பெற்றோரோடு உறங்க விரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறையும்:ஆய்வு முடிவு

By
உடையார்,
in சமூகச் சாளரம்
-
Tell a friend
-
Topics
-
25
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
இதை நான் சொல்லவெளிக்கிட்டால் , அப்படியில்லை கொம்மாணும் பிள்ளையானும் பாலும் தேனும் ஓட வைப்பார்கள் என்று அடம்பிடிக்கிறார்களே, என்ன செய்வது? அவ்வளவு விசுவாசம் !!!
-
உண்மை. இந்த சதியின் பின்னால் இந்தியா இருக்கிறதென்பது இப்போது வெளிப்படையாகிறது. வேறு எந்தக் காரணத்தை விட்டாலும், மாணவர்களின் போராட்டத்திற்கோ, உலகத் தமிழரின் போராட்டத்திற்கோ பயந்து பேரினவாதிகள் மீண்டும் இந்த நினைவாலயத்தை நிறுவுவதற்குச் சந்தர்ப்பமேயில்லை என்கிற ஒற்றைக்காரணமே போதும் அவர்கள் இதற்குள் இல்லையென்பதை நிறுவுவதற்கு.
-
By பா. சதீஷ் குமார் · Posted
ரத்த மகுடம்-129 ஐந்து சாம்பல் நிற புறாக்களும் அந்த மனிதர் மீது வீற்றிருந்ததை சில கணங்கள்தான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் கண்டான்.அது தொடர்பான சிந்தனைகள் அவனுக்குள் விருட்சமாக வளர்வதற்குள் அந்த மனிதர் தன் கண்களைத் திறந்தார்.‘‘வணக்கம்... பறவை சித்தர் என்பது தாங்கள்தானா..?’’ முன்னால் வந்து அவரை வணங்கினான் விநயாதித்தன். http://kungumam.co.in/kungumam_images/2020/20201225/21.jpg ‘‘மற்றவர்கள் இந்த எளியவனை அப்படி அழைக்கிறார்கள்... மற்றபடி அடியேன் சித்தனல்ல... அந்த நிலையை எட்ட முயற்சித்துக் கொண்டிருப்பவன்...’’ சாளுக்கிய இளவரசனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருவேளை, தான் காண வந்த மனிதர் இவரில்லையோ..? சங்கடத்துடன் தன் இடுப்பைத் தடவினான். ஓலை பாதுகாப்பாக இருந்தது. பறவை சித்தரின் உதட்டில் புன்னகை பூத்தது. ‘‘ஓலையா..?’’ விநயாதித்தனின் புருவங்கள் உயர்ந்தன. ‘‘ஆம்...’’‘‘அனுப்பியது யார்..?’’சில கணங்கள் அமைதியாக இருந்தவன், ஒரு முடிவுடன் சொன்னான். ‘‘எங்கள் ஒற்றர் படையைச் சேர்ந்தவர்...’’‘‘ஆணா பெண்ணா..?’’வியப்பின் உச்சியில் சாளுக்கிய இளவரசன் ஊசலாடினான். ‘‘ஆண்...’’ ‘‘இந்த எளியவனைச் சந்திக்கும்படி அதில் எழுதப்பட்டிருக்கிறதா..?’’ விநயாதித்தன் தன்னையும் அறியாமல் ‘ஆம்’ என தலையசைத்தான். தன் மீது அமர்ந்த புறாக்களை கணத்துக்கும் குறைவான நேரம் பறவை சித்தர் அளவிட்டார். ‘‘ஐந்து புறாக்கள்...’’ முணுமுணுத்தவர் தன் முன்னால் நின்றிருந்தவனை உற்றுப் பார்த்தார். ‘‘சாளுக்கிய தேசத்தைச் சேர்ந்தவனாக நீ இருக்கவேண்டும்...’’ ‘‘அத்தேசத்தின் இளவரசன் நான்...’’பறவை சித்தர் நகைத்தார். ‘‘ஐந்து புறாக்கள் என் மீது அமர்ந்தபோதே இதைப் புரிந்துகொண்டேன்... எல்லா ரகசிய நடவடிக்கைகளுக்கும் சாளுக்கியர்கள் ஐந்து புறாக்களைத்தானே பறக்க விடுவார்கள்..?’’ இமைக்காமல் அவர் முகத்தையே விநயாதித்தன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘பறவை சித்தர் சக்தி வாய்ந்தவர் என எல்லோரும் சொல்கிறார்கள் இளவரசே... எதிர்காலத்தை அப்படியே சொல்லும் வல்லமை அவருக்கு இருக்கிறதாம்... ஒருமுறை அவரை நீங்கள் சந்தித்தால் நல்லதென்று தோன்றுகிறது...’ என தனக்கு அனுப்பப்பட்ட... இப்பொழுது தன் இடுப்பில் பாதுகாப்பாக இருக்கும் ஓலையில் எழுதப்பட்ட... வாசகங்களை நினைவுகூர்ந்தான். ‘‘நண்பர்களைக்கூட ஒற்றர் படையைச் சேர்ந்தவர்களாகக் குறிப்பிடும் வழக்கம் இளவரசருக்கு இருக்கிறது போல் தெரிகிறது...’’ அதிர்ச்சியை மறைத்துக் கொள்ள விநயாதித்தன் சிரமப்பட்டான். ‘‘ஓலையை அனுப்பியவரும் ஒரு தேசத்தின் இளவரசர்தானே..?’’ அதுவரை தன் முன் இருப்பவர் நம்பத்தகுந்தவரா இல்லையா என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த சாளுக்கிய இளவரசன், தன் முன் வீசப்பட்ட இக்கேள்விக்குப் பின் ‘இவர் பறவை சித்தர்தான்’ என்ற முடிவுக்கு வந்தான். சரியாகச் சொல்லிவிட்டாரே! ‘‘ஆ...ம்... கங்க நாட்டு இளவரசன்... என் நண்பன்...’’ பறவை சித்தர் தன் இமைகளை சில கணங்கள் மூடி, பின் திறந்தார். ‘‘இந்த எளியவனைக் காண வந்ததன் காரணம்..?’’ இனி உண்மையைப் பேசுவதே நல்லது என்ற முடிவுக்கு விநயாதித்தன் வந்துவிட்டதால், ‘‘பல்லவர்களை நாங்கள் பூண்டோடு அழிக்க வேண்டும்... நடைபெறும் போரில் சாளுக்கியர்கள் வெற்றி பெற வேண்டும்... அதற்கு உங்கள் ஆசி தேவை...’’ என்றான்.பறவை சித்தர் அமைதியாக இருந்தார். ‘‘ஏன் ஆசி வழங்க மறுக்கிறீர்கள்..?’’ ‘‘கோரிக்கை அப்படி...’’ ‘‘என் கோரிக்கையில் என்ன தவறு...’’ ‘‘கோரிக்கையே தவறுதான்... அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்கு ஆசி வழங்க மாட்டார்கள்...’’‘‘ஒரு நாட்டின் இளவரசன் வேறு எப்படிப்பட்ட கோரிக்கையை வைப்பான் என்று நினைக்கிறீர்கள்..? எப்படி உங்கள் இயல்பு எல்லா உயிரினங்களும் வாழவேண்டும் என்று நினைப்பதோ அப்படித்தானே எதிரி நாட்டை அழிக்க வேண்டும் என ஓர் இளவரசன் விரும்புவதும்...’’ ‘‘அதற்காகத்தானே உன் தந்தை அசுரப் போர் வியூகத்தைக் கைப்பற்றியிருக்கிறார்..?’’ நரம்புகள் அதிர விநயாதித்தன் அப்படியே சிலையானான். இப்படியொரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகம் வெளிப்படுத்தியது. ‘‘அதை நம்பச் சொல்கிறீர்களா..?’’ ‘‘ஏன் நம்பக் கூடாது என்று நினைக்கிறாய்..?’’ ‘‘அதைக் கொண்டு வந்தவன் கரிகாலன்...’’ ‘‘கரிகாலன் யார்..?’’ ‘‘எங்கள் எதிரி நாட்டு உபசேனாதிபதி. நாடே இல்லாத சோழர் குலத்தின் இளவரசன்...’’ ‘‘அவன் ஏன் அந்த அசுரப்போர் வியூகத்தைக் கைப்பற்றி உங்களுக்குத் தரவேண்டும்..?’’ ‘‘அவன் சாளுக்கியர்களின் நண்பன் என்று என் தந்தை நினைக்கிறார்... பல்லவர்களுடன் இருந்தபடியே அவர்களுக்கு எதிராக அவன் குழிபறித்துக் கொண்டிருப்பதாக நம்புகிறார்...’’‘‘அதை நீ நம்பவில்லையா..?’’‘‘இல்லை... பல்லவர்கள் நலனுக்காக சாளுக்கியர்களுடன் நட்பு பாராட்டும் வேடதாரிதான் அந்த கரிகாலன்...’’ ‘‘உன் கூற்றுக்கு ஆதாரம் இருக்கிறதா..?’’விநயாதித்தன் தயங்கினான். ‘‘இல்லை... உள்ளுணர்வு கரிகாலனை நம்பவேண்டாம் என எச்சரித்தபடி இருக்கிறது...’’‘‘அதே உள்ளுணர்வு அசுரப் போர் வியூகம் குறித்து என்ன சொல்கிறது..?’’சாளுக்கிய இளவரசன் உதட்டைக் கடித்தான். தன் வலது தொடையில் அமர்ந்திருந்த புறாவை எடுத்து பறவை சித்தர் தடவிக் கொடுத்தார். ‘‘வினாவுக்கான விடை இந்தப் புறாக்கள்தான்... ஐந்து புறாக்கள்... இவை சாளுக்கியர்கள் ரகசிய செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் உபாயம் மட்டுமல்ல...’’ நிமிர்ந்து விநயாதித்தனைப் பார்த்தார். அவரே தொடரட்டும் என சாளுக்கிய இளவரசன் அமைதியாக நின்றான்.‘‘மணிமங்கலம் போர் நினைவில் இருக்கிறதா..?’’ மணிமங்கலம் ஊரின் பழமையான ஆலமரத்தின் கீழே பத்மாசனமிட்டு கரிகாலன் அமர்ந்திருந்தான். சீரான பிராணாயாமத்தில் இருந்தவனின் மனக்கண்ணில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் நடந்த குருக்ஷேத்திரப் போர்க் காட்சிகள் விரிந்தன.குறிப்பாக தன் உறவினர்களுக்கும் ஆசான்களுக்கும் எதிராக போர் புரியமாட்டேன் என தன் காண்டீபத்தை தேரில் வைத்துவிட்டு குழப்பத்துடன் அமர்ந்திருந்த அர்ஜுனனும் பாஞ்சஜன்யம் சங்கை தன் வலது கையில் ஏந்தியபடி அவனுக்கு அபயம் அளிக்கும் பகவான் கிருஷ்ணரின் தோற்றமும்.அக்காட்சியையே கரிகாலன் உன்னிப்பாக தன் அகத்தில் கவனிக்கத் தொடங்கினான்...‘‘எப்படி உன்னால் மறக்க முடியும்..? சாளுக்கியர்களால் மட்டுமல்ல... தமிழகத்தைச் சேர்ந்தவர்களாலும் எக்காலத்திலும் அப்போரை மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா..? விந்திய மலைக்கு தென்புறப் பிரதேசத்தின் குருக்ஷேத்திரப் போர் என்றால் அது மணிமங்கலம் போர்தான்...’’ எவ்வித உணர்ச்சியும் இன்றி சொன்ன பறவை சித்தர், தன்மீது அமர்ந்திருந்த ஐந்து புறாக்களையும் ஒவ்வொன்றாக எடுத்து தடவிக் கொடுத்து அவற்றைப் பறக்கவிட்டபடியே தொடர்ந்தார்.‘‘சாளுக்கிய மன்னர்... மாமன்னர் என்று நீங்கள் குறிப்பிடுவீர்கள் அல்லவா... அவர்... இரண்டாம் புலிகேசி... நான்கு முறை பல்லவர்களை வெற்றி கொண்டார். ஐந்தாவது முறையாகப் படை திரட்டி வந்த அவரை மணிமங்கலத்தில்தான் அப்போதைய பல்லவ மன்னனான நரசிம்மவர்மன் எதிர்கொண்டான்...’’ என்றபடி ஐந்தாவது புறாவைப் பறக்கவிட்டார்.‘‘அதனால்தான் இந்த ஐந்து புறாக்கள்தான் விடை என்றேன்... அந்த மணிமங்கலம் போரில் பல்லவப் படைக்குத் தலைமை தாங்கியவன் பரஞ்சோதி. அவன் மூன்று அசுரப் போர் வியூகங்களை சாளுக்கியர்களுக்கு எதிராக வகுத்தான்... அவற்றில் ஒன்றைத்தான் பல்லவ மன்னரான நரசிம்மவர்மர் தேர்வு செய்தார்.அந்த வியூகத்தின் அடிப்படையில் நடைபெற்ற போரில் முதல் முறையாக சாளுக்கியர்கள் தோற்றார்கள்... நான்கு முறை சாளுக்கியர்கள் பெற்ற வெற்றிக்கு பழிவாங்கும் விதமாக பல்லவப் படை அந்த வெற்றியை ருசித்தது... தோற்று ஓடிய சாளுக்கியப் படைகளையும் உங்கள் பாட்டனார்... மாமன்னர்... இரண்டாம் புலிகேசியையும் பரஞ்சோதி தலைமையிலான பல்லவப் படை துரத்திக் கொண்டே சென்றது... எதுவரை..? சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபி வரை!வாதாபியை அடைந்த பல்லவப் படை பரஞ்சோதியின் வழிகாட்டுதலுடன் அந்நகரையே தீக்கிரையாக்கியது... அதனால்தான் மணிமங்கலத்தில் தொடங்கி வாதாபி வரை பல்லவப் படை நிகழ்த்திய கொடூரத்தை இப்பிரதேசத்தின் குருக்ஷேத்திரப் போர் என மக்கள் குறிப்பிடுகிறார்கள்...’’ நிறுத்திய பறவை சித்தர், சில கணங்கள் இமைக்காமல் விநயாதித்தனைப் பார்த்தார்.சாளுக்கிய இளவரசனுக்குள் அனல் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் நயனங்கள் தீயைக் கக்கின.‘‘அப்படிப்பட்ட அசுரப் போரால்... அதுவும் பரஞ்சோதி வகுத்த ராட்சஷப் போர் வியூகத்தால்... அதே பல்லவர்களை எதிர்கொண்டு பழி தீர்க்க வேண்டும் என உன் தந்தையும் சாளுக்கிய தேசத்தின் இப்போதைய மன்னரும் இரண்டாம் புலிகேசியின் புதல்வருமான விக்கிரமாதித்தர் விரும்புகிறார்... அதற்காக இன்றைய பல்லவ தேசத்தின் உபசேனாதிபதியான கரிகாலனை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறார்... ஒரு மன்னரின் கடமை எதுவோ அதை அவர் நிறைவேற்றுகிறார்... இதை ஏன் நம்பவும் ஏற்கவும் மறுக்கிறாய்..?’’ ‘‘அப்படியானால் நடைபெறவிருக்கும் சாளுக்கிய-பல்லவ போரில் பரஞ்சோதி வடிவமைத்த... இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும்... அசுரப் போர் வியூகத்தை நாங்கள் பயன்படுத்தினால் வெற்றி பெறுவோம் என்கிறீர்களா..? இதையே உங்கள் ஆசியாகக் கருதலாமா..?’’ பதிலேதும் சொல்லாமல் பறவை சித்தர் எழுந்து அருகிலிருந்த புதர் பக்கமாகச் சென்றார்...நாழிகை நகர்ந்ததே தவிர அவர் வரவில்லை. விநயாதித்தன் அந்தப் புதரை அடைந்து ஆராய்ந்தபோது அங்கு எந்த மனிதரும் இருப்பதற்கான - இருந்ததற்கான - அறிகுறி தெரியவில்லை!கரிகாலன் தன் கண்களைத் திறந்தான்.அகத்தில் தெரிந்த அர்ஜுனனுக்கு அபயம் அளிக்கும் கிருஷ்ணரின் தோற்றம் புறத்திலும் தெரிந்தது. ‘இதே தோற்றத்தில் பகவான் கிருஷ்ணர் காட்சியளிக்கும் கோயிலை நான் இந்த மண்ணில் கட்டுவேன்... என்னால் முடியவில்லை என்றால்... எனது சந்ததி... சோழர் குலம்... வருங்காலத்தில் இதே மணிமங்கலத்தில் ஆலயம் எழுப்பும்...’ தரையில் அடித்து சத்தியம் செய்தான்.இரண்டு நாழிகைகளுக்குப்பின் பூனை போல் அடியெடுத்து வைத்து பறவை சித்தர் வந்தார்.விநயாதித்தன் அங்கில்லை. ‘அப்பாடா...’ பெருமூச்சு விட்டார். ‘சித்தராக நடிப்பது எவ்வளவு கடினம்... சித்தர்கள் எப்படி உரையாடுவார்கள் என்று தெரியாமல் நம் போக்கில் வார்த்தைகளை விட்டிருக்கிறோம்... நல்லவேளையாக சாளுக்கிய இளவரசன் நம்பிவிட்டான்...’நிம்மதியுடன், அருகில் இருந்த மரத்தில் ஏறி, மூன்று கிளைகளுக்கு இடையில் கை கால்களும் வாயும் கட்டப்பட்டு இருந்த ஒரு மனிதனை இறக்கி கட்டுகளை அவிழ்த்தார்.கட்டப்பட்ட மனிதனும் நரம்புகளும் எலும்புகளும் தெரிய... ஜடை முடியுடன் சித்தர் கோலத்தில்தான் இருந்தான்.‘‘என்ன காரியம் செய்துவிட்டாய்...’’ கை கால்களை உதறியபடி அந்த மனிதன் சீறினான். ‘‘நாம் இருவருமே பல்லவ ஒற்றர்கள். கரிகாலர்தான் என்னை இங்கு அனுப்பி சாளுக்கிய இளவரசனிடம் பேசச் சொன்னார்... கெடுத்து விட்டாயே...’’‘‘இல்லை... நிறைவேற்றிவிட்டேன்...’’ பறவை சித்தராக விநயாதித்தனிடம் உரையாடியவன் சிரித்தான். ‘‘என் தலைவி சிவகாமியின் கட்டளைப்படி!’’ http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17566&id1=6&issue=20201220 ரத்த மகுடம்-130 ‘‘என்ன... பல்லவ நாட்டின் சக ஒற்றனால் வாய் அடைக்கப்பட்டு; கை, கால்கள் கட்டப்பட்டு; மரத்தின் கிளையில் சிறை வைக்கப்பட்டாயா..?’’நிதானமாகக் கேட்ட கரிகாலனை பிரமிப்புடன் பார்த்தான் அந்த மனிதன்.தான், எதுவும் சொல்லாமல் நடந்த அனைத்தையும் ஏதோ நேரில் பார்த்தது போல் சொல்லும் திறமைசாலி, பல்லவப் படையின் உபசேனாதிபதியாக இருக்கும் வரை சாளுக்கியர்கள் மட்டுமல்ல... வேறு எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாலும் பல்லவ நாட்டைக் கைப்பற்ற முடியாது...மனதுக்குள் சொல்லிக் கொண்டவன், வாயைத் திறந்து ‘‘ஆம்...’’ என்றான்.http://kungumam.co.in/kungumam_images/2020/20210101/19.jpg‘‘வந்தவன் யார்..?’’‘‘எனது தம்பி...’’‘‘பொன்னனா..?’’அந்த மனிதனின் கண்கள் விரிந்தன. ‘‘ம்...’’‘‘நீங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் என்பது நமக்கு சாதகமான அம்சம்...’’‘‘...’’‘‘உன் சகோதரன் விநயாதித்தனிடம் என்ன சொன்னான்..?’’‘‘மரத்தின் கிளையில் என்னை அடைத்ததால் அவர்கள் உரையாடல் துல்லியமாக என் செவியில் விழவில்லை...’’‘‘விழுந்தவரை சொல்...’’சொன்னான்.கரிகாலனின் நயனங்கள் சிந்தனையில் ஆழ்ந்தன. சில கணங்கள்தான். பிறகு சட்டென ஒளிர்ந்தன. ‘‘உத்தமா...’’‘‘கட்டளையிடுங்கள் கரிகாலரே...’’‘‘இரட்டைப் பிறவிகள் என்பதால் பொன்னனும் நீயும் அச்சு அசலாக ஒரே உருவமாக இருப்பீர்கள்...’’கரிகாலன் முடிப்பதற்குள் உத்தமன் இடைமறித்தான். ‘‘நாசியின் அளவு மட்டுமே வேறுபடும்... அது கூட சிறிய அளவில்தான்...’’‘‘அதாவது யார் உத்தமன்... யார் பொன்னன் என்பதை சட்டென கண்டுபிடிக்க முடியாது... அப்படித்தானே..?’’‘‘எங்கள் உறவினர்களே பல நேரம் குழம்பியிருக்கிறார்கள்...’’கரிகாலன் புன்னகைத்தான். ‘‘இது போதும். அடுத்த ஆட்டத்தைத் தொடங்கலாம்... உத்தமா நேராக காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு செல்... அங்குதான் இப்பொழுது விநயாதித்தன் இருக்கிறான். அவன் மட்டுமல்ல...’’உத்தமன் இமைக்காமல் கரிகாலனைப் பார்த்தான்.‘‘கடிகை பாலகனும், காபாலிகனும், சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் சகோதரரான அனந்தவர்மரும்கூட அங்குதான் இருக்கிறார்கள்...இதே பறவை சித்தராக அங்கு செல்... விநயாதித்தனைச் சந்தித்து...’’ என்றபடி உத்தமனை நெருங்கி அவன் செவியில் சிலவற்றை கரிகாலன் முணுமுணுத்தான்.உத்தமனின் வதனம் மலர்ந்தது. ‘‘இம்முறை வெற்றியுடன் திரும்புகிறேன் கரிகாலரே...’’கரிகாலன் புன்னகைத்தான்.‘‘சொல்லாமல் கொள்ளாமல் எங்கு சென்றீர்கள் மன்னா..?’’ கேட்டபடியே ராமபுண்ய வல்லபர் வந்தார்.விக்கிரமாதித்தர் அலட்சியமாக அவரைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார்.‘‘செல்ல வேண்டிய இடத்துக்கு...’’‘‘கணிகையர் இல்லத்துக்கா..?’’சாளுக்கிய மன்னரின் நயனங்கள் தீயைக் கக்கின. ‘‘யாரிடம் உரையாடுகிறீர்கள் என்று தெரிந்துதான் பேசுகிறீர்களா..?’’‘‘எங்கள் மன்னரிடம் பேசுகிறோம் என்று தெரிந்துதான் உரையாடுகிறேன்...’’‘‘அறிந்துமா இப்படியொரு வினாவைத் தொடுத்தீர்கள்..?’’‘‘தொடுத்ததற்கு உரிய பதில் வராதபோது, இதுவாக இருக்கலாமோ என்று இன்னொரு கேள்வியை எழுப்பினேன்...’’‘‘எழுப்பப்பட்ட வினா தவறானது...’’‘‘எனில் சரியான விடையைப் பகிரலாமே...’’‘‘பதில் சொல்ல விருப்பமில்லை... நீங்கள் செல்லலாம்...’’‘‘அறிந்து கொள்ளாமல் செல்ல முடியாது மன்னா...’’‘‘நான் மன்னன்...’’‘‘அதனால்தான் எங்கு சென்றீர்கள் என்று கேட்கிறேன்...’’ராமபுண்ய வல்லபரை உற்றுப் பார்த்தார் சாளுக்கிய மன்னர்.அப்பார்வையை எதிர்கொண்டு அசையாமல் நின்றார் சாளுக்கிய போர் அமைச்சர்.‘‘ஒரு மன்னனுக்கு இந்த உரிமை கூட இல்லையா..?’’‘‘இல்லை மன்னா...’’‘‘காரணம்..?’’‘‘நாம் எதிரி நாட்டில் இருப்பதால்...’’இதைக் கேட்டு கடகடவெனச் சிரித்தார் விக்கிரமாதித்தர். ‘‘இந்த காஞ்சி மாநகரம் இப்பொழுது சாளுக்கியர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது... இன்று பல்லவ நாட்டின் மன்னனும்் நான்தான்...’’‘‘பெயர் அளவுக்கு...’’‘‘என்ன சொன்னீர்கள்..?’’‘‘பெயர் அளவுக்கு பல்லவ நாட்டை நாம் ஆள்கிறோம் என்று சொன்னேன்...’’‘‘இப்படிச் சொல்பவர் எனக்குஅமைச்சராக இருக்கிறார்...’’‘‘சின்ன திருத்தம் மன்னா... ஏதோ ஒரு துறையின் அமைச்சராக அல்ல... போர் அமைச்சராக பதவி வகிக்கிறார்...’’‘‘எனில் சாளுக்கியர்கள் கோழைகள் என்கிறீர்கள்...’’‘‘பல்லவப் படை இன்னும் அழிக்கப்படவில்லை என நினைவுபடுத்துகிறேன்...’’‘‘எனவே எங்கு சென்றாலும் உங்களிடம் உத்தரவு பெற்றுவிட்டுச் செல்லவேண்டும் என கட்டளையிடுகிறீர்கள்...’’‘‘மன்னரின் உயிரைக் காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்கிறேன்...’’‘‘தனியாக வருபவனைக் கொல்லும் அளவுக்கு பல்லவர்களின் நிலை தாழ்ந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா..?’’‘‘யுத்தத்தில் தரம் தாழ்தல்... அறம்... தர்மம்... என எதுவும் கிடையாது மன்னா... சொல்லப்போனால் போர்க்களத்தில் பொது விதி என்றே எதுவும் இல்லை... எது எப்படி எந்த விதத்தில் நடந்தாலும் சகலமும் ராஜதந்திரமாகவே கருதப்படும்...’’‘‘... என்கிறதா சாஸ்திரம்...’’‘‘... என்கிறது அனுபவம்...’’‘‘எனவே, ஒரு நாட்டின் மன்னன் தன் போர் அமைச்சருக்கு கட்டுப்பட்டவன்... அப்படித்தானே?’’‘‘தன் படைகளுக்கு கட்டுப்பட்டவன்...’’ தலை நிமிர்ந்து சொன்னார் ராமபுண்ய வல்லபர். ‘‘மன்னருக்காகத்தான் படைகள்... மன்னரால்தான் படைகள்... மன்னரைச் சுற்றித்தான் படைகள்... படைகளின் அச்சாணியே மன்னர்தான் என்னும்போது அச்சாணியைப் பாதுகாக்க வேண்டியது படைகளின்... படைவீரர்களின் கடமை... அப்படைகளின்... படை வீரர்களின் தலைவனான போர் அமைச்சரின் பொறுப்பு...’’‘‘அந்தப் பொறுப்பின் பொருட்டுதான் என்னை நிற்கவைத்து விசாரணை நடத்துகிறீர்களா..?’’‘‘வழிநடத்துகிறேன் என்று சொல்வது சரியாக இருக்கும் மன்னா...’’‘‘எப்படி..? தன் மன்னரையே வேவு பார்ப்பதன் வழியாகவா..?’’ கேட்டபடியே ராமபுண்ய வல்லபரை நெருங்கி வந்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்களால் பணியமர்த்தப்பட்ட வீரர்கள் என்னைப் பின்தொடர்வது எனக்குத் தெரியும்அமைச்சரே...’’‘‘நன்றி மன்னா... என் கடமையை நான் சரிவர செய்கிறேன் என்பதை தாங்கள் புரிந்து கொண்டதற்கு...’’விக்கிரமாதித்தரின் உதட்டில் இகழ்ச்சி வழிந்தது. ‘‘நான் எங்கு சென்றேன் என தங்களுக்குத் தெரியும்... அப்படியிருந்தும் ‘எங்கு சென்றீர்கள்’ என என்னிடமே கேட்கிறீர்கள்... இதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்..?’’‘‘உண்மையை... சென்ற இடத்தில் நடந்ததைச் சொல்லுங்கள்...’’‘‘உங்களால் அனுப்பப்பட்டவர்கள் எதுவும் சொல்லவில்லையா..?’’‘‘இல்லை...’’‘‘ஏன்... அவர்கள் சரிவர பணியாற்றவில்லையா..?’’‘‘சாளுக்கிய குடிமகன் தன் பணியை சரிவர செய்வதுபோல் வேறு எந்த தேசத்தவனும் தன் கடமையைச் செய்வதில்லை...’’‘‘அப்படியானால் எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள்..?’’‘‘மன்னரின் உயிருக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வதுதான் அவர்களது பணியே தவிர பாண்டிய மன்னருடன் என்ன பேசினார் என ஒட்டுக் கேட்பதல்ல...’’‘‘ஆக, நான் மதுரைக்கு ரகசியமாகச் சென்றது உங்களுக்குத் தெரியும்...’’‘‘அரிகேசரி மாறவர்மருடன் தனிமையில் என்ன பேசினீர்கள் என்று தெரியாது...’’‘‘தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்...’’‘‘பாண்டிய நாட்டு மன்னருடன் எங்கள் சாளுக்கிய மன்னர் என்ன பேசினார் என்று தெரிய வேண்டியது சாளுக்கிய தேசத்தின் போர் அமைச்சரின் கடமை...’’‘‘சொல்ல மறுத்தால்..?’’‘‘தன் நாட்டின் நலனுக்காகவும், தன் குடிமக்களின் மகிழ்ச்சிக்காகவும், தன் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்காகவும் வாழும் எங்கள் மன்னர் ஒருபோதும் தன் பொறுப்பில் இருந்து மீற மாட்டார்...’’‘‘கடமை... பொறுப்பு... விசாரணை... நானும் மனிதன்தானே..?’’‘‘மன்னன் ஒருபோதும் மனிதனல்ல... அவர் தன் தேசத்தின்... நாட்டு மக்களின் பிரதிநிதி...’’விக்கிரமாதித்தர் பெருமூச்சு விட்டார். ‘‘உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்...’’‘‘சீனனை மதுரை தச்சர் வீதியில் தாங்கள் சந்தித்தது... கச்சையை எரித்தபோது கிடைத்த தேவ மூலிகையின் சாம்பல்... பொக்கிஷங்கள் தொடர்பான குறியீடுகள்... இவை எல்லாம் உங்கள் போர் அமைச்சரான அடியேனும் அறிவேன்... காஞ்சியிலும் அதேபோன்று நிகழ்ந்தது...’’ நிறுத்திய ராமபுண்ய வல்லபர் தன் மன்னரை சங்கடத்துடன் நோக்கினார். ‘‘அறிந்துகொள்ள விரும்புவது பாண்டிய மன்னர் தங்களிடம் என்ன சொன்னார் என்பதை...காரணம், விருந்தினராக நீங்கள் மதுரைக்குச் செல்லவில்லை... பகையாளியாகவும் நுழையவில்லை... ரகசியமாகச் சென்றீர்கள்... உங்களை எதிர்கொண்டு உபசரித்து அதே ரகசியத்துடன் அரிகேசரி மாறவர்மர் அனுப்பி வைத்திருக்கிறார்... இதற்கு நடுவில் பரம ரகசியமாக உங்களுடன் உரையாடியிருக்கிறார்... அந்த உரையாடலில், நடைபெறவிருக்கும் பல்லவ - சாளுக்கிய போர் குறித்து பேச்சு இடம்பெற்றதா..?’’‘‘இல்லை...’’‘‘அப்படியானால்..?’’‘‘போர் குறித்து உங்களிடமும் விநயாதித்தனிடமும் என்ன சொன்னாரோ அதையேதான் உறுதிப்படுத்தினார்... ஆனால், வேறொரு தகவலைச் சொன்னார்...’’‘சொல்லுங்கள்’ என்பதுபோல் அவரையே பார்த்தார் ராமபுண்ய வல்லபர்.‘‘பல்லவ இளவரசியான சிவகாமியை நாம் சிறைப்பிடித்து... அவள் போலவே இருக்கும் நம் ஒற்றர் படைத்தலைவியை ‘சிவகாமி’யாக பல்லவர்களுக்குள் ஊடுருவவிட்டிருக்கிறோம் அல்லவா... அதுவே நாம் செய்த பெரிய பிழை என்கிறார் பாண்டிய மன்னர்...’’‘‘இதில் என்ன பிழையை அவர் காண்கிறார்..?’’‘‘பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனுக்கு இரத்த சம்பந்தமாக மட்டுமல்ல... வளர்ப்பு ரீதியிலும் மகளே கிடையாதாம்...’’‘‘அதுதான் தெரியுமே மன்னா... நரசிம்மவர்ம பல்லவனின்காதலியான ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமியின் வளர்ப்புப்பேத்திதானே இந்த சிவகாமி...’’‘‘இல்லை என்கிறார் அரிகேசரி மாறவர்மர்...’’‘‘என்ன...’’ அதிர்ந்தார் ராமபுண்ய வல்லபர்.‘‘ஆம் அமைச்சரே... வாதாபி தீக்கிரையாகட்டும் என சபித்து... அந்த சபதம் நிறைவேறியதைப் பார்த்து ரசித்த நடன மங்கையான சிவகாமி... எந்த பெண்பிள்ளையையும் வளர்க்கவும் இல்லையாம்... பேத்தியாகக் கருதவும் இல்லையாம்... மாறாக ஓர் ஆண்மகவை தன் பேரனாக தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கினாராம்!’’‘‘உத்தமனை காஞ்சி - மல்லைக்கு இடையில் இருக்கும் சத்திரத்துக்கு அனுப்பியிருக்கிறீர்களா..?’’ தலையைஉயர்த்தி சிவகாமி கேட்டாள்.பதிலேதும் சொல்லாமல் அவள் இதழில் கரிகாலன் முத்தமிட்டான்.‘‘நானும் பொன்னனை அதே இடத்துக்கு விநயாதித்தனைச்சந்தித்துப் பேசும்படி அனுப்பியிருக்கிறேன்!’’ என்றபடி கரிகாலனின் பரந்த மார்பில் தன் முகத்தைப் பதித்து ஒன்றினாள்! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17586&id1=6&issue=20201227 -
https://www.toptamilnews.com/seeman-at-the-temple/?feed_id=10289&_unique_id=5ffd415d664c5 துலாபாரம் என்று இருப்பதையும் கொஞ்சம் கவனியுங்கோ அண்ணை.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
https://www.docdroid.net/lCxC0su/4246-pdf இந்த இதழ் தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் தோழர்..👌
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.