Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

எதிர்பார்ப்புக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அளவிட முடியாத இவ்வுலகில் அளவற்ற உயிர்கள் பல அவ்வளவற்ற உயிர்களின் மனங்களின் அடக்க முடியாத எண்ணக் குவியல்களுக்குள் அடங்காமல் அன்புப் பூக்களாக பூக்கின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!!

ஆழ் மனதில் எவர் மீது ஆழமான அன்பு பூக்கள் பூத்ததோ அவர்களிடம் தான் ஆர்ப்பரித்து எழுகின்றன எமது சுயநலமும் கோபமும் கலந்த எதிர்பார்ப்புக்கள்!!!!!

எதையோ தேடுவதில் எமது மனதும் எதை மனம் தேடுகிறது என்ற தேடலில் நாமும் ஏற்கப்படாத அன்பில் கரைகின்றன காலங்கள் சிதைகின்றன ஆசைகள் வளர்கின்றன ஏமாற்றங்கள் கரைகின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!!

சந்திக்க முடிந்த பிரச்சனைகள் வாய்ப்புகளாகுகின்றன சந்திக்க முடியாத வாய்ப்புகள் பிரச்சனைகளாகுகின்றன சந்திக்க முடியாத வாய்ப்புக்களாலும் சந்தித்து முடித்த பிரச்சனைகளினாலும் ஏற்படுகின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!!

அன்பு பலப்படும் இடங்களில் பிரிவும் உண்டு அன்பானவர்கள் பலப்படும் இடங்களில் புரிதல் உண்டு அன்பும் புரிதலும் உண்டான இடங்களில் உருவாகுகின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!!

நடப்பவற்றைப் புரிந்து கொண்டாலும் நப்பாசையில் ஏதோ ஒன்றை நம்பிக்கையுடன் நடக்கும் என்று மனங்கள் நம்பிக் கொண்டு காத்திருக்கின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழ்நிலா வாருங்கள்

எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றங்கள் அதிகமாகும்.

Link to comment
Share on other sites

அருமையான எண்ணப் பிரதிபலிப்பு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

வணக்கம் தமிழ்நிலா வாருங்கள்

எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றங்கள் அதிகமாகும்.

வணக்கம் சஹாரா

உண்மை தான் ...

மிக்க நன்றிகள்

7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமையான எண்ணப் பிரதிபலிப்பு..

மிக்க நன்றிகள்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.