Jump to content

மாவீரர் வாரம் – “காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா” -றோய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரம் – “காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா” -றோய்

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%
 90 Views
‘எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்’  என்கிறார் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
 
 
தமிழீழ மண் மீட்பு போரில் தங்களின் உயிர்களை ஈகம் செய்த  மாவீரர்களை தன்னகத்தே சுமந்து நிற்கும் இந்த கார்த்திகை மாதத்தில், அவர்கள் விட்டுச் சென்ற  கனவுகளைத் தாங்கி, உரிமைக்கான குரலை உலகறியச் செய்வோம்.
 

இந்நிலையில், மாவீரரைப் போற்றும் முகமாக  றோய் எழுதிய கவிதையை இங்கு பகிர்கின்றோம்.

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
****************
காவல் தெய்வங்களின்
கார்த்திகைத் திருவிழா
அகிலம் முழுவதும்
இன்று ஆரம்பம்
மதத்தைக் கடந்து
இனத்தைச் சேர்த்து
ஏழு நாட்கள்
நெஞ்சத்தில் இருத்தி
திருவிழாச் செய்வோம்

சங்கரை நினைத்து
விளக்கதை ஏற்ற
அடிமைகள் எமக்கு
உரிமை இல்லையாம்
அவர்களை நினைத்து
மரக்கன்று நடுவோம்
நாளைய தலைமுறை
நம்கதை சொல்லும்

https://www.ilakku.org/மாவீரர்-வாரம்-காவல்தெய-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரம் 2ம் நாள்-காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

 
1-140.jpg
 

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
 
நடுகல்லை இடித்தவர்
கோயிலைச் சிதைத்தவர்
நல்லூரான் வீதியில்
அகிம்சையை மறுத்தவர் இவர்களல்லவா
துட்டகைமுனு
எல்லாலன் நடுகல்லை
இன்றும் தொழுவோரே!
இன்று எம் நடுகற்கள்
எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்க…
நீங்கள் எங்களை தொழும் நாள் தூரமில்லை.

எம் வீரரை நினைவேந்தும் இரண்டாம் நாளில்
எடுப்போம் உறுதி
எமக்குள் ஒன்றாய்!
தங்கும் இல்லந்தோறும்
தரம் சேர்த்து
எங்கும் நிறைந்த
உம்மை நினைவிருத்தி
பொங்கும் எம் இதயத்தை
நிறுத்த
எவனால் முடியும்? என்று
இறுமாப்பாய்
தொடர்வோம்
இருள் விலகும்
எழுவோம்.

-றோய்-

 

https://www.ilakku.org/மாவீரர்-வாரம்-2ம்-நாள்-காவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரம் 3ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

 
1-147-696x399.jpg
 77 Views

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா

உயிரையும் உடலையும்
மண்ணுக்காய் கொடுத்தவர்கள்
உறவையும் மகிழ்வையும்
எமக்காகத் துறந்தவர்கள்
ஊரே உறவாகி நாடே உயிராக
நமக்காக வாழ்ந்தவர்கள்
ஆறடி நிலங்கூட அவர்களுக்கின்றில்லை
மூன்றாம் நாளினில் நினைத்துப் பார்ப்போம்

உயிரைக்கொடுக்க ஆரால் முடியும்
கடவுளின் சாயல் தெரியுதே இவரில்
கடவுளுக்கெல்லாம் கோயில் இருக்க
இவர்களின் உறவுகள் பசியோடு கிடக்க
நேர்த்திக்கடனோடு காணிக்கை சேர்த்து
ஒன்றாய்ச் செய்ய சந்தர்ப்பம் நமக்கு
அருகினில் இருக்கும் அவர்கள் இல்லாத
அவர்களின் வீட்டினில் அடுப்பு எரியுதா?

எட்டிப்பார்ப்போமேஇன்றைக்கென்றாலும்

எம்முயிர் காக்க எமக்காய் வாழ்ந்தவர்
தம்முயிர் கொடுத்து வாழ்க்கை தந்தவர்
இறுதிமூச்சிலும் எம்மை நினைத்துக்
கஞ்சி ஊத்திக் காத்த உயிர்களே
இப்போது இஞ்ச இன்னும் இருக்குது
உயிரைக் கொடுத்து வாழ்க்கை தந்த
உயிர்களை எண்ணி ஊரைப்பார்த்து
உதவிக் கரமாய் மாறுவோம் இன்று

றோய்

 

https://www.ilakku.org/மாவீரர்-வாரம்-3ம்-நாள்-காவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரம் 4ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

 
1-156-696x365.jpg
 50 Views

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
****************

இந்த நொடியில் சாவது தெரிய
இதயத்தில் என்ன எண்ணத் தோன்றும்
காந்தரூபனின் ஆசையைக் கேட்டுக்
கட்டிய இல்லங்கள் இருந்தது அன்று
ஆரும் இல்லை என்று சொல்ல
ஆருமே அப்போ இருக்கவே இல்லை
அதுக்குப் பெயர்தான் ஈழம் என்றோம்
காத்தவர் எல்லாம் கடவுள் என்றோம்
நாலாம் நாளினில் நினைத்துப் பார்க்க….

சாவதை நோக்கிப் பாயும் போதும்
எமக்காய்த் துடித்த இதயங்கள் ஆச்சே
எப்படி மறப்பது அவர்களை என்று
எதிரிக்குக் கூட நன்றாய்த் தெரியும்
அதனால் தானே அவனும் இப்போ
அவர்களை நினைத்து வழக்குப் போட்டான்
தடையென எமக்குக் குறுக்கே நின்றான்
நெஞ்சில் அவர்களின் கனவுகள் சுமந்து
செயலினில் காட்ட உறுதி எடுப்போம்

அடிமை என்பதை அழிக்க வேண்டும்
வறுமை என்பது வேண்டாம் நமக்கு
அனாதை என்று யாருமே இல்லாத்
தேசம் தானே அவர்களின் கனவு
காந்தரூபன் கண்ட கனவை
நெஞ்சில் ஏற்று தீபமாய் இன்று
அறிவுச்சோலை செஞ்சோலை
மூத்தோர் இருக்கக் காப்பகம் என்று….

இருந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்து
காப்போம் இப்போ அவர்களின் கனவை
ஈழத்தாயின் பிள்ளைகள் யாரும்
ஆருமே இல்லை என்று சொல்வதா…?
அரசியல் சாக்கடை சுத்தம் செய்து
வறுமை என்பதை ஒழிக்க வேண்டும்
நினைவில் நிற்பவர் கோயில் வேண்டும்
கரங்களைச் சேர்த்து உறுதி எடுப்போம்

றோய்

 

https://www.ilakku.org/மாவீரர்-வாரம்-4ம்-நாள்-காவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைக் காந்தள்- கவிபாஸ்கர்

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%
 42 Views

கார்த்திகைக் காந்தள்

 

உப்புக் கண்ணீர்
ஈரத்தில்..
குருதிக் காயாத
கறையோடு
முள்ளிவாய்க்காலில்
மூடப்பட்ட- எம்

உறவின்
எலும்புக் கூடுகளின்
வழியாய்..
எழும்புகிறது

எம் மாவீரர்களைப் போலவே
காந்தள் பூ!

இன அழிப்பில்
இறந்த காந்தள்
மாவீரர் நாளில்
முட்டி முளைத்து
நிமிர்கிறது..

விடுதலை திறப்பின்
அடையாளமாய்!

கார்த்திகைப்
பனிச்சாரலிலும்
முற்றத்து ஓரங்களிலும்
முன்னிலும்
பெரிதாய் சுடர் விடுகிறது

தமிழீழம் நோக்கிய
காந்தள்!

உலகில்
வாசனை பரப்பவே
பூத்த பிற பூவெல்லாம்
தலைகுனிந்தது…

தன் மண்ணை வணங்க
தலை நிமிரும்
காந்தள் பூவைக் கண்டு
“மாவீரர் நாளில்!”

 

 

https://www.ilakku.org/கார்த்திகைக்-காந்தள்-கவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரம் 5ம் நாள்- காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

 
ambara_kadu_maveerar_001-1.jpg
 71 Views

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
****************

உரிமை எடுத்துக்
கடமையை உணர்ந்து
ஈழப் போரின்
இறுதி நாட்களில்
அவயங்கள் இழந்து
இருக்கும் உறவுக்குக்
கரங்களைக் கொடுக்க
ஐந்தாம் நாளில்
உறுதி எடுப்போம்….

இருக்கும் வரைக்கும்
அவர்களே இவரைப்
பார்த்துக் கொண்டனர்
தெருவுக்கு எவரும்
வந்ததே இல்லைக்
கையேந்தி எவரும்
கண்டதும் இல்லை….
எமக்காய்த் தானே
இப்படி ஆயினர்
எண்ணம் எமக்குள்
எழுந்திட வேண்டும்….

காப்பகம் அப்போ
இருந்தது உண்மை
காத்தவர் கூடக்
கடவுளாய்ப் போனதால்
ஏக்கம் மட்டுமே
எஞ்சி இருக்கே…
எதிர்காலம் எல்லாம்
கேள்விக் குறியாய்
எத்தனை காலம்
இருப்பது சொல்லும்….?
வருங்காலம் இருக்கு
வாருங்கள் என்று
வழியதைக் காட்ட
வாருங்கள் ஒன்றாய்….

அழுக்கு அரசியல்
எமக்கு வேண்டாம்
பேரும் புகழும்
எதுக்குச் சொல்லு…?
வாழ்ந்தவர் இறைவனாய்ப்
போனதன் பின்னர்
வடுக்களைச் சுமந்து
வாழ்பவர்தானே
அவர்களை எமக்குக்
காட்டும் அர்ச்சகர்…
அந்த எண்ணம்
எமக்குள் இருந்தால்
இவர்களைக் காப்பது
எங்களின் கடமை

உணர்வினில் கொண்டு
உறுதி எடுப்போம்
கார்த்திகை மாதத்
திருவிழா தொடங்கி
ஐந்தாம் நாளாய்
ஆகிப்போச்சே…
அவர்களின் சாயல்
இவர்களில் தெரிய
ஆளுக்கு ஒருவராய்
பொறுப்பதை எடுத்துக்
காத்திட வேண்டும்
இறுதி வரைக்கும்.

றோய்

https://www.ilakku.org/மாவீரர்-வாரம்-5ம்-நாள்-காவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரம் 6ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

 
IMG_7050-1-696x464.jpg
 56 Views

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
****************
ஆறாம் நாளின்
அற்புதம் அறிந்து
நெஞ்சக் கூடுகள்
மகிழ்ச்சியில் நிறைய
தெருக்களின் பெயர்களில்
இருந்த உறவுகள்
தேடுவாரற்றுப் போனதா..?என்று
தேடிப்பார்க்கப் போவோம் இன்று

தேசியச் சின்னங்கள்
தூக்கி வந்து…
நீதியே இல்லாத
மன்றினில் வைத்துத்
தடையதை வாங்கி
அழித்திடத் தானே
வஞ்சகர் இப்போ
சூழ்ச்சி செய்கிறார்…

தேசிய நாளுக்குத்
தடையெனச் சொன்னவர்
தேசிய மலரையும்
தூக்கி வந்தனர்…
கார்த்திகைப் பூவதைக்
காட்சிப் படுத்தினால்
விடுதலை உணர்வது
வந்திடும் என்கிறார்….

கார்த்திகை மாதத்தைக்
கண்டு பயந்தவர்-இப்போ
கார்த்திகைப் பூவையும்
கண்டால் நடுக்கமாம்..!
உண்மை இதுவெனத்
தெரியும் எமக்கு
இருக்கும் வேலியில்
படர விடுவோம்….

கார்த்திகைச் செடிகளின்
பெருமை அறியாக்
கயவர்கள் கண்கள்
வெந்து போக
காப்போம் எங்களின்
பெருமை பேசும்
தெருக்களின் பெயருடன்
தேசியச் சின்னங்கள்…

பேச்சு மொழியினில்
வந்தவை பலதும்
காத்தே வளர்த்திட்ட
பயிகள் பலவும்
எங்கள் வாழ்க்கை
முறையுடன் சேர்ந்து
இன்றும் வாழும்
வரலாற்றைப் பார்த்து

அந்த முறையினில்
காப்போம் இவற்றை…
நாளைய சந்ததி
காண வேண்டும்
எங்களின் கதைகளைப்
பேச வேண்டும்
நீளும் பாதையில்
மலரும் ஈழம்

நிச்சயம் இதனைப்
படிக்கவும் வேண்டும்
அதுக்காய் பிறந்த
கடவுள் எங்கே….?
அவனியில் அவனுதித்த இன்றைய நாளில்
எம்முள் வாழும் கடவுளின்
நினைவுகள் சுமந்து
காப்போம் எங்களின்
தேசியச் சொத்தை
எடுப்போம் உறுதி
ஆறாம் நாளில்…

றோய்

 

https://www.ilakku.org/மாவீரர்-வாரம்-6ம்-நாள்-காவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம்

We-worked-for-someone-who-was-sober-and-

சாவரினும் தளரோம்…
யார்வரினும் பணியோம்…
வெந்துதணியாது வீரநிலம்!

கார்த்திகை மாதம் வேர்த்தறியாக்கலாம்.
மேகமுந்தானை விலக்கி
வானத்தாய் பூமிக்குப் பால் கொடுப்பாள்.
வேர்கள் விருட்சத்துக்கு விருந்தளிக்கும்.
நீரும் நிலமும் கலந்திளகி
பூமிப்பெண் புத்தாடை புனைவாள்.
ஆயிரம் கண்வேண்டும் அதைக்காண.
ஊரின் ஒழுங்கையெங்கும்
வாரடித்தோடும் வெள்ளம் வரைகின்ற
நீரரித்த கோடுகளில் பாதம் பதிக்க
உச்சிக்குளிர்ந்து உருகும்.
மருதாணி போட்ட அழகான விரலாய்
மண்கிழித்தெழும் காளான்மடை
பூனைமேனிப் புசுபுசுப்பாய்
சின்னக்குடை விரித்துச் சிரிக்கும்.
கூரைவழியும் நீர்த்தாரை மீது
திண்ணை மீதிருந்து திளைப்பதில்
என்ன ஆனந்தம்.

மனசில் பூபரவிப் போகும் இந்தமாதம்.
வீரத்தைக் கொண்டே விரல்மடிப்பதெனில்
கார்த்திகை மாதமே எமக்குக் கண்திறந்தமாதம்.
ஈழத்தமிழருக்கு இருநூறு கைமுளைத்ததும்,
ஈழத் தமிழரையே கூரிய வேல் துளைத்ததும்
இந்த மாதத்திற்தான்.
தமிழரை மீண்டும் தமிழரென்றாக்க
முதல்நாள் பிள்ளையொன்று வழிதிறந்தது
தமிழரின் நெஞ்சில் இடிசொருகிவிட்டு
மறுநாள் பிள்ளையொன்று விழிமூடியது.
ஆண்டுகள் வேறாயினும் தேதிகள் அருகருகாயின
இது தற்செயலான சம்பவமல்ல
ஒரு சரித்திரமான அதிசயம்.
கார்த்திகை 27 மாவீரர்நாள்.
சாவிலும் மானம் பெரிதென்று சாற்றியநாள்.
ஈழத்தமிழர் இழிந்திருக்க மாட்டோமென
ஆளும் கதிரைகளுக்கு அறிவித்தநாள்.
கூண்டிருக்க இனிவிரும்போமென
நீண்ட காலத்தின் பின் நிறுவிய நாள்.
சிறகெடுத்தப் பறந்த சிட்டுக்குருவிகளின்
தீபத்திருநாள்.
ஊனக் கனவேதுமற்ற ஞானத்துறவிகளின்
உயிர்த்தநாள்.
தேசத்தைமட்டும் ஆராதிக்கத் தெரிந்தவரின்
வாசம் பரவும் அந்தவாசல்.
மெழுகாய் விழியுருக
மெய் விதிர்க்க
அழுவோராயும், தொழுவோராயும்
பூக்கொண்டு போவோம் அப்புனிதரிடம்.
நெஞ்சுருக, நெஞ்சுருக நெய்விளக்கேற்றிக்
கல்லறை முன்னின்று கரைவோம்.
ஒருதரமேனும் விழிமலருங்களென்று உருகுவோம்.
பூச்சொரிந்து அவர்பாதம் பூசிப்போம்.
வல்லமை தாருங்களென வரம் கேட்போம்.
வில்லாண்ட வீரத்தின் ஒருதுகளை
வெளியே எறியுங்களென வேண்டுவோம்.
நதியாய்க் குதித்தோடிய நாட்களும்,
பூவாய்ச் சிரித்திருந்த பொழுதுகளும்
நினைவிருக்கா? எனக் கெஞ்சுவோம்.
உள்ளே வேர் பிடித்திருக்குமா உங்களுக்கென
காதோடுரசிக் கேட்போம்.
கல்லறைக்குள்ளே கண்மலரும்.
மேனி அசையும்.
மெல்ல சிரிக்குமொலி உள்ளே கேட்கும்.
கல்லறைக் கதவுகள் விரியப்
பிள்ளை முகம் காண்பாள் பெற்றவள்.
“அம்மா” என்றோர் அசரீரி
அவளுக்கு மட்ம் கேட்கும்.
“அப்பா” என்றோர் குரல்
அவருக்கு மட்டுதான் கேட்கும்.
தோழனே! என்ற அழைப்பு மட்டும்
துயிலுமில்லமெங்கம் கேட்கும்.
தோழியே! ஏன்ற குரல் மட்டும்
திசையெங்கும் எதிரொலிக்கும்.
குரல் கேட்டதும்
அந்தக் குளிரிலும் வேர்த்துக்குளிப்போம்.
சில்லிட்டுப் போகுமெம் ஜீவன்.
புதைக்கவில்லை விதைத்தோமென்ற
பொருளுணர்ந்து பெருகுமென் விழிகள்.
உள்ளே கொதிப்புறும் குறுதி.
சுடரும் விளக்கொளியில் மேனிசூடேறும்.
ஓவென்றிரையும் ஊதற்காற்று.
வானம் இருள் விலத்தி வழிவிடத்
தூரத்திதல் தெரியும் விடிவெள்ளி.
பிரிய மனமின்றி பிரிவோம்.

மாவீரரே!
நடுகல்லாகிவிட்ட நந்தா விளக்குகளே!
விடுதலைக்கு நிர்தந்த விலையதிகம்.
உரிமைக்கான போரில் உயிர்கொடுத்தலே
பெரியபேறு.
கவிதை எழுதுதல் கால்தூசு.
கண்ணீர் விடுதலும் கையளவே.
மண்ணுக்காக மரணிப்பதே மாதவம்.
ஓன்று மட்டும் உறுதி,
இனியுமெம் தேசம் படுக்காது.
குனிந்தெவருக்கும் குற்றேவல் செய்யாது.
தேவநிலை வந்தெய்தினும்
தாயகக் காதல் மட்டும் தணியாது.
சாவரினும் தளரோம் இது சத்தியம்
யார்வரினும் பணியோம் இது சத்தியம்
போரெடுத்தோம் வெல்வோம் இது சத்தியம்
வேந்தணியாத இந்த வீரநிலம்.
பகையுழுது போகலாம் உங்கள் படுக்கைகளை
தகையழிந்து போகுமோ சந்தனக்காடுகள்?
வேரறுந்து வீழுமோ விடுதலை?
ஊரெரிந்தம், உயிர்பிரிந்தும் போகலாம்
பிரியும் நொடியிலும் உம்மையே பேசுமெம்வாய்.
விரியும் மலரிலும் தெரியுமும் முகம்.
உமக்கருகில் எமக்கும் வேண்டும் ஓர்குழி.
உறவுகள் வந்த விளக்கேற்ற
உள்ளேயிருந்த நாமும் சிரிப்போம் ஓர்நாள்.
அதுவரை ஓயாதெம் அலைகள்.
எத்தனை புயல்களும் எழுந்து வீசட்டும்
சித்தம் கலங்கிக் சிறறோம்.
எத்தனை துயரெனினும் அழுத்தட்டும்
அத்தனை வரிப்புக்களையும் ஆனந்தமாக்குவோம்.
விடுதலை எங்களின் பேச்சு.
விடுதலை எங்களின் மூச்சு
விடுதலை நெஞ்சிற் பதியம் போட்ட நாற்று.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ் மீது உறுதி.
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி.
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி.
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி.

உலைக்களம்: வியாசன்.

https://thesakkatru.com/we-worked-for-someone-who-was-sober-and-relaxed/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைச் செல்வன் பூத்த இத்திருநாள்!

 
1-178.jpg
 54 Views

கார்த்திகைச் செல்வன் பூத்த இத்திருநாள்!

உலகத்தமிழரை உயரவைத்த ஓர்
உன்னத சக்தி இப்பூமியில் உதித்த
திலகத் திருநாள் இன்றைய பெருநாள்!
நிலவின் குளிரும் கதிரின் ஒளியும்
தமிழர் உரிமைக் குரலின் ஒலியும்
ஒருமைப் பொருளாய் உயிரினில் ஏந்தி
உதயமாகிய ஒப்பற்ற அருள்நாள்!

கார்த்திகைச் செல்வன் பிரபாகரனவன்
பூத்த இத்திருநாள் பூகோளம் வாழும்
நாற்றிசைத் தமிழர்க்கும் நல்லொளி யூட்டி
ஆற்றல் வழங்கும் அற்புத நன்னாள்!

அடிமைத் தளையின் இருளிற் தவித்து
அவலப்பட்டு அலைந்து குலைந்து
விடிவைத்தேடிய முதுதொல்குடியின்
விளக்காய் வீர வரலாற்றுப் பிறப்பாய்
மடியிற் தவழ மாதேவன் அனுப்பிய
முழக்கம் இந்தத் தரணியில் வந்துதன்
முகம்காட்டிய நற் திருநாள் இதுவாம்!

கொடியும் படையும் கொற்றத் திறனும்
கொண்டோர் தமிழன் வன்னிப்பரப்பில்
வடிவம் கொண்டு வான்வரை உயர்ந்து
இடிபோற் பகைவர் இதயம் புகுந்து
எம்தாய்நிலத்தின் எல்லை காத்துப்
படிமேற் படிகள் பலவும் ஏறிப்
பரணிப்பாவிற் கணிகள் சேர்த்து
முடிவேயில்லாப் பெருவாழ்வெய்தி
மூச்சாய்ப் பேச்சாய் எம்முள் நிறைந்தான்!

ஈகமும் தியாகமும் இன்னலும் இழப்பும்
இறைமையைக் காக்கும் இளமைவேகமும்
தாயகத் தாகமும் தாங்கியே மாவீரர்
ஆகிய அனைத்து மானிட யாகமும்
சாகாத சக்தியாயச் சரித்திரம் படைத்துச்
சோதியாய் எம்முள் சுடரென எழுந்தது!

அழிவான் தமிழன் ஈழத்தில் என்று
அடக்குமுறைகளை ஆட்சியாய் மாற்றும்
விழிகள் ஒருநாள் விடுதலை பெற்று
நடக்கும் தமிழரை நிச்சயம் காணும்!
பொழிவான் தமிழன் பேருரை உலகப்

பேரவை தனிலே பேரிகை முழங்கி!

இல்லங்கள் தோறும் ஒளிவிளக்கேற்றி
இறவா இனம்யாம் என்றிணைந்திடுவோம்!
உள்ளத்தின் அன்பினால் உலகினை அணைத்து
உரிமைகள் ஈட்டும் நெறிகளை அறிவோம்!
நல்லவை நடக்கும் நாளை நமதெனும்
நம்பிக்கையோடு நம்கடன் புரிவோம்!

– புலவர் சிவநாதன்-

https://www.ilakku.org/கார்த்திகைச்-செல்வன்-பூத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ககனத்தில் உலவி வரும் தியாகிகளைப் பாடு குயிலே -மாரீசன்

 
1-183.jpg
 52 Views

ககனத்தில் உலவி வரும் தியாகிகளைப் பாடு குயிலே

இன்சுவையி லிசைபாடும் மாந்தோப்புக் குயிலே

மாங்கனியின் சுவையினினும் உனது குரல் இனிதே

தேன்சொட்டும் குரலினிலே கவியொன்று பாடி

மாவீரர் தியாகத்தைப் புகழ்ந்திடுவாய் குயிலே

பூவெங்கும் புகழ்பரப்பும் தலைவன்குரல் கேட்டு

ஆவேசங் கொண்டுடனே ஆயுதங்க ளேந்தி

சாவொன்றும் களம்புகுந்து  கசடர்களை மடக்கி

ககனத்தி லுலவிவரும் தியாகிகளைப் பாடேன்

மலையிலிருந் தூற்றெடுத்துப் பாய்கின்ற புனலே

நிலையெடுத்துப் பகைசரித்த மறவர்களைப் பாடு

அலையலையாய்த் தொடர்ந்துவந்த சிங்கங்களை வீழ்த்தி

அகிலத்தை அதிரவைத்தமா வீரர்களைப் பாடேன்

வான்மீது திரண்டொன்றாய் அசைந்தாடும் முகிலே

வளம்பெருக்கிக் களமாடிச் சாதனைகள் படைத்து

கானூடு ஊடுருவி யூர்ந்துவந்த பகையை

இருளூடு சிதறடித்தமா வீரர்களைப் பாடேன்

காரிறுக்கச் சூல்முற்றிப் பெய்கின்ற மழையே

கடல்மீது நடமாடிக் கொடுமைகளைப் புரிந்த

கடற்படையின் கப்பல்களைக் கடலுள் மூழ்கடித்து

நீரோடு நீரானகடற் கன்னியரைப் பாடேன்

சோலையினி லெழில்பரப்பும் நறுமணத்தின் மலரே

சொந்தபந்தப் பற்றறுத்து சிங்களமும் திகைக்க

முந்திமுதற் கரும்புலியாய்த் தலைவன்கரம் பற்றி

நெல்லியடி முகாம்தகர்த்த மில்லர்புகழ் பாடேன்

கீழ்வானி லெழுந்துலகின் இருளகற்றும் நிலவே

வீசுமொளி வீச்சினிலே தலைவன்புகழ் பாடு

தாழ்ந்துநின்ற தமிழினத்தை தலைநிமிர்த்தி வாழவைத்து

வீங்குபுகழ் சேர்த்தவந்தத் தேவன்புகழ் பாடு

கொண்டலெனக் கருக்கூட்டி அண்டமெலா மதிரவைத்து

கோரமுகத் தோடுதலை விரித்தாடும் புயலே

மண்டலங்க ளதிரவைத்து அதிரடியால் இனமழித்த

சண்டியரைச் சரித்தமா வீரர்களைப் பாடேன்

பகலிரவைப் பகுத்துவைக்கப் பம்பரமாய் சுழன்றுநின்று

பகலவனில் நிழலுமிட்டு உருமறைக்கும் பூப்பந்தே

பெருமெடுப்பில் குண்டுகளால் இனமழித்த விமானங்களை

எரிமலையாய்ப் பொசுங்கவைத்த கரும்புலிகள்புகழ் பாடேன்

பூவிலுறை யுயிரினங்கள் அத்தனைக்கும் வாழ்வளித்து

ஆவியுயிர்ப் பாகிநிற்கும் எரிதழற் செங்கதிரே

தேவனெனத் தமிழீழம் படைத்ததனை யாண்டுநின்ற

மாமன்னன் தேசியத் தலைவன்புகழ் பாடேன்.

https://www.ilakku.org/ககனத்தில்-உலவி-வரும்-திய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

127615304_198401591857059_7497531695010300231_n.jpg?_nc_cat=107&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=pR_attQ8wQcAX_kZSli&_nc_ht=scontent-frt3-1.xx&oh=388e54ff29e4a637ae1e5bb5697b3497&oe=5FE4416C

 

127872626_198401375190414_6676891068280267521_n.jpg?_nc_cat=101&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=ctX3KroHTFQAX81kYIb&_nc_ht=scontent-frt3-2.xx&oh=0245bc2ce716baa4255c62fff0cca5c1&oe=5FE6FBDA

 

127723597_198401378523747_4473864303155800456_n.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=wSsk2P1aT3AAX__OLJp&_nc_ht=scontent-frt3-1.xx&oh=d6ce7279b2fa0ccca5e152afc191b6fe&oe=5FE79E60

 

பிரித்தானியா  பாராளமன்ற வளாகத்தில்,  எம் வீர மறவர்களுக்காக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரம் இறுதி நாள் – காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

 
1-182-696x464.jpg
 68 Views

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
****************

சாவுக்கே
சாவதைக் காட்டியவர்கள்
வாழ்வுக்கே
விதையாகிப் போனவர்கள்
கொள்கைக்கே
வாழ்க்கைப் பட்டவர்கள்
விடுதலைக்கே
வாழ்க்கை கொடுத்தவர்கள்
ஈழத்துக்கே
இவர்கள் காவல்தெய்வங்கள்
எடடா
கையில் தீபத்தை
அடியடா
பறையிசை அகிலம் கேட்க
ஏழாம்நாளில்
வந்து நிற்கிறோம்….

ஈழத்தாயே உன்தன்
கருவறைகூடப்
புனிதம் கண்டது
புனிதர்களையெல்லாம்
புதைத்ததால் இப்போ
புனிதம் கண்டது…
சாவே உனக்கு
அச்சமே இல்லையாம்
சொன்னது பொய்யெனப்
புதுக்கதை எழுதிய
கரும்புலிகளைப் பார்த்து
அச்சம் கொண்டதை
அஞ்சாமல் நீ சொல்லு…

அடிமைகளின் வாழ்க்கையே
அச்சத்தை விட்டு
வெளியே வா…
வாழ்க்கைக்கே
வாழ்க்கை தந்தவர்கள்
இவர்களெனக்
கார்த்திகைப் பூக்களால்
சாமத்துப் பூசை செய்…
கொள்கையே உனக்கு
வாழ்க்கைப் பட்டவர்கள்
பிரிந்து சென்றதையே
கண்டதாய்க் கூறிக்-
கண்ணீர் விட்டதைத்
துடைத்து விடு
இறுதி வரைக்கும் -உனக்கு
வாழ்க்கை கொடுத்தவரை
விளக்கேற்றித் தொழு…

அகிலத்தில் இருக்கும்
சிறைகளில் எல்லாம்
அடிமையாய்க் கிடந்த
விடுதலையே…உனக்கு
விடுதலை எடுக்கப்
போராடிப் போன
புரட்சி விதைகளின்
கருவறைகளைக்
கண்ணீரால் கழுவு….
வாழ்க்கை கொடுத்தவர்கள்
இவர்கள் அல்லவா..?
ஈழத் தாயே -நீ
பெருமை கொள்
இவர்கள் எல்லாம்
உனது பிள்ளைகள்
என்பதை எண்ணிப்
பெருமை கொள்….

அகிலத் தமிழரே….
அடியுங்கள் பறையை
ஏழாம் நாளினில்
திருவிழாச் செய்வோம்
உரத்த குரலினில்
உரிமையைக் கேட்டு
ஊர்வலம் செல்வோம்
எங்களைச் சுற்றிக்
காவல் தெய்வங்கள்
அச்சம் எதுக்கென
அடியடா பறையை….
ஆதிக்கப் பேய்கள்
ஈழத்தை விட்டு
ஓட வேண்டும்
உலகம் எம்மைப்
பார்க்க வேண்டும்…
ஈழம் நிச்சயம்
மலர்ந்திட வேண்டும்

அதனை எண்ணி
எடடா பறையை
அடித்துச் சொல்வோம்
எங்களின் இலக்கை
இதற்காய்த் தானே
எங்கள் மண்ணின்
காவல் தெய்வங்கள்
யாகம் செய்தனர்….
கார்த்திகை மாதத்
திருவிழாச் செய்து
இந்த நாளினில்
உறுதி எடுப்போம்
இலக்கை நோக்கிப்
பயணம் போகத்
துணைக்கு வருவார்…
எங்களின்
காவல்த் தெய்வங்கள்
எடுப்போம் பறையை
அகிலம் அதிர….
அடியடா அதை…..
இன்று ஏழாம் நாள்..!!

றோய்

 

https://www.ilakku.org/மாவீரர்-வாரம்-இறுதி-நாள்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தள் கிழங்குகளே -வெற்றிச்செல்வி

 
2-1-1.jpg
 55 Views

காந்தள் கிழங்குகளே

மனசுக்குள் புதைந்திருக்கும் காந்தள் கிழங்குகளே

மழையின் துளிர்த்தலால் சிலிர்க்கும் மண்ணிலே

நீங்கா இடம் பிடித்து நின்றுலவும் உங்களது

கனவுகள் சுமந்தபடி பயணம் தொடர்கிறோம்.

 

ஆக்க நினைத்ததும் நீக்க நினைத்ததும்

ஆகும் நீங்கும் என்ற கனவில் விழி மூடினீர்கள்.

விழித்த மனதில் புதிய விதையாய் நிலை நாடினீர்கள்

கனவின் தொடர்ச்சி நீளும் நாளுமெனச் சுடராகினீர்கள்.

 

அக்கினிக் குஞ்சென வாழ்ந்தீர் இருள் எரிக்க

ஆகாய விரிப்பில் மலர்ந்தீர் வீரம் சிறக்க

காற்றின் மொழியில் கடலில் அலையில் கடும்

கானகம் வெளியில் புயலில் வெய்யிலில்…

 

சிவப்பு மஞ்சள் நிறங்களிலே காற்றின் கொடிகள் படபடக்க

நாளும் பொழுதும் மாலையிட்டு உம்முன் மண்டியிடவில்லை.

மனதுக்குள் புதைத்து வைத்த காந்தள் கிழங்குகளே நீங்கள்

பெருநெருப்பாய் பூத்திருக்க நாங்கள் பணிசுமந்தே பாதையெங்கும்…

 

https://www.ilakku.org/காந்தள்-கிழங்குகளே-வெற்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.