கருத்துக்கள உறவுகள் பிழம்பு 351 பதியப்பட்டது November 25, 2020 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது November 25, 2020 கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (25.11.2020) மட்டக்களப்பிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். ஏறாவூர் புன்னக்குடா தளவாய் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டைக்கான இடத்தினை பார்வையிட்டதுடன் வாழைச்சேனை காகிதாலைக்கும் சென்று பிரதேச மக்களுக்கு வழங்கப்படவுள்ள குடி நீர் விநியோக திட்டம் தொடர்பாகவம் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். மேற்படி அமைச்சினால் பாரிய புடவை நூல் உற்பத்தி கைத்தொழில் பேட்டை ஒன்றினை 600 மில்லியன் யூ.எஸ் டொலர் செலவில் நிர்மாணித்து அதற்கு தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்கீழ் (3050) மூவாயிரந்து ஐம்பது மில்லியன் ரூபா செலவில் செங்கலடி எல்லை வீதியில் இருந்து 6 கிலோ மீற்றர் நீளமுடைய புன்னகுடா கடற்கரை வீதி வரை காபட் இட்டு செப்பனிடப்படவுள்ளதுடன் மேலும் இத்திட்டத்தின் கீழ் மின்சார விநியோகம் ,குடிநீர் விநியோகம் என மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள புடவை மற்றும் நூல் தொழிற்சாலையின் உள்ளக செலவுகளுக்காக 1700 மில்லியன் ரூபாய் செலவிடப்பட உள்ளதுடன் கைத்தொழில் பேட்டை பகுதியினுள் 12 தொழில் பேட்டையினை நிறுவதற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புடவை மற்றும் நூல் வகையினை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் 50 வீத இறக்குமதி குறைக்கப்பட்டு 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். காடதாசி ஆலையில் உள்ள வாகனேரி குளத்திலிருந்து குறித்த தொழிற்சாலைக்கு நீரினை பெற்றுக்கொள்வதற்கு அபிவிருத்தி செய்யப்படவுள்ள நீர் விநியோக திட்டம், கடதாசி தொழிச்சாலை உற்பத்தி நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சர் கடதாசி ஆலை பிரதேசத்தை அண்டி வாழ்கின்ற மக்களும் தமக்குத் தேவையான குடிநீர் வசதியினை பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமைச்சருடன் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் vanangaamudi 263 Posted November 25, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted November 25, 2020 சட்டென்று பார்த்தால் இது ஒரு பெரிய முதலீடுதான் என்றாலும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். முதலீட்டாளர்கள் யார், எந்த நாடு போன்ற விபரங்களுடன் வாகனேரி குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்தால் பின் அது கழிவாக எங்கு செல்கிறது. ஆலையின் கழிவுகள் சூழலை மாசுபடுத்துமா என்பது போன்ற இன்னோரன்ன தகவல்களையும் இங்கு குறிப்பிட்டு சொல்லியிருந்தால் நல்லது. Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.