Jump to content

சிவாஜிலிங்கத்தை தீண்டியது பாம்பு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

அது உண்மைதான் ......சொன்னால் நக்கல் செய்வார்கள்....ஆனால் அது சாதாரணமான விடயமல்ல. குரு வழியாக அந்த ஆற்றல்கள் வருபவை. ஒருத்தர் வைத்தியராகவோ அன்றி பொறியியலாளராகவோ கடைசி ஆறேழு வருடங்கள் கருத்துன்றிப் படித்து பட்டம் பெறுகின்றார் என்றால் அதைவிட அதிகமாக அவர்கள் இவ் விடயத்தில் காலத்தைக் கழித்திருப்பார்கள். மூலிகைகளுக்காக காடுமேடெல்லாம் அலைந்து அர்த்த ராத்திரிகளில் மயாணங்களில் குருவோடு சேர்ந்து பூசைகள்,யாகங்கள் என்று செய்திருப்பார்கள். என்ன ஒரு கறுமமென்றால் சிலர் இந்த ஆற்றல்களை நல்லதுகளுக்கு பயன்படுத்துவார்கள்.எதையும் இலவசமாக பணம் உட்பட பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனையோர் அதை தீயவழிகளில் பயன்படுத்தி கேவலமானவர்களாக போய்சேருவார்கள்....!

--- ஒருத்தர் இப்படியான தகவல் சொல்ல வரும்பொழுதே அவர் வரும் நேரம், எந்தக் கால் வைத்து உள்ளே வருகிறார், அந்த நேரத்தில் வெளியே வரும் பட்சிகள் மற்றும் விலங்குகள் போன்ற பலப்பல விடயங்களை மனதுக்குள் ஓரிரு நிமிடங்களில் கணித்தே சொல்லி விடுவார். இந்நேரத்தில் பல்லி சொல்வதைக்கூட கவனத்தில் கொள்வர். சம்பந்தப்பட்டவர் பிழைக்க வழியில்லை என்றாலோ அல்லது இவர் வரும்போது அங்கே அவர் இறந்து விட்டாலோ மருந்துகள் குடுக்க மாட்டார்கள்.அதுக்கு அவசியமில்லை நீங்கள் போங்கோ என்று அனுப்பி விடுவார்கள்....!

இப்பொழுது நான் கொட்டடி வைத்தியர் பற்றி சொல்ல நினைக்க கீழே கோஷன் சே எழுதியுள்ளார்.பாஞ்சும், கோஷன் சேயும் இங்கு எழுதியதால் தான் நான் இவற்றை எழுதுகின்றேன்......!

ஒருமுறை அயலில் ஒருவருக்கு பாம்பு கடித்து அவரிடம் போயிருக்கிறோம்.(இரவில்ஆஸ்பத்திரி என்றாலும் பாம்பு கடித்தாலும்  எதுவென்றாலும் காருக்கு எங்கள் வீட்டுக்குத்தான் வருவினம். நான்தான் சாரதி). இரவென்றபடியால் என்ன பாம்பு என்று தெரியவில்லை. ஆனால் அவர் கொஞ்சம் யோசித்து விட்டு கடிவாயையும் பார்த்து விட்டு இது இன்ன பாம்புதான், கொத்த வேண்டும் என்று பலமாக கொத்தவில்லை என்று சொல்லிவிட்டு இலை சாறுகள் விட்டு ஒன்று மாற்றி ஒன்றாக அஞ்சாறு கோழிகளை கொண்டுவந்து அவற்றின் ஆசனவாயை அந்த கடித்த இடத்தில் வைக்க சில கோழிகள் இறந்துபோக, கோழி உயிரோடு இருக்கும் வரை அந்த வைத்தியம் நடக்கின்றது.....இரவிரவாக அவரை தூங்க விடாமல் பார்த்திருக்க வேண்டும்....பின் குணமாகி காலையில் திரும்பினோம்....!

( கதைக்களத்தில் "பொட்டல்காட்டில் ஒரு கதை" என்னும் கதையில் ஒரு சம்பவம் இந்த அனுபவத்தில் எழுதியதுதான்).

உங்களுக்கு தெரியும் விடத்தல்தீவு மன்னாருக்கு அண்மையில் உள்ளது.அங்கு பாஸ்கரன் என்றொரு ஐயா இருந்தவர். இதுபோன்ற வைத்தியங்கள் பலவற்றிலும் அவர் மிகவும் பிரபலமானவர்.அசாத்தியமான திறமையுள்ளவர்......மேலும் சைக்கிளில் சில திருத்தங்கள் செய்து அங்குள்ள குளத்தில் குடும்பத்தோடு பிரயாணம் செய்து காட்டியவர்.அந்நாளில் பத்திரிகைகளில் படங்களுடன் அந்தப் படங்கள் வந்திருந்தன....!

பகிர்வுக்கு நன்றி சுவி அண்ணா. நம்பியும் நம்ப முடியாமலும் நான் தத்தளிக்கும் சில விடயங்களில் இதுவும் ஒன்று.

இதே போல் இன்னுமொருவர் இதோ பார் பருந்தை கூப்பிடுகிறேன் என்று சொல்லி கண நேரத்தில் எங்கிருந்தோ ஒரு பருந்து வந்து அவர் கையில் அமர்ந்ததையும் கண்டிருக்கிறேன்.

Link to post
Share on other sites
 • Replies 52
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

https://i.postimg.cc/VLJjNGSp/AD038806-27-D1-45-D7-B1-D5-EEAD18846-A62.jpg

இது விசக் கடி பற்றியது இல்லை, ஆனால் இப்படி ஒன்று எனக்கும் நடந்தது. 11 அல்லது 12 வயதிருக்கும், கடுமையான இருமல் வந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. ஆனானப்பட்ட டொக்டர் பிலிப் ப

இருக்கலாம். ஆனால் உறுதி செய்யப் பட்ட தகவல்களையும் உதாசீனம் செய்து விட்டுத் தான் சில பாரம்பரிய மருத்துவங்கள் முன் நிறுத்தப் படுகின்றன. உதாரணம்: மஞ்சளில் இருக்கும் குகுமினை மனித உடல் உறிஞ்சிக் கொள்

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

பாஞ்ச் ஐயாவின் கதையைத் தாண்டிப் போகலாம் என்று தான் நினைத்தேன்😇, இப்ப கோசானும் வந்து விசமுறிஞ்சிக் கல்லைப் பற்றிச் சொன்னதும் சும்மா போகேலாமல் சொல்கிறேன்:

1. சாரை கடிச்சதா அல்லது விசப் பாம்பு கடிச்சதா என்று சொல்ல மந்திரம் மாயம் தேவையில்லை. விசப் பாம்புகளுக்கு மட்டும் தான் fangs என்ற விசப்பல் இருக்கும். இது பாம்பின் வாயின் மேற் தாடையில் இரு பக்கமும் கூரிய ஊசி போல இருக்கும். எனவே விசப் பாம்பு கடித்த இடத்தில் இரண்டு ஊசித்துளைகள் போல அடையாளமும், அதைச் சுற்றி வீக்கமும் இருக்கும். ஆனால் விசமில்லாத பாம்புகளுக்கு சாதாரண பல்வரிசை தான், அப்படியே ஒரு நாய் கவ்விய மாதிரிப் பல்லடையாளம் தெரியும், வீக்கமும் குறைவாக இருக்கும். விசமில்லாத பாம்புக் கடிக்கு மூலிகை மருத்துவமும் தேவையில்லை. ஆக மிஞ்சிப் போனால் பக்ரீரியாத் தொற்று வராமல் காயத்திற்கு மருந்து மட்டும் போதும்.

2. இந்த விசம் உறிஞ்சும் கல் விளையாட்டு பிள்ளையார் பால் குடிச்சது மாதிரியான ஒரு விளையாட்டுத் தான்.  அப்படி விசம் உறிஞ்சும் செயன் முறை எதுவும் இல்லை! இந்த விசமுறுஞ்சிக் கல்லால் இரத்தப் புடையன் பாம்பின் விசத்தை முறிக்கிறேன் என்றதை நம்பிய சித்தப்பா 70 களில் மருத்துவ மனைக்குப் போக நேரம் இருந்தும் போகாமல் 3 நாட்கள் கோமாவில் இருந்து இறந்தார். 

இந்தப் போலி மருத்துவங்கள் விச ஜந்துக் கடிகளில் தான் அதிகம் பிரபலம்! நம்பி உயிரை விடாதீர்கள்! 

பயம் வேண்டாம் ஜஸ்ரின் அண்ணா, நான் எப்போதும் FDA பரிந்துரைத்த மருத்துகளைதான் எடுப்பேன்😂.

அந்த சின்ன வயசிலும் அம்மமாவோடு பேசாமல் பெரியாஸ்பத்திரி போவோம் என்றுதான் வாதாடினேன். ஆனால் வீட்டில் வேறு பெரியவர்கள் இல்லாதபடியால் அவரின் விருப்பபடி வண்டி கொட்டடிக்கு போகும்படி ஆயிற்று.

பின் நாட்களில் இரசாயனவியல் படிக்கும் போது, இந்த கல் ஏன் ரத்தத்தினதும், நஞ்சினதும் அடர்தி வேறு பாட்டுக்கு அமைய ரத்தத்தில் இருந்து நஞ்சை உறிஞ்ச கூடிய ஒருவகை இரசாயன கலவையாக இருக்க கூடாது என தோன்றியது.

உப்பு, ஈரலிப்பை வளிமண்டலத்தில் இருந்து உறிஞ்சுவதை போல? ஆனால் இரத்தத்தில் கலந்து விட்ட நஞ்சை இப்படி ஒரு கடிவாய் மூலம் உறிஞ்ச முடியுமாய் போலவும் தெரியவில்லை.

எமது குடும்பத்தை தெரியும் என்பதால் அந்த கல்லை ரெண்டு நாள் வைத்து பாவித்த பின் திருப்பும் படி பரியாரியார் கொடுத்து விட்டார்.

அப்பவே கல்லை அபேஸ் பண்ணி இருந்தால் இப்போ ஒரு லேப் டெஸ்ட் செய்து பார்த்திருக்கலாம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இந்த விசக் கல்லு என்பது ஆதிகாலத்திலேயே உருவான மூட நம்பிக்கை. "வயது முதிர்ந்த பாம்பின் (நாக பாம்பு விசேசம்) விசம் ரத்தினக் கல்லாக மாறும், அதை பாம்பு தலையில் சுமந்து திரியும்" என்ற கற்பனையில் இருந்து இந்த விசக் கல்லு மருத்துவம் வந்திருக்கலாம் என்கின்றனர். 

எங்கள் மத்தியில் பாம்புக் கடி மருத்துவங்கள் அதிகம் பிரபலமானது பழைய தமிழ் சினிமாக்களால் தான்: நாயகிக்கு பாம்பு கடிக்கும், நாயகன் உடனே கடிவாயைத் தன் வாயால் கடித்து விசத்தை தான் உறுஞ்சி மயங்கி விழுவார் ! நாயகி பிழைக்க, நாயகன் மூன்று நாள் மயக்கத்தில் இருந்து மீள, அடுத்த பாட்டு சீன் வரும்! 🤣

பாம்பு கடிச்சால் இந்தக் குறளி வேலையெல்லாம் செய்யாமல் செய்ய வேண்டியது மூன்று வேலைகள் தான்: 
1. பதற்றம் குறைக்க வேணும் (இதயத் துடிப்பு வேகமானால் விசம் வேகமாகப் பரவும்)
2. கடித்த இடத்தில் tourniquet போட முடியுமானால் போட வேண்டும் (இரத்தம் மூலம் விசம் பரவுவது தடுக்க)
3. அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு விரைவாக போய் சேர்ந்து விட வேணும்! (இப்போது எல்லா மருத்துவ மனைகளிலும் பாம்புக் கடிக்கெதிரான antivenom தாராளமாக கிடைக்கிறது!)

 • Like 1
Link to post
Share on other sites

இது விசக் கடி பற்றியது இல்லை, ஆனால் இப்படி ஒன்று எனக்கும் நடந்தது.

11 அல்லது 12 வயதிருக்கும், கடுமையான இருமல் வந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. ஆனானப்பட்ட டொக்டர் பிலிப் பின் மருந்து கூட வேலை செய்ய மாட்டன் என்றது. நான் ஒரே இருமிக் கொண்டு இருப்பதை கேட்ட பக்கத்து வீட்டு ஆச்சி இரத்தினக்கா (இவரைப் பற்றி ஒரு நீண்ட கதையே எழுதலாம், அவ்வளவு சுவாரசியமானவர்) "உனக்கு குக்கல் தான் வந்திருக்கு... கோத்தையை கூட்டிக் கொண்டு வா" என்று சொல்ல, நான் அம்மாவைக் கூட்டிக் கொண்டு போனனான். 

என்னை குசினிக்குள் இருக்கும் ஒரு பலகை (ஸ்ரூல்) இல் இருத்தி வைத்து, சந்தனக் குச்சி எல்லாம் பத்த வைத்து  விட்டு ஏதோ எல்லாம் முணு முணுத்துக் கொண்டு தலையை வருடி வருடி, ஈற்றில் நடு உச்சியில் சிவனே என்று இருந்த முடியை பிடிச்சு பலமாக ஒரு இழு இழுத்தார்.... அம்புட்டுத்தான் நான் கதறிய கதறலில் அன்றோடு இருமல் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டது. அவ்வளவு நாள் மருந்தெடுத்தும் போகாத இருமல் எப்படி போனது என்று தெரியவில்லை.

சில விடயங்களுக்கு கேள்வி கேட்கக் கூடாது என்பர். இப்படியான பரியாரிகளின் மருந்துகளுக்கும், மாயங்களுக்கும் கூட இவை பொருந்தலாம். சுவி அண்ணா சொன்னது போன்று பணம் வாங்காமல் தம்மை வருத்தி காடு மேடு அலைந்து மருந்துகள் கண்டு பிடித்து சிகிச்சை செய்த பரியாரிகள் ஊரில் ஒரு காலத்தில் இருந்தனர்.  முதலாளித்துவ அலையில் அள்ளுப்பட்டு ஈற்றில் பரிகாரம் செய்கின்றோம் என்று காசு வாங்கி வியாபாரிகளாக பலர் வந்தபின் உண்மையானவர்களுக்கான இடம் காலியாகி விட்டது.
 
 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி விரைந்து குணம்பெற வேண்டும். அவர் கெட்டவராக இருந்த போது செய்த தவறை உணர்ந்து திருந்தி.. நல்லவரானதற்காக.. இயற்கை அவருக்கான அன்பளிப்பை வழங்கியுள்ளது. நல்லதே செய்ய கடவ. 

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

சிவாஜி விரைந்து குணம்பெற வேண்டும். அவர் கெட்டவராக இருந்த போது செய்த தவறை உணர்ந்து திருந்தி.. நல்லவரானதற்காக.. இயற்கை அவருக்கான அன்பளிப்பை வழங்கியுள்ளது. நல்லதே செய்ய கடவ. 

நல்ல நகைச்சுவை நெடுக்கர். 

அப்படியானால் இதுவரை உலகில் பாம்பு கடித்து இறந்தவர்கள், விபத்தில் இறந்தவர்கள், சுனாமியில் இறந்த மக்கள், யுத்தத்தில் இறந்த மக்கள் எல்லோரும் இயற்கை கொடுத்த தண்டனை அல்லது அன்பளிப்பு என்ற பிரிவுக்குள் அடங்குவார்களா? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

அவர்கள் கெட்டவர்களின் பாதிப்புக்கு உள்ளாகி இறந்துவிட்டார்கள். அந்த வகையில்.. கெட்டவன் கெட்டவனாக இருந்தால்.. இன்னும் பாதிப்பு அதிகம். நல்லவனாகினால்.. பாதிப்புக் குறைவு. அந்த வகையில்.. இயற்கை தன் விதிக்கு உட்பட்டு.. மன்னிப்பு வழங்கி இருக்கக் கூடும். சுவாஜியால்.. பாதிக்கப்பட்டவைக்கு.. அவராலேயே நன்மை நடக்கனும் என்று கூட இயற்கை கருதி இருக்கலாம். 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிவபெருனான் விசத்தை உண்டபோது பார்வதி வந்து விஷம் கழுத்துக்கு கீழே இறங்கவிடாமல் சிவனின் தொண்டையை இறுக்கிப்பிடித்ததாகவும் அதனால் அவர் தப்பியதாகவும் கதையுண்டு. இதனால் கடித்த இடத்துகு கீழ் இறுக்கமாக கட்டுப்போடவேண்டும், இதனால் விசம் பரவுவது குறையும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nedukkalapoovan said:

அவர்கள் கெட்டவர்களின் பாதிப்புக்கு உள்ளாகி இறந்துவிட்டார்கள். அந்த வகையில்.. கெட்டவன் கெட்டவனாக இருந்தால்.. இன்னும் பாதிப்பு அதிகம். நல்லவனாகினால்.. பாதிப்புக் குறைவு. அந்த வகையில்.. இயற்கை தன் விதிக்கு உட்பட்டு.. மன்னிப்பு வழங்கி இருக்கக் கூடும். சுவாஜியால்.. பாதிக்கப்பட்டவைக்கு.. அவராலேயே நன்மை நடக்கனும் என்று கூட இயற்கை கருதி இருக்கலாம். 

உங்களுக்கு பிடிக்காதவர்கள் இறந்தால் அது கெட்டவர்களின் பாதிப்பால் இறந்தார்கள். உங்களுக்கு பிடிக்காதவர்கள் இறந்தால் அவர்கள் கெட்டவர்கள் அது தான் இயற்கை தண்டனை கொடுத்துவிட்டது. 😂 இது தான் உங்கள் அரசியல்😂😂😂😂😂😂😂😂.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இது விசக் கடி பற்றியது இல்லை, ஆனால் இப்படி ஒன்று எனக்கும் நடந்தது.

11 அல்லது 12 வயதிருக்கும், கடுமையான இருமல் வந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. ஆனானப்பட்ட டொக்டர் பிலிப் பின் மருந்து கூட வேலை செய்ய மாட்டன் என்றது. நான் ஒரே இருமிக் கொண்டு இருப்பதை கேட்ட பக்கத்து வீட்டு ஆச்சி இரத்தினக்கா (இவரைப் பற்றி ஒரு நீண்ட கதையே எழுதலாம், அவ்வளவு சுவாரசியமானவர்) "உனக்கு குக்கல் தான் வந்திருக்கு... கோத்தையை கூட்டிக் கொண்டு வா" என்று சொல்ல, நான் அம்மாவைக் கூட்டிக் கொண்டு போனனான். 

என்னை குசினிக்குள் இருக்கும் ஒரு பலகை (ஸ்ரூல்) இல் இருத்தி வைத்து, சந்தனக் குச்சி எல்லாம் பத்த வைத்து  விட்டு ஏதோ எல்லாம் முணு முணுத்துக் கொண்டு தலையை வருடி வருடி, ஈற்றில் நடு உச்சியில் சிவனே என்று இருந்த முடியை பிடிச்சு பலமாக ஒரு இழு இழுத்தார்.... அம்புட்டுத்தான் நான் கதறிய கதறலில் அன்றோடு இருமல் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டது. அவ்வளவு நாள் மருந்தெடுத்தும் போகாத இருமல் எப்படி போனது என்று தெரியவில்லை.

சில விடயங்களுக்கு கேள்வி கேட்கக் கூடாது என்பர். இப்படியான பரியாரிகளின் மருந்துகளுக்கும், மாயங்களுக்கும் கூட இவை பொருந்தலாம். சுவி அண்ணா சொன்னது போன்று பணம் வாங்காமல் தம்மை வருத்தி காடு மேடு அலைந்து மருந்துகள் கண்டு பிடித்து சிகிச்சை செய்த பரியாரிகள் ஊரில் ஒரு காலத்தில் இருந்தனர்.  முதலாளித்துவ அலையில் அள்ளுப்பட்டு ஈற்றில் பரிகாரம் செய்கின்றோம் என்று காசு வாங்கி வியாபாரிகளாக பலர் வந்தபின் உண்மையானவர்களுக்கான இடம் காலியாகி விட்டது.
 
இந்த வைத்தியம் எங்கள் ஊரில் இருந்தது. இதை உச்ச நாக்கு வைத்தியம் என்று சொல்வார்கள். 

அதிகாலையில் சூரியன் உதிக்கும் முதல் செய்வார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அஞ்சாறு கோழிகளை கொண்டுவந்து அவற்றின் ஆசனவாயை அந்த கடித்த இடத்தில் வைக்க சில கோழிகள் இறந்துபோக, கோழி உயிரோடு இருக்கும் வரை அந்த வைத்தியம் நடக்கின்றது.....இரவிரவாக அவரை தூங்க விடாமல் பார்த்திருக்க வேண்டும்....பின் குணமாகி காலையில் திரும்பினோம்....!

எனது ஊர்களில் இதை கோழி இரத்தம் வைப்பது என சொல்வார்கள். :)

சாதாரணமாக சொல்லப்போனால் 50/60 வருடங்களுக்கு முன்னரான காலங்களில் பரியாரிகளும்,நாட்டு வைத்தியர்களும், கிராமிய மருத்துவிச்சிகளும் இல்லையென்றால் பாதி கிராமங்களே அழிந்து போயிருக்கும்.

அக்காலத்தில் ஆசிய,அரபு நாடுகள் ஆங்கில மருத்துவத்தால் நோய் நொடிகளை வென்றெடுக்கவில்லை. மாறாக அவர்களிடம் கத்தியில்லா மருத்துவம் தழைத்தோங்கியிருந்தது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2020 at 16:21, Kapithan said:

பாம்பிற்குத் தேவையில்லாத வேலை. 

😂

ம்ம்ம்.....  பாம்பின்ட தலையெழுத்து அவ்வளவுதான் 🙄

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

மட்டக்களப்பில் பற்றிக்கலோ மோட்டர் கராச்சிற்குரிய அறை ஒன்றில் நான் சிலகாலம் தங்கியிருக்கவேண்டி வந்தது. அந்தக் கராச்சில் வாகனங்கள் கழுவும் வேலைபார்த்த ஒருவர் செய்வினை, பில்லி, சூனியங்கள் எடுப்பவர் என்று அங்குள்ளவர்கள் சொன்போது நான் நம்பவில்லை.  அவருக்கு விசக்கடி வைத்தியமும் தெரியும் என்று சொன்னார்கள். ஒருநாள் ஒரு சிறுவன் அவரிடம் ஓடிவந்து அண்ணனைப் பூச்சி கடித்துவிட்டது என்று சொன்னான். சிறுவனைப் பார்த்ததும் அவர் பயப்படவேண்டாம் அது சாரைப்பாம்பு என்று சொல்லி சில இலைகளின் பெயரைச் சொல்லி அவற்றின் சாற்றைக் கொடுக்கும்படி கூறினார். அடுத்த சில நாட்களில் சிறுவனின் அண்ணன் வந்து அவருக்கு நன்றிசொல்லி தன்னைச் சாரைதான் கடித்தது என்று சொல்லிப் பணமும் கொடுக்க முயன்றபோது அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். இந்த நிகழ்வை நேரில்கண்ட எனக்கே இன்றும் நம்புவதற்குக் கடினமாக உள்ளது.

நான் சிவானந்த தேசிய கல்லூரியில்  படித்த காலத்தில் , விடுதியில் தங்கியிருந்துதான் கல்வி கற்றேன். அங்குள்ள மாணவர்களே இந்த மாந்திரீகம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்து மந்திரித்து ஆவிகளை கொண்டு வரும் சக்தி படைத்தவர்கள். ஒரு முறை அப்படி செய்து பின்னர் பயத்தில் எழும்பி ஓடிய சந்தர்ப்பங்களும் உண்டு.

எனக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் வேலை செய்வதட்கு இங்கு வந்து இங்கேயே தயங்க வேண்டிய நிலைமையும் உருவாகியிருந்தது. இருந்தாலும் அங்குள்ள மக்கள் உபசரிப்பதில் திறமையானவர்கள். எப்படியோ மடடகலப்பு மாந்திரீகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

சும்மா புளுடா விடாதேயுங்கோ வங்காலையான். மனுசருக்கு இருக்கிற பிரச்சனைக்க நீங்க வேற.. 😜

7 hours ago, colomban said:

சிவபெருனான் விசத்தை உண்டபோது பார்வதி வந்து விஷம் கழுத்துக்கு கீழே இறங்கவிடாமல் சிவனின் தொண்டையை இறுக்கிப்பிடித்ததாகவும் அதனால் அவர் தப்பியதாகவும் கதையுண்டு. இதனால் கடித்த இடத்துகு கீழ் இறுக்கமாக கட்டுப்போடவேண்டும், இதனால் விசம் பரவுவது குறையும்.

தொண்டையிலா....

😂😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பாயோட பசை வைக்கிறயும் சொல்லல இந்த யாழ்ப்பாணத்தாருக்கு சூனியம் வச்சு என்னத்தையா கண்டம் நாங்கள்

சூனியம் என்பது உண்மையா?? நீங்கள் சூனியம் வைக்கிறதும் உண்மைதானா????????????????😫

Link to post
Share on other sites
5 hours ago, Paanch said:

சூனியம் என்பது உண்மையா?? நீங்கள் சூனியம் வைக்கிறதும் உண்மைதானா????????????????😫

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

இது விசக் கடி பற்றியது இல்லை, ஆனால் இப்படி ஒன்று எனக்கும் நடந்தது.

11 அல்லது 12 வயதிருக்கும், கடுமையான இருமல் வந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. ஆனானப்பட்ட டொக்டர் பிலிப் பின் மருந்து கூட வேலை செய்ய மாட்டன் என்றது. நான் ஒரே இருமிக் கொண்டு இருப்பதை கேட்ட பக்கத்து வீட்டு ஆச்சி இரத்தினக்கா (இவரைப் பற்றி ஒரு நீண்ட கதையே எழுதலாம், அவ்வளவு சுவாரசியமானவர்) "உனக்கு குக்கல் தான் வந்திருக்கு... கோத்தையை கூட்டிக் கொண்டு வா" என்று சொல்ல, நான் அம்மாவைக் கூட்டிக் கொண்டு போனனான். 

என்னை குசினிக்குள் இருக்கும் ஒரு பலகை (ஸ்ரூல்) இல் இருத்தி வைத்து, சந்தனக் குச்சி எல்லாம் பத்த வைத்து  விட்டு ஏதோ எல்லாம் முணு முணுத்துக் கொண்டு தலையை வருடி வருடி, ஈற்றில் நடு உச்சியில் சிவனே என்று இருந்த முடியை பிடிச்சு பலமாக ஒரு இழு இழுத்தார்.... அம்புட்டுத்தான் நான் கதறிய கதறலில் அன்றோடு இருமல் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டது. அவ்வளவு நாள் மருந்தெடுத்தும் போகாத இருமல் எப்படி போனது என்று தெரியவில்லை.

சில விடயங்களுக்கு கேள்வி கேட்கக் கூடாது என்பர். இப்படியான பரியாரிகளின் மருந்துகளுக்கும், மாயங்களுக்கும் கூட இவை பொருந்தலாம். சுவி அண்ணா சொன்னது போன்று பணம் வாங்காமல் தம்மை வருத்தி காடு மேடு அலைந்து மருந்துகள் கண்டு பிடித்து சிகிச்சை செய்த பரியாரிகள் ஊரில் ஒரு காலத்தில் இருந்தனர்.  முதலாளித்துவ அலையில் அள்ளுப்பட்டு ஈற்றில் பரிகாரம் செய்கின்றோம் என்று காசு வாங்கி வியாபாரிகளாக பலர் வந்தபின் உண்மையானவர்களுக்கான இடம் காலியாகி விட்டது.
 
எங்கள் ஊர்களிலும் இப்படி பாம்புக்கடி மற்றும் காய்ச்சல் இருமலுக்கு 
வருத்தம் பார்க்கும் பாரியாரிமார் இருந்தார்கள் எல்லாம் அவர்கள் இறப்புடனேயே 
இறந்து விட்டது 

எங்கள் அம்மாவுக்கும் ஒரு முறை பாம்பு கடித்து அவர்களில் ஒருவர்தான் வைத்தியம் பார்த்தார் 

ஒருவர் எமது உறவினர்தான் அவரிடம் பல குறிப்புக்கள் எழுதி வைத்து இருக்கிறார் 
நான் வாசித்து பார்த்து இருக்கிறேன் எனக்கு ஒன்றும் விளங்குவது இல்லை 
இது தமிழ் இல்லை என்று நான் முன்பு எண்ணிக்கொண்டேன் ... இப்போ நினைக்கிறன் 
அவர் எழுதி இருந்த இல்லை குழைகள் எனக்கு தெரியாமல் இருந்து அதனால் அது புரியாமல் 
போயிருக்கலாம் என்று. எப்போ அதெல்லாம் இருக்கிறதா தெரியவில்லை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

சூனியம் என்பது உண்மையா?? நீங்கள் சூனியம் வைக்கிறதும் உண்மைதானா????????????????😫

மந்திரம் கால் மதி முக்கால் ஐயா இது விளங்கினால் நீங்கள் கேட்கமாட்டியள் இந்த கேள்வி அப்படியானால் யுத்தகாலத்தில் கன பேர் மந்திரம் படிச்சு எதிரியை கொன்றிருக்கலாம் 

நான் ஏதோ மந்திரவாதிமாரியெல்லா இருக்கு உங்கட கேள்வி 😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சில ஊர்களில் விசக்கல் என்று சொல்வார்கள் ஒரு வயதானவர் இருப்பார் நமது உடலில் ஜந்துக்கள் ஏதும் கடித்து விசம் உடலில் இருந்தால் அந்தக்கல்லில் காலை வைத்தால் உறுஞ்சுவது போல் இருக்கும் என்பார்கள் அதன் பின் தாங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிவதாகவும் சொன்ன சம்பவங்கள் உண்டு 

பல மூலிகளைகள் முன்னோர்கள் கண்டு பிடித்து சந்ததிகளிடம்  கைமாறும் போது அது மாறி விஷமான சம்பவங்களால் கைவைத்தியம் காணாமல் போனது வயலுக்கு கதிர் அறுக்கும் கத்தி விரலை அறுத்தால் கையான் தகரை எனும் இலையை சாறை பிழிந்து சக்கையையும் சேர்த்து கையில் கட்டினால் அடுத்த நாள் தையலால் இணைக்காத சதைகளையும் இணைத்து தைத்தது போல இருக்கும் .

அதே போல சிலருக்கு உண்ணிகள் பால் உண்ணி உடம்பு முழுவதும் இருக்கும் அதை போக்கவும் சில மூலிகை செடிகளில் படுத்து உருண்டால் காணாமல் போகுமென என் அம்மம்மா சொன்னார் தற்போது மூலிகை செடி  இல்லை சீனி வருத்தத்திற்கு நில வேம்பு சரியான கசம் அந்த செடியில் இலையை மென்று தின்கிறார்கள் ஆனால் இலையில் ஒரு இஞ் துண்டு கூட மென்று தின்ன முடியாது அவ்வளவு கசப்பு அந்த இலை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சர்க்கரை வியாதிக்கு வேப்பிலை மருந்து என்பது, "இனிப்பை கசப்பினால் சமன் செய்தல்" என்ற ஒரு எளிமையான சிந்தனை முறையினால் வந்தது. இது உண்மையிலேயே பயன் தருமா என்பது நிரூபணமாகவில்லை. 

வேம்பில் இருக்கும் azadirachtin என்ற பதார்த்தம் தான் முக்கியமானது. இது மஞ்சளில் இருக்கும் குகுமின் (curcumin) போலவே உயிருள்ள எல்லாவற்றையும் கொல்லும் (விந்து உட்பட!).

Azadirachtin எலிகளில் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்துவதாகக் காட்டும் ஆய்வுகள் எல்லாமே இந்தியாவில் இருந்து தான் வெளியாகி இருக்கின்றன. விஞ்ஞான தராதரத்தின் படி நம்பிக்கையற்ற ஆய்வுகள் (தேங்காய் எண்ணையின் ஆரோக்கியம் பற்றிய ஆய்வுகள் போல!).

அதே நேரம் azadirachtin ஐ கருத்தரித்த எலிகளுக்கு கொடுத்தால் அவற்றின் கர்ப்பத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் சில ஆய்வுகள் சொல்கின்றன. எல்லாவற்றையும் கொல்லும் azadirachtin சர்க்கரை வியாதியைக் குணமாக்கும் என்பது சந்தேகத்துக்குரியது என்றே நான் நினைக்கிறேன்.   

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கு முன்பு கீழ் காலில் ஒரு வகை உண்ணி இருந்தது. கூட்டமா மூன்று. இப்படி ஒருவர், சுதேச மருந்துகாரர், பச்சை கற்பூரம், வேம்பு, மஞ்சள் (தெளிவாக நியாபகம் இல்லை) அரைத்து தந்தார். 3 கிழமையளவில் தானாக ஆறிவிட்டது.

தொங்கி திரிவதால் ஊரில் எப்போதும் புண்தானே?  அம்மம்மா “மஞ்சள்மா நல்லெண்னை” என்று ஒன்றை கட்டுவா, பெரும்பாலான காயங்கள் ஆறிவிடும்.

ஆறாவிட்டால் - டிஸ்பென்சரிக்கு போவேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

உலகில் எல்லா சடப்பொருள்களும் ஒன்றில் காபன் அல்லது காபன் அல்லாதது என்பது வேதியல்.

ஆகவே எல்லாமும் ரசாயனத்தால் ஆனது எனும் போது, சில இயற்கை பொருட்களில் கூட நோய் எதிர்க்கும்/தீர்க்கும் ரசாயன பொருட்கள் இருப்பதில் வியப்பில்லை.

ஆனால் அவை போதிய செறிவில் இருக்குமா என்பது கேள்வி குறியே. 

இவற்றை மருந்துக்கு மாற்றீடாக பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடில்லை. 

ஆனால் பெரும்பாலும் மிகைபடுத்தலாக இருப்பினும் இந்த தியரிகள் சிலதில் ஒரு kernel of truthம் இருப்பதாகவே படுகிறது.

47 minutes ago, Justin said:

சர்க்கரை வியாதிக்கு வேப்பிலை மருந்து என்பது, "இனிப்பை கசப்பினால் சமன் செய்தல்" என்ற ஒரு எளிமையான சிந்தனை முறையினால் வந்தது. இது உண்மையிலேயே பயன் தருமா என்பது நிரூபணமாகவில்லை. 

வேம்பில் இருக்கும் azadirachtin என்ற பதார்த்தம் தான் முக்கியமானது. இது மஞ்சளில் இருக்கும் குகுமின் (curcumin) போலவே உயிருள்ள எல்லாவற்றையும் கொல்லும் (விந்து உட்பட!).

Azadirachtin எலிகளில் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்துவதாகக் காட்டும் ஆய்வுகள் எல்லாமே இந்தியாவில் இருந்து தான் வெளியாகி இருக்கின்றன. விஞ்ஞான தராதரத்தின் படி நம்பிக்கையற்ற ஆய்வுகள் (தேங்காய் எண்ணையின் ஆரோக்கியம் பற்றிய ஆய்வுகள் போல!).

அதே நேரம் azadirachtin ஐ கருத்தரித்த எலிகளுக்கு கொடுத்தால் அவற்றின் கர்ப்பத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் சில ஆய்வுகள் சொல்கின்றன. எல்லாவற்றையும் கொல்லும் azadirachtin சர்க்கரை வியாதியைக் குணமாக்கும் என்பது சந்தேகத்துக்குரியது என்றே நான் நினைக்கிறேன்.   

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

அண்ணா,

உலகில் எல்லா சடப்பொருள்களும் ஒன்றில் காபன் அல்லது காபன் அல்லாதது என்பது வேதியல்.

ஆகவே எல்லாமும் ரசாயனத்தால் ஆனது எனும் போது, சில இயற்கை பொருட்களில் கூட நோய் எதிர்க்கும்/தீர்க்கும் ரசாயன பொருட்கள் இருப்பதில் வியப்பில்லை.

ஆனால் அவை போதிய செறிவில் இருக்குமா என்பது கேள்வி குறியே. 

இவற்றை மருந்துக்கு மாற்றீடாக பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடில்லை. 

ஆனால் பெரும்பாலும் மிகைபடுத்தலாக இருப்பினும் இந்த தியரிகள் சிலதில் ஒரு kernel of truthம் இருப்பதாகவே படுகிறது.

இருக்கலாம். ஆனால் உறுதி செய்யப் பட்ட தகவல்களையும் உதாசீனம் செய்து விட்டுத் தான் சில பாரம்பரிய மருத்துவங்கள் முன் நிறுத்தப் படுகின்றன.

உதாரணம்: மஞ்சளில் இருக்கும் குகுமினை மனித உடல் உறிஞ்சிக் கொள்வது மிகக் கொஞ்சமே! இது பல ஆண்டுகளாகத் தெரிந்த ஒரு இரசாயனவியல் கண்டு பிடிப்பு. கிலோக்கணக்கில் சாப்பிட்டால் தான் கொஞ்சூண்டு உடலில் சுவறும். நாம் ஒரு தேக்கரண்டி உணவில் சேர்த்து விட்டு "மஞ்சளின் மகிமை" என்று சொல்வது ஏற்புடையதல்ல!

இது போல பல உதாரணங்கள் முன்னோர்கள் பாவித்தார்கள் என்ற காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு இன்னும் முன்னிறுத்தப் படுகின்றன. நாம் செய்ய வேண்டியது medicinal chemistry மூலம் இவற்றை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டியதென நினைக்கிறேன்.

இப்படியாக ஆய்வு செய்து தான் புதிய மலேரியா எதிர்ப்பு மருந்தை ஒரு சீனப் பெண் விஞ்ஞானி பாரம்பரிய சீன மூலிகையிலிருந்து பிரித்தெடுத்தார். அவருக்கு மருத்துவ நோபல் பரிசும் சில ஆண்டுகள் முன்னர் கிடைத்தது!

 • Like 1
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

சும்மா புளுடா விடாதேயுங்கோ வங்காலையான். மனுசருக்கு இருக்கிற பிரச்சனைக்க நீங்க வேற.. 😜

ஏன் வங்களையான் சிவானந்தாவில் படிக்கக்கூடாதோ? எத்தனையோ வங்களையான் மடடகலப்புக்கு படிக்க , வேலை செய்ய போய் மாட்டுப்பட்டு அங்கேயே தங்கிவிடடார்கள். நாங்கள் புலுடா விடுவதும் இல்லை, அதட்குரிய அவசியமும் இல்லை.  

 இடைக்கிடை இப்படி சரித்திரங்களை நாங்கள் எழுதுவது உங்களது கவலைகள், பிரச்சினைகளை போக்குவதட்குத்தான். அங்கெ போனால் அந்த மந்திரிக்கத்தால் உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும்.😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

ஏன் வங்களையான் சிவானந்தாவில் படிக்கக்கூடாதோ? எத்தனையோ வங்களையான் மடடகலப்புக்கு படிக்க , வேலை செய்ய போய் மாட்டுப்பட்டு அங்கேயே தங்கிவிடடார்கள். நாங்கள் புலுடா விடுவதும் இல்லை, அதட்குரிய அவசியமும் இல்லை.  

 இடைக்கிடை இப்படி சரித்திரங்களை நாங்கள் எழுதுவது உங்களது கவலைகள், பிரச்சினைகளை போக்குவதட்குத்தான். அங்கெ போனால் அந்த மந்திரிக்கத்தால் உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும்.😜

குருசோ,

உங்களிடம் முரண்பட விரும்பவில்லை. உங்களுக்கு அட்வைஸ் செய்யும் நோக்கமும் எனக்கு இல்லை.

நீங்கள் இங்கே எழுதுவது ஒரு தொகுதி சக தமிழர்களை நையாண்டி பண்ணுவதாக எனக்கு படுகிறது.

மட்டகளப்பில் மாந்திரீக நடவடிக்கைகள் உண்டு என்பதும் உண்மை.

அவை உண்மையா அல்லது பொய்யா என்பது கூட நம்பிக்கை சார்ந்த விடயம். 

ஆனால் அங்கே போனவர்கள் மாந்திரீகத்தால் மாட்டு பட்டு போனதாக எழுதுவது, நீங்கள் நகைசுவை என்றே சொல்லி எழுதினாலும், பொதுவெளியில் இப்படி எழுதவேண்டாம் என்றே தோன்றுகிறது.

நமக்குள் இருக்கும் பிரிவினைகள் போதும் ஐயா. 

மன்னார் விடயத்தில் கிறீஸ்தவர்கள் மீது வெறுப்பு உமிழபட்ட போதும் நான் இதைதான் எழுதினேன்.

மதியாபரணம் சுமந்திரனை திடீரென்று ஆபிரகாம் சுமந்திரன் என நடுப்பெயர் சொல்லி அழைத்தவர்களின் கபடத்தையும் சுட்டிகாட்டியது போலதான் இதுவும்.

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிகையுடன்🙏🏾

Edited by goshan_che
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.