Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கல்முனை பிரதேச செயலகம் பற்றி மு.கா.தலைவர் ஹக்கீம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கல்முனை பிரதேச செயலகம் பற்றி மு.கா.தலைவர் ஹக்கீம்

November 21, 2020

இரண்டு தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் பரந்துபட்ட முறையில் உடன்பாடுகள் காணப்பட வேண்டும். எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையின் பின்னர் சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய கட்சிகளும் இணைந்து பிரதேச செயலக விவகாரத்தில் முடிவுக்கு வருவது தான் சாலச் சிறந்தது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Hakkem-300x226.jpg

கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கொண்டுவந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது வெள்ளிக்கிழமை (20) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

இந்தச் சபையில் சாள்ஸ் நிர்மலநாதன் முன்மொழிந்து கலையரசன் வழிமொழிந்துள்ள இந்தப் பிரேரணையில் யதார்த்தபூர்வமான பல பரஸ்பர பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நாங்கள் இங்கு அடையாளம் காண வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரம் சில அரசியல்வாதிகளின் தலையீட்டின் காரணமாக தடைப்பட்டுள்ளது எனக் கூறுவதைப் பார்க்கிலும், பல வருடங்களாக நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோடு சிநேகபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி இரண்டு தமிழ் பேசும் சமூகங்களும் ஒற்றுமையாக இந்த எல்லைப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக பல முயற்சிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வந்துள்ளோம்.

கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலைமையில் இவ்விடயம் தொடர்பிலான பல பேச்சுவார்த்தைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், நாங்களும் இணைந்து மேற்கொண்டு ஈற்றில் அதற்கென அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்து எல்லை நிர்ணய சபையொன்று உருவாக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் சுருக்கமாகக் கூறுவதானால், 29 கிராம சேவைப் பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகமும், அதேவிதமாகவே இன்னுமொரு 29 கிராம சேவைப் பிரிவுகளை உள்ளடக்கிய முஸ்லிம்களுக்கான கல்முனை பிரதேச செயலகத்திற்குமிடையிலான நிலங்களைப் பொறுத்தமட்டில், 70 சதவீதமாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு வெறுமனே 29 கிராம சேவைப் பிரிவுகள் மாத்திரமே இருக்கின்ற விவகாரத்துக்கும், பல முக்கிய எல்லை நிரணய பிரச்சினைகள் குறித்த சிக்கல்களுக்கும் நாங்கள் மிகத் தீவிரமாக ஆராய்ந்து இவற்றிற்கான சுமுகமான தீர்வைப் பெற வேண்டும்.

மேலும், இரண்டு தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் இதை விடவும் பரந்துபட்ட முறையில் உடன்பாடுகள் காணப்பட வேண்டுமென்பதும், நிர்வாக ரீதியாக வடகிழக்கில் பல இடங்களில் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் 8 கிராம சேவை பிரிவுகள் இருக்கின்ற நிலையிலும், இதுவரையில் அதன் எல்லைகள் சரிவர நிர்ணயிக்கப்படாத ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

வடகிழக்கில் மாத்திரம் தான் இன ரீதியான வகையில் பிரதேச செயலகங்களை பிரித்தாளுகின்ற ஒரு நடைமுறை இருக்கின்ற சூழலில், கொள்கை ரீதியாக அரசாங்கம் இவ்வாறானதொரு முடிவுக்கு வந்திருக்கின்றதா என்ற பிரச்சினையை இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் தான் தமிழ் பேசும் இனங்களாக இருக்கின்ற தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இந்த எல்லை நிர்ணயம் சம்பந்தமான விவகாரத்தில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவதன் நிமித்தமாக இவ்விடயம் தொடர்பில் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றோம். இதற்கென எல்லை நிர்ணயக் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையின் பின்னர் சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய கட்சிகளும் இணைந்து இந்த முடிவுக்கு வருவது தான் சாலச் சிறந்தது.

அதை விடுத்து, சாய்ந்தமருது சபையை தரமுயர்த்தி தருவதாகக் கூறி, அதன் மூலம் ஏற்பட்ட பல விபரீதங்களின் பிறகு அந்த விடயமும் கைவிடப்பட்டிருக்கின்ற நிலையில், அதற்கும் இதற்கும் முடிச்சுப் போடுவதன் மூலம் அரசியல் குளிர்காய நினைத்த சக்திகளும் தற்பொழுது விரக்தியடைந்துள்ள நிலையில், இவ்வாறான பிரச்சினைகளை மேலும் வளர்க்காமல் உரிய தீர்வைப் பெற வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றேன்.

 

 

https://thinakkural.lk/article/91511

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழத்தில் ஊசி ஏத்திறது போல நைசாகப் பேசி தன்னுடைய ஆட்களின் தேவயை முடிப்பதில் மன்னன்...கிழக்கு மாகாண சபை பறிப்பு...கல்முனை தமிழ் நகரசபை முறியடிப்பில் முழு சூத்திரதாரி இவர்தான்..

Edited by alvayan
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாவம் ஹரீஸ் , பேசுவதட்கும் முடியாமல் இருக்கிறார். குட்டிக்கரணம் அடித்ததால் ஒதுக்கி வைத்து விடடார்கள். இன்று அந்த ஏழு முஸ்லீம் MP மாறும் தீண்டத்தகாதவர்கள்போல ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இல்லாவிடடாள் நேற்று அங்கு ஒரு பெரிய வாய்ச்சவடாலையே விட்டிருப்பார்.

அது சரி ஹக்கீம் ஐயா விகிதாசாரம் பற்றி பேசுகிறார். ஒரு காலத்தில் கல்முனை நகரம் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து , தமிழர்களை வெளியேற்றி , நாய் குட்டி போடுவது போல குட்டி போட்டு பெரும்பாண்மை பற்றி பேசுகிறார்.

இன்று அநேகமான தமிழ் பெயர் வீதிகள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது. தரவை பிள்ளையார் கோவில் வீதி என்று ஒன்று இருந்தாலும், அந்த வீதி முழுவதும் அவர்கள்தான் அக்கிரமித்துள்ளார்கள். வீதிப்பெயரை மாற்றுவதட்கும் முயட்சி செய்கிறார்கள். இந்து கோவிலை உடைத்து அதில் பள்ளி வாசலும் கட்டி உள்ளார்கள்.

இப்படியாக யுத்த காலத்தை பயன்படுத்தி, இன சுத்திகரிப்பு செய்தே  இவை எல்லாம் அக்கிரமிக்கப்படடன. எனவே தமிழர் விகிதாசாரம் , எல்லை பிரச்சினை என்று பேசி அதிகாரத்தை வழங்கி தரமுயர்த்தலை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது விடயத்தில் எடப்பார்கள், காக்கை வன்னியர்களும்கூட தமிழர்களுடன்தான் இருக்கிறார்கள்.

எனவே நிச்சயமாக இம்முறை தரமுயர்த்தல் நடைபெறுமென எதிர்பார்க்கலாம். இவரின் பசப்பு வார்த்தைகள், தமிழ் பேசும் சமூகம் , தமிழ் தாய்மொழி போன்ற சொற்களை கேட்டு தமிழ் அரசியல் வாதிகள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.