காணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்

By
கிருபன்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
0
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
(எம்.ஆர்.எம்.வசீம்) மரணிப்பவர்களை அடக்கம் செய்வது பற்றி குர்ஆனில் எங்கும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானதாகும். மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக குர்ஆனில் பத்து இடங்களுக்கும் அதிகம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் அரசியல் தேவைக்காக எந்தவொரு மதத்தையும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது. முஸ்லிம் ஒருவர் மரணித்தால் எரிக்கக்கூடாது. அடக்கம் செய்யவேண்டும் என குர்ஆனில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்து அவருக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதில் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் எம்,எஸ்.எம்.தாஸிம் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களை அடக்கம் செய்வது பற்றி திருகுர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் கூறிய தவறான கூற்று குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகுந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது. ஆளும் கட்சியின் முன்னணி உறுப்பினரும், ஒரு முக்கிய அமைச்சரும், ஒரு வழக்கறிஞருமான உங்களிடமிருந்து இதை விட விவேகமான அணுகுமுறையை நாம் எதிர்பார்த்தோம். 2021 ஜனவரி 8 ஆம் திகதி பாராளமன்றத்தில் நீங்கள் கூறியுள்ள கூற்றானது முற்றிலும் தவறானதாகும். இஸ்லாமிய மார்க்க தீர்வுகளை பெறுவதானது திருகுர்ஆனின் வசனங்களையும் அதனுடன் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்களுடைய வழிகாட்டல்களாகிய ஹதீஸ் கலைகளையும் நன்கு கற்ற இஸ்லாமிய அறிஞர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். எவ்வாறாயினும், திருக்குர்ஆனை நீங்கள் இருதடவை வாசித்துப் பாரத்ததையிட்டு எங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கும் அதே வேளையில், கட்டாயம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அதில் எங்கும் இல்லை என்று சொல்வது முற்றிலும் தவறானதாகும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இஸ்லாமீய மத போதனைகளுடன் தொடர்புடைய மார்க்கத் தீர்ப்புகளைப் பெறும் முறை தொடர்பான சில விடயங்களை தெளிவுபடுத்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விரும்புகிறது. இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் திருக்குர்ஆன், நபிமொழி (சுன்னா), இஜ்மா (அறிஞர்களின் இணக்கப்பாடு), கியாஸ் (ஒத்த சந்தர்ப்பங்கள்) ஆகிய நான்கு மூலங்களில் இருந்தே பெறப்படும். திருகுர்ஆன் என்பது இறை வசனமாவதோடு, மனித குலத்திற்கான முழுமையான வழிகாட்டியாகவும் உள்ளது. இது உலகத்தாருக்கு வழிகாட்டியாக இறக்கப்பட்டதுடன் விடயங்களை கருத்தியல் ரீதியாகவும் உரையாற்றுகிறது. இதற்கு காலம் அல்லது பிராந்திய வரம்புகள் எதுவும் கிடையாது. இருப்பினும் சட்ட திட்டங்களுக்காக திருக்குருஆனை மட்டும் நோக்குவது சாத்தியமல்ல. ஏக இறைவனின் இறுதித் தூதரின் முன்மாதிரி மற்றும் அறிவுரைகளையும் நாம் சேர்த்தே நோக்க வேண்டும். உதாரணமாக, இஸ்லாத்தின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகிய தொழுகை பற்றி குர்ஆன் மிக விளக்கமாக எதுவும் கூறவில்லை. ஐவேளை தொழுகைகளின் பெயர்கள், அவற்றிற்கான நேரங்கள், தொழுகை நிறைவேறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் அது எவ்வாறு உடல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன திருக்குருஆனில் விரிவாக விவரிக்கப்படவில்லை. அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்பதை காரணம் காட்டி முஸ்லிம்கள் அதை நிறைவேற்றத் தேவையில்லை என எவரும் வாதிட முடியாது. அதேபோல், உலகெங்கிலும் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் ரமலான் மாதத்தின் நோன்பு, வசதியுள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டிய ஸகாத் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியவற்றை திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது திருக்குர்ஆனில் விரிவாக விளக்கப்படவில்லை. இதனை காரணம் காட்டி அப்பொறுப்புக்களைப் பற்றி முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை என்று ஒருவர் வாதிட முடியாது. ஏனென்றால், இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்காக திருக்குர்ஆனை மட்டும் நோக்குவது நமக்கான வழிமுறையல்ல. எனவே, இஸ்லாத்தின் மிக அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட விரிவாகப் புரிந்துகொள்வதற்கு மேற்கூறிய அடிப்படை ஆதாரங்களை கூட்டாகக் குறிப்பிட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இஸ்லாமிய மார்க்க சட்டம் பற்றி நாம் தெரிந்து கொள்ள விரும்பினால், திருக்குர்ஆன் என்பது முதல் மற்றும் முக்கிய ஆதாரமாக இருந்த போதிலும், அதனுடன் சேர்த்து கவனத்தில் கொள்ள வேண்டிய ஏனைய பிற மூலங்களும் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய ஒருவருக்கு சிறப்பு கலைகளின் அறிவும் திறமையும் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி, ஒரு முஸ்லிம் இறந்ததும், அவரை குளிப்பாட்டி, வெள்ளைத் துணியால் கபன் செய்து, தொழுகையை நிறைவேற்றி அதன் பின் மண்ணில் அடக்கம் செய்வது என்ற வரிசையான செயன்முறையை, ஒருவர் திருக்குர்ஆனை ஒராயிரம் தடவைகள் புறட்டினாலும் காண மாட்டார். மேலும், அடக்கம் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பதும் முற்றிலும் தவறாகும். உண்மையில், திருக்குர்ஆன் சுமார் பத்து இடங்களில் அடக்கம் செய்வது பற்றி பேசியுள்ளது. ஏனைய இஸ்லாமிய கடமைகள் போலவே, அடக்கம் தொடர்பான முழுமையான செயன்முறையும் நாம் நபியவர்களின் வழிகாட்டுதல் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலமாகவும், மார்க்க அறிஞர்களின் உதவியுடனேயே அறிந்து கொள்கின்றோம். ஒவ்வொரு மதத்திற்கும் அதன் போதனைகள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான முறைகள் இருப்பதை புரிந்து கொள்வது முக்கியமாகும், இது அந்தந்த மத அறிஞர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும். குறிப்பிட்ட விடயத்தில் அதிகாரப்பூர்வ அறிவு உள்ளவர்களின் சரியான ஆலோசனை இல்லாமல் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் இத்தகைய அறிக்கைகள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. இஸ்லாம் மற்றும் புனித குர்ஆன் அல்லது வேறு எந்த மதத்தையும்; எந்தவொரு அரசியல் தேவைக்கும் பயன்படுத்துவதைத் தவிர்ந்துகொள்ளுமாறு மரியாதைக்குரிய உங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறது. எங்கள் தாய்நாட்டில் உள்ள சமூகங்களுக்குள் தேவையற்ற பிரச்சினைகள், தவறான எண்ணங்கள் மற்றும் தவறான புரிதல்கள் தவிர்க்கப்படுவதை உறுதிசெய்ய மேற்கூறிய தவறான அறிக்கைகளை சரிசெய்யுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம். இவ்விடயம் பற்றி மேலும் விரிவான விளக்கங்களைப் பெற நீங்கள் விரும்பினால் தங்களை நேரில் சந்தித்து தெளிவுரைகளை தரவும் நாம் தயாராக உள்ளோம். குர்ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன ? - ஜம்இய்யதுல் உலமா கம்மன்பிலவுக்கு பதில் | Virakesari.lk -
By பிழம்பு · பதியப்பட்டது
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது. இதனடிப்படையில், உளுந்து இறக்குமதிக்கும் கடந்த ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டின் உளுந்து விலை அதிகரித்துள்ளதுடன், உளுந்திற்கு பாரிய தட்டுப்பாடும் நிலவுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட காலப்பகுதியில் 300 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோ உளுந்து, தற்போது சுமார் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். உளுந்து விலை அதிகரிப்பினால் சைவ உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உளுந்து இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளமையினால், உள்ளூர் உளுந்து உற்பத்தியாளர்கள் நன்மை அடைந்துள்ளார்களா? இலங்கையின் உளுந்து பயிர் செய்கைக்குப் பிரசித்தி பெற்ற இடங்களில் வவுனியாவும் ஒன்று. எனினும், வவுனியாவில் சுமார் 13,500 ஏக்கரில் உளுந்து விதைக்கப்பட்ட நிலையில், தொடரும் மழையுடனான வானிலையால் உளுந்துச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் எந்த உணவுப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாட்டில் உளுந்தின் விலை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு | Virakesari.lk -
பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக யாழ். மண்டைதீவு பகுதியில் பாரிய போராட்டம் Published by Loga Dharshini on 2021-01-18 15:55:38 யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால், அங்கு பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்ததாக தெரியவருகிறது. மண்டைதீவு ஜே107 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பு காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களும் பொது மக்களும் அரசியல்வாதிகளும் அங்கு திரண்டிருந்தனர். இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்வதற்கு வருகை தந்திருந்தனர். இதன் போது காணிகளை அளவீடு செய்ய கடும் எதிர்ப்பு வெளிப்படுத்திய நிலையில் காணிகளை அளவீடு செய்யாமலே நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருந்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் செல்ல தயாரான நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் நில அளவை திணைக்கள அதிகாரிகள் மீண்டும் அங்கு வந்து காணிகளை அளவீடு செய்ய போவதாக அறிவித்துள்ளனர். ஆயினும் காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாதென்று எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் காணிகளின் உரிமையாளர்களும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் அங்கு வருகை தந்த வேலனை பிரதேச செயலாளர் சோதிநாதன், காணி அளவிடுவதை நிறுத்துவதாகவும் காணி அமைச்சுடன் இது குறித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரையில் காணி அளவீடு மேற்கொள்ளபடாதென்றும் தெரிவித்தார். இதனையடுத்து, நில அளவை திணைக்களதினரும் பொலிஸாரும் திரும்பி சென்றனர். இதன் பின் அங்கு நின்றிருந்த மக்களும் அரசியல் வாதிகளும் சென்றிருந்தமை குறிப்பிடதக்கது. இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 4 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக யாழ். மண்டைதீவு பகுதியில் பாரிய போராட்டம் | Virakesari.lk
-
புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த பகுதியில் பௌத்த விகாரைகள் இருந்ததாக தெரிவித்து அகழ்வு ஆராய்ச்சி தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இராணுவத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் இன்று (18.01.2021) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இராணுவத்தினர் புடை சூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர். இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. மணலாறு படலைகல்லு என்னும் பகுதியிலும் கல்யாணிபுர என்னும் மற்றுமொரு விகாரை சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இன்று திங்கட்கிழமை அங்கும் தொல்லியல் அகழ்வாராச்சி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் 591 ஆவது பிரிகேட்டினால் ஏற்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இராணுவத்தினரின் கொடிகள் குருந்தூர் மலை சூழ நாட்ட பட்டு நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காக குருந்தூர் மலையிலிருந்து அருகிலுள்ள குமுளமுனை கிராமம்வரைக்கும் நிறுத்தப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த பகுதியில் குருந்தாசேவ புராதன விகாரை ஒன்று இருந்ததாக 1932 இல் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது . இது ஒரு தொல்லியல் பிரதேசம் இங்கே இருக்கும் தொல்லியலை பாதுகாக்க வேண்டியது தொல்லியல் திணைக்களத்தின் கடமை இந்த நிலையில் இந்த தொல்லியல் சிதைவுகள் குறித்து அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது என தெரிவித்தார். இந்நிலையில் குறித்த மலை பகுதியில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் காணப்பட்ட நிலையில் அங்கு குமுளமுனை ,தண்ணிமுறிப்பு கிராம மக்கள் சென்று பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தனர். ஆனால் நேற்று (17.01.2021) குருந்தூர் மலை பகுதிக்குள் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறான ஆலயம் அங்கு இல்லாது உடைத்து அழிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் குருந்தூர் மலையில் இருந்த சூலம் ஒன்று இடம் தெரியாது உடைத்து எறியப்பட்டுள்ளது அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று கிராம மக்களின் முறைப்பாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் , வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இந்த பகுதிக்கு பார்வையிடுவதற்க்காக சென்றிருந்த நிலையில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் தடைகளை ஏற்படுத்திய நிலையில் மிக நீண்ட வாய்தர்க்கத்தை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் உட்செல்ல அனுமதிக்க பட்டிருந்தனர். அந்த இடத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற பிரதேச ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கட்டிருந்தது. இந்நிலையில் இன்று அமைச்சர் வருகை தந்திருந்த நிலையில் கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி பிரதேச ஊடகவியலாளர்கள் தொல்லியல் திணைக்களத்திடம் கேள்வி எழுப்பிய நிலையில் பிராந்திய ஊடகவியலாளர்களும் இறுதியில் அனுமதிக்கபட்டனர். இருந்த போதிலும் அகழ்வாராய்ச்சி பணி இடம்பெறும் மலையில் உள்பகுதியில் காணப்பட்ட படையினர் பிரதேச ஊடகவியலாளர்களை 'நீங்கள் தமிழா' என கேட்டு வெளியே செல்லுமாறு பணித்ததோடு ஊடகவியலாளர்களை புகைப்படங்களையும் எடுத்தனர். அகழ்வு பணிகளுக்காக குருந்தூர் மலையில் நின்ற பல நூற்றுக்கணக்கான காட்டு மரங்கள் அறுத்து வீழ்த்தப்பட்டுள்ளது. அமைச்சரின் வருகைக்காக பல மாதங்களாக குன்றும் குழியுமாக காணப்பட்ட தண்ணிமுறிப்பு குளத்துக்கு செல்லும் வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பொறியியலாளரின் உத்தரவின் பேரில் இரண்டு நாட்களில் அவசர அவசரமாக செப்பனிட பட்டிருந்தது. பல வருடங்களாக இந்த வீதியை செப்பனிட்டு தருமாறு தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயம் செய்துவரும் விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்தும் செப்பனிட படாத வீதி அமைச்சர் வருகைதந்து விகாரையின் தொல்லியல் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக அவசர அவசரமாக செப்பனிடபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினார் . குறித்த குருந்தூர்மலை இடம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் தாக்கல்செய்ய வழக்கில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 2018 இல் ஆக்கபட்ட கட்டளை ஒன்றில் அங்கே உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம் என்றும் எந்தவிதமான கட்டுமானங்களையும் இரு சாராரும் செய்ய முடியாது என்றும் தொல்லியல் திணைக்களம் மாத்திரம் ஆய்வுகளை செய்யலாம் என்றும் வேறு தரப்பினர் ஆய்வுகளை செய்ய முடியாது, தொல்லியல் ஆய்வுகளை செய்வதாக இருந்தால் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறையின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூற பட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் நூற்றுக்கணக்காக குவிக்கப்பட்டு இராணுவமே தொல்லியல் ஆய்வுகளை செய்வதுபோல தமது கொடிகளை நாட்டி தொல்லியல் ஆய்வு என்ற பேரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து குறித்த தமிழ் மக்களுக்கு சொந்தமான பிரதேசத்தை சிங்கள மயப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த பகுதியில் பௌத்த விகாரைகள் இருந்ததாக தெரிவித்து அகழ்வு ஆராய்ச்சி | Virakesari.lk
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.