Jump to content

தமிழ் அரசியல் கைதிகளுக்காக தற்கொலை செய்த செந்தூரனின் நினைவு நாள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளுக்காக தற்கொலை செய்த செந்தூரனின் நினைவு நாள்!

FB_IMG_1606384797343.jpg?189db0&189db0

 

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தன்னூயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனின் (18-வயது) ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

2015ம் ஆண்டில் இதே நாள் குறித்த மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிக்கு கோரிக்கை விடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

இந்த மாணவன் தற்கொலை கோண்டாவில் புகையிரத நிலையத்தில் இன்றைய தினம் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

  • FB_IMG_1606385095072.jpg?189db0&189db0

     

     

https://newuthayan.com/தமிழ்-அரசியல்-கைதிகளுக்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்குமிழ் அணைத்து எண்ணை விளக்கில் இயங்கிய வலி கிழக்கு தவிசாளர் அலுவலகம்

 

01-8-11-1024x768.jpgவலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகம் இன்றைய தினம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்ட நிலையில் எண்ணை விளக்கில் இயங்கியது.

இது பற்றி தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில், இம் முறை இறந்தவர்களை பொது இடங்களில் நினைவில் கொள்வதை என்னையும் பிரதிவாதியாகக் கொள்ளப்பட்டு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாயிலாக நீதிமன்றம் தடைசெய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பினை நான் மதிக்கின்றேன். அதனை மீறமுடியாது. மீறுவது சட்டப்படியான குற்றமாகவுள்ளது.

மேலும் தவிசாளரான எனக்கு எதிராக மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக புலனாய்வு அறிக்கையினைக் கொண்டு மல்லாகம் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இத் தீர்ப்பிலும் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த தவணையில் பொலிசாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந் நிலையில் நினைவுகூறலை நீதிமன்றத்தீர்ப்பிற்புக்கும் அறிவுறுத்தலுக்கும் மதிப்பளித்து பொது இடத்தில் பிரதேச சபை உறுப்பினர்களுடன் வழமைபோன்று நான் மேற்கொள்ளவில்லை. இதேவேளை எமது ஆட்சிப் பிரதேசத்தில் உள்ள 75 ஆயிரத்து 334 பிரஜைகளுக்கும் நான் முதற் பிரஜை என்ற வகையில் எனது அலுவலக அறையின் மின்குமிழ்களை அணைத்துவிட்டு எண்ணை விளக்கில் எனது அலுவலகக் கடமைகளை ஆற்றினேன்.

எமது கோப்பாய் பிரதேசத்தினைச் சேர்ந்த செந்துரான் என்ற மாணவன் 5 ஆண்டுகளுக்கு முன் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னை மாய்த்துக் கொண்டார். அவரது இழப்பினை மனம் ஏற்றுக்கொள்ளாதபோதும் உயிர்நீத்த நிலையில் அவரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றேன் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/93227

Link to comment
Share on other sites

இலங்கைத்தீவு, சிறீலங்கா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுத் தற்போது, மனித உருவம் கொண்ட மிருகங்களால் ஆளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தியாகராசா நிரோசு போன்றவர்கள் தங்கள் கடமைகளை அந்த மிருகங்களின் கண்ணில் படாமல் இருட்டில் செய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும்  அவர்கள் மாவீரர்களையும்,இறந்தவர்களையும் மனதாலும், உடலாலும் ஆராதித்து நினைவுகூர்வது போற்றுதற்குரியது. 🙌  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.