பிரபாகரனை கடைசி வரை நம்பிய ஈழத்தமிழர்கள் | பத்திரிகையாளர் ப்ரியம்வதா உருக்கம்

By
nunavilan,
in எங்கள் மண்
-
Tell a friend
-
Topics
-
25
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
உண்மை. இந்த சதியின் பின்னால் இந்தியா இருக்கிறதென்பது இப்போது வெளிப்படையாகிறது. வேறு எந்தக் காரணத்தை விட்டாலும், மாணவர்களின் போராட்டத்திற்கோ, உலகத் தமிழரின் போராட்டத்திற்கோ பயந்து பேரினவாதிகள் மீண்டும் இந்த நினைவாலயத்தை நிறுவுவதற்குச் சந்தர்ப்பமேயில்லை என்கிற ஒற்றைக்காரணமே போதும் அவர்கள் இதற்குள் இல்லையென்பதை நிறுவுவதற்கு.
-
By பா. சதீஷ் குமார் · Posted
ரத்த மகுடம்-129 ஐந்து சாம்பல் நிற புறாக்களும் அந்த மனிதர் மீது வீற்றிருந்ததை சில கணங்கள்தான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் கண்டான்.அது தொடர்பான சிந்தனைகள் அவனுக்குள் விருட்சமாக வளர்வதற்குள் அந்த மனிதர் தன் கண்களைத் திறந்தார்.‘‘வணக்கம்... பறவை சித்தர் என்பது தாங்கள்தானா..?’’ முன்னால் வந்து அவரை வணங்கினான் விநயாதித்தன். http://kungumam.co.in/kungumam_images/2020/20201225/21.jpg ‘‘மற்றவர்கள் இந்த எளியவனை அப்படி அழைக்கிறார்கள்... மற்றபடி அடியேன் சித்தனல்ல... அந்த நிலையை எட்ட முயற்சித்துக் கொண்டிருப்பவன்...’’ சாளுக்கிய இளவரசனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருவேளை, தான் காண வந்த மனிதர் இவரில்லையோ..? சங்கடத்துடன் தன் இடுப்பைத் தடவினான். ஓலை பாதுகாப்பாக இருந்தது. பறவை சித்தரின் உதட்டில் புன்னகை பூத்தது. ‘‘ஓலையா..?’’ விநயாதித்தனின் புருவங்கள் உயர்ந்தன. ‘‘ஆம்...’’‘‘அனுப்பியது யார்..?’’சில கணங்கள் அமைதியாக இருந்தவன், ஒரு முடிவுடன் சொன்னான். ‘‘எங்கள் ஒற்றர் படையைச் சேர்ந்தவர்...’’‘‘ஆணா பெண்ணா..?’’வியப்பின் உச்சியில் சாளுக்கிய இளவரசன் ஊசலாடினான். ‘‘ஆண்...’’ ‘‘இந்த எளியவனைச் சந்திக்கும்படி அதில் எழுதப்பட்டிருக்கிறதா..?’’ விநயாதித்தன் தன்னையும் அறியாமல் ‘ஆம்’ என தலையசைத்தான். தன் மீது அமர்ந்த புறாக்களை கணத்துக்கும் குறைவான நேரம் பறவை சித்தர் அளவிட்டார். ‘‘ஐந்து புறாக்கள்...’’ முணுமுணுத்தவர் தன் முன்னால் நின்றிருந்தவனை உற்றுப் பார்த்தார். ‘‘சாளுக்கிய தேசத்தைச் சேர்ந்தவனாக நீ இருக்கவேண்டும்...’’ ‘‘அத்தேசத்தின் இளவரசன் நான்...’’பறவை சித்தர் நகைத்தார். ‘‘ஐந்து புறாக்கள் என் மீது அமர்ந்தபோதே இதைப் புரிந்துகொண்டேன்... எல்லா ரகசிய நடவடிக்கைகளுக்கும் சாளுக்கியர்கள் ஐந்து புறாக்களைத்தானே பறக்க விடுவார்கள்..?’’ இமைக்காமல் அவர் முகத்தையே விநயாதித்தன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘பறவை சித்தர் சக்தி வாய்ந்தவர் என எல்லோரும் சொல்கிறார்கள் இளவரசே... எதிர்காலத்தை அப்படியே சொல்லும் வல்லமை அவருக்கு இருக்கிறதாம்... ஒருமுறை அவரை நீங்கள் சந்தித்தால் நல்லதென்று தோன்றுகிறது...’ என தனக்கு அனுப்பப்பட்ட... இப்பொழுது தன் இடுப்பில் பாதுகாப்பாக இருக்கும் ஓலையில் எழுதப்பட்ட... வாசகங்களை நினைவுகூர்ந்தான். ‘‘நண்பர்களைக்கூட ஒற்றர் படையைச் சேர்ந்தவர்களாகக் குறிப்பிடும் வழக்கம் இளவரசருக்கு இருக்கிறது போல் தெரிகிறது...’’ அதிர்ச்சியை மறைத்துக் கொள்ள விநயாதித்தன் சிரமப்பட்டான். ‘‘ஓலையை அனுப்பியவரும் ஒரு தேசத்தின் இளவரசர்தானே..?’’ அதுவரை தன் முன் இருப்பவர் நம்பத்தகுந்தவரா இல்லையா என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த சாளுக்கிய இளவரசன், தன் முன் வீசப்பட்ட இக்கேள்விக்குப் பின் ‘இவர் பறவை சித்தர்தான்’ என்ற முடிவுக்கு வந்தான். சரியாகச் சொல்லிவிட்டாரே! ‘‘ஆ...ம்... கங்க நாட்டு இளவரசன்... என் நண்பன்...’’ பறவை சித்தர் தன் இமைகளை சில கணங்கள் மூடி, பின் திறந்தார். ‘‘இந்த எளியவனைக் காண வந்ததன் காரணம்..?’’ இனி உண்மையைப் பேசுவதே நல்லது என்ற முடிவுக்கு விநயாதித்தன் வந்துவிட்டதால், ‘‘பல்லவர்களை நாங்கள் பூண்டோடு அழிக்க வேண்டும்... நடைபெறும் போரில் சாளுக்கியர்கள் வெற்றி பெற வேண்டும்... அதற்கு உங்கள் ஆசி தேவை...’’ என்றான்.பறவை சித்தர் அமைதியாக இருந்தார். ‘‘ஏன் ஆசி வழங்க மறுக்கிறீர்கள்..?’’ ‘‘கோரிக்கை அப்படி...’’ ‘‘என் கோரிக்கையில் என்ன தவறு...’’ ‘‘கோரிக்கையே தவறுதான்... அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்கு ஆசி வழங்க மாட்டார்கள்...’’‘‘ஒரு நாட்டின் இளவரசன் வேறு எப்படிப்பட்ட கோரிக்கையை வைப்பான் என்று நினைக்கிறீர்கள்..? எப்படி உங்கள் இயல்பு எல்லா உயிரினங்களும் வாழவேண்டும் என்று நினைப்பதோ அப்படித்தானே எதிரி நாட்டை அழிக்க வேண்டும் என ஓர் இளவரசன் விரும்புவதும்...’’ ‘‘அதற்காகத்தானே உன் தந்தை அசுரப் போர் வியூகத்தைக் கைப்பற்றியிருக்கிறார்..?’’ நரம்புகள் அதிர விநயாதித்தன் அப்படியே சிலையானான். இப்படியொரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகம் வெளிப்படுத்தியது. ‘‘அதை நம்பச் சொல்கிறீர்களா..?’’ ‘‘ஏன் நம்பக் கூடாது என்று நினைக்கிறாய்..?’’ ‘‘அதைக் கொண்டு வந்தவன் கரிகாலன்...’’ ‘‘கரிகாலன் யார்..?’’ ‘‘எங்கள் எதிரி நாட்டு உபசேனாதிபதி. நாடே இல்லாத சோழர் குலத்தின் இளவரசன்...’’ ‘‘அவன் ஏன் அந்த அசுரப்போர் வியூகத்தைக் கைப்பற்றி உங்களுக்குத் தரவேண்டும்..?’’ ‘‘அவன் சாளுக்கியர்களின் நண்பன் என்று என் தந்தை நினைக்கிறார்... பல்லவர்களுடன் இருந்தபடியே அவர்களுக்கு எதிராக அவன் குழிபறித்துக் கொண்டிருப்பதாக நம்புகிறார்...’’‘‘அதை நீ நம்பவில்லையா..?’’‘‘இல்லை... பல்லவர்கள் நலனுக்காக சாளுக்கியர்களுடன் நட்பு பாராட்டும் வேடதாரிதான் அந்த கரிகாலன்...’’ ‘‘உன் கூற்றுக்கு ஆதாரம் இருக்கிறதா..?’’விநயாதித்தன் தயங்கினான். ‘‘இல்லை... உள்ளுணர்வு கரிகாலனை நம்பவேண்டாம் என எச்சரித்தபடி இருக்கிறது...’’‘‘அதே உள்ளுணர்வு அசுரப் போர் வியூகம் குறித்து என்ன சொல்கிறது..?’’சாளுக்கிய இளவரசன் உதட்டைக் கடித்தான். தன் வலது தொடையில் அமர்ந்திருந்த புறாவை எடுத்து பறவை சித்தர் தடவிக் கொடுத்தார். ‘‘வினாவுக்கான விடை இந்தப் புறாக்கள்தான்... ஐந்து புறாக்கள்... இவை சாளுக்கியர்கள் ரகசிய செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் உபாயம் மட்டுமல்ல...’’ நிமிர்ந்து விநயாதித்தனைப் பார்த்தார். அவரே தொடரட்டும் என சாளுக்கிய இளவரசன் அமைதியாக நின்றான்.‘‘மணிமங்கலம் போர் நினைவில் இருக்கிறதா..?’’ மணிமங்கலம் ஊரின் பழமையான ஆலமரத்தின் கீழே பத்மாசனமிட்டு கரிகாலன் அமர்ந்திருந்தான். சீரான பிராணாயாமத்தில் இருந்தவனின் மனக்கண்ணில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் நடந்த குருக்ஷேத்திரப் போர்க் காட்சிகள் விரிந்தன.குறிப்பாக தன் உறவினர்களுக்கும் ஆசான்களுக்கும் எதிராக போர் புரியமாட்டேன் என தன் காண்டீபத்தை தேரில் வைத்துவிட்டு குழப்பத்துடன் அமர்ந்திருந்த அர்ஜுனனும் பாஞ்சஜன்யம் சங்கை தன் வலது கையில் ஏந்தியபடி அவனுக்கு அபயம் அளிக்கும் பகவான் கிருஷ்ணரின் தோற்றமும்.அக்காட்சியையே கரிகாலன் உன்னிப்பாக தன் அகத்தில் கவனிக்கத் தொடங்கினான்...‘‘எப்படி உன்னால் மறக்க முடியும்..? சாளுக்கியர்களால் மட்டுமல்ல... தமிழகத்தைச் சேர்ந்தவர்களாலும் எக்காலத்திலும் அப்போரை மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா..? விந்திய மலைக்கு தென்புறப் பிரதேசத்தின் குருக்ஷேத்திரப் போர் என்றால் அது மணிமங்கலம் போர்தான்...’’ எவ்வித உணர்ச்சியும் இன்றி சொன்ன பறவை சித்தர், தன்மீது அமர்ந்திருந்த ஐந்து புறாக்களையும் ஒவ்வொன்றாக எடுத்து தடவிக் கொடுத்து அவற்றைப் பறக்கவிட்டபடியே தொடர்ந்தார்.‘‘சாளுக்கிய மன்னர்... மாமன்னர் என்று நீங்கள் குறிப்பிடுவீர்கள் அல்லவா... அவர்... இரண்டாம் புலிகேசி... நான்கு முறை பல்லவர்களை வெற்றி கொண்டார். ஐந்தாவது முறையாகப் படை திரட்டி வந்த அவரை மணிமங்கலத்தில்தான் அப்போதைய பல்லவ மன்னனான நரசிம்மவர்மன் எதிர்கொண்டான்...’’ என்றபடி ஐந்தாவது புறாவைப் பறக்கவிட்டார்.‘‘அதனால்தான் இந்த ஐந்து புறாக்கள்தான் விடை என்றேன்... அந்த மணிமங்கலம் போரில் பல்லவப் படைக்குத் தலைமை தாங்கியவன் பரஞ்சோதி. அவன் மூன்று அசுரப் போர் வியூகங்களை சாளுக்கியர்களுக்கு எதிராக வகுத்தான்... அவற்றில் ஒன்றைத்தான் பல்லவ மன்னரான நரசிம்மவர்மர் தேர்வு செய்தார்.அந்த வியூகத்தின் அடிப்படையில் நடைபெற்ற போரில் முதல் முறையாக சாளுக்கியர்கள் தோற்றார்கள்... நான்கு முறை சாளுக்கியர்கள் பெற்ற வெற்றிக்கு பழிவாங்கும் விதமாக பல்லவப் படை அந்த வெற்றியை ருசித்தது... தோற்று ஓடிய சாளுக்கியப் படைகளையும் உங்கள் பாட்டனார்... மாமன்னர்... இரண்டாம் புலிகேசியையும் பரஞ்சோதி தலைமையிலான பல்லவப் படை துரத்திக் கொண்டே சென்றது... எதுவரை..? சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபி வரை!வாதாபியை அடைந்த பல்லவப் படை பரஞ்சோதியின் வழிகாட்டுதலுடன் அந்நகரையே தீக்கிரையாக்கியது... அதனால்தான் மணிமங்கலத்தில் தொடங்கி வாதாபி வரை பல்லவப் படை நிகழ்த்திய கொடூரத்தை இப்பிரதேசத்தின் குருக்ஷேத்திரப் போர் என மக்கள் குறிப்பிடுகிறார்கள்...’’ நிறுத்திய பறவை சித்தர், சில கணங்கள் இமைக்காமல் விநயாதித்தனைப் பார்த்தார்.சாளுக்கிய இளவரசனுக்குள் அனல் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் நயனங்கள் தீயைக் கக்கின.‘‘அப்படிப்பட்ட அசுரப் போரால்... அதுவும் பரஞ்சோதி வகுத்த ராட்சஷப் போர் வியூகத்தால்... அதே பல்லவர்களை எதிர்கொண்டு பழி தீர்க்க வேண்டும் என உன் தந்தையும் சாளுக்கிய தேசத்தின் இப்போதைய மன்னரும் இரண்டாம் புலிகேசியின் புதல்வருமான விக்கிரமாதித்தர் விரும்புகிறார்... அதற்காக இன்றைய பல்லவ தேசத்தின் உபசேனாதிபதியான கரிகாலனை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறார்... ஒரு மன்னரின் கடமை எதுவோ அதை அவர் நிறைவேற்றுகிறார்... இதை ஏன் நம்பவும் ஏற்கவும் மறுக்கிறாய்..?’’ ‘‘அப்படியானால் நடைபெறவிருக்கும் சாளுக்கிய-பல்லவ போரில் பரஞ்சோதி வடிவமைத்த... இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும்... அசுரப் போர் வியூகத்தை நாங்கள் பயன்படுத்தினால் வெற்றி பெறுவோம் என்கிறீர்களா..? இதையே உங்கள் ஆசியாகக் கருதலாமா..?’’ பதிலேதும் சொல்லாமல் பறவை சித்தர் எழுந்து அருகிலிருந்த புதர் பக்கமாகச் சென்றார்...நாழிகை நகர்ந்ததே தவிர அவர் வரவில்லை. விநயாதித்தன் அந்தப் புதரை அடைந்து ஆராய்ந்தபோது அங்கு எந்த மனிதரும் இருப்பதற்கான - இருந்ததற்கான - அறிகுறி தெரியவில்லை!கரிகாலன் தன் கண்களைத் திறந்தான்.அகத்தில் தெரிந்த அர்ஜுனனுக்கு அபயம் அளிக்கும் கிருஷ்ணரின் தோற்றம் புறத்திலும் தெரிந்தது. ‘இதே தோற்றத்தில் பகவான் கிருஷ்ணர் காட்சியளிக்கும் கோயிலை நான் இந்த மண்ணில் கட்டுவேன்... என்னால் முடியவில்லை என்றால்... எனது சந்ததி... சோழர் குலம்... வருங்காலத்தில் இதே மணிமங்கலத்தில் ஆலயம் எழுப்பும்...’ தரையில் அடித்து சத்தியம் செய்தான்.இரண்டு நாழிகைகளுக்குப்பின் பூனை போல் அடியெடுத்து வைத்து பறவை சித்தர் வந்தார்.விநயாதித்தன் அங்கில்லை. ‘அப்பாடா...’ பெருமூச்சு விட்டார். ‘சித்தராக நடிப்பது எவ்வளவு கடினம்... சித்தர்கள் எப்படி உரையாடுவார்கள் என்று தெரியாமல் நம் போக்கில் வார்த்தைகளை விட்டிருக்கிறோம்... நல்லவேளையாக சாளுக்கிய இளவரசன் நம்பிவிட்டான்...’நிம்மதியுடன், அருகில் இருந்த மரத்தில் ஏறி, மூன்று கிளைகளுக்கு இடையில் கை கால்களும் வாயும் கட்டப்பட்டு இருந்த ஒரு மனிதனை இறக்கி கட்டுகளை அவிழ்த்தார்.கட்டப்பட்ட மனிதனும் நரம்புகளும் எலும்புகளும் தெரிய... ஜடை முடியுடன் சித்தர் கோலத்தில்தான் இருந்தான்.‘‘என்ன காரியம் செய்துவிட்டாய்...’’ கை கால்களை உதறியபடி அந்த மனிதன் சீறினான். ‘‘நாம் இருவருமே பல்லவ ஒற்றர்கள். கரிகாலர்தான் என்னை இங்கு அனுப்பி சாளுக்கிய இளவரசனிடம் பேசச் சொன்னார்... கெடுத்து விட்டாயே...’’‘‘இல்லை... நிறைவேற்றிவிட்டேன்...’’ பறவை சித்தராக விநயாதித்தனிடம் உரையாடியவன் சிரித்தான். ‘‘என் தலைவி சிவகாமியின் கட்டளைப்படி!’’ http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17566&id1=6&issue=20201220 -
https://www.toptamilnews.com/seeman-at-the-temple/?feed_id=10289&_unique_id=5ffd415d664c5 துலாபாரம் என்று இருப்பதையும் கொஞ்சம் கவனியுங்கோ அண்ணை.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
https://www.docdroid.net/lCxC0su/4246-pdf இந்த இதழ் தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் தோழர்..👌 -
இந்தப் பிரச்சனைக்குப் பின்னால் யார் ..? இந்தியாதான் வேறு யார்.. எனக் கேட்ட போது நையாண்டி செய்தவர்கள் இப்போது என்ன கூறப்போகிறார்கள்.. ? இந்தியா எனுந் துரோகியே யாவற்றிற்கும் கால்... 😡
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.