Jump to content

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

வளவன், ரஞ்சித்தின் இந்த உழைப்பு மெச்சத் தக்கது.

ஆனால் இது திருத்தமான தகவல்களை மட்டும் வைத்து எழுதப் பட்ட ஒரு வரலாற்று ஆவணம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. "ரஞ்சித்திற்கு துரோகியாகத் தெரிபவர்கள் பற்றிய தகவல்கள்" என்ற ஒரு ஆவணமாக மட்டும் இது இருக்கலாம்!

 ஏற்கனவே ரஞ்சித் எடுத்த முடிவுகளை நிலை நிறுத்துவதற்காக  பெரும்பாலும் cherry-picking எனப்படும் முறையில்,தேர்ந்தெடுத்த தகவல்களின் தொகுப்பாக மட்டுமே இந்த ஆவணம் இருக்கிறது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்! 

ரஞ்சித்தின் இடுகைகள் யாழ் கருத்துக்களத்தின் விதிமுறைகளுக்கு முரணானது. யாழ் நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. 

நாளை சட்ட ரீதியாக ஏதும் சிக்கல் வராது எனும் துணிவில் தனக்கு பிடித்தமான வகையில் விபரணம் செய்கின்றார். 

எமது சக உறவு எனும் அடிப்படையில், அது யார் என்றாலும் மனச்சுமைகள் இறங்குவதற்கு, மன ஆற்றுப்படுத்தலுக்கு துணை நிற்கலாம்.  

மற்றும்படி, இலங்கையில் பிறந்து, கல்விகற்று, அகதிகளாக அலைந்து, எல்லா தரப்பினதும் அராஜகங்களை எதிர்கொண்ட சாதாரண மக்களால் யார் யார் என்னென்ன துரோகங்கள் இழைத்தார்கள் என்பதை இலகுவில் மறக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • Replies 585
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் விதிமுறைகளை மாற்ற வேண்டியது தான்.

 

  • Haha 4
Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

வளவன், ரஞ்சித்தின் இந்த உழைப்பு மெச்சத் தக்கது.

ஆனால் இது திருத்தமான தகவல்களை மட்டும் வைத்து எழுதப் பட்ட ஒரு வரலாற்று ஆவணம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. "ரஞ்சித்திற்கு துரோகியாகத் தெரிபவர்கள் பற்றிய தகவல்கள்" என்ற ஒரு ஆவணமாக மட்டும் இது இருக்கலாம்!

 ஏற்கனவே ரஞ்சித் எடுத்த முடிவுகளை நிலை நிறுத்துவதற்காக  பெரும்பாலும் cherry-picking எனப்படும் முறையில்,தேர்ந்தெடுத்த தகவல்களின் தொகுப்பாக மட்டுமே இந்த ஆவணம் இருக்கிறது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்! 

ஜஸ்டின், நியாயத்தை கதைப்போம் உங்களின் அனுபவங்களையும் எழுதும் போது உண்மைகளை வாசிப்போர் அறியக்கூடும் அல்லவா? . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் பரவலாக இருக்கும் விடயங்களை ரஞ்சித் தொகுத்துத் தருகின்றார். அவற்றில் தவறுகள் இருந்தால் அவற்றினை இந்தத் திரியிலேயே சுட்டிக் காட்டலாமே.

நான் முழுமையாகப் படிக்கவில்லை. எனினும் படித்த அளவில் ரஞ்சித் புனைந்து எழுதியதாகத் தெரியவில்லை. சிலவேளை 10 - 17 வருடங்களுக்கு முன்னர் வந்தவற்றைப் இப்போது பார்க்கும்போது புனைவாகவும், தவறாகவும் தெரிவது பார்வையில்தான் உள்ளது!

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

ஜஸ்டின், நியாயத்தை கதைப்போம் உங்களின் அனுபவங்களையும் எழுதும் போது உண்மைகளை வாசிப்போர் அறியக்கூடும் அல்லவா? . 

ஈழ அரசியல் வரலாறு பற்றி இவ்வளவு நீளமாக எழுதும் அளவுக்கு எனக்கு நேரம், கடமை, ஆர்வம் -இப்படி எவையும் இல்லை, எனவே நான் எனக்குத் தெரிந்த விடயங்களுக்குள் மட்டுமே நிற்கிறேன்.

ஆனால், இலங்கையில் இங்கே பேசப்படுகிற நிகழ்வுகள் பெரும்பாலானவை நடந்த காலத்தில் வாழ்ந்திருக்கிறேன், செய்திகளையும் நிகழ்வுகளையும் பார்த்திருக்கிறேன் என்ற வகையில் இங்கே இருப்பது ஒரு பக்கப் பார்வை என்று உறுதியாகச் சொல்ல முடியும்!

உதாரணமாக: நீலன் திருசெல்வம் செய்த துரோகச் செயல்கள் எவையென்று யாருக்காவது தெரியுமா? சோளாவாளாவான பதில்கள் கிடைக்கும். ஆனால், அவர் ஆயுதப் போரை விரும்பவில்லை என்பதைத் தவிர வேறெந்த விதத்திலும் தமிழர்களுக்கு தீங்கு செய்யவில்லை!

எனவே "ஒரு அமைப்பினால் கொல்லப் பட்டவர்கள் எல்லாரும் துரோகிகளே!"  என்ற முன்முடிவை எடுத்து விட்டு இங்கே விடைகள் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என நான் கருதுகிறேன்.  

அமெரிக்காவில் சொல்வது போல: "Shoot first, ask questions later" நிலை தான் இது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

இணையத்தில் பரவலாக இருக்கும் விடயங்களை ரஞ்சித் தொகுத்துத் தருகின்றார். அவற்றில் தவறுகள் இருந்தால் அவற்றினை இந்தத் திரியிலேயே சுட்டிக் காட்டலாமே.

நான் முழுமையாகப் படிக்கவில்லை. எனினும் படித்த அளவில் ரஞ்சித் புனைந்து எழுதியதாகத் தெரியவில்லை. சிலவேளை 10 - 17 வருடங்களுக்கு முன்னர் வந்தவற்றைப் இப்போது பார்க்கும்போது புனைவாகவும், தவறாகவும் தெரிவது பார்வையில்தான் உள்ளது!

இல்லை! புனைவு இல்லை!

ஆனால், தனது narrative  இற்கு அவசியமான செய்திகளை மட்டும் பாவித்திருக்கிறார் - அது தான் cherry-picking என்றேன். நான் ஏற்கனவே ஒரு இடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறேன் - "ஒரு நோக்கத்திற்காக இதை எழுதுகிறேன்  , நீங்கள் சொன்னது சரியானதே" என்று கடந்து போயிருக்கிறார். குறையில்லை.  

இது யாழின் அறிவிக்கப் பட்ட நோக்கத்திற்குப் பலம் சேர்ப்பதால் பிரச்சினைக்குள்ளாகாது. நுணாவிலான் கேட்பது மாதிரி நானோ, நி.க வோ எழுதினால் அந்தத்  திரி ஒரு பக்கம் தாண்டாது! 😂

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

இல்லை! புனைவு இல்லை!

ஆனால், தனது narrative  இற்கு அவசியமான செய்திகளை மட்டும் பாவித்திருக்கிறார் - அது தான் cherry-picking என்றேன். நான் ஏற்கனவே ஒரு இடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறேன் - "ஒரு நோக்கத்திற்காக இதை எழுதுகிறேன்  , நீங்கள் சொன்னது சரியானதே" என்று கடந்து போயிருக்கிறார். குறையில்லை.  

இது யாழின் அறிவிக்கப் பட்ட நோக்கத்திற்குப் பலம் சேர்ப்பதால் பிரச்சினைக்குள்ளாகாது. நுணாவிலான் கேட்பது மாதிரி நானோ, நி.க வோ எழுதினால் அந்தத்  திரி ஒரு பக்கம் தாண்டாது! 😂

ஒவ்வொருவரும் தாம்  கண்ட அனுபவித்தவைகளை தான் அனுபவங்களாக எழுத முடியும். பக்கம் பக்கமாக இட்டுக்கட்டலாம் என நான் நினைக்கவில்லை. 😂🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nunavilan said:

ஒவ்வொருவரும் தாம்  கண்ட அனுபவித்தவைகளை தான் அனுபவங்களாக எழுத முடியும். பக்கம் பக்கமாக இட்டுக்கட்டலாம் என நான் நினைக்கவில்லை. 😂🙃

இட்டுக் கட்டியது என்று யார் சொன்னது? 

👇

2 hours ago, Justin said:

இல்லை! புனைவு இல்லை!

ஆனால், தனது narrative  இற்கு அவசியமான செய்திகளை மட்டும் பாவித்திருக்கிறார் - அது தான் cherry-picking என்றேன். நான் ஏற்கனவே ஒரு இடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறேன் - "ஒரு நோக்கத்திற்காக இதை எழுதுகிறேன்  , நீங்கள் சொன்னது சரியானதே" என்று கடந்து போயிருக்கிறார். குறையில்லை.  

இது யாழின் அறிவிக்கப் பட்ட நோக்கத்திற்குப் பலம் சேர்ப்பதால் பிரச்சினைக்குள்ளாகாது. நுணாவிலான் கேட்பது மாதிரி நானோ, நி.க வோ எழுதினால் அந்தத்  திரி ஒரு பக்கம் தாண்டாது! 😂

 

Link to comment
Share on other sites

2 minutes ago, Justin said:

இட்டுக் கட்டியது என்று யார் சொன்னது? 

👇

 

ஒரு பக்கம் தாண்டாது! என்பதை மேற்படி  ரஞ்சித் பக்கம் பக்கமாக எழுதுவதை நீங்கள் கூறுவதாக புரிந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

ஒரு பக்கம் தாண்டாது! என்பதை மேற்படி  ரஞ்சித் பக்கம் பக்கமாக எழுதுவதை நீங்கள் கூறுவதாக புரிந்துள்ளேன்.

நான் "ஒரு பக்கம் தாண்டாது" என திரி மூடப் பட்டு விடும் என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

ருல்பென் ஒரு புத்தகத்தை (அதுவும் உண்மையாக சிலர் கண்ட அனுபவங்கள் அல்லவா, எமக்கு உவப்பாக இருக்கா விட்டாலும்?) இணைத்த போது அது அகற்றப் பட்டதல்லவா? முன் அனுபவம்! 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

@ரஞ்சித்

வணக்கம் அண்ணை, 

தாங்கள் மிகவும் அளப்பரிய பணியினை செய்து வருகிறீர்கள்... தொடர்ந்து செய்யுங்கள்... எந்த இடையூறு வந்தாலும் செய்வதை நிறுத்தாதீர்கள். 

என்னைப் போன்ற இளைய தலைமுறைக்கு(2k) தங்களின் ஆவணப்படுத்தலானது வரலாற்றை அறிந்து கொள்ளவும் எமக்கு எம்மினதின் புல்லுருவிகள், காட்டிக்கொடுப்போர், வஞ்சகர் போன்றவர்கள் ஆரார், எந்தெந்த வடிவத்தால் இருந்தார்கள், இனியும் எப்படியெல்லாம் பசுத்தோல் போர்த்தி வருவார்கள் என்பதை அறிந்து கொள்ளவும், படிப்பினையைச் செய்யவும் இத்தொடர் மிகவும் உதவி கரமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இத்தொடரானது
-->கூலிப் படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கத்தின் வால்களுக்கும்,
-->சிங்கள அடிவருடிகளுக்கும்,
-->புலிகளைப் பிடிக்காதோருக்கும், 
-->தமிழீழம் கிடைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்போரிற்கும், 
-->தவறுகளைச் சரிசெய்யப்போகிறோம் என்று கூறி இனத்தை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் பேர்வழிகளுக்கும்,  

இத்தொடர் உறுத்தும்; உறுத்துகிறது. அதை பற்றியெல்லாம் தாம் சட்டை செய்ய வேண்டாம்.... தொடங்கியதை முற்றாக எழுதி இனிதே முடித்து வையுங்கள்... 

நன்றி

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

13 hours ago, நன்னிச் சோழன் said:

 

@ரஞ்சித்

வணக்கம் அண்ணை, 

தாங்கள் மிகவும் அளப்பரிய பணியினை செய்து வருகிறீர்கள்... தொடர்ந்து செய்யுங்கள்... எந்த இடையூறு வந்தாலும் செய்வதை நிறுத்தாதீர்கள். 

என்னைப் போன்ற இளைய தலைமுறைக்கு(2k) தங்களின் ஆவணப்படுத்தலானது வரலாற்றை அறிந்து கொள்ளவும் எமக்கு எம்மினதின் புல்லுருவிகள், காட்டிக்கொடுப்போர், வஞ்சகர் போன்றவர்கள் ஆரார், எந்தெந்த வடிவத்தால் இருந்தார்கள், இனியும் எப்படியெல்லாம் பசுத்தோல் போர்த்தி வருவார்கள் என்பதை அறிந்து கொள்ளவும், படிப்பினையைச் செய்யவும் இத்தொடர் மிகவும் உதவி கரமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இத்தொடரானது
-->கூலிப் படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கத்தின் வால்களுக்கும்,
-->சிங்கள அடிவருடிகளுக்கும்,
-->புலிகளைப் பிடிக்காதோருக்கும், 
-->தமிழீழம் கிடைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்போரிற்கும், 
-->தவறுகளைச் சரிசெய்யப்போகிறோம் என்று கூறி இனத்தை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் பேர்வழிகளுக்கும்,  

இத்தொடர் உறுத்தும்; உறுத்துகிறது. அதை பற்றியெல்லாம் தாம் சட்டை செய்ய வேண்டாம்.... தொடங்கியதை முற்றாக எழுதி இனிதே முடித்து வையுங்கள்... 

நன்றி

வரலாற்றை துறை ரீதியாக ஆய்வு  செய்ய விரும்பும் எமது எதிர்கால தலைமுறை மாணவர்கள் ஒரு போதும் ஸ்ரீலங்கா அரசின் தகவல்களில் மட்டுமோ அல்லது தமிழ் தரப்பின் தகவல்களில் மட்டுமோ தங்கி இருக்கப்போவதில்லை. எல்லா தரப்பின் தகவல்களையும் ஆய்வு செய்து எது உண்மை என்று கண்டறிய கூடிய அளவுக்கு தகவல்கள் இன்றைய தகவல் தொழில்நுட்பக்காலத்தில் இணையங்களில் குவிந்து கிடக்கின்றன. துறைசார்  வரலாற்று மாணவர்களிடன்  இவ்வாறாக  ஒருபக்க பார்வையான தகவல்களை சரிபார்த்து உண்மைகளை கண்டறியும்  திறமையும் இருக்கும். ஐரோப்பாவில் கல்விகற்றுக்கொண்டிருக்கும்  பல மாணவர்களிடன் நான் நேரில் பார்த்த நல்ல விடயம் எந்த விடயத்தையும் அப்படியே நம்பாமல் அதை உறுதிபடுத்த பல்வேறு கோணங்களில் கேள்வி கேட்பது. 

அந்த ரீதியில் ரஞ்சித் பல்வேறு  இணையங்களில் இருந்து பெற்று இங்கு இணைக்கும் தகவல்களும்  நீங்கள் கூறிய எதிர்கால துறைசார் வரலாற்று மாணவர்களுக்கு ஆய்வுகள் செய்யவதற்கான தகவல் துளிகள் பெற நிச்ய்யமாக  உதவியாக இருக்கும். 

 தகவல்களை திரட்டி இங்கு யாழ்கள வாசகர்களுக்கு பகிரும் ரஞ்சித்தின் உழைப்பு பாராட்டத்தக்கது என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொடரை கூட்டமைத்த ரஞ்சித்துக்கு பாராட்டுகள். 

இந்த உழைப்பு மெச்சதக்கது. மட்டும் இல்லை ஒரு திரியில் வரலாறு திரிக்கப்படும் போது - அதை அங்கே மட்டும் எதிர்காமல் - அதை ஒரு தொடராக்கி - ஆவணப்படுத்துவது செயற்கரிய செயல். 

பலர் சுட்டியது போல இது ஒரு பக்க சார்பான செய்திகளை மட்டுமே தாங்கி நிற்கிறது. அதை ரஞ்சித்தும் ஏற்று கொண்டிருக்கிறார்.

ஆனால் 2002க்கு பின்னான ரஞ்சித் இணைத்த தரவுகளில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு படவில்லை.

அதே போல் முறிந்த பனைகள் யாழில் வளராது என்பதும் உண்மைதான். பலவருடங்களுக்கு முன்பே எனது ஒரு நீண்ட பதிவை நீக்கி விட்டு நிழலி ஒரு விளக்கம் கொடுத்தார் - யாழ் பக்கம் சாரா ஊடகம் இல்லை என்று. ஆகவே இதை வாசிக்கும் எதிர்கால சந்ததி இந்த பக்க பார்வையை இங்கும், மறுபக்க பார்வையை வேறு எங்கோவும் தேடி கண்டு, உண்மை அறியும். 

ஆனால் வாழ்ந்த சாட்சியாக -உண்மை மிக அதிகமாக ரஞ்சித்திற்கு அருகேதான் இருக்கும் என்பதையும் அவர்கள் கண்டுகொள்வார்கள் என்பது என் துணிபு.

ஆனால் ஒரு constructive feedback (அதானே குறை சொல்லாமல் கோஷனா🤣) - ரஞ்சித் எழுத தொடங்கிய பரப்பை விட்டு கொஞ்சம் mission creep பண்ணி, வேறு விடயங்களையும் தொட்டதால் கவனம் சிதறி விட்டது என நினைக்கிறேன்.

இதை “ஒரு” துரோகத்தின் நாட்குறிப்பு என்ற வரையறையில் 2002 க்கு பின்னான நிகழ்வுகளில் மட்டும் கவனத்தை செலுத்தி இருந்தால் - யாருக்கும் அவற்றில் முரண்பட ஏதும் இருக்காது என நினைக்கிறேன்.

அதை விடுத்து ரஞ்சித், எது துரோகம், துரோகத்தின் பல்வேறு வடிவங்கள், என்று போகும் போது பார்வைகள் மாறுபடுவது தவிர்கவியலாதது.

ரஞ்சித் தனியே தரவுகளின் மீள் பிரசுரம் என்பதோடு நின்று, தன் வர்ணனையை தவிர்த்திருந்தால் அவர் நோக்கம் இன்னும் சிறப்பாக இலக்கை அடைந்திருக்கும்.

பலர் இதில் கருத்திட்டு, இந்த திரியை விவாததிரியாக மாற்றாமைக்கும் ரஞ்சித்தின் நோக்கத்தை புரிந்து வழி விட்டதே காரணம் எனவும் நான் நம்புகிறேன்.

Edited by goshan_che
கருத்துச் சேர்ப்பு.
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

56 minutes ago, goshan_che said:

இந்த தொடரை கூட்டமைத்த ரஞ்சித்துக்கு பாராட்டுகள். 

இந்த உழைப்பு மெச்சதக்கது. மட்டும் இல்லை ஒரு திரியில் வரலாறு திரிக்கப்படும் போது - அதை அங்கே மட்டும் எதிர்காமல் - அதை ஒரு தொடராக்கி - ஆவணப்படுத்துவது செயற்கரிய செயல். 

பலர் சுட்டியது போல இது ஒரு பக்க சார்பான செய்திகளை மட்டுமே தாங்கி நிற்கிறது. அதை ரஞ்சித்தும் ஏற்று கொண்டிருக்கிறார்.

ஆனால் 2002க்கு பின்னான ரஞ்சித் இணைத்த தரவுகளில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு படவில்லை.

அதே போல் முறிந்த பனைகள் யாழில் வளராது என்பதும் உண்மைதான். பலவருடங்களுக்கு முன்பே எனது ஒரு நீண்ட பதிவை நீக்கி விட்டு நிழலி ஒரு விளக்கம் கொடுத்தார் - யாழ் பக்கம் சாரா ஊடகம் இல்லை என்று. ஆகவே இதை வாசிக்கும் எதிர்கால சந்ததி இந்த பக்க பார்வையை இங்கும், மறுபக்க பார்வையை வேறு எங்கோவும் தேடி கண்டு, உண்மை அறியும். 

ஆனால் வாழ்ந்த சாட்சியாக -உண்மை மிக அதிகமாக ரஞ்சித்திற்கு அருகேதான் இருக்கும் என்பதையும் அவர்கள் கண்டுகொள்வார்கள் என்பது என் துணிபு.

ஆனால் ஒரு constructive feedback (அதானே குறை சொல்லாமல் கோஷனா🤣) - ரஞ்சித் எழுத தொடங்கிய பரப்பை விட்டு கொஞ்சம் mission creep பண்ணி, வேறு விடயங்களையும் தொட்டதால் கவனம் சிதறி விட்டது என நினைக்கிறேன்.

இதை “ஒரு” துரோகத்தின் நாட்குறிப்பு என்ற வரையறையில் 2002 க்கு பின்னான நிகழ்வுகளில் மட்டும் கவனத்தை செலுத்தி இருந்தால் - யாருக்கும் அவற்றில் முரண்பட ஏதும் இருக்காது என நினைக்கிறேன்.

அதை விடுத்து ரஞ்சித், எது துரோகம், துரோகத்தின் பல்வேறு வடிவங்கள், என்று போகும் போது பார்வைகள் மாறுபடுவது தவிர்கவியலாதது.

ரஞ்சித் தனியே தரவுகளின் மீள் பிரசுரம் என்பதோடு நின்று, தன் வர்ணனையை தவிர்த்திருந்தால் அவர் நோக்கம் இன்னும் சிறப்பாக இலக்கை அடைந்திருக்கும்.

பலர் இதில் கருத்திட்டு, இந்த திரியை விவாததிரியாக மாற்றாமைக்கும் ரஞ்சித்தின் நோக்கத்தை புரிந்து வழி விட்டதே காரணம் எனவும் நான் நம்புகிறேன்.

நான் கூறவந்த விடயத்தை உங்கள் மேம்பட்ட எழுத்து நடையால் முழுமையாக்கதற்கு நன்றி கோஷான். உங்கள் கருத்தின் பிரகாரம்,  இந்த பதிவை விவாதக் களமாக்காமல், ரஞ்சித்தின் பக்க பார்வையிலான தகவல்களை பதியும் களம் என்பதை உணர்ந்து ஒதுங்கி கொள்ளவே நானும் விரும்புகிறேன். அதனாலேயே இதில் கருத்திடுவதை தவிர்த்து வந்தேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த தொடரை கூட்டமைத்த ரஞ்சித்துக்கு பாராட்டுகள். 

இந்த உழைப்பு மெச்சதக்கது. மட்டும் இல்லை ஒரு திரியில் வரலாறு திரிக்கப்படும் போது - அதை அங்கே மட்டும் எதிர்காமல் - அதை ஒரு தொடராக்கி - ஆவணப்படுத்துவது செயற்கரிய செயல். 

பலர் சுட்டியது போல இது ஒரு பக்க சார்பான செய்திகளை மட்டுமே தாங்கி நிற்கிறது. அதை ரஞ்சித்தும் ஏற்று கொண்டிருக்கிறார்.

ஆனால் 2002க்கு பின்னான ரஞ்சித் இணைத்த தரவுகளில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு படவில்லை.

அதே போல் முறிந்த பனைகள் யாழில் வளராது என்பதும் உண்மைதான். பலவருடங்களுக்கு முன்பே எனது ஒரு நீண்ட பதிவை நீக்கி விட்டு நிழலி ஒரு விளக்கம் கொடுத்தார் - யாழ் பக்கம் சாரா ஊடகம் இல்லை என்று. ஆகவே இதை வாசிக்கும் எதிர்கால சந்ததி இந்த பக்க பார்வையை இங்கும், மறுபக்க பார்வையை வேறு எங்கோவும் தேடி கண்டு, உண்மை அறியும். 

ஆனால் வாழ்ந்த சாட்சியாக -உண்மை மிக அதிகமாக ரஞ்சித்திற்கு அருகேதான் இருக்கும் என்பதையும் அவர்கள் கண்டுகொள்வார்கள் என்பது என் துணிபு.

ஆனால் ஒரு constructive feedback (அதானே குறை சொல்லாமல் கோஷனா🤣) - ரஞ்சித் எழுத தொடங்கிய பரப்பை விட்டு கொஞ்சம் mission creep பண்ணி, வேறு விடயங்களையும் தொட்டதால் கவனம் சிதறி விட்டது என நினைக்கிறேன்.

இதை “ஒரு” துரோகத்தின் நாட்குறிப்பு என்ற வரையறையில் 2002 க்கு பின்னான நிகழ்வுகளில் மட்டும் கவனத்தை செலுத்தி இருந்தால் - யாருக்கும் அவற்றில் முரண்பட ஏதும் இருக்காது என நினைக்கிறேன்.

அதை விடுத்து ரஞ்சித், எது துரோகம், துரோகத்தின் பல்வேறு வடிவங்கள், என்று போகும் போது பார்வைகள் மாறுபடுவது தவிர்கவியலாதது.

ரஞ்சித் தனியே தரவுகளின் மீள் பிரசுரம் என்பதோடு நின்று, தன் வர்ணனையை தவிர்த்திருந்தால் அவர் நோக்கம் இன்னும் சிறப்பாக இலக்கை அடைந்திருக்கும்.

பலர் இதில் கருத்திட்டு, இந்த திரியை விவாததிரியாக மாற்றாமைக்கும் ரஞ்சித்தின் நோக்கத்தை புரிந்து வழி விட்டதே காரணம் எனவும் நான் நம்புகிறேன்.

சரியே. யாழும் பக்கம் சாரா ஊடகம் அல்ல, ரஞ்சித்தும் பக்கம் சாராப் பதிவாளர் அல்ல!

நான் வளவனுக்குச் சுட்டிக் காட்டியது இது ஒரு பக்கச் சார்பான ஒரு indoctrination பதிவே தவிர , தகவல்களை மட்டும் பகிரும் நோக்கம் கொண்ட ஆவணம் அல்ல என்பதையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நான் கூறவந்த விடயத்தை உங்கள் மேம்பட்ட எழுத்து நடையால் முழுமையாக்கதற்கு நன்றி கோஷான். உங்கள் கருத்தின் பிரகாரம்,  இந்த பதிவை விவாதக் களமாக்காமல், ரஞ்சித்தின் பக்க பார்வையிலான தகவல்களை பதியும் களம் என்பதை உணர்ந்து ஒதுங்கி கொள்ளவே நானும் விரும்புகிறேன். அதனாலேயே இதில் கருத்திடுவதை தவிர்த்து வந்தேன்.  

எனது கருத்தும் இதே மேலதிகமாக மூக்கை நுழைக்க வில்லை  தேடல் உள்ளவர்கள் தெளிவையும் தேடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2021 at 11:56, nunavilan said:

ஜஸ்டின், நியாயத்தை கதைப்போம் உங்களின் அனுபவங்களையும் எழுதும் போது உண்மைகளை வாசிப்போர் அறியக்கூடும் அல்லவா? . 

 

On 6/6/2021 at 14:59, nunavilan said:

ஒரு பக்கம் தாண்டாது! என்பதை மேற்படி  ரஞ்சித் பக்கம் பக்கமாக எழுதுவதை நீங்கள் கூறுவதாக புரிந்துள்ளேன்.

 

எனக்கு தமிழ் மக்களின் துரோகியை பற்றி எழுத பல பக்கங்கள், திரிகள் தேவை  இல்லை. இந்த ஒரு பதிவே போதும். 

இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகியாக விளங்குவது ஒரே ஒரு ஆள்தான்.  

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி.. 

சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சனைகளை வளர்த்து, அந்த சூட்டில் குளிர் காய்ந்து...

பன்னெடுங்காலமாக அயோக்கியத்தனங்கள் செய்யும் இந்தியாவே  தமிழ் மக்களினது துரோகி.

இலங்கையில் சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பிரச்சனைகள் காலம் காலமாக தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் அடிப்படை சித்தாந்தம். தனது அண்டை நாடு இலங்கை  தன்னை விட எந்த விதத்திலும், வகையிலும் மேலோங்குவதை இந்தியா விரும்பாது, அனுமதிக்காது. 

இங்குள்ள பலரும் சாடும் கருணா, டக்ளஸ் எல்லாரும் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் கொள்கை வகுப்புக்கள், தயாரிப்புக்களின்  பக்க விளைவுகள், இதனுள் சீமானும் அடக்கம். அவ்வளவே.

இன்றும் கூட பலர் இலங்கை தமிழருக்கு இந்தியா தனி நாடு பெற்று தரும் என கனவு காண்கின்றார்கள். தொடர்ந்து கனவு காணுங்கள். இந்தியா உங்கள் வாய்க்குள் கக்கூஸ் செய்துவிட்டு போகும்.

துட்டனை கண்டால் தூர விலகு. இந்தியாவின் சகவாசம் இலங்கைக்கு கொள்ளி கட்டை.  

Edited by நியாயத்தை கதைப்போம்
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா துணைராணுவக் குழுவின் நடவடிக்கைகளில் சேர்ந்து ஈடுபடும் அரச அமைச்சர்கள்

மூலம் : தமிழ்நெட்
காலம் : மார்கழி, 12, 2005

அண்மையில் அம்பாறைப் பகுதியில் புலிகளிடம் சரணடைந்த இரு கருணா துணைராணுவக் குழு உறுப்பினர்களின் கூற்றுப்படி கருணா இந்தியாவிலிருந்தே இயங்கிவருவதாகவும், கிழக்கில் அக்குழுவின் நடவடிக்கைகளை பிள்ளையானே நெறிப்படுத்திவருவதாகவும் கூறியிருக்கின்றனர். கடந்த திங்கட்கிழமை கரடியனாற்றீல் அமைந்திருக்கும் புலிகளின் தளமான தேனகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த இக்கருணா குழு உறுப்பினர்கள் மேலும் கூறுகையில் கிழக்கில் செயற்பட்டுவரும் கருணா குழுவினருக்கு அரச அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டக்கிளஸ் தேவானந்தா மற்றும் அதாவுள்ளா ஆகியோர் தொடர்ந்து உதவிவருவதாகக் கூறியிருக்கின்றனர். தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே வன்முறைகளைத் தூண்டி, பாரிய பிளவினை உருவாக்கும் நோக்குடன் தமது குழு அரசால் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் இவர்கள் மேலும் கூறுகின்றனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், கிழக்கில் பிள்ளையானே கருணா குழுவை வழிநடத்துவதாகவும், அம்பாறை மாவட்டத்தின் தளபதியாக இனியபாரதி செயற்பட்டுவருவதாகவும் தெரிவித்தனர். பிள்ளையான், மங்களன் மாஸ்ட்டர், இனியபாரதி ஆகியோர் தம்முடன் பேசும்போது, கருணா இந்தியாவிலிருந்தே தமக்கான கட்டளைகளை வழங்கிவருவதாக அடிக்கடி கூறியதாகத் தெரியவருகிறது.

"பிள்ளையானின் கீழ் சுமார் 40 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பிள்ளையானோடும், ஏனைய தலைவர்களோடும் கருணா எப்போதும் தொடர்பில் இருப்பார். நான் கருணா குழுவிலிருந்து தப்பியோடுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கருணா எனூடன் தொலைபேசியில் பேசினார்" என்று இனியபாரதிக்கு அடுத்த நிலையிலிருந்த உறுப்பினரான ஞானதீபன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.

அவர்கள் தொடர்ந்தும் கூறுகையில் இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரிகளான கப்டன் சுரேஷ்குமார மற்றும் கப்டன் அபேரத்ன ஆகியோர் பிள்ளையானோடும் இனியபாரதியோடும் நேரடியாகத் தொடர்பில் இருந்ததாகவும், இந்த அதிகாரிகள் மூலமாகவே தமது குழுவினருக்கான போக்குவரத்து வசதிகள், ஆயுதங்கள், மற்றும் தேவையான வளங்கள் ஒழுங்குசெய்யப்பட்டு வந்ததாகவும் கூறுகின்றனர். தமக்குத் தேவையான நிதியினை உருத்திரா எனும் முகவர் மூலம் தமக்கு மூன்றாவது தரப்பொன்று தொடர்ச்சியாக வழங்கிவந்ததாகக் கூறிய ஞானதீபன் தனக்கும் இன்னும் சில மூத்த உறுப்பினர்களுக்கு மாதாந்தச் சம்பளமாக 30,000 ரூபாய்களும், கீழ்நிலை உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய்களும் இந்த மூன்றாவது தரப்பினரால் வழங்கப்பட்டு வந்ததாகக் கூறினார்.

Edited by ரஞ்சித்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்த ஞானதீபன் மற்றும் புகழ்தேவனின் கருத்துப்படி, கருணா குழுவினரின் முகாம்கள் தீவுச்சேனையிலும் திருகோணமடுவிலும்  அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. புகழ்தேவன் மேலும் கூறுகையில் தானும் இன்னும் 22 உறுப்பினர்களும், தீவுச்சேனையிலிருந்து ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான அம்பாறை, மாந்தோட்டம் பகுதிக்கு ராணுவப் பாதுகாப்பு நிலையம் ஒன்றிற்கு மாற்றப்பட்டதாகவும், அங்கிருந்தே முஸ்லீம் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை தமிழ்மக்கள் எனும் போர்வையில் நடத்தும்படி பணிக்கப்பட்டதாகவும் கூறினார். 

ஆரம்பத்தில் தமது இருப்பினை எதிர்த்த அப்பகுதிச் சிங்களக் குடியேற்றவாசிகள், ஒரு பெளத்த பிக்குவும் ராணுவ அதிகாரியொருவரும் தலையிட்டதையடுத்து, இன்னொரு பாதுகாப்பான வீடொன்றிற்குள் தாம் முகாம் அமைத்துக்கொள்ள இணங்கியதாக புகழ்தேவன் மேலும் கூறினார். மேலும் அமைச்சர் அதாவுள்ளாவின் நெருங்கிய தோழரான பெளஸர் என்பவர் இனியபாரதியுடன் தொடர்ச்சியாக செயற்பட்டுவந்ததாகவும், அவர்மூலமாகவே அக்கரைப்பற்று பச்சிலைப்பள்ளிப் பகுதியில் தமக்கான ரகசிய முகாமொன்று அமைக்கப்பட்டதாகவும், தாம் தொடர்ச்சியாக அமைச்சர் அதாவுள்ளவுடனும் இனியபாரதியுடனும் தொடர்பிலிருக்க பெளஸரே தொலைபேசி பரிவர்த்தனையினை ஒழுங்குசெய்து கொடுத்திருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

"முஸ்லீம்களுக்கும் புலிகளுக்கும் இடையே பாரிய பிளவினையும், அதன்மூலம் எதிர்ப்பினையும் உருவாக்குவதிலேயே கருணா குழுவின் இருப்புத் தங்கியிருக்கின்றது" என்று இனியபாரதி தொடர்ச்சியாகத் தம்மிடம் கூறிவந்ததாகவும், அதன் அடிப்படியிலேயே தாம் இயக்கப்பட்டதாகவும் ஞானதீபன் கூறினார். டக்கிளஸ் தேவானந்தாவுடன் மிக நெருங்கிச் செயற்பட்டுவந்த இனியபாரதி, அவரிடமிருந்து மடிக் கணிணி ஒன்றையும் பரிசாகப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார். 


சரணடைந்த கருணா குழு உறுப்பினர்கள் மேலும் கூறுகையில் மட்டக்களப்புப் பத்திரிக்கையாளர் நடேசனை இனியபாரதியே சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தனர். அண்மையில் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் தீவுச்சேனையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், கருணா குழுவின் மங்களன் மாஸ்ட்டருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும், மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தீவுச்சேனைப் பகுதியிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலும் கருணா குழு செயற்படுவதென்று இதன்போது முடிவெடுக்கப்பட்டதாகவும் மேலும் கூறினர்.

கருணா குழுவில் இணைந்து செயற்பட்டு வந்த இவ்விருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும், சிறிது காலத்தின்பின்னர் தமது செய்கைகள் குறித்து மனம் வருந்தி, கருணா குழுவினரை விட்டு வெளியேறுவதற்குச் சந்தர்ப்பம் பார்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. "நாம் தப்பியோடுவதென்று முடிவெடுத்திருந்தோம், அதற்கான தக்க தருணத்திற்காகப் பார்த்திருந்த வேளை, கடந்த திங்கட்கிழமை  எம்மையும் இன்னும் சிலரையும் இனியபாரதி யுத்த சூனியப் பிரதேசம் ஒன்றிற்கு நடவடிக்கை ஒன்றிற்காக அனுப்பிவைத்தவேளை, எம்முடன் வந்திருந்தவர்களைக் கொன்றுவிட்டு நாம் தப்பி வந்தோம்" என்று கூறினர்.

அவர்கள் தொடர்ந்தும் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், கடந்த ஐப்பசி மாதம் 11 ஆம் திகதி வவுணதீவுப்பகுதியில் புலிகள் மீது தாக்குதல நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு பற்பொடி ராணுவ முகாமிற்கு பவள் கவச வாகனங்களில் கொண்டுவரப்பட்டதாகவும், பின்னர் புலிகளின் எல்லைப் பகுதிகளுக்கு அண்மையாக இறக்கிவிடப்பட்டதாகவும் கூறினர். தமது இயற்பெயர்கள் துரைசிங்கம் சந்திரகுமார் (புகழ்தேவன்) மற்றும் சாமித்தம்பி அருண்குமார் (ஞானதீபன்) என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். 

புலிகளிடம் சரணடைந்தமைக்கான தண்டனையாக சந்திரகுமாரின் இரு சகோதரிகளை கருணா குழு கடந்த புதன்கிழமையன்று சுட்டுக் கொன்றது குறிப்பிடத் தக்கது.

கொல்லப்பட்ட இந்த இரு சகோதரிகளுக்கும் "தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" எனும் கெளரவம் புலிகளால் வழங்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.


 

Edited by ரஞ்சித்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்திற்கான போராட்டமும் இந்தியாவும்

raw.gif

இந்திய றோவின் உப தலைவரின் இலங்கை வருகையினையடுத்து திகைப்படைந்துள்ள அரசியல் மற்றும் ராணுவத் தலமைப்பீடங்கள் - இனவாத பத்திரிக்கையில் வெளியான கட்டுரை

காலம் : 21, ஐப்பசி 2008

இனவாதிகளின் கட்டுரையினைப் படிக்குமுன், ஒரு சிறிய  முன்னோட்டத்துடன் இதனை ஆரம்பிக்கலாம். "ஒரு விடயம் பற்றி என்னதான் சொல்லப்பட்டாலும், அதை எவர்தான் சொல்லியிருந்தாலும், அதனை சீர்தூக்கிப் பார்த்து உண்மைதனை அறிதலே சரியான அறிவுடமையாகும்" என்கிறது திருக்குறள். ஒரு முழுப் பொய்யைவிட, அரை உண்மைகளை உறுதிப்படுத்துவது கடிணமானது. இலங்கைக்கு வருகை தந்திருக்கும் றோவின் உபதலைவர் தொடர்பாக இனவாதிகளின் ஊதுகுழல் பயப்படுவது அவருக்கும் புலிகளுக்கும் முன்னர் இருந்த தொடர்புகளுக்காக அல்லாமல், இன்று சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் அச்சு நோக்கி நகர்ந்துவரும் மகிந்த ராஜபக்ஷவுக்கு அவர் கொடுக்கவிருப்பதாகக் கருதப்படும் அழுத்தம் பற்றியே என்றால் அது மிகையில்லை.  ஆகவேதான், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை விமர்சிப்பதனை விடுத்து, அதனைக் காவிவந்து தமக்கு நினைவூட்டக்கூடும் என்று சிங்களம் கருதும் சந்திரசேகரன் எனும் அந்த றோ அதிகாரிமீது ஐலண்ட் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. ஆனால், இதில் உள்ள உண்மையென்னவென்றால் சந்திரசேகரனும் இன்னும் ஒரு றோ அதிகாரியும் பூட்டான் , திம்புவில் 1985 இல் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட்டு வந்தவர்கள் என்பதும், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை பிசகின்றி முன்னெடுத்துச் செல்வதில் தீவிர உறுதிப்பாடு கொண்டவர்கள் என்பதும் சிங்கள இனவாதிகள் அறியாததல்ல.  

சரி, இதன் பின்னணியில் தி ஐலண்ட் எழுதியிருக்கும் கட்டுரையினைப் படிக்கலாம்.

"புலிகளின் அனுதாபியென்று கருதப்பட்டும் முன்னாள் றோ உயர் அதிகாரி, சந்திரன் எனப்படும் சந்திரசேகரனின் கொழும்பு விஜயம்  கொழும்பில் அரசியல் வட்டாரங்களிலும், ராணுவ வட்டாரங்களிலும் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. 

பாராளுமன்ற மேலதிகச் செயலாளரான சந்திரன் 1980 களில் இலங்கைத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கான பயிற்சிமுகாம்களை நிறுவுவதில் முன்னின்று செயற்பட்டவர். பின்னர், புலிகளுடன் நெருங்கிச் செயற்பட்ட அவர் யாழ்தேவி புகையிரதம் மீதான தாக்குதல், 1985 ஆம் ஆண்டு அநுராதபுரம் மீதான தாக்குதல்களுக்கு புலிகளுக்கு உதவியவர். இவ்வாறான தாக்குதல்களின்பொழுது புலிகள் இவருடன் தொடர்ச்சியான தொடர்பிலிருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது.

அதேவேளை ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் பத்மநாபாவுடனும் நெருங்கிச் செயற்பட்ட சந்திரன், பத்மநாபாவின் சென்னை விஜயம் குறித்து புலிகளுக்குத் தகவல் வழங்கி 1990 இல் அவர் கொல்லப்பட உதவிபுரிந்தவர் என்றும் கூறப்படுகிறது. பத்மநாபாவின் நெருங்கிய தோழர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் அவரது சென்னை விஜயம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. பத்மநாபாவின் தோழர்களின் கூற்றுப்படி சந்திரனைத் தவிர பத்மநாபாவின் வருகையினை வேறு எவரும் அறிந்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

சந்திரனுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்ததாகக் கருதப்படும் தொடர்பினையடுத்து, 1991 ஆம் ஆண்டின் ராஜீவ் கொலைக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று றோவே அஞ்சும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் இருந்திருக்கின்றன. இதனால், சந்திரன் றோவிலிருந்து விலகி மேற்படிப்பிற்காக அமெரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

ஐலண்டிற்குக் கிடைத்த தகவல்களின்படி, சந்திரன் புலிகளுக்கு பயிற்சிகள், திட்டமிடல், பிரச்சார உத்திகள் தொடர்பாக பல உதவிகளைப் புரிந்திருக்கிறார் என்று தெரியவருகிறது. சென்னையில் அரசு சாரா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சந்திரன் அதன்மூலம் புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாட்டில் நடத்திவருகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

சந்திரன் இலங்கைக்கு முன்னரும் பலதடைவைகள் விஜயம் செய்திருந்தபோதும், தற்போதைய விஜயமானது சுற்றிவளைக்கப்பட்டு அழியவிருக்கும் புலிகளை மீட்பதற்காகவே என்று தெரியவருகிறது. இதுவரை அவர் பல தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா மற்றும் ஈ பி டி பி யின் தலைவர் டக்கிளஸ் ஆகியோரைச் சந்தித்திருக்கும் சந்திரன் இவ்விடயம் தொடர்பாகப் பேசியதாகத் தெரிகிறது.

குறிப்பாக கருணாவுடனான அவரது கலந்துரையாடல்களின்போது, புலிகளின் செயற்பாடுகளுக்கு கருணா குழு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாதென்று கேட்டுக்கொண்டதாக ஐலண்ட் பத்திரிக்கைக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. கருணா இந்தியாவில் பயிற்சியெடுத்த காலத்தில் சந்திரனே அவருக்குப் பொறுப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சந்திரனின் கோரிக்கையினை முற்றாக மறுத்துவிட்ட கருணா, புலிகளுடன் சமரசம் என்கிற பேச்சிற்கே இடமில்லையென்றும், புலிகள் முற்றாக அழிக்கப்படவேண்டும் என்றும், அதன் பின்னரே தீர்வு தொடர்பான பேச்சுக்கள பற்றி சிந்திக்க முடியும் என்று கூறியதாகவும் தெரியவந்திருக்கிறது.

1989 இல் வடக்குக் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் ராணுவமான தமிழ்த் தேசிய ராணுவத்திற்கான ஆயுதங்களை வழங்குவதில் சந்திரனே முன்னின்று செயற்பட்டிருந்தார். புலிகளுக்குக் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்திய ராணுவம் வெளியேறிக்கொண்டிருந்த நேரத்தில்க் கூட தமிழ்த் தேசிய ராணுவத்திற்கென்று கார்ல் குஸ்டவ் பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளை   வரவழைத்துக் கொடுத்திருந்தார்.

Venerable Carl Gustav gets a major upgrade « Quotulatiousness

எதிர்பார்க்கப்பட்டதுபோலவே தமிழ்த்தேசிய ராணுவத்தை எளிதில் வீழ்த்திய புலிகள் தமக்கான புத்தம் புதிய பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளையும் சந்திரன் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொண்டனர். பின்னர் அதே உந்துகணைகள் இலங்கை ராணுவத்தின்மேல் புலிகளால் பாவிக்கப்பட்டன. 

புலிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், புலிகள் தென்னிலங்கையில் நாசகாரத் தாக்குதல்களை நடத்தலாம் என்கிற சூழல் நிலவும் இந்தத் தருணத்தில், புலிகளின் அனுதாபியான றோ அதிகாரியொருவரை இலங்கைக்கு வர அனுமதிப்பதும், சுதந்திரமாக உலாவுவதை அனுமதிப்பதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.

Edited by ரஞ்சித்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிக்க கருணாவை முன்னிறுத்தும் கொழும்பு அரசாங்கம் : அமெரிக்க ஆய்வுக்குழு  தகவல்

Stratfor в ночь переворота в Турции выступил на стороне путчистов

காலம் : ஆடி 14, 2004

மூலம் : தமிழ்நெட் மற்றும் தமிழ்னேஷன்

புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்தியத் தளபதியாகவிருந்த கருணாவின் பிரிந்து செல்லுதலை அரசாங்கத்தின் அதியுயர் மட்டத்திலிருப்பவர்கள் ஆதரித்துவருவதாகவும், இதற்கு அமெரிக்க அரசின் தந்திரோபாய ஆசியும் இருப்பதாகவும் அமெரிக்காவின் பூலோக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

"புலிகளை நிலைகுலைய வைத்து, கட்டாயப் போர் ஒன்றிற்குள் அவர்களை இழுத்து, இறுதியில் பலவீனப்பட்டுப்போன புலிகளின் ராணுவப் பலத்தை பாரிய ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் முற்றாக அழிப்பதே இலங்கை அரசின் திட்டமாகும்" என்று Strategic Forecasting (Stratfor)  எனும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

கருணா தொடர்ச்சியாக புலிககளின் தலைமையை கடுமையாக விமர்சித்தும், அதற்கெதிராகச் செயற்பட்டு வருவாராகவிருந்தால் புலிகளுக்கும் அவரது குழுவிற்குமிடையிலான மோதல்கள் மீள தொடங்கும் அபாயம் இருக்கின்றது. இது கொழும்பிலிருக்கும் அரசால் மிக விருப்பத்தோடு எதிர்ப்பார்க்கப்படுவது மட்டுமல்லாமல், அவ்வாறானதொரு நிலையினை ஏற்படுத்த அது தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதும் திண்ணம்" என்றும் இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"உள்வீட்டு மோதல்களால் புலிகள் இயக்கம் கடுமையாகப் பலவீனமடைவதை எதிர்பார்த்து நிற்கும் இலங்கையரசு, அதன்பின்னர் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் ஏதுநிலைகளையும்  அவதானிக்க விரும்புகிறது" என்றும் இவ்வமைப்பினர் கருதுகின்றனர்.

இதனாலேயே கருணாவுக்கான தந்திரோபாய உதவிகளை இலங்கை ராணுவம் அவரது பிரிவின்போது வழங்கியது என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், அவரது பிரிவு உயிர்ப்புடன் இருப்பதனை உறுதிப்படுத்த தொடர்ச்சியான உதவிகளை இலங்கை அரசு அவருக்கு வழங்கிவருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

உள்வீட்டு பிளவுகளால் புலிகள் இயக்கத்திற்குள் மீண்டும் உருவாகாகக்கூடிய கரந்தடிப்படைப் போர் ஒன்றிற்குள் இயக்கம் இழுக்கப்பட்டு, பலவீனமடையும் என்று எதிர்பார்க்கும் அரசு இறுதியில் அவர்களை முற்றாக அழித்துவிடலாம் என்று கருதுவதாக இந்த ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

 அரசிடமிருந்து தனக்கு உதவிகள் கிடைப்பதை கருணா தொடர்ச்சியாக மறுத்துவருகின்ற போதிலும்கூட, இலங்கை அரசாங்கத்தின் பல பிரிவுகள் கருணாவுக்கு உதவிவருவதனை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கின்றன. 

தனது 6 வார கிளர்ச்சி புலிகளால் மிக இலகுவாக முறியடிக்கப்பட்டதையடுத்து சுமார் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்த கருணா மீண்டும் கொழும்பில் தோன்றி இலங்கை அரச வானொலிக்கும், பி பி ஸி தமிழ்ச் சேவைக்கும் சில செவ்விகளை வழங்கியிருக்கிறார்.

"புலிகளால் தான் மிகவும் மோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டதையடுத்து மீண்டும் வெளியே வந்திருக்கும் கருணா, புலிகளை அழிக்கும் தனது நோக்கத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்" என்று இந்த ஆய்வாளர்கள் மேலும் கூறுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கருணாவுக்கான ஆதரவு மட்டக்களப்பில் இன்னும் இருப்பதாகவே தெரிகிறது என்றும் கூறுகின்றனர்.

பி பி ஸி தமிழ்ச்சேவையுடனான செவ்வியின்போது, தான் அரசியலில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாகக் கருணா தெரிவித்திருந்தார். இதுபற்றி இந்த ஆய்வாளர்கள் கூறுகையில், "அரசியலில் ஈடுபடும் தனது விருப்பத்தினைக் கருணா வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதன் மூலம், புலிகளினால் இலக்குவைக்கப்படக்கூடிய ஒரு நபராக தன்னை அவர் அடையாளப்படுத்தியிருக்கிறார்" என்று தெரிவிக்கின்றனர்.

"இவ்வாறு புலிகளின் இலக்காக மாறி, புலிகளுக்கும் தனக்குமான தொடர்ச்சியான பகையினை வளர்த்தெடுப்பதன் மூலம் புலிகளை பலவீனப்படுத்தலாம் என்று அவரும், இலங்கை அரசும் நம்புவதாகத் தெரிகிறது" என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

"ஆனால், புலிகள் இலங்கை அரசுக்கெதிராக பல்லாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். ஆகவே, இருபக்கத்திலும் பாரிய இழப்புக்கள் இல்லாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்று வருவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது" என்று அமெரிக்காவினைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு கூறுகிறது.

இந்த ஆய்வாளர்களின் கணிப்பின்படி, போர் ஒன்று மீளத் தொடங்குமாக இருந்தால், புலிகள் மிகவும் பலவீனப்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் இதுவரை எதிர்பார்த்துப் போராடிவரும் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தினை இதனால் இழப்பார்கள் என்றும் எதிர்வுகூறுகிறது.

"அதேவேளை, காயப்பட்ட புலியை பொறிக்குள் சிக்கவைப்பதென்பதும் ஒரு அபாயகரமான விளையாட்டே" என்றும் இவ்வமைப்பு கூறுகிறது. 

"பேச்சுவார்த்தைகள் ஒரு தேக்க நிலையினை அடைந்திருக்கின்றன. புலிகள் தமது கோரிக்கைகளை விட்டுக்கொடுத்தாலோ அல்லது அரசு பலவீனப்பட்டாலோ அன்றி, இப்பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும் என்று கூறமுடியாது" என்றும் இவ்வமைப்பினர் கூறுகின்றனர்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ராணுவம் கருணாவுடன் நெருங்கிச் செயற்பட்டு வருகிறது : அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஒ பிளேக் வோஷிங்டனுக்கு அனுப்பிய செய்திகளின் சாராம்சம் 

Robert O. Blake, Jr. - The American Academy of Diplomacy

காலம் : கார்த்திகை 14, 2006

1. கடந்த 2004 பங்குனி மாதம் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்துசென்ற மட்டக்களப்பைத் தளமாகக்கொண்ட கருணா குழு தலைநகர் கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் தனது அரசியல் அலுவலகங்களைத் திறந்திருக்கிறது. 

Batticaloa Videos and HD Footage - Getty Images

இக்குழுவின் பிரச்சாரப் பிரிவு அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும், ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைவது தொடர்பாகவும் மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதனது ராணுவப் பிரிவு கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் இன்னமும் ஈடுபட்டே வருகிறது. அநேகமான அவதானிகளின் கருத்துப்படி இலங்கையின் ராணுவம் கருணா குழுவுக்கான அனைத்து உதவிகளையும் செய்துவருவதுடன், தமது பொது எதிரியான விடுதலைப் புலிகளை அழிக்க கருணா குழுவைப் பாவித்து வருகிறது என்று தெரியவருகிறது.


தம்மை ஒரு அரசியல் அமைப்பாக மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருணா குழு கோரிவருகின்றபோதும்கூட, அது தனது பயங்கரவாத நடவடிக்கைகளை இதுவரை கைவிடவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகள் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது. 

 


கடந்த கார்த்திகை 10 திகதி பிரபல தமிழ் அரசியல்வாதியும், புலிகளின் அரசியல் ரீதியான கொள்கைகளை ஏற்றுக்கொண்டவரும், மனிதவுரிமை வாதியுமான நடராஜா ரவிராஜைக் கொன்றது கருணா குழுவினர்தான் என்பது அரசாங்கத்திலுள்ள பலரின் கருத்தாக இருக்கிறது. அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுவரும் சிறார்கள் தொடர்பான ஐ நா அதிகாரி அலன் ரொக் அண்மையில் தனது விஜயத்தின்போது, சிறுவர்களைக் கடத்திச் சென்று ராணுவ நடவடிக்கைகளில் கருணா ஈடுபடுவதாகவும், சில வேளைகளில் இலங்கை ராணுவமே கருணாவுக்கான ஆட்பிடித்தல்களைச் செய்கின்றமைக்கான உறுதியான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியிருப்பது  எமது தூதுவராலயம் இலங்கை அரசிடம் கருணா குழுவுக்கும் அரசிற்கும் இடையிலான தொடர்பு பற்றி கேள்விகேட்கவேண்டிய  நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. 

 

2. 2004 பங்குனி மாதம் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகிய கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று தனக்கான குழுவொன்றினை உருவாக்கி புலிகளுக்கெதிராக இயங்கி வருகிறார். 1987 ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தளபதியாகவிருந்த கருணா தன்னுடன் பலநூற்றுக்கணக்கான போராளிகளையும் அழைத்துச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறச்து. சிலவேளை இந்த எண்ணிக்கை புலிகளின் மொத்த போராளிகளின் கால்பங்காவது இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

Karuna after leaving LTTE

பிளவு முதன்முதலில் தோற்றம் பெற்றபொழுது அது ஒரு உள்வீட்டுப் பிரச்சினை என்றே புலிகளியக்கம் கூறியது. ஆனால், தற்போது அது ஒரு அரச ராணுவத்தின் கீழ் இயங்கும் துணைராணுவக் குழு என்றும், 2002 ஆம் ஆண்டின் யுத்த நிறுத்த ஒப்பந்தப்படி அக்குழுவிடமிருந்து அரசாங்கத்தினால் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கமோ இன்றுவரை கருணா தொடர்பான பிரச்சினை புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினையென்றும் தமக்கு அப்பிரச்சினைக்கும் தொடர்பேதும் இல்லையென்றும் மறுத்தே வருகிறது.

 

3.  கருணா குழு தொடர்ந்தும் துணைராணுவக் குழுவாக இயங்கிவருகிறது. 2006 புரட்டாதி மாதம் 27 அன்று சுயாதீனப் பத்திரிக்கையான டெயிலி மோனிங் லீடர் பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படச் செய்தியில்  விசேட ஆயுதங்களைக் கையாளும் குறைந்தது 120  உறுப்பினர்களைக் கொண்ட  கருணா குழுவின் விசேட படைப்பிரிவொன்றின் பயிற்சி முடிந்து வெளியேறும் நிகழ்வு வெளியாகியிருந்தது. மிக விரைவில் கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக விரட்டியடிக்கும் நடவடிக்கையில் இந்தக் கருணா குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதன் தளபதி கூறியிருந்தார்.

 

புலிகளின் அரசியல்ப் போராளிகள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பணிமனைகள் மீதான கருணா குழுவின் தாக்குதல்களையடுத்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் பலவீனமடைந்துவருவது தெரியவருகிறது. இதனையடுத்து புலிகள் தமது அரசியல் பணிமனைகளை மூடிவருவதுடன், தமது அரசியல்ச் செயற்பாடுகளையும் முற்றாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கைவிட்டுள்ளனர். 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4.   மனிதவுரிமை கண்காணிப்பாளர்களும் விடுதலைப்புலிகளும் கருணா குழு இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபடுவதுடன், புலிகள் இயக்கத்தின் போராளிகள் மீது கெரில்லா முறையில் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் பல பிரிவுகள் கருணா குழுவுடன் சேர்ந்து இயங்குவதும், அக்குழுவிற்கான உதவிகளை வழங்குவதும் இலங்கையில் பரவலாக அறியப்பட்ட விடயமாக இருந்தபோதும், அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை இதுவரை எவரும் வெளிப்படையாக முன்வைக்கவில்லை.


அண்மையில் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை விசாரிக்கும் ஐ நா வின் அதிகாரியான பிலிப் அல்ஸ்ட்டன் கருத்துக் கூறுகையில்,  "கருணா குழுவிற்கும் ராணுவத்திற்கும் இடையிலான நெருக்கமான உறவு தொடர்பான சந்தர்ப்ப ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. கிழக்கில் இயங்கிவரும் சமூக அமைப்புக்கள் பலவற்றிடமிருந்து எனக்குக் கிடைத்த நம்பகரமான அறிக்கைகளின்படி கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட பல சிறுவர்கள் பின்னர் அரச ராணுவமுகாம்களிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றனர்"  என்று கூறியிருக்கிறார். அத்துடன், கிழக்கில் இயங்கிவரும் அரசுசாரா சமூக நலன் அமைப்புக்களின் பொதுவான தலைமை அதிகாரி எம்மிடம் பேசும்போது, கிழக்கில் கருணா குழுவினரின் முகாம்கள் ராணுவ முகாம்களிலிருந்து 50 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில், சில இடங்களில் நேரெதிராக அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் அலன் ரொக்கின் அறிக்கையும் கருணா குழுவினருக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பினை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5.  பங்குனி 2006 இல் கருணா குழு தனது முதலாவது அரசியல் அலுவலகத்தை மட்டக்களப்பில் திறந்தது, அக்கட்சிக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கிற பெயரையும் இட்டு தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்துகொண்டது. அதன் பின்னர் கொழும்பு, வவுனியா, திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் பல அலுவலகங்களைத் திறந்துள்ளதோடு யாழ்ப்பாணத்திற்கும் தனது செயற்பாடுகளை விஸ்த்தரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. எமது அதிகாரியொருவர் அண்மையில் கருணாவின் கொழும்பு அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். பல பொலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பில், பாரிய பாதுகாப்பு அரண்கள் புடைசூழ கொழும்பின் மிகவும் பிரசித்திபெற்ற பகுதியொன்றில் அவரது பாரிய வாசஸ்த்தலம் அமைந்திருந்தது. அவரது உல்லாசமான வாசஸ்த்தலத்தின் வரவேற்பறையில் கருணாவின் பாரிய உருவப்படங்கள், ராணுவச் சீருடையில் அல்லாமல் கனவான்களின் சீருடையில் காணப்பட்டன.

6. கருணாவின் அரசியல் கட்சியின் செயலாளர் பத்மினி என்பவருடன் பேசும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. இறுதிவரை தனது இயற்பெயரை சொல்ல மறுத்துவிட்ட அவர், புலிகளை "ஏகாதிபத்தியவாதிகள்" என்றும், "ஜனநாயக விரோதிகள்" என்றும் குற்றஞ்சாட்டியதோடு, இதனாலேயே கருணா அவர்களிடமிருந்து பிரிந்துசெல்ல நேர்ந்ததாகக் கூறினார். அவர் மேலும் கூறுகையில் இலங்கையின் இறையாண்மையினையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் தாம் முழுதாக ஏற்றுக்கொள்வதாகவும், இவற்றின அடிப்படையிலேயே அதிகாரப் பகிர்வு இடம்பெறவேண்டும் என்று தமது கட்சி கோருவதாகவும் கூறினார். பிரபாகரனின் புலிகளிடமிருந்து தம்மைப் பாதுகாக்கவே தாம் ஆயுதம் ஏந்தியுள்ளதாகவும், அரச ராணுவத்திற்கு ஆதரவளிக்கும் எண்ணம் எதுவும் தமது குழுவிற்கு இல்லையென்றும் கூறினார். "நாம் எமது சொந்தப் பலத்திலேயே இயங்குகிறோம், ஏகாதிபத்திய புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை நாமும் ஆயுதங்களைக் கீழே வைக்கப்போவதில்லை. நாம் தற்போது புலிகளுடன் மரபுவழியிலான பாரிய போர் ஒன்றினுள் ஈடுபட்டிருக்கிறோம். புலிகளைப்போல் நாம் தீவிரவாதத்திலோ அல்லது தற்கொலைத் தாக்குதல்களிலோ ஆர்வம் கொண்டவர்கள் கிடையாது" என்றும் அவர் கூறினார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7.  கருணா குழு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொண்டுள்ளதையடுத்து அக்கட்சிக்கு மக்களிடையே பாரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளதாகப் பத்மினி கூறுகிறார். "நாம் ஒரு மக்கள் ஜனநாயக அமைப்பாக இயங்குவதால் எம்மைக் கருணா குழுவென்றோ அல்லது கிழக்குப் புலிகள் என்றோ அழைப்பதை எதிர்க்கிறோம்" என்று அவர் கூறினார். "தமிழ்மக்களை  ஈழம் எனும் சாத்தியமற்ற கனவைக் கொண்டு புலிகள் எமாற்றி வருகிறார்கள். பிரபாகரனோ அல்லது அவரது ஆதரவாளர்களோ உண்மையாகவே சமாதானத்தில் நாட்டம் கொண்டவர்கள் கிடையாது.  2002 சமாதானப் பேச்சுவார்த்தைகளை தம்மைப் பலப்படுத்தவே பாவிப்பதாக புலிகளின் தலைமை போராளிகளுக்குக் கூறியிருந்தது. அவர்கள் ஒருபோதும் தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்க்கப்போவதில்லை என்பதை அறிந்துகொண்டபின்னர் அவர்களை விட்டு விலகி வருவதைத்தவிர வேறு வழிகள் எமக்கு இருக்கவில்லை" என்றும் அவர் கூறினார்.

8.  மேலும் அந்த அதிகாரி இலங்கை அரசின் உத்தியோகபூர்வ நாளிதழான டெயிலி நியூஸின் ஆசிரியர் பந்துல ஜயசேகரவுடன் பேசியபொழுது பத்மினி கூறிய அதே விடயங்களை அவரும் கூறினார். புரட்டாதி 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ஜெனீவாப் பேச்சுக்களில் இருந்து நாடு திரும்பும்போது கருணா குழுவின் தலைமை உறுப்பினர்கள் சிலரை தான் லண்டனில் சந்தித்ததாகக் கூறிய அவர்  "ஜனநாயக நீரோட்டத்திலிணைந்து கனவான்களின் உடைகளை அணிந்தபின்னர் ஆயுதப் போராட்டம் தோல்விகரமானது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். அவர்களுக்குப் போராட்டத்தில் பற்று இல்லாமற்போய்விட்டது. அவர்கள் தம்மைக் கிழக்குப் புலிகள் என்று அழைப்பதை வெறுக்கிறார்கள். அவர்கள் தம்மை தமது கட்சிப் பெயரான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று அழைப்பதையே விரும்புகிறார்கள்" என்றும்  கருணாவின் கட்சியின் அறிக்கைகளுக்காக தனது நாளிதழில் தொடர்ச்சியாக ஒரு பகுதியினை தாம் ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
 
 9.  தனது 10 நாள் தகவல் அறியும் பயணத்தினை இலங்கையில் முடித்துக்கொண்டு வெளியேறும் தறுவாயில்  ஐ நா வின் யுத்தத்தில் பாதிக்கப்படும் சிறுவர் நலன் தொடர்பில் செயற்படும் அலன் ரொக் பின்வருமாறு கூறுகிறார், " கருணா துணைராணுவக் குழுவினரால் சிறுவர்கள் நாளாந்தம் கடத்தப்பட்டு வருகிறார்கள். இலங்கை அரச ராணுவம் கருணா குழுவிற்கு உதவிவருவதுடன், சிறுவர்களைக் கடத்துவதிலும் பங்களிப்புச் செய்துவருகிறது என்பதற்கான பலமான ஆதாரங்களை நான் சேகரித்திருக்கிறேன். சோதனைச் சாவடிகளில் ராணுவத்தால் தடுத்துவைக்கப்படும் தமிழ் இளைஞர்களும் சிறுவர்களும் கருணா குழுவினருக்குக் கையளிக்கப்பட்டு கட்டாய ராணுவப் பயிற்சிக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்" . தமது பிள்ளைகளை கருணா குழு கடத்திச் செல்வது தொடர்பான முறைப்படுகளை பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்ள மறுக்கும் பொலிஸார், "கருணாவினாலேயே நாம் இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம், அவருக்கெதிராக எம்மால் நடவடிக்கை எடுக்கமுடியாது. புலிகள் உங்கள் பிள்ளைகளைக் கொண்டு சென்றபோது நீங்கள் முறையீடு செய்யாததுபோல் இப்போதும் இருங்கள். உங்கள் பிள்ளைகளை இப்போது கடத்தியவர்களும் தமிழர்களே" என்று பெற்றோரிடம் கூறியதாக அலன் ரொக் மேலும் தெரிவித்தார்.

 

10.  புலிகளிடமிருந்து கருணா விலகிச் சென்றதும், அவர் இன்று பூண்டிருக்கும் "மதிப்பிற்குரிய" எனும் நாமமும் அவரது  பயங்கரவாதத்தினை மறைக்கப் போதுமானவை அல்ல. அவர் புலிகள் இயக்கத்திலிருந்தபோது கையாண்ட அதே தீவிரவாதச் செயற்பாடுகளையும் உத்திகளையும் இப்போதும் அவரது குழு கையாண்டு வருகிறது. சிறுவர்களை ஆயுதப் பயிற்சிக்காகக் கடத்துவது, கப்பத்திற்காகக் கடத்துவது போன்றவை அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவைதான். 
அரசியல்வாதிகளின் படுகொலைகள் என்பது கருணாவுக்குப் பரீச்சயமானதுதான். ரவிராஜின் படுகொலைமூலம் தான் தற்போதும் அதே தீவிரவாதத்தினைப் பின்பற்றும் ஆயுததாரிதான் என்பதை கருணா நிரூபித்திருக்கிறார். 

புலிகள் கருணா பிளவு இலங்கை ராணுவத்திற்குச் சாதகாமான போர்க்களம் ஒன்றை உருவாக்கியிருப்பதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் கொழும்பு அரசியல்த் தலைமைப்பீடம், தமக்கும் கருணாவுக்கும் இடையில் இருக்கும் தொடர்பினை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள இன்றுவரை மறுத்தே வருகின்றனர். ஆனாலும், கருணாவுக்கும் அரச ராணுவத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு இலங்கை மக்கள் அனைவராலும் பரவலாக அறியப்பட்ட ஒரு விடயம் என்றால் அது மிகையில்லை. இது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மிகவும் பாதகமானது. அலன் ரொக் போன்ற சர்வதேச அதிகாரியின் அறிக்கை மூலம் கருணா குழுவுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து அமெரிக்கா உட்பட, உதவி வழங்கும் நாடுகள், இணைத்தலைமை நாடுகள் என்பன இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து கருணா குழுவுக்கும் இலங்கை அரச ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பினை முற்றாகக் கைவிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். போரில்லாத அரசியல் பொறிமுறை ஒன்றின் மூலமே இப்பிரச்சினைக்கான தீர்வும் எட்டப்படுதல் வேண்டும் என்று பிளேக்கின் செய்திக் குறிப்புக் கோருகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.