுகு வேலிக் கசாச்சாரத்திற்கு நேர் எதிர் எண்டா கதை இப்படித்தான் வரும் கண்டியளோ 😂😂

 • Haha 1
Link to post
Share on other sites
13 hours ago, Justin said:

பழைய காலத்தில் தான் பாம்பை முடிந்தால் அடித்து கடி வாங்கியவருடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. இப்போது polyvalent antivenom என்று நாகம், புடையன், கண்டங்கருவளை என பல பாம்புகளின் விஷத்தை முறிக்கும் மருந்து ஒன்றாகவே பாவனையில் இருக்கிறது. 

இந்த மருந்துகளை பாம்புக் கடி வாங்கிய நாய்களுக்கு ஏற்றிய அனுபவம் இருக்கிறது. 

14 hours ago, satan said:

என்ன பாம்பு கடித்தது? அதன் விஷத்தை முறிக்க எந்த மருந்து கொடுக்கவேண்டும்? என்பதை மருத்துவர் விரைவாக, நேரத்தை விரயமாக்காமல் சிகிச்சையை ஆரம்பிப்பதற்காக  என நினைக்கிறேன். கண்ணாடிபோத்தலில் இருக்கும் பாம்பை கண்டுகொள்வதற்கு இலகு. 

சாத்தான்/ஜஸ்ரின் விளக்கத்துக்கு நன்றி.

Link to post
Share on other sites
7 hours ago, Paanch said:

மட்டக்களப்பில் பற்றிக்கலோ மோட்டர் கராச்சிற்குரிய அறை ஒன்றில் நான் சிலகாலம் தங்கியிருக்கவேண்டி வந்தது. அந்தக் கராச்சில் வாகனங்கள் கழுவும் வேலைபார்த்த ஒருவர் செய்வினை, பில்லி, சூனியங்கள் எடுப்பவர் என்று அங்குள்ளவர்கள் சொன்போது நான் நம்பவில்லை.  அவருக்கு விசக்கடி வைத்தியமும் தெரியும் என்று சொன்னார்கள். ஒருநாள் ஒரு சிறுவன் அவரிடம் ஓடிவந்து அண்ணனைப் பூச்சி கடித்துவிட்டது என்று சொன்னான். சிறுவனைப் பார்த்ததும் அவர் பயப்படவேண்டாம் அது சாரைப்பாம்பு என்று சொல்லி சில இலைகளின் பெயரைச் சொல்லி அவற்றின் சாற்றைக் கொடுக்கும்படி கூறினார். அடுத்த சில நாட்களில் சிறுவனின் அண்ணன் வந்து அவருக்கு நன்றிசொல்லி தன்னைச் சாரைதான் கடித்தது என்று சொல்லிப் பணமும் கொடுக்க முயன்றபோது அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். இந்த நிகழ்வை நேரில்கண்ட எனக்கே இன்றும் நம்புவதற்குக் கடினமாக உள்ளது.

இப்படிதான், ஒரு முறை என்னையும் அம்மம்மாவையும் விட்டு விட்டு மிகுதி குடும்பம் எல்லாம் கொழுப்புக்கு போன சமயம் அவவை ஒரு புலிமுகசிலந்தி கடித்து விட்டது.

கிழவி ஆஸ்பத்திரி வேண்டாம் பரியாரியிட்ட போவம் என அடம்பிடித்து சொல்லியும் கேட்காமல் கொட்டடியில் ஒரு பரியாரியாரிட்ட போனோம்.

போகும் போது எமக்கு என்ன கடித்தது என தெரியாது, மனுசன் பார்த்தே இது புதுமை சிலந்திதான் எண்டு சொல்லிப்போட்டார்.

பிறகு ஒரு வெள்ளை கல்லை தந்தார். அந்த கல் காயத்தில் பிசின் போட்டு ஒட்டியமாரி நிற்கும். கல் முழுவதும் நீலமானதும் விழுந்து விடும்.

நீல கல்லை எடுத்து பாலில் போட்டால், பால் நீலமாகும், கல் வெள்ளையாகும். கல்லை எடுத்து மறுபடியும் கடித்த இடத்தில் வைத்து சிகிச்சையை தொடர வேண்டும்.

கேட்டால் அந்த கல் நஞ்சை உறிஞ்சுவதாயும் பின் பாலில் வெளியேற்றுவதாயும் சொன்னார்கள்.

இப்படி ஒரு கல் கிடைக்காதா என்று இன்றுவரை தேடுகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

அது உண்மைதான் ......சொன்னால் நக்கல் செய்வார்கள்....ஆனால் அது சாதாரணமான விடயமல்ல. குரு வழியாக அந்த ஆற்றல்கள் வருபவை. ஒருத்தர் வைத்தியராகவோ அன்றி பொறியியலாளராகவோ கடைசி ஆறேழு வருடங்கள் கருத்துன்றிப் படித்து பட்டம் பெறுகின்றார் என்றால் அதைவிட அதிகமாக அவர்கள் இவ் விடயத்தில் காலத்தைக் கழித்திருப்பார்கள். மூலிகைகளுக்காக காடுமேடெல்லாம் அலைந்து அர்த்த ராத்திரிகளில் மயாணங்களில் குருவோடு சேர்ந்து பூசைகள்,யாகங்கள் என்று செய்திருப்பார்கள். என்ன ஒரு கறுமமென்றால் சிலர் இந்த ஆற்றல்களை நல்லதுகளுக்கு பயன்படுத்துவார்கள்.எதையும் இலவசமாக பணம் உட்பட பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனையோர் அதை தீயவழிகளில் பயன்படுத்தி கேவலமானவர்களாக போய்சேருவார்கள்....!

--- ஒருத்தர் இப்படியான தகவல் சொல்ல வரும்பொழுதே அவர் வரும் நேரம், எந்தக் கால் வைத்து உள்ளே வருகிறார், அந்த நேரத்தில் வெளியே வரும் பட்சிகள் மற்றும் விலங்குகள் போன்ற பலப்பல விடயங்களை மனதுக்குள் ஓரிரு நிமிடங்களில் கணித்தே சொல்லி விடுவார். இந்நேரத்தில் பல்லி சொல்வதைக்கூட கவனத்தில் கொள்வர். சம்பந்தப்பட்டவர் பிழைக்க வழியில்லை என்றாலோ அல்லது இவர் வரும்போது அங்கே அவர் இறந்து விட்டாலோ மருந்துகள் குடுக்க மாட்டார்கள்.அதுக்கு அவசியமில்லை நீங்கள் போங்கோ என்று அனுப்பி விடுவார்கள்....!

இப்பொழுது நான் கொட்டடி வைத்தியர் பற்றி சொல்ல நினைக்க கீழே கோஷன் சே எழுதியுள்ளார்.பாஞ்சும், கோஷன் சேயும் இங்கு எழுதியதால் தான் நான் இவற்றை எழுதுகின்றேன்......!

44 minutes ago, goshan_che said:

இப்படிதான், ஒரு முறை என்னையும் அம்மம்மாவையும் விட்டு விட்டு மிகுதி குடும்பம் எல்லாம் கொழுப்புக்கு போன சமயம் அவவை ஒரு புலிமுகசிலந்தி கடித்து விட்டது.

கிழவி ஆஸ்பத்திரி வேண்டாம் பரியாரியிட்ட போவம் என அடம்பிடித்து சொல்லியும் கேட்காமல் கொட்டடியில் ஒரு பரியாரியாரிட்ட போனோம்.

போகும் போது எமக்கு என்ன கடித்தது என தெரியாது, மனுசன் பார்த்தே இது புதுமை சிலந்திதான் எண்டு சொல்லிப்போட்டார்.

பிறகு ஒரு வெள்ளை கல்லை தந்தார். அந்த கல் காயத்தில் பிசின் போட்டு ஒட்டியமாரி நிற்கும். கல் முழுவதும் நீலமானதும் விழுந்து விடும்.

நீல கல்லை எடுத்து பாலில் போட்டால், பால் நீலமாகும், கல் வெள்ளையாகும். கல்லை எடுத்து மறுபடியும் கடித்த இடத்தில் வைத்து சிகிச்சையை தொடர வேண்டும்.

கேட்டால் அந்த கல் நஞ்சை உறிஞ்சுவதாயும் பின் பாலில் வெளியேற்றுவதாயும் சொன்னார்கள்.

இப்படி ஒரு கல் கிடைக்காதா என்று இன்றுவரை தேடுகிறேன்.

ஒருமுறை அயலில் ஒருவருக்கு பாம்பு கடித்து அவரிடம் போயிருக்கிறோம்.(இரவில்ஆஸ்பத்திரி என்றாலும் பாம்பு கடித்தாலும்  எதுவென்றாலும் காருக்கு எங்கள் வீட்டுக்குத்தான் வருவினம். நான்தான் சாரதி). இரவென்றபடியால் என்ன பாம்பு என்று தெரியவில்லை. ஆனால் அவர் கொஞ்சம் யோசித்து விட்டு கடிவாயையும் பார்த்து விட்டு இது இன்ன பாம்புதான், கொத்த வேண்டும் என்று பலமாக கொத்தவில்லை என்று சொல்லிவிட்டு இலை சாறுகள் விட்டு ஒன்று மாற்றி ஒன்றாக அஞ்சாறு கோழிகளை கொண்டுவந்து அவற்றின் ஆசனவாயை அந்த கடித்த இடத்தில் வைக்க சில கோழிகள் இறந்துபோக, கோழி உயிரோடு இருக்கும் வரை அந்த வைத்தியம் நடக்கின்றது.....இரவிரவாக அவரை தூங்க விடாமல் பார்த்திருக்க வேண்டும்....பின் குணமாகி காலையில் திரும்பினோம்....!

( கதைக்களத்தில் "பொட்டல்காட்டில் ஒரு கதை" என்னும் கதையில் ஒரு சம்பவம் இந்த அனுபவத்தில் எழுதியதுதான்).

உங்களுக்கு தெரியும் விடத்தல்தீவு மன்னாருக்கு அண்மையில் உள்ளது.அங்கு பாஸ்கரன் என்றொரு ஐயா இருந்தவர். இதுபோன்ற வைத்தியங்கள் பலவற்றிலும் அவர் மிகவும் பிரபலமானவர்.அசாத்தியமான திறமையுள்ளவர்......மேலும் சைக்கிளில் சில திருத்தங்கள் செய்து அங்குள்ள குளத்தில் குடும்பத்தோடு பிரயாணம் செய்து காட்டியவர்.அந்நாளில் பத்திரிகைகளில் படங்களுடன் அந்தப் படங்கள் வந்திருந்தன....!

 • Thanks 1
Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

இப்படிதான், ஒரு முறை என்னையும் அம்மம்மாவையும் விட்டு விட்டு மிகுதி குடும்பம் எல்லாம் கொழுப்புக்கு போன சமயம் அவவை ஒரு புலிமுகசிலந்தி கடித்து விட்டது.

கிழவி ஆஸ்பத்திரி வேண்டாம் பரியாரியிட்ட போவம் என அடம்பிடித்து சொல்லியும் கேட்காமல் கொட்டடியில் ஒரு பரியாரியாரிட்ட போனோம்.

போகும் போது எமக்கு என்ன கடித்தது என தெரியாது, மனுசன் பார்த்தே இது புதுமை சிலந்திதான் எண்டு சொல்லிப்போட்டார்.

பிறகு ஒரு வெள்ளை கல்லை தந்தார். அந்த கல் காயத்தில் பிசின் போட்டு ஒட்டியமாரி நிற்கும். கல் முழுவதும் நீலமானதும் விழுந்து விடும்.

நீல கல்லை எடுத்து பாலில் போட்டால், பால் நீலமாகும், கல் வெள்ளையாகும். கல்லை எடுத்து மறுபடியும் கடித்த இடத்தில் வைத்து சிகிச்சையை தொடர வேண்டும்.

கேட்டால் அந்த கல் நஞ்சை உறிஞ்சுவதாயும் பின் பாலில் வெளியேற்றுவதாயும் சொன்னார்கள்.

இப்படி ஒரு கல் கிடைக்காதா என்று இன்றுவரை தேடுகிறேன்.

பாஞ்ச் ஐயாவின் கதையைத் தாண்டிப் போகலாம் என்று தான் நினைத்தேன்😇, இப்ப கோசானும் வந்து விசமுறிஞ்சிக் கல்லைப் பற்றிச் சொன்னதும் சும்மா போகேலாமல் சொல்கிறேன்:

1. சாரை கடிச்சதா அல்லது விசப் பாம்பு கடிச்சதா என்று சொல்ல மந்திரம் மாயம் தேவையில்லை. விசப் பாம்புகளுக்கு மட்டும் தான் fangs என்ற விசப்பல் இருக்கும். இது பாம்பின் வாயின் மேற் தாடையில் இரு பக்கமும் கூரிய ஊசி போல இருக்கும். எனவே விசப் பாம்பு கடித்த இடத்தில் இரண்டு ஊசித்துளைகள் போல அடையாளமும், அதைச் சுற்றி வீக்கமும் இருக்கும். ஆனால் விசமில்லாத பாம்புகளுக்கு சாதாரண பல்வரிசை தான், அப்படியே ஒரு நாய் கவ்விய மாதிரிப் பல்லடையாளம் தெரியும், வீக்கமும் குறைவாக இருக்கும். விசமில்லாத பாம்புக் கடிக்கு மூலிகை மருத்துவமும் தேவையில்லை. ஆக மிஞ்சிப் போனால் பக்ரீரியாத் தொற்று வராமல் காயத்திற்கு மருந்து மட்டும் போதும்.

2. இந்த விசம் உறிஞ்சும் கல் விளையாட்டு பிள்ளையார் பால் குடிச்சது மாதிரியான ஒரு விளையாட்டுத் தான்.  அப்படி விசம் உறிஞ்சும் செயன் முறை எதுவும் இல்லை! இந்த விசமுறுஞ்சிக் கல்லால் இரத்தப் புடையன் பாம்பின் விசத்தை முறிக்கிறேன் என்றதை நம்பிய சித்தப்பா 70 களில் மருத்துவ மனைக்குப் போக நேரம் இருந்தும் போகாமல் 3 நாட்கள் கோமாவில் இருந்து இறந்தார். 

இந்தப் போலி மருத்துவங்கள் விச ஜந்துக் கடிகளில் தான் அதிகம் பிரபலம்! நம்பி உயிரை விடாதீர்கள்! 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.