Jump to content

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : உங்களிடம் ஒரு கேள்வி, முதலும் இறுதியுமாக, ரஜீவ் காந்தியைக் கொல்வதற்கு பிரபாகரன் திட்டம் தீட்டினாரா?

கே பி : எல்லாருக்கும் அந்த உண்மை தெரியும். இந்தப் படுகொலையில் யார் யாரெல்லாம் பங்குகொண்டிருந்தார்கள் என்பதுகூட எல்லோருக்கும் தெரியும். உதாரணத்திற்கு, தேவராஜன் என்பவன் புலிகளின் புலநாய்வுத்துறைச் செயற்பாட்டாளர் என்பதும், அவர் அவர்க்களின் புலநாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானின் கட்டளைப்படியே செயற்பட்டார் என்பது தெரிந்த விடயம்தானே? படுகொலை நடந்த நாட்களில் கைதுசெய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்திலிருந்தே இப்படுகொலையினை யார் திட்டமிட்டு நடத்தினார்கள் என்பது தெரிய வந்ததே? இந்தப் படுகொலை பிரபாகரனினாலும் பொட்டு அம்மானினாலும் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை, இதில் சந்தேகம் வேண்டாம்.

நான் இந்திய மக்களுக்கு, குறிப்பாக ராஜிவின் குடும்பத்தாருக்கு  ஒரு செய்தியைக் கூற விரும்புகிறேன். நான் பிரபாகரனின் படுபாதகச் செயலுக்காக அவர்களின் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். உங்களை இரைஞ்சிக் கேட்கிறோம்,  மக்கள் இங்கே அல்லற்படுகிறார்கள். எங்கள் மக்களும் மற்றைய மக்கள்போல வாழ உதவி செய்யுங்கள். நடந்த அனைத்திற்காகவும் நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ராஜீவின் மகனினதும், மகளினதும் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறோம். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் பாசமும், அன்பும் எமக்குத் தெரியாததல்ல. 

கேள்வி : இலங்கையில் தலையீடு செய்து, தமிழர்கள் சார்பாக ஒரு தீர்வைத்தர இந்தியா உதவவேண்டும் என்று கேட்கிறீர்கள். இதன்மூலம் தமிழர்கள் தமது வாழ்க்கயினைக் கட்டியமைத்து பழையனவற்றை மறந்து வாழமுடியும் என்று கருதுகிறீர்களா?

கே பி : நிச்சயமாக, கடந்த 50 வருடங்களுக்கு முன்னரான எம் நாட்டின் சரித்திரத்தைப் பார்த்தால் எமது மக்கள் கல்வியறிவிலும், பொருளாதார ரீதியிலும் மிகவும் முன்னேறிக் காணப்பட்டார்கள். இப்போது பார்த்தீர்களென்றால், நாம் 50 வருடங்கள் பின்னோக்கிச் சென்றிருக்கிறோம். எமது மக்களுக்கு புதிய தொழிநுட்பங்களை அனுபவிக்கும் வசதிகள் வேண்டும். உங்கள் நாட்டில் இணையம், கணினி என்பவை சர்வ சாதாரணமாகக் கிடைக்கின்றன. ஆனால், முழங்காவிலுக்கோ அல்லது முல்லைத்தீவுக்கோ   சென்றால் அப்படியொன்றினை அம்மக்கள் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை என்பது தெரியும். இப்பகுதிகளில் எவையுமே இல்லை, மிகவும் பின் தங்கிக் காணப்படுகின்றன. எமது மக்களும் ஏனையவர்கள் போன்று வாழவேண்டும், அவர்கள் இதுவரை காலமும் அனைத்தையும் இழந்துதான் வாழ்ந்திருக்கிறார்கள்.

கேள்வி : தமிழ்நாட்டு அரசியல்வாதிகளீடமிருந்து ஆதரவினை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

கே பி : தமிழ்நாட்டு மக்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமானவர்கள். நாம் ஒரே மொழியினையும், ஒரே மதத்தினையும் கொண்டவர்கள். எமக்கிடையே ஒரு பிணைப்பு இருக்கிறது. இந்த உணர்வினை நாம் நன்முயற்சிகளுக்காகவே பயன்படுத்த வேண்டும், தீமைகளை ஊக்குவிக்க அல்ல. தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது செல்வத்தில் சிலதை எமக்கு வழங்கினாலேயே போதும், ஓரிரு வாரங்களில் எமது மக்களின் பிரச்சினைகளை எம்மால் தீர்த்துவைக்க முடியும்.

கேள்வி : தமிழ்நாட்டுத் தமிழர் மனம் வைத்தால் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையினை ஒரு வராத்தில் தீர்த்துவிட முடியும் என்று கூறுகிறீர்களா?

கே பி : ஆம். அண்மையில்க் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 முதலீட்டாளர்கள் இப்பகுதியில் காளான் பயிர்ச்செய்கை முயற்சி ஒன்றிற்காக வந்திருந்தார்கள். இன்னும் சிலர் உணவுத் தயாரிப்புப் பற்றிய பட்டறைகளை நடத்த இங்கே வந்திருந்தார்கள். இந்திய வம்சாவளி மலேசியர்கள் கூட சில திட்டங்களுடன் இங்கே வந்திருந்தார்கள். 

நான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான வைக்கோ, நெடுமாறன், சீமான், கருனாநிதி ஆகியோருக்கு ஒரு செய்தியினைக் கூற விரும்புகிறேன். இங்கே யுத்தம் முடிந்துவிட்டது, எமது அரசாங்கமும் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களைப் பேச விடுங்கள். எமது பிரச்சினைக்கான தீர்வொன்றினை அவர்கள் காண விடுங்கள். அவர்களுக்கு அதற்கான கால அவகாசத்தினைக் கொடுங்கள். 

எமது மக்கள் போதுமானளவிற்கு துன்பங்களையும், வலிகளையும், இழப்புக்களையும் சந்தித்துவிட்டார்கள். உங்களுக்கு உண்மையாகவே எமது மக்களுக்கு உதவும் எண்ணம் இருந்தால், தமிழக மக்களின் உதவிகளை வரவிடுங்கள், அவர்களுக்குக் குறுக்கே நிற்கவேண்டாம். இந்தியவரசாங்கம் இலங்கைத் தமிழர் விடயத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுவதனை உடனே நிறுத்துங்கள். இலங்கை அரசு தமிழருக்கு வரும் உதவிகளைத் தடுத்து வருகிறது என்று நீங்கள் செய்யும் பொய்யான பிரச்சாரத்தினை நிறுத்துங்கள். எம்மக்களுக்கான உதவிகளை நெறிப்படுத்துவதற்காக அரசு சார நிறுவனமான நேர்ட் இன் மூலம் பணியாற்றி வருகிறோம். இங்கு எவரும் வந்து பணிபுரியலாம். பாதுகாப்பு அமைச்சினூடாக உங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும், சலுகைகளையும் என்னால் பெற்றுத்தர முடியும். உண்மையான மனிதாபிமான , நிவாரண நடவடிக்கைகளை இங்கு யாருமே தடுக்கப்போவதில்லை. 

நான்  ஒரு அரசியலிலும் ஈடுபடப்போவதில்லை. நாம் அரசியலில் ஈடுபடும் மனிதர்கள் அல்ல, மனிதாபிமானப் பணிகளில் மட்டுமே நாம் அக்கறை காட்டிவருகிறோம். ஆகவே நான் உங்களுக்குக் கூறிக்கொள்வது என்னவென்றால், உங்களின் தீவிரவாத நோக்கங்களை இங்கே ஊக்குவிக்க வேண்டாம். எமது இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு அடிமையாக்க வேண்டாம். நீங்கள் இதுவரை செய்தது போதும், இனிமேல் வேண்டாம், இத்துடன் நிறுத்துங்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 585
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்கள் பழையனவற்றை மறக்கவேண்டும் என்று கூறுகிறீர்கள். அப்படிப் பழையனவற்றை மறப்பதென்றால், பழையனபற்றிய உண்மைகளும் வெளிக்கொணரப்படுதல் அவசியம் இல்லையா? நீங்கள் புலிகளியக்கத்தில் மூத்த உறுப்பினராக இருந்தவர். உங்களுக்கு அனைத்துமே தெரிந்திருக்கும். பல தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்கள் தமிழ்ப் பயங்கரவாதத்தினை ஊக்குவித்து தமிழர்களை வன்முறை நோக்கித் தள்ளினார்கள் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவர்களின் பெயர்களை கூறுங்கள் ?

கே பி : போராட்டம் நடைபெற்ற காலத்தில் நாம் சில சமயம் தமிழ்நாட்டில் தங்கியிருக்கவேண்டிய நிலைமை இருந்தது. நாம் போராட ஆரம்பிக்கும்போது எமது இலட்சியம் குறிந்த்த மிகுந்த தெளிவுடனும் பற்றுறுதியுடனும்தான் ஆரம்பித்தோம். இந்திய அரசியல்வாதிகளுடன் தொடர்புகள் இல்லாமல் தனித்தே இயங்க விரும்பினோம். இந்தியாவுக்குச் சென்று எமக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு மீண்டும் தாயகம் திரும்புவதுடன் இந்தியாவுடனான எமது தொடர்புகளை மட்டுப்படுத்திக்கொண்டோம். ஆரம்பத்தில் இப்படித்தான் எமது போராட்டம் இருந்தது. 

ஆனால் பிரச்சினை என்னவென்றால், நாம் தமிழ்நாட்டில் எமது அலுவல்களை பார்க்கும்போது தவிர்க்கமுடியாமல் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினது உதவியினை நாடவேண்டிய தேவையேற்பட்டது. உதாரணத்திற்கு பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான சண்டை முற்றி சென்னைத் தெருக்களில் அவர்கள் சுடுபட்டுக்கொண்டு பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டபோது நாம் சில உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் அவர்களை பிணையில் எடுக்கவேண்டியதாகியது. இப்படியான சந்தர்ப்பங்கள் புலிகள் இயக்கத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் செல்வாக்குச் செலுத்தும் நிலையினை உருவாக்கிவிட்டன. 

ஆனால், எமக்கு உண்மையான பிரச்சினை என்னவென்று நன்கு தெரியும். ராமசாமிப் பெரியார் திராவிட நாடு வேண்டுமென்று கேட்டார். வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டையும், ஆந்திராவையும், கேரளத்தையும் தனியே பிரித்து தனிநாடாக ஆக்க அவர் விரும்பினார். இந்தப் பிரிவினைவாதத் திராவிட வழியில் தோன்றியவர்கள்தான் அண்ணாத்துரையும் கருனாநிதியும். இந்தப் பிரிவினைவாத அரசியல் தமிழ்நாட்டிலேயே படுதோல்வியடைந்தது. ஆனால், இந்த திராவிட நாட்டுப் பிரிவினைவாதிகள் அரசியலில் தொடர்ச்சியாக வலம்வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்படியான அடிப்படைவாத பிரிவினைவாதக் கொள்கைகளைக் கொண்ட பலர் இன்னும் அங்கே அரசியலில் இருக்கிறார்கள். தம்மைச் சுற்றி உலகம் மாறிவருவதை அவர்கள் ஒருபோதும் அறியப்போவதில்லை. 

சிலவேளைகளில் நாம் கனவுகள் காண்பதுண்டு. ஆனால், காணூம் கனவெல்லாம் உண்மையில் நடக்குமா என்று நாம் சிந்திப்பதில்லை, அவை நடப்பதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்று சிந்திப்பதில்லை. நாம் திராவிடக் கொள்கைபற்றிய காலத்தை கணிப்பிட்டால், அது 100 வருடம் பழமை வாய்ந்த சாத்தியமற்ற தோற்றுப்போன கொள்கை. பெரியார் இறந்தபோது அவரது திராவிட நாட்டுக் கனவும் சேர்ந்தே செத்து விட்டது. ஆனால், பெரியாரின் வழிவந்த இன்றைய அரசியல்வாதிகள் இன்றும் இந்த செத்துப்போன கனவு பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களே பிரபாகரனுக்கும் இந்த பிரிவினைவாதத் தனிநாட்டுக் கோரிக்கை எனும் கனவினை ஊட்டியவர்கள். பிராமண எதிர்ப்புக் கொள்கையினையும், திராவிடச் சிந்தனைகளையும் பிரபாகரனுக்கு ஊட்டியவர்கள் இந்த திராவிடம் பேசும் அரசியல்வாதிகள்தான். இலங்கைத் தமிழர்களது போராட்டம் திராவிட சிந்தனையின் அடிப்படையில் பிராமணர்களுக்கு எதிரான போராட்டம் என்று பிரபாகரனை அவர்கள் நம்பவைத்தார்கள். 

இந்தத் தமிழ்நாட்டு அரைஇயல்வாதிகளே பிரபாகரனை மாபெரும் வெற்றிவீரனாக விம்பப்படுத்தினார்கள். பிரபாகரனை புராதன தமிழ் மன்னர்களுடன் ஒப்பிட்டுப் பேசிவந்தார்கள். போராட்டத்தின் உண்மையான இலட்சியத்திலிருந்து பிரபாகரனை பிழையாக வழிநடத்திச் சென்றவர்களும் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான். பிரபாகரன் விட்ட அனைத்துத் தவறுகளுக்கும் இவர்களே காரணமாக இருந்தார்கள். இவர்களின் வழிகாட்டுதல்களின் பேரிலேயே பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்றார். பிரபாகரனைத் தவறாக வழிநடத்திக் கொன்றுவிட்டு, இன்று பிரபாகரனின் பெயரை வைத்து தமது அரசியலை நடத்துகிறார்கள்.

கேள்வி : ராஜீவ் காந்தியைக் கொல்லும் திட்டத்தினை தி மு க வின் வழிநடத்துதலின்பேரிலேயே பிரபாகரன் செய்தார் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

கே பி : இதற்கு என்னால் "ஆம் " என்று வெளிப்படையாகப் பதிலளிக்க முடியாது. ஆனால், பிராமணர்களுக்கெதிரான சிந்தனையினையும், காழ்ப்புணர்வையும் பிரபாகரனுக்கு ஊட்டி வளர்த்தவர்கள் தி மு க வினர்தான் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல. பிராமணரான ராஜீவைக் கொல்ல பிரபாகரன் திட்டம் தீட்டியதற்கு தி மு க வினரின் தாக்கமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ராஜீவ் ஒரு பிராமணர் என்பதற்காகவே பிரபாகரன் அவரை கடுமையாக வெறுத்தார். ராஜீவ் ஒரு செயல் வீரர். தமிழருக்கான தீர்வினை உடனடியாக எடுக்க அவர் விரும்பினார், ஆனால் பிராமண எதிர்ப்பால் உந்தப்பட்ட பிரபாகரன் அவரைக் கொன்றார்.

 

கேள்வி : பிரபாகரனும் வைக்கோவும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் பரவலாக வெளிவந்திருந்தன. வன்னிக்கு வைக்கோவினால் எப்படி வரமுடிந்தது?


கே பி : வைக்கோ அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவும், தி மு க வில் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். அவருக்கு கட்சிக்குள் சில பிரச்சினைகள் அப்போது தோன்றியிருந்தன. கருனாநிதிக்குப் பின்னர் தானே தி மு க வின் தலைமைப் பொறுப்பை எடுக்க அவர் விரும்பினார். ஆனால், கட்சிக்குள் இருந்த சில பலம்பொறுந்தியவர்களுக்கு வைக்கோ தலைவராக வருவதில் விருப்பம் இருக்கவில்லை. அவர்கள் கருனாநிதியின் மகன் ஸ்டலின் அடுத்த தலைவராக வருவதையே விரும்பினார்கள். இதனைத் தடுக்க தன்னைப் பிரபலமாக்கவேண்டிய தேவை வைக்கோவுக்கு ஏற்பட்டது. தன்னைப் பிரபலமாக்குவதற்கான ஒரே வழி புலிகளுக்குச் சார்பானவராகத் தன்னை காட்டிக்கொள்வதுதான் என்று அவர் எண்ணினார். தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்கள் புலிகளுக்குத் தார்மீக ஆதரவினை வழங்கிவந்தார்கள். அதனாலேயே அந்த உணர்வினைத் தனது அரசியல் ஆதாயத்திற்காக வைக்கோ பயன்படுத்த நினைத்தார். மக்களின் வாக்குகளைக்கவரவேண்டும் என்றால், அவர்களின் உணர்வுகளுடன் விளையாடவேண்டும் என்று அவர் விரும்பினார், அதனாலேயே பிரபாகரனைச் சந்திக்க வன்னிக்குச் சென்றார்.

வைக்கோ பிரபாகரனைச் சந்திக்கும் தருணம் வரைக்கும் அவர் தனியாகவே, கருனாநிதிக்குத் தெரியாமல் வந்திருக்கிறார் என்பதை பிரபாகரன் அறிந்திருக்கவில்லை. கருனாநிதியின் அனுமதியில்லாமல் வன்னிக்குக் வைக்கோவினால் எப்படி வரமுடிந்தது என்று பிரபாகரனே ஆச்சரியப்பட்டார். 

இதில் நாம் பார்க்கவேண்டிய ஒரே விடயம் என்னவெனில், வைக்கோவின் வன்னி விஜயம் அவரின் சொந்த அரசியல் லாபத்திற்காக மட்டுமே நடத்தப்பட்டது. புலிகளுக்காகவோ தமிழரின் நலன்களுக்காகவோ அல்லவென்று எனக்கு அன்றே தெரிந்திருந்தது.
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : தி மு க பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன ?

கே பி : வைக்கோ முன்னர் தி மு க வின் முக்கிய பொறுப்பில் இருந்தார். தி மு க வின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், எம் எல் ஏக்களும் எம்முடன் நெருக்கமாக இருந்தனர். உங்களுக்குக் கருனாநிதிபற்றித் தெரியாதது இல்லை, அவர்கூட புலிகள் எனும்  துரும்புச் சீட்டை அவ்வப்போது தனது அரசியல் ஆதாயத்திற்காகப் பாவித்துக்கொண்டார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தன்னைக் காட்டிக்கொள்வதன் மூலம் வாக்குகளை அள்ளலாம் என்று வைக்கோ நம்பினார். தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்களில் பெரும்பாலானோ இந்த "புலிகள்" துரும்புச்சீட்டை தமது அரசியல் ஆதாயத்திற்காகப் பாவித்தார்கள்.

கேள்வி : அப்படியானால் ஜெயலலிதா ஏன்ன செய்தார்?

கே பி : அவர் ஒரு மிகவும் சாதுரியமான அரசியல்வாதி. நன்றாகப் படித்தவர். இவ்வாறான விடயங்களை எப்படிக் கையாள்வது என்பதுபற்றி அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். அவர் இப்போது முதலமைச்சராக வந்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் என்கிற வகையில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கேள்வி : புலிகளின் கொலைப்பட்டியலில் ஜெயலலிதாவும் இருந்தாரா?

கே பி : அவர் அப்படித்தான் எப்போதுமே நம்பிவந்தார். புலிகளுக்கு எதிராக அவர் தொடர்ந்தும்  பேசிவந்ததால், அவரையும் கொல்லவே புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்று நான் நம்புகிறேன். புலிகளின் உண்மையான முகத்தையும், அவர்களின் பயங்கரவாத வழிமுறைகளையும் அறிந்தவர்களுக்கு ஜெயலலிதாவைக்கொல்ல புலிகள் தருணம் பார்த்திருந்தார்கள் என்பதை நம்புவது கடிணமாக இருக்காது என்று எண்ணுகிறேன். தமக்கெதிராக ஜெயலலிதா தொடர்ச்சியாகப் பேசியும், செயற்பட்டும் வந்ததினால் அவரைக் கொல்ல பலமுறை புலிகள் முயன்றார்கள், ஆனால், இறுதிவரை அவர்களால் அவரைக் கொல்ல முடியவில்லை.

கேள்வி : நீங்கள் இன்று வீட்டுக் காவலில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் கூட நீங்கள் தொடர்ச்சியாக செயற்பட்டுத்தான் வருகிறீர்கள்.  புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் மாறுபட்ட சிந்தனைகளை வளர்க்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களவர்களுடன் சமரசமாக, ஜனநாயக அரசியலில் ஈடுபட வேண்டும், அவர்களுடன் இணையவேண்டும், எதிர்காலத்தினை ஒற்றுமையாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறுகிறீர்கள். அப்படியிருக்க, ஐ நா அறிக்கையில் இலங்கையின் அரசியல், ராணுவத் தலைவர்கள் போர்க்குற்ரங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதுபற்றி ஜெயலலிதா அண்மையில் வெளியிட்டிருக்கும் கடுமையான கருத்துக்கள் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன ?

கே பி : அவர் ஒரு சாதுரியமான அரசியல்த் தலைவர் என்று முன்னரே கூறியிருந்தேன். அவருக்கு நிறைந்த அனுபவம் இருக்கிறது. அவர் பந்தினை இப்போது மத்தியை நோக்கி அடித்திருக்கிறார். சிலருக்கு அவர் என்ன செய்யர் விழைகிறார் என்பதுபற்றி நன்றாகத் தெரியும். ஆனால், எப்போதுமே உணர்ச்சிவயப்படும் அப்பாவித் தமிழ்நாட்டு மக்கள் "எமது அம்மா ஏதோ செய்யப்போகிறார்" என்று நம்புகிறார்கள். தமது "அம்மா", மகிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்கு இழுத்துச் செல்லப்போகிறார் என்றும் நம்புகிறார்கள். ஆனால், ஜெயலலிதா இதனை ஏன் கூறுகிறார் என்பது தெரியவேண்டியவர்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கிறது. இதனால் இலங்கை அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியும்.

இந்திய மத்திய அரசு இலங்கையின் அரச, ராணுவ தலைமைக்கு மிகவும் நெருக்கமானது என்பது உலகறிந்த விடயம், இது ஒன்றும் ரகசியமல்ல. அரசியல், ராணுவ, ராஜதந்திர ரீதியில் இரு நாடுகளும் தற்போது மிக நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றன. இவ்விரு நாடுகளும் 1000 வருடங்களுக்கும் மேலான மத, கலாசாரத் தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. இந்த நெருங்கிய பிணைப்பினை எவராலும் உடைப்பதென்பது சாத்தியமா? காங்கிரஸ் கட்சியினால்க் கூட இந்த நெருங்கிய பிணைப்பை உடைப்பது சாத்தியமாகவில்லையே?

கேள்வி : தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா எவ்வாறான பாத்திரத்தினை வகிக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கே பி : அவர் தமிழகத்தின் முதலமைச்சர். திறமையானவர், புத்திசாலி, நிறைந்த அனுபவம் உள்ளவர். தமிழர்கள் தொடர்பாக சாதகமான முடிவுகளை அவரால் எடுக்க முடியும். 

எமது மக்கள் இன்று அல்லற்பட்டுக்கொன்டிருக்கிறார்கள், உணவு, உறையுள், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு என்று சகல வழிகளிலும் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிரது. ஜெயலலிதா இதுதொடர்பாக நிச்சயமாக ஏதாவது செய்யமுடியும், தமிழர்களுக்கு உதவப்போவதாக அவர் கூறியிருக்கும் நிலையில், இது சாத்தியமானது என்றே எனக்குப் படுகிறது.

நான் சொல்ல விரும்புவது இதைத்தான். கஷ்ட்டப்படும் எமது மக்களுக்கு உதவவேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அவருக்கு உதவும் நோக்கமிருந்தால், அவர் இங்கு வந்து அதனைத் தாராளமாகச் செய்ய முடியும். அல்லது வேறு வழிகளில்க் கூட அதனைச் செய்யமுடியும். முதலுதவி, மருத்துவ வசதிகள் என்பவற்றிலிருந்து இதனை அவர் ஆரம்பிக்கலாம். சாகும் நிலையில் இருப்பவனுக்கு முதலுதவி கொடுப்பீர்களா அல்லது அவனுக்கு அரசியல் தீர்வு குறித்து பாடம் எடுக்கப்போகிறீர்களா என்பதுபற்றி நீங்கள் இப்போது முடிவுசெய்ய வேண்டும். எமது மக்களுக்கு இப்போது தேவையானது உணவும், மருத்துவ வசதிகளும், வேலை வாய்ப்பும் மாத்திரமே. அரசியல்த் தீர்வுகுறித்தோ அல்லது உரிமைகள் குறித்தோ  எமது மக்கள் எதனையும் கேட்கவில்லையே ? 

எமது மக்களுக்குச் சார்பாகக் கதைப்பதாகப் பாசாங்கு செய்யும் புலம்பெயர் தமிழர்களோ அல்லது தமிழக அரசியல்வாதிகளோ, முதலில் எம்மக்களுக்கான உணவையும், மருத்துவ வசதிகளையும், வேலை வாய்ப்பையும் கொடுக்கட்டும். அரசியல் உரிமைகள் பற்றியோ அல்லது தீர்வுபற்றியோ இப்போது பேசத்தேவையில்லை. 

கேள்வி : தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து இலங்கையில் மனிதாபிமான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நீங்கள் கூறுகிறீர்களா? 

கே பி : நிச்சயமாக. வன்னியில் பல தொழிற்சாலைகளை அவர் நிறுவ முடியும். தமிழகத்தில் இருக்கும் தொழிலதிபர்களை இலங்கை அரசாங்கத்துடன் பேச அனுப்புவதன் மூலம், இங்கு அபிவிருத்திகளை அவர் ஆரம்பிக்க முடியும். இங்கே தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பினை அவரால் உருவாக்கித் தரமுடியும்.

கேள்வி : நீங்கள் புலிகளியக்கத்தின் பிரதான ஆயுதக் கொள்வனவாளராக பல காலம் கடமையாற்றியவர். இந்தியாவின் மாவோயிஸ்ட்டு கெரில்லாக்களான நக்ஸலைட் போராளிகளுக்குப் புலிகள் பயிற்சியளித்ததாக பல செய்திகள் வெளிவந்தனவே? இதுபற்றி  சற்று விளக்கமாகக் கூறமுடியுமா?

கே பி : 2002 வரைக்கும் எந்தவொரு வெளிநாட்டுக் கிளர்ச்சியமைப்புடனும் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை என்று என்னால் கூறமுடியும். அரசியல் ரீதியிலான தொடர்புகள் இருந்தாலும்கூட, ஆயுத ரீதியில் தொடர்புகளிருக்கவில்லை. 2002 வரை நான் பொறுப்பில் இருந்த காலத்தில் இவ்வாறான எந்த ஆயுதத் தொடர்பும் இருக்காதவாறு நான் பார்த்துக்கொண்டேன். ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நான் முற்றாக நிராகரித்தே வந்தேன். ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு கிளர்ச்சியமைப்பும் தனித்துவமானவை, ஆகவே இவற்றில் தலையிட நாம் விரும்பியிருக்கவில்லை. ஆகவே, மாவோயிஸ்ட்டுக்களுடன் நாம் எதுவித தொடர்பையும் பேணவில்லை. 1984 முதல் 2002 வரையான காலப்பகுதியில் நான் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தபொழுது , போராட்டம் இலட்சியம் நோக்கிச் செல்வதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு நாம் இயங்கினோம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி : நீங்கள் 2002 இற்குப் பின் புலிகளிடமிருந்து விலகியிருந்த காலத்தில் அவர்கள் நக்ஸலைட் பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கலாம் என்று கூறுகிறீர்களா?

கே : அதன் பிறகு எனக்கும் புலிகளுக்கும் எந்தவித தொடர்பு இருக்கவில்லை. 2009 இல் தாங்களாகவே வந்து எனது உதவியினைக் கோரும்வரை நான் விலகியே இருந்தேன். ஆனால் நான் விலகியிருந்த 2002 முதல் 2009 வரையான காலப்பகுதியில் பெருமளவு தவறுகளைப் புலிகள் புரிந்திருந்தார்கள். அக்காலத்தில்த்தான் மாவோயிஸ்ட்டுக்களுக்கும்  புலிகளுக்கும் இடையே ஆயுத ரீதியிலான தொடர்புகள் ஏற்பட்டதாக எனது நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன். புலிகளின் போராட்டம் தோற்றுப்போனதற்கு மாவோயிஸ்ட்டுக்களின் தொடர்பும் காரணம் என்றால் அது மிகையில்லை. 

கேள்வி : நீங்கள் கூறுவது உண்மைதானா? ஏனென்றால், மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய ராணூவத்தினரின் மீது நடத்தும் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கான பயிற்சியையும், பொருட்களையும் புலிகளே வழங்கினார்கள் என்று இந்திய புலநாய்வுத்துறை அதிகாரிகள் கூறியிருந்தார்கள் ?

கே பி : நானும் அதனைக் கேள்விப்பட்டேன். இது உண்மையாகக் கூட இருக்கலாம், உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய அதிகாரிகளிடம் இருந்தும், புலிகள் இயக்கத்தில் இன்னமும் இருந்த எனது முன்னாள் நண்பர்கள் மூலமும் இதனை நான் அறிந்துகொண்டேன்.

கேள்வி : வன்முறையினைப் பாவித்துப் போராடிய பயங்கரவாதிகளிடமிருந்து விலகி இன்று உங்களுக்கென்று ஒரு ஜனநாயகப் பாதையினைத் தெரிவுசெய்திருக்கிறீர்கள். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட, நீங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கும் உதவப்போவதாகக்  கூறிவருகிறீர்கள்.  வன்முறை நடவடிக்கைகளிலிருந்து விலகி, சமாதானத்துடன், சமரசமாக வாழ முயற்சிப்பதாகக் கூறுகிறீர்கள். எந்த வகையில் நீங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கு உதவுவதாக எண்ணியிருக்கிறீர்கள்?

கே பி : மே மாதம் 2009 ற்குப் பின்னர் நான் வீட்டுக் காவலில் இருந்தாலும் கூட, தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. நான் தை 2009 இலிருந்தே போரினைத் தடுத்து நிறுத்தி பெருமளவு மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க முனைந்தேன். என்னால் முடிந்தவரை இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தேன். ஆனால் துரதிஷ்ட்டவசமாக புலிகள் பிடிவாதமாக மறுத்து மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமானார்கள். ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் எமது மக்கள் படும் அவலங்களைக் கேட்டிருக்கிறேன்.

அதனாலேயே, அவர்களுக்கு சமாதானமான முறையில் வாழ்க்கையினை மீளமைக்க நான் விரும்புகிறேன். புலிப் பயங்கரவாதிகளில் ஒருவனாக இருந்து, அம்மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அவலங்களுக்கும் நானும் ஒரு காரணம் எனும் வேதனையும், கழிவிரக்கமும் எனக்கு இன்றுவரை இருக்கிறது. ஆனால், போர் முடிந்துவிட்டது, நாம் அனைவரும் புதிய சகாப்த்தம் ஒன்றிற்குள் வந்திருக்கிறோம். 

இன்னொரு 100 வருடங்களுக்கு நாம் "ஈழம்" என்கிற கனவுபற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம், பயங்கரவாதச் சிந்தனைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் எதுவுமே நடக்கப்போவதில்லை. 

காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்றுவரை ஒரு சிலர் இதுபற்றிப் பேசுவதில்லையா? அதுபோலத்தான் புலிகளின்  "ஈழம்" எனும் வெற்றுக் கனவும். அவர்களோடு சேர்த்து அக்கனவும் அழிக்கப்பட்டபின்னரும் இன்னமும் சிலர் அதுபற்றிப் பேசிவருகிறார்கள். 

புலம்பெயர் நாடுகளின் தெருக்களில் காப்பியை அருந்திக்கொண்டு போராட்டம் , வன்முறை பற்றிப் பேசும் பிரிவினைவாதிகள் இன்னமும் இருக்கிறார்கள். அழிக்கப்பட்டுப்போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்கும் பேச்சுக்களை சில புலம்பெயர் தமிழர்கள் பேசிவருகிறார்கள். இந்த சிறிய பிரிவினைவாதக் குழு ஆதரவாளர்களுக்கு வேறு எதுவுமே செய்யமுடியாது, இப்படிப் பேசிப்பேசியே தமது காலத்தைக் கடத்திவிடுவார்கள். இவர்களுக்கு போராட்டமும், அவலமும் பணம்பார்க்கு வழி, ஆகவே அவர்கள் தொடர்ந்து இதுபற்றிப் பேசுவார்கள். நான் வைக்கோவிடமும் நெடுமாறனிடமும் புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப்பேசுவதை நிறுத்துமாறு பலமுறை கேட்டுவிட்டேன், அவர்களோ கேட்பதாக இல்லை. அழிக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசினால்த்தானே அவர்களுக்கு புலம்பெயர் பிரிவினைவாதிகளின் மாதச் சம்பளம் கிடைக்கும்? இதுதான் அவர்களின் பிரச்சினை.

கேள்வி : தமிழ் மக்களின் அவலங்கள் பணம் பார்க்கும் ஒரு தொழில் என்று கூறுகிறீர்களா?

கே பி : ஆம். அதனைபலமுறை நான் பார்த்திருக்கிறேன். 2005 அல்லது 2006 ஆம் ஆண்டுகளில் இயக்கத்திற்கு பணம் சேர்த்தவர்களின் ஆண்டு வருமானம் 300,000 டாலர்கள்வரை இருந்ததாகக் கூறப்பட்டது.

கேள்வி : இதற்கான பணம் எங்கிருந்து வந்தது ?

கே பி : வேறு எங்கிருந்து? எல்லாம் புலம்பெயர் தமிழர் கொடுக்கும் பணத்தில் இருந்துதான். ஆகவே, நான் இதனை நிறுத்துங்கள் என்று சொன்னால், அவர்கள் வருமானத்திற்கு எங்கே போவார்கள்? நேற்றுக்கூட லண்டனில் ஒரு வீட்டிற்குச் சென்ற புலம்பெயர்  பயங்கரவாதிகள் தாம் வன்னி தலைமைக் காரியாலயத்தில் இருந்து வந்ததாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், புலிகளின் வன்னித் தலைமைக் காரியாலயம் இரண்டு வருடத்திற்கு முன்னரே அழித்து இல்லாமலாக்கப்பட்டு விட்டது. இன்றும் வன்னித் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வருவதாகக் கூறி புலம்பெயர் தமிழரிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு இது சிறிது சிறிதாகப் புரிந்துவிட்டது. அதனால் இவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி : நீங்கள் உங்கள் கடந்தகால செயற்பாடுகளுக்குப் பிராயச்சித்தமாக  சமாதான வழியில் சமரசம் செய்ய நினைக்கிறீர்கள். உங்களின் எதிர்காலக் கனவு என்ன?

கே பி : நான் கடந்த 35 வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவன். கடந்த இரு வருடங்களாக வீட்டுக் காவலில் இருப்பவன். சிலவேளை இன்னும் 10 வருடங்கள் வரை வீட்டுக் காவலில் நான் இருக்கலாம். எனது வாழ்க்கையில் இன்னும் அதிக வருடங்கள் வாழ எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று எனக்குத் தெரியவில்லை. எனது மீதி வாழ்க்கையினையுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிச் சிறுவர்களுடன் கழிப்பதையே நான் விரும்புகிறேன். இவர்களுக்குப் பெற்றோரோ, அன்போ, கல்வி வசதியோ, அல்லது எதிர்காலமோ எதுவுமே இல்லை. ஆகவேதான் இச்சிறார்களுடன் எனது இறுதிவாழ்க்கையினைக் கழிக்க விரும்புகிறேன்.

வன்னியில் இருக்கும் இச்சிறுவர்களோடு எனது எதிர்காலத்தை கழிக்க அனுமதி தருமாறு பாதுகாப்பு அமைச்சினைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அத்துடன், போரில் தமது பிள்ளைகளை இழந்து, ஆதரிப்பார் எவருமின்றி இருக்கும் வயதானோரையும் பராமரிக்க விரும்புகிறேன். அதேபோல, அங்கவீனமுற்றிருக்கும் பெண்பிள்ளைகளையும் பராமரிக்கும் நோக்கமும் இருக்கிறது.அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியினைப் பார்ப்பதே எனது கனவாகும்.
 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் கபில ஹெந்தவிதாரன ஆகியோருடன் சேர்ந்து நாடகமாடி, இறுதியுத்தத்தில் புலிகளுக்கு ஆயுதப்பற்றாக்குறையினை செயற்கையாக ஏற்படுத்தி முற்றாக அழிக்கப்படுவதற்கும், போராட்டம் தோற்கடிக்கப்படுவதற்கும் காரணமாகவிருந்த கே பி, தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஆரம்பமுதலே தலைவரை விமர்சித்தும், அவரை திறமையற்ற மூடன் என்று பொருள்படவும் பேசி, போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதே தேவையற்ற வேலை என்று தர்கித்திருந்தது நினைவிலிருக்கலாம்.

ஆனால், இதே துரோகி, தனது திட்டத்தின்படி நாடகமாடிக் கைதுசெய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் சனல் 4 இற்குக் கொடுத்த பேட்டியினை இங்கே இணைக்கிறேன். இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூலம் : சனல் 4

பிரத்தியேக செவ்வி : தமிழ்ப் புலிகளின் புதிய தலைவருடனான செவ்வி

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு , இறுதி யுத்தத்தின்மூலம் இனப்போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக  இலங்கை அரசாங்கம் அறிவித்து இரு மாதங்களுக்குப் பின்னர் புலிகளியக்கத்தின் புதிய தலைவர் கே பி எனப்படும் குமரன் பத்க்மனாதன் இதுவரை காலமும் இல்லாதவகையில் வழங்கிய நேருக்கு நேர் செவ்வியின் விபரங்களை சனல் 4 வெளியிட்டிருக்கிறது

இன்டர் போலின் அறிக்கைப்படி  பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்காகவும், வாழ்க்கைக்கும், உடல்நலத்திற்கும் எதிரான நடவடிக்கைகளுக்கும் என்று 54 வயதுடைய கே பி மீது தேடப்படும் நபர் எனும் பிடிவிராந்தினைப் பிறப்பித்திருக்கிறது.

சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்றும், செல்வராசா பத்மனதான் என்றும், குமரன் பத்மனாதன் என்றும் அல்லது பொதுவாக கே பி என்றும் அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

சுமார் 25 வருடங்களாக, உலகைச் சுற்றி வலம்வந்த இந்த கே பி 23 வேறுபட்ட கடவுச் சீட்டுக்களை வைத்திருப்பதுடன் , ஆயுதக் கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவர். தமிழ் போராளிக் குழுவிற்கு தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கான வெடிபொருட்களை சர்வதேசச் சந்தையிலிருந்து கொள்வனவு செய்து அனுப்பிவைத்தவர்.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தபின்னர் 2009 ஜூலை மாதத்திலிருந்து புலிகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டவர். "புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டார்கள் என்கிற சிங்களப் பேரினவாதத்தின் பொய்ப்பரப்புரைகளையும் மீறி எமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவது எமது சரித்திரக் கடமையாகும், எமது உரிமைகளை வென்றெடுக்கும்வரை அயராது போராடுவோம்" என்று அறிக்கையினை வெளியிட்டவர்.

"உலகின் அனைத்துப் போராட்டங்களையும் போலவே, நாமும் எமது போராட்டத்தின் வழியினையும், திட்டங்களையும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து எமது விடுதலையினை வென்றெடுக்கத் தொடர்ந்து போராடுவோம்" என்றும் அவர் கூறுகிறார்.

சனல் 4 உடனான பிரத்தியேக செவ்வி வெளிவந்து ஓரிரு வாரங்களுக்குள் அவர் மலேசியாவில் ஆவணி 5 அன்று சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளின்கீழ் கைதாகிறார்.

பல நாடுகளுக்கூடாக இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்ட சனல் 4 இன் பத்திரிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினாலும், சர்வதேச பொலீஸ் சேவையினாலும் தொடர்ச்சியாகத் தேடப்பட்டு வந்த இந்த ரகசிய மனிதரை இலங்கைக்கு வெளியே ஒரு தென்னாசிய நாட்டில் நேருக்கு நேராக செவ்வி காணும் சந்தர்ப்பத்தினைப் பெற்றனர்.

இலங்கையின் பெரும்பான்மையினமான சிங்களவரின் கைகளில் அடக்குமுறைகளுக்கு உட்பட்ட சிறுபான்மைத் தமிழினம் இவ்வடக்குமுறைகளிலிருந்து தம்மை விடுவித்து சுதந்திரமாக வாழ்வதற்கு ஈழம் எனும் தாயகக் கனவினை நோக்கிப் போராடி வந்தனர்.

கடந்த மே மாதம் 2009 இல் புலிகள் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டனர். இறுதி யுத்த கணங்களில் புலிகள் இயக்கத்தின் ஸ்த்தாபகரும், தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரரன் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அவரது வழிகாட்டலின் கீழ் பல தமிழ் அரசியல்வாதிகளும், மிதவாதத் தமிழ்த் தலைவர்களும் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்று அறியப்படுகிறது. ஆகவே, பிரபாகரனினால் தனக்குப் பின்னர் இயக்கத்திற்குத் தலைமை தாங்க கே பி நியமிக்கப்படுகிறார்.

எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர் - கே பி

இறுதின்யுத்தத்தின் இறுதி நாட்களில் தாம் ஆயுதங்களை மெளனிப்பதாகப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கின்றனர். செய்தியாளர் அலெக்ஸ் தொம்சனுக்கு கே பி தொலைபேசியூடாக அந்நாட்களில் வழங்கிய செவ்வியில், " நாம் இந்தப் போரை உடனடியாக நிறுத்த ஒத்துக்கொள்கிறோம், ஏனென்றால் எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர்" என்று கூறுகிறார்.

"நாம் எமது மக்களைக் கட்டாயப்படுத்தி எம்முடன் அழைத்துச் செல்லவில்லை. எம்முடன் சேர்ந்து பயணிக்கும் சிவிலியன்கள் அனைவருமே ஒன்றில் எமது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள். நாம் எவரையும் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கவில்லை. எம்மக்கள் இலங்கை ராணுவம் தமக்குப் பாதுகாப்பினைத் தரும் என்று சிறிதும் நம்பவில்லை. ஆகவேதான் அவர்கள் எம்முடன் இருக்க விரும்புகின்றனர்".

"நாம் ஒருபோதுமே எம்மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தவில்லை. புலிகளுக்கும் ராணூவத்தினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் சிலவேளை சிலர் அகப்பட்டிருக்கலாம். எமது மக்களை நாமே கொல்லவேண்டிய தேவை என்ன?" என்று அவர் மேலும் கூறுகிறார்.

 

செவ்வி தொடரும்.........

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“நாம் இப்போதும் ஒரு போரிடும் அமைப்பாகவே இருக்கிறோம், ஆயுதப்போராட்டத்தினை எம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கும் வலிமை இருக்கிறது" என்று அவர் கூறினார். "எமது போராளிகளும், நண்பர்களும் இன்னமும் காடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாம் எமது ஆயுதங்களை மட்டுமே மெளனித்திருக்கிறோம். அவர்கள் எனது தலைமையினை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை கீழே வைத்திருக்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

"எனது சொல்லிற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். எம்மால் தொடர்ந்தும் பல வருடங்களுக்குப் போராடும் ஆற்றலும், பலமும் இருக்கிறது. எம்மைப்பொறுத்தவரை அது ஒன்றும் கடிணமான விடயம் அல்ல" என்றும் அவர் கூறினார்.

"எனது தலைமையின் கீழ் இன்னமும் 2000 போராளிகள் ஆயுதங்களுடன் காடுகளில் மறைந்திருக்கிறார்கள். ஆனால், நான் அவர்களை தற்போதைக்கு ஆயுதப் போராட்டத்தினைக் கைவிடுமாறு கேட்டிருக்கிறேன்".

"எமது மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றுக்கு முன்வருமாறு சர்வதேச சமூகம் எம்மை வற்புறுத்துகிறது. ஆனால் இலங்கை அரசாங்கமோ போர் மூலமான முடிவிலேயே ஆர்வமாக இருக்கிறது. அவர்கள் அரசியல் ரீதியிலான தீர்வொன்றிற்கு முன்வர மறுத்துவருகிறார்கள்".

அவர் எந்தவொரு தருணத்திலும் ஆயுதப்போராட்டத்தினைப் புலிகள் முழுவதுமாகக் கைவிட்டு விட்டார்கள் என்பதனை சொல்லவில்லை. குறைந்தது மூன்று லட்சம் தமிழர்கள் முட்கம்பி வேலிகளுக்குள் திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், சிங்களத் தேசியவாத ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழர்களை இம்முகாம்களில் இருந்து விடுவித்து, அவர்களுக்கான சம உரிமைகளைத் தரமறுத்தால் நிச்சயம் புலிகளின் ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அவர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

"இம்முகாம்கள் உண்மையாக ஹிட்லரின் முகாம்களை ஒத்த சித்திரவதை முகாம்கள். இம்மக்கள் இம்முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு 50 நாட்கள் கடந்த பின்னரும் இன்றுவரை சுயாதீன பத்திரிக்கையாளர்கள் இம்மக்களைப் பார்வையிடுவதை மகிந்த அரசு தடுத்தே வருகிறது. மக்கள் இம்முகாம்களில் நாள்தோறும் இறந்துவருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவையோ, மருத்துவ வசிதகளையோ இநத அரசு தொடர்ந்தும் மறுத்தே வருகிறது".

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கணவனிடமிருந்து மனைவியைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். எமது மக்களை இந்த தடை முகாம்களுக்குள் அடைத்துவைத்து அடிமைகளைப்போல் நடத்துகிறார்கள்".

"இது நிச்சயமாக தமிழ்மக்கள் மீதான மகிந்தவின் பழிவாங்கல்தான் என்பது எமக்குப் புரிகிறது. எனக்குப் புரியவில்லை, அவர் உண்மையாகவே முழு நாட்டு மக்களுக்குமான தலைவர் என்றால், எமது மக்களை உடனடியாக விடுவித்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்திருக்க வேண்டும். அரசும், ராணுவமும் எமது மக்களைத் தொடர்ந்தும் இந்த முறையில் நடத்தினால் அவர்கள் தமிழர்களிடமிருந்து இன்னொரு ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்வார்கள் என்பது திண்ணம்".

முகாமினுள் நிலைமைகள்

வவுனியாவில் தமிழ் மக்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் உள்ள பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினரால் நடத்தப்பட்டுவரும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுகளையும், அதன்பின்னரான படுகொலைகள், காணாமற்போதல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தமைக்காக சனல் 4 இன் ஆசியாவுக்கான நிருபர் நிக் பட்டன் வேல்ஷ் அரசால் எச்சரிக்கப்படடு வெளியேற்றப்பட்டார். 

இம்மக்களுக்கும் புலிகளுக்குமிடையிலான தொடர்புகள் முற்றாக அறியப்படும்வரை இம்மக்களை தாம் முகாம்களை விட்டு விடுவிக்கப்போவதில்லை என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்தப் பேட்டி எடுக்கப்படும் போது முகாம்களுக்குள் நிலைமை சற்று சீரடைந்தாலும், பெருமளவு மக்கள் பட்டினியினாலும், தொற்று நோய்களாலும் நாளாந்தம் இறந்துவருவதாகக் கூறுகிறார்கள் இப்பகுதியில் செயலாற்றும் நிவாரணப் பணியாளர்கள்.

நிவாரணப்  பணியாளர்களின் அதிகாரியொருவர் இம்முகாம் நிலைமைகள் பற்றிக் கூறுகையில், "இராணுவத்தால் நாளாந்தம் கொல்லப்படும் நூற்றுக்கக்கான தமிழர்களின் உடல்களை வெளியே தெரியாமல் அகற்றுவதென்பது சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உள்ளே என்னதான் நடக்கிறதென்பதை அறிந்துகொள்வது இப்போதைக்கு முடியாது. ஆகவே, கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை என்னவென்பதும் எமக்குத் தெரியாது. இம்மக்களுக்கான உண்மையான நிவாரனத் தேவைகள் என்னவென்பதை சுயாதீனமாக அறிந்துகொள்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்தே வருகிறது. இது இம்மக்கள் மீது அரசு கொடுத்துவரும் நெருக்கடி தொடர்பான அச்சமும், உள்ளே நடைபெற்றுவரும் மனிதவுரிமை மீறல்களை அரசு முற்றாக் மறைத்து வருகிறதோ எனும் சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது" என்றும் கூறினார்.

இந்த முட்கம்பி வேலித் தடுப்பு முகாம்கள் புலம்பெயர் தமிழரை பெரிதும் பாதித்திருக்கிறது. ஆகவே, இம்முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமது உறவுகள் குறித்து அவர்கள் கடும் கவலை கொண்டிருப்பதுடன், இந்த கரிசணை அவர்களை ஓரணியாக ஒன்றிணைத்து வருகிறது. புலம்பெயர் தமிழரிடமிருந்து பெறப்பட்ட பணத்தின் மூலம் குரைந்தது 5 பில்லியன் டாலர்களை கே பி சேர்த்துவைத்திருப்பதாகவும், இவற்றினைக் கொண்டு  ஆயுதங்கள் மற்றும் சொத்துக்களை அவர் வாங்கி வைத்திருப்பதாகவும், இன்னும் பெருமளவு பணம் அவரிடம் ஆயுதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதற்கு பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகவும்  இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

இனப்போரில் குறைந்தது 80,000 மக்கள் கொல்லப்பட்டதற்கு தானும் பொறுப்பெடுக்க கே பி முற்றாக மறுத்துவிட்டார். "அவர்களே இதனைத் தொடங்கினார்கள், அவர்களே எமது மக்களைக் கொன்றார்கள். ஆகவே, இது எம்மால் திணிக்கப்பட்ட போராட்டம் இல்லை" என்று கூறிய கே பி, சிறுவர்களைப் புலிகள் இயக்கத்தில் சேர்த்திருக்கத் தேவையில்லை என்பதை ஒத்துக்கொண்டார்.

"நாம் சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்துவதை ஏற்கவில்லை. சில சமயங்களில் இயக்கத்தினுள் இருந்தவர்கள் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. இது தவறுதான், இதற்காகப் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கே பி யின் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கையின் உயர்ஸ்த்தானிகராலயம் விடுத்த பதில்

செல்வராசா பத்மனாதன் தெரிவிக்கும் கூறச்சாட்டுக்களில் பின்வரும் மூன்று விடயங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

முதலாவதாக, தன்னைத்தானே புலிகளின் தலைவராக அவர் அறிவித்திருக்கிறார். இரண்டாவதாக, காடுகளுக்குள் இன்று ஒளிந்திருக்கும் போராளிகள் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிவார்கள் என்று அவர் நம்புகிறார். மூன்றாவது, நாம் மக்களை பாரமரித்துவரும் முகாம்களை அவர் தடுப்புச் சித்திரவதை முகாம்கள் என்று அழைப்பதோடு, மக்கள் அங்கே கொல்லப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எமது பதில் இதுதான்,

நாம் செல்வராசா பத்மனாதனை புலிகளின் புதிய தலைவராக அங்கீகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை.

புலிகள் என்று எந்த அமைப்பும் தற்போது இலங்கையில் இல்லை. அவ்வாறு இயங்காத ஒரு அமைப்பிற்கு செல்வராசா பத்மனாதன் என்பவர் தலைமை தாங்குவதாகக் கூறுவது வேடிக்கை. 

எமது அரசால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மக்கள் மீட்பு நடவடிக்கையின் மூலம் பயங்கரவாத இயக்கமும் அதன் மொத்தத் தலைமைப்பீடமும் அவர்களின் ஆயுத வளங்களும் முற்றாக  எம்மால் அழிக்கப்பட்டுவிட்டது.

இலங்கையின் ராணுவம் இலங்கை நாட்டின் மொத்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதுடன், கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் அனைத்தையும் அங்குலம் அங்குலமாக கைப்பற்றி பூரண ஆதிக்கத்தினைக் கொண்டிருக்கிறது. ஆகவே, செல்வராசா பத்மனாதன் கூறுவதுபோல இலங்கையில் எந்தக் காட்டுப்பகுதியிலும் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நடமாடுவது என்கிற பேச்சிற்கே இடமில்லை.

இன்டர்போல் அமைப்பினால் செல்வராசா பத்மனாதன் தேடப்பட்டு வருகிறார் என்பதும், இந்தியாகூட அவரைத் தேடிவருவதும் எங்களுக்குத் தெரியும். ஆகவே அவர் மிக விரைவாகக் கைதுசெய்யப்படுவார் என்பதையும், பயங்கரவாதிகளுக்கான ஆயுதக் கொள்வனவு உட்பட்ட இதர பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக அவர் மிக விரைவில் தண்டிக்கப்படவிருக்கிறார்.

அடுத்ததாக, இலங்கை அரசாங்கம் சமாதானமான முறையில் பிரச்சினைக்குத் தீர்வு காண மறுத்துவருவதாக அவர் கூறும் குற்றச்சாட்டினை நாம் முற்றாக மறுக்கிறோம். 1985 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கம் சமாதான முயற்சிகளில் நம்பிக்கைகொண்டே செயற்பட்டு வருவதுடன், இன்றுவரை சமாதானத் தீர்வுக்கான கதவுகளை அகலத் திறந்தே இருக்கிறது. இப்போதுகூட, மிதவாதத் தமிழ்த் தலைவரும் இலங்கையின் மிகப்பெரிய தமிழ் அரசியல்க் கட்சியின் தலைவருமான  ஆனந்தசங்கரி போன்றோருடன் தொடர்ச்சியான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசு இதயச் சுத்தியுடன் ஈடுபட்டே வருகிறது.

வவுனியா தடை முகாம்களில் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அவர் கூறுவது மிகவும் தவறான தகவலாகும். சர்வதேச சமூகத்தில் இலங்கைக்கு ஏற்பட்டுவரும் நற்பெயரினைக் களங்கப்படுத்தும் நோக்கத்திலேயே பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த திட்டமிட்ட பொய்ப்பரப்புரையினைச் செய்துவருகிறார்கள்.

செல்வராசா பத்மனாதன் என்பவரின் குற்றச்சாட்டுக்களுக்கு நாம் பதிலளிப்பதன் ஒரே நோக்கம், நம்பகத்தன்மைகொண்ட  ஊடகமான சனல் 4 இல் அவர் இதுகுறித்துப் பேசியகாரானத்தினால்த்தான். இல்லாவிடில், ஒரு பயங்கரவாதியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதன் மூலம் எமது நேரத்தை நாம் விரயமாக்கவேண்டிய தேவையில்லை.


 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கே பி தன்னை ஒரு விடுதலைப் போராளியாகவே அடையாளப்படுத்துகிறார்."மகிந்த ராஜபக்ஷ கூறுவதுபோல புலிகள் ரத்தவெறி பிடித்த பயங்கரவாதிகள் அல்ல". அவர் கூறுகிறார்.

"இப்போது என்ன பிரச்சினை? எனக்குப் புரியவில்லை. மே மாதம்வரைக்கும் அவர் எங்களைப் பயங்கரவாதிகள் என்றே அழைத்துவந்தார்.  எங்களைப்போலவே நெல்சன் மண்டேலாவும் யாசீர் அரபாத்தும் தேடப்பட்ட பயங்கரவாதிகளாக இருந்தனர். ஆனால், அவர்களை இந்த உலகம் விடுதலைப் போராளிகளாகப் பார்க்கவில்லையா? ஆனால், இலங்கை அரசாங்கம் தனக்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, எமது விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்துவிடப் பார்க்கிறது". 

"எனது மக்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுங்கள். அவர்களை அமைதியாக வாழ விடுங்கள். தினமும் குண்டுச் சத்தங்களாலும், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களாலும் அல்லற்படும் அவர்களின் வாழ்க்கை இனிமேலாவது அமைதியாக இருக்கவேண்டும் என்பதே எனது ஒரே கனவு".

புலிகளின் ராணுவக் கட்டமைப்பை கட்டிவளர்த்த கே பி தற்போது அவ்வியக்கத்திற்குப் பொறுப்பாக இருக்கிறார். ராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்பட்ட ஒரு அமைப்பிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு புலிகளின் தலைமைத்துவத்தில் இன்று வேறு எவரும் இல்லாததால் இவருக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், அவரால் ஆயுத ரீதியில் தொடர்ந்து போராட முடியாது, அவர் வேறு மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்க  வேண்டும். பிரபாகரனின் நெருங்கிய வட்டத்தில் இன்று உயிருடன் இருக்கும் ஒரே நபர் என்கிற அடிப்படையில் அவருக்கு இந்த தலைமை தாங்கும் பொறுப்புக் கிடைத்திருக்கிறது. 

"அவர் எனது நெருங்கிய நண்பன், அவரது இழப்பிலிருந்து நான் எப்படி மீளப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லையே. நானும் அவரும் ஈழம் எனும் ஒரே கனவினைச் சுமந்தே போராடினோம்" என்று பிரபாகரனின் மரணம் குறித்துப் பேசும்போது கே பி கூறினார்.

முற்றும்

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கும் கே பி இற்கும் இடையே 2008 இன் கடைசி நாட்களில் நடந்த ரகசிய தொலைபேசிச் சம்பாஷணையினை நாம் ஒட்டுக் கேட்டோம் - கோடாபய ராஜபக்ஷ

இணையம் : கொழும்பு டெலிகிராப்

காலம் : பங்குனி 10, 2016

2006 முதல் 2009 வரையான காலத்தில் இலங்கை ராணுவம் பல உயர் தொழிநுட்ப கருவிகளைப் பாவித்தும், நவீன ராணுவத் தளபாடங்களை பயன்படுத்தியும் புலிகளை ராணுவ ரீதியாக முற்றாக அழித்தது. இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு  மேலதிகமாக ஆளில்லா வேவு விமானங்களின் உதவியும் போரில் வெற்றிக்குக் காரணமாக  அமைந்திருந்தன. இவ்வகையானவேவு விமானம் ஒன்றினைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்த கே பி இற்கும், வன்னியில் இருந்த பிரபாகரன் அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்றினை தாம் இடைமறித்து ஒட்டுக்கேட்டதுபற்றிய தகவல்களை அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோடாபய வெளிப்படுத்தியிருக்கிறார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரை தனக்கு எவ்வளவுதான் நெருங்கியவராக ஒருவர் இருந்தாலும்கூட, அவருடன் தொலைபேசியில் நேரடியாக தான் உரையாடுவதை தவிர்த்தே வந்திருக்கிறார்.இது பொதுவாக இலங்கை ராணுவத்தால் அறியப்பட்ட ஒரு விடயம். 2008 இன் இறுதி நாட்களில் அவ்வாறான நெருங்கிய புலம்பெயர்ந்த ஒருவருடன் பிரபாகரன் தொடர்புகொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. பிரபாகரனின் நெருங்கிய, நம்பிக்கைக்குப் பாத்திரமான மெய்ப்பாதுகாவப் பிரிவின் போராளியான வேலு என்பவர் தலைவர் அருகிலிருந்து கே பி உடன் தொலைபேசியில் தொடர்புகொண்டிருக்கிறார். 

அப்போது கே பி ற்கும் தலைவர் சார்பாக வேலுவுக்கும் இடையே நடந்த சம்பாஷணை மிகவும் முக்கியமானது. கிளிநொச்சி அரச ராணுவத்தின் கைகளுக்குள் வீழும் தறுவாயில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சம்பாஷணைபற்றித் தெரியவருவதாவது.


கே பி அரசுடன் சேர்ந்து நாடகமாடி கொழும்பில் உல்லாசவாழ்வினை ஆரம்பித்த காலப்பகுதியில்  செய்தியாளரான டேவிட் ஜெயராஜிடம் பேசும்போது, தனக்கும் தலைவருக்கும் இடையே நடத்தப்பட்டதாக கூறிய சம்பாஷணையின் விடயங்களைக் காட்டிலும் அதிகமான தகவல்களை கோடாபய வெளியிட்டார் என்று தெரியவருகிறது.

பிரபாகரனைக் காப்பாற்றுதல் எனும் நடவடிக்கையின்போது கே பி இற்கும் தலைவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலில், பிரபாகரன் கே பி யிடம் உதவியொன்றினைக் கேட்டதாகத் தெரிகிறது. பிரபாகரனையும், இன்னும் சில மூத்த தளபதிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து இந்தத் தொலைபேசி உரையாடல் நடந்திருக்கிறது. பிரபாகரனுடன் கடுமையான தொனியில் பேசிய கே பி, பிரபாகரன் கேட்கும் உதவியான தன்னையும் இன்னும் சில தளபதிகளையும் சர்வதேச அமைப்பொன்றின் மூலம் வெளிநாடொன்றிற்கு அழைத்துச் செல்லுதல் எனும் ஏற்பாட்டினைச்  செய்வதென்றால், தான் முன்வைக்கும் இரு நிபந்தனைகளை பிரபாகரன் உடனடியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது. 

தலைவரிடம் கே பி முன்வைத்த இரு நிபந்தனைகள்,

1.  2002 இல் புலிகளின்  சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாளராக பிரபாகரனால் நியமிக்கப்பட்ட காஸ்ட்ரோவை உடனடியாகப்பதிவியிறக்கி, தன்னை மீண்டும் அப்பதவியில் அமர்த்துவது.

2. சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாக தன்னை நியமிக்கும் அறிவிப்பினை தலைவரின் கையோப்பத்தோடு தனக்கு அனுப்பி வைப்பது.

இத்தொலைபேசி உரையாடலினை இடைமறித்துக் கேட்ட ராணுவப் புலநாய்வுத்துறையினரின் தகவல்ப்படி, கே பி இனால் முன்வைக்கப்பட்ட இவ்விரு நிபந்தனைகளுக்கும் தலைவர் ஒப்புதல் அளித்ததாகத் தெரிகிறது. கே பி கேட்டுக்கொண்டதன்படி, கிளிநொச்சியில் பணியாற்றிய அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அதிகாரியூடாக இந்த பத்திரம் கே பி இற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. 

பிரபாகரனின் அருகில் இருந்த வேலுவிடம் பேசிய கே பி, "என்னால் உங்களைக் காப்பாற்ற முடியும், நான் கேட்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்படுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

ஆனால், இந்த தொலைபேசிச் சம்பாஷணையின் இடையே வேலுவிடமிருந்து தொலைபேசியைப் பிடுங்கிய பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்டனி கே பி இடம், "இல்லையில்லை, அதெல்லாம் வேண்டாம், எங்களுக்கு சில ஏவுகணைகளை அனுப்புங்கள், இந்த முற்றுகையினை உடைத்துக்கொண்டு, நாம் போராட்டத்தினைத் தொடர்வோம்" என்று கூறியிருக்கிறார்.

சில நிமிடங்களுக்குப் பின்னர், சம்பாஷணையின் தீவிரம் தணிந்த பின்னர் வேலுவிடம் பேசிய கே பி , "அவரின் முட்டாள் மகன்..." என்று சார்ள்ஸ் அன்டனிபற்றிக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

குறிப்பு : இந்தச் செய்தி கொழும்பு டெலிகிராப் பத்திரிக்கையில் இலங்கை ராணுவத்தின் சார்பாக கட்டுரைகளை வரையும் மைக்கேல் ரொபேர்ட்ஸ் எழுதியது. இவர் இங்கே கூறும் தலைவர் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார் என்பது, தலைவர் அவ்வாறு தான் காப்பற்றப்படுவதை முற்றாகவே மறுத்துவிட்டார் எனும் தகவலுக்கு நேர் முரணானது.

சிலவேளை கே பி யோ அல்லது கோத்தாவோ தலைவரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இச்செய்தியினைக் கசியவிட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

https://www.colombotelegraph.com/index.php/gotabaya-rajapaksa-clarifies-listening-in-on-kps-chats-with-prabhakarans-man-friday/

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மக்களிடமிருந்து கருணா மாதா மாதம் எண்பது லட்சம் ரூபாய்களை கப்பமாகப் பறித்து வந்தார் - கருணா குழு முக்கியஸ்த்தர் செவ்வி

மூலம் : லங்கா கார்டியன்  
காலம் : செப்டெம்பர் 29, 2007

"நாங்கள் கருணா அம்மானை ஒரு மக்கள் தலைவானகவே பார்த்துவந்தோம். ஆனால், அவர் அப்படியில்லை என்பது இப்போது தெளிவாகிறது"

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து பிரிந்து சென்று ராணுவத்துடன் சேர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழுவை அமைத்து இயக்கிவரும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் மட்டக்களப்பில் மக்களை அச்சுருத்தி பெருந்தொகைப் பணத்தினைக் கப்பமாகப் பெற்றுவருவதாக அவரது குழுவின் முக்கியஸ்த்தர் ஒருவர் லங்கா கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டியளித்திருக்கிறார். கடந்த இரவு வழங்கப்பட்ட இச்செவ்வியில், அந்த முக்கியஸ்த்தர் மேலும் கூறும்போது கருணாவால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதம் ஒன்றிற்கு குறைந்தது எண்பது லட்சம் ரூபாய்கள் மக்களிடம் இருந்து கப்பமாக அறவிடப்பட்டு வருவதாகக் கூறுகிறார்.
மட்டக்களப்பு நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்கும் வியாபார நிலையங்கள், வீடியோக் கடைகள், மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் ஏனைய தனியார் சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து கருணா இக்கப்பங்களைப் பெற்றுவருவதாக அவர் கூறுகிறார்.

தமது குழுவிற்குள் அண்மையில் ஏற்பட்டிருக்கும் உள்வீட்டுப் பிணக்கினையடுத்து கருணா சில நாட்களுக்கு முன்னதாக நாட்டினை விட்டு பெருமளவு பணத்துடன் தப்பியோடிவிட்டதாகக் கூறும் இந்த முக்கியஸ்த்தர், அவரின் உயிருக்கு தமது குழுவிற்குள் இருந்தே பாரிய அச்சுருத்தலை எதிர்கொண்டுவந்த கருணாவுக்கு நாட்டை விட்டு தப்பியோடுவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லையென்றும் தெரிவித்தார்.


லங்கா கர்டியனுடனான கருணா குழு முக்கியஸ்த்தரின் பேட்டி கீழே :

"அவர் தப்பியோடிவிட்டார், ஆனால் அவரது தாக்கம் இன்னமும் இங்கே அப்படியே இருக்கிறது, நாங்கள் அவரை ஒரு நல்ல மக்கள் தலைவனாகவே எண்ணியிருந்தோம், ஆனால் அவர் அப்படியில்லை என்பது தெளிவாகிறது".

கடந்த வருட இறுதியில் பதியப்படாத அரசியல் கட்சியாக தனது குழுவை கருணா ஆரம்பித்திருந்தார். ஆனால், ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே பாரிய உள்வீட்டு குத்துவெட்டுக்களை அவரது கட்சி சந்தித்து வந்ததுடன், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட கருணா ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. தனது கட்சிக்குள் நடைபெற்று வந்த பல படுகொலைகளைப் பற்றித் தன்னும் கருணா அக்கறை செலுத்தவில்லை. திலீபன் மற்றும் வீரா ஆகிய முக்கியஸ்த்தர்கள் உடபட பல கருணா உறுப்பினர்களின் படுகொலைகள் பற்றி கருணா அலட்டிக்கொள்ளவில்லை.

"பிள்ளையான் குழுவைப் பொறுத்தவரை திலீபன், வீரா ஆகியோரைக் கொல்வது அவசியாமனது என்று கருதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பிள்ளையான் இவர்களைக் கொல்வதன்மூலம் புலிகளின் புலநாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானுக்கு தம்மைப்பற்றிய செய்திகள் செல்வதைத் தடுக்க முடியும் என்று நம்பினார். ஆகவே புலிகளுடன் தொடர்பிருக்கலாம் என்று கருதப்பட்ட பல உறுப்பினர்களை கட்சிக்குள்ளேயே அவர்கள் கொன்றுதள்ளினார்கள்" என்று அந்த முக்கியஸ்த்தர் கூறுகிறார்.

"கருணா குழு இரண்டாகப் பிளவுபட்டபின்னர் எம்மில் ஒருகுழுவினருக்கு இலங்கை ராணுவமும், மற்றைய குழுவுக்கு இலங்கைக் கடற்படையும் உதவிவந்தன. ஆயுதங்கள், அடைக்கலம் உள்ளிட்ட சகல வசதிகளும் இக்குழுக்களுக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டன". 

"கருணா பிரபாகரனிடமிருந்து பிரிந்து வெளியே வந்தபோது, எமது மக்களுக்கான நல்லதொரு தலைவர் தோன்றிவிட்டார் என்றே நாம் நம்பினோம். ஆனால் நாளடைவில் எந்தப் பிரபாகரனின் கீழ் நாம் அல்லற்பட்டோம் என்று கருதினோமோ, அதைவிட அதிகமான இன்னல்களை நாம் கருணாவின் கீழ் அடைந்தோம், ஆனால் பெயர் மட்டுமே மாறியிருந்தது".
"புலிகளின் இலக்கு மாறிப்போனதைப் போன்றே, கருணாவின் இலக்கும் முளையிலேயே மாறிப்போனது. ஆனால், இலங்கை அரசுக்கும் ராணுவத்திற்கும் இது வரப்பிரசாதமாகவும், மிகச்சிறந்த சந்தர்ப்பமாகவும் மாறிப்போனது. எம்மைப் பாவித்தே புலிகளை அவர்களால் அழிக்க முடிகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கிழக்கில் புலிகளுக்கெதிரான நடவடிக்கைகள் ராணுவத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவரும் இந்நிலையில், அரசுக்கும் ராணுவத்திற்கும் கருணாவின் தேவை குறைந்துவருவதுடன், அவரின் முக்கியத்துவமும் குறைந்துவருவதாகத் தெரிகிறது. கருணாவுக்கும் அவரது குழு உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்டுவரும் பாரிய விரிசலே இதற்குச் சிறந்த அடையாளமாகக் காட்டப்படமுடியும். குறிப்பாக வாகரை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டபின் கருணாவின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைக்கப்பட்டதோடு, தனது உறுப்பினர்களிடையே இருந்தும் அவர் அந்நியமாகிப்போனார்".

"கருணா புலிகளிடமிருந்து பிரிந்து ராணுவத்துடன் சேர்ந்து இயங்கத் தொடங்கிய காலத்தில் அவர் கிழக்கு மக்களிடம் இரு விடயங்கள் பற்றிப் பேசி வந்தார். முதலாவது தமிழ் மக்களிடையே பிரபாகரன் குறித்து இருந்த எண்ணத்தை முற்றாக உடைப்பது அல்லது சிறுமைப்படுத்துவது. அடுத்தது கிழக்கு மக்களுக்கெதிராக வடக்குத் தமிழர்களும் புலிகளும் செயற்பட்டுவருகிறார்கள் எனும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது. ஆனால் இவை இரண்டுமே தவறான, முரணான முடிவுகள். பிரபாகரனின் கொடுங்கரங்களிலிருந்து தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பேன் எனும் கருணாவின் சூளுரை இன்னமும் அப்படியே இருக்கிறது".

இப்போது அவர் தனது குறிக்கோளில் இருந்தும், இலட்சியத்திலிருந்தும் முற்றாக விலகி, தான் சேர்த்துவைத்திருந்த பெருமளவு பணத்தையும், அரசால் அவருக்கு வழங்கப்பட்ட செல்வங்களையும் எடுத்துக்கொண்டு நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். இந்தச் செவ்வியின்போது இலங்கை ராணூவப் புலநாய்வு அதிகாரிகளுடன் கருணா கொண்டிருந்த தொடர்புகள் பற்றி விலாவாரியாக விபரங்களை வெளியிட்ட அவர், இவர்களுக்கிடையிலான தொடர்பாடல்களின் விபரங்களையும் வெளியிடத் தயங்கவில்லை.

இந்தச் செவ்வியை நாம் ஒழுங்குசெய்யவில்லை. ஆனால், இந்தக் கருணா குழு முக்கியஸ்த்தர் தானாகவே எம்முடன் தொடர்புகொண்டு இதுபற்றிப் பேசவேண்டும் என்று தொலைபேசி வாயிலாக எம்மைக் கேட்டிருந்தார். கிழக்கு மக்களுக்கான விடியலைப் பெற்றுத்தரப்போவதாக புலிகளிடமிருந்து ராணுவத்தினரின் பக்கம் தாவிய கருணாவின் உண்மை முகம் வெளிக்கொணரப்படவேண்டும் என்பதற்காகவே தான் இதனைச் செய்வதாக அவர் கூறினார். இவ்விடயங்கள் எமது பத்திரிக்கையில் நிச்சயம் வெளிவரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தனது விடயங்களின் உண்மைத்தன்மையினை அறிய விரும்பினால் கிழக்கு மக்களிடமோ அல்லது ஏனைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு உறுப்பினர்களிடமோ நீங்கள் கேட்டு அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பேட்டி........

கேள்வி : வணக்கம்

கருணா குழு முக்கியஸ்த்தர் : வணக்கம் அண்ணை, இதுகுறித்து உங்களை தொந்தரவு படுத்தியமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நான் உங்களுடன் கருணா தொடர்பான பல ரகசிய விடயங்களைப் பேச விரும்புகிறேன், அதனைச் செவிமடுப்பீர்களா?

கேள்வி : அதுசரி, ஆனால் இப்போது அதிகாலை 12:30 மணி, பரவாயில்லை சொல்லுங்கள்?

க.கு.மு : நன்றி

கேள்வி : கேர்ணல் கருணாவுக்கு என்ன நடந்தது?

க.கு.மு: எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டு அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார்.

கேள்வி : அவரை ஏன் கருணா என்று மட்டும் அழைக்கிறீர்கள்? ஏன் அவரது கேர்ணல் எனும் மரியாதைப் பெயரினைத் தவிர்க்கிறீர்கள்? அவர் உங்களது தலைவர் இல்லையா?

க.கு.மு: முந்தி அவரைத் தலைவராகத்தான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போது அவர் அந்தத் தகுத்திக்குப் பொருத்தமற்றவர் என்பதனை நிரூபித்துவிட்டார். அவருக்கும், அவர் எதிர்த்துச் செயற்படப்போவதாகக் கூறிய பிரபாகரனுக்கும் எந்தவேறுபாடும் இல்லை. இருவரும் எமது மக்களையும், போராளிகளையும் நட்டாற்றில் விட்டு விட்டனர்.

கேள்வி : கருணா எங்கு தப்பியோடியிருக்கிறார்? அவர் இப்போது எங்கு வாழ்கிறார்?

க.கு.மு: அவர் இப்போது எந்த நாட்டில் வாழ்கிறார் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியாது. ஆனால், அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார் என்பது எம் எல்லோருக்கும் இப்போது தெரியும். அவர் ஒளிந்திருக்கும் இடம்பற்றி நான் பேசமுடியாது, அவரது பாதுகாப்பு முக்கியமல்லவா?

கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு என்ன நடந்தது?

க.கு.மு: அது இப்போது இரண்டாகப் பிளந்துபோய்விட்டது. கருணாவின் சுயநலத்தாலும், இலக்குத்தவறிய இயல்பினாலும் இது நடந்தது.

கேள்வி : அப்படியானால் உங்களின் அரசியல்ப்பிரிவுக்கு என்ன நடந்தது?

க.கு.மு: அது ஒரு முற்றான கேலிக்கூத்து. கருணா தனது உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையுமே அந்த அரசியல் கட்சிக்கு நியமித்தார்.

கேள்வி : மட்டக்களப்பிலும், அதனை அண்டிய ஏனைய கிழக்குப் பகுதிகளிலும் இப்போது என்னதான் நடக்கிறது?

க.கு.மு: பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், இன்றுவரை கருணா குழு உறுப்பினர்கள் அப்பாவிக் கிழக்கு மக்களிடம் கட்டாய கப்பம் அறவிடுதலை செய்துவருகின்றனர். இப்படியாக மக்களைக் கட்டாயப்படுத்தி சேர்க்கப்படும் கப்பப் பணம் கருணாவின் வங்கிக் கணக்கை நிரப்பி வருகின்றன.

கேள்வி : மட்டக்களப்பில் ஒருமாதத்திற்கு கருணாவுக்காக எவ்வளவு பணம் கப்பமாக அறவிடப்பட்டு வருகிறது?

க.கு.மு: பெருமளவான பணம். நானும் இந்தக் கப்பம் அறவிடல் நடவடிக்கையில் கருணாவுக்காக ஈடுபட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தமட்டில், கருணா ஒருமாதத்திற்கு குறைந்தது 80 லட்சம் ரூபாய்களைக் கப்பமாக அறவிட்டு வருகிறார். 

கேள்வி : கருணாவுக்கு அரசாங்கத்தினால் பணக் கொடுப்பனவுகள்கிடைக்கின்றனவா?

க.கு.மு: ஆம், நிச்சயமாக.

கேள்வி: அரசிடமிருந்து ஏனைய சலுகைகள் கிடைக்கின்றனவா?

க.கு.மு: ஆம், கிடைக்கின்றன. ஆனால், அந்த விபரங்களைக் கூறுவது எனது பாதுகாப்பிற்கும், கருணா குழுவினரின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலாக மாறிவிடும், அதனால் அதனைத் தவிர்த்து விடுகிறேன்.

கேள்வி : உங்களின் எதிர்காலம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் அமைப்பின் எதிர்காலம் தொடர்பாகவும் உங்களின் புரிதல் என்ன?

க.கு.மு: புலிகளின் எதிர்காலம்போலத்தான் எமது எதிர்காலமும். புலிகளை பலவீனமாக்கி அழிக்க கருணாவின் பிளவு காரணமாக இருந்ததுபோல எமது அமைப்பு பிரிந்து அழிக்கப்படவும் கருணாவே காரணமாக இருக்கிறார். இன்று எம்மை நடத்துவதும், ஆட்டுவிப்பதும் அரசாங்கமும், அவர்களது ராணுவப் புலநாய்வுத்துறையினரும்தான் தான். இந்த மொத்த அவலநிலைக்கும் காரணமே கருணாதான்.

முற்றும்

  • Like 1
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா : ஒரு போராளியின் படுதோல்வி - பாகம் 1

மூலம்: லங்கா கார்டியன்
காலம் : 8, மாசி 2008

குறிப்பு : இக்கட்டுரைத் தொடர் திஸ்ஸார குணசேகர எனும் சிங்களவர் ஒருவரால் எழுதப்பட்டது. புலிகளின் போராட்டத்தையே தவறென்று விமர்சிக்கும் இச்சிங்களவர் கருணாவின் "புரட்சி", அதன்பின்னரான அவரது தோல்வி பற்றி இக்கட்டுரையில் எழுதுகிறார்.

"எம் எல்லோருக்குள்ளும் ஆத்திரம், வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு ஆகியவற்றினைக் கொண்ட மிருகம் ஒன்று ஒளிந்திருக்கிறது. ஆனால், அந்த மிருகத்தை எம்மைச் சுற்றியுள்ளவர்கள் மேல் ஏவிவிடாமல் பாதுகாப்பதே எமது தலையாய கடன். அதனை எதிர்த்து, எமக்குள்ளேயே போராடும் நாம், எம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குள்ளிருக்கும் மிருகங்களுக்கெதிராகவும் போராடுதல் அவசியம்" - அல்பேர்ட் கேமஸ் , ஒரு புரட்சிக்காரன் எனும் நூலில் இருந்து.


விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தனது நெடுநாள் தலைவருக்கெதிராகவும், தான் வளர்ந்த புலிகள் இயக்கத்திற்கெதிராகவும் மட்டுமே போராடவில்லை. ஆனால், மிக ஆளமாக வேரூன்றப்பட்ட மொத்தத் தமிழ்த் தேசியத்திற்கெதிராகவும் அதன்மீதான தமிழர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுக்கெதிராகவும் அவர் போராடினார்.

தான் செய்யப்போவதாகக் கூறிக்கொண்டு அவர் வெளியேறிச் சென்ற காரணங்களை அவர் அடையமுடியாது போனது அவரது தோல்வியல்ல. அவரால் புலிகளுக்கெதிரான ராணுவரீதியிலான சக்தியாக தன்னை நிலைநிறுத்தமுடியும் என்று எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அது தோல்வியே அல்ல. ஆனால், அவரது அவமானகரமான தோல்வியென்பது தானே தன்மீது ஏற்படுத்திக்கொண்டது. ஒருவருடத்திற்கு முதல் கருணா பிரபாகரனின் புலிகளால் கொல்லப்பட்டிருந்தால்க் கூட அவர் கிழக்கு மாகாண மக்களுக்கும், புலிகளை எதிர்க்கும் தமிழருக்கும் ஒரு வீரனாக, இலட்சியவாதியாகத் தெரிந்திருப்பார். பிரபாகரனுக்கெதிரான எதிர்கால புரட்சிகளுக்கான நாயகனாக பலர் அவரைத் தொழுதிருப்பார்கள். 

ஆனால், கருணா புலிகளின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டார். எந்தப் பிரபாகரனும் புலிகளும் ஜனநாயகவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள், மனித நாகரீகத்திற்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று கருணா அன்று கூறினாரோ, இன்று அதே செயல்களை புலிகளை எதிர்த்துச் சண்டை செய்கிறேன் என்கிற போர்வையில் கருணாவும் செய்துவருகிறார். கிழக்கு மாகாணத் தமிழர்களை பிரபாகரன் அடிமைகளாக நடத்துகிறார் என்று அன்று கூறிய அதே கருணா, சிங்களப் பேரினவாதிகளின் ஆசீரோடும், உந்துதலோடும் அதே கிழக்கு மக்களை பிரபாகரனைக் காட்டிலும் மிகவும் கொடுமையான அடக்குமுறையின்கீழ் அடிமைகளாக வைத்திருக்கிறார். 

கருணாவின் கீழ் செயற்படும் ராணுவத் துணைப்படை மிகவும் மிலேச்சத்தனமாக சிறுவர்களைத் தனது அணியில் சேர்த்துவருகிறது. மனிதவுரிமைகளுக்கான ஐ நா வின் உயர்ஸ்த்தானிகராலயம், மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல சர்வதேச மனிதவுரிமை மற்றும் சிறுவர் நலன் பேணும் அமைப்புக்கள் கருணாவின் துணைராணூவக் குழுவினரால் நடத்தப்பட்டு வரும் கட்டாய சிறுவர் சேர்ப்பு, கடத்தல்கள், கப்பத்திற்காக் கடத்துதலும் படுகொலைகளும் ஆகிய மிருகத்தனமான சம்பவங்களுக்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. இந்த மனிதநேயத்திற்கெதிரான கருணா குழுவின் செயற்பாடுகள், அவர்களைப் புரட்சிக்காரர்கள் என்கிற நிலையிலிருந்து புதிய அடக்குமுறையாளர்களாக தமிழ்மக்கள் முன்னால் நிறுத்தியிருக்கின்றன. ஆனால், சரித்திரத்தில் போராளிகளே தமது சொந்த மக்களின் அடக்குமுறையாளர்களாக மாறி வலம் வருவது சரித்திரத்தில் இதுவே முதற்தடவையும் அல்ல. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதன்பின்னரான கருணாவின் கதை மிகவும் இழிவானதொன்று. கிழக்கு மாகாணம் முழுவதுமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபின்னர், கருணாவின் பாதுகாவலர்களின் பார்வையில் கருணாவின் முக்கியத்துவம் குறைந்துகொண்டு செல்லத் தொடங்கியது. தனது முக்கியத்துவமும், போர் வல்லமையும் அவர்கண்களின் முன்னே அழிந்துகொன்டு சென்றபோதும் வடக்குக் கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவை என்று அவர் அவப்போது சொல்லிக்கொண்டே வந்தார். கருணாவின் இந்த புதிய ஞானோதயம் அவரின் சிங்கள எஜமானர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. ராணுவத் தீர்வொன்றின்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைத்தபின், தீர்ப்பதற்கென்று எதுவுமே இல்லையென்பதே கருணாவின் பாதுகாவல்ர்கள் அனைவரினதும் ஒரே முடிவாக இருந்தது. அத்துடன் கருணா - பிள்ளையான் பிளவு என்பது அவரது பாதுகாவலர்களான சிங்களப் பேரினவாத ஆட்சிக்காரர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா அல்லது போராளியாகவிருந்து கட்டுப்பாடற்ற மிலேச்சத்தனமான ஆயுதக் கும்பலின் தலைவன் என்கிற நிலைக்கு கருணா மறிவிட்டதால் உருவாக்கப்பட்ட பிளவா என்பது இன்றுவரை தெளிவில்லாமலேயே இருக்கிறது. 

இறுதியில் தனது குடும்பத்துடன் இணைவதற்காக ராஜதந்திரிகள் பயன்படுத்தும் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பொய்யான பெயருடன் கருணா லண்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பிரபாகரனுக்கு சமனான பலமுள்ள எதிரியாக, பிரபாரனுக்குச் சவால்விடும் வல்லமை கொண்ட ராணுவ வல்லமையுள்ளவனாக, மகாசக்தி பொருந்திய கடவுளின் மகனாகத்  தன்னைக் காட்டிக்கொண்ட கருணாவின் கால்கள் களிமண்ணினால் செய்யப்பட்டவைதான்  என்பது நிரூபணமாகிறது. இன்று, அதே சர்வ வல்லமை பொறுந்திய ஒப்பார் அற்ற கருணா லண்டன் சிறையொன்றில் சில்லறைக் குற்றங்களுக்காக கைதிகளை அடைத்துவைக்கும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்.

கருணா எனும் போராளி தோற்றிருக்கலாம், ஆனால் அவரது புரட்சிக்கான காரணமும், நியாயமும் தவறென்று ஆகிவிடப்போவதில்லை. பிரபாகரனுக்கெதிரான கருணாவின் புரட்சி நியாயமானதே ( சாதாரண சிங்களத் தேசியவாதிகளின் மனோநிலைதான் இவருக்கும்). புலிகள் இருக்கும்வரை தமிழர்களுக்கு நிம்மதியோ விடுதலையோ கிடைக்கப்போவதில்லை. கிடைக்கப்போவதெல்லாம் அழிவுகளும், மரணங்களும் மட்டும் தான். ஒருவேளை பிரபாகரன் போரில் வெற்றிபெற்றாலும் அவர் அமைக்கப்போகும் நாட்டில் வாழுவதற்கு பல தமிழர்களே விரும்பப்போவதில்லை. சிங்களவர்களுடன் இருக்கும் நாட்டில் அவர்கள் அனுபவிப்பதாகக் கூறும் அடக்குமுறைகளைக் காட்டிலும் பிரபாகரனின் நாடு பயங்கரமானதாக இருக்கும். தமது மீட்பர்கள், விடுதலைப் போராளிகள் என்று தமிழ் மக்கள் போஷிக்கும் புலிகளுக்கெதிராகப் போராடுவதே தமிழர்களுக்கு உண்மையான விடுதலையினைப் பெற்றுத்தரக்கூடியது.

கருணாவின் புரட்சி சரியானதுதான். குறைந்தது தான் பிறந்த கிழக்கு மாகாணத் தமிழர்களின் விடுதலைக்காகவாவது அவர் புரட்சி செய்யத் தொடங்கினார். அவர் புலிகளிடமிருந்து வெளியேறி வந்தபோது எந்த இலட்சியங்களுக்காக தான் வருவதாகக் கூறினாரோ, அவை யாவுமே சரியானவைதான். ஆனால், நாளடைவில் தானே முன்வைத்த இலட்சியத்திலிருந்து அவர் விலகியதே அவரது தோல்வியாகும். இறுதியில் கருணா தனது பிரதேசமான கிழக்கு மாகாணத் தமிழ் மக்களையே ஏமாற்றினார். பிரபாகரன் மொத்தத் தமிழர்களையும் ஏமாற்றியதுபோல, கருணா கிழக்குத் தமிழர்களை ஏமாற்றினார். கிழக்கு மக்களுக்கெதிரான கருணாவின் இந்த துரோகமே அவரது புரட்சி படுதோல்வியில் முடிவடைவதற்குக் காரணமாகியது. கருணாவைப் பயன்படுத்தி புலிகளை அழிக்க திட்டமிட்ட சிங்கள ஆளும்வர்க்கம் கருணாவைப் பாவித்தவிதமும் அவரது புரட்சி தோற்கக் காரணமாகின. சமாதானத்திற்காக முயன்றுகொண்டிருந்தவர்களைப் பொறுத்தவரை கருணா ஒரு துணைராணூவக் குழுவின் தலைவர், கொலைகாரர். சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரை கருணா தாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாக தமக்கு உழைத்த சேவகன், ஆகவே அவரது தேவை முடிந்தவுடன் அவரைக் கழற்றிவிட்டார்கள். புலிகளுக்கெதிரான தமிழ் அரசியல் சக்திகளோடு, புலிகளுக்கெதிரான தமிழர்களுடனுன் தன்னை தொடர்புபடுத்தத் தவறியதன் மூலம், அரசியலில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதும் கருணாவின் வீழ்ச்சிக்குக் மேலும் காரணங்களாகின. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனிடமிருந்து கருணா பிரிந்துவந்து புரட்சி செய்த சந்தர்ப்பத்தினை நாம் சரியாகப் பாவித்திருந்தால், புலிகளுக்குள் அது இன்னும் பல பிளவுகளை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தினைக் கருணாவும், அவரைப் பாவித்த ஆளும்வர்க்கமும் தவிடுபொடியாக உடைத்துவிட்டார்கள். கருணாவை நாம் கையாண்ட விதத்தினைப் பார்க்கும் எந்தப் புலி உறுப்பினரும் எமது சிங்களத் தேசத்தினை நம்பி வெளியேறி வரப்போவதில்லை. சிலர் வெளியேறிச் செல்லலாம், ஆனால் நிச்சயமாக பிரபாகரனுக்கெதிராகச் சதிசெய்யப்போவதில்லை. 
புலிகளுக்கெதிரான எந்த உள்வீட்டுச் சதியும் சிங்கள அதிகாரவர்க்கத்தின் முழுமையான ஆதரவின்றி வெற்றிபெறப்போவதில்லையென்பது கருணாவின் தோல்வியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது. சிங்களத் தலைமைகளை நம்பி ஏமாற்றப்பட்டு தமது புரட்சி கருணாவைப்போன்று படுதோல்வியில் முடியப்போவதை எந்தத் தமிழரும் விரும்பப்போவதில்லை. 


கருணாவின் புரட்சிக்கு முன்னர்

புலிகள் என்று கூறும்போது முதலில் வரும் போராளியின் பெயர் கருணாதான். அவரது புரட்சி புலிகளின் சரித்திரத்தில் முன்னர் அறிந்திராதது. கருணாவுக்கு முதல் சில மாற்றுக்கருத்தாளர்கள் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் கருணாவைப்போன்று புரட்சி செய்யவில்லை. உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட பிளவு யார் தலைவன் என்கிற சுயகெளரவத்தால் ஏற்பட்டது. 

பிரபாகனுக்கெதிரான மாத்தையாவின் எழுச்சியென்பது இயக்கத்தின் துணைத்தலைவர் என்கிற அந்தஸ்த்தினைத் தாண்டி மேலே எழவில்லை. பிரேமதாசாவுடனுனான பேச்சுக்களில் ஈடுபட்ட மாத்தையா சமாதானத் தீர்வொன்று சாத்தியம் என்று நர்பத் தலைப்பட்டார். இதனால், பிரபாகரன் பேச்சுவார்த்தையினை முடித்துக்கொண்டு இரண்டாவது ஈழப்போரினை ஆரம்பித்தது மாத்தையாவைப் பொறுத்தவரை உவப்பானதாக இருக்கவில்லை. எனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி மாத்தையா தனது அதிருப்தியை தன்னைச் சுற்றியிருந்த புலிகளின் தலைவர்களிடம் தெரிவித்திருந்தார். மாத்தையா தனது அதிஉர்ப்தி தொடர்பாக வெளிப்படையாக பேசாமலும், பிரபாகரனுக்கெதிராகப் புரட்சி செய்யாமலும் இருந்தபோதிலும், பிரபாகரன் மாத்தையாவுடன் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். 
 
பிரபாகரனின் சர்வாதிகார, கொலைகார மனோநிலையினை சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிய மாத்தையா, தானாகவே புலிகளின் விசாரனைக் குழுவில் சரணடைந்தார். அதன்மூலம் மிகவும் வலிமிகுந்த மரணத்தை அவர் சந்தித்தார். ( மாத்தையாவின் சதிபற்றி நாம் தெரிந்துவைத்திருப்பதற்கும், சிங்களப் பேரினவாதிகள் நினைத்துவைத்திருப்பதற்கும் இடையிலான வேறுபாட்டினைக் கவனியுங்கள்)
 

மாத்தையாவுக்கு நடந்த அவலமான மரணமே புலிகளியக்கத்தை அடுத்த புரட்சியாளனான கருணாவைக் காப்பாற்றியது என்ற்கூடச் சொல்லலாம். மாத்தையாவின் தூரொகத்தின்போது அவரையும் அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்யும் பணியில் பிரபாகரனால் கருணா ஈடுபடுத்தப்பட்டார் என்று அறியவருகிறது. தனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் புலிகளை பிரபாகரன் எப்படி தண்டிப்பார் என்பதை தனது கண்களாலேயே கண்டுணர்ந்த கருணாவுக்கு 10 வருடங்களின் பின்னர் தானே அவ்வாறானதொரு புரட்சியினைச் செய்யும்போது தெளிவாகத் தெரிந்தே வைத்திருந்தார். அதனாலேயே உன்னுடன் பேச வேண்டும், வன்னிக்கு வா என்று பிரபாகரன் கருணாவை அழைத்தபோது அவர் முடியாதுஃ என்று சமயோசிதமாகத் தப்பித்துக்கொண்டார். ஆனால், கருணாவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட திருகோணமலைத் தளபதி பதுமன் பிரபாகரனின் அழைப்பை ஏற்று, அவரின் தந்திரம் தெரியாது, வன்னிக்குச் சென்று புலிகளின் வலையில் சிக்கினார். அவர் உடனேயே கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பிரபாகரனுக்கெதிரான கருணாவின் புரட்சி, பல புலியெதிர்ப்பாளர்களுக்கும், அவர்களது அரசியலுக்கும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. கருணாவின் புரட்சி நடக்காது போயிருக்குமானால், ரணிலின் சமாதான நடவடிக்கைகள் புலியெதிர்ப்பு அரசியலினை முற்றாகவே அழித்திருக்கும் என்றுகூடச் சொல்லலாம். 
 

அரசியலில் சகுனங்கள் ஆதிக்கம் செலுத்துவது உண்மையென்றால், ரணிலின் சமாதானப் பேச்சுவார்த்தை பயனற்றதாகவே ஆரம்பிக்கப்பட்டது. ரணில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் 2001 ஆம் ஆண்டு மார்கழி 24 நள்ளிரவில் அமுலுக்கு வந்த சில கனப்பொழுதுகளிலேயே முன்னாள் உறுப்பினரான ஆனந்தராஜா என்பவரைப் புலிகள் கொன்றார்கள். ஆனால், இதனை ரணில் அரசோ நோர்வேயின் சமாதான தூதர்களோ கவனிக்கத் தவறிவிட்டார்கள். புலிகளுக்கெதிரான அரசியலைச் செய்பவர்களின் கதி சமாதான காலத்தில் எப்படியிருக்கப்போகிறதென்பதை இந்தக் கொலை எடுத்துக்கூறியிருந்தபோதும், எவருமே அந்நேரத்தில் இதனைக் கண்டுகொள்ளவில்லை. தெற்குச் சிங்களவர்கள் சமாதான போதையில் மூழ்கியிருக்க, புலிகளுக்கெதிரான தமிழர்கள் சமாதானத்திற்கான விலையாகச் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள். 
 

இந்த அரசியல், உளவியல் சூநிலையிலேயே கருணாவின் புரட்சி இடம்பெற்றது. அதுவும், இருக்கக்கூடிய ஒரே காறனமான "வடக்கின் தலைமைக்கெதிரான கிழக்கின் எழுச்சி " எனும் பிரதேச வாத கருத்தியலை முன்வைத்தே நடத்தப்பட்டது. வடக்கின் அடைமைப்படுத்துதலுக்கெதிரான கிழக்கின் எழுச்சி மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கான மனிதவுரிமைகளையும், பிரதேச உரிமைகளையும் வடக்கின் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுப்பது எனும் நோக்கிலேயே கருணாவின் புரட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதனாலேயே கருணாவின் புரட்சியினை பெருமளவு கிழக்கு மக்கள் ஏற்க முன்வந்தார்கள்.

கிழக்கு மாகாணம் என்பது சிங்கல நாட்டின் பிரிக்கமுடியாத பகுதியாக உறுதியாக கருதப்பட்ட அதேவேளை  பிரபாகரனின் ஈழம் எனும் மாயையான நாட்டின் பிரிக்கமுடியாத பகுதியாகவும் அவர்களால் கருதப்பட்டது. அபிவிருத்தியும், குறைவிருத்தியும் கிழக்கின் அடையாளமாகக் காணப்பட்டது. கிழக்கு மாகானத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியன  ஆளும் சிங்கலவர்களாலும், தமிழ் அரசியல்வாதிகளாலும், புலிகளாலும், முஸ்லீம் அரசியல்வாதிகளாலும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டுக் கைவிடப்பட்டே வந்தது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

On 5/11/2021 at 09:08, ரஞ்சித் said:

எல்லாருக்கும் அந்த உண்மை தெரியும். இந்தப் படுகொலையில் யார் யாரெல்லாம் பங்குகொண்டிருந்தார்கள் என்பதுகூட எல்லோருக்கும் தெரியும்.

ஆமாம் எங்களுக்கும் தெரியும். இந்தப் படுகொலையில் சுப்பிரமணிய சுவாமி, சந்திரா சுவாமி, சோனியாகாந்தி எனப் பலரின் பெயர்களை இந்தியப் பத்திரிகைகள் பலவும் அன்று வெளிப்படுத்தினவே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் என்னதான் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தபோதிலும், அந்த மாகாணம் தொடர்ச்சியாக சிறிலங்காவிலும், பிரபாகரனின் தமிழீழத்திலும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. இலங்கையின் சிங்களவரைப் பொறுத்தவரையிலும், தமிழர்களைப் பொறுத்தவரையிலும் கிழக்கு மாகாணம் ஒரு பலவீனமான இணைப்பாகவே இருந்துவருகிறது. ஏனென்றால், இம்மாகானம் தமிழரும் சிங்களவரும் சமமாக  வாழ்ந்துவருவதனால், தமிழரைப் பெரும்பான்மையினராகக் கொண்டதென்றோ, சிங்களவரைப் பெரும்பான்மையினராகக் கொண்டதென்றோ கூறமுடியாத நிலை காணப்படுகிறது. முஸ்லீம்களையும் நாம் எடுத்துக்கொண்டால், ஏறத்தாள மூன்று இனங்களும் சமமாக வாழ்வதால், இம்மாகாணம் இலங்கையினைப் பொறுத்தவரைய்லும், தமிழரின் ஈழத்தைப் பொறுத்தவரையிலும் பலவீனமான தொடர்ச்சியாகவே காணப்படுகிறது. 

கிழக்கு மாகானத்தின் சேர்ப்பின்றி, இலங்கையினை பிரிவுபடாத ஒற்றை நாடாக வைத்திருப்பது சாத்தியமற்றது. அதேபோல, கிழக்கு மாகாணம் இல்லாது புலிகளின் ஈழமும் பூரணப்படாது. ஆகவே, கிழக்கு மாகாணமே இந்த விடயத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அது எந்தப் பக்கம் சாய்கின்றதோ, அதுவே இலங்கை ஒற்றைநாடா அல்லது இரு நாடுகளா எனும் நிலையினைத் தீர்மானிக்கப்போகிறது.

கிழக்கு வடக்கைக் காட்டிலும் வறுமையானதாக, அபிவிருத்தியில் குன்றியதாக இருந்தாலும்கூட, புலிகளின் போராளிகளில் கணிசமானவர்கள் கிழக்கைச் சேர்ந்த போராளிகளே. ஆனால், தளபதிகளில் பெரும்பாலானவர்கள் வடக்கைச் சேர்ந்தவர்கள். கிழக்கைச் சேர்ந்த போராளிகள் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொண்டபோதும்கூட, அவர்களுக்கான மரியாதை அமைப்பினுள் வழங்கப்படவில்லை. 

இரு பிரிவுகளுக்கிடையிலான பிணக்குகளுக்கும், அதனூடான இழப்புக்களுக்கும் காரணமான முதலாவது தலைமைக்கெதிரான கிளர்சி நடந்தது கூட கிழக்கில்த்தான். இது பலருக்குத் தெரியாது இருந்தாலும்கூட, முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. 

"மிக அண்மைக் காலம்வரையில் கிழக்கு மாகாணப் போராளிகள், தலைமைக்கெதிரான கிளர்ச்சியை ஒருபோதும் நினைக்காதவர்களாகவும், அமைப்பினுள் ஏற்படக்கூடிய பிளவுகளை எதிர்ப்பவர்களாகவுமே இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால், அவ்வப்போது தலைமைக்கெதிரான சில கிளர்ச்சிகள் தோற்றம்பெற்றபோது, வடக்கிலிருந்து அனுப்பப்படும் அணிகள் கிழக்கில் போராளிகளுக்கிடையே பிளவுகளை உண்டாக்கி, தலைமைக்கெதிரான அவர்களின் கிளர்ச்சியைத் திசை திருப்பியே வந்திருக்கிறார்கள். 1986 இல் புலிகள் டெலோ இயக்கம் மீது தாக்குதலை ஆரம்பித்த வேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான கடவுள் என்பவர் கிழக்கு மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும், டெலோவுக்கெதிராக தாம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென்றும் தெரிவித்திருந்தார். ஆனால், இதனால் ஆத்திரப்பட்ட புலிகளின் தலைமைப்பீடம் வடக்கிலிருந்து பொட்டு அம்மாணையும், குமரப்பாவையும் கிழக்கிற்கு அனுப்பி கிழக்கில் அமைப்பில் பிளவுகளை உருவாக்கியது. அதேபோல, 1987 இல் கிழக்கில் வாழ்ந்த சிங்களவர்கள் மீதான புலிகளின் தாக்குதல் முயற்சிகளையும் மட்டக்களப்பில் பிறந்த புலிகளின் தளபதியான பிரான்ஸிஸ் என்பவர் முழுமையாக நிராகரித்திருந்தார். ஆனால், 1987 இல் கிழக்கில் சிங்களவர்களைக் கொல்லுமாறு வடக்குத் தலைமை உத்தரவிட்டிருந்ததுடன் அதற்கு பணிய மறுத்த பிரான்ஸிஸ் சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்". 

இந்தக் காரணிகள் அனைத்தினதும் விளைவாகவும், வடக்குத் தலைமையின் மாற்றாந்தாய் மனப்பாங்கினாலும், பிரதேசத்தின் அமைவிடத்தின் யதார்த்தினை மனதில்க் கொண்டுமே 2004 இல் புலிகளுக்கெதிரான கிளர்ச்சியில் கருணா இறங்கவேண்டி ஏற்பட்டது. பிரபாகரனின் செல்லப்பிள்ளையாகவும், புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராகவும், கிழக்கின் மைந்தனாகவும் இருந்த கருணா தான் பிறந்த மண்ணிற்கே மீண்டும் வந்து தலைமைக்கெதிரான கிளர்ச்சியை ஆரம்பித்தார். 

தன்னால் வலிந்து இயக்கத்தில் சேர்க்கப்பட்ட கிழக்கின் சிறுவர்கள் எவருமே வடக்கின் போர்முனைகளுக்கு அனுப்பப்படப்போவதில்லை என்கிற உத்தரவாதத்தினை வழங்கவேண்டும் என்று தலைமையிடம் அவர் நிபந்தனை முன்வைத்தார். எதிர்பார்த்ததைப்போலவே பிரபாகரன் இந்த வாக்குறுதியை வழங்க மறுத்து விட்டார். அதன் பின்னர் கிழக்கு மாகாணப் புலிகள் தனித்து இயங்கும் சுயாதீனத்தை தலைமை வழங்கவேண்டும் என்று கருணா கோரிக்கை வைத்தார். ஆனால், வன்னிக்கு வா, பேசித்தீர்க்கலாம், கருத்து வேறுபாடுகளைக் களையலாம் என்று பிரபாகரன் கருணாவுக்குக்ப் பதிலனுப்பினார். 

பிரபாகரனின் வேண்டுகோளை வெளிப்படையாகவே நிராகரித்து, வன்னிக்குச் செல்ல மறுத்ததன் மூலம் கருணா புலிகளின் சரித்திரத்திலேயே முதலாவதான  தலைமைக்கெதிரான கிளர்ச்சியைத் தொடக்கி வைத்தார்.


பாகம் ஒன்று - முற்றும்
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனின் படுகொலை

TamilNet: 07.02.05 Kousalyan killed in ambush

2005 ஆம் ஆண்டு மாசி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் கிழக்கு மாகாணத்தின் நாமல்கம எனும் பகுதியினை ஊடறுத்துச் செல்லும் ஏ 11 நெடுஞ்சாலையில் கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

மாசி மாதம் 7 ஆம் திகதி ஒரு திங்கட்கிழமையாகும். 57 - 1020 எனும் இலக்கத்தகட்டினையுடைய டொயோடா ஹயேஸ் ரக பயணிகள் வாகனம் மரதங்கடவல - திருக்கொண்டாட்சிமடு ஆகிய பகுதிகளை இணைக்கும் ஏ 11 நெடுஞ்சாலையூடாகப் பயணித்துக்கொண்டிருந்தது. வீதியில் இந்த வாகனத்திற்கு முன்னால், ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு வாகனத்தைக் கண்டதும், இந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி வேகத்தைக் குறைக்கத் தொடங்கினார். ஆனால், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டு, அபாய விளக்குகள் எரிந்துகொன்டிருந்த அந்த வெண்ணிற வாகனத்திலிருந்தவர்கள் கெள்சல்யன் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்யவே, அவர்கள் வாகனத்தை ஓய்வுக்குக் கொண்டுவரத் தொடங்கினார்கள். அப்போது நேரம் இரவு 7 மணி 45 நிமிடம்.

Tamil Tiger rebels political leader S.P.Thamilselwan attends a Reuters  interview in rebel-held Kilinochchi, Sri Lanka in this May 7, 2005 file  photo. Thamilselvan was killed in a Sri Lankan air force raid

கெளசல்யன் பயணித்த ஹயேஸ் வாகனத்தில் 9 பேர் இருந்தனர். முன்னிருக்கையில், சாரதி விநாயகமூர்த்தியும், அருகில் முன்னாள் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனும், அவருக்கு அருகில் திருக்கோயிலைச் சேர்ந்த பொலீஸ் காவலர் சந்திரசேகரனும் அமர்ந்திருந்தனர். நடுவரிசை இருக்கையில் புலிகளின் கிழக்கு மாவட்டங்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனும், இன்னொரு அரசியல்த்துறைப் போராளி புகழனும், அவர்களுக்கருகில் இன்னொரு பொலீஸ் காவலர் நாகராஜாவும் அமர்ந்திருந்தனர். 
பின்னிருக்கையில் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகளான செந்தமிழன், நிதிமாறன், விநோதன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். 

இவர்களின் வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளைநிற ஹயேஸ் வாகனத்தைக் கடந்து செல்லும் தறுவாயில், அவ்வாகனத்தின் முன்னால் வீதியில் சீருடை தரித்த மூவர் நின்றுகொண்டிருப்பதை வாகனத்திலிருந்தவர்கள் அவதானித்திருக்கின்றனர். அவ்விடத்தில் நின்றவர்களின் ஒருவர் இவர்களின் வாகனத்தை நோக்கி கையசைக்கவே, மெதுவான கதியில் சென்றுகொன்டிருந்த இவர்களின் வாகனம், தனது வேகத்தை இன்னும் வெகுவாகக் குறைத்துக்கொண்டது. 

கெலசல்யன் பயணித்த வாகனம் ஓய்வுக்கு வரவும் அதனை நோக்கி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்தும், வீதியில் நின்றவர்களும் சேர்ந்து சரமாரியான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தார்கள். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த விநோதன், கெளசல்யனும், சாரதியும் குண்டடிபட்டு முன்னோக்கிச் சாய்வதை அவதானிக்கிறார்.

கெளசல்யனின் வாகனத்தில் பயணித்த இரு பொலீஸ்காரரும் சந்திரநேருவின் காவலுக்கு வந்தவர்கள். அவர்கள் இருவரிடமும் டி - 56 ரக தானியங்கித் துப்பாக்கிகள் இருந்தன. இதை விடவும் சந்திரநேருவிடம் அவரின் பாவனைக்கென்று 9 மி மீ கைத்துப்பாக்கியொன்றும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தம்மீது தாக்குதலை நடத்தும் கொலைகாரர்கள் மீது திருப்பித் தாக்கவோ, மறைவாக  ஒளிந்துகொள்ளவோ அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்காது தொடர்ச்சியாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனத்தில் இருந்தவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடந்தபோது, ஒரு பொலீஸ்காரர் வாகனத்திலிருந்து வெளியே குத்தித்து தப்பிக்க முயன்றார். வாகனத்தில் பயணித்த ஐந்து புலிகளின் செயற்பாட்டாளர்கள் எவரிடமும் எதுவித ஆயுதங்களும் இருக்கவில்லை. இரண்டு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த படுகொலையினைச் செய்துவிட்டு அந்த வெள்லைவான் கொலைகாரர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்ரார்கள். 

வாகனத்தில் பயணம் செய்த 9 பேரில் கெளசல்யன், புகழன், நிதிமாறன், செந்தமிழன் ஆகிய விடுதலைப் புலிகளும், வாகனச் சாரதியான விநாயகமூர்த்தியும் அவ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டனர். காவலுக்கு வந்த இரு பொலீஸ்காரர்கள், சந்திரநேரு மற்றும் வினோதன் ஆகியோர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த துப்பாக்கித் தாக்குதல் நடந்து பத்து நிமிடங்களின் பின்னர் அருகிலிருந்த வெலிக்கந்தை முகாமிலிருந்து தாக்குதல் நடந்த இடத்திற்கு   ராணுவத்தினர் வந்து சேர்ந்தனர்.

A. Chandranehru - Wikipedia

இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் முதலில் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கும், பின்னர் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கும் கொன்டு சென்றனர். பின்னர் காயப்பட்டவர்கள் உலங்கு வானூர்திமூலம் கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவசர சத்திரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேருவின் உடல்நிலை  ஆரம்பத்தில் தேறினாலும், இறுதியில் அதிகப்படியான இரத்தப் பெருக்கினால் மரணமடைந்தார். தாக்குதலில் உயிர் தப்பிய விநோதன் எனும் போராளியும், இன்னொரு பொலீஸ்காரரும் நடந்த படுகொலைபற்றிய விபரங்களை வெளிக்கொணர்ந்தனர். 


 

Edited by ரஞ்சித்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெளசல்யனின் வாகனம் வரும்வரை காத்திருந்து ஏ 11 நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட தாக்குதல்

ஏ 11 நெடுஞ்சாலையின் மக்கள் நடமாட்டமில்லாத 104 மற்றும் 105 ஆகிய மயில்க்கல்களுக்கிடையிலான பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. தமிழர் பகுதிகளுக்குள் துணைராணுவக்குழுக்களின் ஆதரவோடு நடைபெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்களில்  ஒன்றான நாமல்கம எனப்படும் புத்தம்புதிய சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே இந்த நெடுஞ்சாலைப்பகுதி இருக்கிறது. நெடுஞ்சாலையில் வெலிக்கந்தப்பகுதியில் அமைந்திருக்கும் 23 ஆவது பிரிகேட் படைமுகாமிலிருந்தே கெளசல்யனின் வாகனத்தை கருணா குழுவினரின் வெண்ணிற ஹயேஸ் வாகனம் தொடர்ந்துவந்ததாக நம்பப்படுகிரது. கெளசல்யனின் வாகனத்தின் சாரதியும், இரு பொலீஸ்காரரும் பிள்ளையாரடிப் பகுதியில் வழிபாட்டிற்கு இறங்கியிருந்தவேளையில் இவர்களைக் கடந்து இந்த வாகனம் சென்றதை போராளிகள் அவதானித்திருக்கிறார்கள். 

மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்ட எல்லையிலேயே இந்தப் படுகொலை நடந்தேறியிருக்கிறது. சுமார் 14 கிலோமீட்டர்களுக்கப்பால் அமைந்திருந்த புணாணை மற்றும் வெலிக்கந்தை ராணுவ முகாம்களுக்கு இடையிலான மக்கள் நடமாட்டமில்லாத பகுதியினை கொலைகாரர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். வெலிக்கந்தை முகாமிலிருந்து 5 கிலோமீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் இத்தாக்குதலை கருணா குழு நடத்தியிருந்தாலும்கூட, எதுவித தடைகளுமின்றி இவ்விரு ராணுவ முகாம்களையும் கடந்து தப்பிச்செல்ல அவர்களால் முடிந்திருக்கிறது.

தாக்குதல் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், இதனை நடத்தியது ராணுவத்தோடு சேர்ந்தியங்கும் கருணா குழுதான் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கருணா குழுவினர் இதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பியிருந்த அவரின் பல ஆதரவாளர்களுக்குப் பேரிடியாக அமைந்தது,   அத் தாக்குதலினைச் செய்தது புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் "தமிழீழம் ஐக்கிய விடுதலை முன்னணி" எனும் தமது அமைப்புத்தான் என்று கருணாவின் தோழர்கள் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் தமது தாக்குதல் தொடர்பாக பெருமையாகப் பேசிக்கொண்டது. இதனைக் கருணா குழுவே செய்ததென்பதை அவர்களால் மறுக்கமுடியவில்லை. 

November | 2010 | Lankamuslim.com | Page 8

கருணா குழுவினரால் பெருமையோடு பேசப்பட்ட இந்த புதிய தாக்குதல் அணியென்பது கருணா குழுவின் உறுப்பினர்களையும் ஈ என் டி எல் எப் எனப்படும் பரந்தன் ராஜன் தலைமையிலான  இந்திய ஆதரவு துணைராணுவக் குழுவும் இணைந்து உருவாக்கப்பட்ட துணைராணுவக் குழு என்பது குறிப்பிடத் தக்கது. 

பங்குனி 2004 இல் கருணா தனது தோழர்களோடு புலிகளிடமிருந்து பிரிந்து ராணுவத்துடன் இணைந்துகொண்டார். ஆனால், கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கையினை புலிகள் 2004 சித்திரையில் ஆரம்பித்திருந்தார்கள். இதனையடுத்து ராணுவத்தின் துணையுடன் கொழும்பிற்குத் தப்பியோடிய கருணாவும் அவரது தோழர்களும் தெற்கிலேயே மறைந்து வாழ்ந்துவந்தார்கள். கருணாவால் கிழக்கில் கைவிடப்பட்ட அவரின் எடுபிடிகள் கிழக்கிலிருந்து ராணுவ முகாம்களில் அடைக்கமாகியதுடன், பலர் மட்டக்களப்பு பொலொன்னறுவை எல்லையில் அமைந்திருந்த பாரிய காட்டுப்பகுதியில்  ஒளிந்துகொண்டார்கள். 

TamilNet: 15.04.05 Polannaruwa magistrate visits Karuna Group / ENDLF camp

மட்டக்களப்பு - பொலொன்னறுவை எல்லைக் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கருணா குழு - ஈ என் டி எல் எப் குழுவினரின் குடில்களை புலிகள் தாக்கியபின்னர் (எச்சரிக்கை :  ஒட்டுக்குழுவினரின் சடலங்கள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன)

 

அதேநேரம், கருணா துணைராணுவக் குழுவினரை வேட்டையாட புலிகள் தெற்குநோக்கி தமது அணிகளை அனுப்பி வைத்திருந்ததாகவும் நம்பப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பரந்தன் ராஜனின் உதவியுடன் கருணா நேபாளத்தினூடாக இந்தியாவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. 1987 இல் இருந்து 1990 வரையான காலப்பகுதியில் இந்திய ராணுவத்தின் துணையுடன் புலிகளுக்கெதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வந்தவர்களே இந்த ஈ என் டி எல் எப் எனும் துணைராணுவக் குழுவினர். இத்துணைராணுவக் குழுவினரின் சில தலைவர்கள் இந்தியாவின் ஆசீருடன் அமைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணசபையிலும் அங்கத்துவம் வகித்தவர்கள். இக்குழுவிலிருந்து மாகாணசபை அமைச்சராக தெரிவான ஒருவர் புலிகளால் கொல்லப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து இன்னொருவரை இப்பதவிக்கு இக்குழு நியமித்தது. 
 1990 இல் இந்திய ராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியபோது, பரந்தன் ராஜனின் துணைராணுவக் குழுவும் அவர்களுடன் இந்தியாவிற்குக் கப்பலேறித் தப்பித்துக்கொண்டது.


 

Edited by ரஞ்சித்
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஒரிஸா மாநிலத்திலும், கர்நாடகாவின் பெங்களூரு பகுதியிலும் ஈ என் டி எல் எப் துணைராணுவக் குழு முகாம்களை அமைத்திருந்தது. இந்திய உளவுத்துறையின் செல்லப்பிள்ளையான இந்த துணைராணுவக் குழுவுக்கு ரோ மூலம் பாரிய உதவிகள் செய்யப்பட்டு வந்தன. 

புலிகளிடமிருந்து கருணா வெளியேறிய பின்னர் பரந்தன் ராஜன் அவருடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். புலிகளால் பாரிய அச்சுருத்தலினை எதிர்கொண்டிருந்த கருணாவுக்கு பரந்தன் ராஜனின் உதவி அந்நேரத்தில் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. ஆகவே, பரந்தன் ராஜனின் உதவியுடன் கருணா இந்தியாவுக்குச் சென்றார். கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவும், பரந்தன் ராஜனின் ஈ என் டி எல் எப்ப் உம் இணைந்து தமிழீழம் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் அமைப்பை உருவாக்கினர். இவ்வமைப்பின் ராணுவப்பிரிவாக தமிழ்த் தேசியப் படை எனும் துணைராணுவக் குழு இவர்களால் உருவாக்கப்பட்டது.

கெளசல்யன் படுகொலை செய்யப்பட்டு மூன்று தினங்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் இயங்கிவந்த கருணா துணைக்குழு உருப்பினரான சேரன் என்பவர் மூலம் இத்தாக்குதல் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில் கெளசல்யனை தமது தமிழ்த் தேசியப் படை எனும் ராணுவப்பிரிவே கொன்றதாக அக்குழு வெளிப்படையாக உரிமை கோரியிருந்தது. இத்தருணத்தில் புலிகளின் அரசியல்த் துறைப் பொறுப்பாளரும் இன்னும் சில போராளிகளும் கொல்லப்பட்டது கருணா குழுவும் ஈ என் டி எல் எப்பு குழுவும் இணைந்து நடத்திய தாக்குதலில்த் தான் என்று கருணாவுக்கு ஆதரவானவர்கள் கிழக்கில் பெருமையாகப் பேசத் தொடங்கியிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெளசல்யனையும் ஏனைய போராளிகளையும் சுட்டுக் கொன்ற மங்களம் மாஸ்ட்டரும் தூயசீலனும்

வாகனத்தில் பயணம் செய்தவர்களான கெளசல்யனையும் ஏனைய போராளிகளையும் சுட்டுக்கொன்றது மங்களம் மாஸ்ட்டர் எனப்படும் கருணா குழு முக்கியஸ்த்தரும், தூயசீலன் எனப்படும் அவரது உதவியாளரும் தான் என்று அறியமுடிந்தது. தூயசீலன் புலிகளின் காலத்தில் களுவங்கேணிப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்ததோடு, 2004 சித்திரையில் வாகரையில் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட வினோதன் படையணியின் தளபதியும் கருணாவின் நெருங்கிய சகாவுமான பாரதிதாசனின் முகாம் உதவியாளராக மங்களம் மாஸ்ட்டர் என்பவர் பணியாற்றியதாகவும் அறிய முடிகிறது.

இத்தாக்குதலில் ஒரு ஏ கே 47 ரகத் துப்பாக்கியும், எஹ் கே 33 ரக தானியங்கித் துப்பாக்கியும் இவர்களால் பாவிக்கப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்திருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட சூழ்நிலைகள் எதுவாக இருந்தபோதிலும், கருணாவினாலும், பரந்தன் ராஜனினாலும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளுக்கு பாரிய இழப்பாகவே கருதப்பட்டது.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் போராளிகளுக்கு லெப்டினன்ட் கேணல் கெளசல்யன், மேஜர் புகழவன், மேஜர் செந்தமிழன், இரண்டாம் லெப்டினன்ட் நிதிமாறன் ஆகிய பதவியுயர்வுகளை புலிகள் வழங்கியிருந்தனர். இதே தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவுக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனின் படுகொலை புலிகளுக்கு பாரிய இழப்பாகவே அன்று கணிக்கப்பட்டது.

கெளசல்யன்

அமைதியான சுபாவம் கொண்ட மென்மையாகப் பேசும் கெளசல்யன் ஒரு சிறந்த சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர். வெளிப்படையாகப் பேசாத, தன்னடக்கம் கொண்ட அவர் இயல்பில் கூச்ச சுபாவம் உடையவராக இருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியானவர் என்று பரவலாக அறியப்பட்டவர். அவ்வாறே, இலட்சியத்திலிருந்து விலகாத, எதற்காகவும் இலட்சியத்தை விட்டுக் கொடுக்காத, இலட்சியத்தில் இருந்து பின்வாங்காத உறுதியுள்ள மனிதராக புலிகளால் அறியப்பட்டவர். கூச்சசுபாவமுள்ளவராக இருந்தாலும், மக்களுடன் மிக அதிகமாக நெருங்கிப்பழகியவர் அவர். பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவருக்கிருந்த வல்லமை புலிகளிடத்தில் பெரும் பேசுபொருளாகவே இருந்துவந்தது. 2005 இல் அவரது படுகொலையின் மூலம் ஒரு சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருந்தவரை, புலிகளின் இரண்டாவதுநிலை  தலைவராக எதிர்காலத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவரை  அவ்வியக்கம் இழந்தது. 

இளையதம்பி நாகேந்திரன் லிங்கராசா எனும் இயற்பெயருடைய கெளசல்யன் 1972 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பாண்டாரியாவெளியில் பிறந்தவர். மட்டக்களப்பு வாவியின் மேற்குப்பகுதியில் இவ்வூர் அமைந்திருக்கிறது. ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தாலும்கூட, மிகச்சிறந்த போராளியாக அவர் பரிணமித்தார்.

  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெளசல்யனின் காலிங்க வகுப்பு

கெளசல்யன், மட்டக்களப்பு - அம்பாறை தமிழ் மக்களின் பெருமளவினரை அடக்கிய காலிங்க சமூக அமைப்பைச் சேர்ந்தவர். இந்த சமூக அமைப்பு முக்குவர் சமூகத்தில் வருகிறது. படுவான்கரை கிராமங்களான பண்டாரியாவெளி, படைக்காத்தவெளி, அரசடித்தீவூ, கொக்கட்டிச்சோலை, களுதாவளை ஆகியவற்றில் முக்குவர் சமூகத்தினரே வாழ்ந்து வருகின்றனர். காலிங்கக் குடியினர் எனும் சமூகத்தினர் தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த போர்வீரர்களான கலிங்க சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களின் வழித்தோன்றல்கள்  என்று கருதப்படுகிறது.  காலப்போக்கில் இந்த போர்வீரர் மரபில் வந்த இக்குடியினர் கிழக்கில் தாம் வாழ்ந்த பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். 

கெளசல்யன் மட்டுமில்லாமல், புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளான ரமேஷ், துரை, நாகேஷ் போன்றவர்களும் இதே காலிங்க வகுப்பினைச் சார்ந்தவர்கள் தான். இந்த சமூக அமைப்பைச் சேர்ந்த பல இளைஞர்கள் இந்திய ராணுவ ஆக்கிரமிப்பின் காலத்தில் புலிகளோடு தம்மை இணைத்துக்கொண்டவர்கள். அதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் ஏனைய சமூக அமைப்புக்களில் இருந்தே பல போராளிகள் இயக்கத்தில் இணைந்துவந்தனர். தனது 16 வயதில், 1989 ஆம் ஆண்டு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட கெளசல்யன் புலிகளின் கஞ்சிகுடிச்சியாறு முகாமில் தனது பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டார். பின்னர் புலிகளின் வடமுனைப் போர் அரங்கில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார் கெளசல்யன்.

இந்திய ராணுவம் வெளியேறி, அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் ஆரம்பித்த நேரத்தில் கெளசல்யன் கும்புறுமூலையில் ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்டார். அத்துடன் வாகரை - கதிரவெளிச் சமர்களிலும் கெளசல்யன் பங்கெடுத்திருந்தார். சமர்களத்திலும், இயக்கத்தினுள்ளும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளை வெளிக்காட்டி வந்ததினால், அவர் விரைவாக புலிகளின் பதவி நிலைகளுக்கு உயர்த்தப்பட்டதுடன், சிறிது காலத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் நிதித்துறைக்குப் பொறுப்பானவராக தலைமையினால் நியமிக்கப்பட்டார். 1994 இல் யாழ்ப்பாணத்திற்குச் சென்று, புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவரான ரஞ்சித்தப்பா என்று அழைக்கப்பட்ட தமிழேந்தியின்  கீழ் செயற்பட்டு வந்தார். சந்திரிக்காவுடனான சமாதானக் காலபகுதியில் மீண்டும் கிழக்கிற்கு வந்த கெளசல்யன் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிதி மற்றும் வரித்துறைக்குப் பொறுப்பானவராக இயங்கி வந்தார்.

யாழ்ப்பாணத்தை விட்டு புலிகள் வன்னிக்குச் சென்று, தம்மை மீளவும் ஒருங்கிணைக்கத் தொடங்கிய 1995 காலப்பகுதியில் கெளசல்யன் வன்னிக்குச் சென்றார். 1996 இல் இடம்பெற்ற புலிகளின் மிகவும் வெற்றிகரமான தாக்குதல்களில் ஒன்றான ஓயாத அலைகள் 1 முல்லை முகாம் தகர்ப்பில் கெளசல்யனும் பங்காற்றியிருந்தார். வன்னியில் 1996, 1997, 1998 ஆகிய காலப்பகுதியில் இடம்பெற்ற சமர்க்களங்களில் போரிட்ட படையணிகளுக்கு வழங்கல்களை செய்வதிலும் கெளசல்யன் ஈடுபட்டிருந்தார். 1998 இல் கிழக்கிற்கு மீண்ட கெளசல்யன் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் நிதித்துறைக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டார்.

பல லட்சக்கணக்கான பணத்தை மிகவும் நேர்மையுடனும், கண்ணியமாகவும் கெளசல்யன் இயக்கத்தின் சார்பில் கவனித்து வந்தார். அவரின் நேர்மை பற்றி இயக்கத்திற்குள் எல்லாருமே பேசுமளவிற்கு போராட்டம் மீதும், தலைமை மீது அதிக பற்றுடனும் நேர்மையுடனும் செயற்பட்டவர் கெளசல்யன். கிழக்கு மாகாணத்தின் தளபதியாகவிருந்த கருணாவினால்க் கூட கெளசல்யனினின் நேர்மை மீது ஒரு குற்றச்சாட்டையேனும் வைக்க முடியவில்லை.

கெளசல்யனின் நேர்மையும், விசுவாசமும் எவ்வளவுதான் உண்மையாக இருந்தாலும், கருணாவினால் அவர் நிதித்துறையிலிருந்து நீக்கப்பட்டு கிழக்கு மாகாண துணை அரசியல்த் துறைப் பொறுப்பாளராக கரிகாலனின் கீழ் அமர்த்தப்பட்டார். கெளசல்யனுக்கு வழங்கப்பட்டது ஒரு பதவி உயர்வு என்று கருணா சொல்லிக்கொண்டாலும்கூட, அவரை நிதித்துறையிலிருந்து அகற்றுவது கருணாவுக்கு மிகவும் அவசியமானதாகத் தெரிந்தது. நிதிப்பொறுப்பிலிருந்து கெளசல்யன் அகற்றப்பட்டதும் கருணாவின் நிதிக் கையாடல்களுக்கு இருந்த ஒரே தடையும் அகற்றப்பட்டது. தனது சகோதரனான ரெஜி எனப்படும் ரெஜினோல்ட்டை நிதித்துறைக்குப் பொறுப்பாக நியமித்த கருணா, பாரிய நிதிமுறைகேடுகளில் ஈடுபடத் தொடங்கியதுடன், இக்கையாடல்களைப் பாவித்து தன்னைச் சுற்றி விசுவாசமான கூட்டத்தையும் கட்டி வளர்க்கத் தொடங்கினார். புலிகளிடமிருந்து கருணா விலகிச் செல்லவேண்டிய அவசியத்தை கருணாவின் நிதிக் கையாடல்களே முதன்முதலில் ஏற்படுத்தின. 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு முஸ்லீம்களுடன் சமாதானமாகச் செல்ல விரும்பிய கெளசல்யன்

நெடுங்காலமாக கிழக்கின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக இருந்த கரிகாலன் தலைமையின் நம்பிக்கையினை இழந்த காலப்பகுதியில் கெளசல்யன் கிழக்கு மாகாண அரசியல்த்துறைக்குப் பொறுப்பானவராக தலைவரால் நியமிக்கப்பட்டார். தான் துரோகிகளால் கோழைத்தனமாகக் கொல்லப்படும்வரை தனது பணியில் திடமான உறுதியுடனும், தலைமைக்கு விசுவாசத்துடனும் செயற்பட்டு வந்தார். கெளசல்யனின் அரசியல் ரீதியினான வெற்றிகளில் முதன்மையானது கிழக்கு முஸ்லீம்களுடன் அவர் செய்துகொண்ட நட்புறவு. தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே இனரீதியிலான வன்முறைகள் எழுவதை கெளசல்யன் இறுதிவரை தடுத்து, இரு சமூகங்களுக்குமிடையே ஒற்றுமையினை நிலைநாட்ட தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தார். கெளசல்யன் கொல்லப்பட்ட செய்தி கிழக்கில் பரவியபோது கிழக்கின் பல முஸ்லீம் நகர்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டதும், கெளசல்யனின் வித்துடல் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டபோது அந்நிகழ்வில் கலந்துகொண்ட பெருமளவிலான இஸ்லாமியத் தமிழர்களும் கெளசல்யனின் இன ஒற்றுமை முயற்சிகளுக்கான சாட்சிகள் என்றால் அது மிகையில்லை. 

கெளசல்யன் இடதுசாரிக் கொள்கையின்பால்  ஈர்க்கப்பட்டவர். விவசாய குடும்பத்திலிருந்து வந்த கெளசல்யன் காணி சீர்திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். ரமணனுடன் இணைந்து பெரும் பணக்கார தமிழ் , முஸ்லீம் காணி உரிமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். ஆனால், துரதிஷ்ட்டவசமாக கெளசல்யனின் நவீன விவசாய முயற்சிகள் கிழக்கில் வெற்றியளிக்காமல் போய்விட்டன. இதற்குக் காரணம் புதிதாக காணிகளைப் பெற்றுக்கொண்ட விவசாயிகளிடம் அவற்றை நிர்வகிக்கவோ, பராமரிக்கவோ தேவையான நிதி வளங்களோ அல்லது அனுபவமோ போதுமானதாக இருக்கவில்லை. 

புலிகளின் பெருமளவு கவனமும் சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டு போராடுவதில் குவிந்திருக்கும்போது, ஏழை விவசாயிகளுக்கான அவர்களது உதவியென்பது இக்காலத்தில் போதுமானதாக இருக்கவில்லை. இன்னொரு வகையில் சொல்லப்போனால், இந்த விவசாயிகளுக்கான உதவித் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வசதிகள் புலிகளிடம் அன்று இருக்கவில்லை. தொடர்ச்சியான போரும், ஆக்கிரமிப்பும் ஒருகாலத்தில் இலங்கையில் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட கிழக்கின் இப்பகுதிகளை கடுமையாகப் பாதித்திருந்தன.

கிழக்கில் வரிவிதிப்புகளை மேற்கொண்டாலும்கூட, கிழக்கில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சிறு கைத்தொழில் முயற்சிகளை கெளசல்யன் முன்னெடுத்து வந்தார். புலிகளின் உதவியுடன் பாறைகளை அகல்தல், கட்டுமானப் பணிகள், வாகனங்களை வாடகைக்கு விடுதல், வெதுப்பக முயற்சிகள், சிறு கடைகளுக்கான நிதி முதலீடுகள், சிறு புடவைக் கைத்தொழில் என்று பல துறைகளில் கெளசல்யன் இயக்கத்தின் உதவியுடன் மக்களை ஈடுபடுத்தி வந்தார். இவை பெருமளவு லாபத்துடன் இயங்கவில்லையென்றாலும் கூட, நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு  பொறுப்பான நிதித்துறையிலிருந்து கெளசல்யன் அகற்றப்பட்டதும் கருணாவினால் இத்திட்டங்களை நடத்தும் பொறுப்பு அவரது விசுவாசிகளுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் இயக்கத்திற்கென்றும், மக்களின் உதவித்திட்டங்களுக்கென்றும் சேகரிக்கப்பட்ட பெருமளவு பணம் கருணாவினாலும், அவரது விசுவாசிகளாலும் களவாடப்பட்டது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.