Jump to content

போட்டா போட்டி போடும் கரோனா தடுப்பூசிகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

போட்டா போட்டி போடும் கரோனா தடுப்பூசிகள்!

corona-vaccine  

கரோனா தடுப்பூசி உருவாக்கத்தில் உலக நாடுகளிடையே போட்டா போட்டி நிலவுகிறது. இதுவரை 11 கரோனா தடுப்பூசிகள் மக்களின் நம்பிக்கையைப் பெறும் விதத்தில் அமைந்துள்ளன. அமெரிக்காவின் பைசர் (Pfizer) நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து ‘BNT162b2’ கரோனா தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும் இத்தடுப்பூசி 90 சதவீத பலன் தருவதாகவும் அவசரப் பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதி கேட்க இருப்பதாகவும் இந்த நிறுவனங்கள் சமீபத்தில் அறிவித்தன.

தங்களது ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி 92 சதவீத பலன் தருவதாக அடுத்த இரண்டு நாள்களில் ரஷ்யா அறிவித்தது. இந்த வாரம், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள ‘எம்ஆர்என்ஏ-1273’ (mRNA-1273) தடுப்பூசி 94.5 சதவீதச் செயல்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவித்து, உலக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 
 
 

‘கரோனாவுக்குத் தடுப்பூசி அவசர மாகத் தேவைப் படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. எந்த நாடு அதை முதலில் வெளியிடுகிறது என்பதும் முக்கியமில்லை. தற்போது ஆய்வில் இருக்கும் தடுப்பூசி நிறுவனங்கள் முழுமையான முடிவுகளைச் சமர்ப்பித்த பிறகு அதிகபட்ச தரநிர்ணயங்களைப் பின்பற்றி, மிகவும் பாதுகாப்பானதாகவும், அதிக செயல்திறன் உள்ளதாகவும் தீர்க்கமாக உறுதி செய்யப்படும் தடுப்பூசிதான் பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் போட்டிபோடும் இந்த மூன்று தடுப்பூசிகளின் கள நிலவரம் என்ன?

பைசர் தடுப்பூசி

பைசர் தடுப்பூசியில் ‘எம்ஆர்என்ஏ’ (mRNA/messenger RNA) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசித் தயாரிப்பில் இதுவரை வழக்கத்தில் இல்லாத தொழில்நுட்பம் இது. இந்த வழியில் எளிதாகவும் விரைவாகவும் தடுப்பூசி தயாரிக்கலாம் என்பதுதான் இதற்குக் காரணம். கரோனா வைரஸில் ‘ஆர்என்ஏ’ எனும் மரபுச்சங்கிலி உள்ளது. ‘ஆர்என்ஏ’வில் பல பிரதிகள் உண்டு. அவற்றில் ஒரு பிரதி ‘எம்ஆர்என்ஏ’. இந்த இரண்டிலும் ஒரே மாதிரியான மரபணு வரிசையே இருக்கும். மனித உடல் செல்களில் புரதங்களைத் தயாரிப்பதற்கான செய்முறைக் குறிப்புகள் அதில் எழுதப்பட்டிருக்கும். ஆகவே, ‘எம்ஆர்என்ஏ’வைத் தனியாகப் பிரித்து, அதுபோலவே செயற்கைமுறையில் தயாரித்து, நானோதுகள் கொழுப்புப் பந்துகளுக்குள் செலுத்தி இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கின்றனர்.

இதை உடலுக்குள் செலுத்தியதும் பயனாளியின் ரத்தத்தில் கரோனா வைரஸின் கூர்ப்புரதங்கள் (Spike proteins) உற்பத்தியாகும். அதைக் கவனிக்கும் தடுப்பாற்றல் மண்டலம் அந்நியர்கள் உடலுக்குள் நுழைந்து விட்டனர் எனக் கணித்து, அவற்றை எதிர்ப்பதற்காக எதிரணுக்களை (Antibodies) நிரந்தரமாக உருவாக்கி விடும். அதற்குப் பிறகு அவருக்கு நாவல் கரோனா வைரஸ் தொற்றுமானால், இந்த எதிரணுக்கள் அதை அழித்துவிடும்; கோவிட்-19 நோய் தடுக்கப்படும். இந்த முறையில் செயல்படுகிற இத்தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மை குறித்து அறிவியலாளர்கள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

பிரச்சினைகள் என்ன?

முதலாவதாக, இதன் மூன்றாம் கட்ட ஆய்வில் 44,000 தன்னார்வலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதில் 94 பேரின் முடிவுகளே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன என்கிறார், அதன் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா. எனவே, இதன் பலன் இன்னும் உறுதிப்படவில்லை என்பது தெளி வாகிறது. அடுத்ததாக, அமெரிக்காவின் ‘எஃப்டிஏ’, அவசரப் பயன்பாட்டுக்கு இதை அனுமதிக்க, இப்போதுள்ள தரவுகள் போதுமானவையாக இல்லை. மூன்றாவதாக, இதன் ஆய்வு முடிவுகள் ‘லான்செட்’ போன்ற மருத்துவ ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டு மதிப்பாய்வு (Peer-review) செய்யப்பட வில்லை.

நான்காவதாக, இதைப் பாதுகாப்பதற்கு மைனஸ் 70 – 80 செல்சியஸ் வெப்பநிலை உள்ள ஆழ்உறை குளிர்பதனப்பெட்டிகள் தேவை. இப்படியான குளிர்சங்கிலிப் (Cold chain) பாதுகாப்பு அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில்கூட இல்லை. இந்தியாவிலும் இது இல்லை. மேலும், இதன் தரம் குறித்து இந்தியாவில் ஆய்வு செய்யப்படவில்லை. இறுதியாக, இது மரபு சார்ந்த புதுவித தடுப்பூசி என்பதால், பயனாளியின் மரபணுவுக்கு ஏதேனும் பாதகம் செய்யுமா என்பது போகப்போகத்தான் தெரியவரும். இதன் தயாரிப்பில் வைரஸ் கிருமியை நேரடியாகப் பயன்படுத்தவில்லை என்பதும் இந்தத் தடுப்பூசி போடப்படு வதன் மூலம் பயனாளிக்குக் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பதும் தான் இதன் முக்கியமான நன்மைகள் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

மாடர்னா தடுப்பூசி

மாடர்னாவின் ‘எம்ஆர்என்ஏ-1273’ தடுப்பூசி அதன் தயாரிப்பிலும் செயல் முறையிலும் ஏறக்குறைய பைசரின் தடுப்பூசி போன்றதே. ஒரே வித்தியாசம், இதைப் பாதுகாக்க தற்போதுள்ள குளிர்பதனப்பெட்டிகளே போதும். இதை 30,000 தன்னார்வலர்களுக்குப் போட்டுப் பரிசோதித்த மூன்றாம் கட்ட ஆய்வில் 94.5% பலன் கிடைத்ததாக இடைக்கால ஆய்வு முடிவு தெரிவித் துள்ளது. முழு முடிவுகள் வந்தபிறகே இதன் திறன் குறித்து முடிவுசெய்ய முடியும் என்பது வல்லுநர்களின் கருத்து. மேலும், இது இன்னமும் மருத்துவ ஆய்வேடுகளில் பதிவாகவில்லை என்பதும் வல்லுநர்களின் மதிப்பாய் வுக்குச் செல்லவில்லை என்பதும் இதன் செயல்திறனை இப்போதே ஒப்புக்கொள்ளத் தடைகளாக உள்ளன.

16059318992006.jpg

‘ஸ்புட்னிக் - வி’ தடுப்பூசி

‘உலக சுகாதார நிறுவனத்திடம் அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு உலக அளவில் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட கரோனா தடுப்பூசி’ எனும் சிறப்பு ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிக்கு உண்டு. 1957இல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் முதல் செயற்கைக்கோளான ‘ஸ்புட்னிக்’கின் பெயரை இது பெற்றுள்ளது. ‘வி’ என்பது ‘Vector vaccine’ ஐக் குறிக்கிறது. ரஷ்யாவின் ‘கமாலியா தேசிய ஆய்வு மையம்’ இதைத் தயாரிக்கிறது.

ஏறக்குறைய இறுதிக்கட்ட ஆய்வில் இருக்கும் இந்தத் தடுப்பூசித் தயாரிப்பில் ஒரு கடத்துயிரியை (Vector) ஏந்துபொருளாகப் பயன்படுத்து கின்றனர். இந்த வழியில் எளிதாகவும் விரைவாகவும் தடுப்பூசி தயாரிக்கலாம் என்பது மட்டுமன்றி, பாதுகாப்புக்கும் உறுதிகொடுக்கும் தொழில்நுட்பம் இது. ஏற்கெனவே, ‘எபோலா’வுக்கு இதே போல் தடுப்பூசிகளை உருவாக்கிய அனுபவம் ‘கமாலியா’வுக்குக் கைகொடுக் கிறது. மனிதருக்கு வழக்கமாகச் சளி, ஜலதோஷம் உள்ளிட்ட சுவாச நோய்களை ஏற்படுத்தும் ‘அடினோ வைரஸ்’தான் இதில் ஏந்துபொருள். அடினோ வைரஸின் மரபணுவை அகற்றிவிட்டு, அந்த இடத்தில், வீரியம் குறைக்கப்பட்ட நாவல் கரோனா வைரஸின் கூர்ப்புரத மரபணுக் குறியீடுள்ள (Spike protein gene code) புரதக்கூறை எடுத்துச் செலுத்திவிடுகின்றனர்.

இவ்வாறு மறு உருவாக்கம் செய்யப் பட்ட அடினோ வைரஸ்களைத் தேவைக்குத் தயாரித்துத் தடுப்பூசியாக மனிதருக்குச் செலுத்துகின்றனர். இதனால், பயனாளியின் ரத்தத்தில் கரோனா கூர்ப்புரதங்கள் உருவாகின்றன. அவரது தடுப்பாற்றல் மண்டலம் இவற்றை அந்நியர்களாகப் பாவித்துத் தாக்குதல்களை நடத்து வதற்கு எதிரணுக்களை உற்பத்தி செய்துவிடுகிறது. இவர்களுக்கு அடுத்த முறை கரோனா தொற்று ஏற்படும்போது இந்த எதிரணுக்கள் அதை அடையாளம் கண்டு தொடக்கத்திலேயே அழித்து விடுகிறது. அதனால், கோவிட்-19 நோய் வருவது தடுக்கப்படுகிறது.

பலன்கள் என்னென்ன?

புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து AZD1222 எனும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. (இந்தியாவில் இதன் பெயர் கோவிஷீல்டு). இதுவும் அடினோ வைரஸ் தடுப்பூசிதான். ஆனாலும், ‘ஸ்புட்னிக்-வி’ தயாரிப்பு புதுமையானது. சூட்கேஸின் கூடுதல் பாதுகாப்புக்கு இரட்டைப் பூட்டு இருப்பதைப்போல், ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியில் இரண்டு வெவ்வேறு வகை அடினோ வைரஸ்கள் கடத்துயிரிகளாகச் செயல்படுகின்றன. இந்தத் தொழில்நுட்ப உத்தி உலகில் முதல்முறையாகப் பயன்படுத்தப் படுகிறது என்பது இதன் தனிச்சிறப்பு.

‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி ஒருவருக்கு இரண்டு தவணைகள் போடப்படுகிறது. முதல் தவணைத் தடுப்பூசியில் ‘ஆர்ஏடி26’ (rAd26) எனும் அடினோ வைரஸ் ‘ஏவுதள’மாகிறது. பயனாளியின் செல்களுக்குள் வைரஸ்கள் நுழைவதற்கு முன்பே அவற்றை அழித்து விடக்கூடிய எதிரணுக்களை (Humoral cellular immunity) இது உருவாக்குகிறது. 21 நாள்கள் கழித்துப் போடப்படும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியில் ‘ஆர்ஏடி5’ (rAd5) எனும் அடினோ வைரஸ் ‘ஏவுதள’மாகிறது. இது அவரது நினைவு தைமஸ் செல்களை (Memory T cells) மேம்படுத்தித் தடுப்பாற்றலை நீட்டிக்கிறது; செல்களுக்குள் புகுந் துள்ள வைரஸ்களையும் அழிக்கிறது.

மேலும், இது திரவத் தடுப்பூசி, பவுடர் தடுப்பூசி என இரண்டுவிதமாகத் தயாரிக்கப்படுகிறது. திரவத் தடுப்பூசியைக் குளிர்பதனப்பெட்டியில் மைனஸ் 18 டிகிரி செல்சியஸிலும், பவுடர் தடுப்பூசியை இரண்டிலிருந்து எட்டு டிகிரி செல்சியஸ் வரையிலும் பாதுகாக்க முடியும். இது நம் வீட்டுக் குளிர்பதனப்பெட்டியில் நிலவும் வெப்பப் பாதுகாப்பு. ஆகவே, இந்தியாவில் இந்தத் தடுப்பூசியைப் பராமரிப்பதற்குக் ‘குளிர்சங்கிலி’யில் பிரச்சினை இல்லை என்பது இன்னொரு கூடுதல் நன்மை.

‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி மாஸ்கோ வில் மட்டும் 19,000 பேருக்கு முதல் தவணையாகவும் 6,500 பேருக்கு இரண்டாம் தவணையாகவும் போடப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் புதினின் மகளுக்கே இது சோதனைமுறையில் செலுத்தப்பட்டது. இப்படி ரஷ்யாவில் மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு நாடுகளிலும் மூன்றுகட்ட ஆய்வுகள் முடிந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் 85 சதவீத்தினருக்கு எவ்விதப் பக்கவிளைவும் ஏற்படவில்லை என்கின்றன. இந்தியாவில் இதன் மூன்றாம் கட்ட ஆய்வைத் தொடங்க டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்துடன் ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை 13,000 தன்னார்வலர்கள் இந்த ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளிலும் இதன் செயல்திறன் உறுதிப்படுமானால் இந்தியாவில் இதைப் பயன்படுத்தத் தயங்க வேண்டியதில்லை.

தவிரவும், இந்தத் தடுப்பூசி குறித்த விவரம் ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. இனி, தடுப்பாற்ற லியல் வல்லுநர்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டியது மட்டுமே நிலுவையில் உள்ளது. அதுவும் முடிந்துவிட்டால் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்துவிடும்.

ஆக, இன்றுள்ள கள நிலவரப்படி உலகில் கரோனாவை ஒழிக்கும் முதல் தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக்-வி’ முந்திக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே, 50க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தத் தடுப்பூசியின் வணிக விநியோகத்துக்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றிருப்பதால் நமது எதிர்பார்ப்பு அதிகமாவதிலும் நியாயம் இருக்கிறது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

 

https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/603716-corona-vaccine-5.html

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வணக்கம் வாத்தியார்.....! வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும்   உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம் தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும்   தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா --- வேறெதுவும் தேவையில்லை---
  • ஜெனிவா அரசியல் குற்றம்சாட்டுக்களால் பயனுண்டா? - யதீந்திரா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலின் போது, அங்கு பேசியிருக்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தங்களின் அதிருப்திகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தியாவின் நிலைப்பாடு என்ன ? – என்னும் கேள்வியிருந்த நிலையில், தற்போது இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் நீதி, சமத்துவம் கௌரவம், சமாதானம் ஆகியவற்றின் மீது, இந்தியா அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மூலம், தமிழ் மக்களின் உரிமைகளை மதிப்பது, இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உகந்தது என்னும் நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புவதாகவும் ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தெரிவித்திருக்கின்றார். அதே வேளை இவ்வாறான அபிலாஸைகளை நிறைவேற்றுவதற்கு, நல்லிணக்கம் மற்றும் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது அவசியமென்றும் இந்தியா வலியுறுத்தியிருக்கின்றது. புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவருவதன் ஊடாக, 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்னும் குரல்கள் தெற்கில் மேலோங்கியிருக்கின்ற சூழலில், மீண்டும் இந்தியா 13வது திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் தொடர்பில் வலியுறுத்தியிருப்பது முக்கியமானது. ஆனால் தமிழ்ச் சூழலில் ஒரு சோர்வு காணப்படுகின்றது. இதற்கு காரணம், ஏற்கனவே வெளிவந்திருக்கும் பூச்சிய வரைபு. கடந்த வாரம் பூச்சிய வரைபொன்றை இணைத்தலைமை நாடுகள் வெளியிட்டிருந்தன. அதனடிப்படையிலேயே இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரவுள்ளது. அந்த வரைபில் சில விடயங்கள் இணைத்துக்கொள்ளப்படுமா அல்லது அது மேலும் பலவீனப்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு பலவீனப்படுத்தப்பட்டால் கூட, அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பூச்சிய வரைபு தமிழ் கட்சிகளினதும் புலம்பெயர் அமைப்புக்களினதும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாகவே இருக்கின்றது. களத்திலிருந்து, பிரதான மூன்று தமிழ் கட்சிகளும் கூட்டாக ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தன. அதே போன்று, புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தன. அதே வேளை தனியாகவும் சில அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. இவை அனைத்திலும் சில விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. அதாவது, இலங்கையின் பொறுப்பு கூறல் விடயம் எதிர்பார்த்தளவிற்கு முன்னோக்கி பயணிக்கவில்லை. எனவே இனியும் இலங்கையின் பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் பேரவைக்குள் விவாதிப்பதில் பயனில்லை. இலங்கை விவகாரத்தை பேரவைக்கு வெளியில் கொண்டுசெல்ல வேண்டும் – என்பதே தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இந்த அடிப்படையிலேயே இலங்கை விவகாரத்தை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டுமென்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதே வேளை, சிரிய விவகாரத்தில் பின்பற்றப்பட்ட ரிபிள் ஐ.எம் பொறிமுறையை இலங்கை விவகாரத்திலும் கைக்கொள்ள வேண்டுமென்னும் கோரிக்கையும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஒரு பாதிக்கப்பட்ட தரப்பு தங்களின் நிலைப்பாடுகளை முன்வைப்பதில் தவறில்லை. ஆனால் அதனை நாடுகள் தங்களின் தராசில் நிறுத்துப்பார்த்துத்தான் கையிலெடுக்கும். நிறுத்துப்பார்க்கும் போது அதன் நிறையை தங்களால் சுமப்பது கடினமென்று கருதினால், அதனை கைவிட்டுவிடும். இதனை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். பூச்சிய வரைபை கண்டதும் தமிழர் தரப்பில் பலரும் உணர்சிவசப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு பலரும் உணர்ச்சிவசப்படுவதற்கு ஒரு தெளிவான காரணமுண்டு. அதாவது, ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையின் உள்ளடக்கம் சற்று காட்டமாக இருந்தது. தமிழர் தரப்புக்களின் எதிர்பார்ப்புக்ளை பூர்திசெய்வதாக இருந்தது. இதனால் சிலர் அதற்கு அவசரப்பட்டு உரிமை கோரவும் முற்பட்டனர். தாங்கள் கூறிய விடயங்கள் ஆணையாளரின் அறிக்கையிலும் வெளிவந்திருப்பதாகவும் சிலர் கூறிக்கொள்வதை காணமுடிந்தது. ஆனால் இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் பூச்சிய வரைபிற்கும் ஆணையாளரின் அறிக்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமுண்டு. ஆணையாரின் அறிக்கையால் புளகாங்கிதமடைந்திருந்தவர்களுக்கு, பூச்சிய வரைபு ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது. உண்மையில் இதில் புளகாங்கிதமடைவதற்கும் ஏமாற்றமடைவதற்கும் எதுவுமில்லை. ஆணையாளர் எவ்வாறான பரிந்துரைகளையும் முன்வைக்கலாம் ஆனால், அவற்றை உறுப்புநாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உறுப்புநாடுகளை பொறுத்தவரையில் மனித உரிமை என்பது இரண்டாவது விடயம். மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்குத்தான் மனித உரிமைகள் முதலாவது விடயம். ஆணையாளரின் அறிக்கையை, ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன்களிலிருந்துதான் உற்றுநோக்கும். ஆணையாளரின் அறிக்கையில் எதனை ஆதரிக்கலாம் – எதனை ஆதிரிக்கக் கூடாதென்னும் முடிவுகளை மேற்கொள்ளும். இந்த இடத்திலிருந்துதான் இணைத்தலைமை நாடுகளின் பூச்சிய வரைபை நோக்க வேண்டும். இணைத்தலைமை நாடுகள் ஒரு வரைபை முன்வைத்தால் அதில் வெற்றிபெற வேண்டும். வெற்றிபெற வேண்டுமாயின் பேரவையின் பெரும்பாண்மையான உறுப்பு நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருக்கும் 47 உறுப்பு நாடுகளும் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பிராந்தியம், அதில் தங்களுக்குள்ள கடப்பாடுகள், தங்களின் அரசியல் கொள்கை நிலைப்பாடுகள் – இவற்றிலிருந்தான் முடிவுகளை மேற்கொள்ளும். இவற்றை கருத்தில் கொண்டுதான், இணைத்தலைமை நாடுகள் செயற்பட முடியும். இவற்றை கருத்தில்கொள்ளாது விட்டால், இணைத்தலைமை நாடுகள் முன்வைக்கும் பிரேரணை தோல்வியடைந்துவிடும். பாதிக்கப்பட்டவர்கள் என்னுமடிப்படையில், தமிழர் தரப்பின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும், இந்த விடயங்கள் எவையுமே நியாயத் தராசில் நிறுத்துப்பார்ப்பதில்லை. ஒவ்வொரு நாடுகளினதும் சொந்த நலன்களுக்கான தராசுகளில்தான் நிறுத்துப் பார்க்கப்படும். இதனை துல்லியமாக மதப்பிடாமல் அல்லது மதிப்பிடத் தெரியாமல், இணைத்தலைமை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டுமென்றவாறு ஆவேசப்படுவதால் எந்தவொரு பயனுமில்லை. இவ்வாறு ஆவேசப்படுவது தமிழர் தரப்பிலுள்ள சர்வதேச அரசியல் தொடர்பான வறுமையே இனம்காட்டும். 2012இல் இலங்கை மீது முதலாவது பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, பேரவையில் அமெரிக்கா உறுப்பு நாடாக இருந்தது. அமெரிக்கா இல்லாதிருந்திருந்தால் அப்படியொரு பிரேரணையை வெற்றிகொண்டிருக்க முடியாது. இப்போதும் அமெரிக்காவின் ஆதரவு நிச்சயம் இணைத்தலைமை நாடுகளுக்கு தேவை. ஏனெனில் இணைத்தலைமை நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளால் ஒரு எல்லைக்கு மேல் பல்வேறு நாடுகளை வளைக்க முடியாது. அமெரிக்காவின் புதிய ராஜாங்கச் செயலர் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் உரையாற்றும் போது, இலங்கையின் பொறுப்பு கூறல் விடயத்தில் அமெரிக்கா அக்கறை செலுத்துமென்று தெரிவித்திருக்கின்றார். அமெரிக்கா இந்த விடயத்தில் மீளவும் தலையீடு செய்யுமென்னும் செய்தி தெளிவாக வெளிவந்திருக்கின்றது. அமெரிக்கா அதன் உலகளாவிய கரிசனைகள் என்னுமடிப்படையில்தான் இலங்கை விவகாரத்திலும் தலையீடு செய்யும். பைடன் நிர்வாகம் மீளவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு திட்டமிட்டிருக்கின்றது. அமெரிக்கா நிச்சயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஆதிரிக்காது. ஏனெனில் அமெரிக்கா அதனை அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமெரிக்காவின் மீதே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. தமிழர் தரப்பிற்கு அமெரிக்காவின் ஆதரவு தேவையெனின் அமெரிக்க நிகழ்சிநிரலை முதலில் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். உலகமே யாழ்ப்பாணத்தை திரும்பிப்பார்த்துக் கொண்டிருப்பதான கற்பனைகளை விடுத்து, யதார்த்தத்தை புரிந்துகொள்ளவும், அந்த யதார்த்தத்திற்குள்ளால் பயணிப்பதற்கும் முயற்சிக்க வேண்டும். அவ்வாறில்லாது கற்பனைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தால் மற்றவர்களை நோக்கி குற்றச்சாட்டுக்களை மட்டுமே தமிழர்கள் முன்வைத்துக் கொண்டிருக்க நேரிடும். அதனால் எந்தவொரு பயனுமில்லை. ஏனெனில் சர்வதேச சமூகத்தை, பலம்பொருந்திய நாடுகளை குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு எந்த நஸ்டமும் இல்லை. தமிழருக்குத்தான் நஸ்டம். தமிழர்கள் மீதிருக்கும் கொஞ்சமளவு கரிசனையையும் தமிழர்கள் இழக்க நேரிடும். இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் எந்தவொரு பிரேரணைiயும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலில்லை. இலங்கையை முற்றிலுமாக மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலிலிருந்து முற்றிலுமாக வெளியில் எடுக்க வேண்டுமென்றே ராஜபக்சக்களின் அரசாங்கம் முயற்சிக்கின்றது. நாடுகளை இலக்கு வைக்கும் பிரேரணைகளை எதிர்க்கும் நாடுகளும் அரசாங்கத்தையே ஆதரிக்கின்றன. அதே போன்று அமெரிக்க எதிர்ப்பை தங்களின் அரசியலாக கொண்டிருக்கும் நாடுகள், சீன சார்பு நாடுகள் என பலரும் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, பேரவையிலுள்ள நாடுகள் தங்களுக்குள் பிளவடைந்திருக்கின்றன. உண்மையில் அவர்கள் மனித உரிமையை முதலாவது விடயமாக் கொண்டிருந்தால் அவர்கள் பிளவடைய மாட்டார்கள் ஆனால் மனித உரிமைகள் விவகாரம் என்பது அவர்களை பொறுத்தவரையில் இரண்டாவது விடயமே! இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், முஸ்லிம் நாடுகளின் ஆதரவை கவரும் நோக்கில் திடிரென்று அரசாங்கம் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்திருக்கின்றது. இவ்வாறான தீடீர் நகர்வுகளால் நாடுகளை கவரமுடியுமா என்பது வேறு விடயம். ஆனால் தனது நேசசக்திகளை அணிதிரட்டி, இணைத்தலைமை நாடுகளின் முயற்சியை தோற்கடிக்கவே முயற்சிக்கும். இவ்வாறானதொரு பின்புலத்தில் இணைத்தலைமை நாடுகளின் பிரேரணை வெற்றிபெற வேண்டுமாயின், அதனை பெரும்பாலான உறுப்பு நாடுகளை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். அதற்கு பிரேரணையில் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும். அந்த விட்டுக்கொடுப்புக்கள் தமிழர்களுக்கு மகிழ்சியை கொடுக்காமல் இருக்கலாம் ஆனால் உலகத்தின் பார்வை தங்களின் மீது, தொடர்ந்தும் விழுந்துகொண்டிருக்க வேண்டுமென்று தமிழர்கள் விரும்பினால் உலகத்தோடு ஒத்தோட முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கம் விரும்புவது போன்று மனித உரிமைகள் பேரவையில் இந்த விடயத்தை விவாதிக்க வேண்டாமென்று கூறிவிட்டு, தமிழர்கள் தங்களின் வழியில் செல்ல வேண்டும். ஆனால் தமிழர்களுக்கென்று வேறு வழிகள் ஏதாவது, இருக்கின்றதா என்னும் கேள்விக்கு முதலில் பதிலை கண்டடைய வேண்டும்.     http://www.samakalam.com/ஜெனிவா-அரசியல்-குற்றம்சா/  
  • அருமையான பாடல் சித் ஸ்ரீராம் பாடியது சூப்பர்......இணைப்புக்கு நன்றி சகோதரி.....!   👍
  • "போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து" அதனால்தான் அவர் கவலை இல்லாமல் இருக்கின்றார். எல்லோருக்கும் அப்படி ஒரு "தில்" இருப்பதில்லை......நல்ல நகைச்சுவையான பதிவு சுப. சோமசுந்தரம்.....!  👍
  • நாங்கள் சிங்கம் போல கர்சித்துக் கொண்டு அம்மா தம்பி தங்கைகளை வெருட்டிக்கொண்டு திரிந்தோம்.கலியாணக் கட்டியபின் எப்படித்தான் அப்படியொரு பக்குவம் வருகுதோ தெரியவில்லை. காலில அடிவாங்கிய டாக் மாதிரி (நாய் என்று சொல்ல ஒரு மாதிரி இருக்கு) அனுங்கிக் கொண்டு திரிகிறம்.உங்கட நிலைமையையும் பார்க்க கொஞ்சம் ஆறுதலாய் இருக்கு......!  😂
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.