Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கடந்த புரட்டாசி மாதத்திலிருந்து எனது வேலையில் நிறைய மாற்றங்கள் அதனால் இன்றுவரை வேலைப்பளு மிக அதிகம்... computer, laptop, mobile போன்ற இலத்திரனியல் சாதனங்களை பார்த்தாலே எரிச்சல் வருமளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்..அதனால் எப்போது வெளியே ஒரு கடற்கரையோர நடையோ, மலைப்பாதை நடையோ இல்லை வழமையான மலைப்பாதை கார்ப்பயணமோ போகலாம் என யோசித்தப்படி இருந்த சமயத்தில்தான் இந்த நடைப்பயண சந்தர்ப்பம் வந்தது.. 

எப்பொழுதும் இலத்திரனியல் சாதனங்களையே பார்த்தபடி இருந்த கண்களுக்கும் ஒரு விடுதலை.. அத்துடன் என் மனதிற்கு பிடித்த இயற்கையோடு இணைந்த நடைப்பயணம்..  அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..

4-FE437-C3-0262-4-EA3-A9-A9-B27-F4938-D0

Ku-rin-gai Chase National Park
சிட்னியின் வடக்கே அமைந்துள்ள தேசிய பூங்கா முக்கியமான வரலாற்றை உடைய மனதை மயக்கும் அழகோடு இணைத்து ஒரு மலைப்பிரதேசம்..

இது அவுஸ்ரேலியாவின் இரண்டாவது பழமையான தேசிய பூங்கா, முக்கியமான வரலாற்றை அழகிய அழகுடன் இணைக்கிறது... வரலாற்று இடங்களின்ப்பட்டியலில் இந்த பூங்காவும் உள்ளது..

B6-BE3-EE8-49-EC-4-CA3-8-BFB-055-E9-B423

சிற்றோடைகள், மழைக்காடுகள் மற்றும் யூகலிப்ட்கள், பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களை கொண்ட இந்த பூங்காவிற்கு இயற்கையே இதன் அரண்களாகும்...
சைக்கிள் ஓட்டுதல், மீன்பிடித்தல், இயற்கையோடு இணைந்து இரவை/பொழுதை முகாமிடுதல், மலைப்பாதை நடைப்பயணங்களுக்கு ஏற்றவை

இந்த பூங்கா குரிங்-காய்  அல்லது குரிங்கை என்று அழைக்கப்படும் ஒரு பழங்குடியினரின் பூர்வீக நிலமாகும்.. இதனால் அவர்களது பெயராலேயே அழைக்கப்படுகிறது.. 

நான் வாழுமிடத்திலிருந்து 45 நிமிட கார்பயணத்தில் உள்ள இந்த இடத்தில் காலைப் பொழுதை கழிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது..நடைப்பாதை பயணத்திற்குரிய ஆடை,  பாதணிகள், தொப்பி, தண்ணீர்ப்போத்தல்களுடன் ஒரு கைத்தடியையும் கொண்டு( மரகிளைக்கிளைகளை தொடுவதற்கு ஒரு தயக்கமும், சரிவான இடங்களில் ஊன்றி இறங்கி ஏறவும், அடர்த்தியான புதர்களை ஓரளவிற்கு விலத்தி நடக்கவும்.) பயணம் தொடங்கியது.. 

06107-C05-CA30-4211-AC6-B-51-D0-B577-C57
காலைவேளையில் அதிகளவு மனிதர்கள் வரும் முன்பு போனால் அங்கே உங்களை முதலில் வரவேற்பவர் பல்லியினத்தை சேர்ந்த இவரே..எந்தவித கவலையுமின்றி உலாவும் பல்லியினத்தை சேர்ந்த அவருக்கு தொல்லைகள் கொடுக்காவிட்டால் தன் போக்கில் உலாவுவார்...

large.7A5D840D-2E63-45E7-8884-9200EE208343.jpeg.60d6310509c84f68efd555303837b99d.jpeg
நீல நாக்கு பல்லி, அவுஸ்ரேலியாவில் அதிகமாக காணப்படும் ஊர்வனங்களில் ஒன்றாகும், இது NSW இன் பெரும்பகுதி முழுவதும் காணப்படுகிறது. பெரிதாக இருந்தாலும் கூச்ச சுபாவம் கொண்ட உயினமாகும்.

அடுத்ததாக தரையில் அடைகாத்து கொண்டிருந்த The masked Lapwings (Vanellus miles), தன்முட்டைகளை எடுத்துவிடுவோம் என்ற பயத்திலும் சனநாடமாட்ட எரிச்சலிலும்  கத்தியது.. பறந்துவந்து அதன் பெருங்குரலில் கத்தி கொத்திவிடுவது போல பயமுறுத்தியது இந்த  கூடு கட்டும் பருவத்தில் அதன் தற்காப்பு நடத்தைக்கு பெயர் பெற்ற masked lapwings பறவை.

large.2F3334C2-C4D2-4CD9-AFA7-81A62D4D8FAE.jpeg.11d45a387c32c23b8d06153b251cfa49.jpeg

மஞ்சள் நிறத்திலான குச்சிபோன்ற இறகுகளை உடையதால், மஞ்சள் ஈட்டிகளை சுமந்து செல்வதாக பழங்குடி மக்கள் கூறுவதுண்டு...

நடை தொடரும்

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
 • Like 6
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், கதையுடன் படங்கள் மிக முக்கியம் தலைவியே ......!   😁

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

தொடருங்கள், கதையுடன் படங்கள் மிக முக்கியம் தலைவியே ......!   😁

நன்றி சுவி அண்ணா

படங்கள் நிறையவே உண்டு.. படம் எடுக்கப்போய் பாறையில் சறுக்கிய அனுபவமும் உண்டு..

முதலாவது நடைப்பாதை தடம்:

இங்கே பல நடைபயிற்சி தடங்கள் (Aboriginal Heritage Walk loop 4.4km, Gibberagong Track 8.3km(இருவழி), Rainforest Track- 1.6km(இரு வழி), Warrimo Track- 6.2km(ஒரு வழிபயணம்), Bobin Head Trail loop-12.9km என பல உண்டு.. இதில் நேரத்திற்கும், உடல்நிலைக்கும் ஏற்ப ஒன்றிரண்டை தேர்ந்தெடுத்து நடக்கலாம்

முதலாவதாக போனது ஒரு மணித்தியால (ஒரு வழிப்பயண நேர அளவு) உள்ள ஒரு மழைக்காட்டுப்பாதை(Rainforest Track). இந்த தடம் Cockle Creek எனும் சிற்றோடையோடு சேர்ந்த ஒரு மழைக்காட்டை சென்றடையும்.. போகும் பாதையில் இந்த இடத்திற்குரிய பழங்குடிமக்களின் அடையாளங்களை பாறைகளிலும் நிலத்திலும் பார்க்க முடிந்தது.. அதில் ஒன்றுதான் சிவப்பு கைகளின் குகை(Red hands cave). 

large.D2D263F9-DBED-4C36-B249-63157BCDD5C5.jpeg.7fa8bca10ff8d990d1c294430b34bc2d.jpeg

large.178427B7-A475-4C52-A155-13D64D944265.jpeg.b4c0cc7e0603bb8040f0fc667d0e1fdd.jpeg

நடை தொடரும்

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து தொடருங்கள் .. 👍

கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் ..👌

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் .நாமும் பயணிப்போம்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

large.F4B9DFE7-A01D-4965-9DAC-5B718D3784EA.jpeg.99c57b99f3d4945d750d0f5c3f4599e1.jpeg
இந்த மழைகாட்டு தடம் ஓரளவிற்கு சீரான ஆனால் நடுத்தரமான ஏற்ற இறக்கங்களை கொண்டது.. அப்படியிருந்தும் தடம் மாறி பின் ஒருமாதிரி சரியான தடத்திற்கு வந்த அனுபவம் மறக்கமுடியாது.. 

 

large.142B754A-A45D-485D-ADB5-F9F424FB7A0B.jpeg.90338b43ee9587c9467d9e3e5bcb91b3.jpegமழைக்காட்டு  நடைபயிற்சி தடமுடிவிடம்.


மழைக்காட்டை அடைந்தபின் திரும்பும் வழியில்  Gibberagong Track 8.3km(இருவழி) ஒரு மணித்தியாலத்தியம் வரை நடந்து அதன் அழகை ரசித்துவிட்டு மீண்டும் வந்த வழியே மழைக்காட்டு தடப்பாதை வழியாக ஆரம்பபுள்ளியை அடையமுடியும்.. 

இந்த Gibberagong trackல் நடக்கையில் எடுத்த சில காட்டுப்பூக்களை இங்கே பதிவிடுகிறேன்..

684899-AE-943-D-45-D2-AA24-094-C5-F1-EA3
565457-C9-DEC4-4-E5-E-9650-6964-C4-E028-
1-EC81456-0-BE7-41-C6-B5-FB-325-DDC4-EBB

இ்ந்த Gibberagong தடம் மிகவும் குறுகலானது. சிற்றோடையின் கரை உங்களது கண்களுக்கு அருகில் இருப்பது போல விரைவில் இடத்தை அடைய முடியும் என்ற தோற்றத்தை தரும் ஆனால் இலகுவிலோ விரைவாகவே அடையமுடியாது. கிட்டதட்ட 3 மணித்தியாலங்களுக்கு மேல் நடக்க வேண்டும் என்பதால் இடையில் திரும்ப வரவேண்டியதாயிற்று... 

large.56A0705A-75A0-4834-894F-DF2FB4285771.jpeg.1ec900c0db62d7805a4ea8882154dccd.jpeg

நடை இன்னும் ஒரு பகுதியுடன் முடிவடைந்துவிடும்

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
 • Like 6
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தொடர்ந்து தொடருங்கள் .. 👍

கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் ..👌

 

18 hours ago, ஈழப்பிரியன் said:

தொடருங்கள் .நாமும் பயணிப்போம்.

 

17 hours ago, சுவைப்பிரியன் said:

தொடருங்கள்

 

16 hours ago, விளங்க நினைப்பவன் said:

நடைப்பயணம் படங்கள் interesting 👍

மிக்க நன்றி..

எனக்கு இந்த மாதிரி இயற்கையோடு அமைந்த bushwalking மிக மிக பிடிக்கும்.. குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் ஒரே வேகத்தில் அல்லது ஒரே ரசனை கொண்டவர்களாக இருந்தால் இன்னமும் சுவராசியமாக இருக்கும்.. ஆனால் அடிக்கடி சந்தர்ப்பங்கள் கிடைப்பது இல்லை.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது blue mountains போல இருக்கிறது, அனால் அருவிகளுடன்.

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kadancha said:

இது blue mountains போல இருக்கிறது, அனால் அருவிகளுடன்.

 

Blue mountains இதைவிட அடர்த்தியான காடுகளையும், பல நடைபாதை தடங்களையும் குகைகளையும் கொண்டது என நினைக்கிறேன்.. அதில் இரண்டே இரண்டு நடைபாதை அனுபவமே எனக்கு உள்ளது.. 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோடைகாலத்தில் இப்படியான இயற்கைசார்ந்த இடங்களுக்கு அடிக்கடி போவதுண்டு. ஐரோப்பாவில் பாம்பு, பூச்சி, பூரான் எல்லாம் இல்லை என்ற தைரியத்தில் எங்கும் கால் வைக்கலாம். ஆனால் அவுஸில் கவனமாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மதிய உணவை முடித்துவிட்டு Cowan Creek எனும் இந்த ஆற்றின் அடுத்த பக்கத்தில் இருக்கும் Warrimoo Trail, Bobin Head Trialல், Warrimoo தடப்பாதையில் நடக்க தொடங்கிய போது எடுத்த படங்களை இங்கே பதிவிடுகிறேன்..

5-BA47890-CBE9-43-BF-87-AA-6-E025-E6-BFA

இந்தப்பாதை மற்றைய பாதைகளை விட அதிக சரிவுகளையும், சீரற்ற தடங்களையும் வெளிச்சமும் அதிளவில் இல்லாத ஒரு பாதை.. அதனாலேயே நடப்பது மிகவும் சுவராசியமாக இருந்தது.. 

DCAF9-E56-EC08-437-A-9849-0-A3208-A0180-
large.975D5C65-DE45-4914-850D-88EDE624C1AF.jpeg.7c06ba6b2f6c1affac8f72aece07307d.jpeg

இருள் சூழத்தொடங்கியதால் இதை முழுமையாக முடிக்க இயலாமல் திரும்ப வேண்டியதாயிற்று..

large.3B820CD5-872F-4154-961B-6D7B2B4521E1.jpeg.db6dd5fae1ac40d86894a0a19ef7427a.jpeg

ஆனாலும் காய்ந்து சருகான இலைகள் காலடியில் மிதிபடும் சத்தமும், வயதான உயர்ந்த மரங்கள் முதல் வளரும் சிறு மரங்கள் வரை காற்றில் வரும் அவற்றின் வாசனையும் ரசித்தபடி மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்த திருப்தி ஏற்பட்டது. 

large.981D8360-6DC1-4BE9-96C9-8E38CE502DE8.jpeg.4a7880a21d34480eda66cfd6cf015bd2.jpeg

நடை முற்றுப்பெற்றது....

நன்றி
-பிரபா...

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Blue mountains இதைவிட அடர்த்தியான காடுகளையும், பல நடைபாதை தடங்களையும் குகைகளையும் கொண்டது என நினைக்கிறேன்.. அதில் இரண்டே இரண்டு நடைபாதை அனுபவமே எனக்கு உள்ளது.. 

 

large.AF476D15-C4FB-4C33-B0F5-C0B90554205A.jpeg.da9f766e6711761144cba83d2271ef1c.jpeg

Blue Mountainsற்கு கடந்தவருடம் ஊரிலிருந்து வந்திருந்த எனது சகோதரியுடன் எங்களைப்போல மூன்று சகோதரிகளாக ஆனால் குன்றுகளாக மாறிவிட்ட Three Sisters பார்க்க போயிருந்த போது, Echo point என்ற உயரமான இடத்திலிருந்து பார்த்த பொழுதான் காடுகளின் அடர்த்தியும் தொலைதூரம் வரை பரந்துவிரிந்து இருந்த Blue Mountainsம் தெரிந்து.. 

ஆனால் Ku-rin-gaiல் உயரமான இடத்திலிருந்து பார்க்க நேரம் போதாமையால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

69-E71-FB1-6727-4-FEF-A19-A-FBF527419-EA

20 hours ago, கிருபன் said:

கோடைகாலத்தில் இப்படியான இயற்கைசார்ந்த இடங்களுக்கு அடிக்கடி போவதுண்டு. ஐரோப்பாவில் பாம்பு, பூச்சி, பூரான் எல்லாம் இல்லை என்ற தைரியத்தில் எங்கும் கால் வைக்கலாம். ஆனால் அவுஸில் கவனமாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன்.

எனது அலுவலக நண்பர் Blue Mountainல்தான் இருக்கிறார்.. அவர் முன்பு ஒரு முறை கூறியிருந்தார் இந்த மாதிரி போகும் பொழுது ஒரு தடியை கொண்டு போகவேண்டும் என்று.. சறுக்கி விழந்து எழும்பாமல் ஊன்றி இறங்க ஏற வசதியாக இருக்கும் அதே நேரத்தில் தடியினால் தட்டிக்கொண்டு போனால் சத்தத்தில் இவைகள் ஓடிவிடும் என்று.. 

இங்கே கோடைகாலத்தில் காட்டுத்தீ பயம் இருப்பதால் குளிர்கால முடிவில் அல்லது இளவேனில் கால ஆரம்பத்தில்தான் போவதுண்டு..

 

 • Like 3
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.