Jump to content

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள் – பிரித்தானிய எம்.பி.க்களுக்கு அழுத்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள் – பிரித்தானிய எம்.பி.க்களுக்கு அழுத்தம்

LTTE.UK_.png
 22 Views

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என்று பிரித்தானியாவின் விசேட தீர்ப்பாயம் அண்மையில் தீர்ப்பளித்த நிலையிலேயே இந்தத் தடையை அரசு நீக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் செயல்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் சியோபயன் மைக்டொனாஹ் உடன் ‘சூம்” செயலி மூலம் கலந்துரையாடலை மேற்கொண்ட வினோதன் காந்தலிங்கம் தலைமையிலான செயல்பாட்டாளர் குழுவினர் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க அரசுக்கு அழுத்தம் கொடுகக்குமாறு அவரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

மேற்படி கலந்துரையாடலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொ.யோகலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் சீவரட்ணம் மற்றும் செயல்பாட்டாளர்களான கார்த்தீபன், யோகமனோகரன், அரவிந்தராஜ் நல்லதம்பி, கதாதரன் நாகராஜ், சாருப்பிரியன் சசிகரன், கீதரன் ராசேந்திரா ஆகியோரும் பங்கேற்றனர்.

https://www.ilakku.org/விடுதலைப்-புலிகள்-மீதான-7/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சியோபயன் மைக்டொனாஹ் மனிசி காலை கெந்தி கெந்தி வீடு வீடாய் வாக்கு கேட்டு வர எங்கடை தமிழ் சனம்  அவவுக்கு சொன்ன வார்த்தை இப்படி காலை இழுத்துக்கொண்டு வரவேணாம் எங்கள்  முழு குடும்ப வோட் உங்களுக்கே என்றனர் அதிலேயே கிழவி லேபர்தான் மயக்கத்தில் உள்ளது எங்கடை  கேஸில்  மறு  அப்பீல்  நாட்களும் தாண்டி விட்டது இனி மனிசி சாரி கட்டிக்கொண்டு  உரு ஆடும் பார்லிமெண்டில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையா லண்டன் சனத்துகள காணல இருக்காவது ஏதாவது செய்யுங்கள் (தடையை நீக்க)🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.