Jump to content

நிவர் புயல்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் - இந்திய வானிலை ஆய்வு துறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிவர் புயல்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் - இந்திய வானிலை ஆய்வு துறை

மழை

பட மூலாதாரம், GETTY IMAGES

வங்காள விரிகுடாவில், தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் உருவாகி இருக்கும், குறைந்த காற்றழுத்தம் (Low Pressure), அடுத்த 12 மணி நேரத்துக்குள் அழுத்தமாகவும் (depression), அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் (Cyclonic Storm) உருவாகும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை சொல்லி இருக்கிறது. இது 18 கிலோமீட்டார் வேகத்தில், கரையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் சொல்கிறது இந்திய வானிலை ஆய்வுத் துறை.

திங்கட்கிழமையே, தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கிவிடும். மெல்ல மழை தீவிரமடையும். செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை, தமிழகத்தின் சில கடற்கரை மாவட்டங்களில், கன மழை முதல், மிக கன மழை பெய்யலாம். மீனவர்கள் நவம்பர் 25, 2020 வரை மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு துறை சென்னை பிரிவின் துணை இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாடு வெதர்மேன்' நிவர் புயல் பற்றி கணிப்பது என்ன?

வானிலை அறிவிப்பு சுயாதீனமாகக் கணித்துவரும் `தமிழ்நாடு வெதர்மேன்` பிரதீப் ஜான், தன் வலைத்தளத்தில், நிவர் புயல் இரண்டு விதமாக கரையைக் கடக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்.

விதம் 1:

வேதாரண்யம் மற்றும் காரைக்காலுக்கு மத்தியில், 24 - 25 நவம்பர் தேதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கலாம்.

காற்றின் வேகம் மணிக்கு 70 - 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம். திருவாரூர், திருச்சி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் மிக கன மழை பெய்யலாம்.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்.
 

India Meteorological Department • Tropical cyclone • Cyclone

பட மூலாதாரம், IMD

விதம் 2:

காரைக்கால் மற்றும் சென்னைக்கு மத்தியில், 24 - 25 நவம்பர் 2020 தேதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கலாம்.

மணிக்கு 120 - 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் மிகக் கண மழை பெய்யலாம்.

கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு கண மழை பெய்யும் எனச் சொல்லி இருக்கிறார் பிரதீப் ஜான்.

மேலும் நவம்பர் 24ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், நவம்பர் 25ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுரியமாகச் செயல்பட வேண்டியது அவசியம். அதனால் குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாகச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

https://www.bbc.com/tamil/india-55037416

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிவர் புயல் – தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

 
1-148-696x392.jpg
 42 Views

நவம்பர் 25ஆம் திகதி சிவப்பு நிற எச்சரிக்கை தமிழகத்திற்கு  விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், நிவர் புயல் வருகிற 25ஆம் திகதி தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நிவர் (nivar) புயல் தமிழகத்தை தாக்கும் சாத்திய கூறுகள் உள்ளன என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கும் என்றும்  இதனால், 50 கி.மீட்டரில் இருந்து 75 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும் என்றும் கடல் பகுதியில் 62 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும் என்றும்  எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளதால், நவம்பர் 25-ம் திகதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும்  எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம் இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/நிவர்-புயல்-தமிழகத்திற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கக்கடலில் நிவர் புயல் எதிரொலி: 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு  எச்சரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news  ...

நிவர் புயல் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் நிவர் புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக சென்னை உள்ளிட்ட  கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 740 கி.மீ மையம் கொண்டிருக்கும் இந்த புயல்  நாளை மறுநாள் எதிர்வரும் 25ம் திகதி பிற்பகலில் மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரை கடக்கும் நேரத்தில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் புயல்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நிவர்-புயல்-மீனவர்களுக்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிவர் புயல்; சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து

நிவர் புயல்; சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து

நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
பதிவு: நவம்பர் 24,  2020 16:52 PM
சென்னை,

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ‘நிவர்’ புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

இரு மார்க்கங்களிலும் நாளை 1 நாள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/24165254/Niver-storm-All-trains-from-Chennai-to-Southern-Districts.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை - முதல்வர் பழனிசாமி

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை - முதல்வர் பழனிசாமி

 

சென்னை
 
நாளை நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
 
 
 தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை,அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் . நிவர் புயல் எதிரொலி : நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படும் .  புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே நாளை அரசு விடுமுறை விடப்படுகிறது.  பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  கடலோர மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தப்படுகிறது.
 
 மக்களுக்காக அரசு இருக்கிறது. எதிர்கட்சிகள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள். நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படுவது குறித்து அரசு முடிவு செய்யும். புயல் கரையை கடக்கும்போது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்எனத் தெரிவித்தார். மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்  என கூறினார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 


நிவர் புயல் தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 3 மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது

சென்னையிலிருந்து 450 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ. தொலைவிலேயே கடந்த 3 மணி நேரமாக நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.

நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் அதன் நகரும் வேகம் குறைந்து விட்டது.

புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/24125120/2103843/Tamil-News-Nivar-cyclone-Bay-of-Bengal-centered-3.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கரையைக் கடக்கிறது ’நிவர்’ புயல்; தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்

இன்று கரையைக் கடக்கிறது ’நிவர்’ புயல்;  தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்

 

சென்னை,
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 21-ந் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது.  இந்த புயலுக்கு ஏற்கனவே ‘நிவர்’ என்று வானிலை ஆய்வு மையம் பெயர் சூட்டிவிட்டது.
 
 
நிவர் புயலின் தாக்கம் காரணமாக  சென்னையில் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கின. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் புற நகர் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
202011250312166400_Rain-2511._L_styvpf.g
 
‘நிவர்’ புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை பாரிமுனையில் என்.எஸ்.சி.போஸ் சாலை மற்றும் எசுபிளனேடு சாலை சந்திக்கும் பகுதி முழுவதும் (குறளகம் அருகில்) மழைநீர் வெள்ளமென சூழ்ந்திருப்பதையும், அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதையும் படத்தில் காணலாம்.
 
 
இன்று கரையைக் கடக்கிறது நிவர் புயல்
 
நிவர் புயல், தீவிர புயலாக அதனையடுத்து அதி தீவிர புயலாகவும் மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது எந்தெந்த பகுதிகளில் பலத்த காற்று எவ்வளவு வேகத்தில் வீசும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
 
அதன்படி, இன்று திருவாரூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மணிக்கு 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். அதேபோல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இந்த காற்று இன்று காலை முதல் இரவு வரை நீடிக்கும். இதுதவிர கடலும் இரவு வரை கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலை இயல்பைவிட 2 மீட்டர் உயரம் வரை சீற்றத்துடன்  இருக்கும்
 
நிவர் புயலையொட்டி, தமிழகத்தில் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்களை கண்காணிக்கும் பணியினையும், பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் பணிகளையும் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
 
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிர்வாக கமிஷனர் பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகள் குழுவினர் முகாமிட்டு இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
 
புயல் வருகிறபோது மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  தமிழகத்தில்  இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வழக்கம்போல பணிபுரிவார்கள்.
 
 
’நிவர் புயல்’ தீவிர புயலாக மாறியது: இந்திய வானிலை ஆய்வு மையம்

’நிவர் புயல்’ தீவிர புயலாக மாறியது: இந்திய வானிலை ஆய்வு மையம்
 
நிவர் புயல், தீவிர புயலாக அதனையடுத்து அதி தீவிர புயலாகவும் மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. 
 
இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:  நிவர் புயல் தீவிர புயலாக மாறியது.  நவம்பர்  24 ஆம் தேதி 11.30 மணி நிலவரப்படி கடலூருக்கு 310 கி.மீட்டர் தொலைவில் புயல் உள்ளது. இந்த புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது” என்று  தெரிவித்துள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிவர் புயல் குறித்த தற்போதைய நிலைவரம்!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று (புதன்கிழமை) மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். அப்போது 155 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்புள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கி 6 கி.மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இரவு 11.30 மணிக்கு கடலூருக்கு 310 கி.மீற்றர் தொலைவிலும், புதுவைக்கு 320 கி.மீற்றர் தொலைவிலும் இருந்தது. சென்னைக்கு 380 கி.மீற்றர் தொலைவில் நகர்ந்து வருகிறது”  எனத்  தெரிவித்துள்ளது.

http://athavannews.com/நிவர்-புயல்-குறித்த-தற்ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதி தீவிர புயலாக வலுப்பெறும் ‘நிவர் புயல்’ எதிர் கொள்ளத் தயாராகும் தமிழகம்

1-165.jpg
 53 Views

நிவர் புயல்  இன்று பிற்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்  என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையில், புதுச்சேரிக்கு அருகில் இன்று இரவு கரையைக் கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 – 130 கி.மீ. வேகத்திலும் சில சமயங்களில் 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு ‘நிவர்’ என ஈரான் பெயரிட்டுள்ளது. இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என தாய்லாந்து பெயரிடப்பட்டது.

நிவர் புயல் கரையைக் கடப்பதால்,  தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

 

https://www.ilakku.org/அதி-தீவிர-புயலாக-வலுப்பெ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் ; மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் ; மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எச்சரிக்கை

 

சென்னை

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மதியத்துக்கு மேல் புயல் கரையைக் கடக்கும் என்பதால் இன்று பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலை மூடப்பட்டது; எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையும் புயல் காரணமாக மூடப்பட்டது.

கனமழை காரணமாக சென்னை - பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி! 

மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள், வீட்டு மாடியில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

புயல், கனமழையால் ஜிஎஸ்டி , ஓஎம்ஆர் ,ஈசிஆர் சாலைகளில் போக்குவரத்தை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தி உள்ளனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/25154441/Red-Alert-for-coastal-areas-of-Tamil-Nadu-and-Pondicherry.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை புறநகரில் 10 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது - பொதுமக்கள் கடும் பாதிப்பு

சென்னை புறநகரில் 10 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது - பொதுமக்கள் கடும் பாதிப்பு

 

ஆலந்தூர், 

சென்னை புறநகர் பகுதிகளில் நிவர் புயல் காரணமாக பலத்த மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆதம்பாக்கம் நியூ காலனி, பாரத் நகர், சக்தி நகர், நிலமங்கை நகர், சரஸ்வதி நகர் போன்ற பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட தெருக்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த பகுதியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை மழைநீர் சூழந்தது.

வேளச்சேரி ஆண்டாள் நகர், ஏ.ஜெ.எஸ்.காலனி, நேதாஜி காலனி போன்ற பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக வீடுகளில் சுற்றி மழைநீர் தேங்கி இருந்தது. கிண்டி நரசிங்கபுரம், மசூதி காலனி, புதுத்தெரு, வண்டிக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் வீடுகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி இருந்தது. இந்த பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்படாததால் தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளை சுற்றி இருந்தது.

பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஜல்லடியன்பேட்டை ஏரி நிரம்பியதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துவிடுவதாகவும் ஏரியின் மதகில் மணல் மூட்டைகள் போட்டுவிட்டதால் உபரி நீர் வெளியேறாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் முறையிட்டதன் பேரில், முன்னால் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் அப்பகுதி மக்களுடன் சென்று ஏரியின் மதகில் இருந்த மணல் மூட்டைகளை அகற்றி உபரி நீர் வெளியேற நடவடிக்கை எடுத்தார்.

நந்தம்பாக்கம் அடையாறு ஆற்று கரையோரம் உள்ள பர்மா காலனியில் வசித்த 25 குடும்பங்களை அங்கிருந்து அதிகாரிகள் அருகில் உள்ள முகாமில் தங்கவைத்தனர். மேடவாக்கம் பாபு நகரில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். புழுதிவாக்கம் ராம் நகர், மடிப்பாக்கம் சதாசிவம் நகர் போன்ற பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்தது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/26033530/10-thousand-houses-in-the-suburbs-of-Chennai-surrounded.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிவர் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரியில் சமீபத்திய நிலவரம் என்ன? - தமிழில்  செய்திகள்

நிவர் புயல் முழுமையாக கரையைக் கடந்தது- வானிலை மையம் அறிவிப்பு!

நிவர் புயல் முழுவதுமாக கரையைக கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை நான்கு மணியளவில் புயல் முழுவதுமாக கரையைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிவர் அதிதீவிர புயல் வலுவிழந்து தீவிரப் புயலாக நிலப்பகுதியில் இருக்கிறது எனவும் அடுத்த சில மணி நேரங்களில் தீவிரப் புயல் வலுவிழந்து புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் நேற்று இரவு 11.30 மணிமுதல் இன்று அதிகாலை நான்கு மணிக்குள் நிவர் புயல் முழுவதுமாக கரையைக் கடந்துவிட்டது என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், 100 சதவீதம் பாதுகாப்புடன் புயலைக் கடந்திருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று வடதமிழகத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/நிவர்-புயல்-முழுமையாக-கர/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.