Jump to content

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்! - தமிழ்க்  குரல்

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று(புதன்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் சென்ற உறுப்பினர்களோடு, யாழ். மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின் போது, கலாசார மண்டபத்தின் அதிகாரிகள் அங்கு அமைந்துள்ள கட்டடங்கள், அரங்குகள் பற்றி விளக்கமளித்ததோடு, அங்குள்ள சகல பகுதிகளையப் பற்றியும் உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.

கலாசார மண்டபத் தொகுதியினுள் அமைந்துள்ள மூன்று கட்டடத் தொகுதிகள் மற்றும் 11 மாடிகளைக் கொண்ட பயிலரங்கு, தளங்களையும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்! | Athavan  News

http://athavannews.com/யாழ்ப்பாண-கலாசார-மண்டபத்/

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

இங்குள்ள பிரச்சினை யார் இதை பொறுப்பேற்று நடத்துவதென்று. மாநகர சபைக்கு ஆளணி பற்றாக்குறை, புதிய வேலையாட்கள் நிறையவே தேவைப்படும், அவர்களுக்கு படி அளக்க வேண்டும் இப்படியாக நிறைய தேவைப்பாடுகள் உள்ளன. எனவே மத்திய அரசு இதை பொறுப்பெடுக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறி. இருந்தாலும் ஒரு அழகான , எல்லா வசதிகளும் நிறைத்த ஒரு கட்டிட தொகுதி அமைக்கப்படடதட்கு இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Robinson cruso said:

நல்லதாப் போட்டுது....

லக்ஸர் ஈ தொய்பா இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் குண்டு வச்சுப்போட்டு நாலு கலாச்சார நிலையம் கட்டிக் கொடுக்கட்டும்.

இந்தியா அதற்கு நன்றி சொல்லட்டும். 

என்ன வங்காலையான்...ஓக்கேதானே....

😏😏

Link to comment
Share on other sites

4 minutes ago, Kapithan said:

நல்லதாப் போட்டுது....

லக்ஸர் ஈ தொய்பா இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் குண்டு வச்சுப்போட்டு நாலு கலாச்சார நிலையம் கட்டிக் கொடுக்கட்டும்.

இந்தியா அதற்கு நன்றி சொல்லட்டும். 

என்ன வங்காலையான்...ஓக்கேதானே....

😏😏

இதை அவர்கள் கட்டுறதுக்கு முதல் சொல்லி இருக்க வேண்டும். கட்டி முடித்து திறப்பு விழாவில் இதை தெரிவிப்பது இயலாமையின் வெளிப்பாடு. இருந்தாலும் எப்போதும் எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாகவும் சிந்திக்க பழகுவோம். அப்போதுதான் பிரச்சினைகளை தீர்க்கலாம். இல்லாவிட்டால் இதுவும் உங்களுக்கு பிரச்சினையாக மாறி விடும்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இதை அவர்கள் கட்டுறதுக்கு முதல் சொல்லி இருக்க வேண்டும். கட்டி முடித்து திறப்பு விழாவில் இதை தெரிவிப்பது இயலாமையின் வெளிப்பாடு. இருந்தாலும் எப்போதும் எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாகவும் சிந்திக்க பழகுவோம். அப்போதுதான் பிரச்சினைகளை தீர்க்கலாம். இல்லாவிட்டால் இதுவும் உங்களுக்கு பிரச்சினையாக மாறி விடும்.😜

அவன் கிடக்குறான் விடுங்கோ வங்காலையான். ஆனா .. அவனுக்கு நன்றி சொல்ல வேணும் எண்டு சொல்லுறது நீங்கதானே.. 😂

அவனே துவக்குத் தருவானாம். அவனே ட்றெயினிங்கும் தருவானாம். பிறகு அவனே எங்கள் எல்லோரையும் கொன்று குவிப்பானாம். 

எல்லாம் முடிஞ்சாப்பிறகு கட்டடம் கட்டியும் தருவானாம். நாங்க அவனுக்கு நன்றி சொல்ல வேணுமாம்.....😏

உது சரிவராது கண்டியளோ வங்காலையான்... 😏

இந்தியனுக்கு நன்றி சொல்லலாமெண்டா, காப்பெற் றோட்டுப் போட்ட சிங்களவனுக்கும் டாங்ஸ் சொல்லலாம்தானே....😂

பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுற வேல எல்லாத்துக்கும் சரிவராது பாருங்கோ...

செய்த அநியாயத்துக்கு ஏதாவது நிரந்தர அரசியல் தீர்வுக்கு முயற்சி பண்ணட்டும். அதுக்குப்பிறகு அவன மன்னிக்கிறதப்பற்றி யோசிக்கலாம். 

நன்றியாம் நன்றி. இந்த பட்டிகளுக்கெல்லாம் நன்றி ஒரு கேடா... 

😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசுக்கு நன்றி 
அதில் பயனடையபோகும் தமிழர்களுக்கும் வாழ்த்துகள். 😊😊😊 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்திய அரசுக்கு நன்றி 
அதில் பயனடையபோகும் தமிழர்களுக்கும் வாழ்த்துகள். 😊😊😊 

ஹாஹாஹா..😂😂

வேலியில போற ஓணானப் பிடிச்சு வேட்டிக்க விடுகிறீங்களப்பூ..

பிறாண்டேக்க தெரியும்... 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

ஹாஹாஹா..😂😂

வேலியில போற ஓணானப் பிடிச்சு வேட்டிக்க விடுகிறீங்களப்பூ..

பிறாண்டேக்க தெரியும்... 😂😂

இப்படி தானே இந்திய அரசின் வீட்டு திட்டத்தில் கோட்டை விட்டது சனம் இப்போதும் வீடு இல்லாமல் இருக்கிறது 🤥🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி தானே இந்திய அரசின் வீட்டு திட்டத்தில் கோட்டை விட்டது சனம் இப்போதும் வீடு இல்லாமல் இருக்கிறது 🤥🤥

இது வீட்டுத் திட்டமோ அல்லது கலாச்சார நிலையமோ தொடர்பானது அல்ல. இந்தியா ஈழத் தமிழர்களின் நன்றிக்கு உரியதா என்பது தொடர்பானது. புரிந்தால் சரி.. .. 🤥

Link to comment
Share on other sites

இவ்வாறான கட்டத்தொகுதிகள் சிறப்பாக பயன்படுத்தப்படும் போது தமிழருக்கு நன்மை பயக்கக்கூடியதே. வரவேற்கக்கூடதே. நீண்ட காலத்திற்கு சிறப்பாக உயர் தரத்தில்  பராமரிக்கவேண்டும். 

 நிரந்தர எதிரிகள் உலகில் இல்லை.  எம்மை  கல்வி, சமூக பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதே இன்றைய தேவை. எமது சாதுரியத்தை பயன்படுத்தி இதை சாதித்து வெற்றியடைய,  எதிரி என்று நாம் கருதுவோரின் உதவியும் தேவைப்படும். நாம் விரும்பாவிட்டாலும்  இதுவே உலக ஜதார்த்தம் 

தனியே வன்மத்தையும் பழிவாங்கும் மனப்பான்மையையும் வளர்ககும் இனங்கள்  என்றுமே விடுதலை அடையாது என்ற உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். 

குடும்ப சண்டைகளையே அடுத்த  சந்ததிக்கு கடத்தும் குடும்பங்கள் கூட  மகிழ்சசியாக வாழ்வதில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

இனியும் நாங்கள் விடுதலை அடைய என்ன மீதமிருக்கிறதாகக மகா கனம் பொருந்திய தாங்கள் கருதுகிறீர்கள்.. 🤔

இந்தியாவை மன்னிப்பதற்கு இந்தியா என்ன எங்களுக்கு என்ன பிராயச்சித்தம் செய்ததாக திரு துல்பன் அவர்கள் நினைக்கிறீர்கள்...😂😂

நாங்கள் மு இனத்தையும் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம் துல்பனே. இந்தியாவை மன்னிப்பதென்றால் ஏன் சிங்களத்தை மன்னிக்கக் கூடாது... 🤔

இந்தியா; இவங்கள் இன்னமுமா எங்களை நம்பிக்கிட்டிருக்கிறாங்கள். சிலோன்காறங்க ரொம்ப நல்லவங்களா இருப்பங்களோ... 😜😜

😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

சம்பந்தப்பட்டவருக்கு பாதிப்புகள்/உணர்வுகள்  ஏதும் இல்லை போல....😜

Link to comment
Share on other sites

9 hours ago, Kapithan said:

ஹாஹாஹா..😂😂

வேலியில போற ஓணானப் பிடிச்சு வேட்டிக்க விடுகிறீங்களப்பூ..

பிறாண்டேக்க தெரியும்... 😂😂

அது முந்தியே பிறாண்டினது அவர்களுக்கும் தெரியும் கபிதன், மன்னிப்பது மனித சுபாவம் ஆகையால் மன்னித்து விட்டார்களாம். ஆனால் இப்பவும் இரத்தம் ஒழுகுவது நின்றபாடில்லை. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று பிரித்தானிய நீ்ன்றம் அளித்த தீர்ப்பை, பிரித்தானிய அரசு ஏற்றுவிடுமோ என்ற தவிப்பில்..... ஓணான் வேலி வேலியாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் மாதிரி வாழ பழகவேண்டும் ...அவர்கள் எல்லாப் பக்கத்தால் வாற  உதவிகளை எடுத்து தங்கள் இனத்தை வளப்படுத்துவார்கள்...அதே மாதிரி நாங்களும் செய்து எங்கள் இனத்தை வளப்படுத்த வேண்டும் அதற்காக இந்தியாவையே , சீனாவையோ முழுசாய் நம்ப வேண்டும் என்பதோ அடிமையாய் இருக்க வேண்டும் என்பதோ தேவையில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

விடுதலைப்புலிகள் இருந்த போது தமிழினத்திற்காக அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் இப்போது கொடுக்க மாட்டார்கள் என நினைக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

20 hours ago, Kapithan said:

அவன் கிடக்குறான் விடுங்கோ வங்காலையான். ஆனா .. அவனுக்கு நன்றி சொல்ல வேணும் எண்டு சொல்லுறது நீங்கதானே.. 😂

அவனே துவக்குத் தருவானாம். அவனே ட்றெயினிங்கும் தருவானாம். பிறகு அவனே எங்கள் எல்லோரையும் கொன்று குவிப்பானாம். 

எல்லாம் முடிஞ்சாப்பிறகு கட்டடம் கட்டியும் தருவானாம். நாங்க அவனுக்கு நன்றி சொல்ல வேணுமாம்.....😏

உது சரிவராது கண்டியளோ வங்காலையான்... 😏

இந்தியனுக்கு நன்றி சொல்லலாமெண்டா, காப்பெற் றோட்டுப் போட்ட சிங்களவனுக்கும் டாங்ஸ் சொல்லலாம்தானே....😂

பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுற வேல எல்லாத்துக்கும் சரிவராது பாருங்கோ...

செய்த அநியாயத்துக்கு ஏதாவது நிரந்தர அரசியல் தீர்வுக்கு முயற்சி பண்ணட்டும். அதுக்குப்பிறகு அவன மன்னிக்கிறதப்பற்றி யோசிக்கலாம். 

நன்றியாம் நன்றி. இந்த பட்டிகளுக்கெல்லாம் நன்றி ஒரு கேடா... 

😡😡😡

நீங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் , என்னதான் சங்கூதி  கருத்து தெரிவித்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. இந்தியர்களோ , சிங்களவர்களோ என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கபோகின்றது. இன்னும் ஒரு எழுபது வருடத்துக்கு முடியுமென்றால் மாரடித்து பாருங்கோ. மற்றப்படி கிடைக்கிறவரைக்கும் எடுத்துக்கொள்ளுங்கள். முடியுமென்றால் நன்றி தெரிவித்துக்கொள்ளுங்கள். இல்லாவிடடாள் கப்பி நீங்கள் முன்னர் எழுதிய படி உங்கள் கவலை அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை. உங்கள் இஷடம். தெரிவிப்பது நாங்கள். தீர்மானிப்பது நீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் இருந்த போது தமிழினத்திற்காக அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் இப்போது கொடுக்க மாட்டார்கள் என நினைக்கின்றீர்களா?

கொடுப்பார்கள் அதை உரிய முறையில் வாங்கிப் பயன்படுத்த தமிழ் அரசியற் தலைமைகளுக்கு தெரியாது அல்லது விருப்பமில்லை 

Link to comment
Share on other sites

On 27/11/2020 at 12:08, Kapithan said:

இனியும் நாங்கள் விடுதலை அடைய என்ன மீதமிருக்கிறதாகக மகா கனம் பொருந்திய தாங்கள் கருதுகிறீர்கள்.. 🤔

இந்தியாவை மன்னிப்பதற்கு இந்தியா என்ன எங்களுக்கு என்ன பிராயச்சித்தம் செய்ததாக திரு துல்பன் அவர்கள் நினைக்கிறீர்கள்...😂😂

நாங்கள் மு இனத்தையும் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம் துல்பனே. இந்தியாவை மன்னிப்பதென்றால் ஏன் சிங்களத்தை மன்னிக்கக் கூடாது... 🤔

இந்தியா; இவங்கள் இன்னமுமா எங்களை நம்பிக்கிட்டிருக்கிறாங்கள். சிலோன்காறங்க ரொம்ப நல்லவங்களா இருப்பங்களோ... 😜😜

😡😡

எனது கருத்துக்கும் அது தொடர்பான உங்கள் விமர்சனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் பதில் கருத்து எழுத முடியவில்லை கப்பிதான். மனிக்கவும் 

On 27/11/2020 at 12:36, குமாரசாமி said:

சம்பந்தப்பட்டவருக்கு பாதிப்புகள்/உணர்வுகள்  ஏதும் இல்லை போல....😜

நான் எழுதிய  கருத்து புரியாவிட்டாலும் வழமைபோல என்மீதான வெறுப்பை தீர்ககமட்டும் உங்களால் கூறப்பட்ட கருத்து இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 11:31, Kapithan said:

இது வீட்டுத் திட்டமோ அல்லது கலாச்சார நிலையமோ தொடர்பானது அல்ல. இந்தியா ஈழத் தமிழர்களின் நன்றிக்கு உரியதா என்பது தொடர்பானது. புரிந்தால் சரி.. .. 🤥

இந்தியாவுக்கு வடகிழக்கு வேண்டும் அவ்வளவுதான் 😊 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எனது கருத்துக்கும் அது தொடர்பான உங்கள் விமர்சனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் பதில் கருத்து எழுத முடியவில்லை கப்பிதான். மனிக்கவும் 

என்னுடைய கேள்வியின் சாராம்சம் இதுதான்..

இத்தனை அழிவுகளுக்கும் மூல காரணமான இந்தியாவை மன்னிக்கவும் நன்றி சொல்லவும் ஆயத்தமாக இருப்பவர்கள் எல்லோரும், சிங்களம் செய்த அழிவுகளையும் மறப்போம் மன்னிப்போம் நன்றி சொல்வோம் என்று ஏற்றுக் கொள்ள ஆயத்தமா... ?

இல்லாவிட்டால் இந்தியாவுக்கு மட்டும்தான் இந்தச் சிறப்புச் சலுகையா.... ?

🤥🤥

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவுக்கு வடகிழக்கு வேண்டும் அவ்வளவுதான் 😊 

பாகித்தானுக்கும் காஸ்மீரம் வேண்டும், சீனாவுக்கும் அருணாச்சல் பிரதேசம் வேணும்... எப்படி வசதி...😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

இத்தனை அழிவுகளுக்கும் மூல காரணமான இந்தியாவை மன்னிக்கவும் நன்றி சொல்லவும் ஆயத்தமாக இருப்பவர்கள் எல்லோரும், சிங்களம் செய்த அழிவுகளையும் மறப்போம் மன்னிப்போம் நன்றி சொல்வோம் என்று ஏற்றுக் கொள்ள ஆயத்தமா... ?

எதையும் மறப்போம், மன்னிப்போம் என்று நினைக்கவேண்டியதில்லை. பின்னால் உள்ள அரசியல் காரணங்களை புரிந்துகொண்டு, அதில் தமிழர்களுக்கு என்ன நன்மை என்பதையும் கவனித்து, தீங்கானதை இராஜதந்திர ரீதியில் எதிர்கொள்ளவேண்டும். அரசியல் சாணக்கியமில்லாவிட்டால், பிறரின் நலன்களுக்காக பாவிக்கப்படும் பகடைக்காய்களாகத்தான் தமிழர்கள் இருப்பார்கள். இப்போது அப்படித்தான் நிலைமை!

ஒரு கேள்வி:

உங்களுக்கு இந்திய இராணுவம் தாயகத்தை ஆக்கிரமித்த வேளையில் கிடைத்த அனுபவத்தால் (KKS முகாம் போன்ற இடங்களில்) இந்தியா மீது வெறுப்பு வந்ததா? அல்லது இந்திரா காந்தி அம்மையாரின் படங்களை தமிழர்கள் தம் வீடுகளில் பார்த்து அழகுபார்த்த காலத்திலேயே அவர்களின் உண்மை சொரூபம் தெரிந்து  வெறுப்பு வந்ததா? அல்லது முள்ளிவாய்க்கால் அழிவை இந்தியா பின்னால் முன்நின்று நடாத்தியதால் ஞானோதயம் பெற்று வெறுப்பு வந்ததா? ப்ளீஸ் ரெல் மீ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்திரா பிறேம் போட்ட படம்; நான் பால்குடியனாக்கும்

இந்திய இராணுவம்; கோபம் வந்தது

முள்ளிவாய்க்கால் அழிவு; சுடலை ஞான(சாண)ம் வந்தது. உலகம் புரிந்தது. தீராத வெறுப்பும், கோபமும், பழிவாங்கும் உணர்வும் வந்தது. (பலரின் உள்ளக் கிடக்கையும் இதுதான். நான் வெளிப்படையாகக் கூறுவதற்கு, வாசிக்கும் மிகச் சிறிய எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கேனும் எங்களில் பலரின் உணர்வுகள் புரியட்டும் என்பதுதான் காரணம்) 

நெப்போலியன் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. ""இறைவனே எதிரியை நான் பார்த்துக் கொள்கிறேன். நண்பர்களிடம்(இந்தியா.. ?) இருந்து என்னைக் காப்பாற்று""

இப்போது நீங்கள் கூற விரும்பியதைக் கூறுங்கள்... 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

பழிவாங்க புறப்படும் முன் இரெண்டு சவக்குழிகளை தோண்டிக்கொள்.

ஒன்று நீ பழிவாங்குபவனுக்கு மற்றையது உனக்கு.

நாம் இருவரும் சமவயதினர் என எண்ணுகிறேன். உங்கள் அளவுக்கு எனக்கும் அதே அனுபவங்கள்தான் என நினைக்கிறேன்.

உங்கள் அளவுக்கு எனக்கும் இந்தியா மீது பாரிய வெறுப்பு உள்ளது. நம்பிக்கையீனமும். 

ஆனால் நண்பர்கள் என்று யாரும் இல்லாத ஒரு இடத்தில் ஒரு சுயலநலம்மிக்க, பலமிக்க கயவனாவது முகம் கொடுத்து பேசும் நிலையில் அந்த கயவனையும் வெறுத்து ஒதுக்குவதில் எந்த பயனும் இல்லை என நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

என்னைப் பொறுத்து..

எங்களுக்கும் தனக்குமான சவக்குழிகளை இந்தியாவே தோண்டி, அதில் எங்களை ஏற்கனவே கொன்று புதைத்தாகி ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போதே தனக்கு தோண்டப்பட்ட குழியில் இறங்கி நின்றுகொண்டு, அவர்களின் குழி மண்ணால்தான் எங்களை மூடி சீல் வைத்தார்கள். இப்போது எங்களுக்குத் தோண்டப்பட்டபோது எங்சிய மண்ணால் சிங்களவனும் சீனனும்  அவனது குழியை மூடத் தொடங்கிவிட்டார்கள். இதை பார்த்து இரசிக்க வேண்டியதுதான்.... 😂😂😂😂🤪🤪🤣😂😂🤣🤣

கயவனுடன் பேசுவதால் பயனேதும் உண்டென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா.. ?

சாட்சிக்காறன் காலில் விழுவதைவிட, சண்டைக்காறன் காலில் விழலாம் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

இந்தியர்களை தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டுணர்ந்து அனுபம்மிக்க தாங்கள்...

உண்மையைக் கூறுங்கள்... (உண்மையான பதில் வேண்டும் 😡...😂)

நீங்கள் இந்தியனை நம்புவீர்களா..

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

உங்களுக்கிருப்பது இந்தியா என்ற நாட்டினால் தமிழருக்கேற்பட்ட இழப்புக் குறித்த கோபமாக எனக்குத் தெரியவில்லை (அந்தக் கோபம் இங்கே நான் உட்பட பல யாழ் உறவுகளுக்கு இருக்கிறது). 

இது வேற பிரச்சினை, இனியும் என்வலப்பை எல்லை மீறித் தள்ளாமல் இருப்பது நல்லது கப்ரன்!🤐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.