Jump to content

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்

Recommended Posts

2 hours ago, Kavi arunasalam said:

spacer.png

மக்களை ஆட்டு மந்தைகள் என்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் கூறுவதை, இந்தக் கழுகு கேட்டு அது உண்மை என்று எண்ணிவிட்டது.😲

ஆடுகள்

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்று குணா கவியழகனின் புதிய அரசியல் காணொளியொன்று வெளிவந்திருந்தது. அதன்படி வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இன்றைய தமிழ்த் தலைமுறையினர் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக, சிங்கள அரசுக்கு வாக்குகளை அள்ளி வழங்கும் வாக்கு வங்கிகளாக, தமிழர்களின் அரசியலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, அபிவிருத்தி, விளையாட்டுக்கள், சலுகைகள் என்கின்றவற்றின் பின்னால் அலைகின்ற ஒரு மந்தைகள் கூட்டமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று மிக அருமையாக விளக்கியிருந்தார். 

அத்துடன் இவ்வாறான இன்னொரு காணொளியில் மாவீரர்களையும் போராளிகளையும் தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்தி, அவர்கள் தொடர்பான மிகவும் கேவலமான விம்பத்தை உருவாக்கி, அவர்கள்பற்றிய நினைவுகள் தமிழர்களிடையே முற்றாக அழிக்கப்படுவதற்கு இன்று சிங்களப் பேரினவாதம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறதென்றும், அத்துடன் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்படும் முன்னாள் ஒட்டுக்குழுக்களை தமிழர்களின் பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்துவதன் மூலம் தமிழர்களிடையே அரசுக்குச் சார்பான மனநிலையொன்றினை உருவாக்க முயல்கிறதென்றும் கூறியிருந்தார்.

இது எவ்வளவு உண்மையானதென்பது இன்று புரிகிறது. தமது சொந்த இச்சைகளுக்காக தான் சேர்ந்த  இனத்தின் விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்து, அதனை அழித்து, மக்களை நிரந்தர அடிமைகளாக அவர்களை அழித்தவனிடமே கையளித்து நிற்பவர்களை வீரர்களாக, உதாரண புருஷர்களாக, மக்களின் காவல்தெய்வங்களாக வழிபட இன்று சலுகைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும் அலைபவர்கள் முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். உரிமைகளும், அரசியல் ரீதியிலான தீர்வும், தாயகமும் வேண்டாம் என்று வெளிப்படையாகப் பேசும் இக்குழுவினர் சிங்களப்பேரினவாதத்தினை வெளிப்படையாகவே ஆதரிப்பதோடு, அதனது அடிமைகளான முன்னாள் கொலைக்குழுக்களின் பின்னால் செல்வது எமதினத்தின் சாபமேயன்றி வேறில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

என்னைப்பொறுத்தவரை என்றுமே இல்லாத அளவு 
பலம் இப்போதான் ஈழ தமிழருக்கு குவிந்து கிடக்கிறது 
அதை சரியான பாதையில் பயன் படுத்த தெரியாத ஒரு 
அடிமுட்டாள் இனமாக நாம் இருக்கிறோம்.

சிங்களவனே உலகமயமாதலில் சிங்களத்தை காக்க 
ஓடி திரியும் காலம் வந்துகொண்டு இருக்கிறது 
இலங்கையின் தலைவிதியை நிர்ணயிப்பவன் இப்போ சிங்களவன் இல்லை 
அது கை மீறி போய்விட்டது இதை சரியான பாதையில் 
பயன்படுத்த உலக தமிழரிடம் ஒரு உரிய தலமை  இல்லை 

தமிழ்நாட்டு அரசியலில் பா ஜ க கால் ஊன்றினால் 
தமிழ் நாடு சேறுதான் ... சேற்றில்தான் தாமரையை மலர செய்யலாம். 

ஆயுத போரில் பாரிய வெற்றி கண்டோம் 
சைகொலோஜி போரில் .... இவ்வாறு ஒன்று நடக்கிறது என்றே 
தெரியாமல் தமிழ் மொழி அழிந்து போகுமோ? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

ஆகவே இதற்குள் எந்தவொரு அரசியல் பின்ணணிகளும் எவ்வித உந்துசக்திகளும் இல்லையென அறுதியிட்டு கூறுகின்றீர்கள்?

இலங்கை அரசின் அரசியலை சொல்லவும் முடியாது எதிர்வு கூறவும் முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

இன்று குணா கவியழகனின் புதிய அரசியல் காணொளியொன்று வெளிவந்திருந்தது. அதன்படி வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இன்றைய தமிழ்த் தலைமுறையினர் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக, சிங்கள அரசுக்கு வாக்குகளை அள்ளி வழங்கும் வாக்கு வங்கிகளாக, தமிழர்களின் அரசியலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, அபிவிருத்தி, விளையாட்டுக்கள், சலுகைகள் என்கின்றவற்றின் பின்னால் அலைகின்ற ஒரு மந்தைகள் கூட்டமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று மிக அருமையாக விளக்கியிருந்தார். 

அத்துடன் இவ்வாறான இன்னொரு காணொளியில் மாவீரர்களையும் போராளிகளையும் தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்தி, அவர்கள் தொடர்பான மிகவும் கேவலமான விம்பத்தை உருவாக்கி, அவர்கள்பற்றிய நினைவுகள் தமிழர்களிடையே முற்றாக அழிக்கப்படுவதற்கு இன்று சிங்களப் பேரினவாதம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறதென்றும், அத்துடன் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்படும் முன்னாள் ஒட்டுக்குழுக்களை தமிழர்களின் பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்துவதன் மூலம் தமிழர்களிடையே அரசுக்குச் சார்பான மனநிலையொன்றினை உருவாக்க முயல்கிறதென்றும் கூறியிருந்தார்.

இது எவ்வளவு உண்மையானதென்பது இன்று புரிகிறது. தமது சொந்த இச்சைகளுக்காக தான் சேர்ந்த  இனத்தின் விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்து, அதனை அழித்து, மக்களை நிரந்தர அடிமைகளாக அவர்களை அழித்தவனிடமே கையளித்து நிற்பவர்களை வீரர்களாக, உதாரண புருஷர்களாக, மக்களின் காவல்தெய்வங்களாக வழிபட இன்று சலுகைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும் அலைபவர்கள் முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். உரிமைகளும், அரசியல் ரீதியிலான தீர்வும், தாயகமும் வேண்டாம் என்று வெளிப்படையாகப் பேசும் இக்குழுவினர் சிங்களப்பேரினவாதத்தினை வெளிப்படையாகவே ஆதரிப்பதோடு, அதனது அடிமைகளான முன்னாள் கொலைக்குழுக்களின் பின்னால் செல்வது எமதினத்தின் சாபமேயன்றி வேறில்லை. 

 அபிவிருத்தி, விளையாட்டு, சாதாரண வாழ்க்கை என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போர் எங்கள் இனத்தின் சாபம் அல்ல! அவர்கள் சூழ் நிலைக்கேற்ப உயிருடன் கௌவரமாக வாழ நினைக்கும் மக்கள் என்பதே சரியான கணிப்பு.

சாபம், இதைப் புரிந்து கொண்டு அபிவிருத்தியை, சாதாரண வாழ்வை மக்களுக்கு வழங்க முயலாத எங்கள் அரசியல் தலைமைகள் தான்.

நீங்கள் காரணத்தை மறந்து விட்டு, துலங்கலை மட்டும் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என நான் கருதுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இவர்கள் அடுத்த சந்ததி என சொல்கிறவர்களை பார்த்தால் இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவம் ஆட்சேர்ப்பு  நடத்தியது மட்டு அம்பாறையில் பல ஆயிரக்கணக்கானவர் நேர்முகத்தேர்வுக்கு சென்று பங்கு பற்றி அழைப்புக்கு காத்திருக்கிறார்கள் நாளை இலங்கை ராணுவம் என இந்த தமிழ் ராணுவத்தினரையும் சேர்ந்து திட்டுவார்கள். 

ஆக பிறகு இவர்களை மகிந்த கோட்டாவின் ஆமிகள் என்று சொன்னாலும் சொல்வார்கள் இளம் சமுதாயம் என்னத்தை தேடுகிறது . இவர்கள் என்னத்தை இன்னும் தேட நினைக்கிறார்கள் என இன்னும் புரியவில்லை நாளை மறுநாள் அக்கறைப்பற்றில் நேர்முகப்பரீட்சை இருக்கிறது அதிலும் பல ஆயிரம் செல்ல இருக்கிறது 

படங்கள் இன்னும் இணைக்கமுடியாமல் உள்ளது   யாழ் புதிய மாற்றத்தின் பின்
அதில் பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள் அதானால் நான் இணைக்க விரும்பவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

அபிவிருத்தி, விளையாட்டு, சாதாரண வாழ்க்கை என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போர் எங்கள் இனத்தின் சாபம் அல்ல! அவர்கள் சூழ் நிலைக்கேற்ப உயிருடன் கௌவரமாக வாழ நினைக்கும் மக்கள் என்பதே சரியான கணிப்பு.

சாபம், இதைப் புரிந்து கொண்டு அபிவிருத்தியை, சாதாரண வாழ்வை மக்களுக்கு வழங்க முயலாத எங்கள் அரசியல் தலைமைகள் தான்.

அபிவிருத்திக்காகவும் சலுகைகளுக்காகவும் அவர்கள் கொடுக்க விரும்பும் விலை என்னவென்று நினைக்கிறீர்கள்? சிங்களவனிடம் பிச்சையெடுத்து அடிமைகளாகப் போனபின்னர் எதைக் கெளரவம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

மக்களுக்கு அபிவிருத்தியை வழங்கமுடியாத உங்களின் அரசியல்த் தலைமகள் யார் ? 

இனத்தைக் காட்டிக்கொடுத்தவர்களை பூஷிக்கும் சிலருக்காக பரிந்துபேசும் உங்களுக்கு அவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல்ப் போனது ஆச்சரியம்தான். 

23 minutes ago, Justin said:

நீங்கள் காரணத்தை மறந்து விட்டு, துலங்கலை மட்டும் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என நான் கருதுகிறேன். 

காரணம் ஒன்றுதான் : துரோகம்

துலங்கல் : மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் துரோகிகள் பின்னால் போவது.

இதில் நான் தெளிவாகவே இருக்கிறேன். 

உங்களுக்கு தமிழ்த் தேசியத்தைத் திட்டவும் வசைபாடவும் களம் வேண்டும். ஆகவே துரோகிகளுக்கும், அவர்களின் வால்களுக்கும்  ஆதரவாகப் பேசுகிறீர்கள். இதில் நான் எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை, தொடருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

அப்படி யாரும் உங்கள் கருத்தை மறுதலித்ததாக தெரியவில்லை இருந்தாலும் நாட்டின் காட்டுச் சட்டத்தை அறியாத விடலைகள் யாரும் கூறியிருக்கலாம் அதை விடுங்கள்.

சுமந்திரன் வாதாடியது யாருக்காக?

யாழ் களத்தில் மறுதலித்தவர்கள் இருக்கிறார்கள் தேடி பாருங்கள்.  தேடினேன் கிடைக்கவில்லை எந்த திரியென கேஸ் போட்டவர் ஏன் பிணை கொடுக்கிறீர்கள் என யோசப்பரராஜசிங்கம் ஐயாவின் மனைவியின் சார்பாக வாதாடினார் ஆனால் அது நிராகரிக்கப்பட்டது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய சிங்க இராணுவத்தினர் பார்த்திட்டே இருங்கள் கனவுலகில் வாழ்பவர்கள் இவர்கள் அனைவரும் சிங்கள இராணுவத்தினர் அல்ல 

சம்பிள் ஒன்று 

தலைவர் தன் கனவை வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளுக்கு மட்டுமே கொடுத்து விட்டு போய்விட்டார் அதுதான் இன்றைய நிலையில். நாளை வெளிநாடுகளிலிருந்து ஊர் சுற்ற வருபவர்களை சோதனைசெய்பவர்கள் இவர்களாக கூட இருக்கலாம் பரவாயில்லை தமிழில் கதைக்க இலகுவாக இருக்குமென நான் நினைக்கிறன். சிங்கள இராணும் என திட்டமாட்டார்கள்.   

Untitled

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

அபிவிருத்திக்காகவும் சலுகைகளுக்காகவும் அவர்கள் கொடுக்க விரும்பும் விலை என்னவென்று நினைக்கிறீர்கள்? சிங்களவனிடம் பிச்சையெடுத்து அடிமைகளாகப் போனபின்னர் எதைக் கெளரவம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

மக்களுக்கு அபிவிருத்தியை வழங்கமுடியாத உங்களின் அரசியல்த் தலைமகள் யார் ? 

இனத்தைக் காட்டிக்கொடுத்தவர்களை பூஷிக்கும் சிலருக்காக பரிந்துபேசும் உங்களுக்கு அவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல்ப் போனது ஆச்சரியம்தான். 

காரணம் ஒன்றுதான் : துரோகம்

துலங்கல் : மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் துரோகிகள் பின்னால் போவது.

இதில் நான் தெளிவாகவே இருக்கிறேன். 

உங்களுக்கு தமிழ்த் தேசியத்தைத் திட்டவும் வசைபாடவும் களம் வேண்டும். ஆகவே துரோகிகளுக்கும், அவர்களின் வால்களுக்கும்  ஆதரவாகப் பேசுகிறீர்கள். இதில் நான் எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை, தொடருங்கள். 

ஏன் இவ்வளவு கோபக் கனல் ரஞ்சித்? இங்கே , யார் துரோகத்திற்குப் பரிந்து பேசியது? தேசியத்தைத் திட்டியது? நீங்கள் இப்படிக் கொதிப்பதற்கு?🤔

தாயக மக்கள் எடுத்திருக்கும் தேர்தல்/அரசியல் முடிவுகள் அவர்களது வாழ்வு சம்பந்தப் பட்டவை. இங்கே கிழக்கில் இருந்தும் புலத்தில் இருந்தும் எழுதும் சில உறவுகள் மீண்டும் மீண்டும் இதற்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றனர். வலுவான அந்தக் காரணங்களை உதாசீனம் செய்து விட்டு  அந்த மக்கள் இனத்தின் சாபக்கேடென்றால், எங்கே தான் தமிழினத்தை நிலைக்கச் செய்வதாக உத்தேசம்? புலத்திலா? தமிழகத்திலா? 

முதலில் உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் தூக்கியடிப்பதை நிறுத்தினாலே ஏனையவர்களின் முடிவுகளை புரிந்து கொள்ளும் இயலுமை வரும். அது இல்லையேல் இப்படித் திட்டிக் கொண்டே இருக்க வேண்டியான்! யாருக்கு என்ன பயன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாளைய சிங்க இராணுவத்தினர் பார்த்திட்டே இருங்கள் கனவுலகில் வாழ்பவர்கள் இவர்கள் அனைவரும் சிங்கள இராணுவத்தினர் அல்ல 

இப்படியானவர்களைக் கருணாவின் பின்னாலும், பிள்ளையானின் பின்னாலும் நன்றாகவே பார்த்தாயிற்று. இதில் பார்த்து ஆச்சரியப்படவோ, கவலைப்படவோ ஏதுமிருப்பதாக நினைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

இப்படியானவர்களைக் கருணாவின் பின்னாலும், பிள்ளையானின் பின்னாலும் நன்றாகவே பார்த்தாயிற்று. இதில் பார்த்து ஆச்சரியப்படவோ, கவலைப்படவோ ஏதுமிருப்பதாக நினைக்கவில்லை. 

நாளை தேர்தலில் இன்னும் வாக்குகள் அதிகமாக பெற்றால் அதையும்கள்ள வாக்குகள் என்று சொல்லாமல் இருப்பது நல்லது 

நன்றி கிழக்கை புரிந்து கொண்டதற்கு விரைவில் வடக்கையும் புரிந்து கொள்ள வாய்ப்புக்கள் அமையலாம் ரகுநாதன் அப்போது யாரை சொல்வீர்கள் என பார்ப்போம் ( அங்கஜன், டக்ளஸ்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் 50% தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கு என்றில்லாமல் நிலைமை 180 டிகிரியில் மாறிவிட்டது.

இன்னும் 30% கூட்டமைப்பு அரசியலை நம்பி நிற்க,

ஒரு 20% இன்னும் முன்பைபோல உக்கிரமாக விக்கி, கஜன்ஸ் பின்னால் நிற்கிறது.

இந்த உண்மையை நாம் உணராதமட்டில், வெளிநாட்டில் இருந்து புலம்ப மட்டும்தான் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  . சிங்களவனிடமிருந்து தமிழர்களை காப்பாற்ற ஆயிரக்கணக்கில் போராளிகளை ஈந்த அந்த மண் இன்று முஸ்லீம்களிடமிருந்து நம்மை காப்பாற்ற யாரும் வருவார்களா என்று தவிக்கிறது.

வெளிநாட்டு தமிழர்களை மிக குறைவாகவே கொண்ட அந்த தமிழர் தேசம் உதவிகள் ஏதுமின்றி யுத்தகாலத்தில் இருந்த அதே நிலமையில் வறுமையுடனும் வாழ்க்கையுடனும் போராடுகிறது.  பிழைப்புக்கு வழியின்றி எந்த ராணுவத்தால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்களோ அதே ராணுவத்தில் இணைந்து வயிற்றைக் கழுவ ஆயிரக்கணக்கில் இணைய தயாராயிருக்கிறது.

பிரதேசவாதத்தை கிளப்பி கிழக்கு மக்களை ஒன்றுபட்ட தாயக உணர்விலிருந்து  அந்நியபடுத்திவிடலாம் என்று கனவுகண்ட கருணாவே வாய்விட்டு புலம்பும் அளவிற்கு அவர்களை புறக்கணித்து தமிழ்தேசிய கூட்டமைப்பை தேர்வு செய்திருக்கிறது, ஆனால் அவர்கள அந்த மக்களுக்காக ஆற்றிய துயர் துடைப்புதான் என்ன?

மண்டையன்குழு என்ற பெயரில் பல படுகொலைகளையும் படுபாதக செயல்களையும் செய்து  தமிழர் தாயகத்தை இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கு காட்டிக்கொடுத்து , அசோகா ஹோட்டலில் பல போராளிகளையும் , ஆதரவாளர்களையும் அடித்தே கொன்று மலகுழியில் போட்டு மூடி மிலேச்சத்தனமான வாழ்வு வாழ்ந்த சுரேஷ் பிரேமசந்திரனை புலிகள் கூட காலத்தின் தேவை கருதி தமிழ்கூட்டமைப்புக்குள் உள்வாங்கி கிளிநொச்சியில் தலைவர் முன்னாடியே அமர செய்து பேசியதும்,

இன்று புலிகள்மீதும் தமிழர்மீதான அராஜகம்மீதும் உச்சம் தொட்ட அவரை   வடபகுதி மக்கள் மன்னித்து அவரை தமிழர் தாயக பிரதிநிதிகளில் ஒருவராய் ஏற்றுக்கொண்டதுமான நிலமை இருக்கும்போது,

சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் வறுமைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்கள்  பிள்ளையானை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதில் என்ன தவறு இருக்க போகிறது?

 வெளியார் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு அவர்கள் தமக்கான ஒரு வாழ்வை தேட தொடங்கிவிட்டார்கள்  அதனை நாங்கள்  விமர்சிக்க முடியும் ஆனால் அவர்கள் முடிவை தடுக்க முடியாது.

இங்கே பிள்ளையானுக்கும் மண்டையனுக்கும் உள்ள வேறுபாடு அவர் வேறு இயக்கத்திலிருந்தார், ஆனால் பிள்ளையான் புலிகளுக்குள் இருந்தே போராட்டத்தை உடைத்தார்.

சுரேஷ்பிரேமசந்திரனை நாங்கள் நம்பி இருந்ததில்லை, ஆனால் பிள்ளையான்மீது ஒருகாலம் நம்பிக்கை வைத்திருந்தோம், அந்த நம்பிக்கைக்கு அவர் செய்த துரோகமே இன்றுவரை வலியாக புலம்பெயர் தமிழர் மனசில் தொடர்கிறது, அது எந்த காலமும் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகவே மனசில் இருக்கும்

அதே நேரம் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர் புலிகளின் புலம்பெயர்  பிரதிநிதிகளாய் வலம்வந்த பலர் எந்த துரோகமுமே பண்ணவில்லையா என்ன?

இது துரோகத்துக்கான ஆதரவல்ல, ஆனால் எங்களாலும் அந்த மக்களுக்கு ஏதும் பண்ண முடியவில்லை, அவர்களாக ஏதும் முடிவெடுத்தால் அதையும் ஏற்றுகொள்ளும் நிலையில் இல்லையென்றால் கிழக்கு 100% இஸ்லாமியர்களின் தேசமாகவும், இஸ்லாமியர்களிடம் கையேந்தும் பிரதேசமாகவும்,கனக லட்சுமி கறுப்பு துணியை தலையில் கட்டிக்கொண்டு கலீமாவாகவும், முகுந்தன் மீசையை மழித்துவிட்டு தாடி மட்டும் வைத்துக்கொண்டு முஹமதுவாகவும் மாறபோவதைஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தயாராகவே இருக்கவேண்டும்.

அதற்காக பிள்ளையான் வந்து பெரிய விடிவை அந்த மக்களுக்கு தருவார் என்றில்லை அதை அவர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள், ஆனால் வேறு வழி ,தலைமை ஏதும் அவர்களுக்கு இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் அநியாயங்கள் நடக்கும் என்று தான் சிலதுகளை இயக்கம் போடுறது. போட்டதுகளும்.. மிஞ்சி இருந்திருந்தா.. தமிழன் புழுதி தான் மிஞ்சி இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, valavan said:

கொஞ்சம் நீளமாக எழுதி இருந்தாலும் -ரத்தினச்சுருக்கம். இதைவிட யதார்தத்தை தெளிவாக எழுதிவிட முடியாது.

ஆனால் இவர்களும் அந்த மக்களை பேய்காட்டத்தான் போகிறார்கள்/பேய்காட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, valavan said:

வெளியார் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு அவர்கள் தமக்கான ஒரு வாழ்வை தேட தொடங்கிவிட்டார்கள்  அதனை நாங்கள்  விமர்சிக்க முடியும் ஆனால் அவர்கள் முடிவை தடுக்க முடியாது

  விமர்சனம் கூட ஆற்றாமையால்தான் வருகின்றது. மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளவேண்டும், அவர்களை எப்படி நீண்டகால ரீதியில் தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கச் செய்யலாம் என்ற சிந்தனை இல்லாமல் முத்திரை குத்துவது மிகவும் ஆபத்தானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2020 at 19:48, nedukkalapoovan said:

ஒரு பெண்ணின் கக்கூசுக்காக. பிள்ளையான் நல்லவர். பல பெண்களின் விதவைக் கோலத்துக்கு காரணமான அதே பிள்ளையானும் நல்லவரிலும் நல்லவர். உலகம் எப்படி எல்லாம் மாற்றி யோசிக்கும்....

நினைச்சால் தலை சுத்துது. 

கிழக்கு மாகாண தொகுதிகளில் அன்று தொடக்கம்  அதாவது 50 வருடங்களாக கட்சிமாறி ஆளும் கட்சியில் சேர்ந்தவர்கள் பல தமிழர்கள். அவர்கள் சொன்ன ஒரே காரணம் கிழக்கு அபிவிருத்தி....அபிவிருத்தி அபிவிருத்தி என்பது மட்டுமே. அப்படியிருந்தும் இது வரைக்கும் கக்கூஸ் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லையெனில்........?

இப்போது பிள்ளையான் கண்கண்ட தெய்வமாக தெரிகின்றார்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, trinco said:

சிறை மீண்ட செம்மல் பிள்ளையான் வாழ்க.😃😃😃

வணக்கம்வணக்கம் வாங்கோ🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கிழக்கு மாகாண தொகுதிகளில் அன்று தொடக்கம்  அதாவது 50 வருடங்களாக கட்சிமாறி ஆளும் கட்சியில் சேர்ந்தவர்கள் பல தமிழர்கள். அவர்கள் சொன்ன ஒரே காரணம் கிழக்கு அபிவிருத்தி....அபிவிருத்தி அபிவிருத்தி என்பது மட்டுமே.

அபிவிருத்தி என்கிற மாயையை காட்டி, ஓநாய்களை தலைவர்களாக்கி மந்தையை தன் பட்டியில் அடைப்பதே எதிரியின் குறிக்கோள். விடுதலைப் போர் நடந்த காலத்திலிருந்து தொடங்கிய தந்திரம் இன்று பெருமையாக பேசும் அளவுக்கு வெற்றிகண்டுள்ளான். அவனது வெற்றிக்கு சிங்களவன் மட்டுந்தான் உழைத்தானா? இல்லையே நாம்தானே நம்மையே ஏமாற்றி  அவனுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தோம். நீங்கள் சொன்னதுபோல் சுதந்திரம் என்கிற அடிமைச்சீட்டை பெற்ற நாளிலிருந்தது அபிவிருத்தி என்று ஓடி அதைக் கண்டுபிடித்தோமா? அப்படியென்றால் நாங்கள் சிங்கப்பூரை வென்று பல தசாப்தம் ஆகியிருக்க வேண்டுமே? தலைவர்களின் வங்கிக் கணக்குகளும், குடும்பமும் அபிவிருத்தி கண்டிருக்கலாம். சாதாரண மக்கள் வெறும் வயித்தோடும், மலசலகூட வசதியில்லாமலும் விலங்குகளைப்போல அலைந்து கொண்டிருக்கிறோம். அபிவிருத்தியில்  தன்னிறைவு கண்டு தென்னாட்டுக்கு உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்தவனை பொறாமையால் இரும்புக்கரம் கொண்டு அழித்துவிட்டு, உரிமைகளை பறித்து அடிமையாக்கி இப்போ  அபிவிருத்திப் பாடம் எடுக்கினம். இனிமேல்  இழக்க எதுவும் இல்லாத நாம் எமது வாக்கை கொடுத்து அபிவிருத்தி வண்டி வருமென்று காத்திருக்கிறோம். எதிர் காலத்தில் அடுத்த சந்ததியும் சேர்ந்து இருக்கும். அடிமையாக்கப் பட்டவன் எல்லாம் அடிபணிந்து இருக்க வேண்டும் என்று  உபதேசம் செய்ய யாருக்கும் உரிமையில்லை. அனுபவிக்கும் அவமானம், விரக்தி, வலி, கோபம்  சாகடிக்கப்படுவேன் என்று தெரிந்தும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படுத்துகிறார்கள். அவன் குருதியில் ஊறியதை குற்றம் சொல்ல யாராலும் முடியாது.  

Link to comment
Share on other sites

16 hours ago, விசுகு said:

வணக்கம்வணக்கம் வாங்கோ🙏

வணக்கம் விசுகு. 🙏🏻  வாங்கோ என்று அழைப்பது என்னையா பிள்ளையானையா.😂😂😂சும்மா பகிடி. கோவிக்காதீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2020 at 04:34, தனிக்காட்டு ராஜா said:

யாழ் களத்தில் மறுதலித்தவர்கள் இருக்கிறார்கள் தேடி பாருங்கள்.

தேடிப்பார்த்தேன் யாரும் அப்படி எழுதியதாக, இருப்பதாக தென்படவில்லை. ஒருவேளை இன்னும் நாட்டில்  நீதி மிச்சம், மீதி இருக்கென்று நினைப்பவர்கள் யாரும் எழுதியிருப்பார்கள். ஆனால் நாட்டில் அநீதி பிழைக்கும் என்று எழுதியிருந்தீர்கள் பாருங்கள் அதுதான் முக்கியம் இங்கு.  நீங்கள் ஒரு தீர்க்கதரிசி, ஒப்புக்கொள்கிறேன் இப்போது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2020 at 04:42, தனிக்காட்டு ராஜா said:

நாளைய சிங்க இராணுவத்தினர் பார்த்திட்டே இருங்கள்

அது அவரவர் சந்தர்ப்பம், சூழ்நிலை, தேவை எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டு அடக்கியாள்பவனுக்கு ஸ்துதி பாடவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, வற்புறுத்தவும் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, satan said:

அது அவரவர் சந்தர்ப்பம், சூழ்நிலை, தேவை எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டு அடக்கியாள்பவனுக்கு ஸ்துதி பாடவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, வற்புறுத்தவும் கூடாது.

புழு பூச்சி கூட தன்னை மிதிப்பவர்களை தனது வலுவுக்கு ஏற்ப தாக்கும். இதனை நான் இப்பவும் பார்க்கிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.