Jump to content

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சானிக்க சிறியானந்தவுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம் கீழே

கேள்வி : நீங்கள் ஒரு தீவிர சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர். எதற்காக உங்களின் அரசியல் நிலையினை மாற்றினீர்கள்?

கருணா : நான் ஒரு மிகவும் தீவிரமான சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளன், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவே என்னை கட்சியில் சேர்த்தவர். அவரது அமைச்சரவையில்துணையமைச்சராக நான் பல சேவைகளைப் புரிந்துள்ளேன். ஆனால், கடந்த 2 வருடங்களாக  வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்களை சில நயவஞ்சகமான தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்திவருகின்றார்கள். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மிகவும் பொய்யான வாக்குறுதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், கல்விமான்கள், சமயத் தலைவர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்று பலர் தமிழர்களுக்கு சரியான, பலமான கட்சியொன்று தேவையென்றும், அக்கட்சிக்கு என்னைத் தலைமை தாங்கவேண்டும் என்றும் தொடர்ச்சியாகக் கேட்டுவந்ததன் விளைவாகவே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் புதிய அரசியல்க் கட்சியை நான் உருவாக்கினேன்.


கேள்வி : வடக்குக் கிழக்கில் பெரும் வாக்காளர் தளத்தினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சவால் விடும் நிலையினை உங்களது கட்சி அடையும் என்று நம்புகிறீர்களா?

கருணா : நான் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பதிவுசெய்யப்பட்ட அரசியல்க் கட்சி கிடையாது. அது பல கட்சிகளின் மொத்த அமைப்பாகும். தனிப்பட்ட அரசியல் நோக்கங்கள், இலக்குகள், கொள்கைகளுக்காக அவை தமக்குள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு வருகின்றன.
தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று கூட்டமைப்புக் கூறிவந்தாலும், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் அவர்களை நிராகரித்தே வருகின்றனர். தமது சொந்த லாபங்களுக்காக கடந்த பல வருடங்களாக தமிழ் மக்களை அவர்கள் தவறாக வழிநடத்தி வருகின்றனர். தாம் தருவதாகக் கூறிய எதனையுமே அவர்கள் இன்றுவரை பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழ்க் கூட்டமைப்பினர் மீது தமிழர்கள் தமது நம்பிக்கையினை இழந்துவிட்டார்கள். கூட்டமைப்பினருக்கு இனிமேல் எதிர்காலம் என்று ஒன்று கிடையாது.

கடந்த 2015 தேர்தலில் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு எண்ணிலடங்கா வாக்குறுதிகளை அள்ளி வழங்கியிருந்தனர். மேலும், மைத்திரிபாலவின் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினையும் அவர்கள் வழங்கினர். வெறும் வாய்ப்பேச்சினால் வழங்கப்பட்ட "100 நாட்களில் தீர்வு வழங்கப்படும்" எனும் உறுதிமொழியினை நம்பி கூட்டமைப்பினர் அரசுக்கு ஆதரவளித்தனர். இறுதியில் அவர்கள் எதனையுமே பெற்றுக்கொள்ளவில்லை. 
 

 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • Replies 578
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : நீங்கள் ஒருகாலத்தில் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பெரிய தளபதி. உங்களின் கடந்தகால செயற்பாடுகள் உங்களை திரும்பிவந்து பாதிக்காது என்று நினைக்கிறீர்களா?

கருணா: தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆயுதப்போராட்டம் சாத்தியப்படாது என்பதை உணர்ந்துகொண்டு நான் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியதை அனைத்துத் தமிழ்மக்களும் சரியென்றுதான் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களும் எனது முடிவினை ஏற்றுக்கொள்வதோடு, பிரபாகரனும் என்னைப்போன்றே ஜனநாயக வழியினைப் பின்பற்றி அரசியலுக்கு வந்திருந்தால் இந்த அழிவுகளையெல்லாம் தடுத்திருக்கலாம் என்று அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் அப்பாவிகள், அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அமைதியான வாழ்வும், தம் பிள்ளைகளுக்கான கல்வியும்தான். 

எனது பழைய வரலாறு எனக்கு ஒரு ஆசீர்வாதத்தினைப் போன்றது. அவற்றிலிருந்து சரியான பாதையினைத் தெரிவுசெய்து நான் வழிநடக்க எனக்கு அவை உதவுகின்றன. நான் புலிகளிடமிருந்து பிரிந்து சென்றபின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டனர். தமிழர்கள் எதிலுமே வெற்றிபெறவில்லை. தெற்குச் சிங்கள மக்களும் நான் புலிகளிடமிருந்து வெளியேறி வந்போது என்னை ஆதரித்து ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும், நாம் எமது வெற்றியை ஓர் இரவிற்குள் பெற்றுவிட முடியாது. எனது கடந்த 10 வருட அரசியல் சாணக்கியத்தைப் பாவித்து தமிழர்களை சரியான பாதையில் தலைமைதாங்கிச் செல்லமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

கேள்வி : ஆனால் சில் அரசியற்கட்சிகள் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பதோடு, அதனை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்வதுபற்றி உங்களின் கருத்து என்ன?

கருணா : உண்மை, அதனை எவரும் முயற்சிக்கலாம். அவர்கள் அப்பாவித் தமிழர்களை இனவாதிகளாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனால், உலக அரங்கில் இனவாதத்தினை அரசியலகாச் செய்துவரும் கட்சிகளுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ இன்று இடமில்லை.  பல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது அரசியல் ஆதாயத்திற்காக இனவாதம் பேசுகிறார்கள். தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் குறிக்கோள்களைத் தூக்கிப்பிடித்து என்னதான் இனவாதம் பேசினாலும், மக்கள் ஒருபோதுமே அவர்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. போராட்ட்த்தினால் தாம் அடைந்த அழிவுகள் இனி வேண்டாம் என்கிற நிலைக்கு அவர்கள் எப்போதோ வந்துவிட்டார்கள்.
 

 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : உங்களின் புதிய கட்சி பற்றி விபரமாகச் சொல்ல முடியுமா?

கருணா : நான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினை ஆரம்பித்ததன் ஒரே நோக்கம் மிதவாத அரசியலைச் செய்வதுதான். கிழக்கில் இன்று பெரும்பான்மையினராக இருக்கும் சிங்கள மக்களும் எனது கட்சியில் இணைந்து இனிச் செயலாற்றமுடியும். முஸ்லீம்களும் எனது கட்சியில் இணைந்து பயணிக்கமுடியும். எனது கட்சி வெறுமனே கிழக்கு மாகாணத்திற்கோ அல்லது வட கிழக்கு மாகாணங்களுக்கோ மட்டுமே சொந்தமான கட்சியல்ல, மாறாக இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமான தேசியக் கட்சி. நான் பிராந்திய, மாகாண அரசியல் செய்வதற்காக இதனை ஆரம்பிக்கவில்லை.

கேள்வி : வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத மிகப்பெரிய பிரச்சினை எதுவென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கருணா: வடக்கில் புலிகளாலும் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும் மூளைச்சலவைச் செய்யப்பட்டு இன்றுவரை இனவாதம் பேசும் தமிழர்களின் மனோநிலையினை மாற்றுவதே எம்முன் உள்ள மிகப்பெரிய சிக்கலாக நான் பார்க்கிறேன். வடக்கும் கிழக்கும் இணைந்த பிரதேசம் தமது பூர்வீக தாயகம் எனும் போலியான கற்பனைக்குள் அவர்கள் வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னர் இந்த இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டபோதும் ஜே வி பியினரின் நீதிமன்ற முயற்சியின்மூலம் அவை மீண்டும் பிரிக்கப்பட்டு விட்டன. கிழக்கில் வாழும் தமிழர்கள் வடக்குத் தமிழர்களுடன் இணையவே விரும்புகிறார்கள். ஆனால், வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் தமது சனத்தொகை வீதம் வெகுவாகக் குறைக்கப்படும் என்று கிழக்கு முஸ்லீம்கள் அஞ்சுகிறார்கள். சமஷ்ட்டி முறையிலான தீர்வொன்றே எதிர்காலத்தில் தேவைப்படும் என்று நாம் நம்புகிறேன்.

இலங்கை 80 வீதம் சிங்களவர்களையும் 20% வீதம் தமிழ்பேசும் தமிழர்களையும் முஸ்லீம்களையும் கொண்ட நாடு. சிங்களவர்களின் ஆதரவு இல்லாமலும், விருப்பம் இல்லாமலும் நாம் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கலாம் என்று கனவு காணக்கூடாது. தமிழர்கள் இன்னொரு போருக்கு இனிமேல் ஒருபோதும் தயாரில்லை என்பதை நாம் சிங்களவர்களுக்கு சரியான வழியில் விளங்கப்படுத்தவேண்டும். 

கேள்வி : வடக்கில் இருக்கும் இதுவரை தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகள் என்ன?

கருணா: வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் கடந்த 30 வருடகாலப் போரில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து விட்டார்கள். புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் போர்ச்சூழலினுள் பிறப்பதால் அவர்களுக்கு ஜனநாயகம் பற்றிய எந்தவிதமான பார்வையும் இல்லை. யுத்தக் காயங்களை ஆற்றுவதற்கு சரியான நல்லிணக்க முயற்சிகள் அவசியம்.

கேள்வி : கடந்த அரசாங்கத்திலும், தற்போதைய அரசாங்கத்திலும் மீளிணக்கம் என்பதே பெரும் பேசுபொருளாக  இருந்துவருகிறது. இனிமேலும் இது தொடர்பாக நாம் செய்வதற்கு என்னவிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

கருணா : மீளிணக்கச் செயற்பாடுகள் மிகவும் துரிதகதியில் நடந்துவருகின்றன. இரு அரசாங்கங்களுமே திறம்படச் செயலாற்றித்தான் வருகின்றன. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டு வந்தேன். 

புலிகள் அமைப்பு தமிழர்கள் சிங்கள மொழியினைக் கற்றுக்கொள்வதை முற்றாகவே தடைசெய்து வைத்திருந்தது. துரதிஷ்ட்டவசமாக தமிழரில் ஒரு தரப்பினர் இன்னமும் சிங்களம் கற்பதை எதிர்த்தே வருகின்றனர். பல ஐரோப்பிய நாடுகலில் தொழில்வாய்ப்புகளுக்காக ஜேர்மன் மொழியினையோ பிரெஞ்சு மொழியினையோ அவர்கள் மறுபேச்சின்றிக் கற்றுக்கொள்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை நல்லிணக்க முயற்சிகள் திறம்பட நடப்பதற்கு தமிழர்கள் சிங்கள மொழியினையும், சிங்களவர்கள் தமிழ்மொழியினையும் கற்றுக்கொள்வதன்மூலம் இனங்களுக்கிடையே ஒற்றுமையினை உருவாக்கலாம் என்று நம்புகிறேன்.

மகிந்தவின் கடந்த ஆட்சியின்போது சுமார் 12000 முன்னாள்ப் புலிப் போராளிகளுக்கு புணர்வாழ்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு தொழில் ரீதியிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு, தொழில்முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. அவர்களில் பலருக்கு தாம் தவறவிட்ட கல்வியினைத் தொடரவும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இன்று அவர்கள் அமைதியான மக்களாக விளங்குவதோடு, வன்முறைகளுக்கெதிரான போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிப் பயங்கரவாதிகளுக்காக எப்போதுமே முதலைக் கண்ணீரைச் சிந்திக்கொண்டுதான் இருக்கும். புலிகளின் இனவாதக் கோட்பாடுகளை ஆதரித்துக்கொண்டும், மூன்னாள்ப் போராளிகள் ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதையும் அது எதிர்த்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால், முன்னாள்ப் போராளிகளின் அரசியல் வருகை பாராட்டப்படவேண்டிய ஒன்று. இவர்களை முன்னாள் அரசுத்தலைவர் மகிந்தவின் கைக்கூலிகள் என்று கூட்டமைப்பு கூறினாலும், அதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்னாள்ப் போராளிகளை வெளிப்படையாக நிராகரித்திருக்கிறார். ஆனால், எனது கட்சியில் அவர்கள் எப்போதும் இணையலாம், அவர்களின் ஜனநாயக அரசியலுக்கான எனது ஆதரவு என்றும் அவர்களுக்குக் கிடைக்கும்.

மக்கள் விடுதலை முன்னணியினரே இலங்கையில் வன்முறைக் கலாசாரத்தை முதன்முதலில் ஆரம்பித்தவர்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள். அப்படியானால் முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் இணைவதில் என்ன பிரச்சினை இருக்கிறது? கூட்டமைப்பில் இருக்கும் சில அரசியல்வாதிகள் கூட முன்னாள்ப் போராளிகள்தான், அப்படியிருக்கும்போது முன்னாள்ப் புலிப் போராளிகள் இணைவதில் என்ன தவறு இருக்கிறது. 

அடுத்த முக்கியமான பிரச்சினை என்னவென்றால், யுத்தத்தில் தமது கணவன்மாரை இழந்த விதவைகளுக்கான உதவி. சுமார் 85,000 குடும்பங்கள் குடும்பத் தலைவியினாலேயே கொண்டுநடத்தப்படுகின்றன. இவர்களுக்கான சிறப்பு நடவடிக்கைகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

 • Like 1
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : உங்களின் தாய்க்கட்சி சுதந்திரக் கட்சியாக இருக்கும் நிலையில் நீங்கள் மீண்டும் அக்கட்சியில் இணைந்துகொள்ளும் வாய்ப்புக்கள் இருக்கின்றனவா?

கருணா : சுதந்திரக் கட்சியுடன் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் அக்கட்சிக்காக நான் பெரிதும் பாடுபட்டிருக்கிறேன். கிழக்கில் 30 வருடங்களுக்குப் பின்னர் என்னால்த்தான் சுதந்திரக் கட்சிக்கென்று அலுவலகமும் அரசியல் வேலைப்பாடுகாளும் ஆரம்பிக்கப்பட்டன. பிரபாகரன் உயிருடன் இருக்கும்போதே நான் துணிவாக இதனைச் செய்தேன். வேறு எவராலும் பிரபாகரனை எதிர்த்து இவ்வாறான துணிச்சலான நிலைப்பாட்டினை எடுத்திருக்க முடியாது. சுதந்திரக் கட்சி அரசுக்கான மக்கள் ஆதரவை கிழக்கில் வளர்த்து, தெற்கின் தேசியக் கட்சியொன்று தமிழர் பகுதிகளில் காலூன்றமுடியாது எனும் நிலையினை உடைத்து, அக்கட்சிக்கு வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்திருக்கிறேன். 

நான் எனது பொதுக் கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம் தமிழர்களுக்காகப் பேசுவதற்காகவே. நாம் எவருக்கெதிராகவும் அரசியல் செய்யப்போவதில்லை. தமிழ்த் தேசியம் எனும் மாயைக்குள் வீழ்ந்திருக்கும் தமிழர்களின் மனங்களை மாற்றி பலமான அரசியல் தலைமைத்துவம் ஒன்றினை நான் வழங்குவதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே எனது நோக்கம். அப்பாவித்தமிழர்களை தமிழ்த் தேசியத்தினுள் இழுத்து வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலைத் தோற்கடிப்பதே எனது நோக்கம்.

இதற்கு நல்ல உதாரணம்தான் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். கொழும்பில் வாழ்ந்த மிதவாதியான அவர் வடமாகாணத்தின் முதலமைச்சர் ஆகி இன்று இனவாதம் கக்கி வருகிறார். தன்னை ஒரு கதாநாயகனாக தமிழர்கள் முன் நிலைநிறுத்தப் பார்க்கிறார்.

அவர் முதலமைச்சராக வந்தபொழுது வடக்குத் தமிழர்கள் தமது பிரச்சினைகளை அவர்  தீர்த்துவைப்பார் என்று நம்பியிருந்தனர். ஆனால், அதில் அவர் தோல்வி கண்டிருப்பதோடு, பல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு விட்டார். இன்று அவர் வேறொரு வழியில் பயணிக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலில் இருந்து அவர் விலகிச் செல்வதுபோலத் தெரிகிறது. ஆனால், அரசுக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இன்றுவரை தமிழர்களுக்கு எதனையுமே செய்யவில்லை.


கேள்வி : கிழக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் என்று கூட்டமைப்பு கூறிவருபவர்கள் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன ?

கருணா : காணாமலாக்கப்பட்டவர்களுக்கான விசாரணை, ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான அவர்களின் கோரிக்கைகளை ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டாலும்கூட, அவர்கள் அதனை முன்வைக்கும் விதத்தினை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தமது அரசியல் லாபத்திற்காக அப்பாவிகளின்  உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள். பல்லாண்டுகளாக காணாமலாக்கப்பட்ட தமது சொந்தங்களைத் தேடித்தாருங்கள் என்று இன்றுவரை ஏங்கிவரும் எவருமே கூட்டமைப்பின் இந்த போலியான அரசியல் பரப்புரைகளுக்கு இலகுவாக உள்வாங்கப்பட்டு விடுவார்கள். கூட்டமைப்பு அண்மையில்கிழக்கில் நடத்திய எழுக தமிழ் நிகழ்வில் அப்பாவித்தமிழர்களின் உணர்வுகளைப் பாவித்து அரசியல் ஆதாயம் தேடிவருவது தெரிகிறது.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டினை உண்மையுடன் தெரிவிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியொன்று தனது லாபத்திற்காக இந்த காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் இன்றுவரை ராணுவத்தால் ஏதோவொரு தடைமுகாமில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டி வருகிறது. இதனை எவராவது ஏற்றுக்கொள்வார்களா? இவ்வாறு இவர்களால் கூறப்படும் ரகசிய தடுப்புமுகாம்கள் அம்பாந்த்தோட்டையிலோ அல்லது அநுராதபுரத்திலோ நடத்தப்பட்டு வந்தால் அவை இன்றுவரை வெளியுலகிற்குத் தெரியாமல்ப் போனது எப்படி? அமெரிக்கா தனது செய்மதிகளைப் பாவித்து முழு நாட்டினையும் சல்லடைபோட்டு வைத்திருக்கும்போது, இம்முகாம்களை நாங்கள் நடத்துவது சாத்தியமா? 

காணாமலாக்கப்பட்ட தமிழர்களை அடைத்துவைத்திருப்பதாகக் கூறப்படும் இம்மாதிரியான ரகசிய முகாம்கள் இலங்கையில் எங்கும் நடத்தப்படவில்லை என்பதை என்னால் அதிகாரபூர்வமாகக் கூறமுடியும். உண்மையைச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது, அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் எல்லோருமே கொல்லப்பட்டு விட்டார்கள், இதில் மறைப்பதற்கு எதுவுமேயில்லை. காணாமலாக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் நட்ட ஈடு வழங்கவேண்டும். அவர்களுக்கான இறுதி வணக்கத்தினை அவர்களின் குடும்பங்கள் இனிச் செய்ய வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களை தேடும் கமிஷனை ஆரம்பிப்பதால் எதுவுமே நடக்கப்போவதில்லை, இதனால் யாருக்கும் லாபம் இல்லை. 

எனது சகோதரர் கூட காணாமல்ப்போயிருந்தார். புலிப்பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்ட அவர் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று நான் எனது தாயாரிடம் கூறிவிட்டேன். அவருக்கான இறுதி மரியாதையினை நாங்கள் செலுத்திவிட்டோம். அவரது உடலினை நாம் இதுவரையில் கண்டுபிடிக்காததால், அவரையும் காணமாலாக்கப்பட்டோர் பட்டியலில் சேர்த்துவிட்டோம். ஆனால், நான் எனது தாயாரிடம் அதுபற்றித் தெளிவாகக் கூறிவிட்டேன். உண்மையினைச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். பலருக்கு இது கடிணமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதே கசப்பான உண்மையாகும்.

புலிப்பயங்கரவாதிகள் ஆனையிறவு முகாமைத் தாக்கியபோது பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை பொறுப்பெடுக்குமாறு புலிப்பயங்கரவாதிகள் அரசாங்கத்தினைக் கேட்டபோது, அரசு உடனடியாக மறுத்துவிட்டது. பெருமளவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களைப் பொறுப்பெடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு அனுப்பும்போது பாரியளவிலான பதற்றமும், அச்ச நிலையும் தோன்றலாம் என்று அரசு அஞ்சியது. ஆகவே கிளிநொச்சியைச் சேர்ந்த பொதுமக்களும் புலிப்பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட பலநூறு ராணுவ வீரர்களை தாங்களே அடக்கம் செய்தார்கள். இவ்வாறு கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் கூட காணமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கலாம். தமிழர்கள் மட்டுமல்லாமல் ராணுவ வீரர்களும், புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிச் சிங்களக் குடியேற்றவாசிகளும் கூட காணமலாக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்கிற உண்மை அவர்களின் சொந்தங்களுக்கு உறுதியாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.
 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான கமிஷன் தனது விசாரணைகளின் முடிவில் சில விடயங்களைச் செய்யுமாறு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அப்பரிந்துரைகளை நீங்கள் அங்கம் வகித்த முன்னைய அரசாங்கம் செய்யத் தவறியது ஏன்?

கருணா : ஆம், அது ஒரு நல்ல திட்டம்தான், அதில் பல அருமையான விடயங்கள் கூறப்பட்டிருந்தன. ஆனால், துரதிஷ்ட்டவசமாக எவருமே அதனைச் செயற்படுத்த விரும்பவில்லை. தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்ட உண்மைகளைக் கண்டறியும் கமிஷனுக்கு நிகராக இதனைக் குறிப்பிட முடியும். நாம் அரசில் அமைச்சராக இருந்தபொழுது தென்னாபிரிக்காவுக்குச் சென்று இந்த கமிஷன் தொடர்பான கலந்துரையாடல்களிலும், ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அங்கும்கூட காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான சிக்கல் ஒன்று இருந்தது. அங்கு 22,000 பேர் காணாமலக்கப்பட்டதாக கமிஷனிடம் தெரிவிக்கப்பட்டது. கமிஷனின் முடிவில் இவர்கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டதாக அரசு அறிவித்து, அவர்களுக்கான நட்ட ஈட்டினையும் வழங்கியது. அதன் பின்னர் எவருமே காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசவில்லை. அதே செயன்முறையினைத்தான் நாமும் இங்கு செய்யவேண்டும்.

கேள்வி : ஆனால், தமிழர்கள் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை அமைப்பொன்று தேவையென்று கோரிவருகிறார்களே, இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?

கருணா : நிச்சயமாக இல்லை. சர்வதேச விசாரணை அமைப்பொன்று இங்கு வந்தால் அது தேவையற்ற பல பிரச்சினைகளை உருவாக்கிவிடும் என்று நாம் நிச்சயமாக நம்புகிறேன். சர்வதேச விசாரணைகள் என்று வரும்போது யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் விசாரிக்கப்படவேண்டும். ஆனால், இரத்தம் தோய்ந்த கடந்த 30 ஆண்டுகால கொடிய போரிலிருந்து மீண்டுவரும் தெற்கின் சிங்கள மக்களும் வடக்கின் தமிழர்களும் தற்போதுதான் சகோதரர்கள் போல மீளவும் நெருங்கி வருகிறார்கள். இந்த நிலையில் சர்வதேச விசாரணை என்பது தெற்கின் மக்களை வெறுப்பேற்றும் நடவடிக்கையாக அமைவதோடு, இன நல்லிணக்கத்தினையும் முற்றாகப் பாதித்து விடும். 

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் ஒரு உள்நாட்டு விவகாரமாகும். எங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும், இதற்கு வெளியார் தலையீடு எதுவும் தேவையில்லை. எமக்கு வெளிநாட்டு உதவிகள் நிச்சயம் தேவை, ஆனால் எமது போர்க்குற்றங்களை விசாரிக்கவோ அல்லது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்கோ வெளியாரின் உதவியினை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

எமது எதிர்ப்பினையும் மீறி சர்வதேசம் ஒரு விசாரனையினை ஆரம்பித்தால், அவர்கள் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரான புலிகளையும், ராணுவத்தினரையும் விசாரிப்பது அவசியம். இன்று நாம் புலிகளை முற்றாக அழித்துவிட்ட நிலையில், அவர்கள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்குவது எப்படிச் சாத்தியம்? ஆகவே இது இலங்கை ராணுவத்தினரை மட்டும்  இலக்குவைத்து தண்டிக்க ஏற்படுத்தப்படும் ஒரு சர்வதேச சதியென்றுதானே தெளிவாகிறது? 

அவர்கள் போரின் இறுதிக்காலத்தில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அப்படியானால்  அதற்கு முன்னர் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி என்ன  செய்யப்போகிறார்கள்? அவைபற்றியும் விசாரித்து தண்டிக்கப்போகிறார்களா? சிங்கள ராணுவத்தை மட்டுமே தண்டிப்பதுதான் இவர்களின் நோக்கமா? இது தெற்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தப்போவது இவர்களுக்குத் தெரியாதா? அப்படியானால், பயங்கரவாதப்புலிகளுக்காக இன்று குரல் கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகள் செய்த போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படட்டும், அப்போது இருபக்கமும் சமமாகப் பார்க்கப்படும் வாய்ப்புக் கிடைத்துவிடும்.

கேள்வி : முன்னாள்ப் புலிப் போராளிகளைக்கொண்டு தன்னைக் கொல்வதற்கான சதி நடப்பதாக தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கூறியிருக்கிறார்கள், இதுபாற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?

கருணா : அவரது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதுடன், போலியானது என்பதுதான் எனது நிலைப்பாடு. வடக்குத் தமிழர்கள் அவர்மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதால் தனது பாதுகாப்பைப் பலப்படுத்தவே இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்துவருகிறார். கொழும்பில் பிறந்து வளர்ந்த அவருக்கு வடக்கின் மக்களின் பிரச்சினைகள் குறித்து எதுவுமே தெரியாது. அவர் வடக்கில் இன்று பாரிய பிரச்சினகளை உருவாக்கிவருவதால், அவர்மீது வடக்குத் தமிழர்கள் கடுமையான அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அவரால் இன்று வடக்கிற்குச் செல்வதை நினைத்துக் கூடப்பார்க்கமுடியாது. 

புணர்வாழ்வளிக்கப்பட்ட  முன்னாள்ப் போராளிகளை தனது சுய லாபத்திற்காக அவர் பகடைக் காய்களாகப் பாவிப்பது துரதிஷ்ட்டவசமானது. அப்பாவிகளான அவர்கள், இன்றுவரை தமது வாழ்விற்காக அல்லற்பட்டு வருகின்றார்கள். இதுவரை 6 முன்னாள்ப் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். வன்முறையினைக் கைவிட்டு சகஜவாழ்விற்குத் திரும்பியிருக்கும் இவ்வாறான பல முன்னாள்ப் போராளிகளின் வாழ்வும் சுமந்திரன் போன்றவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

Edited by ரஞ்சித்
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள்ப் போராளிகள் இன்றுவரை வாழ்வாதாரத்திற்காக அல்லற்பட்டு வருவதாகக் கூறியிருந்தீர்கள். புலம்பெயர் தமிழர்களிடமிருந்து இவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வகையான திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?

கருணா : ஆம், நான் இதுதொடர்பாக அவர்களுடம் பேசவிருக்கிறேன். வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்திசெய்யும் பாரிய பொறுப்பு அவர்களுக்கிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களிடையே பெரிய தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இங்குவந்து பல தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் பல முன்னாள்ப் போராளிகளுக்கு வாழ்வாதார உதவியினை வழங்க முடியும்.

பிரண்டிக்ஸ் நிறுவனம் கிழக்கில் பாரிய தொழிற்சாலையொன்றினை நிறுவவிருக்கிறது. இதன்மூலம் 5000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். கிழக்கு மாகாணத்தில் 40,000 விதவைகள் வாழ்கிறார்கள், இவர்களுக்கும் இதில் பணிபுரியும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு சிங்கள தொழிலதிபர் வேலைவாய்ப்பு வழங்கமுடியும் என்றால், உலகெங்கும் பரந்து வாழும் பல புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்கள் தமது மக்களுக்கு ஏன் இந்த உதவியினைச் செய்யமுடியாது?

மலேசியாவின் இரு பெரிய கோபுரங்களுக்கு உரிமையாளராகவிருக்கும் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆனந்த கிருஷ்ணன் போன்ற பல கோடீஸ்வரரத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமது மக்களுக்காக உதவிசெய்யும் காலம் வந்துவிட்டது.

நான் இவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து இங்குவந்து முதலீடுகளை செய்ய ஊக்குவிக்கப்போகிறேன். வடக்கினை கொழும்பினைக் காட்டிலும் அபவிருத்திசெய்து நவீனமயப்படுத்தும் பணபலம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த முதலீட்டு வாய்ப்புகளுக்கிருக்கும் ஒரே முட்டுக்கட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் செய்துவரப்படும் புலிசார்பு அரசியலும், அரசுக்கெதிரான போலிப் பிரச்சாரமும் ஆகும். பெரிய தமிழ்ச் செல்வந்தர்கள் இந்த பரப்புரைகளுக்கு அஞ்சியே கொழும்பிற்கு வரப் பயப்படுகிறார்கள். நான் அவர்களுடன் பேசி நாட்டின் சுமூக நிலைமையினை விளக்கி, தெற்கு அரசியலின் நேசக்கரத்தை அவர்களுக்கு நீட்டி மீண்டும் அழைத்துவரப்போகிறேன்.

கேள்வி : ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் நிச்சயமாக தமிழ் முதலீட்டாளர்களை ஊக்குவித்து இங்கு அழைத்துவரமுடியும். ஆனால் அவர்கள் அதனை ஏன் இதுவரை செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?   

கருணா : ஆம், கூட்டமைப்பில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற மூத்த அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கிருக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால், இலங்கையிலிருக்கும் அனைத்து இனங்களையும் பாதிக்காவண்ணம் தமது கருத்துக்களை முன்வைக்கத் தெரியாமல் இருப்பதுதான். அதுமட்டுமல்லாமல், இலங்கையில் நிலவும் சுமூக நிலை, நல்லிணக்கம், அமைதி பற்றி புலம்பெயர் தமிழர்களிடம் எடுத்துரைக்கும் திறமையும் இவர்களிடம் இல்லை.

தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையென்றால் அவர்கள் மீண்டும் ஆயுதம் தூக்க நேரிடலாம் என்று மாவையார் சொல்கிறார். நான் புலிகளுடன் இணைவதற்கு அவரும் ஒரு காரணம். இவர்களின் பசப்பு வார்த்தைகளை உண்மையென்று நம்பி பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வெற்றுகனவான ஈழம் தேடிப் போராடக் கிளம்பியிருந்தோம். இந்த அனுபவம் மிக்க அரசியல் வாதிகளால் நாம் தவறாக வழிநடத்தப்பட்டோம். ஆனால், நாங்கள் எமது இலட்சியத்திற்காகப் போராடியபோது, இவர்கள் தமது சொந்தப் பாதுகாப்பிற்காக இந்தியாவுக்கு ஓடிவிட்டார்கள்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட போர் முடிந்தவுடன், தமது இந்திய மறைவிடங்களில் இருந்து வெளியே வந்த இந்த மூத்த அரசியல்வாதிகள் இன்று மீண்டும் அதே போர் முழக்கங்களை முன்வைக்கிறார்கள். தமிழர்களை மீண்டும் மூடர்களாக்கி, வெற்று கனவுகளை முன்வைத்து, இனவாதக் கருத்துக்களை பரப்பி மீண்டு தமிழர்களை ஒரு இரத்தகளரி மிக்க போரிற்குள் தள்ளும் இந்தக் கைங்கரியத்தைச் செய்யவேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். போர்முடிந்த கடந்த 10 வருடங்களாக அவர்கள் அரசியல் செய்கிறார்கள், ஆனால் இன்றுவரை தமிழ் மக்களுக்காக ஒரு துரும்பைத்தன்னும் இவர்களால் நகர்த்த முடியவில்லை.  குறைந்த பட்சம் தமிழர்களின் நிலங்களில் இருந்து ராணுவமுகாம்களை நகர்த்தும் முயற்சியைக் கூட இவர்களால் எடுக்க முடியவில்லை.

தமது பேசும் தொனியினை மாற்றி, இனவாத அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியலில் கைகோர்க்கும் நிலையினை அவர்கள் அடையவேண்டும். ராணுவ முகாம்களை அகற்றுமாறு அரசினைக் கோருவதை நிறுத்திவிட்டு, அம்முகாம்களை அரச காணிகளுக்கு நகர்த்துவதன்மூலம் அப்பகுதிகளில் ராணுவப் பிரசன்னத்தை அவர்கள் நீட்டிக்க முன்வரவேண்டும். நான் அங்கம் வகித்த அரசாங்கம் முதற்கொண்டு எந்தவொரு தேசிய அரசாங்கமும் தனது ராணுவ நிலைகளை நாட்டின் எப்பாகத்திலிருந்தும் அகற்ற ஒருபோதும் இடம்கொடுக்கப்போவதில்லை. இவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, பயங்கரவாதம் மீளவும் தலைதூக்கி நாட்டின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்கு ஆளாகும் நிலையினை அரசு ஒருபோதும் கொண்டுவராது  என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஏனெறால், எமது நாட்டின் பாதுகாப்பு எனக்கு மிகவும் முக்கியமானது.

நான் முன்னர் கூறியதுபோல, தமிழர்களுக்கு என்போன்ற மிதவாத அரசியல்த் தலைவர்களே இப்போது தேவை. பழமைவாத அரசியல்த் தலைவர்களின் இனவாதச் சிந்தனை ஒருபோதும் மாறப்போவதில்லை. போர் முடிந்தபின்னர் ஏற்படுத்தப்பட்டிருக்கும் யதார்த்த நிலையினை அவர்கள் ஒருபோதும் உணரப்போவதில்லை. தமிழர்களுக்கு அடிப்படைவாத இனவாதத் தலைவர்கள் இனிமேல்த் தேவையில்லை. முழு நாட்டிற்குமே நாட்டினை அபிவிருத்துசெய்து, மக்களை முன்னேற்றுகின்ற அரசியல்த் தலைமையே இன்று தேவை. நாம் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் பாடிய அதே பல்லவியினையே இன்றும் அவர்கள் பாடுகிறார்கள். எமக்கு அது அலுத்துவிட்டது.

கேள்வி: தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு கூட்டமைப்பு மகிந்த அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட முன்வந்ததா?

கருணா : நான் மகிந்த ராஜபஹ்க்ஷவின் அரசில் அமைச்சராக இருந்தபொழுது சம்பந்தன் அவர்களை அரசுடன் இணைந்து செயற்பட வருமாறு அழைத்திருந்தேன். கூட்டமைப்பு எம்முடன் சேருமிடத்து எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதோடு, தேவையான முயற்சிகளை முன்னெடுக்கவும் வாய்ப்பிருந்தது. மக்களின்மேல் உண்மையான அக்கறைகொண்ட, செயல்திறன் மிக்க தலைவரான மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்று இருந்தது. மகிந்த ராஜபக்ஷவைப்போன்ற நேர்மையான, துணிவான செயல்த்திறன் மிக்க ஒரு தலைவரை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அவர் தான் சொல்வதைச் செய்யவும், செய்வதைச் சொல்லவும் வல்லமை மிக்க ஒரு பெரும் தலைவராக எனக்குத் தெரிகிறார்.

சம்பந்தன் மகிந்த ராஜபஹ்க்ஷவின் ஆதரவு தனக்குத் தேவையென்று கோரிவருவதாக நான் அண்மையில் அறிந்துகொண்டேன். அவர் எதற்காக எனது தலைவரின் ஆதரவினை இப்போது எதிர்பார்க்க வேண்டும்? மகிந்த போன்ற துணிவான, திறமையான தலைவர்கள் எமக்குத் தேவை. அரசாங்கம் பழிவாங்கும் படலத்திலிருந்து, நாட்டினை அபிவிருத்தி செய்யும் படலத்திற்கு மாறவேண்டும் என்பதே எனது விருப்பம்.


கேள்வி : இன்றைய நல்லிணக்க அரசாங்கம் தாம் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்றும், ஆனால் நீங்கள் அமைச்சராகவிருந்த மகிந்த அரசாங்கத்தில் நடைபெற்ற பாரிய முறைகேடுகள் பற்றியே விசாரிக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்களே?
 
கருணா : நான் ஒருபோதுமே அக் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தவறான பிரச்சாரத்தினை முன்னெடுத்து எனது முன்னாள் அரசாங்கத்தின் பல உறுப்பினர்களை அது கைதுசெய்து வைத்திருக்கிறது. இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டத்திற்குப் புறம்பான நீதிவிசாரனை அமைப்பொன்றினை உருவாக்கி தமது அரசியல் எதிரிகளை இந்த அரசாங்கம் பழிவாங்கி வருகிறது.

இந்த நாடே சந்தித்த மிகெப்பெரிய ஊழல் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்பே நடந்தேறியது. இந்த ஊழல்தொடர்பாக விசாரணைகளை நடத்தி உண்மையினை மக்கள் அறியும்படி இவர்கள் ஏன் இதுவரை செய்யவில்லை? இவர்களுக்குப் பழிவாங்கும் நோக்கமே இருக்கிறது. நிச்சயமாக இவர்களால் 2020 இல் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது. மக்கள் இவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள்.

பல கடன்களைப் பெற்றுக்கொண்டதாக மகிந்தவின் அரசாங்கத்தினை இன்றைய அரசாங்கம் குறை சொல்கிறது. ஜி எஸ் பி சலுகையினை தான் நாட்டிற்குப் பெற்றுக்கொடுத்துள்லதாக அரசு மார்தட்டுகிறது. ஆனால், நாட்டின் நலனையும், பாதுகாப்பையும் அடகுவைத்து 58 நிபந்தனைகளுக்கு இணங்கியே இந்த வரிச்சலுகையினைஇந்த அரசு பெற்றிருக்கிறது. 

இதே வரிச்சலுகையினைத் தருகிறோம், எமது கோரிக்கைகளுக்கு உடன்படுங்கள் என்று மகிந்தவின் அரசாங்கத்திற்கும் தூது அனுப்பினார்கள். ஆனால், இந்த வரிச்சலுகை இல்லாமலேயே நாட்டினை அபிவிருத்தி செய்யமுடியும் என்று நாம் அதனை முற்றாக நிராகரித்திருந்தோம். அதன்பிறகே நாம் சீனாவிடம் கடன்களுக்கு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம்.

நான் எமது ஆட்சியில் வெறும் 750 ஏக்கர்களை மட்டுமே சீனாவுக்கு வழங்கியிருந்தோம். ஆனால், இந்த அரசாங்கமோ சீனாவுக்கு 15,000 ஏக்கர்களை வழங்கியிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில், ஒருவருக்கு உங்கள் நிலத்தினை வழங்கும்போது அதன் வான்பகுதியும் சேர்த்தே வழங்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இந்த ஒப்பந்தத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று  எனக்குத் தெரியவில்லை. ஆனால் பெருமளவு  பெருமளவு நிலப்பரப்பும், வான்பரப்பும் சீனாவுக்கு வழங்கப்படுமிடத்து இந்தியாவின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்கு உள்ளாவதோடு, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பதற்ற நிலைமையும் உருவாகக் காரணமாகிவிடும். மகிந்தவை அன்று ஆட்சியில் இருந்து அகற்ற  பின்னாலிருந்து இயங்கிய இந்தியா இன்று அவரையே மீண்டும் ஆட்சியில் அமர்த்தப் பாடுபடுவது தெரிகிறது. 

அதேவேளை, மகிந்த அவர்களின் ஆட்சி மீண்டும் அமையும்போது, அவர்களும் பழிவாங்கும் நடவடிக்கையினைத் தொடங்கக்  கூடாதென்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 30 வருடகாலப் போரின் பின்னர் எமக்குக் கிடைத்திருக்கும் இந்த அருமையான சந்தர்ப்பத்தினை சில்லறைப் பிணக்குகளில் செல்வழிப்பதை நிறுத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பாவிக்கவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

முற்றும்.

 

https://www.ft.lk/article/600192/Karuna-Amman-takes-on-TNA

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனத்துரோகி கருணாவோடு சேர்ந்து, அவனுக்கு நிகராக, தமிழினத்திற்கு துரோகம் இழைத்து, சிங்கள போர்க்குற்றவாளிகளின் வேட்டைநாயாக நெடுங்காலம் வலம்வரும் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் 2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினரும், தனது இறுதிமூச்சுவரை தமிழ்த் தேசியத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் நேசித்தவருமான அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக் கொன்றான் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பினும், அதனை இன்றுவரை மறுத்தும்,  பிள்ளையானால் கொல்லப்பட்ட பரராஜசிங்கத்தை வேண்டுமென்று இழிவுபடுத்தியும்   அவனை ஆதரித்தும் இத்தளத்திலியேயே இன்றுவரை சிலர் எழுதிவரும் நிலையில் , அவன் 2015 இல் கைதுசெய்யப்பட்டபோது அவனது கைது தொடர்பாக கொழும்பு டெலிகிராப் எனும் ஆங்கிலமூல இணையத்தில் வெளிவந்த செய்தி.

பரராஜசிங்கத்தைச் சுட்டுக்கொன்றதற்காகக் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான்.

11, ஐப்பசி 2015

பிள்ளையான் எனப்படும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன்,  பரராஜசிங்கம் அவர்களைக் கொன்றதற்காக சற்று முன்னர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டான்

புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அணியில் செயற்பட்டு வந்து பின்னர் பிரதேசவாதம் பேசிக்கொண்டு வெளியேறிய கருணாவின் வலதுகரமான பிள்ளையானை குற்றத்தடுப்புப் பிரிவினர் இதற்கு முன்னர் பலமுறை ஜோசேப் பரராஜசிங்கத்தின் கொலைதொடர்பாக விசாரித்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. 

நேற்று அவனைக் கைதுசெய்யும் முகமாக அவனது விட்டீற்கு குற்றப்புலநாய்வுத்துறையினர் சென்றிருந்தவேளை அவன் ஓடி ஒளித்துக்கொண்டதாகவும், அவனது வீட்டிலிருந்தவர்களிடம் பேசிய அதிகாரிகள் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் குற்றப்புலநாய்வு அலுவலகத்திற்குச் சமூகமளிக்கவேண்டும் என்று கட்டளையிட்டுச் சென்றதையடுத்து, பிள்ளையானும் அவனது சகாக்களில் ஒருவனும் மாலை 5:15 மணிக்கு குற்றப்புலநாய்வுத் தலைமையகத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஜோசேப் பரராஜசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு மரியன்னை தேவாலயத்தில் கடந்த 2005 மார்கழி 25 அதிகாலை நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த பொழுது  பிள்ளையானின் கொலைக்குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மேலும் 8 பொதுமக்களும் பிள்ளையானின் கொலைக்குழுவின் தாக்குதலில் காயமடைந்திருந்தனர். 

மேலும், குற்றப்புலநாய்வுத்துறையினர் பிள்ளையானின் கொலைக்குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின்  மேலும் இருவரை கடந்த வியாழன் அன்று கைதுசெய்திருந்தனர். 


கொழும்பு மஜிச்த்திரேட் நீதிமன்றம் இக்குற்றவாளிகள் இருவரையும் 90 நாட்களுக்கு விளக்க மறியலில் வைத்து விசாரிக்குமாறு  பொலீஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறது. 
இக்குற்றவாளிகள் இருவரும் கொலையில் இட்டுபட்ட 10 வருடங்களுக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இக்கொலையில் ஈடுபட்டிருந்த பிள்ளையானின் கொலைக்குழு உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வருமாறு. பிரதீப் மாஸ்ட்டர் எனப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த எட்வின் சில்வா கிருஷ்ணா கந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரங்கசாமி கனயகம.

நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த குற்றப்புலநாய்வுத்துறையினர் பரராஜசிங்கத்தின் கொலையுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த இன்னும் இரு குற்றவாளிகள் பிள்ளையான் மற்றும் கருணாவின் உதவியுடன் தப்பி வெளிநாடு சென்றுவிட்டதாகவும், அவர்களைக் கைதுசெய்து மீண்டும் இலங்கைக்கு இழுத்துவர சர்வதேச பொலீஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியினை தாம் நாடியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஜோசேப் பரராஜசிங்கத்தை சுட்டுக் கொல்வதற்கு பிள்ளையானின் கொலைக்குழு மூன்றுவிதமான துப்பாக்கிகளைப் பாவித்திருந்ததாகவும், அவர் கொல்லப்பட்டவிடத்தில் 9 மி மீ வெற்று ரவைக்கூடுகள் ஆறினைத் தாம் கண்டெடுத்ததாகவும் கூறியிருக்கின்றனர். மேலும், இத்துப்பாக்கிகளையும், பிள்ளையான் கொலைக்குழு அன்றிரவு பாவித்த வெண்ணிற வானையும்  கைய்யகப்படுத்தும் நடவடிக்கையில் தாம் இறக்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

https://www.colombotelegraph.com/index.php/pilliayan-arrested-for-pararajasingham-murder/

கருணாவையும் பிள்ளையானையும் தமது தலைவர்களாக வரிந்துகொண்டு, இன்றுவரை அவர்களை ஆதரிப்பவர்கள் இச்செய்தியைப் படித்தபின்னர் எள்ளி நகையாடலாம். அவர்களின் துரோகமும் சொந்த இனத்தையே வேட்டையாடிய கொடூரமும் உண்மையென்றால் கிழக்கு மாகாண மக்கள் ஏன் அவர்களை, குறிப்பாக பிள்ளையானை மீண்டும் அதிக விருப்புடன் பாராளுமன்றம் அனுப்பினார்கள் என்று கேட்கலாம். அவன் இதற்கு முன்னரும் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்திருக்கிறான். அப்போதிருந்ததும், அவன் இப்போது பாராளுமன்ற உறுப்பினர் ஆகியபோது இருப்பதும் அதே போர்க்குற்றங்களைப் புரிந்த , இவனையும் கருணாவையும் வேட்டை நாய்களாகப்பாவித்த இனக்கொலையரசுதான் என்பதை இவர்கள் நினைவில் கொள்வதில்லை.

எது எப்படியாயினும் இவர்கள் இருவரும் எமதினத்திற்கெதிராகச் செய்த துரோகமும், ஆடிய நரவேட்டையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவை. அவர்களின் கதாநாயகர்கள் எங்கள்  மக்களைக் கொன்றதற்காகவே எதிரியினால் கொண்டாடப்படுகிறார்கள் என்பது அவர்ளுக்குத் தெரிந்தாலும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புணர்வாழ்வுக்கழக உத்தியோகத்தர்களின் கடத்தலும், கூட்டுப்பாலியல் வன்புணர்வும், படுகொலைகளும்.

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் மிருகத்தாலும், அவனது கொலைக்குழு மிருகங்களாலும் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் துண்டுதுண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட பிரேமினி மற்றும் ஆறு உத்தியோகத்தர்களின் 8 ஆவது நினைவுதினமான தை 29 அன்று கொழும்பு டெலிகிராப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்திக்குறிப்பினை இங்கே  இணைக்கிறேன். இந்தக் கொடூரம் தொடர்பாக இதே தொடரில் ஒருமுறையாவது எழுதியிருக்கிறேன். இச்செய்தி இன்னொரு தளத்தில் , அந்த 7 அப்பாவிகளின் நினைவாக எழுதப்பட்டது. அதனால் மீளவும் இணைக்கிறேன். இவர்கள் மேல் நடத்தப்பட்ட கொடூரத்தினை இங்கே சிலர் மறுக்கலாம், அல்லது அவ்வாறு நடத்தப்பட்டதை நியாயப்படுத்தலாம். எது எவ்வாறாயினும், சொந்த இனத்தின்மீது, எதிரிகளே செய்யாதளவிற்கு கொடூரத்தைப் புரிந்த இந்த மிருகங்களின் செயல் ஒருமுறையல்ல, பலமுறை மீண்டும் மீண்டும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

தை 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கடத்தப்படுக் காணாமற்போன தமிழர் புணர்வாழ்வுக்கழக அதிகாரிகளின் நினைவாக  !

 கொழும்பு டெலிகிராப் இணையம், தை 29, 2014

2006 ஆம் ஆண்டு தை மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த 7 பணியாளர்கள் மட்டக்களபு மாவட்ட எல்லையில் கடத்திச் செல்லப்பட்டுக்  கொல்லப்பட்டார்கள். புதன் மற்றும் வியாழன் ஆகிய இருநாட்களில் இந்தக் கடத்தல்கள் இடம்பெற்றன.

கடத்திச்செல்லப்பட்டுக் கொல்லப்பட்ட இந்த 7 பணியாளர்களும் தமது பணிதொடர்பான பயிற்சி நெறி ஒன்றிற்காக மட்டக்களப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணமாகிக்கொண்டிருந்தார்கள். தை மாதம் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் வெலிக்கந்தை ராணுவ முகாம் சோதனைச் சாவடியில், இலக்கத்தகடற்ற வெண்ணிற வான்களில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் கொலைக்குழுவினரால் வழிமறிக்கப்பட்டுக் கடத்தி செல்லப்பட்டார்கள். மட்டக்களப்பு - பொலொன்னறுவை மாவட்ட எல்லைகளில் அமைந்திருக்கும் வெலிக்கந்தைப் பிரதேசத்தில் ராணுவ முக்கமினருகில், ராணுவத்தினரின் உதவியுடன் 29 மற்றும் 30 ஆகிய தினங்கலில் இக்கடத்தல்கள் இடம்பெற்றன.


29 ஆம் திகதி வழிமறிக்கப்பட்ட புணர்வாழ்வுக்கழக வாகனத்தில் ஐந்து பணியாளர்களும், 30 ஆம் திகதி வழிமறிக்கப்பட்ட வாகனத்தில் 15 பணியாளர்களும் பயணம் செய்துகொண்டிருந்தனர். கடத்தப்பட்ட 20 பணியாளர்களில் 13 பேர் பின்னர் விடுவிக்கப்பட மீதி 7 பேரும் என்னவானார்கள் என்பது அவர்களைக்கடத்திச் சென்று கொன்றுபோட்ட பாதகர்களுக்கும் அவர்களை வழிநடத்திய ராணுவப் புலநாய்வுத்துறைக்குமே வெளிச்சம்.

ஆனால், அக்கொலைக்குழுவில் பங்குகொண்டு, இப்பாதகத்தில் ஈடுபட்ட ஒருவனது வாக்குமூலத்தின்மூலம் அந்த 7 பேரின் மீதும் பிரதேசவாதம் பேசிக்கொண்டு இனத்துரோகமிழைத்துச் சென்ற  மிருகங்களின் வக்கிரம் வெளித்தெரியவந்திருக்கிறது. அந்த ஏழு பேரும் இந்த மிருகங்களால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 

2006, தை 29 அன்று பிள்ளையான் கொலைக்குழு மிருகங்களால் கடத்தப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு,

திரு காசிநாதர் கணேசலிங்கம், வயது 53

திரு தங்கராசா கதிர்காமர், வயது 43


2006, தை 30 அன்று கடத்தப்பட்டவர்களின் விபரம்,

செல்வி தனுஷ்கோடி பிரேமினி, வயது 25

திரு அருள்தவராசா சதீஷ்கரன், வயது 23

திரு சண்முகநாதன் சுஜேந்திரன், வயது 24

திரு தம்பிராஜா வசந்தராஜன், வயது 24

திரு கைலாசபிள்ளை ரவீந்திரன், வயது 26

இந்த ஏழு புணர்வாழ்வுக்கழகப் பணியாளர்களும் மனிதாபிமான மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்தவர்கள். இவர்களுள் கணேசலிங்கம் அவர்கள் புணர்வாழ்வுக்கழக இயக்குநர் சபையில் ஒரு உறுப்பினர் என்பதோடு  பாலர் பள்ளிகளின் கல்வி மற்றும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றியவர், இரு இளம்பிள்ளைகளின்  தந்தை. 

செல்வி பிரேமினி அவர்கள் தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் பிரதம கணக்காய்வாளராகப் பணியாற்றியதோடு  கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாணவியாக கல்விகற்று வந்தவர்.

திரு தங்கராசா அவர்கள் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் புணர்வாழ்வுக் கழகத்தின் வாகன ஓட்டுநராகவும் வேலை பார்த்து வந்தவர். 

மீதி நான்கு இளைஞர்களும் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தில் கணக்காளர்களாகவோ அல்லது உதவிக்கணக்காளர்களாகவோ பணியாற்றி வந்தவர்கள். கிளிநொச்சியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பயிற்சி நெறிக்காகச் சென்று கொண்டிருந்தவர்கள்.  

இப்பணியாளர்கள் விபரங்களுக்கு கீழ்வரும் இணைப்பை அழுத்துங்கள்.

https://tamilnation.org/tamileelam/tro/060406pressconference.htm

 இந்த ஏழு அப்பாவிப் பணியாளர்களுக்கும் நடந்தது என்ன ?

இக்கடத்தல்கள் நடைபெற்று ஒருவருடத்தின் பின்னர் கனேடிய செய்தியாளரான டி பி எஸ் ஜெயராஜின் விசேட ஆய்வில் வெளிவந்த ஒரு பகுதி கீழே,

" பிரேமினிக்கு மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம் மிகவும் பயங்கரமானது. அழகானவரும்,கண்களில் ஒன்று வாக்காகவும் காணப்பட்ட பிரேமினியை முதலாவது முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்கு இழுத்துச் சென்றார்கள். பிள்ளையான் கொலைக்குழுவின் பிரதானிகளில் ஒருவனான சிந்துஜன் என்பவனே பிரேமினியை முதலில் வன்புணர்வு செய்தான். அவனின் பின்னர் மேலும் 14 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கொலைக்குழு மிருகங்கள் அந்த அப்பாவிப் பெண்மீது கூட்டாகப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டன. ஆரம்பத்தில் தன்னை விடுமாறு கத்திக் கதறிய பிரேமினியின் அழுகுரல் மிருகங்கள் தமக்குள் பங்கிட்டு அவளை வன்புணர்வு செய்யச் செய்ய வெற்று முனகல்கலாக அடங்கிப் போனது. மிருகங்களின் இச்சைகள் தணியத் தொடங்கியபோது அவளின் அழுகை வெற்று விம்மல்களாகவும் முனகலகளாகவும் வெளிவந்துகொண்டிருந்தது. அதிகாலையில் பிரேமினியை அந்த மிருகங்கள் முகாமிற்கு வெளியே இழுத்து வந்தன. அருகிலிருந்த காட்டிற்குள் பிரேமினியை அந்த மிருகங்கள் இழுத்துச் சென்றபோது அவள் உடலில் உணர்வுகளின்றி நடைபிணமாகப் பின் தொடர்ந்தாள். காட்டின் ஒரு பகுதியினை அடைந்ததும் அவளை வாட்களால் அந்த மிருகங்கள் துண்டு துண்டுகளாக வெட்டி வீசின" என்று அம்மிருகங்களின் ஒன்றின் வாக்குமூலத்தினை அடிப்படையாகக் கொண்டு ஜெயராஜ் எழுதுகிறார்.

Edited by ரஞ்சித்
Spelling
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"அந்த நான்கு இளைஞர்களுக்கு உண்ணச் சோறும் குடிக்கத் தேனீரும் கொடுத்தது பிள்ளையானின் கொலைக்குழு. அவர்கள் அதனை அருந்தி முடித்ததும், அனவைவரினதும் கண்கள் இறுகக் கட்டப்பட்டு கொலைக்குழுவின் பிக்கப் ரக வாகனத்தில் ஏற்றப்பட்டார்கள். வெலிக்கந்தையின் காட்டுப்புறத்தினை ஊடறுத்துச் சென்ற அந்த வாகனம் குறித்த ஒரு பகுதியினை அடைந்ததும், அவர்கள் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு காட்டின் உட்பகுதிக்குள் நடத்திச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களின் கண்கள்மீது கட்டப்பட்ட துண்டுகள் அவிழ்க்கப்பட்டு, பாரிய குழியொன்றினை வெட்டுமாறு அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். தாம் கொல்லப்படப்போகிறோம் என்பதை உணர்ந்துகொண்ட அந்த நால்வரும் தம்மைக் கொல்லக் கொண்டுவந்தவர்களின் கால்களில் வீழ்ந்து கதறினார்கள், தம்மை விட்டு விடும்படி கெஞ்சினார்கள். ஆனால் இவை எதுவுமே அம்மிருகங்களின் ஆன்மாவை உசுப்பவில்லை. அக்குழி தோண்டி முடிக்கப்பட்டதும் அந்த நால்வரும் வரிசையில் நிக்கவைக்கப்பட்டு பிள்ளையான் கொலைக்குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டு அக்குழியினுளேயே புதைக்கப்பட்டார்கள்". 

கொலைக்குழுவின் உறுப்பினர் ஒருவன் மேலும் பேசும்போது இக்கடத்தல்களிலும், அதன் பின்னரான கூட்டுப் பாலியால் வன்புணர்வு, படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்ட பிள்லையான் கொலைக்குழு மிருகங்களின் பெயர் விபரங்களையும் குறிப்பிட்டான்.

"கருணா துணைராணுவக் கொலைக்குழுவில் இருந்த பிள்ளையான் என்பவனே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ராணுவப் பிரிவின் அதியுச்ச தளபதியாக அப்போது செயற்பட்டு வந்தான். அவனே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கொலைக்குழுவுக்கும் இலங்கை அரசாங்கத்தின் ராணுவ புலநாய்வுத்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பாளராகவும், தொடர்பாளனாகவும் அப்போது செயற்பட்டு வந்தான். அவனைக் கொண்டே இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறை தமிழர்களை வேட்டையாடி வந்தது" என்று ஜெயராஜ் தொடர்ந்து எழுதுகிறார்.

படுகொலைகளின் பின்னர்.........

மகிந்த ராஜபக்ஷவின் இனக்கொலையரசு 2005 இல் பதவியேற்று சில நாட்களிலேயே இந்தக் கொடூரங்களை பிள்ளையான் புரிந்திருந்தான். மாசி மாதம் 2006 இல் ஜெனீவாவில் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு போகவேண்டிய தேவை இனக்கொலையாளி மகிந்தவுக்கு இருந்தது. ஆனால், பேச்சுவார்த்தைகளை குழப்பி மீண்டும் போரிற்குச் செல்வதே மகிந்த அரசின் உள்நோக்கமாக இருந்தது. ஆகவே, இக்கடத்தல்கள் பற்றிய செய்திகள் வெளியே கசிந்தபோது உடனடியாக இதனை தனக்குச் சாதகமாகப் பாவித்த மகிந்த, பேச்சுவார்த்தைகளைக்க  குழப்புவதற்காகவே இந்தக் கடத்தல் நாடகத்தினை புலிகள் அரங்கேற்றியிருக்கிறார்கள். தமது பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளததைக் காரணமாகக் காட்டி  பேச்சுவார்த்தைகளைப் பகிஷ்கரிப்பதே புலிகளின் நோக்கம் என்று மகிந்த அரசு சர்வதேசப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியது.

மகிந்த அரசின்  பிரச்சாரத்தை அவனுக்கு ஆதரவான செய்திச் சேவைகளும்,இனவாதப் பிரச்சாரப் பத்திரிக்கைகளும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்தன. ஆனால், இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒரு விடயம் யாதெனில் தாமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாக கூறிவந்த மனிதவுரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பும் இக்கடத்தல்கலைப் புலிகளே அரங்கேற்றியதாக மகிந்தவுக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததுதான். அதேவேளை இது தொடர்பாக ஜெயராஜ் கூட புலிகளின் நடகமே என்று சித்திரை 2 மற்றும் 5 ஆகிய தினங்களில் தனது இணையத்தில் எழுதினார்.

"மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு சித்திரை 2 மற்றும் 5 ஆம் திகதிகளில் எழுதியதன்படி, இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து பணியாற்றும் கருணா துனைராணுவக் குழுவினரின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முகமாக, ஜெனீவா பேச்சுக்களில் இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்கவே புலிகள் இந்த கடத்தல் நாடகத்தினை அரங்கேற்றியிருக்கிறார்கள்" என்று எழுதுகிறார்.

தனது தவறினைஉணர்ந்துகொண்ட ஜெயராஜ், இக்கடத்தல்கள் குறித்து உண்மையினை பின்னர் வெளிக்கொணர்ந்திருந்தார். ஆனால், மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்போ இதுகுறித்து வாயே திறக்கவில்லை. மேலும், மார்கழி 13, 2009 இற்குப் பின்னர் அவர்களின் இணையம் எந்தப் புதிய பதிவும் அற்றுக் காணப்பட்டதுடன், 2010 இல் முற்றாகச்  செயலற்றும் போய்விட்டது. ஆக, இந்த அமைப்பினை நடத்தியவர்களின் நோக்கமும், யாருக்காக நடத்தப்பட்டது என்பதும் இதன் மூலம் வெளிச்சமாகிறது.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடனான போர் இலங்கையில் ஓய்ந்துவிட்டாலும் கூட, இலங்கை அரச ராணுவத்தாலும் அதன் கொலைக்குழுக்களாலும் கட்டுப்பாடுகளின்றி இன்றுவரை  மனிதவுரிமை மீறள்கள் நடத்தப்பட்டு வருவதை அனைத்து மனிதவுரிமைக் கண்காணிப்பாளர்களும், செயற்பாட்டாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள் . ஆகவே, இக்காலத்திலில்த்தான், மனிதவுரிமைக் கண்காணிப்பாளர்கள் அல்லது அமைப்புக்களின் தேவை முன்னெப்போதைக் காட்டிலும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், புலிகள் இருந்த காலம்வரை அவர்களைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் எனும் அமைப்பு இன்று முற்றாக காணாமல்ப் போயிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தமிழர் புணர்வாழ்வுக் கழக பணியாளர்களைத் தனது வேட்டை நாய்களான கருணாவையும் பிள்ளையானையும் கொண்டு கடத்திச் சென்று, கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின்னர் குரூரமாகக் கொன்றுபோட்டதன் மூலம் நாட்டில் இயங்கிவரும் அனைத்து மனிதநேய அமைப்புக்களுக்கும், மொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும்  கடுமையான ஒரு செய்தியை மகிந்தவின் இனக்கொலையரசு தெரிவித்திருக்கிறது. மகிந்த அரசின் இந்த கொடூர அராஜகம் இன்றுவரை ஏதோ ஒருவடிவில் தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.

தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்ட சில தினங்களுக்குப் பின்னர் தாயகத்தில் பணியாற்றிவரும் ஏனைய மனிதநேய அமைப்புக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தின் பிரதிநிதியொருவர், இன்று எமது பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட அநீதியினைப் பற்றி நீங்கள் குரல் கொடுக்காது விட்டால் நாளை அதே அநர்த்தம் உங்களுக்கும் நடக்கும் என்று கூறியிருந்தார்.

அவர் அன்று கூறிய வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை முழு உலகும் சில மாதங்களிலேயே உணர்ந்துகொண்டது. 2006 ஆவணியில் மூதூர்  பகுதியினை ஆக்கிரமித்துக்கொண்ட சிங்கள இனக்கொலைப் படைகள் அக்ஷன் பாம் எனப்படும் பிரெஞ்சு மனிதநேய அமைப்பின் 17 உள்ளூர் தமிழர்களை கொன்று தள்ளியிருந்தது. அத்துடன் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின்மீது தொடர்ச்சியாக பல தாக்குதல்களை சிங்களப் படைகளும், கருணா குழு வேட்டை நாய்களும் புரிந்தே வந்திருக்கின்றன. இவர்களின் அழுத்தங்களின் மிக முக்கியமான புள்ளியாக 2008 இல் இனக்கொலை உச்சம் பெற்றிருந்தவேளை வன்னியில் செயலாற்றி வந்த ஐ நா அதிகாரிகள் வெளியேற்றப்பட்டது அமைந்திருந்தது. இனக்கொலையின் இறுதிப் பலியிடல் ஆரம்பமாவதற்கு ஏதுவாக ஐ நா வை கொலைக்களத்திலிருந்து அப்புறப்படுத்திய மகிந்த அரசு, சர்வதேச மற்றும் உள்ளூர் செய்தி நிறுவனங்களை முற்றாகத் தடைசெய்து தனது நரவேட்டையினை இனத்துரோக மிருகங்களின் துணையுடன் மே 18 , 2009 இல் ஆடி முடித்தது.

தனது ஏவுதலின்பேரில் கடத்தப்பட்டுக், கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு , படுகொலைசெய்யப்பட்ட ஏழு பணியாளர்களைப்பற்றிய விசாராணைகளை எடுத்துக்கொள்ள முற்றாக  மறுத்துவிட்ட மகிந்த அரசு, "மனிதவுரிமை மீறள்களுக்கான ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் - 2006" என்று தானே ஆரம்பித்த நாடக் குழுவுக்கோ அல்லது காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகளை நடத்தும் சுயாதீன சர்வதேச அமைப்பிற்கோ(2007) இலங்கையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 16 சம்பவங்களில் ஒன்றாகத் தன்னும் இந்த 7 பணியாளர்களின் கடத்தல் - பாலியல் வன்புணர்வு - படுகொலை கொடூரத்தை சேர்க்க முன்வரவில்லை.

இலங்கை மனிதவுரிமைக் கழகத்தின் தலைவரான ராதிகா குமாரசாமி அவர்கள் பல வேண்டுகோள்களுக்குப் பின்னர் இப்பணியாளர்களின் கடத்தல் மற்றும் காணாமற் போதல் ஆகியவற்றின் விசாராணைகளை நடத்த ஒரு விசாரணைக் குழுவினை அமர்த்தியிருந்தார். ஆனால், ராதிகா கடமையில் இருக்கும் காலத்திலேயேய் இந்த விசாரணைகள் முடிக்கப்பட்டு அறிக்கை அவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதும்கூட அவர் அதனை இறுதிவரை வெளியிடவில்லை என்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இலங்கையின் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் தலைவராக இருந்த ராதிகா பின்னர் ஐ நா வின் யுத்தத்தில் பாதிக்கப்படும் சிறுவர்களின் மனிதவுரிமைகள் தொடர்பான அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பதுதான்.

 

https://www.colombotelegraph.com/index.php/remembering-the-abduction-of-tro-staff-on-29-30-january-2006/

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
On 4/12/2020 at 00:58, ரஞ்சித் said:

துரோகதின் நாட்காட்டி : நாள் 11, சித்திரை 2004

கருணாவின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பல போராளிகள் மீட்பு, ஆயுதங்களைக் கைவிட்டு பின்வாங்கிய கருணா குழு 

வாகரையில் கருணா குழு மீது நடத்தப்பட்ட கொமாண்டோ ரகத் தாக்குதல்களில் பலபோராளிகளை புலிகள் விடுவித்ததுடன், பல ஆயுதங்களையும் மீட்டிருக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் 120 மி மீ எறிகணைச் செலுத்திகள் மூன்று, அவற்றுக்கான எறிகணைகள் 1,000, 82 மி மீ எறிகணைச் செலுத்திகள் 4, அவற்றுக்கான எறிகணைகள் 370, பெருமளவு 5 மி மீ மோட்டார்கள், 50 கலிபர் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் 2 மற்றும் 300 சிற்றாயுதங்கள் ஆகியவை அடங்குகின்றன.

 

 

 

ஐயனே, இந்த 5 மிமீ மோட்டார் என்று எதுவுமே இல்லை. எழுத்துப்பிழை ஏதோ ஏற்பட்டுள்ளது

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2021 at 10:10, நன்னிச் சோழன் said:

 

ஐயனே, இந்த 5 மிமீ மோட்டார் என்று எதுவுமே இல்லை. எழுத்துப்பிழை ஏதோ ஏற்பட்டுள்ளது

தவறுதான் சோழன், ஆனால் இப்போது அதனைத் திருத்த முடியாதே?!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, ரஞ்சித் said:

தவறுதான் சோழன், ஆனால் இப்போது அதனைத் திருத்த முடியாதே?!

முறைப்பாடு மூலம் கேட்டுப் பாருங்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

கொலைகாரப் புலிகளா அல்லது துணைராணுவக் குழுக்களை இயக்கும் அரசா?

The forgotten civilians killed by LTTE : Kebithigollewa massacre 15 June 2006 | ONLANKA News - Sri Lanka

கெப்பிட்டிக்கொல்லாவைப் பகுதியில் 2006 ஆம் ஆண்டு ஆனி மாதம் சிவிலியன்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னாலிருக்கும் உண்மையான சூத்திரதாரிகள் யாராக இருக்கலாம் என்பதுபற்றி  ஆய்வாளர் நிமால், இலங்கைத் தமிழ்ச் சங்கம் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினைத் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு, தமிழ்ப் பகுதிகள் மீது வானிலிருந்து கடுமையான குண்டுவீச்சினை ஆரம்பித்திருக்கும் அரசு, தனது தாக்குதல்களை ஒரு யுத்த நிறுத்த மீறலாகவோ அல்லது வலிந்து போரிற்குள் புலிகளை இழுத்துவிடும் கைங்கரியமாகவோ பார்க்காமல், கெப்பிட்டிக்கொல்லாவைப் பகுதியில் சிவிலியன் பேரூந்து மீது இனம் தெரியாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று நிறுவியவாறு, இத்தாக்குதலுக்கான வெறும் பழிவாங்கும் தாக்குதலே தனது வான்வழிக் குண்டுவிச்சு என்று கூறத் தொடங்கியிருக்கிறது.

Bomb Drops by Sri Lanka Air Force Jet | KILINOCHCHI: A STRIN… | Flickr

சமாதானத்திற்கு தாம் எப்போதும் முன்னுரிமை கொடுத்துவருவதாகக் கூறிக்கொள்ளும் அதேநேரம், பேரூந்து மீதான தாக்குதலினை காரணமாக வைத்து, தமிழர் மீது பழிவாங்கும் தாக்குதலாக வான்குண்டுவீச்சினை மேற்கொண்டுவரும் அரசு, உண்மையிலேயே செய்துவருவது யாதெனில் தன்னிச்சையாக யுத்தத்தினை ஆரம்பித்திருப்பதுதான்.

கெப்பிட்டிக்கொல்லாவைப் பேரூந்து மீது இலக்குவைத்து வேண்டுமென்றே நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பெருமளவு சிறுவர்கள் உட்பட குறைந்தது 60 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். எதிர்பார்க்கப்பட்டதுபோலவே இத்தாக்குதல் கடுமையான சர்வதேச கண்டனங்களை எதிர்கொண்டதுடன், மிகவும் ஈவு இரக்கமற்ற மிருகத்தனாமன தாக்குதல் என்றும் விமர்சிக்கப்பட்டது.

பல நாடுகள் இத்தாக்குதலினைக் கண்டித்ததுடன், இதுதொடர்பான  அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொண்ட போதும், அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகள் இன்னொரு படி மேலே சென்று உடனடியாகவே இத்தாக்குதல்களுக்கான பொறுப்பினை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தின. அதுமட்டுமல்லாமல் பல இணையவழி பத்திரிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் ஒன்றில் இத்தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது புலிகள் என்றோ அல்லது, அல்லது அவர்களே பிரதான சந்தேகநபர்களாக இருக்கவேண்டும் என்றோ கட்டியம் கூறியிருந்தன.

இத்தாக்குதல் தொடர்பான அரசின் நிலைப்பாடு

அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே அரசும், அதன் ஆதரவாளர்களும் தாக்குதல் பற்றிய செய்திகள் வந்தவுடனேயே இதற்குப் புலிகள்தான் பொறுப்பு என்று உடனடியாகவே கூறத் தொடங்கிவிட்டன.

Jehan Perera (@PereraJehanpc) | Twitter

தேசிய சமாதானப் பேரவையின் பிரதான திட்டமிடல் அதிகாரியான ஜெகான் பெரேரா இதுபற்றிக் கூறுகையில் "இத்தாக்குதல் மூலம் புலிகள் கூறும் செய்தி என்னவென்றால், தாம் ஒருபோதுமே தமது வன்முறைகளை நிறுத்தப்போவதில்லை என்பதைத்தான். தமது நிபந்தனைகள் ஏற்கப்படாதவிடத்து தாம் அப்பாவிப் பொதுமக்களைக் கூடக் கொல்லத் தயங்கப்போவதில்லை என்பதைத்தான் இதன்மூலம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலவேளை அரசாங்கத்தினை வலிந்து போர் ஒன்றிற்குள் இழுக்கவே அவர்கள் இத்தாக்குதல் மூலம் முயன்றிருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

அவ்வாறே இத்தாக்குதல் பற்றி மிகவும் ஆக்ரோஷமாக, எதிர்பார்த்தபடியே வெளியே வந்து பேசிய இலங்கை ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பின்வருமாறு முழங்குகிறார்,

"இந்தக் கொடூரமான தாக்குதல் நடந்த இடத்திற்கு நான் சென்று பார்வையிட்டேன். என்னைப் பொறுத்தவரை புலிகள் அமைப்பு அண்மைக்காலங்களில் மேற்கொண்ட மிகக்கொடூரமான படுகொலைகளில் இது மிகவும் கொடூமையானது".

From Hesitant Compromise To Resolve: Mahinda Rajapaksa In 2006 - Colombo Telegraph

"கெப்பிட்டிக்கொல்லாவை, கனுகஹ மற்றும் இப்பகுதிகளைச் சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயணித்த இப்பேரூந்து மீது புலிகள் கிளேமோர் தாக்குதலினை நடத்தியதாக நான் கேள்விப்பட்டபோது மிகுந்த வேதனையடைந்தேன்". 

"தமது குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், உயர்கல்விப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும், புலிகளின் முன்னைய தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட ஊர்காவல்ப் படைவீரர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்றவர்களும் புலிகளினால் இலக்குவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இக்கொடுமையான தாக்குதலினை நானும், இந்நாட்டு மக்களும், சர்வதேசமும் மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்கிறோம்".

"தனது சொந்த மக்களுக்கான விடுதலையினை நோக்கிப் போராடுவதாகக் கூறிவரும் புலிகளின் கடந்த 20 வருடகால சரித்திரத்தினைப் பார்க்கும்போது, கண்மூடித்தனமான படுகொலைகளையும், வன்முறைகளையும் மட்டுமே அது கொண்டிருப்பதையும், அதன்மூலம் லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதையும், இன்னும் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதையும் தவிர வேறு எதனையுமே அவர்களின் போராட்டம் கொண்டுவரவில்லை என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்".

"மக்களின் விடுதலைக்காகப் போராடுபவர்கள் இவ்வாறான வன்முறைகளில் ஒருபோதுமே ஈடுபடப்போவதில்லை".

"இந்நாட்டில் வாழும் அனைவரும் கெளரவத்துடனும், தன்மானத்துடனும் வாழும் வகையில் நிரந்தரமான அமைதியினை சமூக -  பொருளாதார  - ஜனநாயக வழியில் கொண்டுவரப்படும் நடைமுறையின்மூலம் ஒரு நிரந்தரமான சமாதானத் தீர்வொன்றினைக் கொண்டுவர நாம் முழுமனதுடன் முயற்சியெடுத்து வருகிறோம்".

"புலிகள் எவ்வளவுதான் காட்டுமிராண்டித்தனமான , மிலேச்சத்தனமான படுகொலைகளில் ஈடுபட்டாலும் கூட, நாம் எமது சமாதானத்தை அடையும் முயற்சிகளிலிருந்து ஒருபோதுமே விலகிடப்போவதில்லை. மக்கள் அனைவரும் சமாதானமாக, அச்சமின்றியும், ஒருவரில் ஒருவர் நம்பிக்கை கொண்டு வாழும் நிலையினையும் உருவாக்குவோம்". என்று கூறுகிறார்

ஆகவே, மகிந்தவைப் பொறுத்தவரை விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் புலிகளே நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் காரனமானவர்கள் என்பதுடன், சமாதானத்துக்கான மகான் ஆன தானும், தனது அரசாங்கமும் தொடர்ந்தும் சமாதானத்திற்காகப் பாடுபடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

உண்மைதான். சமாதானத்திற்கான மகானோ அல்லது அவரது அரசோ நிச்சயமாக அப்பாவிகள் மீது வானிலிருந்து குண்டுகளைப் பொழிவது எங்கணம்?  அல்லது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகுவது எங்கணம்? சமாதானத்திற்கான மகானான மகிந்த புலிகளை வரலாற்று ரீதியான வன்முறையாளர்கள் என்று கூறினாலும், அவர் அரியணை ஏறியதன் பின்னரே வடக்கிலும் கிழக்கில் வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றது என்பதையோ அல்லது அப்பாவிகள் வேண்டுமென்றே இலக்குவைத்துக் கொல்லப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதோ சாத்தியமானதா?

Edited by ரஞ்சித்
 • Thanks 2
 • Sad 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மேலும் கூறும்போது, தமிழ் மக்கள் மீது சிங்கள மக்களால் வன்முறைகள் நடைபெறுவதைத் தூண்டும் விதமாகவே புலிகள் இத்தாக்குதலினை நடத்தியதாகவும், இதன்மூலம் தமிழருக்கெதிரான வன்முறைகள் சர்வதேச நாடுகளால் விமர்சிக்கப்பட்டு, புலிகளின் இலட்சியமான தனிநாட்டிற்குச் சாதகமான நிலைப்பாடு அச்சர்வதேச நாடுகளால் எடுக்கப்படலாம் என்று புலிகள் கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மகிந்தவின் கூற்றுப்படி  சர்வதேசமோ  பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணை வழங்கும் இணைத்தலைமை நாடுகளும் இத்தாக்குதலை மிகவும் வன்மையாகக் கண்டித்ததாகவும், புலிகளே இத்தாக்குதலுக்குப் பொறுப்பென்று கூறியதாகவும் , பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலினை அவர்கள் கண்டிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடோ அல்லது அமைப்போ இத்தாக்குதலினை புலிகள் மீது சுமத்த முன்வரவில்லை என்பதுகுறிப்பிடத் தக்கது.

மேலும், தமிழர்களின் தாயகத்திற்கான புலிகளின் விடுதலைப் போராட்டம் என்று கூறுவதைத் தவிர்த்து புலிகளின் தாயகத்திற்கான விடுதலைப்போராட்டம் என்றே இந்நாட்களில் அரசு பேசி வந்தது. அதாவது, தமிழர்கள் தாயகம் கேட்கவில்லையென்றும், புலிகளே பிரிவினைவாதம் கோரிப் போராடுவதாகவும் அது சர்வதேசத்தில் காட்ட முயற்சித்துவந்தது. புலிகளையும் தமிழர்களையும் தனித்தனியே தாம் பிரித்து நோக்குவதாகக் கூறிய அரசாங்கம், கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதலின் பின்னர் பாரிய குண்டுவிச்சூத் தாக்குதல்களை வன்னி மீது, அதி உயரத்தில் பறக்கும் மிகையொலி விமானங்களைக் கொண்டு நடத்தத் தொடங்கியிருக்கிறது. தமது அரசியலுக்காக புலிகளையும் தமிழர்களையும் பிரித்து பேசும் அரசு, தனது வான்படையின் அதியுயர் குண்டுவீச்சுக்களின்போது புலிகளையும் தமிழர்களையும் எவ்வாறு பிரித்தறிந்து தாக்குதல்களை நடத்துகிறது என்பது புரியாத புதிர்தான்.

மகிந்தவின் கூற்றையே அரசின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளாரான கெகெலியே ரம்புக்வல்லவும் பிரதிபலித்திருந்தார். "இது ஒரு மிக கொடூரமான தாக்குதல். இத்தாகுதலின்மூலம் சிங்களவர்களைக் கோபப்படுத்தித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவே புலிகள் முயன்றிருக்கிறார்கள்" என்று அவரும் தன் பங்கிற்கு கூறியிருந்தார். அவ்வாறே அரசின் சமாதானத் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் கொல்லப்பட்டவர்களின் மரணச் சடங்கில் கலந்துகொண்டு பேசும்போது, "இத்தாகுதலினால் சிங்களவர்கள் கோபப்பட்டு தமிழர்கள் மீது இனரீதியான வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், உங்களைக் கோபப்படுத்தி இனச்சுத்திகரிப்பொன்றை தமிழர் மீது நிகத்தவே புலிகள் முயல்கிறார்கள். ஆகவே நீங்கள் அமைதியாக இருக்கவேண்டும்" என்றும் கூறியிருந்தார். ஆகவே, அரசின் கூற்றுப்படி, புலிகளின் தாக்குதல்களுக்காக தமிழர் மீது பதில்த் தாக்குதல்களை சிங்களவர்கள் நடத்தத் தேவையில்லை, ஆனால் புலிகளை முற்றாக அழிக்கும் அரசின் முயற்சிகளுக்கு சிங்களச் சமூகம் முழுமையான ஆதரவினை நல்கினாலே போதுமானது என்பதுதான் அன்று சிங்களவர்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்திற்கும் அரசு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறது. அதாவது, சிங்கள மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதன் மூலம், சிங்களவர்களைக் கோபப்படுத்தி, தமிழர்கள் மீது இனரீதியான பழிவாங்கல் தாக்குதல்களை நடத்தி, தமது தனிநாட்டிற்கான கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதே புலிகளின் நோக்கம். ஆனால், சிங்களவர்களைச் சாந்தப்படுத்தி, அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாவண்ணம்  அவர்களை அமைதிப்படுத்தி, சமாதானத்தின்  மகானான மகிந்தவும் அவரது அரசும் இப்பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று நிரந்தர சமாதானம் இந்நாட்டில் மலர அயராது உழைக்கிறார்கள் என்பதுதான்.

அதேவேளை அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தின் பேச்சாளரான ஷோன் மக்கோர்மக் இத்தாக்குதல் பற்றிப் பேசும்போது, "இது நிச்சயமாக புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்தான். புலிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல் உத்திகள் எல்லாமே இந்தத் தாக்குதலின்போது பாவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் என்று கூறிக்கொண்டே புலிகள் இத்தாக்குதலினை நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தைகளைக் கடுமையாகப் பாதிக்கப்போகும் இத்தாக்குதல்கள் உடனடியாக அவர்களால் நிறுத்தப்பட்டு, உடனடியாக தமது வன்முறைகளை அவர்கள் கைவிட்டு, இலங்கை அரசுடன் நேரடியான பேச்சுவார்த்தைகளில்  ஈடுபடவேண்டும் " என்று  கூறியிருந்தார். 

அதுசரி, இத்தாக்குதலினைப் புலிகள்தான் நடத்தியதாக இவர் எப்படி இவ்வளவு உறுதியாகக் கூறுகிறார்? இத்தாக்குதலினைப் புலிகளே நடத்தினார்கள் என்பதை இலங்கை அரசாங்கத்தைத் தவிர இவருக்கு வேறு யார் சொல்லியிருக்கக் கூடும்? ஆகவே, அரசின் அறிக்கையினை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன், மகிந்தவின் சமாதானத்திற்கான முயற்சிகளை முழு மனதோடு வரவேற்பதாகவும் கூறியிருக்கும் அமெரிக்கா, வன்னி மீதான அரச விமானப்படையின் கொடூரமான குண்டுவீச்சுக்கள் பேச்சுவார்த்தையினைப் பாதிக்காதெனும் நிலைப்பாட்டினையும் எடுத்திருப்பதுபோலத் தெரிகிறது.

ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய் செய்தி என்னவென்றால், இலங்கையில் அமெரிக்காவின் பாதுகாப்புத் தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் அக்கறைகள், தமது நலன் தொடர்பான செயற்பாடுகள், தமது திட்டங்கள் ஆகியனவும் மகிந்த தலைமையிலான சிங்களவர்களின் அக்கறைகளும், நலன்களும் ஒன்றில் ஒத்துப்போகலாம் அல்லது வேறுபடலாம், அல்லது தமிழர்களைப் பாவித்து தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அது முயலலாம். 

ஆனால், அண்மைக்காலமாக தமிழரின் பிரச்சினைகள், அவலங்கள் பற்றி அமெரிக்கா நடுநிலையான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. அது மட்டுமல்லாமல், தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையினைக் கொண்டிருக்கிறார்கள் என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான செயலாளர் ரிச்சார்ட் பெளச்சர் அண்மையில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

ஆனால், தனது நலன்கள் என்று வரும்போது அமெரிக்கா சந்தர்ப்பத்திற்கேற்றவாறு காய்நகர்த்தி வருகின்றது என்பதுதான் இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளக் கூடியது.

இத்தாக்குதலின் பின்னர் கருத்து வெளியிட்ட கொழும்பு மாவட்ட முன்னாள் கத்தோலிக்க ஆயர் துலீப் டி சிகேராவும் மகிந்தவின் பிரச்சார வண்டிமீது தாவி ஏறி பின்வருமாறு கூறுகிறார், " அப்பாவிச் சிங்கள மக்கள் மீது கெப்பிட்டிக்கொல்லாவைப்பகுதியில் புலிகளால் வேண்டுமென்று நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினை அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து கண்டிக்க முன்வரவேண்டும். தமது நாளாந்த அலுவல்களைப் பார்க்கப் பயணித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட அப்பாவிப்பொதுமக்கள் 64 பேரின் படுகொலைகள் மனித நேயத்திற்கு எதிரான குற்றமாகும்" என்று கூறுகிறார். தனது இக்கூற்று இனங்களுக்கிடையே பகைமையினை உருவாக்கும் என்று தெரிந்தும், தமிழர்மீதான பகையுணர்வுடன் கருத்திட்ட அவர், "இத்தாக்குதலின்போது பாவிக்கப்பட்ட தொழிநுட்பமும், இத்தாக்குதலின் துல்லியமும் நிச்சயமாக இதனைப் புலிகள் தான் செய்திருப்பதாகத் தெரிகிறது" என்றும் அவர்  கூறினார். 

இத்தாக்குதல் தொடர்பாக எந்தவிதமான விசாரணைகளையும் நடத்த விரும்பாத அரசு உடனடியாகவே புலிகள் மீது பழியைச் சுமத்தியதைப் போன்றே முன்னாள் ஆயரும் உடனடியாகவே இத்தாக்குதலினைப் புலிகளே நடத்தியதாகக் கூறியதுடன், போகிற போக்கில், "சிங்களவர்கள் எவரும் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றும் இறுதியாகக் கூறியிருந்தார். ஆகவே, மகிந்த, ரம்புக்வெல்ல, சிறிபால டி சில்வா, அமெரிக்க பேச்சாளர் ஆகியோர் வரிசையில் முன்னாள் ஆயரும் புலிகள் எதற்காக இத்தாக்குதலினை நடத்தினார்கள் என்பதனை மிகத் தெளிவாகவே தெரிந்திருந்ததாகத் தெரிகிறது. அதாவது, சிங்களவர்களைக் கோபப்படுத்தி தமிழர்கள் மீது இனச்சுத்திகரிப்பொன்றினை நடத்தி, அதன்மூலம் புலிகளுக்கான தாயகத்தை அடைவதே புலிகளின் இத்தாக்குதலின் பின்னாலிருந்த நோக்கம் என்று அனைவருமே சொல்லிவைத்தாற்போல் புரிந்துகொண்டிருப்பது வியப்புத்தான்.

இதிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் யாதெனில், முன்னாள் ஆயரின் அறிக்கைக்குப் பின்னர் அவரை மேற்கோள்காட்டி பேசிய பலரும், அவரைப் போன்றே அரசை உறுதியாக ஆதரித்ததுடன், இத்தாக்குதலுக்குப் பழிவாங்கலாக சிங்களவர்கள் சார்பில் அவர்களின் அரசு வன்னிமீது கட்டவிழ்த்து விட்டிருந்த கொடூரமான வான்வழித் தாக்குதல்களைனை சரியான நடவடிக்கைதான் என்றும், சமாதானதிற்குப் புலிகளை இழுத்துவரும் ஒரு முயற்சியென்றும் கூறியிருந்தனர்.

இன்னொரு வகையில் சொல்லப்போனால், புலிகளால் கொல்லப்பட்டதாக அரசு கூறும் 64 சிங்களப் பொதுமக்களுக்கு மேலதிகமாக அரசின் பழிவாங்கல்த் தாக்குதல்களில் இன்னும் பல நூற்றுக்கணக்கான தமிழர்களும் கொல்லப்படுவதை இவர்கள் சரியென்று ஏற்றுக்கொண்டிருப்பதும் தெளிவாகிறது. 

"ஆயரே சொல்லிவிட்டார், ஆகவே இத்தாக்குதலைச் செய்தது புலிகள்தான், ஆகவே வன்னிமீது விமானத் தாக்குதல் நடத்துவது நியாயமானதுதான்" என்று சாதாரண சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இலங்கையில் அரசியற்களம் ஒன்றி மிகவும் திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்பட்டு வருவது கண்கூடு. 

ஆக, இதுஅவரை அரசினாலும் அதன் ஆதரவாளர்களாலும் இத்தாக்குதலினை புலிகள் ஏன் நடத்தினார்கள் என்பதற்கான காரணங்களாக  பின்வருபவை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பலவிடங்களிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

- பேரூந்தில் பயணிப்பது அப்பாவிச் சிறார்களும், பொதுமக்களும்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே புலிகள் இத்தாக்குதலினை நடத்தினார்கள்

- இத்தாக்குதலின்மூலம் சிங்களவர்களைக் கோபப்பட வைத்து தமிழர் மீது இனரீதியான பழிவாங்கும் வன்முறைகளை அவர்கள் நடத்த ஊக்குவிப்பது.

- இலங்கையரசை வலிந்து ஒரு போருக்குள் இழுப்பது

- அப்பாவிகளைக் கொல்வதன்மூலம், தமது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்வது.

- சிங்களவர் மீது இனச்சுத்திகரிப்பொன்றை நடத்துவது.

ஆனால், எழுந்தமானமாக, எதுவித விசாரணைகளோ அல்லது சாட்சியங்களோ இல்லாமல் அரசாலும், பரந்த சிங்களச் சமூகத்தின் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுவரும் ஆதாரமற்ற இக்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஏதுநிலைகள் இலங்கையில் இன்று காணப்படுகின்றனவா? 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் சிங்களவர்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்படுகிறார்கள் எனும் மாயை

அரசு இங்கே குறிப்பிடும்  சிங்களவர்கள் மீதான புலிகளின் இனச்சுத்திகரிப்புச் சம்பவம் இடம்பெற்ற கெப்பிட்டிக்கொல்லாவைப் பகுதியென்பது தமிழரின் தாயகம் என்று அவர்கள் கோரும் பகுதிக்கு வெளியிலேயே அமைந்துள்ளது. ஆகவே, பேரூந்து மீதான தாக்குதல் சம்பவம் இனச்சுத்திகரிப்பின் அடிப்படையிலானது எனும் புனைவு அர்த்தமற்றதாகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், புலிகள் தமது போராட்டம் சிங்களவர்களுக்கு எதிரானது அல்ல என்று தொடர்ச்சியாகக் கூறிவருவதுடன் தமிழர் தாயகத்தின் எல்லைகளுக்குள் அவர்களுக்கான சுயநிர்ணயத்திற்கான போராட்டமே அதுவென்றும் கூறிவருகிறார்கள்.

இத்தாக்குதல் மூலம் அரசை புலிகள் பணியவைக்க முனைகிறார்கள் எனும் புனைவு

இத்தாக்குதலின்பின்னர் பல நடுநிலையாளர்கள் வெளியிட்ட கருத்துக்களில் புலிகள் இத்தாக்குதலினைச் செய்திருக்க வாய்ப்பில்லையென்பது தெரிகிறது. அதாவது, இவ்வகையான அப்பாவிகள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலின் மூலம் தமக்கு ஏற்படப்போகும் களங்கம் தொடர்பாக புலிகள் நன்கு தெரிந்தே வைத்திருப்பதால், இவ்வாறான தாக்குதல் ஒன்றினை அவர்கள் செய்திருக்க வாய்ப்பில்லையென்று இவர்கள் கூறுகிறார்கள். புலிகள் இத்தாக்குதலினை நடத்தியிருந்தால், அவர்கள் மீது சர்வதேசத்தின் முழுக் கண்டனங்களும் வந்து குவிவதோடு, இத்தனை காலமும் அவர்கள் சம்பாதித்து வைத்த நற்பெயரையும் அது வெகுவாகப் பாதித்துவிடும் என்பதும் அவர்கள் அறியாதது அல்ல. அரசை நிர்ப்பந்திகவே புலிகள் சிங்கள அப்பாவிகளைக் கொன்றார்கள் என்றால், சர்வதேசமோ அல்லது சிங்கள மக்களோ தொடுக்கும் விமர்சனங்களை விட, தமிழர்களே புலிகளைக் கடுமையாக விமர்சிக்கும் சாத்தியமும் இருக்கின்றது. அரசை நிர்ப்பந்தித்து பணியவைக்கவே புலிகள் இத்தாக்குதலை நடத்தியிருந்தால், இதனால் அவர்கள் எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லையென்பதோடு, இருக்கும் அனைத்து நன்முயற்சிகளையும் இழப்பார்கள் என்பது உண்மை. ஆகவே இந்த பணியவைக்கும் நிர்ப்பந்த புனைவும் பொய்யென்றாகிவிடுகிறது. அப்படியானால், சமாதானப் பணியகத்தின் ஜெஹான் பெரேராவோ அல்லது அவர்போன்ற சிங்கள இனவாதிகளோ செய்வது இச்சந்தர்ப்பத்தையும்  புலிகளை கொடூரமான பயங்கரவாதிகள் என்று பிரச்சாரப்படுத்தத்தான் என்பது தெளிவு. 

அத்துடன், இத்தாக்குதலுக்குப் பின் வன்னிமீது தொடர்ச்சியாக வாந்தாக்குதலை நடத்திவரும் அரசு, புலிகளின் நிர்ப்பந்தத்திற்கு தாம் அடிபணியப்போவதில்லை என்று தெளிவாகக் கூறியபின்னர் "அரசை நிர்ப்பந்திக்கவே புலிகள் தாக்குதலை நடத்தினார்கள்" என்பது பொருளற்றுப் போய்விடுகிறது. ஆகவே, எதற்கும் பிரியோசனப்படாத, கடுமையான சர்வதேச கண்டனங்களை மட்டுமே கொண்டுவரக்கூடிய இத்தாக்குதலை புலிகள் செய்யவேண்டிய தேவை என்ன? ஆனால், இத்தாக்குதல் மூலம் அரசு தனக்குத் தேவையான அனைத்தையுமே சாதித்துக் கொண்டது. அதாவது தாக்குதல் நடந்தவுடனேயே அது புலிகளால்த்தான் நடத்தப்பட்டதாக அடித்துக் கூறிய அரசு, தனது பிரச்சார வண்டியில் சர்வதேசத்தின் சில நாடுகளையும், புலியெதிர்ப்பாளர்களையும் ஏற்றிக்கொண்டது. முடிவாக, இத்தாக்குதல் மூலம் நண்மை அடைந்த ஒரு தரப்பு இருக்குமென்றால் அது நிச்சயமாக இலங்கை அரசே ஒழிய வேறு எவரும் இல்லை என்பது தெளிவு.

அரசை வலிந்து போருக்குள் இழுக்கும் உத்தியே இத்தாக்குதல் எனும் புனைவு

இத்தாக்குதல் அரசை போர் ஒன்றிற்குள் வலிந்து இழுக்கும் ஒரு முயற்சியே என்று கூறிவரும் அரசதரப்பு முக்கியஸ்த்தர்கள் அல்லது சிங்கள இனவாதிகளின் கூற்றின் பின்னாலிருக்கும் சூட்சுமத்தை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். அதாவது போரை ஆரம்பித்தலுக்கும், போரிற்குள் உள்வாங்கப்படுவதற்கும் இடையே பாரிய வேறுபாடு இருக்கிறது. போரினை ஆரம்பிக்கும் ஒரு தரப்பினை சர்வதேச சமூகமும், அமைப்புக்களும் குற்றவாளிகளாகப் பார்க்கும்போது, தம்மை போர் ஒன்றிற்குள் வலிந்து இழுத்துவிட்டார்கள் என்று கூறிக்கொண்டு, பழிவாங்கும் நடவடிக்கைகளாக எதிரிகளின் பகுதி மீது கொடூரமான வான்வழித் தாக்குதல்களை நடத்துவதை சர்வதேசம் நியாயமாகப் பார்ப்பதுமட்டுமல்லாமல், அது ஒரு போர்நடவடிக்கை என்று கருதப்போவதில்லை. சிங்கள அரசு செய்வது இதைத்தான். அதாவது இத்தாக்குதல் மூலம், புலிகள் தம்மைப் போருக்கு அழைத்துவிட்டார்கள் என்று கூறிக்கொண்டே புலிகள் மீதான நேரடியான தாக்குதல்களை அது இன்று நடத்தத் தொடங்கியிருக்கிறது. அரசைப் பொறுத்தவரை இந்த வான் தாக்குதல்களோ அல்லது புலிகள் மீதான வேறு எந்தத் தாக்குதல்களோ வேறு வழிகள் இல்லாமையினால் நடத்தப்படுகின்றனவே அன்றி, தாம் போரினை ஆரம்பிக்கவில்லை என்று சர்வதேசத்திற்குக் காட்டிவருகிறது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், இத்தாக்குதல் மூலம் புலிகளே போரினை ஆரம்பித்திருப்பதாக அரசு கூறத்தொடங்கியிருக்கிறது.


இங்கு அரசின் சமாதானச் செயலகத்தின் தலைவர் பாலித கொஹோண கூறியதையும் நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம்." புலிகள் எம்மை யுத்தம் ஒன்றிற்குள் இழுத்துவிடுவதற்கான எவ்வாறான முயற்சிகளை எடுத்தாலும்கூட, போரினை முதலில் ஆரம்பிப்பது  நாமாக இருக்கப்போவதில்லை". ஆக, இவர் சொல்வதுகூட, போரினை ஆரம்பிப்பதற்கும், போரிற்குள் இழுத்துவிடப்பட்டு பின்னர் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்துவதற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. அரசு இங்கே செய்வது இத்தாக்குதலினைப் பாவித்து போரினை ஆரம்பிப்பதுதான். ஆனால், தாமே ஆரம்பித்த போரினை, புலிகளின் தூண்டுதலினாலேயே அது ஆரம்பிக்கப்பட்டதென்றும், தாம் செய்வது போர் அல்ல , மாறாக புலிகளுக்கான தண்டனையே என்றும் காரணம் கூறுகிறது. 
இதில் வேடிக்க என்னவென்றால், போரினை ஆரம்பிக்கும் நோக்கம் புலிகளுக்கிருந்தால், அதனை நிச்சயம் அவர்கள் நேராக செய்திருப்பார்கள், 64 அப்பாவிகளைக் கொன்று சர்வதேச கண்டனங்களை சுமந்துகொண்டு ஆரம்பிக்கவேண்டிய தேவை அவர்களுக்கில்லை. அரச ராணுவம் மீது நேரடியாகவே தாக்குதல் நடத்தும் வல்லமை புலிகளுக்கு இருக்கிறது என்பது தெரியாத விடயமல்ல. ஆகவே, அரசின் இந்த "வலிந்த போருக்கு அழைத்தல்" எனும் புனைவும் அர்த்தமற்றதாகிவிடுகிறது.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆனால், புலிகளே பேரூந்துமீது தாக்குதலை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிக்கொண்டு, இது ஒரு வலிந்து போருக்கு இழுக்கும் புலிகளின் உத்தியென்றும் கூறிக்கொண்டு, இந்த வம்பிற்கிழுக்கும் புலிகளின் செயலுக்குப் பதிலடியாக வன்னிமீது கடுமையான வான் தாக்குதலக்களை நடத்தத் தொடங்கியிருப்பதோடு, இது ஒரு போர் நடவடிக்கை இல்லையென்றும், புலிகளின் உசுப்பேற்றலுக்கான பதிலடியே இதுவென்றும், இந்த வான் தாக்குதல்களால் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கோ, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கோ எவ்வித தடங்கலும் ஏற்படாது என்று இலங்கை அரசாங்கம் கூறியிருக்கிறது.

சிலவேளை, வானிலிருந்து குண்டுகளை வீசுவதன் மூலம் சமாதானத்தை அடைந்துவிடலாம் என்று அரசு கருதுவதுபோலத் தெரிகிறது. அல்லது, வானிலிருந்து மலர் தூவுவதற்காகக் எடுத்துச் சென்ற பொதிகளில் எவரோ விசமத்தனத்திற்கு குண்டுகளை மாற்றி வைத்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

புலிகளின் பகுதிகள் மீது உயரப் பறந்து குண்டு வீச்சில் ஈடுபடுவதன் மூலம் தமிழர் தாயகத்திற்கு வெளியே, தொலைவில் புலிகளால் நடத்தப்படுவதாக அரசு கூறும் கண்ணிவெடித் தாக்குதல்களை நிருத்துவது சாத்தியமா?

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை அப்பட்டமாக மீறிக்கொண்டு, வன்னிமீது வான் தாக்குதல்களை தொடுத்து , தமது நடவடிக்கை யுத்த நிறுத்தத்தைப் பாதிக்காதென்றும், சமாதான முயற்சிகளில் தமது அரசாங்கம் தொடர்ந்தும் இதயசுத்தியுடன் செயற்பட்டுவருவதாகவும் கூறும் மகிந்த, வன்னி மீதான தாக்குதல்கள் வெறும் பதிலடி நடவடிக்கைகள் மட்டுமே என்றும் கூறியிருக்கிறார். மகிந்தவின் கூற்றினை வழிமொழிந்த பாதுகாப்புச் சபைப் பேச்சாளர் கெகெலிய ரம்புக்வல்ல , " யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மிகவும் உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறோம், தேவைப்பட்டால் அதனை இன்னமும் மெருகூட்டும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபடத் தயாராக இருக்கிறது" என்று தனது அரசாங்கத்தின் சமாதானத்தின் மீதான பற்றுதலை குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

நடைமுறையிலிருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மேம்படுத்தப்போவதாக  ரம்புக்வல்ல கூறுவது உண்மையென்றால், இனிவரும் காலங்களில் "புலிகளின் தாக்குதல்கள்" என்று அரசால் குற்றஞ்சாட்டப்படும் அனைத்துத் தாக்குதல்களுக்கும் பதிலடியாக தமிழர் தாயகம் மீது அரசு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்திக்கொண்டு அவை புலிகளுக்கான வெறும் "பதிலடிகள்" மாத்திரமே என்றும், இதனால் சமாதான ஒப்பந்தம் பாதிப்படையாது என்றும் கூறப்போகிறது.

எது எவ்வாறு இருந்தாலும், கெப்பிட்டிக்கொல்லாவைப் பேரூந்து மீதான தாக்குதலை புலிகள் மீதான வான் தாக்குதல்களை ஆரம்பிக்கவும், தொடரவும் ஒரு சந்தர்ப்பமாக பாவித்திருக்கும் அரசாங்கம், சர்வதேசத்தின் சில நாடுகளின் அனுமதியுடன் தமிழர் தாயகம் மீது "பதிலடி"
 எனும் பெயரில் தனது முற்றான யுத்தத்தினை ஏவிவிடும் நோக்கத்திலும் வெற்றிகண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மீது சிங்களவர்கள் இனவன்முறையினை நடத்துவதே புலிகளின் இந்தத் தாக்குதலின் நோக்கம் எனும் மாயை

பேரூந்து மீதான தாக்குதலை புலிகள் நடத்தியமைக்கான முதன்மையான காரணம் சிங்களவர்களைக் கோபப்படுத்தி தமிழர் மீது இனரீதியிலான தாக்குதல்களை நடத்துவதே என்பது அரசின் நிலைப்பாடு . தமிழ் மக்கள் மீதான சிங்களவரின் தாக்குதல்களைப் பிரச்சாரமாக முன்வைத்து தமக்கான தாயகத்தை புலிகள் சர்வதேசத்தின் அனுதாபத்தின்மூலம் அடைய நினைக்கிறார்கள் என்று அரசு கூறுகிறது. உண்மைதான், தமிழர் மீதான தாக்குதல்கள் மூலம் சர்வதேசத்தில் ஏற்படப்போகும் அனுதாபம் தமிழ்மக்களுக்கான தாயகத்தினை உருவாக்கவே வழிவக்கும் என்பதுடன் , அந்த அனுதாபம் புலிகளுக்கான தாயகத்தினை ஒருபோதும் ஏற்படுத்தப்போவதில்லை என்பது அரசிற்குப் புரியாமல்ப் போய்விட்டது. 

ஆனால், இப்பேரூந்து மீதான தாக்குதலை அடுத்து தமிழர் மீது சிங்களவர்கள் பதில் தாக்குதல்களை நடத்தவில்லை. இத்தாக்குதல் மட்டுமல்லாமல், சரித்திரத்தில் அனைத்துத் தாக்குதல்களிலும் சாதாரண சிங்கள மக்கள் தமிழர் மீது பழிவாங்கும் இனரீதியிலான தாக்குதல்களை நடத்தவில்லை. மாறாக தமிழர் மீது இதுவரை நடத்தப்பட்ட அனைத்துத் தாக்குதல்களும்  பதவியில்  அமர்ந்திருந்த சிங்கள இனவாத அரசுகளின் திட்டமிடலின் மூலம், அரச ராணுவத்தின் ஏவுதலின்மூலமுமே நடத்தப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து இன்றுவரை நடத்தப்பட்டிருக்கும் தமிழர் மீதான சிங்களவர்களின் பழிவாங்கும் தாக்குதல்களில் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட, பல நூற்றுக்கணக்கான அரச ஆதரவுபெற்ற குற்றக் கும்பல்கள், சிறைக் கைதிகள், சிவில் உடையணிந்த ராணுவத்தினர் மற்றும் பொலீஸார் ஆகியோர் சாரை சாரைய பாரவூர்திகளில் தமிழரின் வீடுகளுக்கு அண்மையில் தேர்தல் வாக்காளர் பட்டியல்களுடன் இறக்கிவிடப்பட்டு  படுகொலைகளில் ஈடுபட்டனர் என்பதே வரலாறு. 

அத்துடன், தமது பெயரில் சிங்கள அரசுகள் நடத்தும் அக்கிரமங்களைத் தெரியாமலும், தமிழரின் பிரச்சினைகளைப் புரியாமலும், தமது அரசுகள் கூறிவரும் பொய்களை அப்படியே நம்பிக்கொண்டு ஏமாளிகளாக இருக்கும் சிங்களச் சமூகம், இயல்பாகவே தமிழர்களை அழிக்க விரும்பும் ஒரு மக்கள் கூட்டம் என்று சொல்லமுடியாது. 1983 இனக்கலவரத்தின்போது, பல சிங்களவர்கள் பல ஆபத்துக்களுக்கு மத்தியிலும் தமது தமிழ் நண்பர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். சுனாமிப் பேரலை அநர்த்தத்தின்போது தமிழர்கள் சிங்களவர்களுக்கும், சிங்களவர்கள் தமிழர்களுக்கும் பரஸ்பரம் உதவி நல்கியிருக்கிறார்கள்.

Edited by ரஞ்சித்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் மீது வன்முறைகளை நடத்துவதன் மூலம், அவர்களின் தாயகத்தை கபளீகரம் செய்யவோ அல்லது தமிழர் தாயகத்தின் எல்லைகளை மாற்றியமைக்கவோ முடியுமானால், சாதாரண சிங்களவர்கள் அதனைச் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகளை அவர்கள் இயல்பாகவே செய்யக்கூடியவர்கள் என்று பொதுப்படையாகக் கூறுவது கடிணமானது. மேலும், தமிழர் மீதான வன்முறைகளை நினைத்த மாத்திரத்தில் அவர்களால் செய்யமுடியாது. இதுவரை வரலாற்றில் செய்யப்பட்ட தமிழர்மீதான வன்முறைகள் நன்கு திட்டமிட்டே, அரச ஆதரவுடன் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே, தமிழர் மீதான இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகள் என்று அரசு தற்போது கூறுவது தனது அரசியல் ஆதாயத்திற்காகவே அன்றி வேறில்லை. அத்துடன் இன்றுள்ள நிலையில், தமிழர் மீது 83' பாணியிலான ஒருங்கமைக்கப்பட்ட பாரிய வன்முறைகளைத் தெற்கில் உள்ளவர்கள் செய்வதென்பது சற்றுக்கடிணமானது, மேலும் இந்த வன்முறைகள் சர்வதேச அளவில் சாதகமாகப் பார்க்கப்படப் போவதில்லையென்பதும் தெளிவு. ஆகவே இவ்வாறான இனரீதியிலான வன்முறைகளை நாம் நடக்க அனுமதிக்கமாட்டோம், நாம் சமாதானத்தில் அக்கறைகொண்டவர்கள் என்று காண்பிப்பதற்காகவே மகிந்தவின் அரசு தொடர்ச்சியாக இந்த "பழிவாங்கும் வன்முறைகள்" பற்றிப் பூச்சாண்டி காட்டி வருகிறது. 

சரி, தமிழர்கள் மீதான சிங்களவரின் இனரீதியிலான் பழிவாங்கும் வன்முறைகளால் புலிகளுக்கு என்ன லாபமிருக்கிறது? முதலில், இப்படியான வன்முறைகளைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சர்வதேசத்திலோ, உள்ளூரிலோ எந்த அனுதாபமும் கிடைக்கப்போவதில்லை. கொல்லப்படும் அல்லது பாதிக்கப்படும் மக்களுக்கான அனுதாபம் கிடைக்குமேயன்றி, வன்முறைகளைத் தூண்டிவிட்டவர்கள் மீதான கண்டனங்களும், வெறுப்பும் மட்டுமே அதிகரிக்கும்.

1983 ஆம் ஆண்டின் வன்முறைகள் இத்தாக்குதலிலிருந்து முற்றாக வேறுபட்டவை. அன்று புலிகள் தாக்குதல் நடத்தியது இலங்கை அரச படைகள் மீதேயன்றி, சாதாரண சிங்களப் பொதுமக்கள் மீது அல்ல. ஆகவே, அன்று தமிழர்கள் மீது உடனடியாக நடத்தப்பட்ட அரச ஆதரவிலான வன்முறைகளையடுத்து தமிழ்மக்கள் மீது சர்வதேச அனுதாபமும் கவனமும் திரும்பியதுடன், புலிகள் தமது மக்கள் மீதான ஆக்கிரமிப்பையும், அரச அடக்குமுறையினையும் எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராளிகள் எனும் சர்வதேச தகுதியினையும் பெற்றுக்கொண்டார்கள். ஆகவே, 1983 ஆம் ஆண்டு இன வன்முறைகள் தமிழர்கள் மீது மட்டுமல்லாமல், புலிகள் மீதும் அனுதாபத்தினைப் பெற்றுக்கொடுத்திருந்தது.

ஆனால், பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் வேறானது. சாதாரண பொதுமக்களும் சிறுவர்களும் வேண்டுமென்றே இலக்குவைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, இதனைச் செய்தவர்கள் யாராக இருப்பினும், அவர்களது குறிக்கோள்கள் எதுவாக இருப்பினும்  அவர்கள் மீது எவரும் அனுதாபம் கொள்ளப்போவதில்லை. ஆகவே, இத்தாக்குதலைப் புலிகள் நடத்தியிருந்தால், இதன்மூலம் அவர்கள் எதையுமே அடையப்போவதில்லை, சர்வதேச கண்டனங்களையும், வெறுப்பையும் அன்றி. மேலும், சர்வதேசத்தினால் தனிமைப்படுத்தப்படுதலும், வெறுப்பும், தூற்றுதல்களையுமே புலிகள் பெற்றுக்கொள்ளவேண்டியிருந்திருக்கும், அவர்களின் நியாயமான கோரிக்கை தமிழர்களுக்கான விடுதலையாகவும் அவர்களுக்கான தனிநாடாகவும் இருந்தாலும் கூட. 

Edited by ரஞ்சித்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், கருணாவின் நெருங்கிய அரசியல் ஆலோசகராகவும் இருக்கும் வீ ஆனந்தசங்கரி இத்தாக்குதல் குறித்துப் பேசும்போது, இது நிச்சயமாகப் புலிகளால் மமேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் என்று தான் உறுதியாகக் கூறியிருந்தார். அத்துடன், அரசும் ராணுவமும் கூறுவதுபோல, இது தமிழ் மக்கள் மீது சிங்களவர்களைக் கோபம் கொண்டு இனரீதியிலான வன்முறைகளைத் தூண்டிவிட்டு, சர்வதேச அனுதாபத்தினை உருவாக்கி தமது தனிநாட்டுக் கனவை நிறைவாக்க புலிகள் முயல்வதாகக் கடுமையாகச் சாடியிருந்தார். மேலும், 1983 ஆம் ஆண்டு தமிழர் மீது அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையினையும், இப்பேரூந்து மீதான தாக்குதலையும் ஒன்றாகக் கணிப்பிட்டு, 83' கலவரத்திற்கும் புலிகளே காரணம் என்றும், சர்வதேச அனுதாபத்தினைப் பெறுவதற்கே அப்பாவிச் சிங்கள ராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் கூறியிருந்தார். ஆகவே, 83 ஆம் ஆண்டு, ஜே ஆர் ஜெயவர்த்தனாவினாலும், அவரது அமைச்சர்களாலும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட தமிழர் மீதான படுகொலைகளை புலிகளே ஆரம்பித்துவைத்தார்கள் என்று கூறும் எவருக்கும், நாட்டில் நடக்கும் எந்த இனரீதியிலான வன்முறைக்கும் புலிகளே காரணம் என்று கூறுவது அவ்வளவு கடிணமாக இருக்கப்போவதில்லை. இன்று ஆனந்தசங்கரி செய்வதும் அதைத்தான். 

ஆகவே, இங்கு ஒரு இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகளை நடக்கின்றனவோ இல்லையோ, இலங்கை அரசாங்கமே இந்த சம்பவத்தின்மூலம் பாரிய நலன்களைச் சம்பாதித்திருக்கிறது. ஏனென்றால், இவர்கள் கூறுவது போல தமிழர் மீதான இனரீதியிலான வன்முறைகள் நிகழ்ந்திருந்தால், அதற்குப் புலிகளே முழு பொறுப்பாக இருக்கவேண்டும். அப்படி வன்முறைகள் நடக்கவில்லையென்றால்க்கூட, அதனைத் தடுத்து சமாதானத்தினை நிலைநாட்டிய பெருமை அரசுக்கே சேரும். அதுமட்டுமல்லாமல், புலிகளின் வெறுப்பேற்றும் பேரூந்து மீதான தாக்குதலின்பின்னரும் கூட, நாட்டில் அமைதியினை நிலைநாட்டிய அரசு மீது சர்வதேசத்தில் நம்பிக்கை ஏற்படுவதோடு, அப்படியான அரசின் கீழ் தமிழர்கள் அமைதியாகவும், பிரிவினை கோராமலும் வாழ முடியும் என்னும் நிலைப்பாட்டிற்கு சர்வதேசம் வரும் சந்தர்ப்பமும் இருக்கிறது. 

சரி, இலங்கை அரசோ, தெற்கின் இனவாதிகளோ, அமெரிக்கர்களோ  அல்லது தமிழர் விரோதப் போக்கினைக் கொண்ட ஆனந்த சங்கரி போன்றவர்களோ கூறுவதுபோல இத்தாக்குதல் புலிகளால் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாகவும், இதன்மூலம் சிங்களவர்களைக் கோபப்படுத்தி தமிழர் மீதான வன்முறைகளை ஏவிவிடும் நோக்கிலும் இருந்திருக்குமானால், நிச்சயமாக அவர்களின் நோக்கம் ஈடேறப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் இவை அனைத்திலுமே அரசுதான் பாரிய நண்மைகளை அடைந்திருக்கிறது. 

 அப்படியானால், புலிகள் இத்தாக்குதலைச் செய்யவேண்டிய தேவை என்ன?

அரசால் புலிகளை இத்தாக்குதலுடன் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட ஐந்து காரணங்களையும் தொகுத்துப் பார்க்கும்போது, இத்தாக்குதலின் மூலம் புலிகள் பாரிய தோல்வியினையும், அரசு பாரிய பிரச்சார வெற்றியினையும், அனுதாபத்தினையும் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

சிலவேளை, புலிகளின் உண்மையான நோக்கம் என்னவென்பது பற்றி அரசுக்கு தெளிவான புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். அரசு புலிகளே இதனைச் செய்தார்கள் என்று கூறும் காரணங்களைக் காட்டிலும் இன்னும் வேறு காரணங்களும் இத்தாக்குதலின் பின்னால் இருக்கலாம், அக்காரணங்கள் உண்மையாக புலிகளுக்குச் சாதகமாகவும், அரசுக்குப் பாரிய நெருக்கடியினையும் ஏற்படுத்துவதாக இருக்கலாம், அல்லது அரசு இந்தக் காரணங்கள் பற்றி பேச விரும்பாமல்க் கூட  இருக்கலாம் !


 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான தாக்குதல் குறித்த புலிகளின் அறிக்கை

முதலில் இக்கொடூரமான தாக்குதல் குறித்து புலிகள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். இத்தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று மறுக்காவிட்டாலும், இத்தாக்குதல் "மன்னிக்கமுடியாத, கடுமையான கண்டனத்திற்கு  உள்ளாக்கப்படவேண்டிய படுகொலைகள்" என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல், தாக்குபவர்களின் உண்மையான குறிக்கோள் எந்தளவு நியாயத்தன்மையினைக் கொண்டிருப்பினும், நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நியாயப்படுத்தப்படவோ முடியாதது என்றும் கூறியிருக்கிறார்கள்.

புலிகளின் அறிக்கை வருமாறு,

" அப்பாவிகள் பேரூந்துமீதான இத்தாக்குதலினை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கெப்பிட்டிக்கொல்லாவையில்,அப்பாவிகளை இலக்குவைத்துத் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல் எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான படுகொலை அரசியல் காரணங்களுக்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெனீவாவில் முடித்துக்கொண்டு புலிகளின் பேச்சுவார்த்தைக்குழு நாடு திரும்பியிருக்கும் தருணத்துடன் ஒன்றாக்கி நடத்தப்பட்டிருக்கும் இந்த அப்பாவிகளின் படுகொலை, இப்பழியினை புலிகள் மீது சுமத்தும் ஒற்றை நோக்கத்திற்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசினாலோ அல்லது அவர்களால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழு ஒன்றினாலோ நடத்தப்பட்டிருக்கும் இந்த படுகொலையினைக் காரணமாகக் காட்டி இலங்கை அரசு வன்னிமீது தனது கொடூரமான வான் தாக்குதல்களையும் ஆரம்பித்திருக்கிறது.  ஆனால், துரதிஷ்ட்டவசமாக, அரசின் இந்த நயவஞ்சகப் பிரச்சாரத்திற்குள் அகப்பட்டிருக்கும் சர்வதேச செய்திநிறுவனங்களும், அமைப்புக்களும் புலிகள் மீது அநியாயமாக இத்தாக்குதலுக்கான பொறுப்பினைச் சுமத்துவது தெரிகிறது. தற்போது நடந்துவரும் வன்முறைகள் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் பொறுப்பாகவும், நிதானத்துடனும் செய்தி வெளியிடவேண்டும் என்று நாம் வேண்டுகிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களாக புலிகள் இயக்கத்தினால் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசு குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து வந்தது.  ஆனால், இப்போது சிங்கள மக்கள் மீது குறைந்தது 3 தாக்குதல்களையாவது புலிகள் செய்திருப்பதாகக்குற்றஞ்சாட்டுகிறது. இன்றுவரை சிங்கள அரசாலும், அதன் துணைராணுவக் குழுக்களாலும் தமிழ் மக்களும், சிறார்களும்  ஆயிரக்கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இத்தாக்குதல் ஒன்றின்போது கூட அரசோ அல்லது அதன் துணை ராணுவக் குழுக்களோ தமிழ் மக்கள் மீது தயவு தாட்சண்ணியம்பார்க்காமல், மிகவும் கொடூரமாகவே நடந்திருக்கின்றன. ஆகவே, இத்தாக்குதலிலும் கூட அரசும் அவர்களது துணைராணுவக் குழுவுமே பின்னால் இருப்பதாக நாம் நம்புகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் சிங்கள மக்கள் மீது புலிகள்பெயரால் படுகொலையொன்றினை நிகழ்த்துவதன் மூலம், சர்வதேசத்தில் புலிகளுக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தவும், அவர்களைத் தனிமைப்படுத்தவுமே அரசு முயன்றிருக்கிறது" என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 • Like 1
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் தமிழர்களை சகட்டுமேனிக்குக் கொன்றுகுவித்த இலங்கை அரசும் அதன் துணைராணுவக் குழுக்களும், தற்போது அரசியல் காரணங்களுக்காக சிங்கள மக்களையும் கொல்ல ஆரம்பித்திருக்கின்றன என்பதே புலிகளின் நிலைப்பாடு. 

சிங்களப் பொதுமக்களை ஏற்றிச்சென்ற இப்பேரூந்து எதற்காக அரச ராணுவத்தாலும், அவர்களால் இயக்கப்படும் கருணா குழுவினராலும் இலக்குவைத்துத் தாக்கப்பட்டது என்பதற்கான புலிகளின் காரணங்களைப் பார்க்கலாம்.

1. சர்வதேசத்தின் அனுதாபத்தினையும் அதனூடாக ராணுவ ரீதியிலான உதவிகளையும் சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அரசும், கருணா குழுவும் இப்பேரூந்துமீதான தாக்குதலினை திட்டமிட்டு நடத்தி, தமது அரச பிரச்சார இயந்திரத்தின் துணையுடன் இப்படுகொலையினை புலிகள் மீது சுமத்தியிருக்கின்றன. 

2.  இத்தாக்குதலினை நடத்திய கையோடு, புலிகளே இதனைச் செய்தார்கள் என்று கடுமையான பிரச்சாரத்தினை (மகிந்த கொல்லப்பட்டவர்களின் மரணச்சடங்கில் கலந்துகொண்டது உட்பட) முடுக்கிவிட்டு, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் இப்பிரச்சாரத்தினை திருப்பத் திருப்பக் கூறியிருப்பதன்மூலம், புலிகளே இதனைச் செய்தார்கள் என்று பலரையும் நம்பவைத்திருக்கின்றனர். 

புலிகள் கூறுவதையே  பின்னர் இடம்பெற்ற சம்பவங்களும் உறுதிப்படுத்துகின்றன. அரச பிரச்சார இயந்திரத்தின் மூலங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க செய்தி நிறுவனங்களும், இணைய வழி செய்திச்சேவைகளும் உட்பட சர்வதேச செய்திச் சேவைகள்  தொடர்ச்சியாக இத்தாக்குதலினை புலிகளே நடத்தியதாக செய்தி வெளியிட்டு வருகின்றன. 

இத்தாக்குதலினால் ஏற்பட்ட விளைவுகளைப் பார்க்கும்போது அரசே முற்றிலுமான வெற்றியினைப் பெற்றிருக்கிறது. இவ்வெற்றி அரசாலே திட்டமிட்டு, நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் மூலம் ஈட்டப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலின் மூலம் புலிகள் அடைந்தது முற்றிலுமான இழப்புக்களே அன்றி வேறில்லை. ஆகவே இத்தாக்குதலின் மூலம் லாபமடைந்தவர்கள் யாரென்று பார்த்தால், இத்தாக்குதலினை நடத்தியது யாரென்று அறிந்துகொள்வது கடிணமானது அல்ல.


 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இத்தாக்குதலினை புலிகளே செய்தார்கள் என்று சில காரணங்களை முன்வைத்து அரசு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இக்காரணங்களுக்கு வெளியே, இன்னும் ஏதாவது அறியப்படாத, ஆனால் புலிகளுக்குச் சாதகமான  காரணங்கள் இருக்கின்றனவா?

சரி, ஒரு பேச்சிற்கு இத்தாக்குதலினை புலிகளே நடத்தியதாக வைத்துக்கொள்வ்வோம். இத்தாக்குதலினை நடத்தி, அதற்கான பொறுப்பினை அரசு மீதோ அல்லது கருணா மீதோ சுமத்தி, அதன்மூலம் சர்வதேசத்திலிருந்து அனுதாபத்தினையும், இவ்வாறான முன்னைய பல அரச தாக்குதல்களினை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவுமே புலிகள் முயன்றார்கள் என்று ஒரு பேச்சிற்கு எடுத்துக்கொண்டாலும், இது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறது.

முதலில் புலிகளின் பிரச்சாரத்தினை சர்வதேசமோ அல்லது மூன்றாம் தரப்புக்களோ ஏற்றுக்கொள்ளவேண்டுமே? 

இத்தாக்குதல் குறித்து அரசு வெளியிட்ட புலிகளே குற்றவாளிகள் எனும் திரியினை சில சர்வதேச செய்திச் சேவைகள் காவ விரும்பவில்லை. அவை, புலிகளின் கண்டன அறிக்கையினையும் , விளக்கத்தினையும் வெளியிட்டே இருந்தன, ஆனல் அவ்வறிக்கையினை தாம் ஏற்பதாக அவர்கள் தெரிவிக்கவில்லை. ஆகவே, புலிகளால் இத்தாக்குதலினைச் செய்துவிட்டு, அரசு மீது சுமத்துவதென்பது இலகுவில் முடியாத ஒரு காரியம்.

மேலும், "பயங்கரவாதிகள்" என்று சர்வதேசத்தில் முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான தாக்குதல் ஒன்றினைச் செய்து தமது பெயரினை இன்னும் கெடுத்துக்கொள்ள புலிகள் விரும்பியிருப்பார்கள் என்பதையும் நம்புவது கடிணமானது. ஆகவே, புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு, அரசு மீது பழிசேர்க்கும் பிரச்சார யுக்தி என்பது புலிகளைப்பொறுத்தவரை மிகப்பெரிய விஷப்பரீட்சையாக இருந்திருக்கும். ஏனென்றால், இன்றுவரை இத்தாக்குதலின் மூலம் அரசே அதீத வெற்றியினை ஈட்டிவருகிறது.

தமக்கு பாரிய பிரச்சாரத் தோல்வியினையும், சர்வதேசத்தின் மிகப்பெரிய பின்னடைவினையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு தாக்குதலினை புலிகள் ஏன் செய்யவேண்டும்? தமது பிரச்சார யுக்திகளுக்காக இன்னும் கோரங்களைப் புலிகள் தேடவேண்டிய அவசியம் என்ன?

அல்லைப்பிட்டிப் படுகொலைகள், வங்காலைப் படுகொலைகள், பேசாலை படுகொலைகள், கருணா குழுவினரால் நடத்தப்பட்டுவரும் கடத்தல்கள், காணாமற்போதல்காள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், பரராஜசிங்கம், ரவிராஜ் உள்ளிட பல தமிழ் அரசியல்வாதிகளின் படுகொலைகள்,  தமிழர் புணர்வாழ்வுக்கழக பணியாளர்களின் கூட்டுப் பாலியல் வன்புணர்வும் மற்றும் படுகொலைகளும் என்று அரசாலும், கருணா குழுவினராலும் ஏற்கனவே பல அகோரங்கள் நிகழ்த்தப்பட்டு, தமிழர்களுக்கு சார்பான நிலைப்பாடும், புலிகளுக்கு பிரச்சா சாதகமும் ஏற்பட்டுவரும் நிலையில், இன்னொரு படுகொலையினை புலிகளே நடத்தி தமக்கு ஏற்பட்டுவரும் பிரச்சார வெற்றியினை எதற்காகக் குலைக்க வேண்டும்? 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருணா துணை ராணுவக் குழுவின் பங்கு

இத்தாக்குதல் அரசுக்குத் தெரியாமல் கருணாவின் துணை ராணுவக்குழுவினரால் செய்யப்பட்டு, புலிகளின் மீது பழியினைச் சுமத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் சிலர் கருதுவது தெரிகிறது. ஆனால், இத்தாக்குதலினை நடத்தியவர்கள் புலிகளே என்று உடனடியாகவே குற்றஞ்சாட்டிய அரசு, வன்னிமீது பலமான விமானத் தாக்குதலை ஆரம்பித்து விட்டது. இத்தாக்குதலினை கருணா செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்று கூட சிந்தித்துப் பார்க்க விரும்பாத அரசாங்கம், உடனடியாக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் மூலம், இத்தாக்குதலினைச் செய்தவர்கள் பற்றி தமக்கு அக்கறையில்லை என்பதையும் காட்டிக்கொண்டது.

ஆனால், இதிலும் அரசுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. கருணா குழுவினரை தமது ராணுவமே வழிநடத்திவரும் நிலையில், அரசுக்குத் தெரியாமல் கருணா இதனைச் செய்வது சாத்தியாமா என்பது முதலாவது கேள்வி. அடுத்ததாக, கருணாவே இதனை தன்னிச்சையாகச் செய்திருந்தால், அவரைத் தண்டிப்பது புலிகளுக்கெதிரான போருக்குப் பாதகமாகிவிடும் என்பது இரண்டாவது. கருணாவே இத்தாக்குதலினை நடத்தியதாக அரசு ஒப்புக்கொள்ளுமிடத்து, அது சிங்களவரிடையே அரசுக்கெதிரான பலமான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடுவதுடன், சர்வதேசத்திலும் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.  ஆகவே, கருணாவே இத்தாக்குதலினைச் செய்ததாக அரசு ஒருபோதுமே வெளிப்படையாகக் கூறப்போவதில்லை

அக, எப்படிப் பார்த்தாலும், இத்தாக்குதலினை கருணா அரசின் துணையுடன் அல்லது ஆசீர்வாதத்துடனேயே செய்திருக்கவே வாய்ப்பிருக்கிறது.


சிங்களவர் மீதான தாக்குதலுக்கு உடனடியாகப் பழிவாங்கும் தாக்குதலினை மேற்கொண்ட அரசு, இதுவரை தமிழர் மீதான தாக்குதல்களுக்கு ஏன் பழிவாங்கும் தாக்குதலினை நடத்தவில்லை?

தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து வடக்குக் கிழக்கில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் சிறார்களும் புலிகளாலேயே கொல்லப்பட்டு, அக்கொலைகள் அரசின் மீதும், அரசின் செல்லப்பிள்ளையான கருணா உட்பட பல துணைராணுவக் குழுக்களின் மீது  சுமத்தப்பட்டதாக அரசு தொடர்ச்சியாகக் கூறிவந்திருக்கிறது. அப்படியானால், இத்தாக்குதல்களுக்குப் பழிவாங்க ஏன் இதுவரையில் புலிகள் மீது தாக்குதலினை அரசு மேற்கொள்லவில்லை? வடக்குக் கிழக்கில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த தமிழர்களைப் புலிகள் கொன்றதற்கும், அதேபோல கெப்பிட்டிக்கொல்லாவையில் புலிகள் சிங்களப் பொதுமக்களைக் கொன்றதற்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்ன? 

அண்மைக்காலத்தில் பல தடைவைகளில் அரசு மீது உண்மை, நம்பகத்தன்மை, பொறுப்புக்கூறல் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டு . சிலர்  அரசினை எதற்காக விமர்சிக்கிறீர்கள் என்று கேட்கலாம். ஆனால், அவ்வரசுதானே தான் சமாதானத்தில் நாட்டம் கொண்டுள்ளதாகவும், எவ்விலை கொடுத்தாவது சமாதானத்தை அடைந்தே தீருவேன் என்றும் சர்வதேசத்தில் கூறி தனக்குச் சார்பான அலையொன்றினை ஏற்படுத்தி வைத்திருக்கிறது? அப்பாவிகளை தனது அரசிய லாபத்திற்காகக் கொன்றுகொண்டு, வெறும் உதட்டளவில் சமாதானம் பேசும் இந்த அரசு உண்மையாகவே இந்நாட்டிற்குச் சமாதானத்தைக் மகொண்டுவரும்  என்பதை எப்படி நம்புவது?

அரசும், கருணா துனைராணுவக் குழுவும் நடத்திவரும் படுகொலைகளை வெறுமனே புலிகள் மீது சுமத்துவதால் எதுவித நண்மையும் எவருக்கும் கிடைக்கப்போவதில்லை, அரசையும் கருணாவையும் தவிர.

புலிகளை தமது நிபந்தனைகளுக்கும், சர்வதேச சட்டங்களுக்கு உடன்பட்டு ஒழுகுமாறு கேட்கும் சர்வதேசம் மகிந்த அரசுக்கோ கருணாவுக்கு அச்சட்டங்கள் பற்றிப் பாடம் எடுப்பதில்லை. 
 

https://sangam.org/taraki/articles/2006/06-28_Dirty_Tricks.php?print=sangam

Edited by ரஞ்சித்
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites