Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்கள்

Maaveerar-Thuyilum-Illam-3.jpg

கோயில்கள்

மேசை மணிக்கூட்டின் அலாரம் பயங்கரமாக அலறியது. யோகன் திடுக்கிட்டு கண் விழித்தான். அவனுக்கு அதை அடித்து உதைக்க வேணும் போல் இருந்தது. ‘நான் முறுக்கி விட்டாலும் நீயேன் அடிப்பான்’ என்பது போல் அதனைப் பார்த்தான். மறுகணம் அவனுக்கு தன்னை நினைக்க சிரிப்புத்தான் வந்தது. நேரம் ஆறு மணியாகிவிட்டது. எழுந்து வெளியே வந்தான். வாசலில் அவனது தங்கை பேப்பர் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இவளிட்டை இருந்து பேப்பரைப் பறிக்க வேணும், இது மூதேசி எடுத்தது எண்டால் இண்டு முழுக்க வைச்சு வாசிக்கும்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவனின் மனதில் திட்டம் உடனடியாகத் தயாரானது.

“வாணி இஞ்சை பேப்பரைக் கொண்டு வா, ஓ.எல் சோதனைக்கு இரண்டு கிழமை கிடக்கு. விடிய எழும்பி பேப்பர் பார்க்கிறா… ஒடு போய்ப்படி…’ அவள் முணுமுணுத்தபடி உள்ளே செல்வதை இரசித்தபடி பேப்பரை எடுத்தான். அன்று மாவீரன் வாரத்தின் கடைசிநாள். பல கவிதைகள், படங்கள் பிரசுரமாகியிருந்தன. உள்ளே இருந்த தாளை எடுத்தான். அது… அவனது நண்பன் ரவியின் படம். நெடிய வருடங்கள் ஓடிவிட்டன. யோகனின் நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.

அது அந்தத் தவணையின் கடைசி நாள். அவர்களது விடுதிப் பாசையில் அதை ‘லாஸ்ற் டே’ என்று சொல்லுவார்கள். அந்த இரவு அவர்களைப் பொறுத்தவரை ஒரு சுதந்திரமான இரவு. விடுதியின் சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக அன்றைய தினம் பற்பசையால் மீசை வைத்தல், கட்டிலுக்குப் பொறி வைத்தல், மை ஒற்றுதல் போன்ற ‘திருகுதாளங்களில்’ ஈடுபட மாணவர்கள் திரைமறைவில் அனுமதிக்கப்படுவார்கள். பொதுவாக அன்றைய சம்பவங்கள் பற்றி எந்த மாணவனும் விடுதிச்சாலை பொறுப்பாசிரியரிடம் முறைப்பாடு செய்வதில்லை. அப்படியான ஒரு இரவில் தான் ரவியும் யோகனும் தம்மை விட ஒரு வகுப்புக் குறைந்த பத்தாம் ஆண்டு மாணவர்களுக்கு மீசை வைப்பதற்கு திட்டமிட்டார்கள். திட்டத்தின் சூத்திரதாரி ரவி. திட்டத்துக்கான காரணம் ஒரு கிறிக்கெட் போட்டியில் ஏற்பட்ட ‘கொழுவல்’. ‘மச்சான் யோகன், உவைக்குச் சரியான லெவலடா, இண்டைக்குப்பார் என்ன செய்யிறனெண்டு’ இது ரவி. ‘என்ன செய்யப் போறாய்.’ ‘இரவைக்கு எல்லாருக்கும் மீசை வைக்கப்போறன்இ அதுவும்… பற்பசையாலை… நரைச்ச மீசை எப்படி ஐடியா?’

‘ஐடியா நல்லம் தான், எங்கட வகுப்புப் பெடியள் இன்னும் இரண்டு பேரைச் சேர்த்தால் என்ன?’

‘யோகன் அது பேய் வேலையாய்ப் போயிடும் மச்சான், இரண்டு பேர் காணும். நீ வாறியோ?’ என்று ரவி கேட்டதும் யோகன் உடனடியாக ஒப்புக்கொண்டு விட்டான். திட்டம் செயல்படுத்தப்படவேண்டிய இரவும் வந்தது. அவர்களும் விழிப்பாகத் தான் இருந்தார்கள்.

‘என்னடா செய்யிறது… அவங்கள் முழிச்சுக் கொண்டிருக்கிறாங்கள்? ‘என்ரை’ கசியோவில அலாரம் வைச்சிட்டு அதை காதுக்கருகில் வைச்சுக்கொண்டு கிடக்கப்போறன், விடிய 2:00 மணிக்கு அலாரம் அடிக்கும். அப்ப உவங்கள் படுத்திடுவாங்கள்’

ரவியின் திட்டமிடல்படி இருவரும் படுத்து விட்டார்கள். சரியாய் காலை 2:00 மணிக்கு ரவி யோகனை எழுப்பி விட்டான். இருவரும் எழுந்து பார்த்தனர். பத்தாம் ஆண்டு மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். பாவம் எவ்வளவு நேரம் தான் அவர்கள் விழித்திருப்பது?

‘யோகன் இந்தா பற்பசை. போய் மெயின் சுவிச்சை நிப்பாட்டிப்போட்டு வா’

‘மெயின் சுவிச்’ நிப்பாட்டப்பட்டதும், ‘மீசை வைத்தல்’ ஆரம்பமானது. திடீரென… ‘டேய் மீசை வைக்கிறாங்களடா எழும்புங்கோடா லைற்றைப் போடுங்கோ’ அது பத்தாம் ஆண்டு சுரேசின் அலறல். தொடர்ந்து தடபுட சத்தங்கள், ‘மெயினை ஓப் பண்ணிப் போட்டாங்கள்’ என்ற குரல்கள். யோகன் திகைத்துப் போய் விட்டான். பிடிபட்டால் எல்லோரும் சேர்ந்து துவைச்செடுத்துப் போடுவாங்கள்.

போடிங் மாஸ்ரரிடமும் முறையிட முடியாது. யோகன் கால் போன போக்கில் ஓடத்தொடங்கினான். பின்னால் பலர் கலைத்தனர். ஓடிப்போய் குளியலறைக்குள் புகுந்ததும் சரமாரியாக கல்வீச்சுக்கள் நடந்தன. இறுதியில் சரணடைய வேண்டி வந்துவிட்டது. ‘அண்ணைப்பிள்ளை வசமாக மாட்டியிட்டார்’ இது வாகீசனின் ஏளனக்குரல். ‘ஐயாவுக்கு இண்டைக்கு சாணித்தண்ணி அபிஷேகம் செய்ய வேணும்’ இது காந்தன். காந்தன் தான் பத்தாம் ஆண்டு மாணவர்களின் முடிசூடா மன்னன். இவனால் எதுவும் பேச முடியவில்லை. அபிஷேகம் நடக்கத்தான் போகிறது என்ற நிலையில் அபிஷேகத் திரவியங்கள் எல்லாம் தயாராகிவிட்ட நிலையில்…

‘டேய், விடியப்புறத்திலை மனிசரை நித்திரை கொள்ள விடமாட்டியள் போல கிடக்கு. என்னடா சத்தம்?’ அதட்டியபடி பதினோராம் ஆண்டு மாணவர்கள் புடைசூழ ரவி வந்து கொண்டிருந்தான்.

‘இவர் எங்களுக்கு மீசை வைச்சவர்’ வாகீசனின் குரல் ஈனஸ்வரமாக ஒலித்தது.

பலத்த வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இறுதியிலி ரவி சொன்னான்,

“அவன் மீசை வைச்சால், நீங்களும் மீசை வையுங்கோ. அதைவிட வேறை ஏதாவது செய்தால் பிரச்சினை வரும்”

வேறு வழியின்றி யோகனுக்கு மீசை வைப்பதுடன் சடங்கு பூர்த்தியாகிவிட்டது. எல்லாம் முடிந்ததும் யோகன் ரவியிடம் மெதுவாகக் கேட்டான்,

‘நீ என்னெண்டடா தப்பினனீ?’ ‘அவங்கள் எழும்பினதும் நான் பக்கத்தில கிடந்த வெறும் கட்டில் ஒன்றில் நித்திரை போலக் கிடந்திட்டன்’

யோகன் அவனை அதிசயமாகப் பார்த்தான்.

Maaveerar-Thuyilum-Illam-1.jpg

‘ரவி இயக்கத்துக்கு போட்டானாம்’ இரண்டாம் தவணைக்காக பெட்டி படுக்கைகளுடன் விடுதிக்கு வந்தவனின், காதில் விழுந்த முதல் செய்தி இது தான்.

‘எந்த இயக்கம்?’ ‘ரைகேஸ்’ ‘சீ… எனக்குக் கூடச் சொல்லாமல் போட்டான்’ என்று யோகன் சொல்லிக் கொண்டான். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் மாலை ரவி விடுதிக்கு வந்திருந்தான். சற்றுக் கறுத்து, மெலிந்து, முழங்கைகளில் உரசல் காயங்களுடன் அவனைப் பார்க்க யோகனுக்குப் புதுமையாக இருந்தது. கதையோடு கதையாகக் கேட்டான்,

‘என்ரா நீ எனக்குச் சொல்லாமல் போனனீ?’

‘உனக்குச் சொல்லுறதென்றால் கடிதம் போடவேணும். இதைப்பற்றி எழுதுகிற கடிதம் ஆமியிட்டை அகப்பட்டால், அதுவும் உங்கட ஊரிலை அவன் ரோந்து திரியுறவன். கடைசியா உனக்குத்தான் ஆபத்து…’ யோகனுக்குக் கண்கள் பனித்தன. எவ்வளவு ஈரநெஞ்சம் இவனுக்கு? இப்படியான ஈரநெஞ்சம் உள்ளவர்களால்தான் தங்களையிழந்து மற்றவர்களுக்காகப் போராட முடியும் என யோகன் நினைத்தக் கொண்டான்.

அது தமிழீழத்தின் வரலாற்றில் ஒரு இருள் சூழ்ந்த காலப்பகுதி. ஆம்… இந்திய தேசத்து எருமைகளின் பாதக்குளம்பில் அகப்பட்டு தமிழீழம் இரத்தச்சேறாகிக் கொண்டிருந்தது. அப்படியான ஒரு நாளில் ஒரு மாலைப்பொழுதில் புத்தகங்களுடன் போராடிக் கொண்டிருந்தவனின் காதில் யாரோ கூப்பிடுவது கேட்டது. எட்டிப்பார்த்தான். ரவி நின்றுகொண்டிருந்தான்.

‘உள்ளுக்க வா மச்சான்’ உள்ளே அழைத்தவன், ரவியைப் பார்த்துக் கேட்டான்,

‘என்னெண்டடா வந்தனீ? உது வழிய எல்லாம் அவங்கள் திரியிறாங்கள்’

‘நான் இருக்கிற ஏரியா ரவுண்டப்’ அது தான் வெளிக்கிட்டனான். இரவுக்கு படுக்கவும் இடமில்லை…’ ரவி சொன்னதும், யோகனுக்குத் துயரம் தொண்டையை அடைத்தது.

இந்த மண்ணின் மக்கள் நிம்மதியாக படுத்துறங்கி நிம்மதியாக மூச்சுவிட்டுத்திரிய வேண்டும் என்பதற்காக, சிலுவை சுமக்கும் இந்தப் புனுதனுக்குப் படுப்பதற்கும் இடமில்லை என்றால்…

‘ஏன் மச்சான் உப்பிடிக் கதைக்கிறாய், நீ இஞ்சைப்படுத்தால் என்ன?’ யோகன் கேட்டான்.

டேய், நான் இயக்கம். குப்பி வைச்சிருக்கிறன். ஆமி வந்தாலும் என்னைப் பிடிக்க முடியாது? ஆனால் நீ… நீ படிக்கிறனி… ஆனால் தப்பித் தவறி நான் தங்கினது தெரிஞ்சாலும் உனக்குத்தான் ஆபத்து.

நான் இப்ப இஞ்சை வந்தது தங்கிறதற்கில்லை… ஒரு கடிதம் தாறன். அதை நாளைக்கு உன்னிட்டை வாற சிறியிட்டைக் குடுத்து விடு… நான் போய் இந்த வைரவர் கோயில் பூக்கண்டுக்கை கிடக்கப் போறன்’ யோகனுக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. சாகும் போதுகூட இவர்களால் எப்படி மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்க முடிகிறது? யோகன் சிந்தித்தான். வைரவர் கோயிலடி, அங்கை எல்லாம் ஆமி இரவில திரியிறவன், இஞ்ச படு அப்பிடி ஒண்டும் நடக்காது, நடந்தால் நீ குடிக்கிற குப்பியில பாதியை எனக்கும் தா’

ரவி அவனை நன்றி உணர்வுடன் பார்த்தான். ‘எங்கள் தேசத்து மக்கள் உணர்வுடன் தான் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்தப் போராட்டம் வெல்லத்தான் போகிறது’ ரவி நினைத்துக்கொண்டான்.

‘என்ன யோசிக்கிறாய், இந்தா சாப்பாட்டுப் பார்சல், சாப்பிட்டிட்டுப் படு.’

யோகன் தனக்காக எடுத்து வந்த பார்சலை நீட்டினான்.

‘நீ சாப்பிட்டனியோ?’

‘ஓம்’

‘பொய் சொல்லுறாய்’

‘இல்லையடா பின்னேரம் கொத்து ரொட்டி சாப்பிட்டனான். இது வழமையாய் வாற இடியப்பப் பார்சல்’

ஒரு பொய்யை சாமர்த்தியமாகக் கூறிவிட்ட மகிழ்ச்சியில் யோகன் இருக்க, ரவி சாப்பிடத் தொடங்கினான்.

‘சத்தியமாய் யோகன் காலமையும், மத்தியானமும் ஒண்டுமில்லை’ சாப்பிட்டு முடித்ததும் ரவி சொன்னான். யோகனுக்கு வேதனையாக இருந்தது. இப்படி எத்தனை இளசுகள் பட்டினி கிடக்கின்றனவோ?

எல்லாம் இந்தியர்களால் வந்த வினை. நினைத்துக் கொண்டவன் ரவியிடம் சொன்னான்

‘படு மச்சான்’…., ‘படுக்கிறன், கொஸ்ரல்லிலை போல மீசை வைச்சிடாதை’ ரவி சொன்னதும். இருவரும் சூழ்நிலையை மறந்து சிரித்தனர்.

இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன. இந்திய இராணுவம் வெளியேறி, இரண்டாம் கட்ட ஈழப்போரும் ஆரம்பமாகிவிட்டது. ரவி இப்பொழுது இயக்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பாளராகி விட்டான். ஒருமுறை வீதியில் அவனைச் சந்தித்த போது யோகனால் மட்டெடுக்க முடியவில்லை. நிறத்தப் பூரித்து புத்தொலிவுடன் இருந்தான். ‘மச்சான் இனி எனக்குச் சாவில்லையடா’

கடைசியாக அவன் சொன்ன வார்த்தை அதுதான். சரியாக மூன்று மாதம் கழித்து அவன் பலாலியில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த செய்தியை பத்திரிகையில் பார்த்ததும் யோகன் துடித்துப் போனான். உடனடியாகப் புறப்பட்டு ரவியின் ஊருக்குச் சென்ற அவனால் ரவியின் சமாதியைத்தான் தரிசிக்க முடிந்தது. அந்தத் துயிலுமில்லத்தின் சுமர் ஒன்றில் எழுதியிருந்த வாசகம் அவனது கண்களில் பட்டது.

‘மாவீரர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்கள்’

அவனது காதுகளில் ‘மச்சான் இனி எனக்குச் சாவில்லையடா’ என்ற வார்த்தைகள் ஒரு முறை எதிரொலித்தன.

‘அண்ணா, இந்தாங்கோ தேத்தண்ணி. ஏழுமணியாகுது. முகம் கழுவாமல் யோசிச்சுக் கொண்டிருக்கிறியள்’ வாணியின் வார்த்தைகள் அவனது சிந்தனையைக் கலைத்தன.

‘வாணிக்குஞ்சு, உந்த மல்லிகைப் பூவெல்லாத்தையும் பிடுங்கி தண்ணி தெளிச்சுவையம்மா’

‘ஏன் அண்ணா? இண்டைக்கு கோயிலுக்குப் போகப் போறியளோ?’ வாணி அதிசயமாகக் கேட்டாள்.

‘ஓம்’

‘எந்தக் கோயிலுக்கு?’

‘மாவீரர் துயிலுமில்லத்துக்கு’ யோகன் அமைதியாகப் பதிலளித்தான். அவனுக்குத் தெரியும் புனிதம் அங்கே குடிகொண்டிருக்கிறது என்று.

நன்றி: சூரியப்புதல்வர்கள் 1995.

 

https://thesakkatru.com/maaveerar-thuyilum-illam/

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த பொதுச் சந்தைகள் இன்றையதினம்(18.01.2021) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழிகாட்டல் கூட்டத்தில்  எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக வடக்கு மாகாணத்தில் மூடப்பட்டிருந்த பொதுச் சந்தைகள் இன்றையதினம் திறக்கப்பட்டுள்ளன. சந்தைகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சந்தைகளில் காவல்துறையினர், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு | Virakesari.lk
    • (எம்.ஆர்.எம்.வசீம்) மரணிப்பவர்களை அடக்கம் செய்வது பற்றி குர்ஆனில் எங்கும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானதாகும். மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக குர்ஆனில் பத்து இடங்களுக்கும் அதிகம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் அரசியல் தேவைக்காக எந்தவொரு மதத்தையும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது. முஸ்லிம் ஒருவர் மரணித்தால் எரிக்கக்கூடாது. அடக்கம் செய்யவேண்டும் என குர்ஆனில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்து அவருக்கு  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதில் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் எம்,எஸ்.எம்.தாஸிம் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களை அடக்கம் செய்வது பற்றி திருகுர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் கூறிய தவறான கூற்று குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகுந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது. ஆளும் கட்சியின் முன்னணி உறுப்பினரும், ஒரு முக்கிய அமைச்சரும், ஒரு வழக்கறிஞருமான உங்களிடமிருந்து இதை விட விவேகமான அணுகுமுறையை நாம் எதிர்பார்த்தோம். 2021 ஜனவரி 8 ஆம் திகதி பாராளமன்றத்தில் நீங்கள் கூறியுள்ள கூற்றானது முற்றிலும் தவறானதாகும். இஸ்லாமிய மார்க்க தீர்வுகளை பெறுவதானது திருகுர்ஆனின் வசனங்களையும் அதனுடன் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்களுடைய வழிகாட்டல்களாகிய ஹதீஸ் கலைகளையும் நன்கு கற்ற இஸ்லாமிய அறிஞர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். எவ்வாறாயினும், திருக்குர்ஆனை நீங்கள் இருதடவை வாசித்துப் பாரத்ததையிட்டு எங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கும் அதே வேளையில், கட்டாயம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அதில் எங்கும் இல்லை என்று சொல்வது முற்றிலும் தவறானதாகும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இஸ்லாமீய மத போதனைகளுடன் தொடர்புடைய மார்க்கத் தீர்ப்புகளைப் பெறும் முறை தொடர்பான சில விடயங்களை தெளிவுபடுத்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விரும்புகிறது. இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் திருக்குர்ஆன், நபிமொழி (சுன்னா), இஜ்மா (அறிஞர்களின் இணக்கப்பாடு), கியாஸ் (ஒத்த சந்தர்ப்பங்கள்) ஆகிய  நான்கு மூலங்களில் இருந்தே பெறப்படும். திருகுர்ஆன் என்பது இறை வசனமாவதோடு, மனித குலத்திற்கான முழுமையான வழிகாட்டியாகவும் உள்ளது. இது உலகத்தாருக்கு வழிகாட்டியாக இறக்கப்பட்டதுடன் விடயங்களை கருத்தியல் ரீதியாகவும் உரையாற்றுகிறது. இதற்கு காலம் அல்லது பிராந்திய வரம்புகள் எதுவும் கிடையாது. இருப்பினும் சட்ட திட்டங்களுக்காக திருக்குருஆனை மட்டும் நோக்குவது சாத்தியமல்ல. ஏக இறைவனின் இறுதித் தூதரின் முன்மாதிரி மற்றும் அறிவுரைகளையும் நாம் சேர்த்தே நோக்க வேண்டும். உதாரணமாக, இஸ்லாத்தின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகிய தொழுகை பற்றி குர்ஆன் மிக விளக்கமாக எதுவும் கூறவில்லை. ஐவேளை தொழுகைகளின் பெயர்கள், அவற்றிற்கான நேரங்கள், தொழுகை நிறைவேறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் அது எவ்வாறு உடல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன திருக்குருஆனில் விரிவாக விவரிக்கப்படவில்லை. அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்பதை காரணம் காட்டி முஸ்லிம்கள் அதை நிறைவேற்றத் தேவையில்லை என எவரும் வாதிட முடியாது. அதேபோல், உலகெங்கிலும் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் ரமலான் மாதத்தின் நோன்பு, வசதியுள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டிய ஸகாத் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியவற்றை திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது திருக்குர்ஆனில் விரிவாக விளக்கப்படவில்லை. இதனை காரணம் காட்டி அப்பொறுப்புக்களைப் பற்றி முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை என்று ஒருவர் வாதிட முடியாது. ஏனென்றால், இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்காக திருக்குர்ஆனை மட்டும் நோக்குவது நமக்கான வழிமுறையல்ல. எனவே, இஸ்லாத்தின் மிக அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட விரிவாகப் புரிந்துகொள்வதற்கு மேற்கூறிய அடிப்படை ஆதாரங்களை கூட்டாகக் குறிப்பிட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இஸ்லாமிய மார்க்க சட்டம் பற்றி நாம் தெரிந்து கொள்ள விரும்பினால், திருக்குர்ஆன் என்பது முதல் மற்றும் முக்கிய ஆதாரமாக இருந்த போதிலும், அதனுடன் சேர்த்து கவனத்தில் கொள்ள வேண்டிய ஏனைய பிற மூலங்களும் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய ஒருவருக்கு சிறப்பு கலைகளின் அறிவும் திறமையும் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி, ஒரு முஸ்லிம் இறந்ததும், அவரை குளிப்பாட்டி, வெள்ளைத் துணியால் கபன் செய்து, தொழுகையை நிறைவேற்றி அதன் பின் மண்ணில் அடக்கம் செய்வது என்ற வரிசையான செயன்முறையை, ஒருவர் திருக்குர்ஆனை ஒராயிரம் தடவைகள் புறட்டினாலும் காண மாட்டார். மேலும், அடக்கம் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பதும் முற்றிலும் தவறாகும். உண்மையில், திருக்குர்ஆன் சுமார் பத்து இடங்களில் அடக்கம் செய்வது பற்றி பேசியுள்ளது. ஏனைய இஸ்லாமிய கடமைகள் போலவே, அடக்கம் தொடர்பான முழுமையான செயன்முறையும் நாம் நபியவர்களின் வழிகாட்டுதல் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலமாகவும், மார்க்க அறிஞர்களின் உதவியுடனேயே அறிந்து கொள்கின்றோம். ஒவ்வொரு மதத்திற்கும் அதன் போதனைகள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான முறைகள் இருப்பதை புரிந்து கொள்வது முக்கியமாகும், இது அந்தந்த மத அறிஞர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும். குறிப்பிட்ட விடயத்தில் அதிகாரப்பூர்வ அறிவு உள்ளவர்களின் சரியான ஆலோசனை இல்லாமல் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் இத்தகைய அறிக்கைகள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. இஸ்லாம் மற்றும் புனித குர்ஆன் அல்லது வேறு எந்த மதத்தையும்; எந்தவொரு அரசியல் தேவைக்கும் பயன்படுத்துவதைத் தவிர்ந்துகொள்ளுமாறு மரியாதைக்குரிய உங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறது. எங்கள் தாய்நாட்டில் உள்ள சமூகங்களுக்குள் தேவையற்ற பிரச்சினைகள், தவறான எண்ணங்கள் மற்றும் தவறான புரிதல்கள் தவிர்க்கப்படுவதை உறுதிசெய்ய மேற்கூறிய தவறான அறிக்கைகளை சரிசெய்யுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம். இவ்விடயம் பற்றி மேலும் விரிவான விளக்கங்களைப் பெற நீங்கள் விரும்பினால் தங்களை நேரில் சந்தித்து தெளிவுரைகளை தரவும் நாம் தயாராக உள்ளோம். குர்ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன ? - ஜம்இய்யதுல் உலமா கம்மன்பிலவுக்கு பதில் | Virakesari.lk
    • நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத்  தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது. இதனடிப்படையில், உளுந்து இறக்குமதிக்கும் கடந்த ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில், நாட்டின் உளுந்து விலை அதிகரித்துள்ளதுடன், உளுந்திற்கு பாரிய தட்டுப்பாடும் நிலவுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட  காலப்பகுதியில்  300 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோ உளுந்து, தற்போது சுமார் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். உளுந்து விலை அதிகரிப்பினால் சைவ உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உளுந்து இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளமையினால், உள்ளூர் உளுந்து உற்பத்தியாளர்கள் நன்மை அடைந்துள்ளார்களா?    இலங்கையின்  உளுந்து பயிர் செய்கைக்குப்  பிரசித்தி பெற்ற இடங்களில் வவுனியாவும் ஒன்று. எனினும், வவுனியாவில் சுமார் 13,500 ஏக்கரில் உளுந்து விதைக்கப்பட்ட நிலையில், தொடரும் மழையுடனான வானிலையால் உளுந்துச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, நாட்டில் எந்த உணவுப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாட்டில் உளுந்தின் விலை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு | Virakesari.lk
    • பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக யாழ். மண்டைதீவு பகுதியில் பாரிய போராட்டம் Published by Loga Dharshini on 2021-01-18 15:55:38   யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.  போராட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால், அங்கு பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்ததாக தெரியவருகிறது. மண்டைதீவு ஜே107 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பு காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  காணி உரிமையாளர்களும் பொது மக்களும் அரசியல்வாதிகளும் அங்கு திரண்டிருந்தனர். இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்வதற்கு வருகை தந்திருந்தனர். இதன் போது காணிகளை அளவீடு செய்ய கடும் எதிர்ப்பு வெளிப்படுத்திய நிலையில் காணிகளை அளவீடு செய்யாமலே நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருந்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் செல்ல தயாரான நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் நில அளவை திணைக்கள அதிகாரிகள் மீண்டும் அங்கு வந்து காணிகளை அளவீடு செய்ய போவதாக அறிவித்துள்ளனர். ஆயினும் காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாதென்று எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் காணிகளின் உரிமையாளர்களும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில்  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் அங்கு வருகை தந்த வேலனை பிரதேச செயலாளர் சோதிநாதன், காணி அளவிடுவதை நிறுத்துவதாகவும் காணி அமைச்சுடன் இது குறித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரையில் காணி அளவீடு மேற்கொள்ளபடாதென்றும் தெரிவித்தார். இதனையடுத்து, நில அளவை திணைக்களதினரும் பொலிஸாரும் திரும்பி சென்றனர். இதன் பின் அங்கு நின்றிருந்த மக்களும் அரசியல் வாதிகளும் சென்றிருந்தமை குறிப்பிடதக்கது. இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 4 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக யாழ். மண்டைதீவு பகுதியில் பாரிய போராட்டம் | Virakesari.lk
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.