Jump to content

சூரரைப் போற்று - விமானம் வாங்கிய ஈழத் தமிழன்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூரரைப் போற்று - விமானம் வாங்கிய ஈழத் தமிழன்.!

Screenshot-2020-11-22-10-35-27-181-org-m

சூரைப்போற்று திரைப்படம் வெகு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தன் கடின உழைப்பால் விமானம் வாங்கிய ஈழத் தமிழன் பற்றி நடிகர் மன்மதன் பாஸ்கி முகநூலில் சுவாரசியமான குறிப்பொன்றை எழுதியுள்ளார். அதனை வாசகர்களுக்கு தருகிறோம்..

நடிகர் சூர்யா நடித்த Soorarai Pottru (சூரரைப் போற்று) படம் தற்போது வெளிவந்து பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இந் நேரம்.

ஒரு சமூகத்தில் தன் இனத்தில் ஒருவன் – அடையாளப் படுத்தப்படுகின்றான் வெற்றி பெறுகின்றான் சாதனை படைக்கின்றான் என்றால் அவன் சார்ந்த இனம் அவனை வரவேற்று வாழ்த்தவேண்டும்..

கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமிழர் ஒருவர் தனது கடின உழைப்பாலும் ஆற்றலாலும் அவர் திறமையாலும் வெற்றி பெற்று நிற்கின்றார். ஒம் புலம்பேர் மண்ணில் பல தரப்பட்ட  புலம்பெயர் தொழிலதிபர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களில் குறிப்பிட்ட நபர்களே நம் தேச மக்களுக்காக குரல் கொடுத்தும் உதவிக்கரம் நீட்டியும் வருகின்றவர்கள் . அவர்களில் குறிப்பிடதக்க ஒருவர் கனடாவில் வாழ்ந்து வரும் சந்திரன் ராசலிங்கம் என்பவர்.

யாழ்ப்பாண இந்து கல்லூரியின் பழைய மாணவர், இலங்கையை விட்டு வெறும் $40 உடன் கனடாவிற்கு வந்து இறங்கி இன்று 28 வருடங்கள்.

Inforce Group of Companies என்னும் நிறுவனம் உருவாக்கி 8 வருடங்கள். அதன் ஊடாக மாபெரும் வெற்றி பெற்று நிற்கின்றார்.

இன்று தனக்கு சொந்தமாக ஒரு விமானத்தை வாங்கி தன் வளர்ச்சியில் சாதனை புரிந்து நிற்கும் நம் தமிழர் சந்திரன் ராசலிங்கம் அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுங்கள். நன்றி.! இவ்வாறு அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://vanakkamlondon.com/world/srilanka/2020/11/91602/

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சந்திரன். எம்பிராயரா செஸ்னாவா? இனி கலஃஸ்ட்ரீம் g650? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கு உரியவர்தான் அவர். வயதும் அதிகம் இல்லை போல் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்தல் M2 போல இருக்கு 
M2 என்றால் புதுசு $5 மில்லியனுக்கு வாங்கலாம் 

எனது நண்பர் ஒருவரும் டொரோண்டோவில் 
ஒரு பிளேன் வாங்கி பறந்து திரிகிறார். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.