Jump to content

காணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

நாம் உணர்ச்சிவசபடுவது என்பது இயல்பானதுதான் 
அன்றாட நிகழ்வுகளில் சில தோல்விகளை நாம் சந்திக்க நேர்ந்தால் 
அப்போது உணர்ச்சி பொங்காமல் நிதானமாக சிரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றால் 
எம்மிடம் உயரிய ஒரு நீண்ட கால திட்டம் இருக்க வேண்டும். 
இது எம்மிடம் இல்லாத ஒரு பெரும் குறை இருக்கிறது இதை நாம் நிவர்த்தி செய்ய முடியும் 
அதுக்கான பலம்  அறிவு எல்லாம் தேவைக்கு அதிகமாக கொட்டி கிடக்கிறது 

சிங்களவர்கள் தமிழர் நிலத்தில் குடியேறுவது என்பதை இனி தடுக்க முடியாது 
தர்மீகமாக சிந்தித்தால் தடுக்கவும் கூடாது . இலங்கையின் 70 வீதமான சிங்களவர்கள் இனியும் குறுகிய 
நில பரப்பில் வாழ  முடியாது இலங்கையின் விலைவாசி என்பது இனி வரும் காலங்களில் 
வானத்தை தொடும் அளவுக்கு வளரும் கொழும்பில் இப்போதைய மத்திய தர குடும்பம் ஒன்று 
இன்னும் 10 வருடங்களில் வாழ முடியாது. கொழும்பை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் நிச்சயம் உண்டு. 

தனியார் காணிகளை பாதுகாத்தாலே எமக்கு போதும் 
ஆனால் எதிர்கால விலைவாசிக்கு முகம் கொடுக்க முடியாமல்  
ஏழை தமிழர்கள் காணிகளை விற்கும் நிலையை நாம் எப்படி தடுப்போம்?
என்பதுதான் தமிழர் ஆளுமையை இலங்கையில் கேள்வி குறி ஆக்க கூடியது.

வெள்ளம் வர போகிறது என்பதும் எமக்கு தெரியும் 
எங்கிருந்து என்ன வடிவில் வர போகிறது என்பதும் தெரியும் 
இப்போதும் எவ்வாறு அணை கட்டுவது என்பதை விட்டு விட்டு 
நாம் எமக்குள் புடுங்குபட்டு கொண்டிருப்பது அர்த்தம் அற்றது 

ஒவ்வொரு அரசியல்வாதியும் பல லட்ஷம் ரூபாக்களை கொட்டியே 
இன்று தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறான் அவன் எதோ ஒன்றுக்கு 
முதலீடு செய்து இருக்கிறான் என்பது அவன் தேர்தலில் அவ்வளவு பணம் 
கொட்டும்போதே சாதாரண அறிவுக்கு புரியும். இன்னும் புரியவில்லை என்றால் 
அங்கு அதை புரியும் அறிவு பற்றாகுறை உண்டு என்பதாவது புரியவேண்டும்.
ஆகவே யாரவது அரசியல் வாதி எதையாவது புடுங்குவான் என்று எதிர்பார்ப்பது 
வெறும் நீராசை ... அரசியல் வாதிகளை விட இப்போதைய சூழலில் சாதாரண குடிமக்களால் 
பெரும் எடுப்பில் புடுங்க முடியும். இதுதான் இன்றைய கள சூழல்  

எங்கள் ஊர்களில் விற்கபோகும் காணிகளை கோவிலிலிருக்கும் பணத்தை கொண்டு வாங்கி ஏழைமக்கள் , வீடு இல்லதவர்களுக்கு வீடு  கட்டிக்கொடுக்கிறோம் வெளிநாட்டில் வசிக்கும் எங்கள் ஊர் எனது நண்பர்கள் நீர் இணைப்பு , மின் இணைப்பு எடுத்துக்கொடுத்து வருகிறோம் ஆனால் ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை............. சில இடங்களை விற்காதீர்கள் என சொன்னால் விற்கமாட்டார்கள் ஏழைகள். ஆனால் படித்த பெரிய இடத்தில் வேலை செய்பவர்கள் வேறு இடத்தில் முதலீடு செய்ய இடத்தை விற்கிறார்கள் உதாரணம் திராய்க்கேணி கேள்விப்பட்டிருப்பீர்கள் படுகொலையே நடந்த கிராமமது தற்போது முக்கால் பங்கு விற்கப்பட்டுள்ளது மருதர்.

அதே போல மட்டக்களப்பு , திருகோணமலை எல்லைக்கிராமங்களிலும் இந்த நிலை இன்னும் ஒன்றை சொல்லலாம் என நினைக்கிறன் புலம்பெயர் தமிழர்கள் சிலர் பல கோடிகளுக்கு தங்கள் நிலம் வீடுகளை விற்கிரார்கள் இது மட்டக்களப்பில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தனி எதோ ஒரு இயலாமையால் கருணா பிள்ளையானை நாம் இங்கு திட்டி தீர்க்கிறோம் 
எனக்கு என்னமோ நாம் தான் பெருத்த துரோகிகள் போன்ற ஒரு குற்ற உணர்வு எனக்கு அதிகமாகவே உண்டு 
இன விடுதலை போரில் ஆரம்ப நாட்களில் கிராமம் கிராமாக கொலையானது கிழக்கு மக்கள் 
இயக்க மோதல் வந்தபோது யாழ் தெருக்களில் உணர்ச்சி ஆவேசத்தால் நேரு நேர் மோதி இறந்து கிடந்தது 
கிழக்கு இளைஞர்கள். விடுதலைப்புலிகள் வீர் கொண்டு எழுந்தபோது அதை ஆள்தொகையில் அதிகரித்து சாத்தியம் ஆக்கியது கிழக்கு மக்கள் அதனால் ஒவ்வரு மோதலில் மாவீரர் ஆனதும் கிழக்கு மக்கள் 
பின்பு கருணா பிரிவில் அழிந்து கருணாவால் வேட்டை ஆடப்பட்டதும் கிழக்கு மக்களே .... 

இன்று வரை அப்பாடா என்று ஆற அமர்ந்து  மூச்சு விட முடியாமல் வறுமையில் தவிக்கும் 
அவர்களுக்கு போரை சாட்டி மேலைநாடுகளில் குடியேறிய நாங்கள் எதுவுமே செய்ததில்லை 
எவ்வளவோ பணம் அனுப்புகிறோம் அவை எல்லாம் வடக்கில் மட்டுமே பரிமாற படுகிறது.

இலங்கையில் முதலீடு என்று வரும்போது எமது சாதாரண அறிவு எமக்கு தெரிந்த 
இடங்களிலேயே ஏதாவது ஒரு சாத்தியம் உண்டா என்று பார்க்கிறது. இந்த குறையை நிவர்த்தி செய்ய 
நாம் கூடிய தொடர்புகளை கிழக்கில் உருவாக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது  
நீங்கள் யாழை விட்டு போக போகிறேன் என்று சொன்ன போதும் ... போகாதீர்கள் என்று நான் தடுத்த போது 
இதைத்தான் காரணம் சொன்னேன்.... எமக்கு போதிய தொடர்பு கிழக்கில் இல்லை 
அந்த ஏழை மக்களின் ஏழ்மையில் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னமும் பலருக்கு இருக்கலாம் 
நாம் அங்கு ஒரு நம்பிக்கையான அமைப்பை முதலில் உருவாக்க வேண்டும் 
அது பெரும் எடுப்பிலும் இருக்க கூடாது ... அப்படி இருந்தால் அது பலர் கண்ணை உறுத்தும் 
அதுக்கு சாத்தியாமானவை பற்றி நாம் பேசினால் நன்று என்று எண்ணுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

நிட்சயமாக மருதர் ஆனால் யாழ் இணைய நபர்கள் யாராவது எந்ததிட்டங்களை வைத்தாலோ, செய்தாலோ நான் அவர்களுக்கு துணை நிற்கமாட்டேன் சாதாரண வார்த்தைகளே என்னை நோக்கி உறுத்திப்பாயும் தோட்டாக்கள் போல் இருக்கும் போது இவர்கள் ஏதாவது தொடங்க அதில் நான் மூக்கு நுழைக்க விரும்பல .இன்னும் பலர் எனக்கே உதவி செய்கிறேன் என சொல்லியும் ஏற்றுக்கொள்ளாத ஆள் நான்  எனக்கு நடிக்க தெரியாது ஊரில் கிராமத்தில் என்ன நடக்கிறது என எழுதினால் பல பிரச்சினைகள் உருவாகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் எப்போது நல்லவனாக இருக்க எண்ணுகிறீர்களோ 
அன்றில் இருந்தே கல்லெறிக்கு தயாரக இருக்கவேண்டும் 
இது நான் அனுபவத்தில் பார்த்தது 
நீதி நேர்மையுடன் வாழுபவர்களை 
வாழ தெரியாதவர்கள் என்று வசைபாடிக்கொண்டே இருப்பார்கள் 
ஆனால் இறுதியில் யார் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பதுதான் 
முக்கியமானது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் அப்படி நடக்க வாய்ப்பில்லை அண்ண 

ஆசியாவில் நான் குறிப்பிட முனைந்தது இலங்கை இந்தியா, வங்களாதேஷ், பாகிஸ்த்தான் , போன்ற நாடுகளை 

கொஞ்சக்காலம் விடுதலைப்புலிகளால் நீதி,நேர்மை,கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என ஒரு தனியரசில் காட்டப்பட்டதே.எந்த ஒரு நாடும் அங்கீகரிக்காத நிலையிலும்  எமது நாடு இப்படித்தான் இருக்கும் என செய்து காட்டியவர்கள்.

எனவே ஒரு அரசு நினைத்தால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. இலங்கையில் முடியாது என மனதை தேற்றிக்கொண்டு வாழ்நாள் முழுக்க இப்படியே இருக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

கொஞ்சக்காலம் விடுதலைப்புலிகளால் நீதி,நேர்மை,கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என ஒரு தனியரசில் காட்டப்பட்டதே.எந்த ஒரு நாடும் அங்கீகரிக்காத நிலையிலும்  எமது நாடு இப்படித்தான் இருக்கும் என செய்து காட்டியவர்கள்.

எந்த ஒரு காரியத்துக்கும் விலை கொடுக்க வேண்டும். இருந்தாலும் இங்கு இதுக்காக அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் முடிவு பூச்சியம்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.