Jump to content

பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பினால் இறப்பு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பினால் இறப்பு..

https://www.dailymail.co.uk/sport/football/article-8986821/Diego-Maradona-died-suffering-cardiac-arrest-according-reports.html

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். இறுதி காலங்களில் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

உங்களின் உந்துதல்தான் இன்றுவரை விளையாட வைத்திருக்கிறது என்னை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதி யாரை விட்டுது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அற்புதமான விளையாட்டு வீரர். 1986  உலகக்கிண்ண காலிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கெதிரான solo goal என்றென்றும் நினைவில் இருக்கும்.

ஆழ்ந்த இரங்கல்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த.. இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

80களில் இவருடைய கால் பந்து ஆட்டங்களை மிகவும் ரசித்து பார்த்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த கால்பந்து வீரன். ஆழ்ந்த இரங்கல்கள்.

 

கால்பந்து வீரர் மாரடோனா காலமானார் - என்ன நடந்தது?

மாரடோனா

பட மூலாதாரம், GETTY IMAGES

கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆம் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். 

பிறகு அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அது வெற்றிகரமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தார். 

மாரடோனா

பட மூலாதாரம், GETTY IMAGES

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு அதன் துணை மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதனை செய்தபோதும் நின்று போன அவரது மூச்சை மீட்டெடுக்க அவர்களால் இயலவில்லை.

தனது 16ஆவது வயதில் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக அறிமுகமான மாரடோனா, கால்பாந்தாட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.

 

1986ஆம் ஆண்டில் அர்ஜென்டீனாவுக்கு இரண்டாவது உலக கோப்பை கிடைப்பதில் மாரடோனாவின் அபாரமான ஆட்டம் காரணமாக இருந்தது. அப்போது அவரது தாய்நாடான அர்ஜென்டீனா மேற்கு ஜெர்மனியை எதிர்கொண்டது. 

மாரடோனா

 

 

 

 

அவரளவுக்கு வேறெந்த வீரராலும் துல்லியமாகவும் லாவகமாகவும் கோல் அடிக்கும் திறனை பெற்றிருக்கவில்லை. கால்பாந்தாட்ட உலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தமது தாயக அணியின் சிறப்பு பயிற்சியாளராக மாரடோனா இருந்தார். இந்த நிலையில், கால்பந்தாட்டத்துறையில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது உயிரிழப்பு அமைந்து விட்டதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். 

1960ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பிறந்த மாரடோனா, இருபதாம் நூற்றாண்டின் ஒப்பில்லா கால்பந்தாட்ட வீரராக ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர். அவரது மனைவி கிளாடியா வில்லஃபேன் 2003ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

 

https://www.bbc.com/tamil/sport-55078371

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

மரணம் இவரை பலமுறை எச்சரித்தும் கவனமில்லாமல் இருந்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தைத் தழுவிவிட்ட மரடோணாவுக்கு அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள். 💐

பெலே என்று செல்லப் பெயர்கொண்டு உதைபந்தாட்டத்தில் முடிசூடா மன்னனாக விளங்கிய  எடிசனுக்குப்  பிறகு உலகப் புகழ்பெற்ற வீரனாக விளங்கியவர் மாரடொனா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதைபந்தாட்டத்தின் கடவுள் இறந்துவிட்டார்- கடும் வேதனையின் மத்தியில் மரடோனாவின் புகழைப் பாடுகின்றது ஆர்ஜென்டீனா

 

அல்ஜசீரா

maradona-1-300x186.jpg

உலகினை விட்டு விரைவில் விடைபெற்றுள்ள  உதைபந்தாட்டத்தின் ஜாம்பவானை புகழும்; ஆக்ரோசத்துடனான கோஷங்களுக்கு மத்தியில் வில்சன் சிஸ்நெரோ அழகான சுவர் ஒன்றில் சாய்ந்திருக்கின்றார்.

அவர் அந்தச் சுவரில் இறைவன் இறைவனுடன் என எழுதியுள்ளார் அருகில் பத்து என்ற இலக்கமும் காணப்படுகின்றது.

மரடோனா காலாமானர் என்ற செய்தியை அறிந்ததும் அவர் ஆர்ஜென்டீனாவின் தலைநகரில் உள்ள பிரபலமான லாபொக்காவிற்கு சைக்கிளில் வந்துள்ளார். தனது வீட்டிலிருந்து அவர் இரண்டரை மணிநேரம் பயணம் செய்து அந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

மரடோனாவின் இறப்பை அறிந்ததும் பலரைப் போல அவரும் எங்கு செல்வது எனத் தெரியாத நிலையில் காணப்பட்டார்.

arge.jpg
டியகோ மரடோனா கழகமான பொக்கா யூனியர்சின் வீட்டின் முன்பாக பெருமளவு மக்கள் காணப்படுகின்றனர்.

ஆர்ஜென்டீனா என்றால் மரடோனா என்கின்றார் சிஸ்நெரோ, அவரது வேதனையை நீர் ததும்பும் அவரது கண்ணில் காண முடிகின்றது.

கொரோனா வைரசினால் உண்டான துயரத்தின் மத்தியில் இது மற்றுமொரு துயரம் என தெரிவிக்கும் அவர், தற்போது உதைபாந்தாட்டம் தனது கடவுளை இழந்துவிட்டது என்கின்றார்.

maradona2-300x158.jpg

இந்த வேதனையை ஆர்ஜென்டீனா முழுவதும் காண முடிந்தது. எதிர்பாராத அந்த மரணத்தை உணர்ந்தவேளை நாடு அறிந்தவேளை நாடு முழுவதும் அந்த வலி எதிரொலித்தது.

ஆர்ஜென்டீனாவை பொறுத்தவரை அவர் ஒரு எல்டியாகோ- குடிசைகளில் இருந்து வந்து உதைபாந்தாட்ட மைதானங்களில் வேறு எவரையும் விட ஆதிக்கம் செய்தவர் வைரமாய் மின்னியவர், உதைபாந்தாட்ட உலகை ஆக்கிரமித்து ஆர்ஜென்டீனாவிற்கு உதைபாந்தாட்ட உலகக் கிண்ணத்தை வழங்கியவர்.

ஆர்ஜென்டீனாவின் தலைநகரிலிருந்து வடபகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்தவேளை மரடோனா மாரடைப்பிற்குள்ளாகியுள்ளார். சமீபத்தில் அவருக்கு மூளையில் சத்திரகிசிச்சை இடம்பெற்றது, இதன் காரணமாக 60 வயது மரடோனாவின் உடல் நிலை குறித்து கரிசனை காணப்பட்டது.

maradona3-300x150.jpg
லாபொம்பெரனாவின் படியில் அமர்ந்திருக்கும் ரபியெல் பெலிடோ இது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது என்கின்றார், எங்கள் தேசத்தை சிறந்த முறையில் பிரதிநிதித்துவம் செய்தவர் எல் டியாகோ என அவர் தெரிவிக்கின்றார்.

அவர் விளையாடும்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் அவர் எதிராளியை சபிக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அவர் சபிப்பார், ஆடுகளத்தில் செய்த அனைத்து சாதனைகளுக்கும் அப்பால் அவர் எங்கள் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவம் செய்தார் என அவர் தெரிவிக்கின்றார்.

mara3-300x200.jpg
அவர் எங்களுக்கு தந்த அனைத்து மகிழ்ச்சியையும் ஆர்ஜென்டீனா சமூகம் எங்களிற்கு மீண்டும் தரவேண்டிய தருணம் இது. அவர் எங்களை மிக நீண்ட நாட்களாக மகிழ்சியில் வைத்திருந்தார், அவர் ஒவ்வொரு தடவையும் களத்தினை குத்தும்போது அந்த மகிழ்ச்சியை வர்ணிக்க முடியாது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

maradona4-1-300x200.jpg
புதன்கிழமை மதியத்திற்குள் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ஜென்டீனாவின் தலைநகரில் மரடோனாவினை புகழும் பாடல்களைப் பாடியபடி திரண்டுவிட்டனர். அவர்கள் கூடியிருந்த பகுதிக்கு கீழ் மரடோனாவின் பாரிய பதாகையொன்று காற்றில் ஆடியபடி காணப்பட்டது.

லாபொம்பெனராவிற்கு வெளியே மக்கள் அவரை புகழ்ந்து பாடிஆடிக்கொண்டிருந்தனர்
டியகோ மரணிக்கவில்லை அவர் கிராமங்களில் வாழ்கின்றார் என அங்கு காணப்படுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

https://thinakkural.lk/article/92798

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

நிருபர்:- உங்களுக்கு சரியாக ஆங்கில புலமை இல்லை என்று என்றைக்காவது வருந்தி இருக்கிறீர்களா?

மரடோனா:- நான் ஏன் வருத்தப்பட வேண்டும்?  என் தாய் மொழியில் சரளமாக பேச முடியவில்லை என்றால்தான் நான் அவமானப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா.

 

 
பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா

பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா! தமிழர்களிற்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!!

உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை.

ஆர்ஜென்ரீனா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்தில் ஓர்நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலரிற்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை.

அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பாரத்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பேருமகிழ்வடைந்துள்ளார். அந்தக்காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார்.

இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சை குத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்று புகழ்ந்தார் அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை சந்தோஷத்தில் கட்டி அணைத்தேன் என்றார்

புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.

பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகர னை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.

தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார்

எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழி முறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத் திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ஜென்டீனாவின் கடவுள்

ஆர்ஜென்டீனாவில் ‘எல் டியோஸ்’ – கடவுள் எனப் போற்றப்படுகின்ற கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரரான டியகோ மரடோனா நேற்று முன்தினம் காலமானார்.

தற்கால கால்பந்தாட்ட நட்சத்திரங்களான லியனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மரடோனாவின் காலப்பகுதிக்கு முன்னர் காணப்பட்டிருந்த பீலே ஆகியோரும் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களாகக் காணப்பட்டாலும் அவர் அடைந்த புகழை எவராவது அடைந்தார்களா என்பது சந்தேகமே.

நாட்டுக்காகவும், கழகங்களிலும் சாதித்த மரடோனா போதைப்பொருள், மதுவுக்கு அடிமையானமை, அதீத எடையைக் கொண்டிருந்தமை என களத்துக்கு வெளியேயான சிக்கல்களைக் கொண்டிருந்தபோதும் களத்தில் மந்திரவாதியொருவராகவே நோக்கப்பட்ட மரடோனா அவர் சார்ந்த இடங்களில் கடவுளாகவே நோக்கப்பட்டிருந்தார்.

1960 – ஆர்ஜென்டீனத் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸின் ஏழ்மையான புறநகர்ப்பகுதியொன்றிலேயே ஒக்டோபர் 30ஆம் திகதி 1976ஆம் ஆண்டு ஏழைக் குடும்பமொன்றிலேயே மரடோனா பிறந்திருந்தார்.

1972 – தனது 12ஆவது வயதிலேயே பந்தைக் கட்டுப்படுத்தும் திறமை காரணமாக உலகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

1976 – தனது 16ஆவது வயதில் ஆர்ஜென்டீனக் கழகமான ஆர்ஜென்டினோஸ் ஜூனியர்ஸுக்காக தனது தொழில்முறையிலான அறிமுகத்தை 1976ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி மரடோனா மேற்கொண்டார்.

தனது முதலாவது கோலை 1976ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி மரடோனா பெற்றிருந்தார்.

1977 – தனது 17ஆவது வயதில் ஆர்ஜென்டீனாவுக்காக தனது 17ஆவது வயதில் 1977ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

1979 – ஆர்ஜென்டீனாவுக்கான முதலாவது கோலை, தனது 19ஆவது வயதில் ஸ்கொட்லாந்துக்கெதிராக 1979ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் திகதி மரடோனா பெற்றார்.

1981 – ஆர்ஜென்டினோஸ் ஜூனியர்ஸுக்காக ஐந்தாண்டுகளில் 167 போட்டிகளில் விளையாடி 116 கோல்களைப் பெற்ற பின்னர் இன்னொரு ஆர்ஜென்டீனக் கழகமான பொக்கா ஜூனியர்ஸால் மரடோனா 1981ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

1982 – தனது முதலாவது உலகக் கிண்ணத்தில் மரடோனா விளையாடினார்.  

பொக்கா ஜூனியர்ஸுக்காக இரண்டாண்டுகளில் 40 போட்டிகளில் 28 கோல்களைப் பெற்ற நிலையில் அப்போதைய உலக சாதனையாக ஐந்து மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவால் மரடோனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

1983 – பார்சிலோனாவில் இருக்கும்போது 1983ஆம் ஆண்டு கொக்கேய்னைப் பயன்படுத்த மரடோனா ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

1984 – பார்சிலோனாவில் இரண்டாண்டுகளில் 36 போட்டிகளில் 22 கோல்களைப் பெற்ற நிலையில் மீண்டும் அப்போதைய உலக சாதனைத் தொகையான 7 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு இத்தாலியக் கழகமான நாப்போலியால் மரடோனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

1986 – மெக்ஸிக்கோவில் நடைபெற்ற 1986ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டீனாவுக்குத் தலைமை தாங்கி கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தார். இத்தொடர் முழுவதும் சிறப்பாகச் செயற்பட்டிருந்த மரடோனா, ஐந்து கோல்களைப் பெற்றதுடன், ஐந்து கோல்களைப் பெற உதவியிருந்தார்.

இந்த உலகக் கிண்ணத்தின் இங்கிலாந்துக்கெதிரான காலிறுதிப் போட்டியில் மரடோனா பெற்ற இரண்டு நேரெதிரான கோல்களாலேயே மரடோனா இன்றும் நினைவுகூரப்படுகிறார் என்றால் அது மிகையாகாது.

முதலாவது கோலானது மரடோனா கையால் தட்டி விட கோல் கம்பத்துக்குள் சென்றிருந்த நிலையில் அதை மத்தியஸ்தர் கவனிக்காமல் விட்ட நிலையில் அது கோலாகப் பதிவாகியிருந்தது. இதை கடவுளின் கையால் பெறப்பட்ட கோல் என மரடோனா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அடுத்த நான்காவது நிமிடத்தில் தனது அரைப்பகுதியிலிருந்து பந்தைக் கொண்டு சென்ற இங்கிலாந்து கோல் காப்பாளர், பின்களவீரர்கள் ஐவரைத் தாண்டி தனித்து கோலொன்றை மரடோனா பெற்றிருந்தார். உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரையிலும் பெறப்பட்ட சிறந்த கோலொன்றாக இது கருதப்படுகிறது.

1987 – நாப்போலிக்கு முதலாவது சீரி ஏ பட்டத்தை மரடோனா பெற்றுக் கொடுத்திருந்தார்.

1990 – 1990ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திலும் ஆர்ஜென்டீனாவுக்கு மரடோனா தலைமை தாங்கியிருந்த நிலையில், அவரால் 1986ஆம் ஆண்டு பெறுபேறுகளை கணுக்கால் காயமொன்று காரணமாக வெளிப்படுத்த முடியாமல் போனபோதும் ஆர்ஜென்டீனா இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

1991 – நாப்போலிக்காக ஏழு ஆண்டுகள் விளையாடி 188 போட்டிகளில் 81 கோல்களை மரடோனா பெற்றிருந்தார். நாப்போலிக்காக விளையாடும்போது கொக்கேய்னுக்கு தொடர்ச்சியாக மரடோனா அடிமையாகிய நிலையில், அது அவரது விளையாட்டில் தாக்கம் செலுத்தியிருந்தது.

1992 – கொக்கெய்னால் போதைப்பொருள் சோதனையொன்றில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 15 மாத தடையை எதிர்கொண்ட மரடோனா, 1992ஆம் ஆண்டு இன்னொரு ஸ்பானிய கழகமான செவில்லாவுடன் கைச்சாத்திட்டிருந்தார்.

1993 – செவில்லாவில் ஓராண்டு இருந்து 26 போட்டிகளில் ஐந்து கோல்களைப் பெற்றதைத் தொடர்ந்து, 1993ஆம் ஆண்டில் ஆர்ஜென்டினக் கழகமான நீவெல்ஸ் ஓல்ட் போய்ஸுக்காக விளையாடியிருந்தார்.

1994 – 1994ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இரண்டு போட்டிகளையடுத்து ஆர்ஜென்டீனாவுக்கு மரடோனா அனுபப்பட்டிருந்தார்.

இத்தொடரில் கிரேக்கத்துக்கெதிரான போட்டியில் மரடோனா பெற்ற கோலே, ஆர்ஜென்டீனாவுக்காக அவர் பெற்ற இறுதிக் கோலாக அமைந்தது. 34 கோல்களை ஆர்ஜென்டீனாவுக்காக மரடோனா பெற்றிருந்தார்.

தவிர, குறித்த தொடரில் நைஜீரியாவுக்கெதிராக ஆர்ஜென்டீனா விளையாடிய போட்டியே, மரடோனாவின் ஆர்ஜென்டீனாவுக்கான கடைசிப் போட்டியாக அமைந்தது. ஆர்ஜென்டீனாவுக்காக 17 ஆண்டுகளில் 91 போட்டிகளில் மரடோனா விளையாடியிருந்தார்.

1995 – 1995ஆம் ஆண்டு பொக்கா ஜூனியர்ஸுக்கு மரடோனா திரும்பியிருந்தார்.

1997 – பொக்கா ஜூனியர்ஸுக்கா 30 போட்டிகளில் ஏழு கோல்களை இரண்டாண்டுகளில் பெற்றதைத் தொடர்ந்து மரடோனா ஒய்வு பெற்றிருந்தார். மொத்தமாக 491 போட்டிகளில் 259 கோல்களை மரடோனா பெற்றிருந்தார்.

2008 – ஆர்ஜென்டீனாவின் பயிற்சியாளராக மரடோனா பதவி வகித்திருந்தார்.

2010 – 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டீனாவை காலிறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற மரடோனா, இத்தொடர் முடிவுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

2011 – ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் அல்-வஸால் கழகத்தின் பயிற்சியாளராக மரடோனா 2011ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரையில் காணப்பட்டிருந்தார்.

2017 – ஐ. அமீரகத்தின் புஜைராவின் பயிற்சியாளராக 2017ஆம் ஆண்டு காணப்பட்டார்.

2018 – மெக்ஸிக்க கழகமான டொரடொஸ் டீ சினலோவா கழகத்தின் பயிற்சியாளராக இருந்தார்.

2020 – ஆர்ஜென்டீனக் கழகமான ஜிம்னஸியா டீ லா பிளாட்டாவின் பயிற்சியாளராக இருந்தார்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆர்ஜென்டீனாவின்-கடவுள்/91-259928

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.