Jump to content

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் நேசிக்கப்பட்ட கெளசல்யன்

கிழக்கு மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட, பிரபலமான ஒரு தலைவராக கெளசல்யன் விளங்கினார். கிழக்கின் பெரும் பணக்காரர்களும், இடைநிலை வசதிபடைத்தோரும் கெளசல்யனின் காணிச் சீர்திருத்தங்களை அவ்வளவாக விரும்பாவிட்டாலும், கிழக்கின் ஏழை விவசாய மக்கள் அவரை போற்றி வந்தார்கள். இந்த ஏழை மக்களாலேயே கிழக்கு மாகாணம் நிரம்பியிருந்தது. கெளசல்யனின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான  இந்த ஏழைத் தமிழர்கள் அவர்மேல் கொண்ட பற்றினாலும், அவரது இழப்பினால் ஏற்பட்ட உண்மையான சோகத்தினாலும்தான் அங்கு வந்து தம்மால் நேசிக்கப்பட்ட ஒரு  தலைவனுக்கான அகவணக்கத்தினைச் செலுத்தினார்கள் என்றால் மிகையில்லை. அவரைப்பற்றிய விமர்சனங்கள் எப்படியாக இருந்தாலும், தனது பணியில் அவர் காட்டிய நேர்மையும், போராட்ட இலட்சியத்தின் மீது அவர் கொண்டிருந்த அசைக்கமுடியா பற்றுறுதியும் எந்த விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டது.

கெளசல்யனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் கருணா பிரதேசவாதச் சாயம் பூசிக்கொண்டு புலிகளை விட்டுப் பிரிந்து ராணுவத்துடன் இணைந்தபோது ஏற்பட்டது. தனது உயிருக்குக் கருணாவினாலும்ம் அவரது விசுவாசிகளாலும் நிச்சயம் ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்திருந்தபோதும், தலைமைக்கெதிராகவும், போராட்டத்திற்கெதிராகவும் கருணா செயற்பட்டுவருவதை கெளசல்யன் கடுமையாக எதிர்த்தார். கிழக்கின் மைந்தனாக இருந்தபோதும் கருணாவின் இந்த துரோகத்தனத்தை வெளிப்படையாக அவர் விமர்சித்தார். கருணாவின் துரோகத்தனத்திற்கெதிரான கெளசல்யனின் கடுமையான விமர்சனமும், நிலைப்பாடும் அக்காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆகவே, இதுபற்றி நாம் பேசுவது முக்கியமானது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 585
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

"கேர்ணல்" கருணாவும் அவனது பிரதேசவாதப் புரட்சியும்

மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு, புலிகளின் தேனகம் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் முக்கிய தளபதிகள் , பொறுப்பாளர்களை கருணா கூட்டியிருந்தான். சுமார் 150 புலிகளின் தலைவர்கள் அடங்கிய அந்த கூட்டத்தை கருணாவே நடத்தினான். கிழக்கில் 1987 இல் இருந்து பிரபாகரனுக்கு விசுவாசமாக போர்நடத்திய அதே கருணா இன்று அதே தலைவருக்கு எதிராக பிரதேசவாதக் கோசத்தைப் பாவித்துப் புரட்சி செய்துகொண்டிருந்தான்.

அன்று அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினருக்கு தமது காதுகளையே அவர்களால் நம்பமுடியவில்லை. புலிகளின் தலைமைமீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் கருணா முன்வைத்துக்கொண்டிருந்தான். அவனது குற்றச்சாட்டுக்கள் புலநாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான், நிதித்துறைப் பொறுப்பாழர் தமிழேந்தி, காவல்த்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஆகிய புலிகளின் மிக முக்கிய தலைவர்கள் மீதே முன்வைக்கப்பட்டன. கருணா விடுத்த கோரிக்கையென்னவென்றால், இந்த மூவரையும் தவிர்த்து, கிழக்கு மாகாணத்திற்கென்று தனியான அதிகார பலம் கொண்ட, தன்னிச்சையாக இயங்கும் நிர்வாக அமைப்பொன்றுதான். "வன்னித்தலைமையின் கீழ் நாம் செயற்பட விரும்பவில்லை, வடக்கு மைய்யத்தைச் சுற்றி நாம் இயங்கப்போவதில்லை, அதனைத் தூக்கியெறிந்துவிட்டு கிழக்கிற்கென்று தனியான ஒரு அமைப்பை நாம் உருவாக்குவோம்" என்று அவன் அங்கு கூடியிருந்தவர்களிடம் கர்ஜித்தான்.

இதைக்கேட்ட அனைவருமே ஒருகணம் அதிர்ந்துபோயினர். பலரின் முகத்தில் விரக்தியும் விசனமும் ஒட்டிக்கொண்டது. ஆனால், கருணாவின் எண்னத்தை ஏற்கனவே அறிந்துவைத்திருந்த அவனுக்கு நெருக்கமானவர்கள் அமைதியாக இருந்து அவன் சொல்வதை ஆமோதிக்கத் தொடங்கினர். அவர்களில் பலர் கருணாவுடன் சேர்ந்து நிற்கப்போவதாக வெளிப்படையாகவே கூறினர். ஆனால், இதில் வேடிக்கையென்னவென்றால், அன்று கருணாவுக்கு ஆதரவாக நிற்கப்போவதாகக் கூறிய பலர் பின்னர் வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் இணைந்துகொண்டதுடன், கருணாவின் துரோகத்தையும் கடுமையாகச் சாடத் தவறவில்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், அங்கிருந்த தளபதிகளில் ஒருவர் மட்டுமே கருணாவின் துரோகத்தை வேளிப்படையாக எதிர்த்தார். கிழக்கு மாகாணத்தின் தன்னிகரில்லாத் தளபதியெனும் மமதை தலைக்கேறிய கருணாவை தனியாளாக எதிர்த்து நின்றது கெளசல்யனே அன்றி வேறில்லை. மொத்தத் தமிழினத்தினதும் எதிர்கால இருப்பென்பது வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதிலேயே தங்கியிருக்கிறது என்று நிதானத்துடன் அவர் கருணாவை நோக்கிக் கூறினார். மேலும், நாம் பிரதேச ரீதியாகப் பிரிந்துபோவது எமது போராட்டத்தை முழுமையான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் கருணாவிடம் கூறினார். எமக்கிருக்கும் பிரச்சினைகளை நாம் பேசியே தீர்த்துக்கொள்ள வேண்டும், ஆகவே உங்களின் இந்த நாசகார முடிவினைக் கைவிட்டு விட்டு வன்னிக்குச் சென்று தலைவரிடம் நேரடியாகப் பேசுங்கள் என்று அவர் கருணாவைக் கேட்டுக்கொண்டார்.

கெளசல்யனை பேசவிடாது தடுத்து, அவரின் பேச்சை நிராகரித்து, அவரையும் தனது சூழ்ச்சிக்குப் பணியவைக்க கருணா முயன்றுகொண்டிருந்தான். அத்துடன், கிழக்கிலிருந்து புலிகளுக்கென்று சேர்க்கப்பட்ட பணம் எவ்வளவென்பதை நீ வன்னிக்கு சொல்லு என்று அவன் கெளசல்யனைப் பார்த்துக் கேட்டான். "எமது மண்ணில் சேர்க்கும் அனைத்துப் பணமும் பொன்னான கிழக்கு ஈழத்திற்காக மட்டுமே இனிமேல் பயன்படுத்தப்படும்" என்று கூறினான் கருணா. ஆனால், கெளசல்யனோ தனது முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. தன்னை கருணா எதுவும் செய்யலாம் என்கிற நிலையிருந்தும், அவர் கருணாவின் துரோகத்திற்கெதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருந்தார். இதனால் பொறுமையிழந்த கருணா, "இப்போதே வன்னிக்கு ஓடிப்போ, உன்ர மனுசியையும் கூட்டிக்கொண்டு ஓடு. இனிமேல் நான் உன்னை இங்கே பர்க்கக் கூடாது. அப்படிப்பார்த்தால் அந்த இடத்திலேயே உன்னைப் போடுவேன்" என்று கர்ஜித்தான். 

அங்கு கூடியிருந்தவர் எல்லாம் ஸ்தம்பித்து நிற்க, கெளசல்யன் அந்த மணடபத்தை விட்டு அமைதியாக வெளியேறிச் சென்றார். உடனடியாக தனது வருங்கால மனைவியும், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவந்த மாணவியுமான புஷ்பாவை அழைக்க அம்பிலாந்துரைக்குச் சென்றார். அங்கிருந்து, உடனடியாக அவர் வன்னிக்குக்கிளம்பிச் சென்றார். வன்னியை வந்தடைந்த கெளசல்யனை வரவேற்ற தலைவர் கிழக்கில் நடந்துவரும் கருணாவின் பிரதேசவாத நாடகத்தின் விபரங்கள் தொடர்பாக அவருடன் நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். 

கருணாவின் துரோகத்தினை துணிவுடன் எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டுமே
ஆரம்பத்தில் கருணாவின் கீழ் செயற்பட்ட   தளபதிகளான ரமேஷ், ரமணன், ராம், பிரபா, கரிகாலன் ஆகியோர் பின்னர் அவனை விட்டு மீண்டும் வன்னிக்கே திரும்பிச் சென்றிருந்தாலும், ஆரம்பத்திலிருந்து கருணாவின் துரோகத்தினை துணிவாக எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டும் தான். கெளசல்யனின் விசுவாசத்தை மெச்சிய தலைவர், பின்னர் வந்த சில வாரங்களில் அவரது திருமண நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

முற்றும்

இணையம் : கொழும்பு டெயிலி மிரர்
ஆக்கம் : டி பி எஸ் ஜெயராஜ்

  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 20/9/2021 at 20:24, ரஞ்சித் said:

கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான தாக்குதல் குறித்த புலிகளின் அறிக்கை

முதலில் இக்கொடூரமான தாக்குதல் குறித்து புலிகள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். இத்தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று மறுக்காவிட்டாலும், இத்தாக்குதல் "மன்னிக்கமுடியாத, கடுமையான கண்டனத்திற்கு  உள்ளாக்கப்படவேண்டிய படுகொலைகள்" என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல், தாக்குபவர்களின் உண்மையான குறிக்கோள் எந்தளவு நியாயத்தன்மையினைக் கொண்டிருப்பினும், நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நியாயப்படுத்தப்படவோ முடியாதது என்றும் கூறியிருக்கிறார்கள்.

புலிகளின் அறிக்கை வருமாறு,

" அப்பாவிகள் பேரூந்துமீதான இத்தாக்குதலினை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கெப்பிட்டிக்கொல்லாவையில்,அப்பாவிகளை இலக்குவைத்துத் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல் எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான படுகொலை அரசியல் காரணங்களுக்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெனீவாவில் முடித்துக்கொண்டு புலிகளின் பேச்சுவார்த்தைக்குழு நாடு திரும்பியிருக்கும் தருணத்துடன் ஒன்றாக்கி நடத்தப்பட்டிருக்கும் இந்த அப்பாவிகளின் படுகொலை, இப்பழியினை புலிகள் மீது சுமத்தும் ஒற்றை நோக்கத்திற்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசினாலோ அல்லது அவர்களால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழு ஒன்றினாலோ நடத்தப்பட்டிருக்கும் இந்த படுகொலையினைக் காரணமாகக் காட்டி இலங்கை அரசு வன்னிமீது தனது கொடூரமான வான் தாக்குதல்களையும் ஆரம்பித்திருக்கிறது.  ஆனால், துரதிஷ்ட்டவசமாக, அரசின் இந்த நயவஞ்சகப் பிரச்சாரத்திற்குள் அகப்பட்டிருக்கும் சர்வதேச செய்திநிறுவனங்களும், அமைப்புக்களும் புலிகள் மீது அநியாயமாக இத்தாக்குதலுக்கான பொறுப்பினைச் சுமத்துவது தெரிகிறது. தற்போது நடந்துவரும் வன்முறைகள் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் பொறுப்பாகவும், நிதானத்துடனும் செய்தி வெளியிடவேண்டும் என்று நாம் வேண்டுகிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களாக புலிகள் இயக்கத்தினால் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசு குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து வந்தது.  ஆனால், இப்போது சிங்கள மக்கள் மீது குறைந்தது 3 தாக்குதல்களையாவது புலிகள் செய்திருப்பதாகக்குற்றஞ்சாட்டுகிறது. இன்றுவரை சிங்கள அரசாலும், அதன் துணைராணுவக் குழுக்களாலும் தமிழ் மக்களும், சிறார்களும்  ஆயிரக்கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இத்தாக்குதல் ஒன்றின்போது கூட அரசோ அல்லது அதன் துணை ராணுவக் குழுக்களோ தமிழ் மக்கள் மீது தயவு தாட்சண்ணியம்பார்க்காமல், மிகவும் கொடூரமாகவே நடந்திருக்கின்றன. ஆகவே, இத்தாக்குதலிலும் கூட அரசும் அவர்களது துணைராணுவக் குழுவுமே பின்னால் இருப்பதாக நாம் நம்புகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் சிங்கள மக்கள் மீது புலிகள்பெயரால் படுகொலையொன்றினை நிகழ்த்துவதன் மூலம், சர்வதேசத்தில் புலிகளுக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தவும், அவர்களைத் தனிமைப்படுத்தவுமே அரசு முயன்றிருக்கிறது" என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

@ரஞ்சித்அவர்களே, இந்தாருங்கள். இது செயலிழந்துபோன புதினம் வலைத்தளத்தில் இருந்து எடுத்த இத்தாக்குதல் தொடர்பான புலிகளின் சமதானச் செயலகத்தின் அறிக்கை. 

(வேண்டாததெனில் முறைப்பாடு மூலம் நீக்கிவிடவும்.)

மூலம்: http://www.eelampage.com/?cn=26875

மூல வலைத்தளம்: புதினம்

பழி சுமத்துவதற்காக கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதல்: விடுதலைப் புலிகள் கண்டனம்
[வியாழக்கிழமை, 15 யூன் 2006, 12:47 ஈழம்] [ம.சேரமான்]

அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவவில் பொதுமக்கள் பயணித்த பேரூந்து மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கை:

வவுனியாவிலிருந்து 23 கிலோ மீற்றர் தொலைவில் கெப்பிட்டிக்கொல்லாவவில் பொதுமக்கள் பயணித்த பேரூந்து மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதில் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் வாழ்க்கையை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது.

ஜெனீவா பேச்சுக்கள் நடைபெற்ற பெப்ரவரியிலிருந்து 24 குழந்தைகள் உட்பட 250 பேர் இதுவரை சிறிலங்கா இராணுவத்தினரால் வடக்கு - கிழக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் திரும்பியுள்ள நேரத்தில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது முழுப் பழியைச் சுமத்தும் நோக்குடன் நடத்தப்பட்டுள்ளது.

கிளைமோர் சம்பவத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் நிர்வாக முல்லைத்தீவுப் பகுதியில் விமானக் குண்டுவீச்சை சிறிலங்கா விமானப் படையினர் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கிளைமோர்த் தாக்குதலுக்கான பதில் நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் இதனையும் நியாயப்படுத்துகிறது.

சர்வதேச ஊடகமும் சிறிலங்காவின் இந்த பொய்யான பரப்புரையில் வீழ்வது எதிர்பாராத ஒன்றாக உள்ளது. சர்வதேச ஊடகங்கள் தங்களது உயரிய மதிப்பீடுகளை செய்திகளை வெளியிடுவதில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 5 people and people standing
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே குடும்பம் ஒட்டுக்குழு பிள்ளையானை பயன்படுத்தி கோரமான பலவேறு சட்டவிரோத குற்ற செயல்களை கடந்த காலங்களில் செய்து இருக்கிறது .

அரசியல் மற்றும் இராணுவ கொலைகள் மட்டுமின்றி ராஜபட்ச குடும்பத்திற்கு விரோதமான பத்திரிகையாளர்கள் உட்பட பலரை கொன்று போட ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை பயன்படுத்திய விவகாரத்தை Daily Mirror அம்பலப்படுத்தி இருக்கின்றது

குறிப்பாக முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் ஜோஸ்ப் பரராஜசிங்கம் , ரவிராஜ் ,சந்திரநேரு உட்பட பல அரசியல் கொலைகளை பிள்ளையானை பயன்படுத்தியே கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் புலனாய்வு பிரிவு செய்து இருந்தது

அதே போல திருகோணமலையை சேர்ந்த மூத்த சிவில் செயல்பாட்டாளர் விக்னேஸ்வரன் உட்பட சிவில் சமூக பிரமுகர்களும் பிள்ளையானை வைத்தே கொலை செய்யப்பட்டனர்

பத்திரிகையாளர் நடேசன் போன்ற பத்திரிகை பிரமுகர்களையின் கொலைகளையும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கி இருந்த பிள்ளையானை வைத்தே கோத்தபாயா ராஜபக்சே செய்தார்

முன்னாள் துணைவேந்தர் ரவீந்தரநாத் அவர்களையும் ராஜபக்சே குடும்பத்துடன் நெருக்கிய தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் துணையுடனே பிள்ளையான் கடத்தி படுகொலை செய்தான்

இது தவிர, இலங்கை முழுவதும் தமிழ் வியாபாரிகள் பலரை கடத்தி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட பிள்ளையானை கோத்தபாயா அனுமதி அளித்து இருந்தார் . இவ்வாறு கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான வர்த்தகர்கள் வெலிகந்த மற்றும் கபரண இராணுவ முகாம்களில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர்

மேற்படி வர்தகர்களிடம் பறிக்கப்பட்ட பணம் பிள்ளையனிடம் மட்டுமின்றி மூத்த இராணுவ அதிகாரிகளிடம் பகிரப்பட்டு இருந்தது

மேற்படி கடத்தல் சம்பவங்களில் போது ராஜபக்சே சகோதரர்களுக்கு வேண்டப்படாத பத்திரிகையாளர்கள் உட்பட சிங்களவர்கள் பலர் கொண்டு வரப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பதை பிள்ளையான் கூட்டாளி அசாத் மௌலானா என்பவன் அம்பலப்படுத்தி இருக்கின்றான்

இது தவிர ,வெலிகந்தை உளவுப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ மற்றும் தாகீர் போன்ற பொலிஸ் அதிகாரிகள் மேற்படி விவகாரங்களை தெரிந்து இருந்தாலும் பிள்ளையானுக்கு ராஜபக்ச குடும்பத்தில் இருந்த தொடர்பு காரணமாக அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை

அதே போல பிள்ளையானை பயன்படுத்தி பெண்களை கடத்தி இலங்கை இராணுவத்திற்கு விருந்து வைத்த சம்பவங்களும் நடைபெற்றன . குறிப்பாக திருகோணமலையில் கடற்படை உளவுப் பிரிவை சேர்ந்த கப்ரன் சுமித் என்பவருடன் இணைந்து பிள்ளையான் கும்பல் நடத்திய விருந்து தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன

6 வயது மாணவியான வர்ஜா யூட் றெஜி, , 8 வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் போன்ற குழந்தைகளை கூட ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தில் கப்பம் பெறுவதற்காக பிள்ளையான் கடந்து கொன்ற சம்பவங்கள் கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு தெரிந்தே நடந்தது
2007 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் பொது பிள்ளையானை பயன்படுத்தி தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை கடத்திய பசில் ராஜபக்சே வாக்கெடுப்பில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களை பங்கெடுக்க அனுமதிக்கவில்லை

இது போதாதென்று மட்டக்களப்பில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்சே நியமித்த காணாமல் போனோர் ஆணைக்குழுவில் பிள்ளையானுக்கு எதிராக கண் கண்ட சாட்சியங்கள் பதிவாகி இருக்கின்றது

கோத்தபாயா ராஜபக்சே தலைமையிலான புலனாய்வு துறை அதிகாரிகள் வாழைச்சேனையில் ஒரு முஸ்லீம் ஆயுத குழுவை உருவாக்கி கருணா பிள்ளையான் குழுக்களுடன் இணைத்தே இயக்கி வந்தார்கள் . அதே போல முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கான பிரதான ஆயுத முகவராக பிள்ளையானையே பயன்படுத்தினார்கள்

அதே போல திரு அருண் தம்பிமுத்து அவர்களுக்கு சொந்தமான வீட்டை நாமல் ராஜபக்சே உதவிகளுடன் தான் பிள்ளையான் தக்க வைத்து இருக்கின்றான்

கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு நெருக்கமான முன்னாள் புலனாய்வு துறை தளபதியாக இருந்த மேஜர் ஜெனெரல் கபில ஹெந்தாவிதாரண அவர்களால் பிள்ளையானுக்கு மேற்படி வீடு பிள்ளையானுக்கு பெற்று கொடுக்கப்பட்டு இருந்தது

இந்த வீட்டு விவகாரத்தில் பிள்ளையான் போலி உறுதி தயாரித்து தேவராஜ் என்பவனுக்கு விற்று அவனிடம் வாங்குவது போல பாசாங்கு செய்து முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த மோசடி 7 வருட கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றம் என்கிற போதும் ராஜபக்சே குடும்ப தலையீடு காரணமாகவே இதுவரை நீதி வழங்கப்படவில்லை

அதே போல முதலமைச்சராக இருந்த போது பிள்ளையான், பிரதீபன் மற்றும் கண்ணன் ஆகியோர் சேர்ந்து புதூர் வங்கியில் 15 கோடி பெறுமதியான நகைக மற்றும் 35 லட்சம் பணத்தை கொள்ளையடித்து இருந்தனர்

இந்த கொள்ளையில் பிள்ளையானுக்கு இருந்த தொடர்பை இலங்கை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தி பிள்ளையானை கைது செய்ய முயன்ற போதும் ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை கைது செய்ய அனுமதிருக்க வில்லை

அதே போல அதே போல மட்டு-வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவியாக இருந்த 21 வயதேயான தனுஸ்கோடி பிறேமினி. என்கிற பெண்ணை சந்திவெளி இராணுவ முகாமை சேர்ந்த கலீல் (பிள்ளையானுடன் சிறையில் இருந்தவன் ) என்பவனின் உதவியுடன் வெலிகந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கடத்திய பிள்ளையான் குழுவை சேர்ந்த பிள்ளையான், சிந்துஐன், யோகன், புலேந்திரன், குமார், சிரஞசீவி ஆகியோர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தனர்.

மேற்படி கொலை தொடர்பாக தெளிவான சாட்சியங்கள் இருக்கின்ற போதும் ராஜபக்ச குடும்ப தலையீடு காரணமாக பிள்ளையான் கைது செய்யப்படவில்லை

அதேபோல பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக வைத்து கொண்டு பாசிக்குடாவில் பலவேறு சட்டவிரோத முதலீடுகளை பசில் ராஜபக்சே செய்து இருந்தார்

மேற்படி சம்பவஙக்ளின் தொடர்ச்சியாகவே இன்றைக்கும் பிள்ளையானும் அவன் கூட்டாளிகளும் வரிந்து கட்டி கொண்டு ராஜபக்சே குடும்பம் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள்.
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2022 at 03:39, தமிழ் சிறி said:

மிக்க நன்றி சிறி !

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

கருணாவின் கூட்டாளியான பிள்ளையானின் துரோகச்செயலகளைப் பட்டியலிடும் முன்னாள் போராளி:

தகவல்களைச் சேகரப்படுத்திக்கொள்ளவும்.

குறிப்பாக சாவொறுப்புப்பெற்ற தேசவஞ்சகன் இனிதனின் ஆட்கள் மேற்கொண்ட கோழைத்தனமான தாக்குதலொன்றையும் குறிப்பிடுகின்றார்.

https://eelam.tv/watch/க-ல-க-ள-ள-கப-பம-ஆள-கடத-தல-ல-ஈட-பட-ட-ப-ள-ள-ய-ன-உண-ம-ய-உட-த-த-ம-ன-ன-ள-ப-ர-ள_xgNP1eckFfP4vRh.html

(தங்களின் திரிக்கு வலுச்சேர்ப்பதாக இருக்குமென்று எண்ணுகிறேன். )

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

கருணா குழுவினர் நடாத்திய மற்றொரு வஞ்சகம்

24.08.2006 அன்று மட்டக்களப்பில் 

அ. ம. இசைவழுதி எழுதிய கடற்கரும்புலி கப்டன் இயல்வாணனின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து...

"சர்வதேசக் கடற்பரப்பில் இருந்து விடுமுறையில் சென்று மீண்டும் ஆழக்கடலில் ஆழத்தை அளவிடத் தயாராக மீண்டும் கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் தலைமையிலான போராளிகள் தயார் நிலையில் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அப்போது நேரம் நெருங்கியது தமக்குரியவற்றை செய்தார்கள்.

அங்கே தமது விநியோகத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்கு செல்வதற்காக ஒவ்வொரு தயார் படுத்தலை ஒவ்வோர் முனையிலும் இருந்து செயற்படுத்தத் தொடங்கினார்கள்.

ஆனால், அன்று இராணுவ நெருக்கடிகள், துரோகத்தின் கொலை வெறிபிடித்த பார்வைக்கும் மத்தியில் ஓரளவு சீராக தம் போரியல் திரவியங்களை (வழங்களை) தென் தமிழீழத்தின் ஓர் பகுதியில் தரவிறக்கம் செய்துவிட்டு கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலினியன்) தலைமையில், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விநியோகப்பிரிவுப் போராளிகள் வன்னி நோக்கி தமக்கு உரிய இடத்திற்கு செல்ல தொலைத்தொடர்பின் மூலம் வருகையை அறிவித்து விட்டு புறப்படத் தயாரானார்கள்.

ஏனைய விடை கொடுத்த விழிகள் கடலைப் பார்ப்பதும் வருவதுமாய் இவர்களின் பயணத்தின் திசையைப் பார்த்தவண்ணம் இருந்தது அந்த சீரற்ற காலத்தில் பல ஏக்கங்களுடன்…… ஆனால், அங்கே குறிப்பிட்ட மணித்தியாலத்தில் சேரும் இடத்தைத் தாண்டவுமில்லை, நேரம் வழமையை விட அதிகரித்து சென்றது தொடர்பை எதிர்பார்த்த மனங்கள் பலதை எண்ணி ஏங்கித் தவித்த வண்ணம் இருந்தன.

அவர்களின் பயணத்தின் போது………………………

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை – நகர்வுகளை 2004ம் ஆண்டிற்கு பின்னர் சிறிலங்கா அரசுகளுடன் இணைந்து துரோக சக்திகளும் (துரோகி கருணா குழு) முடக்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பல முடக்க வேலைகளையும் – மூட்டுகட்டைகளையும் தரைவழியாக கடமைகளை மேற்கொண்ட போராளிகளுக்கு செய்து வந்த துரோக சக்திகள் அன்று கடற்புலிகளின் வரலாற்றில் மாபெரும் துரோகத்தை விதைத்து பல விழுதின் வேர்களை அந்த கரை மணலில் சாய்த்தார்கள்.

அப்போது அந்த போராளிகளின் படகை துரோகிகள் (துரோகி கருணா குழு) சூழ்ந்து, போராளிகளை நிராயுத பாணிகளாக கைது செய்து கரையில் கொண்டு சென்றார்கள். அதிலும் சில பழகிய முகங்கள் அங்கு துரோக சக்தியாக மனம் தாங்குமா? ஆயினும் அனைத்தையும் கடந்து அவர்கள் துரோகிகள் எம் விடுதலைக்கு எதிராகவே அவர்கள் கரங்களில் ஆயுதங்கள் ஆயினும் போராளிகள் அடிபணிவதாக இல்லை. அப்போது மறு திசையில் இவர்களின் வரவை அவதானித்தும் காத்திருந்த குரல்கள் தொடர்பலை இவர்களின் தொலைபேசியில் கூவிய வண்ணம் இருந்தது.

இங்கே துரோகிகள் புடைசூழ போராளிகளின் கைகள், கால்கள் கட்டபப்ட்டு விசாரணை ஆரம்பமாகியது.

எங்கிருந்து வருகின்றீர்கள்?

எங்கே செல்கின்றீர்கள்?

எங்கே எத்தனைபேர் என புதிய திட்டங்கள் மாற்றங்கள் விபரங்கள் போன்றவற்றை அறியும் முனைப்புடன் தொடுத்தார்கள் விசாரணையை….

ஆயினும் போராளிகளின் வாய்கள் மௌனம் காத்தன.

பொறுமையிழந்த துரோகிகள் கோழைத்தனமான (சித்திரவதை) தாக்குதலை தொடுத்தார்கள். (அதை இங்கே எழுத்துருவில் வடிக்கும்போது என் கண்களே பனிக்கின்றது) குருதி தொய்ந்து வலிகள் தொடர்ந்தாலும்…., முன்னைய காலத்தில் ஒன்றாக ஓர் அணியில் இருந்து ஓர் தட்டில் உணவுண்டு பழகிய நட்புகள் இளைத்த துரோகம் இன்னும் வேதனையை கூட்டியது அப்போது…………

தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் உயிர் காக்கப்பட வேண்டும் அவர்கள் மூலம் தொடர்ந்து தங்களின் பணி தொடரவேண்டும் என்ற மனநிலையில் அங்கும் அவர்கள் போராட்ட மரபைக் கடைப்பிடித்து மெல்ல மெல்ல உயிரும் விட்டு பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது………..

ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த சக தோழர்கள் – சகோதரன் சாவதைப் பார்ப்பது எவ்வளவு கொடுமை அதுவே அங்கே…………. துரோகியால் கட்டையால் அடித்து அடித்தே ஓர் வீரனை சாகடித்தனர் அவனது உயிரும் அந்த அலைவந்து தாலாட்டும் கரை மண்ணில் கடலைப் பார்த்தவண்ணம் உயிர் பிரிந்து அவன் சாய்த்து சருகாகி விழுந்து போனான். எந்த ஒரு வைர நெஞ்சமும் கலங்கும் படி அங்கே நடந்த சம்பவம் ஏனையவன் மேல் துரோகிகளின் கோழைத்தனம் பாய்வதற்கு கைது செய்யப்பட்ட போராளிகளின் படகின் கட்டளை அதிகாரியின் முன் தொலைத்தொடர்பை வைத்து யாரையாவது இங்கு அழை என கூறினார்கள்.

அப்போது, கட்டளை அதிகாரி தன்னுடன் விடுதலைக்காக வேண்டி உழைத்தவன் இந்த கோழைகளினால் மற்றைய தோழன்போல் சாகடிகக்ப்படுவதா? என சற்று காலநிலை மாற்றத்துடன் கூடிய அந்த கடற்காற்றுடன் கலந்து இவரின் குரலும் மறுதிசையில் ஒலித்தது. ஆயினும் சில பின்னணி சத்தங்களை வைத்து ஊகிப்பார்கள் என அவர் நினைத்தார். ஆனால் அங்கு இயற்கையும் அவர்களுக்கு இசைவாகவே இருந்தது. ஆதலால் காத்திருந்தவர்களால் ஊகிக்க முடியவில்லை. துரோகிகள் அவர்களை படகின் இயந்திரம் பழுதடைந்தது விட்ட ஓர் மாயத்தை தோற்றுவித்து கதைக்கக் வைத்தார்கள். நாம் அன்றைய காலநிலையில் கடமைகள் செய்யும் பிரதேசம் எமக்கு சாதகம் அற்ற பிரதேசம். ஆதலால் சற்று வேகமாகவும் துரிதமாகமும் முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் குறிப்பிட்ட இடத்திலிருந்து இவர்கள் கூறிய இடத்துக்கு செல்ல சற்று வேகம் கூடிய படகே தேவை ஆதலால் அப்போது கரும்புலிப் படகு மட்டுமே புறப்படுவதற்கு தயார் செய்தார்கள். கரும்புலிப் படகு கடலின் குறுகிய பரப்பில் எதிரியின் அவதானிப்பு இல்லை என்று உறுதிப்படுத்திவிட்டு படகின் வழமையான திசைக்கு கருவிமூலம் அறிந்து அங்கே விரைந்தார்கள் அங்கே…………….

கரையில் எமது படகு இருப்பதை அறிந்து கரும்புலிப் படகு கரைநோக்கி தொலைத்தொடர்பில் அறிவித்த படி மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது. ஆயினும் படகின் அமைதி ஓர் சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. துரோகிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட தயாரானார்கள். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மறுகணம் ஓர் புத்தரின் (பற்றைக்குள்) மறைவில் இருந்து கரும்புலிப் படகை நோக்கி R.P.G ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி கூவிவந்தது. உடனே லாபகமாக திருப்பி நிலையை உடனே உணர்ந்து வேகம் கூட்டி உயரப் பறந்தது கரும்புலிப் படகு. ஆயினும் அதிலிருந்தவர்கள் விழிகள் ஓர் திசையில் எம் வீரர்கள் கைது செய்யப்பட்டும், ஓர் உடல் சாய்த்தும் கிடப்பதை அவதானித்து நிலைமையை அறிவித்துக் கொண்டு சென்றது.

அப்போது கரும்புலிப் படகில் இருந்து அறிவிக்கப்பட்டது………….

நாங்க…………… நாங்கள் உயர நல்லா இழுக்கிறோம்……………….

இழுக்கிறோம் ஆக்களை நீங்க…………………. வந்தால் சாத்தலாம்…….

உடனே துரோகிகளின் சில படகுகள் எங்கிருந்தோ வந்து அவர்களை தொடர்ந்தது அப்போது கரும்புலிப் படகு உயரப்பறந்ததின் காரணம் அவர்களை உயர இழுத்து செல்ல மறு முனையின் இருந்து எம்மவர்களின் படகு வந்து ஓர் களம் விளையாடும் திட்டத்தில்………..

இல்லை…………… இல்லை………….. இப்ப வேண்டாம்………………

நிலைமை சரியில்லை………………. சற்று விளங்கும் தானே நிலைமை………………

சண்டைக்கு ஓர் அனுமதியும், ஓர் களத்தித் திறக்கவும் உத்தரவை வேண்டிக் காத்திருந்தார்கள்.

ஆனால் அது எமக்கு சாதகமற்ற சூழ்நிலையும் – இடமும் அந்நேரம் என்னதான் செய்வது……………………….?

அவர்களின் இறுதித் தருணத்தில் கூட பதில் கூற முடியாதவர்களாய் நாங்கள் அன்று இருந்தோம்.

பின்பு கரும்புலிப்படகு கடலில் திசைமாற்றி சென்று அவர்களின் கண்ணில் இருந்து மறைந்து சற்று மணித்தியாலம் கழித்தே தளம் வந்து சேர்ந்தது.

ஆத்திரமும் – குரோதமும் நிறைந்து அவர்களை இப்படியாக அடித்தே அந்த அலைகடல் மணலில் சாய்த்தனர் துரோகிகள். அதில் இதுநாள் வரையில் அருகாய் இருந்த எங்கள் கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலியன்), கடற்கரும்புலி கப்டன் இயல் வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விலைமதிப்பற்ற செல்வங்கள் ஆயிரம் கனவுகளுடன் பூவின் வாழ்வுபோல் உதிர்ந்து போனார்கள்."

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

கருணா குழுவினர் நடாத்திய மற்றொரு வஞ்சகம்

24.08.2006 அன்று மட்டக்களப்பில் 

அ. ம. இசைவழுதி எழுதிய கடற்கரும்புலி கப்டன் இயல்வாணனின் வரலாற்றிலிருந்து...

எம்மையழிக்க எதிரியுடன் கூடி நின்று, இறுதிவரை அவனுடன் கூடவிருந்து, ஈற்றில் எமது போராட்டம் முற்றாக அழிக்கப்படக் காரணமாயிருந்த இனத்துரோகிகளை தமிழினம் மறக்கப்போவதுமில்லை, மன்னிக்கப்போவதுமில்லை. இத்துரோகிகளின் சந்ததிகளும் இவர்களது துரோகத்தின் பெயரைக் காவிக்கொண்டிருக்கும்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
17 hours ago, ரஞ்சித் said:

இத்துரோகிகளின் சந்ததிகளும் இவர்களது துரோகத்தின் பெயரைக் காவிக்கொண்டிருக்கும்!

காலகாலத்திற்கும் காவுவார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

விதவைப் பெண்ணை வதைத்துக்கொலை செய்த கருணா கும்பல்

அது கருணா விதைத்துவிட்டிருந்த கிழக்கு பிரதேசவாதம் தலைவரித்தாடிக் கொண்டிருந்த காலகலட்டம். மட்டக்களப்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் நடமாடித் திரிந்து கொண்டிருந்தார்கள்.

கருணா குழுவினரோ வெலிகந்தைப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா இராணுவத்தினருரின் முகாம்மகளிலும் முகாம்களை அணடிய பிரதேசங்களிலும் களம் அமைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு ஜனநாயக அரிதாரம் பூசிக்கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பிள்ளையான், சித்தா, யோகன், இந்துஜன், மார்க்கன், மங்களன், சின்னத்தம்பி, இனிய பாரதி, சீலன் போன்ற பிரமுகர்கள் அந்தக் காலகட்டத்தில் கடத்தல்கள், கப்பம் பெறும் நடவடிக்கைகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், படுகொலைகள் என்று ஒரு கூலிப்படையை விட கேவலமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில்தால் யாழ்பாணத்தைச் சேர்ந்த அந்த விதவைப் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை என்ற கிராமத்தில் இரண்டு சிறு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சுதா என்ற இளம் விதவை இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.

கருணா குழு என்றும் பிள்ளையான் குழு என்றும், ரீ.எம்.வி.பி. என்றும் அழைக்கப்பட்ட குழுவே அந்தப் படுகொலையைச் செய்ததாக அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் பேச்சடிபட்டது.

அந்தப் பெண் பிள்ளையானின் சகாவான மங்களன் மாஸ்டர் என்பவரால் கடத்திச் செல்லப்பட்டு தீவுச்சேனையில் இருந்த ரீ.எம்.வி.பி. முகாமில் வைத்து 5 காடையர்களால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டாதாக இணையத்தளங்களில் செய்தியும் வெளியாகியிருந்தன.

அந்தப் பெண்ணை கடத்திச் செய்யமுற்பட்டபோது அந்த கடத்தலைத் தடுக்கச் சென்ற ரவீந்திரன் என்பவரும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://tamilnews.com/2023/05/26/eastern-region-plaintiffs-who-killed-a-jaffa-widow/

  • Sad 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.