Jump to content

பைசர் தடுப்பூசிக்கு இந்த வார இறுதியில் ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்குகிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பைசர் தடுப்பூசிக்கு இந்த வார இறுதியில் ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்குகிறது?

பைசர் தடுப்பூசிக்கு இந்த வார இறுதியில் ஐக்கிய இராச்சியத்தின் மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு MHRA அனுமதி வழங்கும் என செய்திகள் தெரிவிக்கிறன.

இதை ஒத்த அமெரிக்காவின் FDA அமைப்பு டிசெம்பர் மாதம் 10ம் திகதியளவிலேயே பைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  ஐக்கிய இராச்சியத்தின் அமைப்பு இந்த வார இறுதியிலேயே இந்த அனுமதியை வழங்க கூடும் என ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வெளிவரும் இரு முண்ணணி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிகு: டெய்லி டெலிகிராபின் செய்தி paywall இன் பின்னால் உள்ளது. டெய்லி மிரர் டெய்லி டெலிகிராபை சுட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.mirror.co.uk/news/uk-news/coronavirus-vaccine-produced-pfizer-could-23051372

https://www.telegraph.co.uk/news/2020/11/22/pfizer-covid-vaccine-could-get-green-light-end-week/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி  வந்தவுடன் அது மருத்துவர்களுக்கும் சீனியர்களுக்கும் பிரச்சனையன நோய்கள் உள்ளவர்களுக்கும் தானாமே மற்றவர்களுக்கு கிடைக்க ஒரு  வருடத்திற்கு மேலாகும் அதுவரைக்கும்  முககவசம் அணிந்து கொண்டு திரிய வேண்டியது தான் 😷☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தடுப்பூசி  வந்தவுடன் அது மருத்துவர்களுக்கும் சீனியர்களுக்கும் பிரச்சனையன நோய்கள் உள்ளவர்களுக்கும் தானாமே மற்றவர்களுக்கு கிடைக்க ஒரு  வருடத்திற்கு மேலாகும் அதுவரைக்கும்  முககவசம் அணிந்து கொண்டு திரிய வேண்டியது தான் 😷☹️

ஓமோம். ஆனால் அடுத்த யூலை மாதம் அளவில் எல்லாருக்கும் கொடுக்க முடியுமாம்.

பைசர் தடுப்பூசியை -70 பாகையில் பேணி, வெளியே எடுத்து 4 நாளுக்குள் -20 பாகையில் வைத்து கொடுக்க வேணுமாம். ஆனால் இதை இன்னும் குறைக்க மும்மரமாக வேலை நடக்குதாம்.

அதற்குள் இதை விட இலகுவாக கொடுக்க கூடிய, மொடோனா, ஒக்ஸ்போர்ட்-அஸ்டிரா செனிகாவும் சந்தைக்கு வந்தால் - அடுத்த சமர் முடிய முன் பெரும்பாலானோரை கவர் பண்ணலாம்.

ஆனாலும் தடுபூசி ஒரு சில்வர் புல்லட் இல்லை. பரவலை வெகுவாக குறைக்கலாம். ஆசுபத்திரிகளை நிரப்புவதை நிறுத்தலாம். 

முற்றாக அழிக்க காலம் எடுக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு அனுமதி? மத்திய அரசு பரிசீலனை

கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு அனுமதி? மத்திய அரசு பரிசீலனை

அமெரிக்காவை சேர்ந்த பிபைசர் நிறுவனம், தனது கொரோனா தடுப்பூசி 95 சதவீத செயல்திறனுடன் இருப்பதாக கூறியுள்ளது. அதை அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் கோரி, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளது.

மற்றொரு அமெரிக்க நிறுவனமான மாடர்னா, தனது தடுப்பூசி 94.5 சதவீத செயல்திறனுடன் இருப்பதாக கூறியுள்ளது. விரைவில் ஒப்புதல் கேட்டு விண்ணப்பிக்க உள்ளது.

அதுபோல், இந்தியாவில், ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசி, 3-ம் கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. பாரத் பயோடெக், ஐ.சி.எம்.ஆர். இணைந்து தயாரித்த ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது. ஜைடஸ் கடிலா தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசோதனை முடிவடைந்துள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனை விரைவில் தொடங்குகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது.

இந்த நிலையில், 3-ம் கட்ட பரிசோதனை நிலுவையில் இருக்கும்போதே, கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/23031404/Emergency-use-authorization-for-Covid19-vaccine-to.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

அடுத்த சமர் முடிய முன் பெரும்பாலானோரை கவர் பண்ணலாம்.

மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பைசர் தடுப்பூசியை -70 பாகையில் பேணி, வெளியே எடுத்து 4 நாளுக்குள் -20 பாகையில் வைத்து கொடுக்க வேணுமாம். ஆனால் இதை இன்னும் குறைக்க மும்மரமாக வேலை நடக்குதாம்.

அதற்குள் இதை விட இலகுவாக கொடுக்க கூடிய, மொடோனா, ஒக்ஸ்போர்ட்-அஸ்டிரா செனிகாவும் சந்தைக்கு வந்தால் - அடுத்த சமர் முடிய முன் பெரும்பாலானோரை கவர் பண்ணலாம்.

ஸ்புட்னிக் 5 இவையனைத்தையும் விட கில்லி என்கிறார்கள், 
ரெண்டு டோஸ் கொடுக்கவேண்டுமாம் ,வழமையான ரசிய பாணியில் லோ காஸ்ட் 
ஹை எபிசியன்சி  என்கிறார்கள் உண்மையா  

Link to comment
Share on other sites

92% செயல்திறன் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் 1200 ரூபாவிலிருந்து 1500க்குள் பெற முடியுமாம். முதல் 3 கட்ட பரிசோதனைகள் முடிந்து இறுதி கட்ட பரிசோதனைக்கு இந்தியா ஒத்துக்கொண்டுள்ளதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

தடுப்பூசி  வந்தவுடன் அது மருத்துவர்களுக்கும் சீனியர்களுக்கும் பிரச்சனையன நோய்கள் உள்ளவர்களுக்கும் தானாமே மற்றவர்களுக்கு கிடைக்க ஒரு  வருடத்திற்கு மேலாகும் அதுவரைக்கும்  முககவசம் அணிந்து கொண்டு திரிய வேண்டியது தான் 😷☹️

முதல் தடுப்பூசி போட்ட பின்... ஆறு கிழமையால்,
இன்னுமொரு முறை  தடுப்பூசி போடா வேண்டுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஸ்புட்னிக் 5 இவையனைத்தையும் விட கில்லி என்கிறார்கள், 
ரெண்டு டோஸ் கொடுக்கவேண்டுமாம் ,வழமையான ரசிய பாணியில் லோ காஸ்ட் 
ஹை எபிசியன்சி  என்கிறார்கள் உண்மையா  

போகிற உயிர் கொரோனாவிலேயே போகட்டும்🤣

பொதுவாகவே இந்த ரஸ்ய, சீனா அமைபுகள் ஒப்பீட்டளவில் வெளிப்படைத்தன்மை அற்றவை.

தவிரவும் பொறுப்பு கூறலும் இல்லை. மேற்கின் மருந்துகள் பிழைத்தால் அந்த நிறுவனங்களை வழக்காவது போடலாம். அந்த பயத்திலாவது ஒரளவு ஒழுங்காக நடப்பார்கள்.

ஸ்புட்னிக் பிழைத்தால் புட்டின் மீது வழக்கா போட முடியும்?

ஆகவே இவர்கள் தரும் மருந்தை நம்பி வாங்கி போடுவது ரிஸ்க்தான்.

இந்தியாவில் இறக்கி ஏழைகள் மீது டிரையல் பார்ப்பார்கள். ஆனால் மோடி வகையறக்கள் போட மாட்டார்கள்.

தவிரவும் அண்மைய தகவல்களின் படி நேற்றும் ரஸ்யாவில் கொரோனா அதி தாண்டவம் ஆடுகிறது. ஆகவே ஸ்புட்னிக் வேலை செய்வதாயும் தெரியவில்லை.

https://www.euroweeklynews.com/2020/11/23/russia-reports-a-record-25173-new-coronavirus-infections/ 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

முதல் தடுப்பூசி போட்ட பின்... ஆறு கிழமையால்,
இன்னுமொரு முறை  தடுப்பூசி போடா வேண்டுமாம்.

இதுவும் வேறு 🤦‍♂️

10 hours ago, goshan_che said:

பொதுவாகவே இந்த ரஸ்ய, சீனா அமைபுகள் ஒப்பீட்டளவில் வெளிப்படைத்தன்மை அற்றவை.

உண்மை தான் ரஸ்ய சீனா இப்படியான நாடுகளின் தயாரிப்புக்கள் நம்ப தகுந்தவையல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்!  | Athavan News

உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்!

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

குறித்த தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் முதல் தவணையாகப் போட்டப்பட்ட தடுப்பூசியின் முடிவின்படி 70.4 வீதம் பயனளித்துள்ளது.

அத்துடன், இரண்டாம் தவணையாகச் செலுத்திய தடுப்பூசியின்படி 90 வீதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், இன்றைய நாள் கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கியமானது எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன், உலகம் முழுவதும் இந்தத் தடுப்பூசியைக் குறைந்தவிலையில் கொண்டு சேர்ப்பதில் ஒரு அடி முன்னேறினால் போதும் என பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அஸ்ட்ராஜெனிக்காவுடன் இணைந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் மூன்று பில்லியன் மக்களுக்காவது தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதே தங்களின் இலக்கு என ஒக்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை 23 ஆயிரம் பேர் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர் எனவும் ஆகையால் தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நிறைவான தரவுகள் உள்ளன என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள், நிதியுதவி செய்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என நிறையப் பேரின் பங்களிப்பு உள்ளது என்றும் அவர்களின் பங்களிப்பு இலாமல் இந்தத் தடுப்பூசி சாத்தியமில்லை எனவும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/உலக-மக்களுக்கு-மகிழ்ச்சி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.