-
Tell a friend
-
Topics
-
Posts
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, புரட்டாதி 2007 கருணா துணைப்படைக் கூலிகளின் துன்புறுத்தல்களுக்கெதிராக மட்டக்களப்பு மீனவர்கள் போராட்டம் மட்டக்களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் குறைந்தது 300 மீனவர்கள் தமது மீன்களை கருணா துணைப்படைக் கூலிகள் மிகக் குறைந்த விலைக்கு எடுத்துச் செல்வதாகவும், சிலவேளைகளில் பணம் கொடாது பறித்துச் செல்வதாகவும் கூறி, இந்த நடவடிக்கைகளை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு துணைப்படைக் கூலிகளால் தமது மீன்கள் எடுத்துச் செல்லப்படுவதால் தமது நாளாந்த வருவாய் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் வாழ்க்கையினை கொண்டுசெல்வது கடிணமானதாக மாறிவருவதாகவும் அவர்கள் முறையிட்டுள்ளனர். அத்துடன், துணைப்படைக் கூலிகளின் அச்சுருத்தலினால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும், தமது உயிர் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளதால், தாம் தொழிலைக் கைவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர். துணைப்படைக் கூலிகளால் பாதிக்கப்பட்ட இந்த மீனவர்கள் கல்லடியில் அமைந்துள்ள தேசிய மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடம் தமது முறைப்பாட்டினப் பதிவுசெய்துள்ளனர். மூன்று நாட்களாக மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாது போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் மட்டக்களப்பில் மீன்களின் விலை அதிகரித்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமது உயிருக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தினை அரசு வழங்கும்வரை தாம் மீண்டும் தொழிலுக்குச் செல்லப்போவதில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
-
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்..? இதுதான் யதார்த்தம். அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா..? இந்த பணத்தாள் மிகவும் தெளிவாகக் கூறுகிறது, தமிழர் இரண்டாம்தரப் பிரசைகள் என்று
-
By மல்லிகை வாசம் · Posted
'பொன்னியின் செல்வன்' நாவலாசிரியர் கல்கியின் அருமையான வரிகளிலும், நித்யஶ்ரீ மகாதேவனின் தேன் குரலிலும்... பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் மாமயில் மீது மாயமாய் வந்தான். பொன்முகம் அதனில் புன்னகை பொங்க இன்னமுதென்ன இன் மொழி பகர்ந்தொரு மின்னலைப்போலே...மறைந்தான். பனி மலரதனில் புது மணம் கண்டேன் வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன் தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன் தனிமையில்...இனிமை கண்டேன். வீரவேல் முருகன் மீண்டும் வருவான் வள்ளி மணாளன் என்னை மறவான் பேரருளாளன் எனக்கருள்வானெனும் பெருமிதத்தால் மெய் மறந்தேன்! -
By goshan_che · Posted
அரேபியர்கள் நேரடியாக அவுஸ் வந்திருக்க எல்லா சாத்தியப்பாடும் உள்ளது. இந்தோனேசிய தீவுக்கூட்டம்/மலாயா முழுவதும் சிறி விஜய என்ற ஒரு கடற் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்தாயும், இந்த பேரரசை இன்றைய மலேசியாவின் Kedai துறைமுகத்தில் ராஜேந்திர சோழனின் கப்பற்படை வென்றதாயும் வரலாறு சொல்கிறது. கெடாய்தான் தமிழில் கடாரம். விஜய சாம்ராஜ்யம் சுருங்க அங்கே சோழரின் மறைமுக ஆளுகை ஏற்பட்டு துறைமுக நகரங்களில் chamber of commerce போல் தமிழ் வர்த்தக சங்கங்களை உருவாக்கி வர்தகத்தை தமது கட்டுபாட்டில் வைத்திருந்தார்களாம். அப்போது மலாய் மொழியை எழுத தமிழ் பல்லவ எழுத்தே பாவிக்கப்பட்டதாம். பின்னர் சோழர்கள் பலம் குன்ற அரேபிய மாலுமிகள் அந்த இடத்தை பிடிக்கிறார்கள். மலாய் மொழியும் அரபி எழுத்தில் எழுத பட தொடங்குகிறது. இந்த வகையில் அவுஸ்ர்ரெலிய கண்டத்தின் வட கரைக்கு மிக அண்மையாக வந்த அரேபியர்கள் அங்கே வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்தான். அதே போல் சோழர்களும் அதற்கு முன்பே கூட வந்திருக்கலாம். வடக்கு அவுஸில் இப்போதும் நமது ஆட்கள் தங்க விரும்பாமை போல், சோழர்களும், அரேபியர்களும் அங்கே தரித்திருக்க விரும்பியிரார் என்பதும் ஊகிக்க கூடியதே. -
By ஈழப்பிரியன் · Posted
நடராஜன் விளையாடிய முதல் போட்டி என்பதால் இந்தியா வெற்றி பெற விரும்பினேன். அத்துடன் கோலியும் இல்லாமல் வென்றது இன்னும் சந்தோசம். ஓட்டங்கள் எடுக்காவிட்டாலும் அவுஸ் வீரர்களுக்கு நன்றாகவே பிரசர் ஏத்தியிருப்பார் .
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.