Jump to content

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மக்களால் நேசிக்கப்பட்ட கெளசல்யன்

கிழக்கு மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட, பிரபலமான ஒரு தலைவராக கெளசல்யன் விளங்கினார். கிழக்கின் பெரும் பணக்காரர்களும், இடைநிலை வசதிபடைத்தோரும் கெளசல்யனின் காணிச் சீர்திருத்தங்களை அவ்வளவாக விரும்பாவிட்டாலும், கிழக்கின் ஏழை விவசாய மக்கள் அவரை போற்றி வந்தார்கள். இந்த ஏழை மக்களாலேயே கிழக்கு மாகாணம் நிரம்பியிருந்தது. கெளசல்யனின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான  இந்த ஏழைத் தமிழர்கள் அவர்மேல் கொண்ட பற்றினாலும், அவரது இழப்பினால் ஏற்பட்ட உண்மையான சோகத்தினாலும்தான் அங்கு வந்து தம்மால் நேசிக்கப்பட்ட ஒரு  தலைவனுக்கான அகவணக்கத்தினைச் செலுத்தினார்கள் என்றால் மிகையில்லை. அவரைப்பற்றிய விமர்சனங்கள் எப்படியாக இருந்தாலும், தனது பணியில் அவர் காட்டிய நேர்மையும், போராட்ட இலட்சியத்தின் மீது அவர் கொண்டிருந்த அசைக்கமுடியா பற்றுறுதியும் எந்த விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டது.

கெளசல்யனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் கருணா பிரதேசவாதச் சாயம் பூசிக்கொண்டு புலிகளை விட்டுப் பிரிந்து ராணுவத்துடன் இணைந்தபோது ஏற்பட்டது. தனது உயிருக்குக் கருணாவினாலும்ம் அவரது விசுவாசிகளாலும் நிச்சயம் ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்திருந்தபோதும், தலைமைக்கெதிராகவும், போராட்டத்திற்கெதிராகவும் கருணா செயற்பட்டுவருவதை கெளசல்யன் கடுமையாக எதிர்த்தார். கிழக்கின் மைந்தனாக இருந்தபோதும் கருணாவின் இந்த துரோகத்தனத்தை வெளிப்படையாக அவர் விமர்சித்தார். கருணாவின் துரோகத்தனத்திற்கெதிரான கெளசல்யனின் கடுமையான விமர்சனமும், நிலைப்பாடும் அக்காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆகவே, இதுபற்றி நாம் பேசுவது முக்கியமானது.


 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • Replies 578
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

"கேர்ணல்" கருணாவும் அவனது பிரதேசவாதப் புரட்சியும்

மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு, புலிகளின் தேனகம் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் முக்கிய தளபதிகள் , பொறுப்பாளர்களை கருணா கூட்டியிருந்தான். சுமார் 150 புலிகளின் தலைவர்கள் அடங்கிய அந்த கூட்டத்தை கருணாவே நடத்தினான். கிழக்கில் 1987 இல் இருந்து பிரபாகரனுக்கு விசுவாசமாக போர்நடத்திய அதே கருணா இன்று அதே தலைவருக்கு எதிராக பிரதேசவாதக் கோசத்தைப் பாவித்துப் புரட்சி செய்துகொண்டிருந்தான்.

அன்று அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினருக்கு தமது காதுகளையே அவர்களால் நம்பமுடியவில்லை. புலிகளின் தலைமைமீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் கருணா முன்வைத்துக்கொண்டிருந்தான். அவனது குற்றச்சாட்டுக்கள் புலநாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான், நிதித்துறைப் பொறுப்பாழர் தமிழேந்தி, காவல்த்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஆகிய புலிகளின் மிக முக்கிய தலைவர்கள் மீதே முன்வைக்கப்பட்டன. கருணா விடுத்த கோரிக்கையென்னவென்றால், இந்த மூவரையும் தவிர்த்து, கிழக்கு மாகாணத்திற்கென்று தனியான அதிகார பலம் கொண்ட, தன்னிச்சையாக இயங்கும் நிர்வாக அமைப்பொன்றுதான். "வன்னித்தலைமையின் கீழ் நாம் செயற்பட விரும்பவில்லை, வடக்கு மைய்யத்தைச் சுற்றி நாம் இயங்கப்போவதில்லை, அதனைத் தூக்கியெறிந்துவிட்டு கிழக்கிற்கென்று தனியான ஒரு அமைப்பை நாம் உருவாக்குவோம்" என்று அவன் அங்கு கூடியிருந்தவர்களிடம் கர்ஜித்தான்.

இதைக்கேட்ட அனைவருமே ஒருகணம் அதிர்ந்துபோயினர். பலரின் முகத்தில் விரக்தியும் விசனமும் ஒட்டிக்கொண்டது. ஆனால், கருணாவின் எண்னத்தை ஏற்கனவே அறிந்துவைத்திருந்த அவனுக்கு நெருக்கமானவர்கள் அமைதியாக இருந்து அவன் சொல்வதை ஆமோதிக்கத் தொடங்கினர். அவர்களில் பலர் கருணாவுடன் சேர்ந்து நிற்கப்போவதாக வெளிப்படையாகவே கூறினர். ஆனால், இதில் வேடிக்கையென்னவென்றால், அன்று கருணாவுக்கு ஆதரவாக நிற்கப்போவதாகக் கூறிய பலர் பின்னர் வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் இணைந்துகொண்டதுடன், கருணாவின் துரோகத்தையும் கடுமையாகச் சாடத் தவறவில்லை. 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆனால், அங்கிருந்த தளபதிகளில் ஒருவர் மட்டுமே கருணாவின் துரோகத்தை வேளிப்படையாக எதிர்த்தார். கிழக்கு மாகாணத்தின் தன்னிகரில்லாத் தளபதியெனும் மமதை தலைக்கேறிய கருணாவை தனியாளாக எதிர்த்து நின்றது கெளசல்யனே அன்றி வேறில்லை. மொத்தத் தமிழினத்தினதும் எதிர்கால இருப்பென்பது வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதிலேயே தங்கியிருக்கிறது என்று நிதானத்துடன் அவர் கருணாவை நோக்கிக் கூறினார். மேலும், நாம் பிரதேச ரீதியாகப் பிரிந்துபோவது எமது போராட்டத்தை முழுமையான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் கருணாவிடம் கூறினார். எமக்கிருக்கும் பிரச்சினைகளை நாம் பேசியே தீர்த்துக்கொள்ள வேண்டும், ஆகவே உங்களின் இந்த நாசகார முடிவினைக் கைவிட்டு விட்டு வன்னிக்குச் சென்று தலைவரிடம் நேரடியாகப் பேசுங்கள் என்று அவர் கருணாவைக் கேட்டுக்கொண்டார்.

கெளசல்யனை பேசவிடாது தடுத்து, அவரின் பேச்சை நிராகரித்து, அவரையும் தனது சூழ்ச்சிக்குப் பணியவைக்க கருணா முயன்றுகொண்டிருந்தான். அத்துடன், கிழக்கிலிருந்து புலிகளுக்கென்று சேர்க்கப்பட்ட பணம் எவ்வளவென்பதை நீ வன்னிக்கு சொல்லு என்று அவன் கெளசல்யனைப் பார்த்துக் கேட்டான். "எமது மண்ணில் சேர்க்கும் அனைத்துப் பணமும் பொன்னான கிழக்கு ஈழத்திற்காக மட்டுமே இனிமேல் பயன்படுத்தப்படும்" என்று கூறினான் கருணா. ஆனால், கெளசல்யனோ தனது முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. தன்னை கருணா எதுவும் செய்யலாம் என்கிற நிலையிருந்தும், அவர் கருணாவின் துரோகத்திற்கெதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருந்தார். இதனால் பொறுமையிழந்த கருணா, "இப்போதே வன்னிக்கு ஓடிப்போ, உன்ர மனுசியையும் கூட்டிக்கொண்டு ஓடு. இனிமேல் நான் உன்னை இங்கே பர்க்கக் கூடாது. அப்படிப்பார்த்தால் அந்த இடத்திலேயே உன்னைப் போடுவேன்" என்று கர்ஜித்தான். 

அங்கு கூடியிருந்தவர் எல்லாம் ஸ்தம்பித்து நிற்க, கெளசல்யன் அந்த மணடபத்தை விட்டு அமைதியாக வெளியேறிச் சென்றார். உடனடியாக தனது வருங்கால மனைவியும், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவந்த மாணவியுமான புஷ்பாவை அழைக்க அம்பிலாந்துரைக்குச் சென்றார். அங்கிருந்து, உடனடியாக அவர் வன்னிக்குக்கிளம்பிச் சென்றார். வன்னியை வந்தடைந்த கெளசல்யனை வரவேற்ற தலைவர் கிழக்கில் நடந்துவரும் கருணாவின் பிரதேசவாத நாடகத்தின் விபரங்கள் தொடர்பாக அவருடன் நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். 

கருணாவின் துரோகத்தினை துணிவுடன் எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டுமே
ஆரம்பத்தில் கருணாவின் கீழ் செயற்பட்ட   தளபதிகளான ரமேஷ், ரமணன், ராம், பிரபா, கரிகாலன் ஆகியோர் பின்னர் அவனை விட்டு மீண்டும் வன்னிக்கே திரும்பிச் சென்றிருந்தாலும், ஆரம்பத்திலிருந்து கருணாவின் துரோகத்தினை துணிவாக எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டும் தான். கெளசல்யனின் விசுவாசத்தை மெச்சிய தலைவர், பின்னர் வந்த சில வாரங்களில் அவரது திருமண நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

முற்றும்

இணையம் : கொழும்பு டெயிலி மிரர்
ஆக்கம் : டி பி எஸ் ஜெயராஜ்


 

 • Like 1
 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
On 20/9/2021 at 20:24, ரஞ்சித் said:

கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான தாக்குதல் குறித்த புலிகளின் அறிக்கை

முதலில் இக்கொடூரமான தாக்குதல் குறித்து புலிகள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். இத்தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று மறுக்காவிட்டாலும், இத்தாக்குதல் "மன்னிக்கமுடியாத, கடுமையான கண்டனத்திற்கு  உள்ளாக்கப்படவேண்டிய படுகொலைகள்" என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல், தாக்குபவர்களின் உண்மையான குறிக்கோள் எந்தளவு நியாயத்தன்மையினைக் கொண்டிருப்பினும், நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நியாயப்படுத்தப்படவோ முடியாதது என்றும் கூறியிருக்கிறார்கள்.

புலிகளின் அறிக்கை வருமாறு,

" அப்பாவிகள் பேரூந்துமீதான இத்தாக்குதலினை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கெப்பிட்டிக்கொல்லாவையில்,அப்பாவிகளை இலக்குவைத்துத் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல் எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான படுகொலை அரசியல் காரணங்களுக்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெனீவாவில் முடித்துக்கொண்டு புலிகளின் பேச்சுவார்த்தைக்குழு நாடு திரும்பியிருக்கும் தருணத்துடன் ஒன்றாக்கி நடத்தப்பட்டிருக்கும் இந்த அப்பாவிகளின் படுகொலை, இப்பழியினை புலிகள் மீது சுமத்தும் ஒற்றை நோக்கத்திற்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசினாலோ அல்லது அவர்களால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழு ஒன்றினாலோ நடத்தப்பட்டிருக்கும் இந்த படுகொலையினைக் காரணமாகக் காட்டி இலங்கை அரசு வன்னிமீது தனது கொடூரமான வான் தாக்குதல்களையும் ஆரம்பித்திருக்கிறது.  ஆனால், துரதிஷ்ட்டவசமாக, அரசின் இந்த நயவஞ்சகப் பிரச்சாரத்திற்குள் அகப்பட்டிருக்கும் சர்வதேச செய்திநிறுவனங்களும், அமைப்புக்களும் புலிகள் மீது அநியாயமாக இத்தாக்குதலுக்கான பொறுப்பினைச் சுமத்துவது தெரிகிறது. தற்போது நடந்துவரும் வன்முறைகள் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் பொறுப்பாகவும், நிதானத்துடனும் செய்தி வெளியிடவேண்டும் என்று நாம் வேண்டுகிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களாக புலிகள் இயக்கத்தினால் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசு குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து வந்தது.  ஆனால், இப்போது சிங்கள மக்கள் மீது குறைந்தது 3 தாக்குதல்களையாவது புலிகள் செய்திருப்பதாகக்குற்றஞ்சாட்டுகிறது. இன்றுவரை சிங்கள அரசாலும், அதன் துணைராணுவக் குழுக்களாலும் தமிழ் மக்களும், சிறார்களும்  ஆயிரக்கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இத்தாக்குதல் ஒன்றின்போது கூட அரசோ அல்லது அதன் துணை ராணுவக் குழுக்களோ தமிழ் மக்கள் மீது தயவு தாட்சண்ணியம்பார்க்காமல், மிகவும் கொடூரமாகவே நடந்திருக்கின்றன. ஆகவே, இத்தாக்குதலிலும் கூட அரசும் அவர்களது துணைராணுவக் குழுவுமே பின்னால் இருப்பதாக நாம் நம்புகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் சிங்கள மக்கள் மீது புலிகள்பெயரால் படுகொலையொன்றினை நிகழ்த்துவதன் மூலம், சர்வதேசத்தில் புலிகளுக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தவும், அவர்களைத் தனிமைப்படுத்தவுமே அரசு முயன்றிருக்கிறது" என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 

@ரஞ்சித்அவர்களே, இந்தாருங்கள். இது செயலிழந்துபோன புதினம் வலைத்தளத்தில் இருந்து எடுத்த இத்தாக்குதல் தொடர்பான புலிகளின் சமதானச் செயலகத்தின் அறிக்கை. 

(வேண்டாததெனில் முறைப்பாடு மூலம் நீக்கிவிடவும்.)

 

மூலம்: http://www.eelampage.com/?cn=26875

மூல வலைத்தளம்: புதினம்

பழி சுமத்துவதற்காக கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதல்: விடுதலைப் புலிகள் கண்டனம்
[வியாழக்கிழமை, 15 யூன் 2006, 12:47 ஈழம்] [ம.சேரமான்]

அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவவில் பொதுமக்கள் பயணித்த பேரூந்து மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கை:

வவுனியாவிலிருந்து 23 கிலோ மீற்றர் தொலைவில் கெப்பிட்டிக்கொல்லாவவில் பொதுமக்கள் பயணித்த பேரூந்து மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதில் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் வாழ்க்கையை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது.

ஜெனீவா பேச்சுக்கள் நடைபெற்ற பெப்ரவரியிலிருந்து 24 குழந்தைகள் உட்பட 250 பேர் இதுவரை சிறிலங்கா இராணுவத்தினரால் வடக்கு - கிழக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் திரும்பியுள்ள நேரத்தில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது முழுப் பழியைச் சுமத்தும் நோக்குடன் நடத்தப்பட்டுள்ளது.

கிளைமோர் சம்பவத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் நிர்வாக முல்லைத்தீவுப் பகுதியில் விமானக் குண்டுவீச்சை சிறிலங்கா விமானப் படையினர் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கிளைமோர்த் தாக்குதலுக்கான பதில் நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் இதனையும் நியாயப்படுத்துகிறது.

சர்வதேச ஊடகமும் சிறிலங்காவின் இந்த பொய்யான பரப்புரையில் வீழ்வது எதிர்பாராத ஒன்றாக உள்ளது. சர்வதேச ஊடகங்கள் தங்களது உயரிய மதிப்பீடுகளை செய்திகளை வெளியிடுவதில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.