Jump to content

கஞ்சிகுடியாறு குளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும்திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

கஞ்சிகுடியாறு குளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும்திட்டம்

SAVITHNovember 26, 2020
 
watermarked-IMG-20201125-WA0022%2B%25281%2529.jpg
(காரைதீவு நிருபர் சகா)

திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட பாரிய நீர்ப்பாசனக்குளமான கஞ்சிகுடியாறு குளத்தில் ஒரு லட்சத்து50ஆயிரம் திலாப்பியா (செல்வன்) மீன்குஞ்சுகளை விடும் திட்டம் நேற்று(24) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதனூடாக அப்பிரதேசத்திலிருக்கக்கூடிய பின்தங்கிய கிராமங்களின் மீனவர் சமுதாயத்திற்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஜக்கிய அமெரிக்காவின் "அன்புநெறி" அமைப்பின் அனுசரணையுடன் IMHO அமைப்பின் பரிந்துரைக்கமைவாக் அசிசிஸ்ற் ஆர்ஆர்(Assist RR) அமைப்பு இவ்வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகிறது. இதற்கு கிழக்குமாகாண மீன்பிடித்துறை பணிப்பாளர் சிவ.சுதாகரனின் உதவியும் பெறப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நேற்று 50ஆயிரம் திலாப்பியா மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டன. அடுத்த 6மாதங்களில் அடுத்தகட்ட 50ஆயிரம் மீன்குஞ்சுகளும் அடுத்த 6மாதங்களில் இறுதி 50ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்படவிருக்கின்றன.

இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேறறு திருக்கோயில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் சிறபபாக நடைபெற்றது. நிகழ்வில் அசிஸ்ற் ஆர்ஆர்(Assist RR) அமைப்பின் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றிஅமல்ராஜ் பிரதான அதிதியாகக்கலந்துகொணடார்.

மேலும் உதவி பிரதேசசெயலாளர் க.சதிசேகரன் கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராமங்களின் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு மாகாண மற்றும் தேசிய உத்தியோகத்தர்கள். தாண்டியடி மக்கள் சேவைகள் ஒன்றியம் இளைஞர்கள்இ கஞ்சி குடியாறு மீனவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

IMHO அமைப்பின் தலைவர் வைத்தியகலாநிதி டாக்டர் (திருமதி) ராஜம் இத்திட்டத்தை மேலும் விஸ்தரிக்க உத்தேசித்துள்ள விடயமும் இங்கு தலைவர் ஹென்றியினால் கூறப்பட்டது.

125,000.00 ரூபா பெறுமதியான இந்த மீன்குஞ்சுகள் மட்டக்களப்பு மீனவர் கூட்டுறவு திணைக்களத்தின் Nursary யில் 80 நாட்கள் வளர்க்கப்பட்டு சுமார் 2 தொடக்கம் 3 சென்டிமீட்டர் அளவு வளர்ச்சி அடைந்த நிலையில் இக்குளத்தில் விடப்பட்டுள்ளது. இந்த மீன் குஞ்சுகள் மூன்று மாதத்தின் பின்பு அறுவடை செய்யக் கூடிய அளவு வளர்ந்திருக்கும்.

இத்திட்டத்தின் ஊடாக கஞ்சிகுடிச்சாறு மீனவர் சங்கத்தின் 84 உறுப்பினர்களும் 5 மீன் வியாபாரிகளும் நேரடியாக பயனடைவர்.மறைமுகமாக 350 குடும்பங்களும் 5 மீன் வியாபாரிகளும் சுமார் 500 வாடிக்கையாளர்களும் பயனடைகின்றனர்.

மீனன்குஞ்சுகள் விடப்பட்டதன் பின்னர் கஞ்சிகுடியாறு மீனவர் சங்கக்கட்டடத்தல் பிரதேச செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் நன்னீர் மீன் வளர்ப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. ரூபஷ் சாகாமம் விழாவட்டவான் போன்ற குளங்களுக்கும் மீன்குஞ்சு வழங்குகின்ற திட்டத்தை விரிவுபடுத்துதல்.

2. மீன் குஞ்சு வழங்குகின்ற திட்டத்துடன் இதனை நிறைவு செய்யாமல் தொடர்ந்து இந்த மீனவர் சங்கங்களை வலுவூட்டுதல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துதல்.

3. சிறிய நீர் தடாகங்களை உருவாக்கிய அவற்றில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு மானிய அடிப்படையில் உதவி செய்தல். இதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் மீனவர் கூட்டுறவு திணைக்களம் மூலமாக வழங்கப்படும்.

4. தற்போது குளங்களில் இருந்து அறுவடை செய்யப்படுகின்ற மீன்கள் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது ஊடாக வியாபாரிகள் அதிக லாபம் அடைகிறார்கள் எனவே நேரடியாக மீன் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கு அதிக லாபத்தைப் பெற்றுக் கொள்கின்ற வகையில் மீன்களுக்கான பெருமதி சேர் திட்டத்தை உருவாக்குதல்.

5. புகை கருவாடு க்கு அதிக கேள்வி நிலவுவதால் மீனை பதப்படுத்தி கருவாடு உற்பத்தியை மேற்கொள்வதற்கு விசேட கவனம் செலுத்துதல்.

6. ஒரே நாளில் மீனை கருவாடாக பதப்படுத்துவதற்காக சாகாமம் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட மீன் காயவைக்கும் இயந்திரத்தை உடனடியாக பாவனைக்கு கொண்டு வருகின்ற வகையில் ஒரு நிதியை கண்டுபிடித்து மீனவர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்தல்.

7. சாகாமம் மீனவர் சங்கத்தால் மீன் காய வைக்கும் இயந்திரம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்ற போது அதனை கஞ்சிகுடியாறு மீனவர் சங்கத்துக்கு வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகளை பிரதேச செயலாளர் துரித நடவடிக்கை மேற்கொள்வார்.

8. வியாபாரிகளுக்கு மீன்களை வழங்குவதற்கு பதிலாக மீனவர் சங்கம் நேரடியாக மீன்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்கின்ற திட்டத்தை உருவாக்குவதற்கு தேவையான நடைமுறைகளை மேற்கொள்தல்.

9. குளங்களில் அதிக முதலைகள் இருப்பதால் அடிக்கடி மீன் வலைகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் மீனவர்கள் உடனடியாக தங்களுக்கு தேவையான வலைகளை கொள்முதல் செய்து தொழிலை மேற்கொள்வற்கான அவசர கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.(மீனவ சங்கத்திற்குள் அதிக நிதியை கையாளுகின்ற வகையில் சிறந்த பொறிமுறை ஒன்றை உருவாக்குதல்)

10. நன்னீர் மீன்பிடி ஊடாக கிராமத்திற்குள் இருக்கின்ற ஏனைய நபர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல்.

11. நீண்டகாலமாக குறிப்பிட்ட சிலர் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடுகின்ற அதேவேளை கிராமத்துக்குள் நீண்ட காலமாக இருக்கின்ற வர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதியை வழங்குகின்ற வகையில் புதிய அணுகுமுறை ஒன்றை உருவாக்குதல்.

12. மீனவ சங்கத்தால் சேமிக்கப்படுகின்றன நிதியிலிருந்து ஏனைய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குதல்.

13. மீன்பிடியும் விவசாயமும் ஒன்றாக மேற்கொள்ளுகின்ற இப்பிரதேசத்தில் விவசாயத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் வழங்குதல்.

14. தற்போது யானை வேலி அமைக்கப்பட்டு கொண்டிருப்பதால் மகா மற்றும் யல ஆகிய இரண்டு போகங்களும் மேட்டுநில பயிர்ச்செய்கை மேற்கொள்ளுகின்ற வகையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய பயிர் (peanuts, watermelon, sweet corn) செய்கை திட்டங்களை மேற்கொள்தல்

15. திருக்கோயில் பிரதேசத்திலே விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய பகை பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு சோலை விவசாய அமைப்பு எமது பிரதேசத்திற்குள் பணியாற்றுவதற்கு அழைத்தல்.

இன்று கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை வருகின்ற வாரங்களில் பிரதேச செயலாளர் தலைமையிலே கலந்துரையாடி தீர்க்கமான சில முடிவுகளை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

watermarked-IMG-20201125-WA0017%2B%25281%2529.jpg

 

watermarked-IMG-20201125-WA0019%2B%25281%2529.jpg

 

watermarked-IMG-20201125-WA0021.jpg

 

watermarked-IMGP0236.jpg

 

watermarked-IMGP0238.jpg

 

watermarked-IMGP0273.jpg

 

watermarked-IMGP0284.jpg

 

watermarked-IMGP0295.jpg

 

watermarked-IMGP0305.jpg

 

watermarked-%25E0%25AE%25AE%25E0%25AF%2580-00-768x576.jpg

 

watermarked-%25E0%25AE%25AE%25E0%25AF%2580-01-768x576.jpg

 

 

http://www.battinews.com/2020/11/1-50.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிஉங்களுக்கு இந்த அமைப்புகள் மற்றும் திட்டங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் ஏதும் தெரியுமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்

வாழ்த்துக்களும்  நன்றிகளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வெளிநாட்டு நன்கொடைகளை வைத்து அரசியல் செய்யாத வரைக்கும் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

தனிஉங்களுக்கு இந்த அமைப்புகள் மற்றும் திட்டங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் ஏதும் தெரியுமா.

இதில் பங்கேற்ற நபர்கள் (அரசு சார்பில்) தெரிந்தவர்கள் ஆனால் அந்த அமைப்பு பற்றி எதுவும் தெரியாது எந்த அமைப்புகளின் தொடர்பும் இல்லை தொடர்புகள் வைத்துக்கொள்வதும் இல்லை நான். 

புலிகள் காலத்தில் மீன் பிடி இல்லாமல் தற்போது அதிகம் மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது . காட்டுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டும் இந்த குளத்தை பார்க்க வேண்டுமாக இருந்தால் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதில் பங்கேற்ற நபர்கள் (அரசு சார்பில்) தெரிந்தவர்கள் ஆனால் அந்த அமைப்பு பற்றி எதுவும் தெரியாது எந்த அமைப்புகளின் தொடர்பும் இல்லை தொடர்புகள் வைத்துக்கொள்வதும் இல்லை நான். 

புலிகள் காலத்தில் மீன் பிடி இல்லாமல் தற்போது அதிகம் மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது . காட்டுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டும் இந்த குளத்தை பார்க்க வேண்டுமாக இருந்தால் 

நன்றி தனி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.