Jump to content

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு தமிழ் செல்வன் படுகொலையில் கருணாவின் பங்கு. ஆனால், இங்கு எதுவித ஆதாரமும் கொடுக்கப்படவில்லையே.  ரஞ்சித்தின் ஊகங்கள் வரலாற்று ஆவணம் ஆகமுடியுமா?

 

Link to comment
Share on other sites

 • Replies 578
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

கருணா இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த நாடகம் தொடர்பாக இலங்கையரசோ அல்லது பிரித்தானிய அரசோ சொல்லும் நாடகபாணியிலான விளக்கங்களை அபடியே நம்புமளவிற்கு தமிழர்கள் ஒன்றும் மூடர்கள் கிடையாது. ஆனாலும்கூட, தமிழர்களின் "அரசுகளை நம்பி ஏமாறும் " தன்மையே இவ்வாறான புரட்டுக்களை அவர்கள் நம்பும் நிலைமைக்கு இட்டுச் செல்கிறது. தம்மை ஒடுக்கிவரும் சிங்கள அரசும், அதற்குத் துணைபோகும் முன்னாள் ஆக்கிரமிப்பு இங்கிலாந்து அரசும் இந்நாடகம் தொடர்பாக செய்திச்சேவைகளில் வெளியிட்டுவரும் செய்திகளை அப்படியே நம்பும் அளவில் பெரும்பாலான தமிழர்கள் இருப்பதும், இச்செய்திகளின் நம்பகத்தன்மைபற்றி கேள்வியெழுப்பாமலேயே அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஒரு சசாபக்கேடுதான். கருணா விடயத்தில் பிரித்தானிய - இலங்கை அரசுகள் ஆடிய நாடகமும், அதனை தமிழர்கள் நம்பிய விதமும் தமிழர்களுக்குப் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை அன்று அவர்கள் உணரவில்ல என்பதையே காட்டுகின்றது.

தமிழர்களை முட்டாள்களாக்கி, அவர்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளரை இலக்குவைத்துக் கொல்லும் நடவடிக்கை உட்பட பல நாசகார செயற்பாடுகளுக்காகவே  கருணா லண்டனுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார் என்பது தமிழருக்கு அன்று தெரியாமல்ப் போய்விட்டது. ஆனால், புலிகளை நன்கு அறிந்துகொண்ட பலருக்கு, செய்மதி தொழிநுட்பத்தினைப்பாவித்து இலக்குவைக்கும் செயற்பாடுகளை முறியடிக்கும் செயற்பாடுகளை புலிகள் நிச்சயமாகத் தமது தளப்பகுதிகளில் ஆரம்பித்திருப்பார்கள் என்பது புரிந்திருக்கும். இதன் ஒருபடியாக, புலிகள் தமது உயர் தளபதிகளின் பெயர்களைத் தொலைத் தொடர்புகளின்போது பாவிப்பதனை நிறுத்திவிட்டார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. 

கருணாவின் பிரித்தானிய நாடகத்தில் இன்னொரு பாகமும் இருக்கிறது. அதாவது, ஏற்படப்போகும் போரில், புலிகள் வென்று, தனியீழத்தினைப் பிரகடணம் செய்யும் நிலை உருவானால், கருணாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி அவருக்கெதிரான மனிதவுரிமை மீறல்களைத் தாக்கல் செய்வதென்றும், அவ்வழக்கில் தோன்றும் கருணா, தனது வாதமாக புலிகளின் தலைமையினால் நிகழ்த்தப்பட்டதாகப் பட்டியலிடும் மனிதவுரிமை மீறல்களைக் கொண்டு புலிகளின் தலைமையினை இலக்குவைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடலாம் என்பது. புதிதாக பிறக்கும் தமிழரின் நாட்டின் தலைமை மீதான சர்வதேசத்து பிடிவிராந்து என்பதை இந்திய ஹிந்து முதற்கொண்டு பல சர்வதேச பத்திரிக்கைகள் பிரச்சாரம் செய்யும் என்பதும் ,  இதன்மூலம், ஐ நா வின் படையொன்றின் தமிழர் பகுதிமீதான கட்டாய பிரசன்னம் தமிழருக்கு நிச்சயம் சாதகாமனாதாக இருக்காதென்பதும் இத்திட்டத்தின் இன்னொரு அங்கமாக இருக்கலாம். 


போர்க்குற்ரவாளிகளின் அரசின் நாசகார செயற்திட்டத்திற்கான தனது ஆசீரினை இன்று வழங்கிவரும் ஐ நாவின், "கருணாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றும்" நாடகத்திற்கு அப்பாவித்தமிழர்களின் ஆதரவும் நிச்சயம் இருக்கும். தான் அங்கத்துவம் வகிக்க விரும்பாத  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் தம்முடன் ஒத்துழைக்காத மக்கள் தலைவர்களை தண்டித்துவரும் போலி மனிதவுரிமைவாதிகளான அமெரிக்க - பிரித்தானியர்களின் உண்மையான மனிதநேயம் எபது நகைப்பிற்கிடமானது. 

தமிழர்களைப் பொறுத்தவரை கருணாவின் பிரித்தானிய நாடகத்தினை தமக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்ப்பதைவிடுத்து, அதனைத் தமது புறங்கையினால் தட்டிவிட்டு கடந்துசெல்வதே சரியானதாக இருக்கும்.

முற்றும்

https://www.sangam.org/2008/01/High_Definition.php?uid=2719

 

32 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தலைப்பு தமிழ் செல்வன் படுகொலையில் கருணாவின் பங்கு. ஆனால், இங்கு எதுவித ஆதாரமும் கொடுக்கப்படவில்லையே.  ரஞ்சித்தின் ஊகங்கள் வரலாற்று ஆவணம் ஆகமுடியுமா?

 

சரியாகத்தான் கஸ்ட்டப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது. தொடர்ந்து முயலுங்கள். 

Edited by ரஞ்சித்
 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆலயப் படுகொலை நடத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம்

Joseph Pararajasingam

ஆக்கம் : தி நோத் ஈஸ்டேன் மந்த்லி நிருபர், தை 2006

ஆங்கிலத்திலும் தமிழிலும் திரு பரராஜசிங்கத்திற்கு இருந்த புலமையின் நிமித்தம், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விஜயம் செய்யும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துச் சந்திப்புக்களிலும், ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தவிர்க்கப்படமுடியாதவராகக் கலந்துகொண்டுவந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் தீவிர விசுவாசியாக அவர் அறியப்பட்டு வந்தது மட்டுமல்லாமல், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்கவேண்டும் என்றும் அவர் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்தார். இவ்விரண்டு காரணங்களில் இரண்டாவதான "வடக்கும் கிழக்கும் இணைந்திருத்தல்" எனும் காரணத்திற்காகவே அவரது எதிரிகள் அவரைக் கொல்லவேண்டும் என்று முடிவெடுத்ததாகக் கருதப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் நத்தார் ஆராதனையின்பொழுது மட்டக்களப்பு மரியன்னை பேராலயத்தில் அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் யாரென்பது பற்றி ஆரம்பத்தில் பல குழப்பங்கள் நிலவின. இவற்றிற்கும் மேலாக, இலங்கையரச பத்திரிக்கைகள் பரராஜசிங்கத்தின் கொலையினை புலிகளே மேற்கொண்டதாக செய்தி வெளியிட்டன. அண்மையில் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் கேட்டுக்கொண்ட நிலையில், பரராஜசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு வாக்காளர்களை வாக்களிப்பில் பங்குகொள்ளக் கேட்டிருந்தார் என்னும் பொய்யினை தமது செய்திக்கான ஆதாரமாக அவை வெளியிட்டன.

ஆனால், பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை பரராஜசிங்கத்தைக் கொன்றவர்கள் ஒன்றில் கருணா குழுவினர் அல்லது ராணுவத்தினராக இருக்கலாம் என்று நம்புகின்றனர். சிலவேளை இப்படுகொலை இவ்விரு பிரிவினரையும் கொண்ட ஒரு குழுவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பரராஜசிங்கம் அவர்கள், கிழக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு முழுமையான ஆதரவினை வழங்கியவர். கிழக்கு மக்களை "வடக்கு எதேச்சாதிகாரத்திற்கு" எதிராக தான் ஒன்றுதிரட்டுவதாக கருணா கூறிவந்த நிலையில், பரராஜசிங்கமோ தொடர்ந்தும் புலிகளின் தலைமைக்கு தனது விசுவாசத்தினையும் காட்டி வந்தார்.

பரராஜசிங்கத்தின் படுகொலையின் மூலம் கிழக்கு மாகாணத்தில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்திருந்த ஏனைய சில தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் பார்க்கப்படமுடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இதைவிடவும் இன்னும் இரு காரணங்களுக்காக கருணாவும், அவரை இயக்குவிக்கும் அரசாங்கமும் பரராஜசிங்கம் கொல்லப்படவேண்டும் என்று விரும்பியதாகக் கருதப்படுகிறது. 

2004 சித்திரை பொதுதேர்தல்களுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம்பெற்று வருவதாகக் கணிக்கப்பட்டதுடன், புலிகளினால் சமாதானப் பேச்சுக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் பல்வேறுபட்ட அரசியல் தலங்கலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி புலிகளால் களமிறக்கப்படும் சாத்தியம் தோன்றியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யக்கூடிய செயற்பாடுகளாக பாராளுமன்றத்தில் தமிழர்களின் நலன்களை முன்னிறுத்திய அரசியல் முன்னெடுப்புக்கள். இலங்கையின் தெற்கை மையமாகக் கொண்டியங்கும் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தொடர்புகள், இலங்கையினுள்ளும், வெளியேயும் தமிழ் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திகளை வெளிக்கொண்டுவருதல் ஆகியவை அடங்கியிருந்தன. ஆக, இதனடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள். 

தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சர்வதேச மயப்படுத்துதலில் முன்னின்று செயற்பட்டு வந்தவர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். கூட்டமைப்பின் மிக மூத்த உறுப்பினராக அவர் இருந்தாலும்கூட, கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு, புலிகளின் தலைமைக்கு மிகவும் விசுவாசமாக அவர் இருந்தமையினால் அவர் மற்றைய உறுப்பினர்களைக் காட்டிலும் தனித்தன்மையுடையவராக விளங்கினார்.  மட்டக்களப்பை மையப்படுத்திய கருணாவின் ஆதரவாளர்களால் கூறப்பட்டு வந்த "வடக்கின் மேலாதிக்கத்திற்கு எதிராக செயற்படுதல்" எனும் வாதத்தினை பரராஜசிங்கம் பல அரசியல் தளங்களில் கடுமையாக விமர்சித்து வலுவற்றதாக்கி வந்தார்.

பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்பொழுதே, முதலில் ஐக்கிய தேசியக் கட்சியும் பின்னர் சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசும் சர்வதேச வலைப்பின்னல் ஒன்றுக்குள் புலிகளை முடக்கி, சர்வதேசத்தில் பயங்கரவாதிகள் எனும் பட்டத்தையும், சர்வதேசத் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை உணர்ந்துகொண்ட புலிகளும், தமிழ் மக்களும் இந்த நாசகார நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கத் தலைப்பட்டனர். 

பேச்சுவார்த்தைக் காலத்தினைப் பாவித்து தம்மை சர்வதேசத்தில் தனிமைப்படுத்த சிங்களம் எடுத்துவந்த முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலேயே சர்வதேசத்திற்கு தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கக் கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும்  முழுமையாக உபயோகிக்கத் தொடங்கினர். புலிகளினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அயராத இந்த முயற்சியினாலேயே சர்வதேசத்தில் சிங்கள அரசாங்கம் செய்துவந்த தமிழருக்கெதிரான பலமான பரப்புரைகளின் முனை மழுங்கடிக்கப்பட்டு, இருபக்க நியாயங்களையும் சர்வதேசம் செவிமடுக்கும் நிலை உருவாக்கப்பட்டது. போர்நிறுத்த மீறல்கள், வடக்குக் கிழக்கின் ராணுவப் பிரசன்னம் , உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து விலகப்போவதில்லை என்கிற அரசின் பிடிவாதம், அரசியல் ரீதியிலான அழுத்தங்கள், சுனாமி நிவாரணத்தில் பாகுபாடு என்று பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக சர்வதேசத்திற்கு தமிழர் தரப்பின் நியாயங்களை புலிகளும் கூட்டமைப்பும் முன்வைத்து வந்தன. இவ்வாறான தொடர்ச்சியான பரப்புரைகளினூடாக தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்தான் என்கிற நிலைப்பாடும் சர்வதேசத்தில் மெது மெதுவாக உருப்பெறத் தொடங்கியிருந்தது.
பரராஜசிங்கம் அவர்களின் இரு மொழிப்புலமையும், சரளமான பேச்சும் அவரை பல சர்வதேச ராஜதந்திரிகள் சந்தித்துக் கலந்தாலோசிக்கவும், சர்வதேச தூதரக அதிகாரிகள் சந்திக்கவும் ஏதுவாக்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் நாடுகளில் புலிகளாலும், புலம்பெயர் தமிழர்களாலும் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கலந்துகொண்டு தமிழர் தரப்பின் நியாயங்களையும், அரச பிரச்சாரத்திற்கெதிரான பதிலையும் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்தார். 

Edited by ரஞ்சித்
 • Thanks 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புலிகளாலும் தமிழ் மக்களாலும் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை முயற்சிகள் சித்திரை 2003 இல் புலிகள் பேச்சுவார்த்திகளிலிருந்து வெளியேறியதன் பின்னர், அரசுக்கெதிரான பிரச்சார நடவடிக்கைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தன. அரசாங்கத்தின் தூதுவரலாயங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கெதிராகவும் புலிகளுக்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை சர்வதேசத்துடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலமும், புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரப்புரைகள் மூலமும் புலிகளும் மக்களும் மழுங்கடித்து வந்தனர். புலிகளின் பரப்புரையின் வெற்றியாக இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் போராட்ட அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட சட்டரீதியான அழுத்தங்களை புலிகள் தொடர்பில் தளர்த்தவும் சர்வதேசம் தலைப்பட்டிருந்தது.

புலிகள் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்குப் பயணிக்கவும், சர்வதேச ராஜதந்திரிகளைச் சந்தித்து தமது பக்க நியாயங்களைக் கூறவும் அனுமதியளிக்கப்படும்வரை தமது பிரச்சார உத்திகள் வெற்றியளிக்கப்போவதில்லை என்பதை அரசாங்கம் உணர்ந்துகொண்டது. புலிகளின் இந்த வெற்றிகரமான சர்வதேச பரப்புரைகளை முறியடிக்க அரசாங்கம் இருவகையான நகர்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்தது.

1. கிளிநொச்சியிலிருந்து கொழும்பிற்குப் புலிகள் பயணிப்பதற்கான பயண ஒழுங்குகளில் தடைகளை ஏற்படுத்துவது. இதன்மூலம் கொழும்பினூடாக வெளிநாடு செல்லும் புலிகளைத் தடுப்பது.
 

2. புலிகளை சர்வதேசத்தில் வேண்டப்படாதவர்கள் எனும் நிலையினை உருவாக்கும் வகையில் தனது பிரச்சார உத்திகளை புதிப்பித்தல். 

இதில் முதலவாது இலக்கினை அடைய கிளிநொச்சிக்கும் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான உலங்குவானூர்தி வசதியினை அரசு மறுக்கத் தொடங்கியது.  சர்வதேச மத்தியஸ்த்தர்களின் அழுத்தத்தினால் வேண்டாவெறுப்பாக சில நேரங்களில் இந்த பயண ஒழுங்குகளைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. ஆனால், அண்மையில் புலிகளுக்கும்  ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட சில மோதல்களையடுத்து புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தை அணி வெளிநாடு செல்லும் பயண ஒழுங்குகளை அடியோடு துண்டித்துக்கொண்ட அரசு, தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கூடாக புலிகளின் போராளிகள் பயணிப்பதையும் தடுத்து விட்டது.

இரண்டாவது இலக்கினை அடைய சர்வதேசத்தில், குறிப்பாக மேற்குலகில் புலிகளைத் தடைசெய்வதன் மூலம் அந்நாடுகளில் புலிகளோ அல்லது தமிழர்களோ அரசுக்கெதிராகவும், தமது பக்க நியாயத்தினை முன்வைத்தும் செய்யும் பரப்புரைகளை தடுத்து நிறுத்துவது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாளிலிருந்தே இதற்கான முஸ்த்தீபுகளை அரசு எடுத்து வந்தாலும் முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமரின் கொலையோடு இது முனைப்புப் பெற்றது. இலங்கை அரசு சார்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட ஜயந்த தனபால அவர்களின் கடுமையான பிரச்சாரத்தினாலும், அழுத்தத்தினாலும் புலிகளின் சர்வதேச பயணங்களுக்குத் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்டது.

அதேபோல இலங்கைக்குள்ளும் நோர்வேயின் சமாதானக் குழுவினர் தவிர்ந்த ஏனைய சர்வதேச ராஜதந்திரிகள் கிளிநொச்சிக்குச் செல்வதற்கு இலங்கையரசாங்கம் தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல், கிளிநொச்சிக்குப் போக எத்தனித்த வெளிநாட்டவர்கள் அனைவரும் அரச அனுமதியுடனேயே செல்லமுடியும் எனும் கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது. இந்த நடவடிக்கைகள் அனைத்துமே புலிகளைத் தனிமைப்படுத்த உதவியிருந்தன.

அரசாங்கமும், சர்வதேச சமூகமும் புலிகள் மீதான தடைகளை மாறி மாறி விதித்துக்கொண்டு வந்த வேளையில், இத்தடைகளினால் கட்டுப்படாத பரராஜசிங்கம் போன்றவர்கள் புலிகளின் தலைவர்களால் செல்லமுடியாது போன சர்வதேச மேடைகளுக்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், தமது பக்க நியாயங்கள் குறித்தும் தொடர்ச்சியாகப் பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர். கனடா நாட்டிற்கு அவர் செல்ல எடுத்த முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்த நிலையிலும், அவர் தொடர்ச்சியாக ஏனைய மேற்குலக நாடுகளுக்குச் சென்று பரப்புரைகளை மேற்கொண்டே வந்தார்.
 
பரராஜசிங்கம் போன்றவர்கள், சுயமாக சர்வதேச நாடுகளுக்குச் சென்று, தமிழரின் நியாயங்களையும், சிங்கள அரசின் அக்கிரமங்களையுன் தொடர்ச்சியாக வெளிக்கொன்டுவருவது, புலிகள் மீதான தடையின் வீரியத்தை வெகுவாகப் பாதித்துவிடும் என்று அஞ்சிய அரசாங்கம் பரராஜசிங்கத்தைக் கொல்வதன் மூலம் தமிழருக்குச் சார்பான பரப்புரைகளை நிறுத்துவதுடன், பரராஜசிங்கம் போன்ற ஏனையவர்களுக்கும் ஒரு பாடத்தினைப் புகட்ட நினைத்தது. இதனாலேயே பரராஜசிங்கம் ஆலய ஆராதனையில் ஈடுபட்டிருந்தவேளையில் அரச ஆதரவு கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

One Hundred Tamils - Joseph Pararajasingham

பரராஜசிங்கம் அவர்கள் கொல்லப்பட்டமைக்கான ரெண்டாவது காரணம் மிகவும் பொதுவானது. ஆனால் இந்த அநியாயப் படுகொலையின் விளைவாக உருவாகியிருப்பது மிகவும் ஆபத்தான, விரும்பத் தகாத சூழ்நிலையென்றால் அது மிகையில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து, அதிலும் குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து இலங்கையில் அரசியல் ராணுவ அரங்கில் செயற்பட்டு வந்த சக்திகளின் கூட்டு முயற்சியாக இப்படுகொலை பார்க்கப்படவேண்டியதாகிறது.

கடந்த சில வருடங்களாக சிங்கள அரசாங்கங்கள் தமது ராணுவத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றன. ராணுவத்தினருக்கான சம்பளம் பற்றிய கவர்ச்சியான விளம்பரங்களோ அல்லது நாட்டைக் காக்கும் பணியென்கிற அறைகூவல்களோ சிங்கள இளைஞர் யுவதிகளை ராணுவத்தில் பெருமளவில் இணையும் விருப்பினை இதுவரை ஏற்படுத்தவில்லை. குறைந்தது அரசாங்கம் போரை உடனேயே ஆரம்பிப்பதற்குத் தேவையான குறைந்தளவு எண்ணிக்கையில் கூட அவர்கள் இணைய முன்வரவில்லை. வடக்குக் கிழக்கு மட்டுமல்லாமல் தலைநகர் கொழும்பு கூட போர்க்களமாக மாறலாம் என்கிற நிலையில், ராணுவப் பற்றாக்குறை என்பது அரசைப்பொறுத்தவரையில் பாரிய பிரச்சினையாகவே உருப்பெற்றிருக்கிறது. இதனால், தனக்குச் சாதகமான பிரதேசங்களில் ராணுவப் பிரசன்னத்தினை அதிகரித்து அப்பகுதிகளைப் பலப்படுத்தும் அதேவேளை, கண்மூடித்தனமாக பெருமளவு நிலப்பரப்பினை தனது உண்மையான கட்டுப்பாடின் கீழ் இல்லாமல் வெறுமனே காவல் செய்வதை அது தவிர்க்கவே விரும்புகிறது.

இதன் ஒருபகுதியாகவே கிழக்கில் புலிகளுக்கு எதிராக இயங்கிவரும் கருணா குழுவினரின்மூலம், போராட்டம் கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே கடந்த இரு வருடங்களாக முடக்கப்பட்டுள்ளதை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பார்க்கிறது. ஆனால், இந்த சாதகமான சூழ்நிலையென்பது வடக்கில் புலிகளின் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளாலும், தேர்தல் புறக்கணிப்புக்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது. இதனாலேயே, திருகோணமலையுட்பட கிழக்கு மாகாணத்திற்குள் தமது அரசியல் ராணுவச் செயற்பாடுகளை விரிவாக்குவதுடன், வடக்கு நோக்கிய தமது ராணுவ நடவடிக்கைகளை தற்போதைக்கு ஓரத்தில் போட்டுவிடலாம் என்று அரசாங்கம் நினைப்பதுபோலத் தெரிகிறது.


இதன் ஒரு அங்கமாகவே கிழக்கு மாகாணத்தை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தனது அனைத்துச் சக்திகளையும் அரசாங்கம் முடுக்கிவிட்டிருக்கிறது. இதற்காக கருணாவையும், அவரது ஆதரவாளர்களையும் தனது ராணுவத்தினருடன் சேர்த்து கிழக்கு மாகாணம் முழுவதையும்  தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் நடவடிக்கையில் அது தன்னை தீவிரமாக ஈடுபடுத்தியிருப்பது தெரிகிறது. இந்த நடவடிக்கைகளில் மட்டக்களப்பு வாவியின் மேற்கில் அமைந்திருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரையிலிருந்தும் புலிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் அடங்கும் என்பதும் தெரியவருகிறது.

தற்போதைய நிலவரத்தின்படி மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் ராணுவத்தின் 23 ஆம் படைப்பிரிவே நிலைகொண்டிருக்கிறது. சில பிரதேசங்களில் ராணுவத்தினரின் பிரசன்னமே காணக் கிடைப்பதில்லையெனும் அளவிற்கு ராணுவத்தினரின் அளவு குறைவாகவே காணப்படுகிறது. இதேபோல திருகோணமலை - மணலாறு பகுதியினை 22 ஆவது டிவிஷன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், வடக்கிலோ விசேட படைகளின் 53 ஆவது டிவிஷன் அடங்கலாக 6 டிவிஷன்கள் நிலைவைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கினை முற்றாக மீட்கும் நடவடிக்கையில் வடக்கில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினரின் ஒரு பகுதியினர் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. வடக்கில் புலிகளுக்கெதிரான ராணுவத்தினரின் நடவடிக்கைகள் மந்தகரமான நிலையினை அடைந்திருக்கும் நிலையில், இவர்களை கிழக்கில் நகர்த்துவதன் மூலம் கிழக்கை முற்றாக மீட்கலாம் என்று அரசு எதிர்ப்பார்க்கிறது. 

இப்படியான எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் வெறுமனே ராணுவத்தினரால் மட்டுமே மேற்கொள்ளப்படக் கூடியதல்ல. கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக புலிகளுக்கெதிரான போரில் குறிப்பிடத் தக்களவு வெற்றிகளைப் பெற்றிராத ராணுவத்தைக் கொண்டு, கிழக்கினை முற்றாக மீட்கலாம் என்று அரசு நம்புவதாகத் தெரியவில்லை. அதனால், ஆப்கானிஸ்த்தான் ஈராக் ஆகிய நாடுகளில் பிரதேசங்களை மீட்க அந்நாடுகளில் பொம்மை அரசுகளை அமெரிக்கா உருவாக்கியது போல, கிழக்கில் தனது பொம்மை அரசொன்றை உருவாக்கி, அதன் உதவியுடன் கிழக்கினை மீட்கலாம் என்று அரசு கருதுவது தெரிகிறது. இதனாலேயே கருணாவையும் அவரது ஆதரவாளர்கலையும் முன்னிறுத்தி கிழக்கின் தலைவர்கள் என்று காட்டியும், மக்கள் ஆதரவுகொண்ட, செல்வாக்குள்ள, புலிகளுக்குச் சார்பான தலைவர்களைக் களையெடுத்தும், கிழக்கில் புலிகளின் பிரசன்னத்தை சிறிது சிறிதாக அழிக்க கங்கணம் கட்டியிருக்கிறது.  இந்த களையெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஜோசேப் பரராஜசிங்கத்தின் படுகொலை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரை தமது உறுப்பினர்கள் கொல்லப்படப்போவது இதுவே முதலாவதாகவும் இறுதியானதாகவும் இருக்காது என்பது வெளிப்படை.

 

 

Edited by ரஞ்சித்
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், வடக்கிலிருந்து கிழக்கினை முற்றாக பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை கருணாவையும் அவரது ஆதரவாளர்களையும் முன்னிறுத்தி அரசு மேற்கொண்டுவருகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் அனுசரணையுடன் இணைக்கப்பட்ட இம்மாகாணங்களை பிரிக்கும் முன்னர் இந்தியாவின் அனுமதி பெறப்படவேண்டும் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. வடக்கிலிருந்து கிழக்கினை நிரந்தரமாகப் பிரிப்பதன் மூலம் கருணாவுக்கான அரசியல் பலத்தினை கிழக்கு மக்களிடையே அதிகரிக்கலாம் என்று கருதும் அரசு, இப்பிரிப்பினூடாக அதாவுள்ளாவுக்கு ஆதரவான முஸ்லீம் ஆயுதக் குழுக்களையும் தமது நடவடிக்கைக்குப் பயன்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கிறது. 

WikiLeaks: Pararajasingham And Raviraj Killings; Karuna And Douglas Killing MPs - EPDP Vigneswaran To US - Colombo Telegraph

கிழக்கு மாகாணம் முற்றாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தனது பிணாமிகளான கருணா, டக்கிளஸ், வரதர் அணி, முஸ்லீம் அமைப்புக்கள்  ஆகியவற்றின் மூலம் தனது சிங்கள பெளத்த அரச அதிகாரத்தை கிழக்கில் முற்றாக நிறுவிவிடலாம் என்று அரசு எதிர்பார்க்கிறது.

கிழக்கில் தனது அதிகாரத்தை நிலைப்படுத்தும் ஒரு அங்கமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதும் அடங்கும். வடக்கில் மாகாணசபை சிறப்பாக இயங்காத போதும், கிழக்கில் அதன் செயற்பாடு சிறப்பானதாக இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆகவே, கிழக்கு தனித்து இயங்கவேண்டும் என்கிற கோஷத்தை கருணா போன்றவர்களைப் பாவித்து அரசு முன்வைக்கக் கூடும். பின்னர் வடக்கிலும் டக்கிளஸை முன்னிறுத்தி, மாகாணசபையினைக் கைப்பற்றுவதன் மூலம் தனது அதிகாரத்தை அங்கும் பரவலாக்கும் கைங்கரியத்தில் அரசு இறங்குவதற்கான சாத்தியமும் இருக்கிறது.

அரசின் இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பரராஜசிங்கம் போன்றவர்கள் எப்போதுமே ஒரு தடைக்கல்லாகவே இருந்துவந்துள்ளனர். புலிகளின் தீவிர ஆதரவாளராக அவர் இருந்தது மட்டுமல்லாமல், வடக்குக் கிழக்கும் இணைந்த பிரதேசமே தமிழரின் பூர்வீக தாயகம் எனும் கோட்பாட்டில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்ததுடன், அதற்காகத் தொடர்ச்சியான பரப்புரைகளையும் அவர் முன்னெடுத்து வந்திருந்தார். 

இதனாலேயே அவர் கொல்லப்படவேண்டும் என்று அரசும் அரசுக்குச் சார்பான கருணா குழுவும் முடிவெடுத்தன.

8ac6e2134cc2a7a1931112c942c17e7a_XL.jpg

முற்றும்

https://sangam.org/taraki/articles/2006/01-02_Real_Reasons_Behind_Murder_in_the_Cathedral.php?print=sangam

 • Thanks 3
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஒரு மனநோய் பிடித்த சர்வாதிகாரி, ஒரு துரோகி - கருணா தெரிவிப்பு

செய்தி :கல்ப் நியூஸ் பத்திரிக்கை
திகதி : ஐப்பசி 8, 2004

தனது பரம வைரியான புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு மதம்பிடித்த சர்வாதிகாரியென்றும், துரோகியென்றும் கருணா தெரிவித்திருக்கிறார்.

சுமார் ஒருவாரத்திற்கு முன்னர் புலிகளின் பிஸ்ட்டல் குழுவினரால் தனது சகோதரரான ரெஜி கொல்லப்பட்டத்தை உறுதிப்படுத்திய கருணா, தனது சகோதரர் பிரபாகரனின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராகவும், அவரது ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் போராடி  வீரமரணம் எய்தியிருப்பதாக  கூறினார்.

  
லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலியொன்றிற்குப் பேட்டியளித்த கருணா, தான் இன்னமும் இலங்கையிலேயே தங்கியிருப்பதாகவும், தனது சகோதரரின் மரணத்தினையடுத்து தனது ஆதரவாளர்கள் எவரும் துவண்டுபோய், பிரபாகரனுக்கெதிரான தமது எழுச்சிமிகு போராட்டத்தைக் கைவிடக் கூடாதென்றும் கேட்டுக்கொண்டார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமக்கு சவாலாக மற்றிவிடுவார்கள் என்கிற காரணத்தினால் கருணா குழுமீதான தமது நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்திவருவதாகத் தெரிகிறது.

Col” Karuna's Eastern Tiger Revolt Against LTTE Chief Prabhakaran. - Recomended News | Daily Mirror

"பிரபாகரனின் சர்வாதிகாரத்திற்கெதிராகவும், பாஸிச வெறிக்கெதிராகவும் போராடும்படி நாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். அதனாலேயே நாம் பலத்துடனும், தீரத்துடனும் போராடி வருகிறோம். எனது சகோதரரின் இழப்பினையடுத்து நாம் பின்வாங்கிவிடப்போவதில்லை" என்று அவர் கூறினார்.

"நான் எனது மக்களிடம் பிரபாகரனின் பயங்கரவாதப் படைகளுக்கெதிராகப் போராட ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரபாகரனினால் செய்யப்பட்டுவரும் பாரிய படுகொலைகளையும், மனிதவினத்திற்கெதிரான குற்றங்களையும் தடுத்தி நிறுத்திட தமிழ் இளைஞர்கள் என்னுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று நான் அறைகூவல் விடுக்கிறேன்" என்றும் அவர் மேலும் கூறினார்.

"நிச்சயமாக பிரபாகரனினால் எமது மக்களுக்கு தேவையான தீர்வினைப் பெற்றுத்தரமுடியாது என்பது எனக்குத் தெரியும். அவரைப்பொறுத்தவரை அவரது பெயரும் புகழும்  மக்களின் நலனைக் காட்டிலும் முக்கியமானது. அவர் தன்னை ஒரு பெரிய தலைவராகவும், தேசியத் தலைவராகவும் பிரகடனப்படுத்தியிருப்பதோடு, தன்னை தமிழர்கள் எல்லோரும் தமிழினத்திற்குக் கிடைத்த ஒப்பற்ற தலைவராகப் போற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தனது இனத்திலேயே பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலைசெய்துவரும் ஒரு பயங்கரவாதி தன்னை எப்படி அவ்வினத்தின் தேசியத் தலைவர் என்று உரிமை கோரமுடியும்?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

SRI LANKA'S TOP TAMIL TIGER LEADER VELUPILLAI PRBHAKARAN AND FORMER HEAD OF THE EASTERN FACTION OF THE TAMIL TIGER REBELS VINAYAGAMOORTHI MURALITHARAN, ALSO KNOWN AS KARUNA TALKS AT A NEWS CONFERENCE. Sri

பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான விசுவாசியாக பல்லாண்டுகள் இருந்துவந்த கருணா, புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவிலும் ராணுவத் தளபதி என்கிற என்கிற ஸ்தானத்துடனேயே பங்குகொண்டிருந்தார். ஆனால், கடந்த பங்குனி மாதம் கிழக்கு மாகாணப் போராளிகள் புலிகளால் சமமாக மதிக்கப்படுவதில்லையெனும் குற்றச்சாட்டை முன்வைத்து பிரபாகரனின் தலைமைத்துவத்தை ஏற்கமறுத்து கருணா செயற்பட ஆரம்பித்ததையடுத்து அவரும் அவரது சகபாடிகளும் புலிகளியக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். 

karuna-and-vp.jpg?ssl=1

கருணா மேலும் கூறும்போது, "தமிழினத்தில் பல அரசியல்த் தலைவர்களையும், கல்விமான்களையும் கொன்றிருக்கும் பிரபாகரன் அவ்வினத்தின் தலைவர் என்று தன்னை எப்படி அழைத்துக்கொள்ளமுடியும்" என்றும் வினவினார்.

https://gulfnews.com/world/asia/karuna-calls-prabhakaran-a-mad-dictator-and-a-traitor-1.334990

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்,  அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் பதினெட்டுப் புலிகளோடு கொல்லப்பட்டார் - கருணா

ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ்
மே 20, 2009

Vinayagamoorthy Muralitharan / Colonel Karuna Amman | Flickr

பிரபாகரனுக்கு மிகவும் நெருங்கியவரும், பல்லாண்டுகளாக அவரால் வளர்க்கப்பட்டவரும், பின்னர் புலிகளியக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவருமான   கருணா, பிரபாகரனின் மரணம் பற்றித் தெரிவிக்கும்போது, பிரபாகரனும் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் 18 மெய்ப்பாதுகாவலர்களும் இராணுவத்தால் மடக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறினார். கொல்லப்பட்டது புலிகளியக்கத் தலைவர் பிரபாகரன் தான் என்பதை அடையாளங்கண்டு உறுதிப்படுத்திய வெகு சிலரில் கருணாவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

What did Karunanidhi do for Tamil Eelam? - Quora

கருணாவினால் புலிகளின் தலைமைக்கு எதிராக 2004 இல் நடத்தப்பட்ட கிளர்ச்சியே புலிகளை முற்றாகப் பலவீனப்படுத்தி அழிக்கும் நிலைக்குக் கொண்டுவந்தது குறிப்பிடத் தக்கது. 

புலிகளின் தலைவரின் மரணம் பற்றி மேலும் பேசிய கருணா, "புலிகள் அமைப்பு இனி ஒருபோதுமே எழுந்துவரமுடியாது, அவர்களை முற்றாக அழித்துவிட்டோம்" என்றும் கூறினார்.

தற்போது இலங்கை அரசாங்கத்தில் தேசிய நீர்ப்பாசண அமைச்சராகவும், நல்லிணக்க அமைச்சராகவும் இருக்கும் கருணாவுக்கு நந்திக்கடல்ப் பகுதியில் கொல்லப்பட்டுக்  கிடந்ததது ஒருகாலத்தில் தனது தலைவனாகவும் ஆசானாகவும் இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் என்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லையென்று தெரிகிறது.

Nude Dead body of the Prabhakaran – D'LIVE

"முன்னர் நான் பார்த்த பிரபாகரனுடன் ஒப்பிடும்பொழுது, அவர் தற்போது சற்று மெலிந்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அவர் முன்பிருந்ததைப் போலவே இருந்தார். அவரது முகம், கண்கள், என்று எல்லாமே அவர் பிரபாகரன் தான் என்பதை எனக்குச் சொல்லியது" என்று தொலைபேசியூடாக எங்களுக்கு கருணா கூறினார். 

"பிரபாகரனைக் கொன்ற ராணூவ வீரர்கள் ஆச்சரியப்பட்டதாக அறிந்தேன். ஏனென்றால், பிரபாகரன் தன்னைத்தானே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். பிரபாகரனை அன்று அங்கே அவர்கள் காணுவார்கள் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை" என்று கருணா கூறினார்.

Sri Lanka confirms Tamil Tiger leader is dead | Reuters.com

"பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களுக்கும், ராணூவத்தினருக்குமிடையிலான சண்டை காலை 4 மணிக்கு ஆரம்பமாகியதாகத் தெரிகிறது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற கடுமையான சண்டையினையடுத்து சுமார் கால்நூற்றாண்டாக இலங்கையினை ஆட்டிப்படைத்த தீவிரவாதி முல்லைத்தீவு வாவியோரத்தில் கொல்லப்பட்டுக் கிடந்தார்" என்று கருணா மேலும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆளும்கட்சியின் உப தலைவராகவும் இருக்கும் கருணா பிரபாகரனின் மரணம் தொடர்பாக மேலும் கூறுகையில் பிரபாகரனின் தலையின் மேற்பாகம் முற்றாகச் சிதைந்தோ அல்லது குண்டுகளால் வெடித்துச் சிதறப்பட்டோ தெரிந்ததாகக் கூறினார். 

அதேவேளை, ராணுவத்தினர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனியையும் அவரின் மூத்த தளபதிகளையும் கொன்றிருந்தார்கள். 

இன்று பிரபலமான அரசியல்வாதியாகத் திகழும் கருணா, புலிகளின் மீளுருவாக்கத்திற்கான சாத்தியப்பட்டுகள் குறித்து நாம் வினவியபோது, "சரணடைந்த புலிகளைக் கொண்டு வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர் புலிகளை மீளுருவாக்க நினைப்பார்கள் என்பது வெறும் கனவேயன்றி வேறில்லை" என்று கூறினார்.

"அது சாத்தியமேயில்லை. அதற்கான சூழ்நிலையோ அல்லது அவசியமோ இனிமேல் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. மக்களுக்கு யுத்தத்தின்மேல் வெறுப்பும், அயர்ப்பும் வந்துவிட்டது. இனிமேல் புலிகள் மீள வருவார்கள் என்பதற்கு எதுவிதமான சாத்தியப்பாடுகளும் நிச்சயமாக இல்லை" என்று மிகவும் உறுதியாகவும், ஆணித்தரமாகவும் அவர் கூறினார்.

Karuna Amman Arrested - YouTube

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கருணா 1983 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதியில் முழுக் கிழக்கு மாகாணத்திற்குமான புலிகளின் தளபதியாக உயர்ந்திருந்தார். பல்லாண்டுகளாக பிரபாகரனின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவராக அவர் இருந்தார்.  2002 - 2003 காலப்பகுதியில் அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட கருணா, 2002 இல் கிளிநொச்சி நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்தார்.

The Clash Of The Tamil Warlords

பிரபாகரனின் மரணத்திற்காக பிரபாகரனையே குற்றஞ்சாட்டிய கருணா, "பிரபாகரனுக்கு யுத்தம்பற்றிய தெளிவு இருந்திருந்தால் இராணூவம் கடந்த ஆண்டு யுத்தத்தை ஆரம்பித்தபோதே தனது போராளிகளையும், பல தளபதிகளையும் வேறு இடங்களுக்கு அனுப்பிவைத்திருக்கமுடியும், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை" என்று கருணா கூறினார்.

"ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. இது அவரது மடைமையினையே காட்டுகிறது. மக்களின் அவலங்களைக் கண்டவுடன் சர்வதேச அசமூகம் யுத்தநிறுத்தமொன்றினை ஏற்படுத்தும் என்றும், தான் தப்பிவிடலாம் என்றும் இறுதிவரை எதிர்பார்த்திருந்தார்" என்று அவர் கூறினார்.

"அவர் ஒரு உண்மையான தலைவராக இருந்திருந்தால், சுதந்திரமான தனிநாட்டுக்கான போராட்டத்தை இன்னமும் கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்திருக்க மாட்டார். அது ஒருபோதுமே சாத்தியமில்லை என்பதை அவர் தெரிந்திருக்க வேண்டும். யுத்தத்தில் ஈட்டிய வெற்றிகளை அரசியல் ரீதியாக அவர் பாவித்திருந்தால் இன்று தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை".

"நான் பிரபாகரனிடமும், தமிழ்ச்செல்வனிடமும் மாறிவரும் உலக ஒழுங்கினை அவதானித்து, புலிகளியக்கமும் சில மாற்றங்களை உள்வாங்கிச் செயற்படவேண்டும் என்று கூறினேன், ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டார்கள்" என்று அவர் கூறினார்.

"இங்கே பிரச்சினையென்னவென்றால், பிரபாகரனைச் சுற்றியிருந்த சிலர் அவரை ஏதோ பெரிய தலைவராகக் கொண்டாடத் தொடங்கியிருந்தார்கள், இதனால் அவரும் தான் பற்றிய அதீத கற்பனைகளை வளர்க்கத் தொடங்கிவிட்டார். அவரை ஒருபோதுமே தோற்கடிக்க முடியாத மாவீரனாக அவர்கள் போற்றத்தொடங்கிவிட்டார்கள். அவர்கள் கூறுவதை நம்பிய அவர் அதே சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டார்" என்று தான் இயக்கத்தில் இருந்த காலத்தில் நடந்தவைபற்றிப் பேசும்போது கருணா கூறினார்.

"தமிழர்களுக்கு இனியிருக்கும் ஒரே வழி ஜனநாயக ரீதியிலான அரசியல்தான். அதைவிட வேறு தெரிவுகள் அவர்களுக்கு இல்லை. எம்மிடம் பலமான பாராளுமன்றக் குழு ஒன்று இருந்திருந்தால் நாம் பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கலாம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு பிரியோசனமும் அற்றது" என்றும் அவர் மேலும் கூறினார்.

"90,000 தமிழர்களையும், 24,000 இற்கும் மேற்பட்ட புலிப் போராளிகளையும் 1983 ஆம் ஆண்டிலிருந்து போராட்டத்தில் பலிகொடுத்தபின்னரும் கூட தமிழினம் இன்னும் நடுரோட்டிலேயே நிற்கிறது" என்று கருணா கூறினார்.

"இந்தளவு இரத்தக்களறியின் பின்னரும் தமிழர்கள் கண்டது என்ன, வெறும் அழிவுகள்தானே?" என்று கருணா பதிலளித்தார்.

https://www.hindustantimes.com/world/prabhakaran-was-with-18-men-when-he-was-killed-karuna/story-UfaVjat36kCwDhBclaajfL.html

Edited by ரஞ்சித்
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

புலிகள் அமைப்பு இனி ஒருபோதுமே எழுந்துவரமுடியாது, அவர்களை முற்றாக அழித்துவிட்டோம்" என்றும் கூறினார்.

இங்க  கொஞ்சபேர்

அவர்  தங்கம்

புலிகளை  அவர் என்றும்  காட்டிக்கொடுக்கவில்லை

அவர்களுக்கெதிரான  யுத்தத்தில் பங்களிக்கவில்லை என்று ஒப்பாரி  வைக்கிறார்கள்

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

புலிகள் அமைப்பு இனி ஒருபோதுமே எழுந்துவரமுடியாது, அவர்களை முற்றாக அழித்துவிட்டோம்" என்றும் கூறினார்.

இங்க  கொஞ்சபேர்

அவர்  தங்கம்

புலிகளை  அவர் என்றும்  காட்டிக்கொடுக்கவில்லை

அவர்களுக்கெதிரான  யுத்தத்தில் பங்களிக்கவில்லை என்று ஒப்பாரி  வைக்கிறார்கள்

 

அண்ணை, அது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களை தாங்களே முன்னின்று கொன்றும், கொல்லவும் உதவியதை எப்படி ஏற்றுக்கொள்வது?

குடும்பிமலை (தொப்பிகல) பகுதியில் அமைந்திருந்த புலிகளின் தளத்தை அழிப்பதற்கு கருணாவே முதலில் தனது போராளிகளை தயார்ப்படுத்தி வந்தார். ஆனால், பிள்ளையான் இடையில் முறித்துக்கொண்டு ஓட, வெறும் 300 சிறுவர்களை மட்டுமே வைத்துக்கொண்டிருந்த கருணாவால் புலிகளின் தளத்தைக் கைப்பற்ற முடியாது என்று உணர்ந்த ராணுவம் அத்தாக்குதல் திட்டத்தினை பிள்ளையானிடமே வழங்கியிருந்தது. ஆனால், தன்னிடமே அந்தத் தாக்குதல் திட்டம் தரப்படவேண்டும் என்று கருணா மங்களன், இனியபாரதி போன்றவர்களை தூதுக்கு மேல் தூதாக அனுப்பி ராணுவத்தினரிடன் இரைஞ்சியதாக ராணுவம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டும்தான். 

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ரஜீவ் காந்தியின் படுகொலையினை திட்டமிட்டு நடத்தியவர்கள் பிரபாகரனும் பொட்டு அம்மானுமே. பிரபாகரனினாலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பின. சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பியபோது நான் மிகவும் மனவேதனையடைந்தேன் - கருணா 

காலம் : சித்திரை 29, 2009

மூலம் : பிரஸ் டஸ்ட் ஒப் இந்தியா & ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ்

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், அவ்வியக்கத்தின் உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானுமே முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தினைத் தீட்டி, இயக்கத்தினுள் எவருமே அறியாவண்ணம் நடைமுறைப்படுத்தினார்கள் என்று புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியும், பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவருமாக இருந்து பின்னர் இயக்கத்திலிருந்து விலகி இலங்கை ராணுவத்தில் இணைந்து தற்போது மகிந்த ராஜபக்ஷவின் அரசில் அமைச்சராகவிருக்கும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

"அவர்கள் இருவரும் , இயக்கத்தில் வேறு எவரும் அறிந்திடாவண்ணம் இந்தப் படுகொலைக்கான திட்டத்தினை வகுத்துச் செயற்பட்டார்கள்" என்று அவர் கூறினார்.

 

புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த கருணா, "நான் எப்போதும் சமாதானத்தையே விரும்பி வந்தேன். பல்லாண்டுகளாக நடைபெற்றுவந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வே சாத்தியமானது என்று முழுவதுமாக நம்பியிருந்தேன். ஆனால், மாயையான உலகில் வாழ்ந்துவந்த பிரபாகரனுக்கு நான் சொல்லிவந்தது  புரியவில்லை" என்று கூறினார்.

"ராஜீவைக் கொல்லும் நாசகாரத் திட்டத்தினை அவர்கள் இருவருமே மிகவும் ரகசியாமத் தீட்டினார்கள். வேறு எவரையும் அவர்கள் நம்பவில்லையென்பதையே இது காட்டுகிறது. எனக்கு இவ்வாறான நாசகாரப் படுகொலைகளில் நம்பிக்கை இருக்கவில்லை, இவ்வாறான அவர்களின் செயல்களை நாம் எப்போதும் எதிர்த்தே வந்திருந்தேன்" என்று இன்று அமைச்சராகவிருக்கும் கருணா பி டி ஐ செய்திச் சேவைக்குக் கூறினார்.

ராஜீவ் காந்தி 1991, மே மாதம் 21 ஆம் திகதி தமிழ்நாடு சிறிபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தவேளை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். அவரைக் கொல்ல உத்தரவிட்டது பிரபாகரனும் பொட்டு அம்மானும் தான் என்கிற முடிவினை கருணாவும் உறுதிப்படுத்தினார்.

1987 இல் இலங்கைக்கு இந்திய ராணூவத்தினரை அனுப்பியதற்குப் பழிவாங்கவே பிரபாகரன் ராஜீவைக் கொன்றார் என்று பரவலாக நம்பப்படுகிறது.

"வன்முறைகளைக் கைவிட்டு, சமாதானத்தில் ஆர்வம் காட்டுமாறும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் நான் அவருக்குத் தனிப்பட முறையில் எழுதிய கடிதத்தை என்முன்னாலேயே கிழித்துப்போட்ட பிரபாகரன், என்னை அவமானபடுத்தினார். புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பியபோது நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். பிரபாகரனின் ஒத்துழைக்காமை எனும் அகம்பாவத்தாலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பின என்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே".

"பிரபாகரன் ஒருபோதுமே இனப்பிரச்சினை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டுமவிடும் என்று நம்பியிருக்கவில்லை. யுத்தத்தினாலும், வன்முறையாலுமே தீர்வு காணலாம் என்று அவர் இறுதிவரை நம்பியிருந்தார். அவர்களின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் கூட எனது நிலைப்பாட்டிலேயே இருந்தார், ஆனால் பிரபாகரன் அவரைக் கூட மதிக்கவில்லை" என்று கருணா கூறினார்.

புலிகளிடமிருந்து விலகி ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட கருணா, தனது குழுவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்னும் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்துகொண்டிருந்தார். ஆனால், அவரின் கீழ் செயற்பட்டுவந்த இன்னொரு ஆயுததாரியான பிள்ளையான் கட்சியின் தலைமைப் பொறுப்பினைக் கைப்பற்றியதையடுத்து கருணா ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணியில் இணைந்துகொண்டதுடன், அக்ககட்சியின் உபதலைவர்களில் ஒருவராகவும் பதவியேற்றார்.

கருணா இலங்கையின் நீர்ப்பாசண அமைச்சராகவும், மீலிணக்க அமைச்சராகவும் பதவிவழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட அதேநேரம், அவரது வைரியான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக அரசு ஆதரவுடன் பதவியேற்றார்.

https://www.hindustantimes.com/world/prabhakaran-pottu-amman-hatched-rajiv-killing-plot-karuna/story-8dfdZvaONlTbBWCv1fFSAP.html

 

Edited by ரஞ்சித்
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களுக்கென்று பிரச்சினை இருக்கவில்லை. புலம்பெயர் தமிழர்களே தாம் தொடர்ந்தும் அந்நாடுகளில் வாழ்வதற்காக பிரபாகரனுக்குப் பணம் அனுப்பி வன்முறையினை வளர்த்துவந்தார்கள் - கருணா

மூலம் : சண்டே ஒப்சேர்வர் மற்றும் ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ்

காலம் : வைகாசி 23, 2010

புலிகளின் முன்னாள் தளபதியும், இந்நாள் அரச அமைச்சருமாக விளங்கும் கருணா எனப்படும் முரளீதரன் அவர்கள் "புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தமக்குள் பிளவுபட்டுப் போயுள்ளதாகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனும் மாயைபற்றி அவர்கள் வெகுவாகக் குழம்பிப்போயிருப்பதாகவும்" கூறியுள்ளார்.

"தமக்குள் ஒன்றுபட்டுச் செயற்பட முடியாத புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தில் இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்துவார்கள் என்பது அறிவீனமானது" என்று மீள்குடியேற்ற அமைச்சரான கருணா தெரிவித்தார். 

2004 ஆம் அண்டில், புலிகள் இயக்கத்தினை இரண்டாக உடைத்துக்கொண்டு வெளியேறிய கருணா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பினை உருவாக்கியிருந்தார். பின்னர் அக்கட்சியும் இரண்டாக உடைந்ததையடுத்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அமைச்சராகவும், அக்கட்சியின் உப தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டார்.

"புலம்பெயர் தமிழர்கள் தமக்குள் மூன்று பிரிவுகளாக உடைந்துபோயிருக்கிறார்கள். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் விஸ்வநாதன் ருத்திரகுமார், நோர்வேயினைத் தளமாகக் கொண்டியங்கும் நெடியவன், இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் இன்னொரு பிரிவினர் என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வொருவரும் தத்தமது சிந்தனைகளில் நாடுகடந்த அரசாங்கம் பற்றிப் பேசுகிறார்கள். தோல்வியடைந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஈழக் கனவுபோல இவர்களின் நாடுகடந்த தமிழீழ அரசுக் கனவும் உடைந்து சுக்குநூறாகிப் போகும்" என்று அவர் மேலும் கூறினர். 

"இலங்கையில் வாழும் தமிழர்களின் சிறியளவு ஆதரவுகூட இல்லாமல் புலம்பெயர் தமிழர்களால் எவ்வாறு ஒரு நாட்டை நிறுவிட முடியும்? தம்மை அழித்ததாற்காகப் புலிப் பயங்கரவாதிகளை இலங்கையிலிருக்கும் தமிழர்கள் வெறுத்து ஒதுக்கியுள்ளார்கள். இலங்கையில் புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான எந்த அமைப்போ அல்லது கட்சியோ தமிழர்களுக்கு என்று தனியான நாடொன்றினை உருவாக்க நினைத்தால் தமிழர்கள் நிச்சயம அவர்களைத் தோற்கடிப்பார்கள்".

"வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் எமது ஜனாதிபதி கெளரவ மகிந்த ராஜபக்ஷ மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தமது கவலைகளுக்கெல்லாம் அவர் தீர்வுகளைத் தருவார் என்று முழுமையாக நம்புகிறார்கள். அவர்களுக்கான அப்விருத்தியென்பது கடந்த 30 ஆண்டுகளாக முன்னைய அரசாங்கங்களினாலும் , புலிகளாலும் மறுக்கப்பட்டிருந்தது" என்று அரச ஆதரவுப் பத்திரிக்கையான சண்டே ஒப்சேர்வருக்கு அவர் தெரிவ்fத்தார்.

"முன்னைய அரசுகளின் தவறுகள் எவ்வாறாக இருந்தபோதும், தமிழர்களின் குறைகளை நீக்கப்போவதாக எமது ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதுமே இலங்கைக்கு வரப்போவதில்லை. தாம் தொடர்ந்தும் அந்த நாடுகளில் வாழ்வதற்காக அங்கிருந்துகொண்டு இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த அவர்கள் முயன்று வருகிறார்கள்" என்றும் அவர் கூறினார். 

"புலம்பெயர் தமிழர்கள் புலிகளின் கைகளில் அல்லற்படவில்லை. புலிகளால் கொல்லப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் இருப்பவர்கள் இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களே. ஆகவே, தாம் தொடர்ந்தும் வெளிநாடுகளில் சொகுசாக வாழ்வதற்காகப் பயங்கரவாதப் புலிகளுக்குத் தொடர்ந்தும் பணம் அனுப்புவதன்மூலம் இலங்கையில் வன்முறைகளை புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் வளர்த்துவந்தார்கள்" என்று கருணா கூறினார்.

புலம்பெயர் தமிழர் பற்றி தொடர்ந்தும் பேசிய கருணா, "ஆனால், சில புலம்பெயர் தமிழர்களுக்கு உண்மை இப்போது தெளிவாகப் புரிந்துவிட்டது. பயங்கரவாதிகளை ஊக்குவித்து, சுகபோகங்களை அனுபவிக்கும் இந்த புலம்பெயர் தமிழர்களிடமிருந்து அவர்கள் தம்மை அந்நியப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். நான் எமது ஜனாதிபதி மகிந்தவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்குடியேற்றம், புணர்வாழ்வு, அபிவிருத்தி ஆகிய விடயங்கள் பற்றி இந்த புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்ச்சியாக கலந்தாலோசித்து வருகிறேன்" என்றும் அவர் கூறினார்.

https://www.hindustantimes.com/world/tamil-diaspora-divided-over-transnational-govt-karuna/story-SCcX4YVMKJ5gi2KmrwXnHK.html


 

 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை வீழ்த்தி, இப்போரில் வெல்வதற்கு நாம் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகிறோம் - கருணா

காலம் : 5, ஆடி, 2008

மூலம் : ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ்

புலிகளை இரண்டாகப் பிளவுபடுத்தி, வெளியேறிச் சென்ற கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் , "பிரபாகரன் தலைமையிலான புலிகள் குழு தற்போது மிகவும் பலவீனமான நிலையினை அடைந்து விட்டது. ஆனால், அவர்களை முற்றாக அழிக்க சில மாதங்கள் ஆகலாம்" என்று கூறியுள்ளார்.

"பிரபாகரனின் புலிகள் குழு தற்போது ஒரு பாதுகாப்பு முன்னரங்கினையே அமைத்துவருகின்றது. அவர்களால் தற்போது வலிந்த தாக்குதல் முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளமுடியாதவாறு மிகவும் பலவீனமான நிலையினை அடைந்திருக்கின்றனர்" என்று அவர் கூறினார்.

"ஆனாலும், அவர்களை முற்றாக அழித்து, போரினை வெற்றிகொள்ள ராணுவத்தினருக்கு ஒரு சில மாதங்களாவது தேவைப்படலாம். அது வருகிற மாதமோ அல்லது அதன்பின்னரோ நடக்க வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து
இப்போரினை வெல்லும் நோக்கில்  செயற்பட்டு வருகிறோம்" என்று பிரபாகரனின் முன்னாள் தளபதியும் நெருங்கிய சகாவுமான கருணா பி பி சியின் சிங்களச் சேவையான சந்தேஷயவுக்குத் தெரிவித்தார்.

இங்கிலாந்திற்குப் போலிக் கடவுச் சீட்டுடன் உள்நுழைய முயன்று, குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, 9 மாதங்கள் சிறப்பு தடுப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் இலங்கை - இங்லிலாந்து அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ரகசிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம் மீளவும் இலங்கைக்கு வந்துசேர்ந்த கருணா, தற்போது பரவலாக பல செய்திச் சேவைகளிலும் பேட்டியளித்துவருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், கருணாவின் இங்கிலாந்துப் பயணத்திற்கோ அல்லது அவர் மீண்டும் நாடு திரும்பியதற்கோ தாம் உதவவில்லை என்று அரசாங்கம் தொடர்ச்சியாக மருத்துவருவத்ரும் குறிப்பிடத் தக்கது.

இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியிருக்கும் கருணா சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு விடுத்துவரும் வேண்டுகோளில் மிலேச்சத்தனமான  பயங்கரவாதிகளான புலிகளை முற்றாக அழித்து இப்போரில் வெற்றியீட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் என்று கூறிவருகிறார். 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்த கருணா, தனது முன்னாள் சகாவான பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சராகவும், தனது கட்சியின் தலைவராகவும் இயங்குவது தொடர்பாக மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

 

https://www.hindustantimes.com/search?q=karuna amman

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மனிதகுலத்திற்கெதிரான போர்க்குற்றங்களைப் புரிந்த கருணா எனும் குற்றவாளியை தப்பிக்க விட்டது இங்கிலாந்து அரசின் திட்டமிட்ட தவறாகும் - கருணா இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு அதிகாரிகள் சகிதம் வந்திறங்கியவேளை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட கண்டனம்

காலம் : ஆடி, 5, 2008

மூலம் : ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ்

புலிகளைப் பிளவுபடுத்தி, பிரிந்து சென்று இயங்கி, பின்னர் இங்கிலாந்திற்குப் போலியான கடவுச் சீட்டுடன் சென்று பிடிபட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த  கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மீண்டும் இலங்கையினை
வந்தடைந்திருக்கிறார்.

கடந்த கார்த்திகை மாதம், இலங்கையின் ராஜதந்திரிகளுக்கு வழங்கப்படும் கடவுச் சீட்டினைப் பாவித்து, பாதுகாப்புச் செயலாளரின் உதவியுடன்  இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்ற கருணா, அங்கு குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது பலருக்கும் நினைவிலிருக்கலாம். 

கொழும்பிலிருந்துவரும் ஊடகச் செய்திகளின்படி கருணாவோடு இங்கிலாந்து அதிகாரிகள் சிலரும் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது. புலிகளின் தலைவருக்கு அடுத்ததாக அமைப்பில் மிகச் செல்வாக்குள்ளவராக விளங்கிய கருணா 2004 இல் புலிகள் இயக்கத்தை பிரதேச ரீதியாகப் பிளவுபடுத்திக்கொண்டு அரச ராணுவத்துடன் சேர்ந்துகொண்டார். பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எனும் பெயரில் தனது குழுவைப் பதிவு செய்திருந்தார். பின்னர் அக்கட்சியும் இரண்டாகப் பிரிந்தபின்னர், கருணா இலண்டனுக்கு பாதுகாப்புச் செயலாளரின் அறிவுருத்தலின்பேரில் உருவாக்கப்பட்ட போலிக்கடவுச் சீட்டினைப் பாவித்து சென்றார்.

இதேவேளை, சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களில் ஒன்றான ஹியூமன் ரயிட்ஸ் வொட்ச் அமைப்பு கருணாவை சிறையிலிருந்து விடுவித்தமைக்காக இங்கிலாந்து அரசை சாடியிருப்பதுடன், போர்க்குற்றங்களைச் செய்தவர் என்று நம்பப்படும் ஒரு குற்றவாளியினை விசாரணையெதுவும் இன்றி மீண்டும் இலங்கைக்கே திரும்பிச் செல்ல அனுமதித்தது குறித்தும் கடுமையான கண்டனங்களை முன்வைத்திருக்கிறது.

இந்த மனிதவுரிமை அமைப்பு இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கருணாவின் கட்டளையின் கீழ் அவரின் ஆயுதக் குழு இலங்கையில் நடைபெற்றுவரும் சிவில்யுத்தத்தில் மிகவும் கொடிய மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், சிறுவர்களையும், இளைஞர்களையும் கடத்திச் செல்வது, சித்திரவதை செய்வது, பொதுமக்க்களையும், எதிரணிப் போராளிகளையும் கூட்டாகச் சுட்டுக் கொல்வது ஆகிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது.

"இங்கிலாந்து அரசிடம் ஒரு ஒரு பேர்போன போர்க்குற்றவாளி கடந்த 6 மாதங்களாக அடைக்கலமாகியிருந்தார், ஆனால் அவர்மீது குற்றங்களைப் பதிவுசெய்து விசாரிக்க இங்கிலாந்து அரசு முயலவில்லை. கொடூரமான மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒருவரைத் தண்டிக்கும் சந்தர்ப்பத்தை இங்கிலாந்து அரசு தெரிந்தே தவறவிட்டு விட்டது" என்று அவ்வமைப்பின் அதிகாரி பிரட் அடம்ஸ் தெரிவித்தார்.

https://www.hindustantimes.com/search?q=TMVP

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

சேகுவேரா கேணல் கடாபி போன்றவர்களின் வாழ்வினூடு வேலுப்பிள்ளை பிரபாகரணின் மரணத்தை மீளாய்வு செய்தல்

ஆக்கம் : சச்சி சிறிகாந்தா
காலம்: புரட்டாதி, 2012

இணையம் : தமிழ்ச் சங்கம் அமெரிக்கா

நான் இன்றுதியாக பிரபாகரன் அவர்களின் மரணம் பற்றி எழுதியது ஜூன் மாதம் 2 ஆம் திகதி, 2010 இல் என்று நினைக்கிறேன். "பிரபாகரனின் மரணம் தொடர்பான கதையினை பகுப்பாய்வு செய்தலும், பொய்யர்களை வெளிப்படுத்துதலும்" எனும் தலைப்பில் அதனை நான் எழுதியிருந்தேன். சுமார் 28 மாதங்கள் கடந்த நிலையில் அந்த நிகழ்வினை நான் மீண்டும் மீளாய்வு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த 28 மாத காலத்தில் நடந்த சில முக்கியமான காரணங்களுக்காக இதனை மீலாய்வுச் செய்வது அவசியம் என்று கருதுகிறேன். 

அவற்றுள் முதலாவது 2010 ஆமாண்டு புரட்டாதியில் நடத்தப்பட்ட லிபியாவின் நீண்டகால அதிபரான கேணல் முகம்மர் கடாபியின் படுகொலை.

இரண்டாவது இறுதிப்போர்க்காலத்தில் ஐ நா வின் பேச்சாளராக கொழும்பில் தங்கியிருந்த கோர்டன் வைஸ் எழுதிய "தி கேஜ் - சிறிலங்காவுக்கான போரும், தமிழ்ப் புலிகளின் இறுதிநாட்களும்" எனும் புத்தகத்தின் வெளியீடு.

மூன்றாவது, மே மாதம் 2012 இல் சந்திரப்பிரேம என்பவரால் புனையப்பட்ட "கோட்டாவின் போர்" எனும் தலைப்புடன் வெளியான, இறுதியுத்தம் எவ்வாறு முடித்துவைக்கப்பட்டது என்பதுபற்றிய  இலங்கை ராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட சில நிகழ்வுகளின் தொகுப்புக்கள்.  

முன்னுரை

மேலும் இதுதொடர்பாக நான் எழுதுவதற்கு முன்னர் சில விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. திரு பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பும் பல தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் அவர்களின் கூட்டத்தைச் சார்ந்தவன் அல்ல. ஆகவே, 2009 மே மாதத்தில் பிரபாகரன் அவர்கள் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களைக் கொண்டே நான் இதனை எழுதுகிறேன். ஆனால், பிரபாகரன் என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு இடத்தில் மீண்டு தோன்றினால் பல லட்சக்கணக்காணோர் ஆச்சரியப்படலாம், அதிர்ச்சியடையலாம், ஆனால் நான் இந்த லட்சக்கனக்காணோரில் ஒருத்தன் அல்ல. அதேவேளை, நான் விடயங்கள் இவ்வாறுதான் நடக்கும் என்று எதிர்வுகூறும் பூசாரியும் அல்ல. நான் ஒரு விஞ்ஞானி. கிடைக்கும் தகவல்களைக் கொண்டு  எனது முடிவுகளை நிறுவுகிறேன். சில முக்கியமான தகவல்கள் எனக்குக் கிடைக்காதவிடத்து, வேறு வழிகளில் அத்தகவல்களுக்கு நிகரான தகவல்களைக் கொண்டு நான் எனது முடிவுகளை அடைகிறேன். அதேவேளை, எனக்குத் தேவையான சரியான தகவல்கள் கிடைக்கப்பெறும் இடத்து, அதற்கேற்றாற்போல் எனது முடிவுகளையும் மாற்றிக்கொள்கிறேன்.

புலிகளை விட்டு பிரிந்தோடிய குமரன் பத்மநாதன் மற்றும் அவரின் ஏவலாளிகள் தற்போது பிரபாகரனின் மரணம் தொடர்பாகப் பேசவேண்டிய அல்லது மீளாய்வுசெய்யவேண்டிய தேவை என்னவென்று என்னைக் கேட்கலாம். ஆனால், அதுபற்றி தற்போது பேசவேண்டிய தேவை இருப்பதாகவே நான் கருதுகிறேன். சுமார் 190 வருடங்களுக்கு முன்னதாக மரணமடைந்த நெப்போலியனின் மரணம் தொடர்பாக இன்றுவரை பேசப்பட்டும், மீளாய்வுசெய்யப்பட்டும் வரும் நிலையில், தமிழரில் பிறந்து நெப்போலியனின் தரத்திற்கு நிகராக வாழ்ந்த பிரபாகரனின் மரணம் பற்றியும் நிச்சயம் பேசப்படவும், ஆழமாக  மீளாய்வு செய்யப்படுதலும் அவசியமானது. 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் மரணம் தொடர்பாக இலங்கை ராணுவத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு

சந்திரப்பிரேமவினால் எழுதப்பட்ட "கோட்டாவின் போர்" எனும் இறுதியுத்தகால சம்பவங்களின் தொகுப்பினை இலங்கை ராணுவத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியும். இதற்கான முக்கிய காரணம் இப்புத்தகம் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபயவினதும், அவரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும்  இலங்கை ராணுவத்தினதும் முழுமையான ஆசீர்வாதம் இப்புத்தகத்தினை எழுதவும், வெளியிடவும் கிடைத்தது என்பது. பிரபாகரனின் மரணம் தொடர்பாக இப்புத்தகம் வெளியிட்ட நிகழ்வினை , இப்புத்தகம் தொடர்பான எனது முந்தைய விமர்சனத்தில் சேர்த்துக்கொள்ள முயலவில்லை. ஆகவே அப்புத்தகத்தின் 488 ஆம் 489 ஆம் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் பிரபாகரனின் மரணம் தொடர்பான செய்தியிலிருந்து இதனை ஆரம்பிக்கிறேன்.

"மே 18 அன்று பிற்பகல் 59 ஆவது டிவிஷன் படையினர் புலிகளின் தளபதிகளான ஜெயம் மற்றும் பாணு ஆகியோரின் தலைமையில் முன்னேறிவந்த புலிகளின் அணியொன்றினை எதிர்கொண்டு , அவர்கள் அனைவரையும் கொன்றனர். மறுநாள் அதிகாலை, நந்திக்கடல்ப் பகுதியில் அமைந்திருந்த 800 மீட்டர்கள் நீளமும், 20 மீட்டர்கள் அகலமும் கொண்ட சதுப்பு நிலப் பற்றைக்காடுகளுக்குள் தேடியழிக்கும் நடவடிக்கைகளுக்கென்று 4 ஆவது விஜயபாகு ரெஜிமென்ட்டினதும், 8 ஆவது சிறப்புப் படைகள் அணியினதும் வீரர்கள் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டது. ராணுவ அணி உள்நுழைந்தவுடன் தமது அணிகளைவிட்டு சிதறி தனித்தனியாக இயங்கிவந்த புலிகளுக்கும் ராணுவ அணிக்கும் இடையில் துப்பாக்கிச் சமர் ஆரம்பமானது. கேணல் ரவிப்பிரியவின் கருத்துப்படி சுமார் 30 புலிகள் வரை அப்பற்றைக் காட்டுகளுக்குள் ஒளிந்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதன்பின்னர் மேலும் இரு கொமாண்டோ அணிகளை பற்றைக்காட்டினுள் இறக்கிய ரவிபிரிய மூன்று புலிகளை உயிருடன் கைதுசெய்தார். அவர்களின் கூற்றுப்படி பிரபாகரனும் இன்னும் 30 புலிகளும் அப்பற்றைக்காடுகளுக்குள் ஒளிந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அப்பற்றைக்காட்டினை நோக்கிக் கடுமையான தாக்குதலை அங்கிருந்த படையினர் நடத்தினர். எதிர்த்தாக்குதல்கள் முற்றாக நிற்கும்வரை படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டது. இதன்பின்னர் இப்பற்றைக்காடுகளுக்குள் தேடுதலினை ஆரம்பித்த படையினரின் தளபதி பிரபாகரனின் உடலைக் கண்டுபிடித்தார்" .

"பிரபாகரனின் உடல் இன்னமும் சற்று வெப்பமாகவே இருந்தது அவர் அப்போதுதான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது. அன்று காலை பிரபாகரன் சவரம் செய்யாததனால், அவரின் முகத்தில் வெண்ணிறமான முடிகள் மெதுவாக முளைக்க ஆரம்பித்திருந்தது தெரிந்தது. 4 ஆவது விஜயபாகு அணியின் வீரர்கள் பிரபாகரனின் உடலைத் தோள்களில் சுமந்துவந்து தமது உயர் அதிகாரிகளின் முன்னால் அடையாளப்படுத்தலுக்காக வைத்தனர். உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாதிகளின் தலைவனின் உடலை பிரிகேடியர்கள்  ஜகத் டயஸ், சவேந்திர சில்வா, சகி கல்லகே மற்றும் கமால் குணரட்ன ஆகியோர் பார்வையிட்டனர். பிரபாகரனின் உடலை பார்வையிட நூற்றுக்கணக்கான படையினர் ஆர்வம் மிகுதியால் , ஒருவர் மீது ஒருவர் ஏறி முண்டியடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அன்று பிற்பகல் புலிகளின் முன்னாள்ப்பேச்சாளர் தயா மாஸ்ட்டர் மற்றும் கருணா அம்மான் ஆகியோர் கொழும்பிலிருந்து விசேட விமானம் மூலம் அங்குவந்து இறந்தது பிரபாகரன் தான் என்பதை உறுதிப்படுத்தினர்".

சரி, சந்திரப்பிரேமவினால் இங்கே தரப்பட்ட இத்தகவல்களை நாம் ஆராயலாம். முதலாவது பந்தியின் இறுதிப் பகுதியில் சொல்லப்பட்டுள்ள விடயங்களின்படி,

1. பிரபாகரனின் நெற்றியில் பட்ட துப்பாக்கிக் குண்டினாலேயே அவர் கொல்லப்பட்டார் என்பதை நிரூபிப்பதற்கான கண்ணால் கண்ட சாட்சியங்கள் இராணுவத்திடம் இல்லை. 

2. பெயர் குறிப்பிட விரும்பாத குறிபார்த்துச் சுடும் வீரர் கூட தான் பிரபாகரனைக் குறிவைத்தே தாக்கியதாகக் கூறமுடியவில்லை.

3. ஆக, முதலாவது பந்தியின் சாராம்சம் என்னவெனில் பிரபாகரனின் உயிரற்ற உடல் ராணுவ அணித்தளபதியினால் கண்டெடுக்கப்பட்டது என்பதுதான். 

4. கொழும்பின் சில சிங்கள ஆங்கில ஊடகங்கள் பிரபாகரனின் உடல் மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தபோதும்கூட, சந்திரப்பிரேம இதுபற்றி தனது புத்தகத்தில் மூச்சுக் கூட விடவில்லை. ஆக, பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டியவர்கள் கருணாவும் தயா மாஸ்ட்டரும் தான் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவரும் புலிகளால் வெளியேற்ரப்பட்டவர்கள் என்பதும், தமது பிழைப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ராணுவம் தமக்குச் சொல்லிக்கொடுத்த "இது பிரபாகரன் தான்" எனும் கிளிப்பிள்ளைப் பாடத்தினை தவறாமல் ஒப்பிவிப்பார்கள் என்கிற சிந்தனையில்லாமலேயே இவர்களை மேற்கோள் காட்டி சந்திரப்பிரேம இதுதொடர்பாக உறுதிப்படுத்தியதுதான். 

 • Thanks 3
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மனிதன் பின்வரும் நான்கு வழிகளில் ஒன்றில்த்தான் மரணிக்க முடியும். அவையாவன, இயற்கைச் சாவு, விபத்து, கொலை அல்லது தற்கொலை. இதன்படி முதல் இரு வழிகளின்மூலம் பிரபாகரன் இறந்திருக்கலாம் என்பது சாத்தியமற்றது. மற்றைய இரு வழிகளில், பிரபாகரன் தம்மாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இலங்கை ராணுவம் கூறுகிறது. ஆனால், கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு பார்க்கும்போது பிரபாகரன் தற்கொலைசெய்துகொண்டு இறைந்தார் என்பதே மிகவும் சாத்தியமானதாகத் தெரிகிறது.

ஆர்ஜன்டீனாவில் பிறந்த மருத்துவரும், கெரில்லா தலைவருமான சேகுவராவின் 45 ஆவது நினைவுதினம் ஐப்பசி 9 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறே, ஐப்பசி 20 ஆம் நாள் லிபியாவின் நீண்டநாள் தலைவர் முகம்மர் கடாபியின் முதலாவது நினைவுநாளும் அனுட்டிக்கப்படுகிறது. இவர்கள் இருவருமே கைதுசெய்யப்பட்டபின்னர் எதிதிரிகளால் கொல்லப்பட்டவர்கள். இவர்களின் உடல்களின் மேற்பகுதியினை புகைப்படமாகக் காண்பித்து செய்திவெளியிட்டிருந்தார்கள். அவர்களின் உடல்களில் இருந்த காயங்களும், இரத்தப் பெருக்குமே என்னை பிரபாகரனின் மரணம் தொடர்பாக மீளாய்வு செய்யவேண்டிய உந்துதலினைக் கொடுத்தது. 
பிரபாகரனின் மரணம் தொடர்பான எனது முதலாவது கட்டுரையினை 2010 இல் எழுதியதன் பின்னர் , மின்னஞ்சல் மூலம்  எனக்குத் தெரிந்த, பலவிடயங்கள் தொடர்பான அறிவும், தெளிவான பார்வையும் கொண்ட ஊடகவியலாளர் ஒருவருடன் நான் நடத்திய சம்பாஷணையின் எழுத்துவடிவினை இங்கே பகிர்கிறேன்.

சச்சி : பிரபாகரனின் மரணம் தொடர்பான  உங்களின்  நிலைப்பாட்டினை நான் அறியலாமா? நீங்கள் அண்மையில் நியூ யோக்கர் பத்திரிக்கையில் ஜொன் லீ அண்டர்சன் அவர்களின் இதுதொடர்பான கட்டுரையினையும், அதற்கான எனது பதிலையும் படித்திருப்பீர்கள். அவர் தனது கட்டுரையில் பிரபாகரனின் உடலின் புகைப்படங்கள் தனக்குக் காண்பிக்கப்பட்டதாகவும், குண்டு அவரின் மண்டையோட்டினை துளைத்து வெளியேறும் "எக்ஸிட் வூண்ட்" காணப்பட்டதாகவும் எழுதியிருந்தார். அவரின் இந்த கூற்று என்னைக் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இணையத்தில் கிடைக்கப்பெற்ற இப்புகைப்படங்களின்படி அவரின் இரு கைகளிலும் சுருக்கங்கள் தெரிகின்றன. அதாவது தண்ணீரில் பல மணித்தியாலங்கள் தோய்ந்த நிலையில் அவை சுருக்கங்களுடன் காணப்பட்டன. சாதாரண மரணங்களில் இவ்வகையான தோல்ச் சுருக்கங்கள் காணப்படுவது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை பிரபாகரன் பொட்டாஸியம் சயனைற்றினை உட்கொன்டு முன்னரே மரணித்துவிட்டிருக்க வேண்டும். உயிரற்ற அவரது உடலை எடுத்துவந்த ராணுவத்தினர் தாமே அவரைக் கொன்றதாகக் காட்டுவதற்காக, பின்னரே அவரின் தலையில் துப்பாக்கியினால் சுட்டிருக்க வேண்டும். இவ்விடயம் தீர ஆராயப்படவேண்டிய தேவை இருப்பதாலும், அவரின் உடலை இனிமேல் எம்மால் பார்க்கமுடியாது என்பதாலும், அவரது நெற்றியில் ஏற்பட்ட காயம் அவர் உயிருடன் இருக்கும்போது ஏற்பட்டதா அல்லது மரணம் அடைந்தபின்னர் உருவாக்கப்பட்டதா என்பதை உங்களால் கூறமுடியுமா? என்னைப்போன்றே, உடல்த் தடயவியல் நிபுணரான பேராசிரியர் கீத் சிம்ப்சனும் இதனை நிச்சயம் அவதானித்திருக்கிறார். எனது வாதத்திற்கு வலுச்சேர்க்கும் தடயங்கள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

1. பிரபா உண்மையாகவே உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டிருந்தால், அவரைக் குறிபார்த்துச் சுட்டவர் இன்றைக்கும் தனது வீரப்பிரதாபங்களை வெளியே பறை சாற்றிக்கொண்டு இருந்திருப்பார். ஆனால், இதுவரை சிங்கள ராணுவத்தில் ஒருவராவது பிரபாகரனைச் சுட்டது தானே என்று உரிமை கோரவில்லை.

2. பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிய கருணா வேண்டுமென்றே "அவரது உடலில் சயனைட் வில்லை காணப்படவில்லை" என்று கூறியிருந்தான். இது தனது எஜமானர்களின் கட்டளைப்படியே கருணாவினால் கூறப்பட்டது என்பது தெளிவாவதுடன், கருணா கூறியததற்கு எதிர்மாறாக, பிரபாகரன் சயனைட் உட்கொண்டே மரணித்தார் என்பது  உறுதிப்படுத்தப்பட்டு விடுகிறது.

அந்த ஊடகவியலாளர் : மரணமானவுடன், நீர்ப்பற்றுக் குறைவதால் தோல் சுருங்கிவிடுகிறது. அதேவேளை, மரணமானபின்னர் உடல் நீரிற்குள் இருந்திருந்தால் தோல் வீங்கியதாகவோ அல்லது நீர் கட்டியது போன்றறே தென்படும். ஒருவர் உயிருடன் இருக்கும்போது ஏற்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கும், இறந்தபின்னர் ஏற்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்குமிடையே வேறுபாட்டினைக் கன்டறிவது சாத்தியமானதே. உயிருடன் இருக்கும் ஒருவர் சுடப்படும்போது சூட்டுக்காயப்பகுதியில் தோலும் அதன் கீழான பகுதிகளும்  பாதிக்கப்பட்டிருப்பதுடன், சுடப்பட்டதாகக் கூறப்படும் தலைப்பகுதியின் சிதறல்களும், குருதிக் கசிவும் ஏற்பட்டிருக்கும். இறப்பின் பின்னர் குருதி கசிந்துவிடுவதால் பெரும்பகுதி இரத்தம் கொல்லப்பட்டவரின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடுகிறது. பெரும்பகுதி இரத்தம் கட்டியாகிவிடுவதால், வேறு பகுதிகளுக்கு இரத்தம் செல்வதும் தடைப்பட்டு விடுகிறது.  ஆனால், இது எவற்றையுமே எம்மால் இப்போது உறுதிப்படுத்த முடியாது.

சச்சி : நான் முன்னர் உங்களுக்குக் கூறியதன்படி, இலங்கை ராணுவத்தால் வெளியிடப்பட்டிருக்கும் பிரபாகரனின் இரு புகைப்படங்களை அனுப்பி வைக்கிறேன். இப்படங்களில் பிரபாகரனின் கைகளிலும் கால்களிலும் காணப்படும் வெண்ணிறத்தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 


பதில் : மரணத்துடன், உடலின் பகுதிகளுக்கான ரத்த ஓட்டத்தை இதயம் நிறுத்திவிடுகிறது. இரத்தம் இறந்தவரின் உடலின் சில பகுதிகளில் தேங்கிவிட்டபின்னர் கட்டியாகிவிடுகிறது. உடல் அண்ணாந்து கிடக்குமாயின் இந்த இரத்தச் சேர்ப்பு பெரும்பாலும் அடிப்பகுதியிலேயே நடக்க வாய்ப்பிருக்கிறது. படத்தின்படி, மேற்சட்டைக்கும், காற்சட்டைக்கும் இடையிலான பகுதியில் ஊதா நிறத்திலான பகுதியொன்றினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதேவகையான ஊதா - நீல நிற பகுதி அவரின் தலைப்பகுதியிலும், காதுக்கு அருகிலும் காணப்படுகிறது. அதேவேளை, உடலின் அவசியமற்ற பகுதிகளான கை கால்களிலிருந்து இரத்தம் வெளியேறிவிடுவதாலேயே அவை வெண்ணிறத்தன்மையுடையனவாகக் காணப்பட்டிருக்கலாம். மரணத்தின் பின்னர் இப்படி நடப்பது இயல்பானது. உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டிருந்தால், மரணம் உடனடியாக நடந்திருக்கும், இரத்தக் கசிவும் அதிகம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், மேலே படத்தில் காணப்படும் காயங்களைப் பார்க்கும்போது அவர் மரணமடைந்தபின்னரே சுடப்பட்டதாகத் தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் சில நேரத்தின்பின்னர் உடல் ஒரேவிதமாகவே தென்பட்டிருக்கும். உடலில் இருந்து ரத்தம் வெளியேறிவிடுவதனால் உடலின் சில பகுதிகள் வெண்மையாகக் காட்சிதருவது இயல்பானது.

சச்சி : உடலின் அனைத்துப் பாகங்களும் வெண்மையாக இருப்பதற்கும், உயிருடன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் தொடர்பிருப்பதாக நினைக்கிறீர்களா? உடலின் சில இடங்களில் காணப்பட்ட ஊதா - நீல நிறப் பகுதிகள் கூறும் விடயம் சயனைட் உட்கொண்டதன் விளைவுதான் என்று நம்புகிறீர்களா?

பதில் : தடயவியல் பரிசோதனையிலிருந்து தோலின் தோற்றத்தினைப் பயன்படுத்தி மரணம் இயற்கையானதா அல்லது கொலையா என்பது கண்டறிவது கடிணமானது. சில இடங்களில் இரத்தம் தேங்கிவிடுவதாலேயே ஊதா  நிறத் தோல்கள் தெரிகின்றன. சிலவேளை இரத்தத்தில் ஒக்சிஜன் குறைபாட்டினால் இது ஏற்பட்டிருக்கலாம். ஆனால், சயனைட் உட்கொண்டால் கடும் சிவப்பு நிறத்திலேயே இப்பகுதிகள் இருந்திருக்கும்.

உடலில் ரத்தம் முற்றாக ஓடிவிடுவதால் அவை வெண்மையாகக் காட்சியளிக்கும் என்று நான் கூறினாலும், சிலவிடங்களில் இரத்தம் தேங்கி நீல நிறமாகக் காட்சியளிப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். ஆகவே, நான் அவதானித்தவை நிச்சயமாக நடந்திருக்கும் என்று என்னால் உறுதிப்படுத்த முடியாது.

சச்சி : உங்களின் விளக்கத்திற்கு நன்றி. உண்மையாக நடந்ததைக் கண்டறிய முடியாதிருப்பது துரதிஷ்ட்டமே.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சேகுவேரா, கடாபி மற்றும் பிரபாகரன் ஆகியோரின் மரணங்களை ஒப்பிடுதல். 

சேகுவேராவினதும் கடாபியினதும் மரணங்களுக்கிடையில் 44 வருடங்கள் இடைவெளி இருந்தாலும், இவை இரண்டுமே ஒரேவையானவை. இணையத்தில் காணப்படும் ஒளிப்படங்களைப் பார்க்கும்போது கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு அவரின் எதிரிகளால் சித்திரவதை செய்யப்படுவது தெரிகிறது. அவரைக் கொன்றபின்னர், அவரின் எதிரிகள் அவரின் உடலின் மேற்பகுதி வெளித்தெரியும் வண்ணமே புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இதேவகையான கொடூரத்தையே சேகுவேராவும் சந்தித்தார். ஆனால், பிரபாகரனுக்கும் அவர் உயிரோடு இருக்கும்பொழுதோ அல்லது இறந்தபின்னரோ இதேவகையான கொடூரம் நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எமக்குக் கிடைக்கவில்லை. பல நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினருக்கிடையே காணப்பட்ட பிரபாகரனின் உடல் என்று ரொயிட்டர் வெளியிட்ட புகைப்படம் வேறுவகையான செய்தியைச் சொல்கிறது. அவரது உடல் கொடுமைப்படுத்தப்பட்டமைக்கான அடையாளங்களோ அல்லது கடாபியின் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களோ பிரபாகரனின் உடலில் தென்படவில்லை. சந்திரப்பிரேமா  "நூற்றுக்கண்க்கான வீரர்கள் முண்டியடித்துக்கொண்டு பிரபாகரனின் உடலை பார்க்க ஒருவர் மேல் ஒருவர் ஏறியதாக" கூறியிருந்தாலும்கூட, புகைப்படத்தினைப் பொறுத்தவரை பிரபாகரனின் உடலுக்கு அவர்கள் போர்க்களத்தில் மரியாதை செய்ததுபோலவே தென்பட்டது. உலகின் மிகக்கொடிய பயங்கரவாதியின் உடல் என்று சந்திரப்பிரேம கூறியிருந்தாலும், அதனை உறுதிப்படுத்துவதுபோல பிரபாகரனின் உடலை அலங்கோலப்படுத்தி, அவரின் சீருடையினைக் களைந்து, வெற்றுடம்பாக மாற்ற அவர்கள் முயற்சித்திருக்கவில்லை. 
இதற்கான காரணம் என்ன? சிலர் பெளத்த மதத்தில் இறந்தவருக்கான மரியாதையினைச் செலுத்துவதற்காகவே அப்படி அவர்கள் நடதுகொண்டார்கள் என்று கூறலாம். ஆனால், பிரபாகரன் எனும் சரித்திரத்தை தாம் கண்களால் கண்டது தொடர்பான ஆச்சரியமும், வியப்பும், தமது வாழ்விற்கான அர்த்தத்தினை அம்மனிதன் தந்திருந்தான் எனும் உணர்வுமே அவர்களை ஆட்கொண்டிருக்கலாம். 

கடைநிலைச் சிங்களச் சிப்பாய்கள் பிரபாகரனின் உடலுக்கான மரியாதையினை வழங்கியபோது, மகிந்தவும் அவரது வட்டத்தினருமே பிரபாகரனை அவமானப்படுத்தி தமது மேலாதிக்கத்தினை வெளிக்காட்ட அவரின் சீருடையினைக் களைந்து நிர்வாணப்படுத்தியிருப்பது தெளிவாகிறது. அவரை நிர்வாணப்படுத்தி அவமரியாதை செய்து, தமது அரசியல் பெருமையினை காட்டிக்கொண்டதுடன், தமது விருப்பத்தின் பேரிலேயே அவரது உடலினை தகனம் செய்து தமிழ் மக்கள் தமது தலைவனை இறுதியாகக் கண்டு வணக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தினையும் மறுத்திருந்தனர். 

முஸ்லீம்கள் இறந்த ஒருவரது உடலை 24 மணித்தியாலங்களுக்கு மேல் வைத்திருப்பதில்லை என்றபோதும், கடாபியின் உடல் பலநாட்கள் குளிரூட்டியில் வைக்கப்பட்டே அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் பிரபாகரனின் உடலை அவசர அவசரமாக மகிந்த வட்டம் தகனம் செய்திருப்பது அவர் கொல்லப்பட்ட விதம்பற்றி தாம் புனைந்த பொய்கள் வெளிப்பட்டுவிடும் என்கிற அச்சத்தினாலேயே என்பது தெளிவாகிறது.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சரி, இனி கோர்டண் வைஸின் The Cage எனும் புத்தகத்திற்கு வரலாம்

புத்தகத்தின் பின்புற அட்டை கோர்டண் வைஸின் புகழைப் பாடுகிறது. நியூ யோர்க்கில் வாழ்ந்தவர், உள்நாட்டு யுத்தங்கள் நடந்த நாடுகளில் பணிபுரிந்தவர், பேரிடர் காலங்களில் பணியாற்றியவர், பொஸ்னியா, ஆப்கானிஸ்த்தான், சூடானின் டார்பூர் மற்றும் ஹெயிட்டி என்று பல நாடுகளில் ஐ நா வின் சார்பாக குறைந்தது 12 வருடங்க்ச்ளாவது பணியாற்றியவர் , தற்போது அவுஸ்த்திரேலியாவின் சிட்னிப் பல்கலைக்கழகத்தின் அதிதியாக உரையாற்றி வருபவர், தி குளோபல் மெயில் எனும் பத்திரிக்கையின் நிருபர் என்று புகழ்வதோடு இலங்கையில் நடந்த படுகொலைகள்பற்றிய தனது விசாரணை அறிக்கையாக இப்புத்தகத்தினை வெளியிடுவதாகவும் கூறுகிறது பின்பக்க குறிப்பு.

ஆனால், கோர்டன் கூறும் விடயங்கள் பற்றி நான் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனென்றால், அவர் தனது புத்தகத்தின் உள்ளடக்கத்திற்காக பெரும்பாலும் இலங்கை ராணுவத்தினதும், அரசினதும் தகவல்களையே பெரிதும் நம்பியிருந்தார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கை அரசின் தகவல்களை தவிரவும் அவருக்கென்று தகவல் வழங்கும் சில புலியெதிர்ப்புப் புத்தி ஜீவிகளும் இப்புத்தகத்தில் தமது பங்களிப்பினைச் செலுத்தியிருக்கிறார்கள். மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் எனும் புலியெதிர்ப்பு அமைப்பின் ராஜன் ஹூல், பணம் பார்க்கும்  ஒரே நோக்கத்திற்காக புலியெதிர்ப்புக் கட்டுரை வரையும் டி பி எஸ் ஜெயராஜ் எனும் பிரபலங்கள் உட்பட பலர் கோர்டன் வைஸின் தகவல் மூலங்களாக இருந்திருப்பது அவரது புத்தகத்தின் உண்மைபற்றிய நம்பகத்தன்மையினைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

 
இப்புத்தகத்தம் எழுதுவதற்கு கோர்டன் வைஸுக்கு மிக முக்கியமான 3 காரணங்கள் இருந்திருக்கின்றன என்று நான் நம்புகிறேன்.

1. தனது எஜமானான பான் கீ மூன் மற்றும் விஜய் நம்பியார் ஆகியோர் உட்பட இலங்கையிலும், ஐ நா விலும் பணியாற்றிய கையாலாகாத்தனமான கோழைத்தனமான அதிகாரிகளின் முற்றான தோல்வியினை மறைப்பது.

2. தமிழ்மக்களின் படுகொலைக்கான மொத்தப் பழியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் மீது சுமத்துவது.

3. கண்துடைப்புக்காக சிங்கள அரசுமீது "நான் அடிப்பதுபோல அடிக்கிறேன், நீயும் அழுவது போல அழு" என்று செல்லமாகக் குட்டுவது.

புலிகளை விட்டோடிய இரு துரோகிகளின் பங்களிப்பு

புலிகளை விட்டோடி, அரசுடன் இணைந்துகொண்ட இரு துரோகிகளான தயா மாஸ்ட்டர் மற்றும் குமரன் பத்மநாதன் ஆகியோர் 2009 இல் இனவழிப்பில் வகித்த பாகம் பற்றியும் இங்கு பேசப்படுதல் அவசியம். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிற்குப் பின்னர் தன்னை புலிகளின் தலைவராக பிரகடனப்படுத்திக்கொண்ட செல்வராசா பத்மநாதன் எனும் கே பி,  2009 இல் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டபோதுதான் புலிகளை விட்டோடியதாக நான் நினைக்கவில்லை. அவருக்கே தெரிந்த காரணங்களுக்காக  பிரபாகரன் உயிருடன் இருக்கும்போதே தமிழரின் எதிரிகளுடன் அவர் கள்ள உறவில் ஈடுபடத் தொடங்கியிருந்தார் என்று அம்பலமாகியிருக்கிறது. அவரின் துரோகத்தனத்தினை நான் ஆரம்பத்திலேயே என்னுடைய இன்னொரு பதிவில் சுட்டிக்காட்டியிருந்தேன். பிரபாகரனின் மறைவிற்குப் பிறகு கே பி யின் கையெழுத்துடன் வெளியிடப்பட்ட தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வந்த அறிக்கையிலேயே அவரின் கைங்கரியம் வெளிப்பட்டது. 

இவ்வாறு வெளிவந்த அறிக்கைகளில் தமிழில் அவர் கூறியிருந்த விபரங்களுக்கும் ஆங்கிலத்தில் அவர் வெலியிட்ட விபரங்களுக்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழில் அவர் வெளியிட்ட அறிக்கையில், "எமது தேசியத் தலைவருடன் இப்போரில் பலியான அனைத்து தளபதிகள், மாவீரர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் நாம் வீரவணக்கம் செலுத்துகிறோம். இப்போரில் பலியான மாவீரர்களின் விபரங்களை விரைவில் வெளியிடுவோம்" என்று அவர் தமிழில் கூறியிருந்தார். ஆனால், அவரது ஆங்கில அறிக்கையில் தலைவர் பற்றியோ அல்லது மாவீரர்களின் விபரங்கள் பற்றியோ எதையுமே அவர் குறிப்பிடவில்லை. அவரின் கைதின் பின்னரான நேர்காணல்களில் தான் எப்போது புலிகளை விட்டு வெளியேறினேன் என்பதுபற்றியோ அல்லது தான் வெளியிடவிருப்பதாகக் கூறிய மாவீரர் விபரங்கள் பற்றியோ அவர் மூச்சுக்கூட விடவில்லை. கே பி தமிழர்களுக்கெதிரான துரோகம் 2009 இற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது என்பது புலனாவதால், புலிகளின் தலைமையின் மரணத்தில் கே பி யினால் வழங்கப்பட்ட புலநாய்வுத்தகவல்கள் நிச்சயம் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.

Edited by ரஞ்சித்
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கே பி இறுதியுத்தத்தில் ஆற்றிய பங்கினைப் போலவே தயா மாஸ்ட்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதியின் பங்களிப்பும் ஆராயப்படவேண்டியது. 2006 காலப்பகுதியில் கொழும்பில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும், புலிகளின் ஊடகப்பிரிவின் பேச்சாளராக அவரே பலராலும் அறியப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. தான் கொழும்பில் சிகிச்சைபெற்று வந்த காலத்தில் புலிகளுக்கு எதிரான சக்திகளோடு அவர் நட்பினை வளர்த்துக்கொன்டிருந்தார் என்பதும், பின்னர் அவர் மீண்டும் வன்னிக்குத் திரும்பியபோது தனது புதிய நட்புவட்டாரங்களின் அன்புக் கட்டளைக்கு இணங்க வன்னியிலிருந்து புலிகளின் முக்கியஸ்த்தர்கள் பற்றீய புலநாய்வுத்தகவல்களை அவர் வழங்கிவந்தார் என்றும் நம்பப்படுகிறது. தனக்கு எஜமானர்களால் வழங்கப்பட்ட வேலையினைக் கன கச்சிதமாக முடித்துக்கொடுத்த தயா மாஸ்ட்டரும் புலிகள் ராணுவ ரீதியில் வீழ்த்தப்பட மூன்று வாரங்களுக்கு முன்னதாக சித்திரை 2009 இல் ராணுவத்திடம் சரணடைந்துகொண்டார்.

கே பி மற்றும் தயா மாஸ்ட்டர் ஆகியோர் அரசிடம் அடைக்கலமானதற்குக் காரணமாக இவர்கள் இருவரும் கொண்டிருந்த உடல் நலக் குறைவே காரணம் என்று அரசாலும், இவர்களின் அனுதாபிகளாலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ இதுபற்றி எவருமே பேசுவதில்லை. ஆக, இவர்களின் துரோகத்தினை மறைக்க இவர்களின் உடல்நலக் குறைவினை அன்று பாவித்தவர்கள், இவர்களின் வேலை முடிந்தவுடன் அதனைக்கைவிட்டு விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் இன்றிருக்கும் ஒரே உடல் நலக் குறை என்னவென்றால், "எதை விற்றாவது உனது உயிரையும், வயிற்றையும் பார்த்துக்கொள்" என்பதாகத்தான் இருக்கும்.

இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு நான் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறேன்

அரசாலும் ராணுவத்தாலும் புனையப்பட்ட பிரபாகரனின் மரணம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கைக்கெதிரான எனது 5 வாதங்களை முன்வைக்கிறேன். இவை ஐந்தும் தவறென்று எவராவது எனக்கு சரியான பதிலை வழங்கினால், அரசு கூறும் பிரபாகரனின் மரணம் தொடர்பான புனைவினை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

1. மே 17 ஆம் திகதியிலிருந்து மே 19 ஆம் திகதி வரையான 2 நாட்களில் மட்டுமே இலங்கை ராணுவமும் அரசும் பிரபாகரன் கொல்லப்பட்ட நிகழ்வினை முன்னுக்குப் பின் முரணாக பல தடவைகள் மாற்றி மாற்றிச் சொல்லி வந்திருக்கின்றன.

2. பிரபாகரன் மரணமடைந்த உண்மையான விதம் கண்டறியப்பட்டுவிடும் என்பதற்காக, தடயங்களை மறைக்கும் நோக்குடன் பிரபாகரன் அவர்களது உடல் அவசர அவசரமாக ராணுவத்தால் தகனம் செய்யப்பட்டமை.

3. இன்றுவரை "பிரபாகரனை நான் தான் எனது துப்பாக்கியால் குறிபார்த்துச் சுட்டுக் கொன்றேன்" என்று எந்தச் சிங்களச் சிப்பாயோ அல்லது தளபதியோ தனது வீரப்பிரதாபத்தை வெளியிடவில்லை.

4. உருமாற்றம் செய்யப்படாத பிரபாகரன் உயிருடன் பிடிப்பட்டதற்கான  தெளிவான புகைப்படம் ஒன்று இதுவரை சிங்களத்தால் காட்டப்படவில்லை. அவர் சேகுவேராவைப் போன்றோ அல்லது முகம்மர் கடாபியைப் போன்றோ உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால், அவரது மேலாடையினைக்கிழித்து, மேல் உடலினைக் காட்டி தமது வெற்றியைப் பறைசாற்றியிருப்பார்கள், ஆனால் அதுவும் நடக்கவில்லை.

5. பிரபாகரன் மரணமடைந்து பல வருடங்கள் கடந்துவிட்ட பின்னர்கூட அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை (கோத்தாவின் யுத்தம்) பிரபாகரன் கொல்லப்பட்டது தொடர்பான தெளிவான விபரங்களோ, ஆதாரங்களோ இல்லாமல் ஓட்டை விழுந்த பொத்தலாகக் காட்சி தருகிறதே .
 
பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நிறுவ முடியாது, ஆனால் நிச்சயம் அவர் அதைச் செய்யக்கூடியவர்தான் என்பது நம்பக் கூடியது. மேலே நான் முன்வைத்த ஐந்து கேள்விகளைக் கொண்டு, பிரபாகரன் அவர்கள் ராணுவத்தின் தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் வீரர் ஒருவரால் கொல்லப்பட்டார்  எனும் புனைவுடன் ஒப்பிடும்போது பிரபாகரன் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார் என்பதே அதிகம் சாத்தியப்பாடு கொண்டது என்பது தெளிவாகிறது. ஆனால், நான் மேலே கேட்ட ஐந்து கேள்விகளுக்கும் இலங்கை ராணுவத்தால் தெளிவானதும், ஆதாரபூர்வமுமான பதில்களைத் தரமுடியுமானால் நான் அவர்கள் கூறும் புனைவினை ஏற்றுக்கொள்கிறேன்.

முற்றும்.

 

 • Like 1
 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Do you know in which temple Prabhakaran got married? - Tamil Nativeplanet

கே.பி. எனப்படும், பத்மநாதன்.
தேசியத் தலைவர் பிரபாகரன்  அவர்களின்...
நட்புக்கும், நம்பிக்கைக்கும்...பாத்திரமாக இருந்தவர்.

தலைவரின்.. திருமணப்  படங்களில் கூட.. அருகில் இருந்த தோழன்.
இந்த... கே.பி. ஏன்? இயக்கத்தை காட்டிக் கொடுத்து...
மலேசியாவில்.. நடேசனின் மகன் முன், தான்.... கைதாவது போல் நடித்து,
ஸ்ரீலங்காவுக்கு போய்...  +கோத்தாவின்... கையை குலுக்க வெளிக்கிட, 
அவர் கண்டும் காணாத மாதிரி... போனதாக, செய்திகள் வந்தது.

தமிழ் உலகத்தின்... உத்தம தலைவன்.... பிரபாகரன் அவர்களுக்கு,
துரோகம் செய்து... முழுத் தமிழனையும், படு குழியில் தள்ளிய துரோகி... பத்மநாதன்.  

(+ கோத்தா... அப்போ, ஜனாதிபதி அல்ல. பாதுகாப்பு துறையில்... உயர் பதவி வகித்தவர் என நினைக்கின்றேன்.)

Edited by தமிழ் சிறி
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் புத்திசாலியல்ல; கே.பி பயத்தால் நடுங்கினார்” கொக்கரிக்கும் கோத்தபாய! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

கேபி. என்றவன்... 
சேர்ந்து இருந்து, கழுத்தறுத்த கதைகள் நிறைய உலாவுது.
அதனை... கேள்விப் பட,
இப்படியும்... மனிதர்கள் இருப்பார்களா?
என.... காறித் துப்ப வேண்டும் போல் இருக்கும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேபி. மலேசியாவில்  பிடிபட்டு (சரணைடைந்து)..
சொறி லங்காவில்,  பயங்கர காவலில்  இருந்த,  ஒரு மாத
இடைவெளியில்... அவரின்,பிலிப்பைன்ஸ் மனைவி...
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு  வந்து இறங்குகின்றார்.

இது, துரோகிகளின் கதை. 
ரஞ்சித்... தொடர்ந்து, எழுதுவார். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கேபி. மலேசியாவில்  பிடிபட்டு (சரணைடைந்து)..
சொறி லங்காவில்,  பயங்கர காவலில்  இருந்த,  ஒரு மாத
இடைவெளியில்... அவரின்,பிலிப்பைன்ஸ் மனைவி...
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு  வந்து இறங்குகின்றார்.

இது, துரோகிகளின் கதை. 
ரஞ்சித்... தொடர்ந்து, எழுதுவார். 

கே பி பற்றி எனக்கு விடயங்களைத் தந்துதவ முடியுமா சிறி? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்க அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதவளிக்கக் கூடாது - கருணா அம்மான்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவரும், முன்னாள் அமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இறுதியுத்தத்தில் அரச ராணுவத்தால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் போர்க்குற்றங்களை  சர்வதேச அமைப்பொன்றின் மூலம் விசாரிக்கும் முயற்சிகளுக்கு தற்போதைய அரசாங்கம் அனுசரணை வழங்கக் கூடாதென்று தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணூவத்தால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதன் மூலம் இனங்களுக்கிடையே இன்று உருவாகிவரும் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

"இலங்கையில் நடைபெற்ற போர் ஒரு உள்நாட்டு விவகாரமாகும். அதில் வெளியார் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. சர்வதேச அமைப்பு ஒன்றின்மூலம் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுமிடத்து இனங்களுக்கிடையே கடந்த 10 வருடங்களாக உருவாக்கப்பட்டுவரும் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு விடும்" என்று அவர் கூறினார். "புலிகள் அமைப்பு முற்றாக எம்மால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே புலிகள் சார்பாக இந்த விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும்" என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

"புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரிக்காது, ராணுவத்தினரின் போர்க்குற்றங்களை மட்டுமே விசாரிப்பது எந்தவிதத்தில் நியாயம்?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

அவர் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் உருவாக்கியுள்ள புதிய கட்சி, போரில் காணாமலாக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் எனும் அவரது நிலைப்பாடு, நல்லிணக்க அரசாங்கத்தின் எதிர்காலம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் என்று பல்வேறு விடயங்கள் குறித்து அவர் பேசினார்.

 • Thanks 1
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.