Jump to content

சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு - இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு - இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா.?

Screenshot-2020-11-26-12-12-16-398-com-a 

சமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை அளந்து கொள்ளவும் அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்திருந்து நகர்த்துவதுமே பிரதான விடயமாகிவிட்டது. அத்தகைய அரசியல் நகர்வு ஒன்று கடந்த 15.11.2020 அன்று நிகழ்ந்துள்ளது. அதனை பொருளாதார உறவாகப்பார்த்தால் மட்டும் போதாது அதனூடான அரசியல் ஒன்றுக்கான கதவும் திறக்கப்பட்டுள்ளது. அது ஆசிய-பசுபிக் வட்டகைக்கான அரசியல் பொருளாதாரமாகவே தெரிகிறது. அதனால் பெரும் தேசங்கள் மட்டுமல்ல இலங்கையும் அதிக பாதுகாப்பினை புவிசார் அரசியலிலும் பூகோள அரசியலிலும் அடைந்துள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய அரசியல் பொருளாதாரத்தை தேடுவதாக அமைந்துள்ளது.

15.11.2020 அன்று ஆசியான் அமைப்பின் (ASEAN) 10 உறுப்பு நாடுகளும் பசுபிக் பிராந்திய நாடுகளான அவுஸ்ரேலியாஇ சீனாஇ ஜப்பான்இ நியூசிலாந்துஇ தென்கொரியா ஆகிய ஐந்து நாடுகள் உட்பட 15 நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அமைப்பாக பிராந்திய பொருளாதார விரிவாக்க ஒத்துழைப்பு ( Regional Comprehensive Economic Partnership) விளங்குகிறது. 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் இல் நிகழ்ந்த கிழக்காசிய உச்சி மகாநாட்டில் சீன மற்றும் ஜப்பானிய பொருளாதார அமைச்சர்களது உரையாடல் விரிவான பொருளாதார வழிமுறை குறித்து வெளிப்படுத்த ஆரம்பித்தது.இதன் தொடர்ச்சியாக 2012 இல் கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மகாநாட்டில் பிராந்திய பொருளாதாரம் பற்றிய முதல் கட்ட பேச்சுக்கள் ஆரம்பமாகின. 2012 முதல் 2020 முதல் 29க்கு மேற்பட்ட கூட்டங்களை நடாத்தியதோடு கடந்த 15.11.2020 அன்று வியட்நாம் தலைநகரில் காணொளி மூலம் நிகழ்ந்த மாநாட்டில் 15 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் செயலாளர்கள் மற்றும் துறைசாரர் நிபுணர்கள் கலந்து கொண்டு உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர்.

உலகளாவிய ரீதியில் பாரிய வர்த்தக பொருளாதார வர்த்தக கூட்டொன்று ஆசிய பசுபிக் நாடுகளில் வலுவான பொருளாதார அமைப்பு என்றும் கூறப்படுகின்றது. உலக மக்கள் தொகையில் 30% இனை ஈடு செய்யும் இந் நாடுகள் உலக வர்த்தகத்தில் 39% பங்களிப்பை வழங்குகின்ற நாடுகளாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஏறக்குறைய 49.5 ரில்லியன் டொலர் முதலீட்டைக் கொண்ட நாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றது.

இவ் உடன்படிக்கை 15 நாடுகளுக்கும் இடையில் உற்பத்திப் பொருட்களின் தரம், விலைக் கட்டுப்பாடு, உதிரிப் பாகங்களின் பரிமாற்றம், தேவையான வளப் பங்கீடு, தொழிநுட்ப உதவி, உற்பத்தித் திறன், ஊக்குவிப்பு ஆகியவற்றை செயல்படுத்துவதென வரையறுத்திருப்பதோடு அதற்கான விதிமுறைகளையும் உருவாக்கி உள்ளது. இப் பிராந்திய பொருளாதாரக் கூட்டின் பிரதான இலக்காக வர்த்தகத்தை ஊக்குவித்தல், சுதந்திரமான வர்த்தகப் பொறிமுறையை உருவாக்குதல், முதலீட்டை அதிகரித்தல், பிராந்திய நாடுகளுக்கிடையில் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்தல், நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதியைப் பலப்படுத்துதல் போன்ற அடிப்படையில் பிராந்தியக் கூட்டை வலுப்படுத்துவதாக உள்ளது.

இவ் அமைப்பை ஆரம்ப கட்டத்தில் இருந்து 28வது கூட்டத் தொடர் வரை நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கலந்து கொண்டிருந்தது. ஆனால் தாய்லாந்தில் நடைபெற்ற அக் கூட்டத் தொடரில் இந்திய சார்பு நிலையில் முன் வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கைகளை பிராந்தியக் கூட்டு ஏற்கத் தவறியதன் விளைவாக இவ் உடன்பாட்டில் கையெழுத்திடாது விலகியமைக்கான காரணமாக இந்திய உள்துறை அமைச்சர் அமீர்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகின்ற போது இப் பிராந்திய ஒத்துழைப்பு உண்மை நோக்கத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் விளைவுகள் நியாயமானவையாக இல்லை என்றும் இறக்குமதி உயர்வுக்கு எதிராக போதிய பாதுகாப்பு இல்லை என்றும் சீனாவுடன் போதிய வேறுபாடு இந்தியாவுக்கு உண்டு என்றும் அடிப்படை விதிகளையும் சந்தை அமைப்பு முறையையும்இ கட்டணமில்லாத தடைகள் போன்றவை தொடர்பில் நம்பகத் தன்மையோ உத்தரவாதமோ இல்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால் இந்தியா கூறிய காரணங்கள் பொருத்தமற்றவை என்றும் இந்தியா இவ் ஓத்துழைப்பு நிறுவனத்தில் இணைவதற்கான அனைத்து ஒழுங்குகளும் தயாராக உண்டு என்றும் சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறித்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு அமையமானது பிராந்திய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.

முதலாவது கொவிட் 19 பரவலுக்குப் பின்னர் பிராந்திய அடிப்படையில் அவ்வாறே உலகளாவிய ரீதியிலும் புவிசார் பொருளாதாரம் (புநழ- நுஉழழெஅiஉள) ஒன்றுக்கான வாய்ப்புக்களும், தேவைப்பாடும் அதிகரித்து வருகின்றது. அதன் ஒரு பரிமாணமானது ஆசிய பசுபிக் நாடுகளில் பொருளாதார ஒத்துழைப்பும் சீனாவின் தலைமையில் உருவாகி இருக்கிறது. இது சீனாவுடனான வர்த்தக உறவும் அதன் முக்கியத்துவமும் உணரப்பட்டது போல் பிராந்திய உற்பத்தியின் பரிமாற்றமும் இலகுவானதும் சுமூகமானதுமான சூழலை உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது சீனாவின் அரசியல் பலத்தை அதிகரித்துள்ளது என்ற வாதம் ஏற்றுக் கொள்ளப்படும் அளவுக்கு அதன் பொருளாதாரப் பலமும் பிராந்தியப் பொருளாதாரப் பலமும் அதிகரிக்க வாய்ப்பு எற்பட்டுள்ளது. கொவிட் 19 ஒரு பொருளாதாரத் தேக்கத்தை நாடுகளுக்கு இடையில் இனங்காண வைத்துள்ளது. அதிலும் பிராந்தியங்கள் முதல் நெருக்கடி மையங்களாக மாறியுள்ளன. அவற்றின் உற்பத்திப் பரிமாணங்கள் அத்தகைய நெருக்கடியில் அகப்பட்டு;ளளன. அதிலிருந்து பிராந்திய பொருளாதா விரிவாக ஒத்துழைப்பு இலகுவான நடைமுறையாக ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை மாற்றுகிறது என்பது 15 நாடுகளாலும் உணரப்படுகின்றது.

இரண்டாவது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிற்பாடு பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு (TPP)என்ற அமைப்பிலிருந்து 2017 அமெரிக்கா விலகியதை அடுத்து அத்தகைய பொருளாதார ஒத்துழைப்பு முடிபுக்கு வந்தது. இதனை அடுத்து ட்ரம்பின் தலைமையில் இந்தோ -பசுபிக் தந்திரோபாயக் கூட்டொன்று ஏற்படுத்தப்பட்டது. அதன் வளர்ச்சியாக குவாட் என்ற அமைப்பு அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டது. அது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் 'ஒரே சுற்று ஒரே பாதை" எனும் சீன விரிவாக்கத்தைத் தடுப்பதாக அமைந்திருந்தது. இச் சூழலில் மேற்குறித்த 15 நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பானது அமெரிக்க இந்தியக் கூட்டின் இந்தோ பசுபிக் தந்திரோபாயத்தையும் குவாட் அமைப்பின் பாதுகாப்பு நகர்வுகளையும் தகர்க்க ஆரும்பித்துள்ளது. குறிப்பாக ஜப்பான், அவுஸ்ரேலியா இரண்டு நாடுகளும் சீனா தலைமையிலான வர்த்தக பொருளாதார ஒழுங்கமைப்பில் இணைந்தமை அமெரிக்க, இந்திய அணிக்குப் பெரும் சவாலாக மாறியது. தற்போது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் பலம் அதிகரித்து வருகின்றது.

மூன்றாவது உலகளாவிய ரீதியில் மிக நீண்ட காலமாக நிலைத்திருக்கும் பொருளாதார ஒத்துழைப்பு அமையமான ஆசியான் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பில் இணைந்திருப்பது சீனாவின் பலத்தை இப் பிராந்தியத்தில் அதிகரிக்க வைத்துள்ளது. குறிப்பாக நப்டாவின் (NAFTA) தோல்வியும், சார்க் அமைப்பின் (SAARC)தொழிற்படு திறனின்மையும்இ ஐரோப்பிய யூனியனின் (EU-Brixt) உடைவும் ஆசியான் (ASEAN) அமைப்பிற்கான தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றது. ஒரு வகையில் குறிப்பிடுவதானால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் வெற்றிகரமான பொருளாதார ஒத்துழைப்பு அமையமாக ஆசியான் விளங்குகின்றது. இது ஆசிய பசுபிக் நாடுகளுக்கு பலமான வர்த்தகக் கூட்டாகவே அமைந்துள்ளது.

எனவே பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கொவிட் 19க்குப் பின்னான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்ட அம்சமாகும். அதற்கான இலக்கும் செயல்பாடும் வெற்றிகரமானதாக அமைவதற்கு புவிசார் அரசியல் பொறிமுறை பாரிய ஒத்துழைப்பை ஏற்படுத்தக் கூடியது. உற்பத்தியும் பரிமாற்றமும் பிராந்தியங்களுக்குள் பரிமாற்றப்படுகின்ற போது அது ஒரு பலமான அரசியல் பொருளாதார இருப்பை ஏற்படுத்தக் கூடியது. சீன அமெரிக்கப் போட்டியானது வெளிப்படையானதாக விளங்குகின்ற போது ஏற்படுகின்ற வாய்ப்புக்களை சீனா தனதாக்குகின்றது. இது அமெரிக்க செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி நகர வழிவகுக்குமொன கணிக்கப்படுகிறது. அமெரிக்க ஆட்சி மாற்றமும் பைடன் -ட்ரம் மோதலும் வெள்ளை மாளிகை ஆட்சி மாற்றத்துக்கான நெருக்கடியும் சீனாவுக்கான வாய்ப்புக்களை அதிகர்த்துள்ளது. சரியான கால நேரத்தை கணித்து அமெரிக்கா நெருக்கடிக்குள் திணறிக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் சீனா ஒரு பாரிய பாய்ச்சலை சாத்தியப்படுத்தி இருக்கின்றது. அது மட்டுமன்ன்றி அமெரிக்க கூட்டின் வலுவான சக்திகளைத் தகர்தெடுத்ததோடு அந் நாடுகளின் அடிப்படைப் பொருளாதாரத் தேவைகளை சீனா சரியாகப் பயன்படுத்தி உள்ளது. அமெரிக்க இந்தியக் கூட்டு இராணுவ ரீதியிலும் கடல் பயிற்சிகளிலும்; ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் மையப்படுத்தி அதற்கான முனைப்புகளை சீனா பாதுகாக்க ஆரம்பித்திருக்கின்றது. எனவே சீனாவின் உலகத்தை ஆளும் திறன் என்பது இன்னொரு வலுவான கட்டத்தை நேர்க்கி அடியெடுத்து வைத்துள்ளது. சீனாவின் பலம் என்பது ஆசியானின் பலமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

bond1.png 

சீனாவின் எழுச்சியானது இலங்கையில் புவிசார் பூகோள சவாலை எதிர் கொள்வதற்கான வாய்ப்பாகவே அமைந்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமெரிக்க இந்திய நெருக்குவாரங்களால் சீன சார்பு நிலைக்குள் பயணிக்க முடியாத சூழல் கடந்த ஒரு வருடமாக நீடித்தது. ஆனால் தற்போது அமெரிக்க நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றமும் சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழபை;புக்கான உடன்படிக்கையும் அத்தகைய நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கான வாய்ப்பினைத் தந்துள்ளது. பிராந்திய பொருளாதார விரிவாக்க உபாயம் என்பது அமெரிக்கா இந்தியக் கூட்டுக்கு நெருக்கடியையும் சீனா தலைமையிலான அரசுகளுக்கான வாய்ப்பையுமே உருவாக்கியுள்ளது. இத்தகைய உலக ஒழுங்கு இலங்கை ஆட்சியாளர்களின் நலன்களுக்கான உத்தரவாதத்தை அதிகரித்துள்ளது.

அருவி இணையத்திற்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

http://aruvi.com/article/tam/2020/11/26/19668/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.