Jump to content

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 


Recommended Posts

36 minutes ago, ரஞ்சித் said:

இத்தாக்குதலினை புலிகளே செய்தார்கள் என்று சில காரணங்களை முன்வைத்து அரசு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இக்காரணங்களுக்கு வெளியே, இன்னும் ஏதாவது அறியப்படாத, ஆனால் புலிகளுக்குச் சாதகமான  காரணங்கள் இருக்கின்றனவா?

சரி, ஒரு பேச்சிற்கு இத்தாக்குதலினை புலிகளே நடத்தியதாக வைத்துக்கொள்வ்வோம். இத்தாக்குதலினை நடத்தி, அதற்கான பொறுப்பினை அரசு மீதோ அல்லது கருணா மீதோ சுமத்தி, அதன்மூலம் சர்வதேசத்திலிருந்து அனுதாபத்தினையும், இவ்வாறான முன்னைய பல அரச தாக்குதல்களினை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவுமே புலிகள் முயன்றார்கள் என்று ஒரு பேச்சிற்கு எடுத்துக்கொண்டாலும், இது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறது.

முதலில் புலிகளின் பிரச்சாரத்தினை சர்வதேசமோ அல்லது மூன்றாம் தரப்புக்களோ ஏற்றுக்கொள்ளவேண்டுமே? 

இத்தாக்குதல் குறித்து அரசு வெளியிட்ட புலிகளே குற்றவாளிகள் எனும் திரியினை சில சர்வதேச செய்திச் சேவைகள் காவ விரும்பவில்லை. அவை, புலிகளின் கண்டன அறிக்கையினையும் , விளக்கத்தினையும் வெளியிட்டே இருந்தன, ஆனல் அவ்வறிக்கையினை தாம் ஏற்பதாக அவர்கள் தெரிவிக்கவில்லை. ஆகவே, புலிகளால் இத்தாக்குதலினைச் செய்துவிட்டு, அரசு மீது சுமத்துவதென்பது இலகுவில் முடியாத ஒரு காரியம்.

மேலும், "பயங்கரவாதிகள்" என்று சர்வதேசத்தில் முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான தாக்குதல் ஒன்றினைச் செய்து தமது பெயரினை இன்னும் கெடுத்துக்கொள்ள புலிகள் விரும்பியிருப்பார்கள் என்பதையும் நம்புவது கடிணமானது. ஆகவே, புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு, அரசு மீது பழிசேர்க்கும் பிரச்சார யுக்தி என்பது புலிகளைப்பொறுத்தவரை மிகப்பெரிய விஷப்பரீட்சையாக இருந்திருக்கும். ஏனென்றால், இன்றுவரை இத்தாக்குதலின் மூலம் அரசே அதீத வெற்றியினை ஈட்டிவருகிறது.

தமக்கு பாரிய பிரச்சாரத் தோல்வியினையும், சர்வதேசத்தின் மிகப்பெரிய பின்னடைவினையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு தாக்குதலினை புலிகள் ஏன் செய்யவேண்டும்? தமது பிரச்சார யுக்திகளுக்காக இன்னும் கோரங்களைப் புலிகள் தேடவேண்டிய அவசியம் என்ன?

அல்லைப்பிட்டிப் படுகொலைகள், வங்காலைப் படுகொலைகள், பேசாலை படுகொலைகள், கருணா குழுவினரால் நடத்தப்பட்டுவரும் கடத்தல்கள், காணாமற்போதல்காள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், பரராஜசிங்கம், ரவிராஜ் உள்ளிட பல தமிழ் அரசியல்வாதிகளின் படுகொலைகள்,  தமிழர் புணர்வாழ்வுக்கழக பணியாளர்களின் கூட்டுப் பாலியல் வன்புணர்வும் மற்றும் படுகொலைகளும் என்று அரசாலும், கருணா குழுவினராலும் ஏற்கனவே பல அகோரங்கள் நிகழ்த்தப்பட்டு, தமிழர்களுக்கு சார்பான நிலைப்பாடும், புலிகளுக்கு பிரச்சா சாதகமும் ஏற்பட்டுவரும் நிலையில், இன்னொரு படுகொலையினை புலிகளே நடத்தி தமக்கு ஏற்பட்டுவரும் பிரச்சார வெற்றியினை எதற்காகக் குலைக்க வேண்டும்? 

ஆச்சரியமாகத் தான் இருக்கிறது ரஞ்சித்! தங்களதும், தமிழர்களதும் நீண்டகால நோக்கிற்கு பாதகமான பல விடயங்களை புலிகள் செய்தே இருக்கின்றனர் என்பது சாதாரண செய்திகள் வாசிப்போருக்குப் புரியும்! நீங்கள் சொல்லும் கதைகள் புதினமாகத் தான் இருக்கிறது! மன்னியுங்கள்! 

தொடருங்கள், இது ஒரு பிரச்சாரப் பதிவு தவிர வேறில்லை என்பதைச் சுட்டிக் காட்ட மட்டுமே சொன்னேன்!

Link to comment
Share on other sites

 • Replies 578
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:
2 minutes ago, Justin said:

நீங்கள் சொல்லும் கதைகள் புதினமாகத் தான் இருக்கிறது!

 

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்றி இக்கட்டுரை அலசவில்லை. அதற்காக அவை நடைபெறவில்லையென்று நான் வாதிடுவதாக அர்த்தமில்லை.

இத்தாக்குதலினை அரசு எவ்வாறு தனக்குச் சார்பாகப் பாவித்தது என்பதைப்பற்றியே இக்கட்டுரை அலசுகிறது. சிலவேளை முழுவதுமாக வாசித்தால் நீங்கள் ஆச்சரியப்படமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு இன்றிருக்கும் புலிகள் மீதான வெறுப்பும் விமர்சனமும் 2009 இற்கு முன்னர் எப்படி இல்லாமல் இருந்தது என்பது ஆச்சரியம்தான். ஏனென்றால், புலிகளின் படுகொலைகளை விமர்சிப்பதே உங்கள் நோக்கம் என்றால், 2009 வரை நீங்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. வன்னியில் உங்களின் நண்பரோ உறவினரோ சொல்லும்வரை புலிகள் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை அதற்கு முன்னர் நடத்தவில்லை என்று நம்பியிருக்கிறீர்கள் போலத் தெரிகிறது, அதனாலேயே கேட்டேன். 

 • Like 4
 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரஞ்சித் said:

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்றி இக்கட்டுரை அலசவில்லை. அதற்காக அவை நடைபெறவில்லையென்று நான் வாதிடுவதாக அர்த்தமில்லை.

இத்தாக்குதலினை அரசு எவ்வாறு தனக்குச் சார்பாகப் பாவித்தது என்பதைப்பற்றியே இக்கட்டுரை அலசுகிறது. சிலவேளை முழுவதுமாக வாசித்தால் நீங்கள் ஆச்சரியப்படமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு இன்றிருக்கும் புலிகள் மீதான வெறுப்பும் விமர்சனமும் 2009 இற்கு முன்னர் எப்படி இல்லாமல் இருந்தது என்பது ஆச்சரியம்தான். ஏனென்றால், புலிகளின் படுகொலைகளை விமர்சிப்பதே உங்கள் நோக்கம் என்றால், 2009 வரை நீங்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. வன்னியில் உங்களின் நண்பரோ உறவினரோ சொல்லும்வரை புலிகள் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை அதற்கு முன்னர் நடத்தவில்லை என்று நம்பியிருக்கிறீர்கள் போலத் தெரிகிறது, அதனாலேயே கேட்டேன். 

சூப்பர் ஜீ,

பந்தயக் குதிரை தோற்று விட்டது என்ற கவலை தான் பலருக்கு..

 

 • Like 1
Link to comment
Share on other sites

20 hours ago, ரஞ்சித் said:

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்றி இக்கட்டுரை அலசவில்லை. அதற்காக அவை நடைபெறவில்லையென்று நான் வாதிடுவதாக அர்த்தமில்லை.

இத்தாக்குதலினை அரசு எவ்வாறு தனக்குச் சார்பாகப் பாவித்தது என்பதைப்பற்றியே இக்கட்டுரை அலசுகிறது. சிலவேளை முழுவதுமாக வாசித்தால் நீங்கள் ஆச்சரியப்படமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு இன்றிருக்கும் புலிகள் மீதான வெறுப்பும் விமர்சனமும் 2009 இற்கு முன்னர் எப்படி இல்லாமல் இருந்தது என்பது ஆச்சரியம்தான். ஏனென்றால், புலிகளின் படுகொலைகளை விமர்சிப்பதே உங்கள் நோக்கம் என்றால், 2009 வரை நீங்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. வன்னியில் உங்களின் நண்பரோ உறவினரோ சொல்லும்வரை புலிகள் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை அதற்கு முன்னர் நடத்தவில்லை என்று நம்பியிருக்கிறீர்கள் போலத் தெரிகிறது, அதனாலேயே கேட்டேன். 

 

நீங்களே முன்னர் குறிப்பிட்டிருப்பது போல, இந்தத் தொடர் "ஒரு நோக்கத்திற்காக எழுதப் படுகிறது" என்பதால் இவ்வாறு சதித்திட்டக் கதைகளூடு புலிகளுக்கு வெள்ளையடிப்பதை தீவிரமாக நீங்கள் செய்வதை  சுட்டிக் காட்ட முனைகிறேன், அவ்வளவு தான்!

இதன் அடிநாதம், புலிகள் தங்கள் பெயருக்குப் பாதகமான விடயங்களைச் செய்திருக்க மாட்டார்கள் என்ற விம்பத்தை ஏற்படுத்தும் நப்பாசை தானே? ஆனால், அப்படியல்ல, ஈழப்போராட்ட காலம் பூராகவும் புலிகள் அவ்வாறான தூர நோக்கற்ற பல காரியங்களைச் செய்தார்கள் என்பது சாதாரணமாக தமிழர்களுக்குத் தெரிந்த செய்தி! இதை இருட்டடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதே என் வாதம்! 

மற்றபடி, இது புலிகள் மீதான வெறுப்பல்ல ரஞ்சித். மாவீரர் தினத்திற்கு வருடாந்தம் போய்க்கொண்டே எனக்கு இந்த விமர்சனத்தையும் பகிரங்கமாகச் சொல்லும் நேர்மை இருக்கிறது! உங்களிடம் இருக்கிறதா என்பதை இந்த மழுப்பல்களை வாசிப்போர் தான் சொல்ல முடியும்!😎  

(மேலும் எவ்வளவு காலம் தான் 2009 இற்கு முந்தைய ஜஸ்ரின் என்ற ஏக்கத்தில் காலத்தை ஓட்டுவீர்கள்?😂)  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

 

நீங்களே முன்னர் குறிப்பிட்டிருப்பது போல, இந்தத் தொடர் "ஒரு நோக்கத்திற்காக எழுதப் படுகிறது" என்பதால் இவ்வாறு சதித்திட்டக் கதைகளூடு புலிகளுக்கு வெள்ளையடிப்பதை தீவிரமாக நீங்கள் செய்வதை  சுட்டிக் காட்ட முனைகிறேன், அவ்வளவு தான்!

இதன் அடிநாதம், புலிகள் தங்கள் பெயருக்குப் பாதகமான விடயங்களைச் செய்திருக்க மாட்டார்கள் என்ற விம்பத்தை ஏற்படுத்தும் நப்பாசை தானே? ஆனால், அப்படியல்ல, ஈழப்போராட்ட காலம் பூராகவும் புலிகள் அவ்வாறான தூர நோக்கற்ற பல காரியங்களைச் செய்தார்கள் என்பது சாதாரணமாக தமிழர்களுக்குத் தெரிந்த செய்தி! இதை இருட்டடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதே என் வாதம்! 

மற்றபடி, இது புலிகள் மீதான வெறுப்பல்ல ரஞ்சித். மாவீரர் தினத்திற்கு வருடாந்தம் போய்க்கொண்டே எனக்கு இந்த விமர்சனத்தையும் பகிரங்கமாகச் சொல்லும் நேர்மை இருக்கிறது! உங்களிடம் இருக்கிறதா என்பதை இந்த மழுப்பல்களை வாசிப்போர் தான் சொல்ல முடியும்!😎  

(மேலும் எவ்வளவு காலம் தான் 2009 இற்கு முந்தைய ஜஸ்ரின் என்ற ஏக்கத்தில் காலத்தை ஓட்டுவீர்கள்?😂)  

நான் புலிகளுக்கு வெள்ளையடிப்பதற்காக இத்தொடரை எழுதவில்லை என்பது உங்களுக்குப் புரியாமல்ப் போனது வியப்புத்தான்.

கருணாவின் துரோகம் பற்றியே எனது தொடர் பேசுகிறது. அதற்காகக் புலிகள் மக்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடவில்லையென்று நான் ஒருபோதும் நம்பவில்லை, அப்படி நம்பினால் நான் ஒரு முட்டாளாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால், 81 இலிருந்து வடக்குக் கிழக்கிலும், 90 இலிருந்து கொழும்பிலும் வாழ்ந்தவன் என்கிற அடிப்படையில் புலிகளால் ராணுவ இலக்குகள் தவிர்ந்த ஏனைய இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நான் பார்த்திருக்கிறேன். 1995 மத்தியவங்கிக் குண்டுவெடிப்பில் மயிரிழையில் தப்பியவன் நான். ஆகவே, புலிகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கம் எனக்கு நிச்சயமாகக் கிடையாது. ஆனால், அவர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையினை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன்.

2009 இற்கு முந்தையை ஜஸ்டினின் நிலைப்பாடு குறித்து நான் ஏங்கவேண்டிய தேவை எனக்குச் சிறிதும் இல்லை. நான் சுட்டிக்காட்டியது உங்களின் நிலைப்பாடு 2009 இற்குப் பின்னர் உங்களின் நண்பனின் அனுபவத்தினால் மாறியது என்பதைத்தான். புலிகளின் வன்முறைகளுக்காகவே உங்களின் நிலைப்பாடு மாற்றம்பெற்றிருந்தால், நீங்கள் 2009 வரை காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால், புலிகள் அதற்கு முன்னரும் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தார்கள். உங்களின் கருத்துக்களுடன் நான் உடன்படாத நிலையில், உங்களின் நிலைமாற்றம்பற்றி நான் ஏங்கவேண்டிய தேவை எனக்கு ஏன் வருகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ தெரியவில்லை.

இதற்குமேல் இத்தொடரில் நான் உங்களுக்கு எழுத எதுவுமில்லை. நான் எழுதுவதை முற்றாக வாசித்துவிட்டு பதில் எழுதுங்கள். புலிகள் ஒரு குறிப்பிட்ட தாக்குதலைச் செய்யவில்லையென்று நான் எழுதும்போது, புலிகள் ஒருபோதுமே மக்களைத் தாக்கவில்லை என்று நான் சொல்வதாக நீங்கள் கருதினால், தவறு என்னுடையது அல்ல.

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

Just now, ரஞ்சித் said:

நான் புலிகளுக்கு வெள்ளையடிப்பதற்காக இத்தொடரை எழுதவில்லை என்பது உங்களுக்குப் புரியாமல்ப் போனது வியப்புத்தான்.

கருணாவின் துரோகம் பற்றியே எனது தொடர் பேசுகிறது. அதற்காகக் புலிகள் மக்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடவில்லையென்று நான் ஒருபோதும் நம்பவில்லை, அப்படி நம்பினால் நான் ஒரு முட்டாளாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால், 81 இலிருந்து வடக்குக் கிழக்கிலும், 90 இலிருந்து கொழும்பிலும் வாழ்ந்தவன் என்கிற அடிப்படையில் புலிகளால் ராணுவ இலக்குகள் தவிர்ந்த ஏனைய இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நான் பார்த்திருக்கிறேன். 1995 மத்தியவங்கிக் குண்டுவெடிப்பில் மயிரிழையில் தப்பியவன் நான். ஆகவே, புலிகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கம் எனக்கு நிச்சயமாகக் கிடையாது. ஆனால், அவர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையினை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன்.

2009 இற்கு முந்தையை ஜஸ்டினின் நிலைப்பாடு குறித்து நான் ஏங்கவேண்டிய தேவை எனக்குச் சிறிதும் இல்லை. நான் சுட்டிக்காட்டியது உங்களின் நிலைப்பாடு 2009 இற்குப் பின்னர் உங்களின் நண்பனின் அனுபவத்தினால் மாறியது என்பதைத்தான். புலிகளின் வன்முறைகளுக்காகவே உங்களின் நிலைப்பாடு மாற்றம்பெற்றிருந்தால், நீங்கள் 2009 வரை காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால், புலிகள் அதற்கு முன்னரும் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தார்கள். உங்களின் கருத்துக்களுடன் நான் உடன்படாத நிலையில், உங்களின் நிலைமாற்றம்பற்றி நான் ஏங்கவேண்டிய தேவை எனக்கு ஏன் வருகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ தெரியவில்லை.

இதற்குமேல் இத்தொடரில் நான் உங்களுக்கு எழுத எதுவுமில்லை. நான் எழுதுவதை முற்றாக வாசித்துவிட்டு பதில் எழுதுங்கள். புலிகள் ஒரு குறிப்பிட்ட தாக்குதலைச் செய்யவில்லையென்று நான் எழுதும்போது, புலிகள் ஒருபோதுமே மக்களைத் தாக்கவில்லை என்று நான் சொல்வதாக நீங்கள் கருதினால், தவறு என்னுடையது அல்ல.

சரி, ஏக்கமில்லையெனில் ஒவ்வொரு பதிலிலும் 2009 ஜஸ்ரின் ஏன் வருகிறார் என யோசிக்கிறேன்! ஒருவர் தன் நிலைப்பாடுகளை -அரசியலோ, சமூகரீதியோ, தனிப்பட்ட வாழ்வோ - புதிய தரவுகளின் படி மீள் பரிசீலனை செய்து மாற்றிக் கொள்வதில் பிரச்சினையிருப்பதாக நான் நினைக்கவில்லை! நீங்கள் அவ்வாறு பிரச்சினையென நினைத்தால் அதை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள், வாழ்த்துக்கள்! 

நீங்களே கேள்வி கேட்டிருக்கிறீர்களே உங்கள் பதிவில், புலிகள் தங்கள் பெயரைப் பழுதாக்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பார்களா என்று? அது தான் புலிகள் வழமையாக அவ்வாறான பெயர் பழுதாக்கும் வேலைகளில் ஈடுபடவில்லையென்ற புரிதலில் நீங்கள் இருக்கிறீர்களாக்குமென நினைத்தேன்!

மேல் குறிப்பிட்ட பதிவில் பல தரவுத் தவறுகளும் இருக்கின்றனவே ரஞ்சித்? வெளிநாட்டு ஊடகங்கள் புலிகளைக் குற்றம் சாட்டத் தயங்கின என்று கூறி,  அமெரிக்க வெளியுறவுத் திணைக்கள அதிகாரிகள் கெபிரிகொலாவ, புத்தல தாக்குதல்களில் புலிகளின் கைவரிசையிருப்பதாகக் குறிப்பிட்டதையும் புதைத்து விட்டீர்களே ரஞ்சித்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

வெளிநாட்டு ஊடகங்கள் புலிகளைக் குற்றம் சாட்டத் தயங்கின என்று கூறி,  அமெரிக்க வெளியுறவுத் திணைக்கள அதிகாரிகள் கெபிரிகொலாவ, புத்தல தாக்குதல்களில் புலிகளின் கைவரிசையிருப்பதாகக் குறிப்பிட்டதையும்

சரி, இங்கும் வந்து உங்கள் கைவரிசையினைக் காட்டுவதாக முடிவெடுத்துவிட்டீர்கள் போலத் தெரிகிரது.

அமெரிக்கா என்றாலே அனைத்துச் சர்வதேச நாடுகளும், செய்தி நிறுவனங்களும் அடங்கிவிடும் என்று நீங்கள் நினைத்தால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. அமெரிக்கா இவ்வாறு செயற்பட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்று கட்டுரையாளர் நிமால் குறிப்பிட்டிருந்ததை நீங்கள் படிக்கவில்லை போலும். 

உங்களின் நோக்கம் இதனை ஒரு விவாதக் களமாக மாற்றுவதுதான் என்றால், நான் தொடர்ந்து உங்களுக்குப் பதில் எழுதுவது அதனை ஊக்குவிக்கவே செய்யும். தொடர்ந்து எழுதுங்கள். யாராவது படிப்பார்கள்.
 

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

சரி, இங்கும் வந்து உங்கள் கைவரிசையினைக் காட்டுவதாக முடிவெடுத்துவிட்டீர்கள் போலத் தெரிகிரது.

அமெரிக்கா என்றாலே அனைத்துச் சர்வதேச நாடுகளும், செய்தி நிறுவனங்களும் அடங்கிவிடும் என்று நீங்கள் நினைத்தால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. அமெரிக்கா இவ்வாறு செயற்பட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்று கட்டுரையாளர் நிமால் குறிப்பிட்டிருந்ததை நீங்கள் படிக்கவில்லை போலும். 

உங்களின் நோக்கம் இதனை ஒரு விவாதக் களமாக மாற்றுவதுதான் என்றால், நான் தொடர்ந்து உங்களுக்குப் பதில் எழுதுவது அதனை ஊக்குவிக்கவே செய்யும். தொடர்ந்து எழுதுங்கள். யாராவது படிப்பார்கள்.
 


உண்மையைச் சுட்டிக் காட்டினால் ஆத்திரம் வருவது சாதாரணமாகக் காண்பது தானே? அதிர்ச்சியில்லை. தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

 • மோகன் unpinned, pinned and featured this topic
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் துரோகமும் ராணுவத்துடனான அவரின் தொடர்பும்

ஆக்கம் தாரக்கி (தர்மரத்திணம் சிவராம்)

காலம் : 7, ஆடி 2004

கருணாவின் பிரிந்து செல்லுதல் எனும் நாடகம் பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட, அது இறுதியில் அவமானகரமான தோல்வியாகவே அவருக்கு முடிந்திருக்கிறது. இன்னொரு ஆயுததாரியான டக்கிளஸ் தேவானந்தாவின் கூற்றுப்படி, புலிகளிடமிருந்து பிரிந்துசென்ற கருணா மிக விரைவில் தனது அரசியட்கட்சிபற்றி வெளியே வந்து பொதுமக்களுடன் பேசுவார் என்று தெரியவருகிரது. டக்கிளஸின் ஊதுகுழலான தினமுரசு கருணாவின் இந்த "அரசியல் வெற்றி" நாடகத்திற்கான  பிரச்சாரப் பணிகளை மும்முரமாக முடுக்கிவிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

மிக அண்மைக்காலம் வரைக்கும், "தம்மை இனங்காட்ட விரும்பாத" கிழக்கின் ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி தெற்கில் கருணாவின் வீரப்பிரதாபங்களைக் கிலாகித்து எழுதிவந்த பல முன்னணிப் பத்திரிக்கைகள், தளபதி கருணாவும் அவரது தோழர்களும் கிழக்கில் புலிகளியக்கத்திற்கு மரண அடி கொடுத்து வருவதாகவும், புலிகள் பின்வாங்கி ஓடிவருவதாகவுமே பல கட்டுரைகளை வரைந்துதள்ளிக்கொண்டிருந்தன. இதே கருத்தினையே பல ராணுவ அதிகாரிகள் கொண்டிருப்பதும் தெரியவருவதுடன், கொழும்பில் முடிவுகளை எடுக்கும் அதிகாரத் தரப்பிற்கு ஆலோசனை வழங்கிவரும்  தெற்கின் புத்திஜீவிகள் கருணாவின் இந்த "பலத்தினை" புலிகளைப் பலவீனப்படுத்தும் ஒரு உபாயமாக அரசு நிச்சயமாகப்  பாவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருவதும் தெரிகிறது. அவர்களின் ஆலோசனைப்படி, நாட்டின் இறையாண்மையினைக் கட்டிக் காக்க கருணாவின் பலம் பாவிக்கப்படுமிடத்து, அது சமாதான நடவடிக்கைகளை பாதிக்கும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட முடியாதென்றும் கூறப்பட்டிருக்கிறது.

ஜாதிக ஹெல உறுமயக் கட்சியினர் இதுதொடர்பாக அரசாங்கத்திற்குக் கடுமையான அழுத்தங்களை முன்வைத்து வருகின்றனர். ஹிங்குராகொட விகாரையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட கருணா குழு ஆயுததாரிகளின் விடயம் வெளியே கசிந்ததையடுத்து தெற்கின் பல தலைவர்களும் ராணுவ அதிகாரிகளும் கருணா பலப்படுத்தப்பட்டு, புலிகளை அழிக்கும்  நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க அவர் ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும் கோரிவருகிறார்கள். அரசையும், தெற்கின் புத்திஜீவிகளையும் பொறுத்தவரை கருணாவின் வெற்றியென்பது, அவர் புலிகளை எவ்வளவு தூரத்திற்குப் பலவீனப்படுத்தப்போகிறார் என்பதிலேயே தங்கியிருப்பதாகத் தெரிகிறது.

Edited by ரஞ்சித்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருணாவைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் தமது நோக்கத்திற்காகப் பாவிப்பது எந்தளவு தூரத்திற்கு வெற்றிகரமானதாக இருக்கும் எனும் ராணுவத்தினரின் கேள்விக்கான பதிலை நான் சற்று விளங்கப்படுத்த முயல்கிறேன்.

கருணாவின் பிளவானது புலிகளியக்கத்திற்கு முன்னர் ஏற்பட்ட ஏனைய பிளவுகளைக் காட்டிலும் வித்தியாசமானது என்று சிலர் கூறலாம். இதில் முதலாவதாக 1978 இல் பிரபாகரனுடன் முரண்பட்டுக்கொண்டு உமா மஹேஸ்வரன் பெருமளவு வளங்களையும் எடுத்துக்கொண்டு பிரிந்து சென்றது. பின்னர் பிரபாகரனின் இரண்டாம் நிலைத் தளபதியாகவிருந்த ராகவன் 1985 இல் பிரிந்து சென்றார்.  1992 இல் மாத்தையாவின் கலகம் நடந்தது. 

இவை மூன்றுமே பிரபாகரனை "தம்பி" என்று அழைத்த காலகட்டத்துப் போராளிகளால் நடைபெற்றவை. இவர்கள் அனைவருமே பிரபாகரனைக் கொல்ல விரும்பியிருந்தனர். அதற்கான மிகவும் தெளிவான திட்டங்களும் அவர்களிடம் இருந்தன. 

என்னைப்பொறுத்தவரை கருணாவின் பிரிவென்பது ஆரம்பம் முதல் இறுதிவரை தற்செயலாக நடந்தது என்றே நினைக்கிறேன். இப்பிரிவினைக் கருணா நீண்டகாலமாகத் திட்டமிட்டு வந்தார் என்று நான் நம்பவில்லை. அவர் பிரபாகரனின் தலைமைத்துவத்தை நிராகரிக்கவில்லையென்றும், விடுதலைக்கான பாதையினை விட்டு அகலப்போவதில்லையென்றும் தனது 42 நாள் கிளர்ச்சியின்போது தனது ஆதரவாளர்களிடமும், சமாதானம் செய்ய முன்வந்த பலரிடம் தொடர்ச்சியாகக் கூறிவந்திருந்தார். பிரபாகரனை "அண்ணை" என்று அழைக்கும், பிரபாகரனின் ஆளுமையினை, வெற்றியினினைக் கண்டு தரிசித்த, அவரால் வளர்க்கப்பட்ட போராளிகளின் காலகட்டத்தில் இருந்தே கருணாவும் வந்திருக்கிறார். கிழக்கில் தனித்து இயங்குவதாக கருணா பிரபாகரனுக்கு எழுதிய முதலாவது கடிதத்தில், "நீங்கள் எனக்குக் கடவுளைப் போன்றவர்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆரம்பத்தில் கருணாவின் கிளர்ச்சியென்பது, தன்னை சுதந்திரமாக, பிரபாகரனுக்கு நேரடியாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு தளபதியாக செயற்பட அனுமதிக்கும் வேண்டுகோளாகவே அமைந்திருந்தது. அத்துடன், புலிகளியக்கத்தின் ஏனைய தலைவர்களோ, தளபதிகளோ தனது நிர்வாகத்தில் தலையிடுவதனை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவர் பிடிவாதமாகக் கூறியிருந்தார்.

ஆனால், பிரச்சினை மாசி மாதம் 16 ஆம் திகதியே தொடங்கியது. புலிகளின் ராணுவத் தலைமைச் செயலகம் கருணாவை வன்னிக்கு வருமாறு அழைத்தபோது, அதனை கருணா வெளிப்படையாக நிராகரித்தப்பதாக பிரபாகரனுக்கு அறிவித்தபோதே  அது ஆரம்பமாகியது. தான் வன்னிக்குச் சென்றால், புலிகளின் தலைவைரின் கோரிக்கையினை நிராகரித்ததற்குத் தண்டனையாக தனது பதவி பறிக்கப்படும் என்று நிச்சயமாக கருணா தெரிந்து வைத்திருந்தார். ஐரோப்பாவில் கருணா சென்ற இடங்களிலெல்லம் தமிழ் மக்கள் அவரை பெரிய வீரனாகவே பார்த்தார்கள். கூடச் சென்ற தமிழ்ச் செல்வனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 

கருணா சிறிது சிறிதாக, ஆனால் தவிர்க்கமுடியாமல் யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியே தான் என்றும், அந்தவிடுதலை தன்னால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் அவர் நம்பத் தொடங்கினார்.

தனது கிழக்கு மாகாண தாளபதிக்கும் தனக்கும் இருந்த நெருங்கிய நட்பினாலும், நம்பிக்கையினாலும், பிரபாகரன் தனது உளவுத்துறையும், கணக்காய்வுத்துறையும் கருணா பற்றிய முறைகேடுகளை அவரிடம் முன்வைத்தபோது அவற்றை ஏறெடுத்துப் பார்க்கக் கூட  விரும்பியிருக்கவில்லையென்றும், கருணா கூறுவதுபோல நிர்வாகத்தில் தலையீடுகள் இருப்பின் அவற்றினை நிவர்த்திசெய்து கருணாவை கிழக்கின் தளபதியாகத் தொடர்ந்து பணியாற்ற பிரபாகரன் விரும்பியிருந்ததாகவும் தெரியவருகிறது. போராட்டத்தின் மீதும், இயக்கத்தின்மீதும் கருணா வைத்திருந்த விசுவாசத்தை ஆணித்தரமாக நம்பியிருந்த பிரபாகரன், கருணா கேட்பவற்றை வழங்கும் விருப்பினைக் கொண்டிருந்தார் என்றும் தெரியவருகிறது.

கடந்தவருடம் கருணா வன்னிக்குச் சென்றிருந்தவேளையில், கிழக்கில் தமிழீழ நீதித் துறை மற்றும் காவல்த்துறை நடவடிக்கைகளுக்கு கருணாவின் போராளிகளால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தொடர்பாக பிரபாகரன் கருணாவைக் கடிந்துகொண்டதாகத் தெரியவருகிறது. இதனால் கருணா அவமானப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல, மட்டக்களப்பு சர்வதேச பாடசாலை விவகாரத்தில் கருணாவின் செயற்பாடு தலைவருக்குத் தெரியவந்தபோது, அதனைக் கூட தோழமையுடனான அறிவுருத்தலினையே பிரபாகரன் கருணாவுக்கு வழங்கியிருந்தார். கருணா மிக உயர் தளபதியாகப் பிரகடணப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து தலைவரிடமிருந்து கருணாவுக்கு பாராட்டுதல்களும், கணிவான அறிவுருத்தல்களும் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தன என்றால் மிகயில்லை. ஆனால் தற்போதோ, தலைவரின் கட்டளையினை வெளிப்படையாக நிராகரித்தமை, பாரிய நிதிமுறைகேடுகள் ஆகிய குற்றங்களுக்காக கருணா தனது தகைமையினை இழக்கப்போவது உறுதியென்று அவர் தெரிந்துவைத்திருந்தார். கருணாவைப் பொறுத்தவரை தனது தலைவரின் முன்னால் இவ்வாறான குற்றவுணர்வுடன் நிற்பது தாங்கொணாத, மிகப்பெரிய அவமானம் என்று கருதினார். ஆகவே இதற்கான ஒரே பரிகாரமாக, "வீட்டுவேலையினைச் செய்யவில்லையென்றால், பள்ளிக்கு ஒழிப்பது போல " தலைவரிப் பார்ப்பதைத் தவிர்ப்பதே ஒரே முடிவென்று அவர் கருதினார்.

முதலில், கருணாவின் நிராகரிப்பின் பின்னால் வெளிச்சக்திகள் இருக்கின்றனவா என்று புலிகள் ஆராயத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் தலைவரின் கட்டளையினை நிராகரிக்கும் கருணாவின் முடிவின் பின்னால் இலங்கை ராணுவத்தின் உளவுப்பிரிவோ அல்லது வெளிநாட்டுச் சக்திகளோ இல்லையென்பதை புலிகள் அறிந்துகொண்டார்கள். கருணாவின் பின்னால் அமெரிக்கா இருக்கலாம் என்று கரிகாலன் கூறியது, செய்தியாளர் ஒருவரினால் அவர் மீண்டும் மீண்டும் துருவப்பட்டு சங்கடத்திற்கு உள்ளானபோதுதான் என்பது வெளிப்படை.

இக்கட்டத்தில், தமிழ்ச் செல்வன் மட்டக்களப்பிற்குச் சென்று,  கருணாவுடன் சுமூகமாகப் பேசி, அவரை வன்னிக்கும் அழைத்துவரும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்வந்தார். புலிகளின் மூத்த தளபதிகளின் கருத்துப்படி, கருணாவை விசாரித்து, தனது நியாயப்படுத்தமுடியாத செலவுகளுக்கான காரணங்களை வெளிப்படுத்தத் தவறிய குற்றத்திற்காக 4 இலிருந்து 6 மாதாங்கள் தண்டனைக்குப் பின், அவரை மீண்டும் சகல அதிகாரங்களுடனும் கிழக்கு மாகாணத்தின் தளபதியாக நியமிக்கும் யோசனையில் பிரபாகரன் இருந்ததாகத் தெரியவருகிறது. 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருணாவுக்குக் கொடுக்கப்படும் 4 இலிருந்து 6 மாத கால தண்டனைக்குப் பின்னர் அவர் மீண்டும் கிழக்கின் அதியுச்ச தளபதியாக தலைவரால் நியமிக்கப்படுவார் எனும் மூத்த தளபதிகள் பலரின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக புலிகளின் மேற்குப் பிராந்தியத் தளபதியும், மாத்தையாவின் நெருங்கிய சகாவும், பிரபாகரன் கொல்லப்படவேண்டும் எனும் சதியில் பங்கு கொண்டவருமான கேர்ணல் ஜெயம் இன்றுவரை புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக தலைவரால் நியமிக்கப்பட்டு செயற்பட்டுவருவதையும் சுட்டிக் காட்டுதல் அவசியம். கருணாவின் துரோகத்தைக் காட்டிலும் படுபாதகத்தனமான துரோகத்திற்குத் துணைபோன கேர்ணல் ஜெயத்திற்கே தலைவர் மன்னிப்பளித்து பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார் என்றால், தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கருணாவுக்கு நிச்சயம் தலைவர் மன்னிப்பளிப்பார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

மாத்தையாவுடனான துரோக நாடகத்தில் கைதுசெய்யப்பட்ட ஜெயம், சிறையில் அடைக்கப்பட்டு, கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு, புலிகளின் உறுப்பினர் எனும் பதவியும் மீளப் பெறப்பட்டு சாதாரண மனிதராக விலக்கப்பட்டார். ஆனால், இயக்கத்தை விட்டு விலகிச் செல்வதை நினைத்துக்கூடப் பார்க்க விரும்பாத ஜெயம், மீண்டு சாதாரண போராளியாக இயக்கத்தில் இணைந்து , தனது முயற்சியின் மூலம் இயக்கத்தில் முன்னேறி கேர்ணல் எனும் தரத்திற்கு உயர்ந்துவந்தார். ஜெயத்தைக் கேர்ணலாகப் பதவியுயர்த்த வேண்டும் என்கிற வேண்டுகோளினை பிரபாகரனே புலிகளின் மூத்த தளபதிகள் கவுன்சிலிடம் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜெயத்தின் குற்றத்தோடு ஒப்பிடும்போது, தலைமையின் கட்டளைக்குக்  கீழ்ப்படியாமை என்பதோ அல்லது இயக்கத்திற்குச் சொந்தமான 50 - 60 மில்லியன் ரூபாய்களை களவாடியதோ பெரும் குற்றங்களாகப் பார்க்கப்படமுடியாவிட்டாலும் கூட, கருணாவின் கேர்ணல் தரம் பறிக்கப்படும் என்றும், அவருக்கு ஒழுக்காற்று தண்டனையாக சில மாதங்கலாவது பணிநீக்கம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவே கருணாவுக்குப் பிரச்சினையாக இருந்தது. மட்டக்களப்பில் தனக்குக் கீழே இருக்கும் போராளிகளின் முன்னாலும், மொத்த கிழக்கு மாகாணத் தமிழர்களின் முன்னாலும் தனக்கிருப்பதாக கருணா நினைத்திருந்த புலிகளின் ஒப்பற்ற தளபதி எனும் பெயரும் புகழும் தனது குற்றங்களுக்கான தண்டைகள் மூலமும், தனது பதவியிறக்கம் மூலமும் சரிக்கப்படுவதை கருணா ஏற்றுக்கொள்ள மறுத்தார். 

கருணாவின் கிளர்ச்சி தொடர்பாக தளபதி ரமேஷிடம் பேசிய தலைவர், "இந்தப் பிரச்சினையினை எப்படிக் கையாள்வது என்றே சிந்திக்கிறேன். முன்னைய காலத்தில் இயக்கத்திற்கெதிராக துரோகங்களை நான் சந்தித்திருக்கிறேன், அவற்றை சுலபமாகக் கைய்யாண்டும் இருக்கிறேன். ஆனால் இவனுக்கு வந்திருக்கிற பிரச்சினை என்னவென்றால், அவனுக்கு விசர் பிடிச்சிருக்குதெண்டு நினைக்கிறன்" என்று கூறியிருக்கிறார். ஆக, கருணாவின் கிளர்ச்சியை தலைவர் கருணா மதியீனமாக நடப்பதால் உருவானதென்றே நினைத்திருப்பதாகத் தெரிகிறது.

மட்டக்களப்பிற்குச் சென்று கருணாவுடன் சமரசத்தில் ஈடுபட்டு, அவரை மீண்டும் வன்னிக்கு அழைத்துவர தமிழ்ச் செல்வன் முயன்று கொண்டிருக்க, கருணா வெளிப்படையாக தான் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போவதாக அறிவித்தார். இதனால், தமிழ்ச்செல்வனின் முயற்சியும் கைவிடப்பட்டது. 

கருணாவின் தனித்து இயங்குவதான பகிரங்க அறிவிப்பினைம் அடுத்து, அவரை உடனடியாக இயக்கத்திலிருந்து புலிகள் விலக்கினர். ஆனால், அவரது செயல துரோகமாகப் பார்க்க மறுத்த தலைமைப் பீடம், ஜெயசிக்குரு எதிர்ச்சமரில் கருணா ஆற்றிய பங்கிற்காக அவரை பிணக்கின்றி வெளியேறிச்செல்லும் சந்தர்ப்பத்தைத் தருவதாகவும்  செய்தியனுப்பினர். அசோசியேட்டட் நியூஸ் எனும் செய்திச் சேவைக்கு கருணா பகிரங்கமாக தான் தனித்து இயங்குவதாக அறிவித்து 5 அல்லது 6 நாட்களுக்குப் பின்னரும் புலிகள் பல தூதுவர்கள் வழியாக கருணாவுக்கான பிணக்கின்றி வெளியேறும் திட்டம்பற்றித் தொடர்ச்சியாகத் தூதுகளை அனுப்பிக்கொண்டே வந்தனர்.

புலிகள் கருணாவுக்கு வழங்க விரும்பிய சன்மானத்தின்படி, கருணா இயக்கத்திலிருந்து விலகி, தனது குடும்பத்தினரையும் கூட்டிக்கொண்டு பிறிதொரு நாட்டிற்குச் சென்று வாழ முடியும். அத்துடன், கருணா தன்வசம் வைத்திருக்கும் இயக்கத்திற்குச் சொந்தமான பணத்தினையும் அவரே வைத்திருக்கலாம் என்றும் புலிகள் கூறியிருந்தனர். மேலும், மட்டக்களப்பில் புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையிலான தூதராகச் செயற்பட்ட ஒருவர் ஒரு படி மேலே சென்று, "நீங்கள் புலிகளை நம்பவில்லையென்றால், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரூடாக நீங்களும், உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக வெளிநாடு செல்வதை புலிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றும் கருணாவிடம் கூறியிருந்தார்.

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருணாவுக்குப் புலிகளால் அனுப்பப்பட்ட பொதுமன்னிப்புப் பற்றிய தகவல்களை கருணாவிடம் கொண்டுவந்து சேர்த்தவர்களில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதியான அலிசாஹீர் மெளலானாவும் ஒருவர். இந்தவிடத்தில் கருணாவின் பிரிவின் பின்னாலிருந்த அலிசாஹீர் மெளலானா - ஐக்கிய தேசியக் கட்சியின் சதிபற்றியும் நான் புரிந்துகொள்ளுதல் அவசியம். 

கருணாவும், அலிசாஹீர் மெளலானாவும் பள்ளிப்பருவத்திலிருந்தே தோழர்கள் என்கிற தவறான கட்டுக்கதைகள் பரப்பட்டு வந்தன. ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையிலான சிநேகம் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே ஆரம்பமானது என்பதே உண்மை. மெளலானா நெடுங்காலமாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலே படித்தவர். கருணாவுக்கு பல வருடங்கள் வயதில் மூத்தவர். கருணாவோ கிரானில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் உயர்தரத்திற்காக மட்டக்களப்பு மத்திய கல்லூரிக்கும் சென்றவர். ஆகவே இவர்கள் இருவரும் பள்ளித்தோழர்கள் என்பது தவறான தகவல். 


2001 இல் கருணா கிழக்கு மாகாணத்தின் சிறப்புத் தளபதியாகப் பதவியேற்று கிழக்கில் செயற்பட ஆரம்பித்திருந்த வேளை, புலிகளின் புலநாய்வுத்துறை தமது அன்றாட தகவல் அறியும் செயற்பாடுகளில் கருணாவுக்கும் இயக்கத்திற்கு வெளியில் இருக்கும் சக்திகளுக்கும் இடையிலான சில தொடர்புகள் பற்றி அறிந்துகொண்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சில மாதங்களுக்கிடையில் கிழக்கிலிருக்கும் ஒரு பலம்வாய்ந்த ஐ தே க அரசியல்வாதியூடாக அரசாங்கம் கருணாவுடன் நேரடியாகத் தொடர்பொன்றினை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்ததும்,  இத்தொடர்பிற்கு தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியினை அரசு கோறியிருந்ததும் புலிகளுக்குத் தெரியவந்தது. அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதி என்று கட்டிக் கொண்டாலும், ஐ தே க அரசின் உயர் மட்ட தலைவர்களுடன்  நெருக்கமான நட்பினையும் கொண்டிருந்தவர். 

ஆனால், தன் மூலம் கருணாவுக்கும் அரசுக்கும் இடையே உருவாகவிருக்கும் நேரடித் தொடர்பின் தாக்கத்தினை உணர்ந்துகொண்ட அந்த பாராளுமன்ற உறுப்பினர் இறுதிநேரத்தில் ஐ தே க அரசினால் தனக்கு விடுக்கப்பட்ட "கருணாவுடன் நேரடித் தொடர்பு" எனும் வேண்டுகோளினை ஏற்க மறுத்துவிட்டார். அதேநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ தே க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும், கொழும்பிலேயே தொடர்ச்சியாக வாழ்ந்துவந்தவரும், ஐ தே க வின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்குள்ளவருமான ஒரு அரசியல்வாதி கொக்கட்டிச்சோலைக்கு சில கிலோமீட்டர்கள் மேற்கே அமைந்திருக்கும் மறைவிடம் ஒன்றில் கருணாவுடன் ரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக நன்கு அறிந்துவைத்திருந்த புலிகள், சில மாதங்களுக்குப் பின்னர் ஐ தே க வினர் உங்களோடு தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம், ஆகவே அவதானமாக இருங்கள் என்று கருணாவை எச்சரித்திருந்தனர், ஆனால் இதற்கான காரணத்தை அவர்கள் அப்போது கருணாவிடம் தெரிவிக்கவில்லை. 

ஆனால், புலிகளின் புலநாய்வுத்துறையின் இந்த "ஐ தே க தொடர்பு" எச்சரிக்கையினை கருணா சட்டை செய்யவில்லை. அவரைப்பொறுத்தவரை தலைவர் தன்னை முழுவதுமாக நம்புவதால், தன்பற்றிய புலநாய்வுத்துறையினரின் தகவல்களை தலைவர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றே அவர் நம்பினார். "கருணா அம்மாண் எதைச் செய்தாலும் புலிகளின் நண்மைக்காகவே செய்வார் என்பதை தலைவர் நன்கு அறிவார். அம்மான் பற்றி புலநாய்வுத்துறை காவிச் செல்லும் செய்திகளை தலைவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று கருணாவுக்கு நெருக்கமான கிழக்கு மாகாண போராளி ஒருவர் தெரிவித்தார். 

இதேவேளை, கருணாவுக்கும், ஐ தே க வின் தலைவர் ரணிலின் ஆலோசகரான மெளலானாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்களாகப் பழகத் தொடங்கினர். கருணாவின் மனைவி நிராவும் அவரது இரு பிள்ளைகளும் மெளலானாவின் மனைவியான தனுஜாவைச் சந்திக்க அடிக்கடி கொழும்பிற்குச் சென்றுவரத் தொடங்கினர். இவர்களுக்கிடையிலான நெருக்கம் நாளடைவில் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்ட சர்வதேச பாடசாலை ஒன்றினைத் திறந்துவைக்கும் நிகழ்விற்கு திருமதி மெளலானாவைக் கருணா குடும்பம் அழைத்துவந்ததுவரை நீண்டு சென்றது. இந்தச் சர்வதேசப் பாடசாலையின் மிக பிரபலமான மாணவர்களாக கருணாவின் பிள்ளைகளும், அவரின் சகாக்களான துரை மற்றும் ராபேர்ட் ஆகியோரின் பிள்ளைகளும் இருந்தனர் என்பதும், இவ்விரு சகாக்களும் தற்போதுவரை (2004) அங்கேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

கருணாவின் பிள்ளைகளும், ஏனைய தலைவர்களின் பிள்ளைகளும் சொகுசு வாகனங்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மட்டக்களப்பின் மேற்குப்புற காட்டுப்பகுதியிலிருந்து இந்தப் பாடசாலைக்கு வந்துசெல்லத் தொடங்கினர். இந்த நிகழ்வு கருணாவினாலும், அவரது சகாக்களாலும் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரைக் கடுமையாகப் பாதித்திருந்தது. பல பெற்றோர்கள் இதுதொடர்பான முறைப்பாடுகளை புலிகளின் தலைமைப் பீடங்கள் அமைந்திருந்த கிளிநொச்சிக்கும், புதுக்குடியிருப்பிற்கும் தொடர்ச்சியாக அனுப்பி வந்தனர்.

கிளிநொச்சியிலும் புலிகளால் ஒரு ஆங்கில மூலப் பாடசாலை ஒன்று நடத்தப்பட்டு வந்தது. இயக்கத்தின் தளபதிகளினதோ அல்லது மூத்த உறுப்பினர்களினதோ பிள்ளைகளை இப்பாடசாலையில் அனுமதிப்பதில்லையென்கிற கடுமையான கட்டுப்பாடும் அங்கு நிலவிவந்தது. சமர்களில் கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பங்களிலிருந்து திறமையுள்ள பிள்ளைகள் தெரிவுசெய்யப்பட்டு இந்தப்பாடசாலைக்குச் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆகவே, மட்டக்களப்புச் சர்வதேச பாடசாலையில் தனது பிள்ளைகளைக் கருணா இணைத்துக் கற்பித்துவருவது பற்றி கருணாவிடம் பேசிய தலைவர், இது இயக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு முரணானது என்பது மட்டுமல்லாமல், கருணாவின் பிள்ளைகள் மற்றும் அவர்களைக் கொண்டு வரும் புலிகளின் போராளின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலான விடயமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். புலிகளின் மூத்த தளபதியொருவரின் பிள்ளைகள் பூரண அரச கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குச் சென்றுவருவதும், அரச புலநாய்வுத்துறையினால் அவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதும் பாரதூரமான விடயம் என்பதையும் தலைவர் கருணாவிற்குச் சுட்டிக் காட்டியிருந்தார்.

ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தரமான பாடசாலைகள் இல்லாமயினாலேயே தான் தனது பிள்ளைகளை சர்வதேசப் பாடசாலைக்கு அனுப்பிவருவதாகக் கருணா கூறியபோது, "உனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாடொன்றிற்கு அனுப்பி அங்கு படிக்கவை, நாட்டில் நிலமை சுமூகமாகி, பிள்ளைகளின் படிப்பிற்குச் சரியான ஒழுங்குகள் செய்யப்பட்ட பின்னர் அவர்களை மீண்டும் இங்கு அழைத்து வா" என்று தலைவர் கருணாவிடம் கூறியிருக்கிறார். கருணாவுக்காக இயக்கத்தின் விதிகளை அவ்வப்போது தளர்த்திய தலைவர், தொடர்ச்சியாக கருணாவின் மனம் கோணாதபடி பார்த்துவந்தார் என்று அவருடன் நெருங்கியவர்கள் கூறுகிறார்கள். தலைவரால் வெளிநாடொன்றிற்கு பிள்ளைகளையும் மனவியையும் அனுப்புமாறு கோரப்பட்டதன் பின்னரே கருணா தனது குடும்பத்தினை மலேசியாவுக்கு அனுப்பிவைத்தார் என்றும், ஆனால் இது தவறுதலாக கருணா இயக்கத்திற்குத் தெரியாமல் குடும்பத்தை அங்கு அனுப்பியதாகவும், செல்லையா ராசதுரை இதற்கு உதவியதாகவும் சில செய்திச் சேவைகள் செய்திவெளியிட்டு வந்திருந்தன.

 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் சர்வதேச பாடசாலை குறித்த தலைவரின் அக்கறையுடனான அறிவுறை எப்படியாக இருந்தபோதிலும், இவ்விடயத்தில் தனது செயலினால் கருணா அவமானப்பட்டிருந்தார் என்பதே உண்மை. 

கருணாவுக்கும், மெளலானாவுக்கும், அவரூடாக ஐ தே கட்சிக்கும் கருணாவுக்கும் இடையே ஏற்பட்டுவந்த நெருங்கிய உறவு 2004 பொதுத் தேர்தல்கள் பற்றிய அறிவிப்பு வெளிவந்ததையடுத்து வெளிப்பட்டுப் போனது. என்னையும் (தாரகி சிவராம்) இன்னும் மூன்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களையும்  (பின்னர் கருணாவால் படுகொலைசெய்யப்பட்ட பத்திரிக்கையாளர் நடேசனும் ஒருவர்)  கருணா சந்தித்தார். மாசி மாதம் 10 ஆம் திகதி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினருடனான தனது சந்திப்பை முடித்துக்கொண்டபின்னரே எங்கள் நால்வரையும் அவர் அழைத்துப் பேசினார்.


எம்மை பொதுத் தேர்தல்கள் தொடர்பாக பேசுவதற்கே அவர் அழைத்திருந்தார்ஃ.

"மட்டக்களப்பு மாவட்ட புலிகளின் விருப்பத்தின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முஸ்லீம் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக நாம் முடிவெடுத்திருக்கிறோம். எமது தலைமையும் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லீம் வேட்பாளர்களை தேசியக் கூட்டமைப்புப் பட்டியல் மூலம் நிறுத்தவே விரும்பியிருந்தது" என்று கூறிவிட்டு எம்மிடம் "உங்களுக்குத் தெரிந்த முஸ்லீம் வேட்பாளர்கள் சிலரைக் கூறமுடியுமா?" என்று கேட்டார். நாமும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிரசித்திபெற்ற, வேட்பாளராகும் தகுதியைக்கொண்ட பல  முஸ்லீம் நபர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்தோம்.

இறுதியாக கருணா எங்களைப் பார்த்து, "அலிசாஹீர் மெளலானா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். நாம் பரிந்துரைத்த பல பெயர்களை நிராகரித்துவிட்டு மெளலானா பற்றி எம்மிடம் அவர் கேட்டது அவர் இதுகுறித்து ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார் என்பதை எமக்கு உணர்த்தியது. ஆனால், தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவிருக்கும் ஜெயநந்தமூர்த்தி இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, மெளலான ஒரு தீவிர ஐ தே க ஆதரவாளர் என்றும், கிழக்கில் தமிழ் வாக்குகளைப் பிரித்து, தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்தி  , முஸ்லீம்களின் செல்வாக்கை உயர்த்தியவர்களில் மெளலானா முக்கியமானவர் என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

பின்னர் கருணாவின் ஆலோசகரான வரதன் எம்மிடம் தெரிவிக்கும்போது கருணாவுக்கும் மெளலானாவுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதன்படி மெளலானா மட்டக்களப்பில் ஐ தே க பட்டியலில் போட்டியிடுவார் என்றும், தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் அவரைச் சேர்த்துக்கொள்ளவேண்டிய தேவையில்லையென்றும் கூறினார். இது முற்று முழுதாக , "மட்டக்களப்பில் ஒரு சிங்களக் கட்சியையேனும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க மாட்டேன்" எனும் கருணாவின் நீண்டகால இலட்சியத்திற்கு நேர் எதிரானது என்பதை உணர்ந்துகொண்டோம். ஆனால் தற்போது கருணாவின் ஆசீர்வாதத்தோடு மட்டக்களப்பில் சிங்களத் தேசியக் கட்சியான ஐ தே க கருணாவின் விருப்பத்துடன் களமிறங்கிறது. 

கருணாவின் இந்த முடிவினால் புலிகள் கடும் சீற்றம் அடைந்திருந்ததாகத் தெரியவருகிறது. ஆனால், கருணா இதுபற்றி அதிக அக்கறைப்பட்டவராகத் தெரியவில்லை. மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக ராஜன் சத்தியமூர்த்தியை கருணா தெரிவுசெய்ததும் புலிகளுக்கு கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. சத்தியமூர்த்தியைப் புலிகள் எதிர்ப்பதன் காரணம் தனக்குத் தெரியும் என்று கூறிய கருணா, புலிகளின் புலநாய்வுத்துறையினரின் தகவல்களின்படி ராஜன் சத்தியமூர்த்தி ஐ தே க தலைமையின்  நெருங்கிய நண்பர் என்றும், ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் நெருக்கமானவர் என்றும் புலிகளின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்று தனது நெருங்கிய சகா ஒருவருக்கு இத்தருணத்தில் கூறியிருந்தார். ஆனால், கருணா தொடர்ச்சியாக தலைமையை வற்புறுத்தியதின்பேரில் ராஜன் சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கெதிராக புலிகளின் தலைமை செயற்படவில்லை. ஐ தே க ஆதரவாளார் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலூடாக மட்டக்களப்பில் கருணா போட்டியிட வைத்தபோது அதன் பின்னால் இருக்கும் சதிபற்றி புலிகள் அதிகம் அறிந்திருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. தமது புலநாய்வுத்துறைக்குத் தலையிடியினைக் கொடுக்கவே கருணா ராஜன் ஆசீர்வாதத்தைத் தெரிவுசெய்தார் என்பதைப் புலிகள் அறிந்தே இருந்தனர். 

கருணாவின் கிளர்ச்சியின் பின்னைய நாட்களில் கருணாவிடம் தனித்து இயங்குவதற்கான அரசியல் தெளிவோ அல்லது நீண்டகால அரசியல் செயல்த்திட்டமோ இருக்கவில்லையென்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்துகொண்டோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோடு கருணாவுக்கு ஏற்பட்ட திடீர் நெருக்கத்தினையடுத்து, ஐ தே க வினருடனான தனது தொடர்பினை முற்றாக அறுத்தெறிந்தார் கருணா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களிடம் மட்டக்களப்பில் பேசிய ராஜன் சத்தியமூர்த்தி ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் கருணாவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தினையடுத்து, கருணா குழுவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு பதவியினை வழங்க சந்திரிக்கா இணங்கியிருப்பதாகக் கூறினார். இதற்கமைவாக, தேர்தல் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியில் கருணா குழு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தனது முழு ஆதரவினையும் வழங்குவதாகத் தெரிவித்திருப்பதாகக் கூறியது.

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக, தான் கட்டி வந்த  வீரப்பிரதாபங்களும், ராணுவப் பிரமிப்பும் இடிந்து நொறுங்கிப்போய், கருணா தப்பியோடும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருந்த வேளை அவருடன் கூடவிருந்துகொண்டு புலிகளுக்கும் அவ்வப்போது தகவல் வழங்கிக்கொண்டிருந்த அவரின் சகா ஒருவர் கருணாவை அலிசாஹீர் மெளலானா வாழைச்சேனை பொலொன்னறுவை நெடுஞ்சாலையில், வாகரைக்கு அன்மையில்  அமைந்திருக்கும் நாலாம் முச்சந்தி எனும் இடத்தில் சந்திக்கவிருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த தகவல் உண்மையென்பதை இறுதிவரை கருணாவின் பின்னால் திரிந்து இறுதியில் இப்பகுதியில் கருணாவால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அவரின் நெருங்கிய போராளிகளில் ஒருவரும் உறுதிப்படுத்தியிருந்தார். மறுநாள் மெளலானாவைத் தொடர்புகொண்ட புலிகள், "கருணா உங்களோடுதான் இருக்கிறார் என்பது எமக்குத் தெரியும்" என்று கூறியபோது, அதனை அவர் முற்றாக மறுத்தார்.

அக தொடர்ந்து இடம்பெற்றது கருணாவுக்கும் ஐ தே க வுக்கும் இடையிலான அவமானகரமான தொடர்புதான். இங்கு கருணா விட்ட இன்னொரு தவறு பற்றியும் நாம் பார்க்க வேண்டும். இனத்தின் விடுதலையில் ஒருவருக்கு இருக்கும் அசைக்கமுடியாத உறுதிப்பாடே இயக்கம் மீதான விசுவாசத்தையும், தொடர்ந்து போராடுவதற்கான உத்வேகத்தையும் அளிக்கிறதென்பது புலிகளியக்கத்தில் முக்கிய தளபதியாகவிருந்த கருணா அறியாதது அல்ல. பிரபாகரன் தனது பேச்சுக்களின்போது, "நான் எப்போது எனது இலட்சியத்தைக் கைவிடுகிறேனோ, அன்றே என்னைக் கொன்றுவிடுங்கள்" என்று தனது தோழர்களிடம் அடிக்கடி கூறியிருக்கிறார். புலிகளின் தலைமையினால் தான் புறக்கணிக்கப்பட்டதாக அவர் கூறியதை தனது ஆதரவாளர்கள் நம்பியிருக்கும்வரைதான் கருணாவுக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கருணாவிடமிருந்து பிரிந்து மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்த நிலாவினி மற்றும் இன்னும் சில பெண்போராளிகளின் கூற்றுப்படி கருணாவை ராணுவத்தின் புலநாய்வுத்துறையே இயக்குவதை அறிந்துகொண்ட ரொபேர்ட், ஜிம் கெலி தாத்தா, துரை, விசு ஆகியோர் அதற்குப் பின்னர் கருணாவுடன் தொடர்ந்து பயணிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று  தெரியவருகிறது. அதுமட்டுமல்லாமல், கருணாவின் கிளர்ச்சியின்போது அவரின் பேச்சாளராகவும், மதியுரைஞராகவும் செயற்பட்டு வந்த வரதனும் கருணா ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படுவது கிழக்கு மக்களின் நீண்டகால அரசியல் இருப்பைக் கடுமையாகப் பாதிக்கப்போகிறது என்று கூறி வெளியேறிச் சென்றார். இந்த வாதன் தற்போது வெளிநாட்டில் வசித்து வருவதுடன் புலிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் (2004).

ஈ பி டி பி துணைராணுவக் குழுவினாலும், வெளிநாட்டுப் புலியெதிர்ப்பு அமைப்பினாலும்  நடத்தப்பட்டுவரும் கருணாவுக்குச் சார்பான இணையத்தளமான நெருப்பு டொட் கொம்மில் ஜூம் மாதம் 4 ஆம் திகதி கருணா வெளியிட்ட கரும்புலிகள் நாள் செய்தியில் அவர் வெகுவாகக் குழம்பிப் போயிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. கருணாவின் புதிய பேச்சாளரான மாறன் கூறும்போது, "கடலில் கரும்புலிகள் புரிந்த மகத்தான தியாகத்தினாலன்றி, எமது தலைவர் கருணா அம்மாண் இன்று உயிருடன் இருப்பது சாத்தியமில்லை. அவர் இன்று இந்த கரும்புலி மாவீரர்களுக்கு தனது மரியாதையினைச் செலுத்துகிறார்" என்று கூறியிருந்தார்.

கருணாவின் கிளர்ச்சியின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கருணா நடக்கும் சம்பவங்களால் இழுபட்டுச் சென்றாரே ஒழிய, அவருக்கென்று தீர்க்கமான, தெளிவான அரசியல் நோக்கோ அல்லது மக்களுக்கான அக்கறையோ இருந்தது கிடையாது. கருணாவைப் பாவித்து கிழக்கில் புலிகளை பலவீனப்படுத்தி, இறுதியில் முற்றாக அழிக்க ராணுவத்தால் முடியுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

முற்றும் 

https://tamilnation.org/forum/sivaram/040707.htm

 • Thanks 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

தெந்தமிழீழத்தையே அறுத்துப்போட்டான். ஆனால் போருக்குப் பிறகு மட்டக்களப்பில் முளைவிட்ட குஞ்சுகள் இவை அறியாமல் இந்தக் குடிகார குருணாவின் வாலை கவ்விக்கொண்டும் புலியைத் தூற்றிக்கொண்டும் திரியிதுகள். ஒரு சாம்பிராணியாலை ஒரு ஊரே மெல்லமெல்ல தன்னின இருப்பை இழந்து எரிந்து செல்கிறது! தங்கட ஊருக்கு தாங்களே கொள்ளி வைத்திருக்கிறாங்கள்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

குமரன் பத்மனாதன் எனப்படும் கே பி இன் கைது நாடகம் பற்றி அந்த நாடகம் நடந்த சில மாதங்களின் பின்னர் மெலேசியாவிலிருந்து லங்கா கார்டியன் பத்திரிக்கைக்கு அங்கிருந்து முகம்மத் எனும் செய்தியாளர் எழுதிய கட்டுரை

காலம் : ஆவணி, 2021

துரோகங்களுக்கிடையிலான போட்டி

KP UNDER 24-HOUR SURVEILLANCE - News site for Tamils

 

புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவுகளுக்குப் பொறுப்பாகவிருந்த கே பி எனப்படும் குமரன் பத்மனாதன் இலங்கை அரசாங்கத்தினதும், அதன் ராணுவ உயர் மட்டங்களினதும் செல்லப்பிள்ளையாக வலம் வரத் தொடங்கியிருப்பதுடன் இலங்கை அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக உல்லாசமான வாழ்க்கையினையும் அனுபவித்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

 

அவன் அண்மையில் வெளியிட்டிருக்கும் சில கருத்துக்களால, இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கடுமையான சீற்றம் அடைந்திருப்பதும் தெரிகிறது. தனக்கும் இலங்கையரசுக்கும் இடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை வெளிப்படையாகக் காட்டிவருவதன் மூலம் கே பீ தமிழர்களில் பல எதிரிகளைச் சம்பாதித்து வருகிறார் என்பது தெளிவு.

அவர் அண்மைக்காலங்களில் வழங்கிவரும் பல செவ்விகளில் தான் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுதபற்றி மேலெழுந்தவாரியாகச் சொல்லிவரும் அதேவேளை, தான் கொழும்பிற்கு இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினரின் ரகசிய ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் அழைத்துவரப்பட்டதுபற்றி வாய்திறக்கத் தொடர்ச்சியாக மறுத்தே வருகிறார். 

இந்தியாவின் சர்வதேச புலநாய்வுத்துறை அதிகாரிகளின் கருத்துப்படி கே பீ யின் கைது என்பது கே பீ இற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே மிகவும் ரகசியமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட நாடகம் ஒன்றின்மூலமே அரங்கேற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.  புலிகளின் தலைமையினால் சிறிதுகாலம் சர்வதேச ஆயுதக் கொள்வனவுக்கான பொறுப்பிலிருந்து இறக்கப்பட்டு பின்னர் மீளவும் இறுதி யுத்த காலத்தில் புலிகளின் தலைமையினால் முகவராக அழைக்கப்பட்ட கே பீ, அப்போதிருந்தே இலங்கை ராணுவத்தின் உளவாளியாகவும், புலிகளின் ஆயுதக் கொள்வனவாளராகவும் இயங்கி வந்திருக்கிறார் என்று அவர்கள் மேலும்  கூறுகிறார்கள். 

 

2001 இல் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தக் காலத்தில் புலிகளின் சர்வதேச ஆயுதமுகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராகவும் இருந்த தன்னை புலிகளின் தலைமைப்பீடம் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றிற்காக பதவியிறக்கம் செய்தமையினால் அவர் கடும் சீற்றம்  கொண்டிருந்ததாகத் தெரிகிறது. புலிகளைப் பழிவாங்க ஏதாவது செய்தாகவேண்டும் என்கிற கோபத்தில் இருந்த கே பீ இற்கு எவரை அணுகுவது என்பது அப்போது பெரும் பிரச்சினையாகவே மாறியிருந்தது. 2001 இன் பின்னர் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் பொறுப்பாக காஸ்ட்ரோ எனப்படும் வீரகுலசிங்கம் மணிவண்ணன் பிரபாகரனால் நியமிக்கப்பட்டதால் கடும் சினமுற்றிருந்த கே பீ தனது நெருங்கிய சகாக்களிடம் தனக்கு இயக்கம் மீதான நம்பிக்கை முற்றாக போய்விட்டதென்றும், தலைவர் சரியான காரணங்களைத் தனக்குக் கூறாமல் தன்னை பதவியிலிருந்து அகற்றியதை தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதென்றும், பிரபாகரன் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று கறுவியிருக்கிறார்.

 

புலிகள் மீதான கோபமும், வெறுப்பும் கே பீயை இலங்கையின் ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரனவோடு தொடர்புகளை ஏற்படுத்துமளவிற்குச் சென்றிருக்கிறது. இதன் அடிப்படையில் கபில ஹெந்தவிதாரணவும் கே பீ யும் பலதடவைகள் பங்கொக்கில் சந்தித்துப் பேசியிருப்பதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதே காலப்பகுதியில் புலிகளின் முன்னாள்த் தளபதியாகவிருந்து பின்னர் ராணுவத்துடன் சேர்ந்து இயங்கியவரும், ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சார்பாக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான  கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடனும் கே பி ரகசியப் பேச்சுக்களில் ஈடுபடத் தொடங்கியிருந்ததாகவும் பாங்கொக்கின் காட்டுப்பகுதியொன்றில் இந்தப் பேச்சுக்கள் நடைபெற்றதாகவும், அப்போதிருந்தே புலிகளுக்கெதிரான தனது செயற்பாடுகள் குறித்து கே பீ கருணாவுடன் பேசிவந்ததாகவும் அவ்வதிகாரிகள் கூறுகின்றனர். ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரியொருவரான "சாம்" என்று புனைபெயருடன் அழைக்கப்பட்ட ஒரு முஸ்லீம் அதிகாரியும், அவரது சகாவுமே கே பீ இற்கும் கபில ஹெந்தவிதாரனவிற்குமிடையையிலான தொடர்பினை தாய்லாந்தில் வெற்றிகரமாகக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

காஸ்ட்ட்ரோ தலைமையில் புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஆயுதக் கொள்வனவில் இறங்கி அடைந்த பல தோல்விகள், செயற்பாட்டாளர்களின்  கைதுகளுக்குப் பின்னர் கே பி யை பிரபாகரன் மீண்டும் தனது சர்வதேச ஆயுத முகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமாக  பதவியில் அமர்த்திய காலத்தில் கே பி இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி விட்டிருந்தார் என்றும், அரச , ராணுவ தலைமைப்பீடங்களுக்கு கே பி மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வந்தாரென்றும் இந்திய புலநாய்வுத்துறை கூறுகிறது.

தனது பழிவாங்கலுக்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கே பீ இற்கு பிரபாகரன் மீண்டும் தன்னை பதவியில் அமர்த்தியது பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போனது. பிரபாகரன் கேட்டுக்கொண்டபடியே புலிகளுக்கான சில ஆயுதங்களை கொள்வனவு செய்து கப்பல்களில் ஏற்றியனுப்பிய கே பீ, தவறாமல் ராணுவப் புலநாய்வுத்துறைக்கும் இக்கப்பல்களின் அமைவிடம், பாதைகள் தொடர்பான தகவல்களை வழங்கிவரத் தொடங்கினார். கே பீ யிடம் இருந்து தமக்குக் கிடைத்த வரப்பிரசாதமான புலிகளின் கப்பல்கள் தொடர்பான துல்லியமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை விமானப்படையும் கடற்படையும் புலிகளின் ஆயுதக் கப்பல்களை நடுக்கடலில் தாக்கியழித்துக்கொண்டிருந்தன. இறுதியுத்த காலத்தில் கடுமையான ஆயுதத் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டிருந்த புலிகளுக்கு கே பி யின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு தாயகத்திற்கு கொண்டுவரப்படும் என்று அவர்கள்  நம்பிக்கையுடன் காத்திருந்த பல ஆயுதக் கப்பல்கள் அதே கே பி யினால் அரசிற்குக் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக கடலில் தாக்கியழிக்கப்பட்டமை கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கும். 

கே பியின் ஊடாக தமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பான தகவல்களையடுத்து மிகுந்த உற்சாகத்துடன் செயல்ப்பட்ட கபில ஹெந்தவிதாரனவும் அவரது இலங்கை பாதுகாப்புத்துறையும் தமது திட்டத்தின்படி புலிகளுக்கான ஆயுத வழங்கல்கள் முற்றாக வரண்டுபோவதுகண்டு மகிழ்வுடன் காணப்பட்டதாக இந்திய உளவுத்துறை மேலும் கூறுகிறது.

புலிகளுக்கான ஆயுத வழங்கல்களைத் தடுத்து நிறுத்தி, இறுதிப்போரில் முற்றாக  அவர்களை அழிப்பதற்கான கே பியின் உதவிக்குப் பிரதியுபகாரமாக இலங்கைக்கு அவர் மீளவும் வந்து அரசியலில் பங்களிப்புச் செலுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கம் அவருக்கு உறுதியளித்திருந்தது. 

கே பியினை இலங்கைக்கு கொன்டுவரும் தமது திட்டத்தினை செயற்படுத்தவே மலேசியாவில் இடம்பெற்ற கடத்தல் நாடகம் கே பி யினாலும், இலங்கை அரசாலும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கே பி யின் கைதில் மலேசிய அரசாங்கம் தலையீடு செய்யவில்லை என்றும் தெரியவருகிறது. மலேசியாவில் கூலிக்கு வேலைசெய்யும் சில ஆயுததாரிகளின் உதவியுடன் கே பி கைதுசெய்யப்பட்டதாக நடத்தப்பட்ட நாடகத்தில் , மலேசிய அரசும் இலங்கை அரசும் சேர்ந்தே இந்தக் கைதில் ஈடுபட்டதாக செய்தி கசியவிடப்பட்டதன் மூலம் மலேசிய அரசும் தமிழருக்கெதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக உள்ளூரில் காட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே கே பி இற்கும், கபில ஹெந்தவிதாரனவிற்கும் இடையில் செய்துகொள்லப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் இக்கைது நாடகத்தில் கே பி எதிர்ப்பின்றி கைதாவது போன்று பாசாங்கு செய்ய, இலங்கை அரசு இக்கைதினை தனது புலநாய்வுத்துறையின் வெற்றியாகப் பறைசாற்றிக்கொண்டது. தனிப்பட்ட விமானத்தில் கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்ட கே பி, ஊடகங்களின் பார்வையிலிருந்து விலக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக அரசாங்கத்தின் ரகசிய இடமொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

புலிகளை வீழ்த்தி முற்றாக அழிப்பதற்கு கருணா இலங்கையரசிற்குச் செய்த பங்களிப்பைக் காட்டிலும் கே பி செய்த துரோகம் அதிகமானது என்று நம்பப்படுகிறது. கே பி இற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆடம்பரச் சலுகைகளும், வசதிகளும் புலிகளை வீழ்த்த முன்னின்று போராடிய ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்குக்கூட எக்கட்டத்திலும் வழங்கப்பட்டிருக்கவில்லையென்பதும், இன்று அரசுக்கெதிராகச் செயற்பட்டார் என்கிற காரணத்திற்காக சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

இலங்கை அதிகாரிகளின் கூற்றுப்படி புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பாக மிகவும் சரியான தருணத்தில் தமக்கு வழங்கப்பட்ட துல்லியமான தகவல்களே அக்கப்பல்களை அழித்து, புலிகளின் ஆயுத வழங்கல்களைத் தடுத்து, அவர்களின் முதுகெலும்பினை உடைக்க உதவின என்று உறுதியாக நம்புகிறார்கள். இதற்குப் பிரதியுபகாரமாகவே கே பி கேட்கும் அனைத்து சலுகைகளையும் அரசு அவருக்குச் செய்துகொடுத்து வருவதாகவும், அரசியலில் அவர் செயற்படுவதற்கான வெளியினை அரசே ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தெரிகிறது.

 இலங்கையின் நல்லிணக்க இணக்கப்பட்டு கவுன்சிலின் அமர்வுகளுக்கு கே பீ யும், சரத் பொன்சேக்காவும் நிச்சயம் சாட்சிகளாக இருக்கக் கூடியவர்கள்,  ஆனால், அவர்கள் இருவரையும் ஏதோ ஒருவகையில் இந்த அமர்வுகளிலிருந்து அகற்றிவருகிறது இலங்கையரசு.

ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடாத புலிகளின் அரசியல்த்துறைத் தலைவர்களான பாலகுமார், யோகி ஆகியோர் ராணுவத்தினரிடம் சரணடைந்த வேளையில் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், புலிகளின் போராட்டக் காலத்திலிருந்து இறுதிவரை அவர்களின் சர்வதேச ஆயுத முகவராகச் செயற்பட்டு வந்த கே பீற்கு அரசின் செல்லபிள்ளை எனும் அந்தஸ்த்துக் கொடுக்கப்பட்டு வருவதுபற்றி பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

 

அரசுக்குச் சார்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள கே பி, தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாட்டாளர்களாக இருந்து வரும் சிலரைத் தொடர்புகொண்டு, மீதமிருக்கும் புலிகளின் சர்வதேச வலையமைப்பினை முற்றாகச் சிதைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது.

http://www.srilankaguardian.org/2010/08/kp-and-sl-government-must-tell-truth.html

Edited by ரஞ்சித்
 • Like 2
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு அனுப்பப்பட்ட ஆயுதக் கப்பல்களை தானே காட்டிக்கொடுத்த கே பி

மூலம் " லங்கா கார்டியன் 

காலம் : ஆடி 2, 2010

LTTE vessels burns in the southeastern sea of Sri Lanka | The Eight Man Team

அண்மையில் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவந்த புலிகளுக்குச் சார்பான தமிழர்கள் சிலர் இலங்கைக்கு விஜயம் செய்து அரசு தரப்பினருடனும், கே பி யுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது பலரதும் கவனத்தை ஈர்ந்திருந்தது. 

மலேசியாவில் கே பி கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் நாடகத்தினை கோத்தாபயவும், கேபியும் இணைந்தே திட்டமிட்டு ஆடியதாகவும், மலேசிய அரசாங்கம் இந்த நாடகத்திற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவரும் நிலையில், இந்த புலம்பெயர் புலிகள் அணியினரின் கோத்தாவுடனான சந்திப்பும் இடம்பெற்றிருக்கிறது.

இந்த சர்ச்சைக்குரிய கோத்தாவுக்கு ஆதரவான "புலம்பெயர் புலிகள்" அணியில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான கலாநிதி அருணகுமார் தனது விஜயம் பற்றியும், அங்கு நடந்த சந்திப்புக்கள் பற்றியும் வெளியில் பேசியிருக்கிறார். அவரால் வெளியிடப்பட்டிருக்கும் பகிரங்க அறிக்கையில் தமது குழு இலங்கையில் நடத்திய சந்திப்புக்கள், சந்தித்த மகிந்த - கோத்தா அரசின் தலைவர்கள் பற்றிய விபரங்களை அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது அறிக்கையின் ஒருபகுதியில் குறிப்பிடப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது புலிகளை முற்றாக அழித்துமுடிக்கும் காரியத்தில் ஒருவருக்கு ஒருவர் உற்ற நண்பர்களாக இருந்து செய்துமுடித்தது யாரென்பது ஓரளவிற்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. உள்நாட்டு வெளிநாட்டு செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாவுக்கும், ராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவுக்கும் இடையில் நிலவிய  நெருங்கிய ஒத்துழைப்பே புலிகளை அழிக்க உதவியதாகக் கூறப்படுகிறது. இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும்கூட, புலிகளை முற்றாக அழித்த இன்னொரு நட்பு இருப்பதாகவே தெரிகிறது. கலாநிதி அருணகுமாரின் அறிக்கையின்படி இந்த ரகசிய நட்பு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கலாநிதி அருணகுமார் தனது அறிக்கையில் கூறும்போது, தானும் தனது அரச ஆதரவு - புலம்பெயர் புலிகள் அணியும் புலிகளின் சர்வதேச ஆயுத முகவரும், அரசாங்கத்தின் விருந்தாளியுமான கே பி எனப்படும் குமரன் பத்மனாதனுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும்பொழுது, எதிர்பாராத விதமாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அக்கலந்துரையாடல் நடைபெற்ற அறையினுள் நுழைந்திருக்கிறார். கோத்தாவைக் கண்டதும் மிகுந்த மகிழ்வுடன் எழுந்த கே பி அவரை மிகுந்த மரியாதையுடனும் தோழமையுடனும் ஆரத்தழுவி அழைத்தார் என்று எழுதியிருக்கிறார். அவர்கள் இருவரும் நட்பாகப் பழகிய விதத்தினைப் பார்க்கும்போது அவர்களுக்கிடையில் நீண்டகாலமாகவே நட்பு இருப்பது அங்கிருந்த அனைவராலும் இலகுவாக உணர்ந்துகொள்ளமுடிந்தது என்று அவர் கூறுகிறார். இதில் ஆச்சரியப்படத்தக்க இன்னொரு விடயம் யாதெனில், தம்முடன் பேசிய கோத்தபாய கே பி இற்கும் தனக்கும் இடையிலான நட்புப் பற்றிக் கூறும்போது, "1996 இல் நாம் ஒருவரையொருவர் நேரடியாகச் சந்தித்தோம், அன்றிலிருந்து தொடர்பில் இருக்கிறோம்
" என்று கூறியமைதான் என்று அருணகுமார் மேலும் தெரிவிக்கிறார்.

கோத்தா கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் புலிகளின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், தலைவர் பிரபாகரனின் நெருங்கிய தோழனாகக் கருதப்பட்டவருமான கே பி யின் உண்மையான நோக்கமும், அவரது செயற்பாடுகளும் நிச்சயம் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியவையே.

கலாநிதி அருணகுமாரின் அறிக்கையிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியவை என்னவென்றால்,

1. மலேசியாவில் நடந்த கே பி யின் கைது, கே பி யினாலும், கோத்தாவினாலும் திட்டமிடப்பட்டு, மலேசிய அரசின் அனுசரனையுடன் நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்பது.

2. இந்த திட்டத்தின்படியே கே பி இற்கு கொழும்பின் பிரபல வாசஸ்த்தல இடமான கொழும்பு 7 இல் உல்லாச மாளிகையொன்று அரசால் வழம்க்கப்பட்டமை.

3. நாடு கடந்த அரசாங்கம் என்று ஒன்றினை உருவாக்கியதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் இயங்கிய புலிகளின் அமைப்புக்களைக் கூறுபோட்டு செயலிழக்கப் பண்ணியமை.

4. தானே புலிகளுக்கு அனுப்பிவைத்த ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை தனது நண்பரான ராணுவப் புலநாய்வுத்துறைத் தளபதி கபில ஹெந்தவிதாரணவூடாக அரசுக்கு வழங்கி, அக்கப்பல்களை நடுக்கடலில் வைத்து அழித்து, புலிகள் ஆயுதப் பற்றாக்குறையால் அல்லற்பட்டு ஈற்றில் அழிக்கப்படுவதை உறுதிப்படுத்தியமை.

http://www.srilankaguardian.org/2010/07/did-kp-help-sri-lanka-to-sink-ltte-arms.html

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் , கருணாவுக்கு நிகரான துரோகத்தை நிகழ்த்திய இன்னொருவனான கே பி யின் கைங்கரியங்கள் நாம் அறியாதவையல்ல.

சிங்கள ராணுவ  புலநாய்வுத்த்துறையினருடன் சேர்ந்து இவன் ஆடிய நாடகங்களும், தமிழருக்கெதிரான இனவழிப்புப் போரில் இவன் ஆற்றிய பங்கும் மறக்கப்பட முடியாதவை.

சிங்கள அரசின் விருந்தாளியாக, செல்வச் செழிப்பில் வாழும் இவன், புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் வியர்வையும் குருதியும் சிந்தி உழைத்த பணத்தை நாட்டின் விடுதலைக்கென்று வழங்கியபோது, அவற்றை இனக்கொலையாளிகளின் கைகளில் கொடுத்து தனது விடுதலை வாங்கிக்கொண்ட துரோகி இவன்.

இவனாலும் சிங்கள ராணூவப் புல்நயாவுத்துறையினராலும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட இவனது கைது நாடகத்தின்பின்னர் இலங்கை திரும்பி சிங்களத்தின் செல்லப்பிள்ளையாக இவன் வலம்வந்த 2011 காலப்பகுதியில் தமிழர் விரோத பார்ப்பண நாளேடான தி ஹிந்துவிற்கு இவன் வழங்கிய செவ்வியின் தமிழ் வடிவம் கீழே.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காலம் மே, 24, 2011

சண்முகம் குமரன் தர்மலிங்கம் அல்லது செல்வராசா பத்மனாதன் அல்லது கே பீ என்றழைக்கப்பட்ட இவர் புலிகளின் சர்வதேச செயலகத்தின் தலைவராகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச ஆயுத முகவராகவும் செயற்பட்டவர். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் தன்னை புலிகளின் புதிய தலைவராக அறிவித்துக்கொண்டவர். இருவருடங்களுக்கு முன்னால் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட கொழும்பிற்கு கூட்டிவரப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கபட்ட கே பி மீடியாகுரோவ் செய்திச்சேவையின் வி கெ சசிகுமாருக்கு  வழங்கிய தொலைக்காட்சிச் செவ்வியின் எழுத்துவடிவம் இங்கே தரப்படுகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"உலக வரலாற்றைப் பார்த்தீர்கள் என்றால், கெரில்லா பாணியிலான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர் சேகுவேராதான் என்பது உங்களுக்குப் புரியும். உலகமெங்கும் இந்த முறையிலான போராட்டம் பரப்பப்பட்டாலும்கூட, கியூபாவில் மட்டுமே இது சாத்தியமாகியது, கியூபாவில் மட்டுமே இது வெற்றியளித்தது. ஆனால், பல நாடுகளில் கெரில்லாப்போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தம்மை அழித்துக்கொண்டதுதான் மிச்சம், இலங்கையிலும் இதுதான் நடந்தது.

பனிப்போர் இறுதிக்கட்டத்தினை அடைந்த காலத்திலேயே இந்த நாட்டில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதிலும், இந்த ஆயுதபோராட்டம் இறுதியான காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. பனிப்போரினை முடித்துக்கொண்டு உலகம் ஒன்றாக இயங்க ஆரம்பித்தவேளையிலேயே நாம் போராட்டத்தினை ஆரம்பித்தோம். இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து பனிப்போர் முடிவுற்ற காலப்பகுதிவரை உலகம் முதலாளித்துவத்தையும், கம்மியூனிசத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரிந்து நின்றது. இக்காலத்தில்த்தான் புதிய நாடுகள் பல பிறந்தன. நாடுகள் பிரிக்கப்படுவதென்பது பனிப்போர் காலத்து நடைமுறையாகவிருந்தது. ஆனால், பனிப்போரின் பின்னரான புதிய உலக ஒழுங்கு முற்றிலுமாக வேறுபட்டது. போராட்டம் தோற்றதற்கு இதுவே முக்கிய காரணம்".

"நீங்கள் எமது பிரச்சினையினைப் பார்த்தால், இந்தியா என்பது மிக முக்கிய நாடாக, எமது பெரியண்ணராக இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே, இந்தியாவின் ஆதரவு இல்லாமல் நாம் எதனையும் அடைந்துவிட முடியாது என்பது தெளிவு. இப்பிராந்தியத்தில் இந்தியாவே மிகவும் பலமான நாடு. ஆகவே இந்தியாவைப் பகைத்துக்கொண்டு புலிகள் போராடியது இன்னொரு தவறு. இதுவும் அவர்கள் தோற்றதற்கு இன்னொரு காரணம்.

போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம் என்கிற வகையில், அவர்கள் தாயகத்தில் இருந்த மக்களின் ஆதரவினை இழந்துவிட்டார்கள். 35 வருடகால நீண்ட போராட்டம் மக்களுக்கு சலிப்பினையும், அழிவினையும் மட்டுமே பெற்றுக்கொடுத்தது. புலிகளின் போராட்டத்திற்கு மக்களே பாரிய விலையினைச் செலுத்தினார்கள். அம்மக்கள் புலிகளியக்கத்திலிருந்து தம்மை அப்புறப்படுத்தியமையும் போராட்டம் தோற்றதற்கு இன்னொரு காரணம்.

நான் மீண்டும் கூறுவது என்னவென்றால், புதிய உலக ஒழுங்கு பிரிவினைவாதக் கிளர்ச்சிகளுக்கு முற்றிலும் எதிரானது. 2006 இல் தமது போராட்டத்தினை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும் என்று பிரபாகரன் வேண்டிக்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால், ஒரு நாடு கூட அவரின் வேண்டுகோளினை சட்டைசெய்து உதவிக்கு வரவில்லை. இதனாலேயே, சர்வதேசம் பிரிவினைவாதத்திற்கு எதிரானது என்னும் எனது வாதத்தினை முன்வைக்கிறேன்.

2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், சர்வதேசம் சமரசத்திற்கான வாய்ப்பொன்றினை எமக்குக் கொடுத்தது. பாலஸ்த்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்குக் கூட இவ்வகையான சந்தர்ப்பத்தினை சர்வதேசம் வழங்கியிருக்கவில்லை. ஆக, எந்த பிரிவினைவாத இயக்கத்திற்கும் கொடுக்காத சந்தர்ப்பத்தினை, சூழ்நிலையினை புலிகளுக்குக் கொடுத்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான அனுமதியினை சர்வதேசம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஜேர்மனி, நோர்வே, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகள் இலங்கையில் சமாதானம் ஏற்படக் கடுமையாகப் பாடுபட்டன என்பது நீங்கள் அறியாதது அல்ல. ஆனால், புலிகள் இயக்கம் எந்த விட்டுக்கொடுப்பிற்கும், நெகிழ்ச்சித்தன்மைக்கும் தயாராக இல்லாமல், பிடிவாதமாக இருந்துவிட்டது. அவர்கள் கண்மூடித்தனமாக தமது பிரிவினைவாதப் போராட்டத்திலேயே ஆர்வம் கொண்டிருந்தனர்.

இறுதி யுத்தம் ஆரம்பித்த 2008 இல் , அமெரிக்க ஜனாதிபதி ஐநாவிலோ அல்லது ஐரோப்பிய யூனியனிலோ முன்வைத்த அறிக்கையில், புலிகளுக்கு நிதி செல்லும் அனைத்து வழிகளையும் முற்றாகத் தடுப்போம் என்று கூறியிருந்தார். சர்வதேசத்தினை மீறி எம்மால் தனியே நின்று வெல்ல முடியாதென்பது அப்போதாவது புரிந்திருக்க வேண்டும்". 

Edited by ரஞ்சித்
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : ஐ நா வினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை பற்றிய உங்கள் பார்வை என்ன? போர்க்குற்றம் தொடர்பாகக் கடுமையான வாதப் பிரதிவாதங்களை அது ஏற்படுத்தியிருக்கிறதே?

கே பி :  நாம் ஒரு புதிய தசாப்த்தத்தினுள் வந்திருக்கிறோம். பழயவை பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் இனிப் பயனில்லை. அறிக்கையின்படி இரு பக்கத்தினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது. இந்த அறிக்கை மூலம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. இந்த அறிக்கையே மிகவும் குழப்பகரமானது, பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. நல்லிணக்க முயற்சிகளை முற்றாக தடம்புரள வைக்கக் கூடியது.

எம்மைப் பொறுத்தவரை இந்த அறிக்கையினால் எவருக்குமே நண்மையேதும் கிடைக்கப்போவதில்லை. இது வெறுமனே தகவல் அறியும் முயற்சி என்றுதான் பார்க்கப்படல் வேண்டும். நீங்கள் வன்னிக்குச் சென்று இந்த அறிக்கை மூலம் யாராவது ஒரு குடும்பமாவது நண்மை அடைந்ததா என்று கேட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் உண்மை. இவ்வறிக்கையினால் எவருக்குமே நண்மை கிடைக்கப்போவதில்லை. தமிழர்கள் உட்பட முழு நாடுமே இந்த ஐ நா அறிக்கையினை முழுமனதோடு எதிர்க்கிறார்கள். நீங்கள் கள யதார்த்தத்தினை உணர்ந்துகொள்ள வேண்டும். பழையவற்றை நாம் கிளறுவதால் இன்னும் அழிவுகளே மிஞ்சும். போர் என்று வரும்போது யார் முதலில் கொல்லப்படுகிறார்கள் என்பதே முக்கியமானது. போரில் உண்மையும் கொல்லப்பட்டுவிடும். மக்கள் கொல்லப்படாமல் யுத்தம் செய்ய முடியாது. போர் என்றால் மக்கள் இறப்பது இயல்பானது. போரில் நல்லபோர், கெட்ட போர் என்று வேறுபாடில்லை, போர் என்றால் போர், அவ்வளவுதான். இதில் ஒருவரையொருவர் குறைகூறுவதில் அர்த்தமில்லை.

இரு தரப்பினரும் தமது எதிரியை அழிக்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். ஆகவே ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இப்படியே ஒவ்வொரு யுத்தத்திற்கும் ஐ நா அறிக்கை விட்டு நடவடிக்கை எடுப்பதென்றால், இது எப்போது முடியப்போகின்றது? என்னைப்பொறுத்தவரை யுத்தம் முடிந்துவிட்டது, மக்கள் இரண்டுவருடங்களைக் கடந்து வந்துவிட்டார்கள், அவ்வளவுதான். இந்த அறிக்கைகளில் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. ஒருவேளை, தாம் அறிக்கையில் செய்யப்போவதாகச் சொல்லும் விடயங்களை உண்மையாகவே செய்தார்கள் என்றால், பின்னர் பார்க்கலாம். 

இந்தப்போரில், அரசாங்கம் முழுமையான வெற்றியை அடைந்துவிட்டது, புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், தோற்றுப்போன புலிகளின் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். நான் நேரடியாக சிங்கள மக்களுக்கெதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்றாலும் கூட புலிகளுக்கான ஆயுத முகவராகத் தொழிற்பட்டதனால், நானும் முன்னர் இயக்கத்தில் இருந்தவன் தான். ஆகவே, எமது நலன்பற்றி இந்த அறிக்கை ஏதாவது கூறுகிறதா? இல்லையே? 

மக்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் இருந்தால்ப் போதும். அவர்களைப்பொறுத்தவரை போர்க்குற்றம் என்பதோ , ஐ நா அறிக்கை என்பதோ தேவையற்றது. அவர்கள் இவ்வறிக்கையிலிருந்து நண்மை எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. வெறும் தகவல் அறியும் பணிக்காக  வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை பற்றி நாம் அலட்டிக்கொள்ளவேண்டிய தேவையென்ன? இந்த அறிக்கை, போரில் இப்படியான குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறதே, அதுபற்றி உங்களின் கருத்தென்ன என்று இராஜதந்திர ரீதியில் அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான், இதைத்தவிர இந்த அறிக்கைபற்றிப் பேச ஒன்றுமில்லை.

கேள்வி : ஆகவே உங்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு இன்று தேவையானது கல்வி, அபிவிருத்தி, மருத்துவ வசதிகள் என்பன மட்டும் தான் என்று தெரிகிறது, அப்படித்தானே?

கே பி : நிச்சயமாக. போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மக்கள் இன்னும் அல்லற்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முன்னர் பல கசப்பான அனுபவங்கள் எமக்குக் கிடைத்திருக்கலாம். பல பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், பழைய விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பதால் எமக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை. வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களைப் போன்றே, இனிமையான அனுபவங்களும் எமக்குக் கிடைக்கும். நாம் இந்த அனுபவங்களையெல்லாம் பாவித்து ஒற்றுமையாக ஒரு தீர்வினைக் காண சேர்ந்து இயங்கவேண்டும். 

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கேட்பது உணவும், உடையும், இருக்க வீடு, வேலைவாய்ப்பும்  மட்டுமே. அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் நிச்சயம் வழங்க முடியும்.


 

 • Like 1
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

கே பி : முதலாவது, அவர்கள் இங்கிருக்கும் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு அவர்கள் "எமக்குப் பால் வேண்டும் " என்று அழுதால் நாம், "சற்றுப்பொறுங்கள், ஐ நா வரும், தீர்வு வரும், அதன் பின்னர் நாம் பால் தருகிறோம்" என்று கூறமுடியாது. நாம் அப்படி பார்த்திருந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள். அவர்கள் தமக்கு இப்போது உணவுவேண்டும் என்றுதான் அழுகிறார்கள். ஆகவே புலம்பெயர் தமிழர்கள் இம்மக்களுக்கான பசியினைப் போக்க உழைக்க வேண்டும். தாயக மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு மீண்டபின்னர் அவர்களுக்கு என்ன தேவையென்று பின்னர் நாம் கேட்கலாம். அதை விடுத்து நீங்கள் வன்னிக்குப் போய் அவர்களிடம் 13 ஆம் திருத்தச்சட்டம் உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டால், அவர்கள் உங்களை விசனத்துடன் தான் பார்ப்பார்கள். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அரிசியும் பாணும் மட்டும்  இருந்தால் போதும். புலம்பெயர் தமிழர்களுக்குக் கள யாதார்த்தம் புரியவில்லை. தாயக மக்கள் தமது சொந்தக் காலில் முதலில் நிற்கட்டும், பிறகு மற்றையவை பற்றி யோசிக்கலாம்.

கேள்வி : ஆக, உங்களைப்பொறுத்தவரை பல புலம்பெயர்ந்த நாடுகளில் குடியுரிமை கொண்டவர்களாக, செல்வச் செழிப்போடும், உயர் பதவிகளிலும் இருந்துகொண்டு, இலங்கைக்கு ஒருபோதுமே வர விரும்பாமல், ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட மட்டுமே தமது பணத்தினை வாரியிறைத்த  இத் தமிழர்கள், தற்போதாவது தாயக மக்களின் விடயங்களில் தலையிடுவதைலிருந்து விலகி, தாயக மக்களின் மீட்சிக்காக உழைக்க வேண்டும் என்பதுதானே? ? 

கே பி சரியாகச் சொன்னீர்கள். நான் சொல்ல வருவது என்னவென்றால், யுத்தம் முடிந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. எமக்கு முன்னாலிருப்பது ஒற்றை வழிதான். இருப்பதும் ஒரு சந்தர்ப்பம் தான். அதுவே சமாதானத்திற்கான வழியும், சந்தர்ப்பமும். சிங்களவர்களோடு ஒற்றுமையாக இணங்கிச் செல்லும் சமாதானமான வழியே அது.

பல நம்பிக்கயீனங்கள் இருபக்கமும் நிகழ்ந்துள்ளன, எமக்கிடையே நூற்றாண்டுகளாக கசப்புணர்வுகள் இருக்கலாம். அரச நிர்வாகம் என்பது பொதுவாகவே குறைந்த வேகத்துடன் தீர்வுகளைத் தருவது. எமக்கான சில தீர்வுகள் கிடைக்க காலம் எடுக்கலாம். ஆனால், எமக்கு வேறு வழியில்லை. அமைதியாகவும் பொறுமையாகவும் நாம் பயணிக்கும்போதுதான் எமக்கான  தீர்வுகளை நாம் பெறமுடியும். உங்களுக்கு முன்னாள் அமைச்சர் தொண்டைமானைத் தெரிந்திருக்கும். அவர் அமைதியாகவும், பொறுமையாகவும் பல்லாண்டுகள் காத்திருந்துதான் தனது மக்களில் ஒரு லட்சம் பேருக்கு வாக்குறிமையினைப் பெற்றுக்கொடுத்தார். அதுபோல நாமும் பொறுமையுடனும், அமைதியாகவும் காத்திருக்க வேண்டும்.

தொண்டைமானுடன் பேசுவத்ற்கு எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் என்னிடம் கூறும்போது, "உங்கள் மக்கள் எல்லோருமே நன்றாகப் படித்தவர்கள். ஆனால், உங்களிடம் நல்ல தலைவர்கள் இல்லை. உங்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லக்கூடிய தலைவர்களில்லை" என்று கூறினார். எமக்கு விட்டுக்கொடுத்துச் செல்லக்கூடிய, நெகிழ்ச்சியான தன்மையுடைய, சமரசம் செய்யக்கூடிய தலைவர்கள் வேண்டும். ஆனால், அப்படியான தலைவர்கள் இல்லாமலிருப்பதே எமக்குப் பெரும் பிரச்சினையாக தொடர்ந்து வருகிறது..

எதிர்மறையான உணர்வுகள் ஒருபோதுமே எமக்கு நண்மை பயக்கப்போவதில்லை. ஆம், எமக்கு ஒரு போர் நடந்ததுதான், மக்கள் கொல்லப்பட்டார்கள்தான். ஆனால் அது ஒரு 100 வருடகாலப் பிரச்சினை. ஆகவே அதனைத் தீர்ப்பதற்கு எமக்கு நியாயமான காலம் தேவை. 

நான் புலம்பெயர் தமிழர்களின் விடயத்திற்கு மீண்டும் வருகிறேன். நான் அவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வருகிறேன். 90 வீதமான புலம்பெயர் தமிழர்கள் மிகவும் நல்லவர்கள். பலர் இங்கே பிறந்தவர்கள், சிலர் புலம்பெயர் நாடுகளில் பிறந்திருக்கலாம். ஆனால், இங்கிருக்கும் தமது உறவுகள் குறித்து அவர்கள் அதீத கரிசணை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள். 

எனக்கு முன்னாலிருக்கும் பிரச்சினை என்னவென்றால், இன்னமும் தீவிரவாத எண்ணம் கொண்டு அலையும் அந்த 10 வீதத் தமிழர்கள் தான். அவர்களே தாயகத் தமிழர்களுக்கு பாரிய நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார்கள். 
 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : இந்த தீவிரவாத எண்ணம் கொண்ட புலம்பெயர் தமிழர்களை உங்களால் இனங்காண முடியுமா?

கே பி : ஆம். அவர்களின் பெயர்களைக் கூறுகிறேன். நெடியவன், விநாயகம், பாதிரியார் இம்மானுவேல், தமிழ்நெட்டினை நடத்தும் ஜெயச்சந்திரன், பி டி எப், ஜி டி எப் என்று சிலரை என்னால் அடையாளம்  காண முடியும். இந்தத் தனி நபர்களும், அமைப்புக்களும் ஐரோப்பாவில் மிகுந்த பண பணபலத்தோடு செல்வாக்காக வாழ்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளும் மிகவும் நன்றாக வாழ்கிறார்கள். இவர்கள் தமது எதிர்காலச் சந்ததியினரின் மனங்களில் இனவாதம் என்னும் நச்சினை ஊட்டி வளர்க்கிறார்கள். ஆனால், அவர்களின் இந்த விளையாட்டினை நான் இங்கு ஆட விடமாட்டேன் ! இனவாதத்தினை இங்கே அவர்கள் ஊற்றிவளர்க்க நினைத்தால், முதலில் அவர்கள் என்னைக் கொல்லவேண்டும். அதன்பின்னரே அவர்கள் உள்ளே செல்ல முடியும். 

தாயக மக்கள் 30 வருடங்களுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்து விட்டார்கள். இம்மக்கள் அமைதியாகவும், சந்தோசமாகவும் வாழ்வதை நான் விரும்புகிறேன். இன்று எமது மக்களின் முகங்களில் கவலையும், வறுமையுமே தேங்கி நிற்கிறது. நாம் அதனை மாற்ற முன்வர வேண்டும்.

தாயக மக்கள் தாம் பிறந்ததிலிருந்து சந்தோஷத்தினைக் காணவில்லை. ஆனால், புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள் எப்போதுமே சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள். மிகவும் உல்லாசமான வாழ்க்கையினை வாழ்கிறார்கள். ஆனால், வன்னியிலோ நிலைமை வேறு. எமது பிள்ளைகள் சந்தோசமாக இல்லை. பாடசாலைக்குப் போவதற்கான கூட அவர்களுக்குக் கிடையாது. காலையில் நீங்கள் வீதியில் நடந்துசென்றால் பாடசாலை செல்லும் சிறார்கள் 3 அல்லது 4 கிலோமீட்டர்கள் கால்நடையாகவே சென்றுவருவதைக் காணலாம். அவர்கள் தமது எதிர்காலம்குறித்து கவலையுடன் வாழ்கிறார்கள். இச்சிறுவர்களை மீண்டும் பயங்கரவாதத்தினுள் தள்ளும் முயற்சியினை எவர் மேற்கொண்டாலும் நான் முன்னின்று தடுப்பேன். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

கேள்வி : நீங்கள் உயிருடன் இருக்கும்வரை ஐரோப்பாவில் இயங்கும் தமிழ்ப் பயங்கரவாதிகள் இன்னொரு ஆயுதப்போராட்டத்தினை இங்கே முன்னெடுப்பொஅது சாத்தியமில்லை என்கிறீர்களா?

கே பி :  நிச்சயமாக. அவர்கள் இங்கே ஆட்களைத் திரட்டி, மக்களுக்குப் பிரச்சினைகளை உருவாக்க முயன்றால், நான் அவர்களைத் தடுத்து நிறுத்துவேன். என்னைக் கொன்றபின்னர்தான் அவர்கள் வேறு எதனையும் செய்ய முடியும்.

கேள்வி : இறுதியுத்தத்தில் புலிகளின் தலைமைப் பீடத்தினைக் காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் சில முயற்சிகள் நடைபெற்றதாக கூறப்படுவது உண்மையா?

கே பி :  2009 தை மாதத்திலிருந்து நான் சண்டையினை நிறுத்த முயன்று வந்தேன். இரவு பகலாக நான் இதற்காக பாடுபட்டு உழைத்தேன். ஆனால், புலிகள் இறுதித்  தருணம் வரை என்னால் எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் எதற்குமே ஒத்துழைக்க முன்வரவில்லை. எனக்கு இருந்த அனைத்து நம்பிக்கையும் அத்துடன் போய்விட்டது. மே 15 அன்று மேற்கு நாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் என்னுடன் தொடர்புகொண்டு, புலிகளின் தலைமையினைப் பாதுகாப்பாக வெளியேற்ற விரும்புகிறோம், இதற்கு அவர்களின் பதிலென்ன என்பதைக் கேட்டுச் சொல்வீர்களா என்று என்னைக் கேட்டார்கள். இவ்வாறு வெளியேற விரும்பும் தலைவர்களின் பெயர் விபரங்களைத் தருமாறு கேட்டுக்கொண்ட இந்த அதிகாரிகள், புலிகளின் தலைவர்களை பாதுகாப்பாக கப்பல் முலம் இன்னொரு நாட்டிற்குத் தாம் அனுப்பிவைக்கப்போவதாகவும் என்னிடம் கூறினார்கள்.

கேள்வி : இவ்வாறு உங்களை அணுகிய நாடுகள் எவையென்று கூறமுடியுமா?

கே பி : உண்மையாகவே அது ஐ நா இன்னும் சில மேற்குநாடுகளின் துணையோடு இம்முயற்சியில் ஈடுபட்டது. தனிப்பட்ட நாடுகளினதும், நபர்களினதும் பெயர்களை நான் வெளியிட விரும்பவில்லை. ஆனால், அவர்கள் எல்லோருமே மேற்குநாட்டவர்கள்தான் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : உங்களைக் காப்பாற்றுவதற்கும் இந்த மேற்குநாட்டு அதிகாரிகள் முயற்சி செய்தார்களா?

கே பி :  ஆம், முயன்றார்கள்தான். ஆனால், அப்போது அந்தச் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டோம் என்று எனக்குப் புரிந்தது. மாசி 2009 இலிருந்து நாம் எல்லா முடிவுகளையும் காலம் தாழ்த்தியே எடுத்தோம். நான் ஒரு விடயத்திற்கு ஒத்துவரும்போது, அக்காரியத்திற்கான சந்தர்ப்பம் கைநழுவிப்போயிருந்தது.

கேள்வி : 2002 இன் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலிருந்து இறுதிவரை புலிகள் இயக்கம் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு விட்டது என்று ஏன் நினைக்கிறீர்கள்?

கே பி : 2002 இலிருந்து மட்டுமல்ல, அதற்கு பல காலத்திற்கு முன்பிருந்தே அவர்கள் சகல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டே வந்திருந்தார்கள். முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் இணங்கிக்கொண்டதன்படி ஒரு தீர்வினை நாம் எட்டும் சாத்தியம் கிடைத்தது. அதனைப் பிரபாகரன் நிராகரித்திருந்தார். அதேபோல, 1987 இல்  ராஜீவ் காந்தி , ஜெயவர்த்தனாவுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எமக்குக் கிடைக்கவிருந்த 13 ஆம் சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்ட  தீர்வுக்கான சந்தர்ப்பத்தினை வேண்டுமென்றே பிரபாகரன் தவறவிட்டதிலிருந்து இந்த தவறுகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. 

பிரபாகரனுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று மட்டும்தான், அதுதான் தனிநாடான தமிழ் ஈழம். இதில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் அவர் தயாராக இருக்கவில்லை. இறுதியில் அவரோடு அவரது கனவும் அழிக்கப்பட்டுவிட்டது, அவ்வளவுதான்.

கேள்வி : 2002 இல் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்ததன் உண்மையான காரணம் தம்மை ஆயத்தப்படுத்தவும், இன்னொரு போருக்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளவும் தான் என்று நினைக்கிறீர்களா?

கே பி : ஆம், நிச்சயமாக. ஒருபக்கம் சில போர்வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் கூட, அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பலவீனப்பட்டிருந்தார்கள். அவர்களின் நிதிவளமும் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டது. உணவுக்கும் ஏனைய பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவியது. அதுமட்டுமல்லாமல், வெளியுலகமும் மாறத் தொடங்கிவிட்டிருந்தது. முன்னர் இருந்ததைப் போலல்லாமல் அனைத்துமே மாறிவிட்டிருந்தன.

இரட்டைக் கோபுரத் தாக்குதல் புலிகளைப் பொறுத்தவரை பாரிய நெருக்கடிகளைக் கொடுத்திருந்தது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி அரசு சாரா பிரிவினைவாதிகளுக்கெதிராகவும், அவர்களின் நிதி வழங்கல்களுக்கெதிராகவும் கடுமையான அழுத்தங்களைப் பிரியோகிக்கத் தொடங்கியிருந்தார். புலிகள் உட்பட பல கிளர்ச்சியமைப்புக்கள் அமெரிக்காவினாலும் ஏனைய நேச நாடுகளாலும் பயங்கரவாதிகளாக அறிவித்துவிட்டிருந்தன. இந்த நிகழ்வுகள் புலிகள் இயக்கத்தை மிகப்பெரிய அளவில் பாதித்திருந்தன. இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதுபற்றி புலிகள் பெரிதும் கலங்கியிருந்தனர். அவர்கள்மேல் மிகக்கடுமையான அழுத்தங்கள் பிரியோகிக்கப்பட்டு வந்தன. 
 

 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : புலிகள் பல தூதுக்குழுக்களை 2002 இற்குப் பின்னரான காலப்பகுதியில் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பினார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காகவே செல்கிறோம் என்று சொல்லப்பட்டது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோற்றுப்போனதற்கான காரணம் என்ன? சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னால் திரைமறைவில் ஏதேனும் நடந்ததா? 

கே பி : நான் உங்களுக்கு முன்னரே கூறியதுபோல, தமிழீழத்தை எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை என்று பிரபாகரன் விடாப்பிடியாக  இருந்தார். அதுதான் காரணம்.

கேள்வி : ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்த புலிகளின் தலைவர்கள் உண்மையிலேயே என்னதான் செய்தார்கள்?

கே பி :  அது சமாதானப் பேச்சுவார்த்தையின் ஒரு அங்கம்தான். தம்மை இன்னொரு போருக்குத் தயார் செய்வதற்காகவே புலிகள் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்கள். இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலம்பெயர் தமிழர்களை அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். அங்கு பலமுறை புலம்பெயர் தமிழர்களுடன் பாரிய கூட்டங்களை புலிகளின் தலைவர்கள் நடத்தினார்கள் என்பது நாம் அறிந்ததுதானே? பேச்சுவார்த்தை மேசையில் ஒருவிடயத்தையும், புலம்பெயர் தமிழர் முன்னால் வேறொரு விடயத்தையும் அவர்கள் கூறினார்கள். புலிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் பேசிய விடயங்களையும் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் முன்னால் பேசிய விடயங்களையும் இந்த நாடுகளில் இருந்த இலங்கை தூதரகங்களின்  புலநாய்வுத்துறையினர் பதிவுசெய்துகொண்டார்கள். ஆகவே, புலிகள் சமாதானப் பேச்சுக்களில் உண்மையாகவே நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் உணர்ந்துகொண்டது. இது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் தெரிந்த  விடயம் தானே? 

கேள்வி : அப்படியானால், அக்காலத்திலேயே புலிகள் இன்னொரு போருக்கான தயாரிப்புக்களில் இறங்கிவிட்டிருந்தார்கள் என்று கூறுகிறீர்களா?

கே பி: ஆம், அவர்கள் தம்மை ஆயுத ரீதியிலும், தொழிநுட்ப ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் இக்காலப்பகுதியைப் பயன்படுத்தி பலப்படுத்திக்கொண்டார்கள். 

கேள்வி : புலிகளுக்காக நீங்கள் இதுவரை காலமும் பணியாற்றியது குறித்து வருந்துகிறீர்களா? நீங்கள் பல வருடங்களாக புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராக இருந்ததுடன் அவர்களின் சர்வதேச ஆயுதக் கொள்வனவாளராகவும் இருந்திருக்கிறீர்கள், இன்று அந்த செயல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

கே பி : 1970 களில் இலங்கையின் தமிழ் இளைஞர்கள் உணர்வுபூர்வமாக விடுதலைப் போராட்டத்தினை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். அவ்வாறு ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். நாங்கள் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை இந்த ஆயுதப் போராட்டத்தில் இழந்துவிட்டோம். பெருமளவு பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 35 வருடங்களைப் பின்னோக்கிப் பார்த்தால், நாங்கள் ஆயுதப் போராட்டத்தை இழந்தது மட்டுமல்லாமல், 1950 இலிருந்து சிறிது சிறிதாக அனைத்தையுமே இழந்துதான் வந்திருக்கிறோம்.

சுதந்திரத்திற்கு முன்னர் ஜி ஜி பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் தமிழருக்கும் சிங்களவருக்கு 50 இற்கு 50 பிரதிநிதித்துவம் கேட்டார். ஆனால், சிங்களவர்கள் 55 இற்கு 45 என்று கொடுக்க முன்வந்தார்கள். ஆனால், தமிழர்கள் விடாப்பிடியாக சமபங்கு கேட்டு அதனைக் குழப்பியடித்தார்கள். ஆனால் இன்றோ நாம் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். சிங்களவர்கள் முதலாவதாகவும், முஸ்லீம்கள் இரண்டாம் நிலையிலும் இருக்க நாம் கீழே இரங்கியிருக்கிறோம். 50 இற்கு 50 ஆசனங்கள் என்கிற நிலையிலிருந்து 15 இலிருந்து 20 ஆசனங்கள் என்கிற நிலைக்குக் கீழிறங்கியிருக்கிறோம். இப்படித்தான் 1950 களிலிருந்து நாம் படிப்படியாக எல்லாவற்றையும் இழந்துவருகிறோம். 

எமது பிரச்சினை என்னவென்றால், நாமாகவே எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டு வருகிறோம் என்பதுதான். நான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளியொன்றினை வைக்க விரும்புகிறேன். தொடர்ந்து சந்தர்ப்பங்களைத் தவறவிட்டு, இழப்புக்களை அடைவதை விட, சந்தர்ப்பங்களைப் பாவித்து மீண்டும் எமது வாழ்க்கையினை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், பயங்கரவாத எண்ணங்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இங்கு வாழும் தமிழ் இளைஞர்களுக்கு நஞ்சூட்டி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுவது தெரிகிறது. நான் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

கேள்வி : தமிழரின் போராட்ட சரித்திரத்தில் இந்தியாவின் பங்கு எப்படியிருந்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

கே பி : இந்திரா காந்தி அம்மையாரின் காலத்தில்த்தான் பனிப்போர் முடிவிற்கு வரும் அறிகுறிகள் தோன்றியிருந்தன, ஆனாலும் முற்றாக முடிவிற்கு வந்திருக்கவில்லை. இலங்கை அமெரிக்காவின் நெருங்கிய நாடாக இருந்துவந்தது. இந்தியாவோ ரஷ்ஷியாவிற்கு நெருக்கமாக இருந்தது. ஆகவே, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்துவந்தன. ஆகவேதான் இந்திரா காந்தி தமிழரின் அவலங்களின்மீது கைகளை வைக்கத் தொடங்கினார்.

கேள்வி : இந்திரா காந்தி கைகளை வைத்தாரா? இதன் அர்த்தம் என்ன ?

கே பி : அப்போது நரசிம்மராவ் வெளியுறவுச் செயலாளராக இருந்தார் என்று நினைக்கிறேன். புலம்பெயர் தமிழர்களை அழைத்து நரசிம்மராவ் பேசியிருந்தார். இந்திய அரசாங்கத்துடனும் அவர்கள் பேசினார்கள். இதுதான் முதலாவது நடவடிக்கை. இவை திம்பு பேச்சுவார்த்தை என்று அழைக்கப்பட்டது. இப்பேச்சுக்களுக்கு இந்திய அரசு இலங்கை அரசையும், அனைத்துத் தமிழ்ப் போராளி அமைப்புக்களையும் அழைத்திருந்தது.  ஆனால், பேச்சுக்கள் தோல்வியடைந்தன. இந்தியா தமிழ்ப்போராளிகளுக்கு ராணுவப் பயிற்சியினை வழங்கத் தொடங்கியது. 

புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சிமுகாம்கள் அமைக்கப்பட்டன. தமிழ்ப் போராளி அமைப்புக்களில் நான்கு மிகப் பலம் பொறுந்திய அமைப்புக்களுக்கு இந்தியா பயிற்சியளித்தது. பனிப்போர் காலத்தைப் பாவித்து இந்தியா இதனைச் செய்தது. இக்காலத்தில்த்தான் புலிகளின் ராணுவ ஆற்றலினை அதிகப்படுத்தி, இலங்கை அரசாங்கத்தைப் போரில் பணியவைத்து, சமரசம் மூலம் தமிழர்களுக்கான தீர்வொன்றினை பெற்றுத்தர இந்திரா அம்மையார் முயன்றார். ஆனால், அவரும் சிறு நாட்களில் கொல்லப்பட்டு விட்டார். 

அதன்பிறகு ராஜீவ் காந்தி வந்தார். அவர் மிகத் துரிதமாக செயலாற்றும் வல்லமையினைக் கொண்டவர். தமிழர் போராட்டம் தொடர்பாக அவர் புதிய வழிமுறையினைக் கைக்கொள்ளத் தொடங்கினார். அப்போது, தமிழ்ப் போராளிக்குழுக்களின் பயிற்சி மற்றும் உதவிகளில் இந்தியாவின் ரோ அமைப்பு பாரிய செல்வாகினைச் செலுத்திக்கொண்டிருந்தது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆதரவாளரும் தந்தை செல்வாவின் மகனுமான சந்திரஹாசன் ரோ அமைப்புடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டு வந்தார். இதனால் ரோவுக்கும் பிரபாகரனுக்கும் இடையே பகையுணர்வு வளரத் தொடங்கியிருந்தது.

அதன்பின்னர் பிரதமர் றஜிவ் காந்தியும் ஜனாதிபதிஜே ஆர் ஜெயவர்த்தனாவும் தமிழர் பிரச்சினையினைத் தீர்க்க முயன்றனர். ஆனால், புலிகள் இந்த ஒப்பந்தத்தினை முற்றாக நிராகரித்தனர். ஆனால், ராஜீவ் காந்தியின் கடுமையான வற்புருத்தலின் பிரகாரம் பிரபாகரன் வேண்டாவெறுப்பாக ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பதாக ஒத்துக்கொண்டார். ஆனால், நடைமுறையில் புலிகள் இவ் ஒப்பந்தத்தினை  முற்றாகவே நிராகரித்திருந்தனர்.

கேள்வி : அதன்பின்னர் இந்திய அமைதிப்படை இங்கு வந்தது, அப்படித்தானே? 

கே பி : இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்திறங்கிய காலத்தில், புலிகள் இந்தியாவுடன் சுமூகமான உறவைப் பேணி வந்தனர். ஆனால், சில தவறான புரிதல்களால் இந்திய ராணுவத்துடன் மோதும் முடிவினை புலிகள் எடுத்தனர்.

 • Thanks 1
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.