Jump to content

மாவீரர் தினத்தை தடை செய்யாமலிருப்பதே நாகரிகமாகும்


Recommended Posts

மாவீரர் தினத்தை தடை செய்யாமலிருப்பதே நாகரிகமாகும்

 

 

-கே.எல்.ரி. யுதாஜித்

போரிலே கொல்லப்பட்ட வீரர்கள், அஞ்சலிக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக இருதரப்பினராலும் அங்கிகரிக்கப்படுவதே நாகரிகமடைந்த எல்லா உலக நாடுகளிலும் நடைமுறையாக உள்ளது. இந்த அடிப்படையில் மாவீரர் தினத்துக்கான அஞ்சலி நிகழ்வுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பிலான தடைவிதிப்பு விடயங்கள் குறித்து கருத்து வெளியிகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
http://static2.tamilmirror.lk/assets/uploads/image_7b806245b1.jpg

இலங்கையில் தமிழ் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் சித்தாந்த ரீதியான ஒரு போராட்டமல்ல. அதாவது, ஆட்சியைக் கவிழ்த்து பொதுவுடமை அல்லது சோசலிச அரசை உருவாக்குகின்ற நோக்கம் கொண்டதல்ல. மாறாக, குடியேற்ற நாட்டு ஆட்சிக் காலத்தின் இறுதியில் பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்த தமது உரிமையை மீட்டெடுப்பதற்கான போராட்டமே ஆகும். இவ்வகையில் இது உரிமைப் போராட்டமாகும்.
தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன என்பதை பண்டாரநாயக்கா தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரையிலான அவ்வப்போதைய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அரசியல் தீர்வுக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை செயலுருப் படுத்தும் தருவாயில் பல்வேறு காரணங்களால் நின்று போயின. ஆக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் என்பது, இலங்கை அரசியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும்.
அனுசரணை வழங்கிய நாடுகளின் உதவிகளோடு அவ்வப்போது ஆட்சி பீடம் ஏறிய இலங்கை அரசுகள், போராளிகளோடு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. இது அவர்களுடைய போராட்டத்தை, இலங்கை அரசும் அனுசரணை வழங்கிய நாடுகளும் ஏற்றுக் கொண்டன என்பதன் வெளிப்படை அம்சமாகும்.
இத்தகைய நடைமுறைகளின் வெளிப்பாடாகச் சமாதானப்பேச்சுவார்த்தைகள் நிகழாத காலங்களில், சண்டைகள் நடைபெற்ற பொழுதும்கூட, பல சந்தர்ப்பங்களில் போரில் கொல்லப்பட்ட இரண்டு பக்க வீரர்களும் பரிமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. அதாவது பயங்கரவாதிகள் என்று அரசினால் வர்ணிக்கப்பட்ட  போராளிகள், அதே போராளி, இயக்கத்துக்கு குறிப்பாக, விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டனர். இதன் மறுதலையாக ஆக்கிரமிப்பபுப் படை என்று போராளிகளால் நாமமிடப்பட்ட கொல்லப்பட்ட இராணுவத்தினர் இராணுவத்திற்குக் கைமாற்றப்பட்டார்கள்.

இந்த நிகழ்வின் வெளிப்பாடு என்ன? போரிலே கொல்லப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளாகவோ ஆக்கிரமிப்புப் படையாகவோ கொள்ளப்படவில்லை. அவர்கள் இரு பக்கத்தினராலும் அங்கிகரிக்கப்பட்ட வீரர்களாகவே மதிக்கப்பட்டனர். கைமாற்றம் செய்யப்பட்ட இந்த வீரர்கள் கண்ணியத்துக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதோடு அவர்கள் கௌரவமான அஞ்சலியைப் பெறுவதை இரு பக்கத்தினரும் ஏற்றுக் கொண்டார்கள். நாகரிகமடைந்த எல்லா உலக நாடுகளிலும் இதுவே நடைமுறையாக உள்ளது.

இந்த வகையிலே கொல்லப்பட்ட போராளிகள் என்போர், கண்ணியத்துக்கும் மரியாதை செலுத்துவதற்கும் உரியவர்களாவர். போர் நடைமுறைகளில் அங்கிகரிக்கப்பட்ட ஒரு நாகரிகச் செயற்பாடாகவே இது கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வகையில், ஈழப் போரில் ஈடுபட்ட மாவீரர்களின் அஞ்சலி என்பது, அங்கிகரிக்கப்பட்ட ஒரு நடைமுறை என்பதையும் நாகரிக உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை என்பதனையும் அரசு மறுக்க முடியாது.

இப்பொழுது போர் ஒழிந்துவிட்டது. போர் ஒழிந்தாலும் போரிலே உயிர்த்தியாகம் செய்த இரு பக்க வீரர்களுக்குமான அஞ்சலியை இரு பக்கத்தினரும் தொடர்ந்து செய்ய வேண்டியது, நாகரிக உலகின் ஒரு விழுமியமாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இனி, ஏன் குறித்த இந்த நாளில் அதனைச் செய்ய வேண்டும் என்கின்ற விடயத்தை நோக்கலாம். விடுதலைப்புலிகள் செயற்பாட்டில் இருக்கும் காலத்தில், கண்ணியத்துக்குரிய இந்த வீரர்களுக்கான அஞ்சலியை அவர்கள் ஒரு குறித்த நாளில் செய்து வந்தார்கள். அப்பொழுது வீரர்களின் உறவினர்களும் பொது மக்களும் அதில் கலந்து கொண்டார்கள்.

இப்பொழுது விடுதலைப்புலிகள் செயற்பாட்டில் இல்லை. கொல்லப்பட்ட வீரர்களின் உறவினர்களும் பொது மக்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அந்தச் செயற்பாட்டை தொடர்ந்து செய்வதற்கு அனுமதிப்பதே நாகரிகமான ஒரு விழுமியமாகும். இயக்கம் தடை செய்யப்பட்ட போதிலும் கொல்லப்பட்ட வீரர்களுக்கான அஞ்சலி என்பது தடை செய்யப்பட்ட ஒரு நிகழ்வு அல்ல என்பதை மேலே கண்டுள்ளோம். ஆகவே இந்த மாவீரர்களை தடை செய்யப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் என்று முத்திரை குத்துவது பொருத்தமல்ல.
தற்போது விடுதலைப்புலிப் போராளிகள் என்று யாரும் இல்லை. போரில் உயிர் தப்பிய எல்லாப் போராளிகளும் அவரவர் குடும்பத்தோடு சேர்ந்து அந்தந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களது குடும்பங்களோடு சேர்ந்து வாழும் உரிமையை அரசு மறுக்குமா? அவ்வாறு மறுப்பது நாகரிகமா?
ஆக, எவ்வாறு போராளிகளாக இருந்து சமூக வாழ்வுக்குள் இரண்டறக் கலந்து விட்ட முன்னாள் போராளிகள் சமூக அங்கத்தவர்களாகக் கருதப்படுகின்றார்களோ, அதே போன்றே மாவீரர்களும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற நாமத்துக்குள் வைத்துப் பார்க்கப்பட முடியாதவர்களாகின்றார்கள்.

இந்த வகையில் அவர்களுக்கான அஞ்சலியை, மரியாதையை, வணக்கத்தை செலுத்துவதை அரசு தடை செய்யக்கூடாது. நாகரிக உலகின் இந்த நல்ல செயற்பாட்டை படை வீரர்களுக்கும் சிங்களப் பொது மக்களுக்கும் விளக்கிச் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
நாடு அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வளமடைவதற்கு மக்களின் ஒற்றுமை அவசியம் என்பதை அரசு ஏற்றுக் கொள்ளும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளுவதெனில், மேற் கூறப்பட்ட நியாயப்படுத்தல்களின் அடிப்படையில் மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்துவதை ஒரு பிரச்சினையான விடயமாக எடுத்துக் கொள்ளாது, தமிழ் மக்களின் தார்மீகக் கடமையை செய்வதற்கான அனுமதியை வழங்காவிட்டாலும் அது தொடர்பில் முரண் நடவடிக்கைகளில் ஈடுபடாது கண்டும் காணாமல் இருப்பது இந்த நாட்டின் எதிர்கால சுமூக நிலைக்கு வழிவகுக்கும் ஒரு செயற்பாடாக அமையும். 

இந்த விடயத்தை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் கவனத்திற் கொண்டு செயற்படுவது இலங்கைத் தேசிய கீதத்தில் குறிப்பிடப்படும் '~நாமெலாம் ஒரு கருணை அனை பயந்த எழில் கொள் சேய்கள் எனவே இயல்புறு பிளவுகள் தமைஅறவே இழிதென நீக்கிடுவோம்" என்ற வாசகங்களுக்கு உண்மையான அர்த்தத்தை வழங்கும் செயற்பாடாய் அமையும்.

Tamilmirror Online || மாவீரர் தினத்தை தடை செய்யாமலிருப்பதே நாகரிகமாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு மிராண்டிகளிடம்... நாகரீகத்தை, எதிர்பார்க்க முடியாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.