Jump to content

டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்

29 நவம்பர் 2020, 07:07 GMT
முழக்கமிடும் ஒரு விவசாயி

பட மூலாதாரம், GETTY IMAGES

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாயம் தொடர்பான சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக தற்போது உத்தரப்பிரதேச விவசாயிகளும் மாநில எல்லையில் போராட்டம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். 

டெல்லி சலோ என்ற பெயரில் பேரணியாகத் தொடங்கிய இந்த விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லைக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கு போலீசார் ஆரம்பத்தில் கடுமையான முயற்சிகளை எடுத்தார்கள்.

சாலைகளில் உறுதியான தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் விவசாயிகள் சாலைத் தடுப்புகளை அகற்றியபடியே முன்னேறினர். 

ஒரு கட்டத்தில் அவர்கள் டெல்லியில் நுழைவதற்கு அனுமதி அளித்த போலீசார் அவர்கள் கூடுவதற்கு வடக்கு டெல்லியில் புராரி மைதானம் என்ற இடம் ஒதுக்கப்பட்டது. 

விவசாயிகள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு, குளிரிலும், மாசுபாட்டிலும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 

இது தவிர, டெல்லியைச் சுற்றியிருக்கும் பல முக்கிய சாலைகளில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனிக்கிழமை (28 நவம்பர் 2020), போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், டெல்லிக்குள் நுழைய அரசு அனுமதி கொடுத்தது.

இந்த கடும் குளிரில், பல இடங்களில் விவசாயிகள், தங்கள் டிராக்டர்களுடன் நெடுஞ்சாலைகளில் காத்திருக்கிறார்கள். டெல்லி காவல் துறை, விவசாயிகளை பெரிய மைதானங்களில் இடம் மாற்றத் தயாராக உள்ளது. தயவு செய்து விவசாயிகள் அங்கு செல்லுங்கள். உங்கள் போராட்டங்களை நடத்த காவல் துறை அனுமதி வழங்கும் என நேற்று (28 நவம்பர் 2020) உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா கூறியிருந்தார்.

Twitter பதிவின் முடிவு, 1

போராட்டத்தில் ஈடுபடும் விவசாய சங்கங்கள், டிசம்பர் 3-க்கு முன்பே அரசோடு விவாதிக்க விரும்பினால், விவசாயிகள், உடனடியாக தங்கள் போராட்டத்தை, அரசு குறிப்பிட்ட இடங்களுக்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றிக் கொண்டால் அடுத்த நாளே விவசாய சங்கங்களை அரசு சந்தித்துப் பேசும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார் அமித் ஷா.

Twitter பதிவின் முடிவு, 2

சிங்கு எல்லைப் பகுதியிலேயே போராட்டம் தொடரும்

பஞ்சாபில் இருந்து டெல்லிக்கு வரும் சாலை ஒன்றில் சிங்கு எல்லைப் பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராட இடம் ஒதுக்கப்பட்ட பிறகும்கூட அந்த இடத்திலேயே தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

 

இந்த இடம் போதாது

விவசாயிகள் போராட, புராரி மைதானத்தில் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் புராரி மைதானம் ஆயிரக் கணக்கான போராடும் விவசாயிகளுக்கு போதாது. ராம் லீலா மைதானம் போன்ற பெரிய இடங்களில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர்கள் நேற்று (நவம்பர் 28) கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு புராரி மைதானம் டெல்லிக்கு வெளியே அமைந்து இருக்கிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

போராட்ட களத்தில் உத்திரப் பிரதேச விவசாயிகள்

டெல்லி உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியான காசியாபாத்தில், நேற்று (நவம்பர் 28) மதியம் முதல், சில உத்தரப் பிரதேச விவசாயிகள், உபி கேட் பகுதியில் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். இவர்களும் டெல்லிக்குச் செல்ல விரும்புகிறார்கள்.

இந்த உத்தரப் பிரதேச விவசாயிகள் அமைப்புகள் சார்பாக சுமார் 200 பேர் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் என போலீசாரே குறிப்பிட்டு இருக்கிறார்கள். இவர்கள், பஞ்சாப் விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்து இருக்கிறார்கள். இவர்களை கலைந்து போகுமாறு கூறி, காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

 

https://www.bbc.com/tamil/india-55119558

 

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் பேரணி எதிரொலி: டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் பேரணி எதிரொலி:  டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

 

புதுடெல்லி,
 
விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  இன்றுடன் போராட்டம் 6வது நாளை எட்டியுள்ளது.
 
 
விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது.  எனினும், சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் விவசாயிகள் திரண்டிருந்தனர்.
 
சீக்கிய மதகுரு குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அமைதியான முறையில் போராட்டத்திற்கு இடையே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.  அவர்கள் சென்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
 
இதேபோன்று கொரோனா பரவல் ஏற்படாமல் தவிர்க்க மருத்துவ பரிசோதனைகளுக்கான முகாம்களும் அமைக்கப்பட்டன.  விவசாயிகள் பேரணியால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் பயண போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
 
போராட்ட எதிரொலியாக சிங்கு எல்லை இருபுறமும் இன்று மூடப்பட்டு உள்ளது.  போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில், சிக்னேச்சர் பிரிட்ஜ் பகுதியில் இருந்து ரோகிணி வரையிலான வெளிவட்ட சாலையை தவிர்க்கும்படியும், ஜி.டி.கே. சாலை, என்.எச். 44 மற்றும் சிங்கு எல்லையை தவிர்க்கும்படியும் டெல்லி போக்குவரத்து போலீசார் மக்களை கேட்டு கொண்டு உள்ளனர்.
 
இதேபோன்று திக்ரி எல்லை பகுதியும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இன்றி மூடப்பட்டு உள்ளது.  பதுசராய் மற்றும் ஜதிகரா எல்லைகள் இரண்டு சக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
 
அரியானா செல்லும் எல்லைகளான ஜரோடா, தன்சா, தவுராலா, கபாஷேரா, ரஜோக்ரி என்.எச். 8, பிஜ்வாசன், பாலம் விகார் மற்றும் தண்டஹேரா ஆகயவை திறந்து விடப்பட்டு உள்ளன.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை குறிப்பிட்டு கனடா பிரதமர் கருத்து

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை குறிப்பிட்டு கனடா பிரதமர் கருத்து

கான்பெர்ரா,

உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என டெல்லி  விவசாயிகள் போராட்டத்தைக் குறிப்பிட்டு கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 தினங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்நிலையில் காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

"இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. நிலமை கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்" என ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

டெல்லி விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த முதல் உலகத் தலைவர்  ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். 

 

https://www.dailythanthi.com/News/World/2020/12/01132248/Canada-Will-Always-Defend-Rights-of-Peaceful-Protest.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தரும் கனடா பிரதமர்

இந்தியா தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை 6.45 மணிவரை நீடித்தது. இதில் 32 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் அச்சங்களை களைய குழு அமைக்கலாம் என்றும் அதில் விவசாயிகள் தரப்பில் இடம்பெறும் சங்கங்களின் பிரதிநிதிகளின் பெயர்களை தெரிவிக்குமாறும் அரசு சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த சட்டங்களை முழுமையாக முற்றாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, புதிய சட்டங்களின் நன்மைகள், அவை விவசாயிகளுக்கு தரும் பலன்கள் குறித்து அவர்களிடம் அதிகாரிகள் விளக்கினார்கள். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள இயலாத மன நிலையில், விவசாயிகள் இருந்த நிலையில், எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

இதையடுத்து மீண்டும் டிசம்பர் 3ஆம் தேதி இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், "வேளாண் சட்டங்கள் தொடர்பாக சங்கங்களின் பிரதிநிதிகளை சமாதானப்படுத்துவே அரசு முனைப்பு காட்டி வருகிறது. அவர்கள் தெரிவிக்கும் விளக்கம் தொடர்பாக மேலும் விவாதிக்க ஏதுவாக வரும் 3ஆம் தேதி மீண்டும் கூடிப்பேசலாம் என தெரிவித்துள்ளார்கள். எனவே, மீண்டும் கூடி பேச்சுவார்த்தை நடத்துவோம். எங்களுடைய கோரிக்கைகள் தீர்க்கப்படும்வரை போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தனர்.

முன்னதாக, டெல்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தீவிரமாகி வரும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து வெளியிட்டிருக்கிறார்.

Instagram பதிவை கடந்து செல்ல, 1

Instagram பதிவின் முடிவு, 1

கனடாவில் சீக்கியர்கள் அதிகமாக வசிப்பதால், அவர்கள் நேற்று கொண்டாடிய குருநானக் ஜெயந்தியையொட்டி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு காணொளியில் பேசினார். அப்போது, இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக தகவல்கள் வருகின்றன. அங்குள்ள நிலைமை கவலையளிக்கிறது. நாங்கள் அனைவரும் குடும்பம், நண்பர்கள் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். உங்களில் பலருக்கும் நிஜமாகவே அப்படித்தான் இருக்கும். ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அமைதியாக நடக்கும் போராட்டங்களின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணையாக இருக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ அந்த காணொளியில் பேசினார்.

இந்திய வெளியுறவுத்துறை எதிர்வினை

இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் வெளிப்படையாக கருத்து வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், கனடா பிரதமரின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை எதிர்வினையாற்றியிருக்கிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரத் தொடங்கியதுமே இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்தியாவில் விவசாயிகள் தொடர்பாக கிடைத்த தவறான தகவல்கள் அடிப்படையில் கனடா நாட்டுத் தலைவர்கள் கருத்து வெளியிட்டதாக நாங்கள் பார்க்கிறோம். அத்தகைய கருத்துக்கள் தேவையற்றவை. அதுவும் அவை, ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பானவை. ராஜீய உரையாடல்கள், அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதே சிறந்ததாக இருக்கும்," என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

சிவசேனை தலைவர் அதிருப்தி

இதேபோல, சிவசேனை கட்சியின் துணைத் தலைவர் பிரியங்கா சதுர்வேதியும், ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துகளுக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளார். "உங்களுடைய கவலைகளால் நெகிழ்ந்தேன். ஆனால், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை, வேறு தேச அரசியலுக்கு தீவினமாகக் கூடாது. பிற நாடுகளுக்கு நாங்கள் தரும் மரியாதையை தயவு செய்து மதியுங்கள். மற்ற நாடுகள் கருத்து தெரிவிக்க இடம் கொடுக்காமல் இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோதி தலையிட்டு தீர்வு காண வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

டெல்லியில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

இதற்கிடையே, டெல்லி புராரியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடந்து வருகிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பேச்சுவார்த்தையை நடத்தினார். இதில் 32 விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிராகி வருவதையடுத்து, டெல்லியை இணைக்கும் ஹரியாணா மாநில எல்லையை குருகிராம் அருகேயேும், உத்தர பிரதேசத்தை இணைக்கும் காஜியாபாத், நொய்டா எல்லைகளிலும் தடுப்புகளை போட்டு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

முன்னதாக, டெல்லி நோக்கி போராட்டம் நடத்தும் நோக்குடன் விவசாயிகள் நுழைவதற்கு நகர காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், நகர எல்லையில் திரண்ட விவசாயிகளின் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை காவல்துறையினருக்கு ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான விவசாயிகள், டிராக்டர் வாகனங்களில் குடும்பம் குடும்பமாக திரண்டனர். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டத்தை கைவிடக்கூடாது என்ற தீர்மானத்துடன் அவர்கள் காலவரையின்றி போராட்டங்களில் ஈடுபடும் எண்ணத்துடன் சமையல் பாத்திரங்கள், கூடாரங்களுடன் டெல்லிக்கு வர முற்பட்டனர்.

அவர்களை காவல்துறையினர் நகருக்குள் நுழைய அனுமதிக்காத நிலையில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கண்ணீர புகை குண்டுகளையும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் முற்பட்டனர். இந்த நடவடிக்கைகள் தேசிய கடுமையாக எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டன.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதையடுத்து மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, டெல்லியின் புறநகர் எல்லையான புராரி நிரங்காரி மைதானத்தில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் திரண்டிருக்கிறார்கள். இந்த கூட்டம் அதிகமாவதையடுத்து, மீண்டும் டெல்லிக்குள் நுழைய முற்படும் வெளி மாநில விவசாயிகளுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலையில், தடுப்புகளை போட்டு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் கோபம் அடைந்த சில விவசாயிகள், தங்களுடைய டிராக்டர்களைக் கொண்டு தடுப்புகள் மீது மோதச் செய்து நகருக்குள் நுழைய முற்பட்டனர். இதனால் பல அடுக்கு தடுப்புகள் சாலை முழுவதும் போடப்பட்டிருந்தன.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள், விவாயிகளே இல்லை என்று இந்திய இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார். "காணொளிகளில் பார்க்கும்போது போராடுபவர்கள் உண்மையிலேயே விவசாயிகள் போல நடந்து கொள்ளவில்லை. வேளாண் சட்டங்களால் உண்மையான விவசாயிகளுக்கு பிரச்னை இல்லை. அவர்கள் விளைவிக்கும் பொருட்கள் மூலம் கமிஷன் பெறுவோரே எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறாரக்ள்" என்று தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தரும் கனடா பிரதமர் - அழுத்தத்துடன் நடந்த டெல்லி பேச்சுவார்த்தையில் இழுபறி - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது - சித்தராமையா

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது - சித்தராமையா

 

மத்திய அரசு கொண்டு வந்த  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 6-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.


 
இதுதொடர்பாக, சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டரில் செய்தியில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. அதற்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது. அரசு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பதிலாக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். எங்களின் ஆதரவு விவசாயிகளுக்கு எப்போதும் உண்டு.

அதே போல் கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள நில சீர்திருத்த சட்டம் மற்றும் வேளாண்மை சந்தைகள் சட்டத்தை உடனே வாபஸ் பெறவேண்டும். இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் விவசாயிகள் பெங்களூருவில் கூடி போராட்டம் நடத்தினர். ஆனால் மாநில அரசு இதை கண்டுகொள்ளவில்லை என பதிவிட்டுள்ளார்

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/02055540/2125615/Tamil-News-Siddha-Ramaiah-support-Farmers-Protest.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் போராட்டம் இன்று 7-வது நாள்: மத்திய அரசுடன் நாளை அடுத்த சுற்று பேச்சு

விவசாயிகள் போராட்டம் இன்று 7-வது நாள்:  மத்திய அரசுடன் நாளை அடுத்த சுற்று பேச்சு

 

புதுடெல்லி, 

மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு 3 வேளாண் சட்டங்களை கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது. இந்த சட்டங்களால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் முறை ஒழிக்கப்பட்டு விடும்; நாட்டின் முதுகெலும்பான விவசாயமானது, பெரு நிறுவனங்கள் மயமாக மாறி விடும் என்று விவசாயிகள் பயப்படுகின்றனர். 


ஆனால் இந்த சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மையைத்தான் செய்யும், புதிய வாய்ப்புகளையும், உரிமைகளையும் தரும், தொழில்நுட்பங்களை கொண்டு வரும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும், இந்த 3 சட்டங்களையும் திரும்பப்பெற்றாக வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக அமைந்துள்ளது. இதை வலியுறுத்தி அவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர்ந்து 6-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து மூத்த மந்திரிகள் அமித் ஷா (உள்துறை), ராஜ்நாத் சிங் (ராணுவம்) நரேந்திரசிங் தோமர் (விவசாயம்), பியுஷ் கோயல் (ரெயில்வே, வர்த்தகம், தொழில்), பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் நேற்று காலை நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து டெல்லி விஞ்ஞான பவனில் பிற்பகலில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. உடனே அந்த வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி பிற்பகலில் 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்து நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது.

இதில், விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியுஷ்கோயல், வர்த்தக ராஜாங்க மந்திரியும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.யுமான சோம் பர்காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 35 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள், பேச்சுவார்த்தையின்போது 3 விவசாய சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஒருமனதாக வலியுறுத்தி கூறினர்.

3 விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கு 5 உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறுகையில், “நாங்கள் ஒரு சிறு குழுவை அமைக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் அவர்களோ, அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். அவர்கள் போராட்டத்தை முடிக்க வேண்டும், பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என விரும்புகிறோம். ஆனால் இது விவசாயிகளை பொறுத்தது” என குறிப்பிட்டார்.

5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், இதுகுறித்து விவசாய அமைப்புகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் 3-ந் தேதி (நாளை) அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். எனவே நாளை அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது, புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளை கண்டறிந்து, அதுகுறித்து அரசின் பரிசீலனைக்கு  இன்று தெரிவிக்கும்படி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த பிரச்சினைகள் தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/02064517/No-Headway-In-Talks-With-Farmers-Next-Meeting-On-Thursday.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் - சாத்தூரில் நடந்தது

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் - சாத்தூரில் நடந்தது

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கட்சியினர், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் இருந்து தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.


பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்தும், திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை சாத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

 

https://www.dailythanthi.com/News/Districts/2020/12/02151554/Support-the-peasant-struggle-Marxist-Communist-Party.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அம்பானிக்கு கும்பிடு!! விவசாயிகள்னா கேவலமா?" - விவசாயி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை மிரளவைக்கும் விவசாயிகளின் போராட்டம்; கிடைக்குமா நீதி?

201201004030-01-india-farmers-protest-1130-exlarge-169.jpg?189db0&189db0

இந்தியாவின் டெல்லி எல்லையில் விவசாயிகள் முற்றுகையிட்டிருக்கும் நிலையில், பஞ்சாப், ஹரியானா கிராமங்களிலிருந்து வீட்டுக்கொரு போராளியை டெல்லி நோக்கி அனுப்ப மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்திய மத்திய அரசால் கொண்டுவந்த புதிய விவசாய சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு விவசாய அமைப்பினர் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பஞ்சாப், அதன் அண்டை மாநில விவசாய அமைப்பினர் வரலாறு காணாத வகையில் ஒன்று திரண்டு புதிய விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லி வரை பேரணியாக சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதலில், டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த விவசாய அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிறுத்தி, அதற்கு பதிலாக டெல்லி புராரி பகுதியிலுள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்துமாறு அனுமதியளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டக் குழுவினர் டெல்லி எல்லையில் தேசிய நெடுஞ்சாலையிலேயே போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

வீட்டிற்கொரு போராளி; வேகமெடுக்கும் போராட்டம்!

டெல்லி எல்லையில் விவசாயிகள் முற்றுகையிட்டிருக்கும் நிலையில், பஞ்சாப், ஹரியானா கிராமங்களிலிருந்து வீட்டுக்கொரு போராளியை டெல்லி நோக்கி அனுப்ப மக்கள் திட்டமிட்டுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வீட்டுக்குத் திரும்பமாட்டோம் என்று சூளுரைத்துள்ளனர் விவசாயிகள்.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள் உட்பட பிற அத்தியாவசியப் பொருட்களை மக்களிடமிருந்து சேகரித்து அதனை டிராக்டர்களின் மூலம் டெல்லிக்குக் கொண்டு செல்ல தயாராகியுள்ளனர்.

விருதுகளையும், பதக்கங்களையும் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்?!

டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்குள் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என பஞ்சாப், ஹரியானா மாநில முன்னாள் விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்படித் திரும்பப் பெறாதபட்சத்தில், தங்களுக்கு அளிக்கப்பட்ட பதக்கங்களையும், விருதுகளையும் திருப்பியளிக்கத் திட்டமிட்டிருப்பதாக பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்‘டெல்லி சலோ!’ - வேளாண் சட்டங்களுக்கு எதிராக வீறுகொண்டெழுந்த விவசாயிகள்விவசாயிகள் போராட்டம்

பேச்சுவார்த்தை வேண்டாம்; ரத்து செய்ய வேண்டும்!

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு விவசாய அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், அதற்கு உடன்படாத விவசாய அமைப்பினர், சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் முதன்மையான கோரிக்கை என்று தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

இதனால், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் போராட்டத்தினை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றந்த்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது

 

 

https://newuthayan.com/இந்தியாவை-மிரளவைக்கும்-வ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி எல்லையில் 7 ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

 
127893792_1753520334823985_6298976228952
 30 Views

இந்திய மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் இன்று 7-வது நாளாக கடுங்குளிரிலும் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் பயன் என்பது விவசாயிகளின் கருத்து. ஆகையால் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் 96,000 டிராக்டர்கள் மற்றும் 12 மில்லியன் (1.2 கோடி) விவசாயிகள் மற்றும் பலர் இந்திய தலைநகரின் எல்லையில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாகன ஓட்டிகளுக்கு மாற்றுப் பாதையை அறிவித்துள்ளனர்.

இந்தப் போரா128189931_1753520271490658_2742217472537ட்டங்களின் அடுத்த கட்டமாக டெல்லி சலோ போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள், மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். டிராக்டர்களிலும் நடந்தும் பல இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டனர். டெல்லியின் எல்லையிலும் டெல்லி புராரி மைதானத்திலும் இரவு பகலாக கடந்த 7 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெற்கு டெல்கியில் உள்ள புராரி மைதானத்திற்குச் சென்ற பின்பு தான் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை விவசாயிகள் அமைப்பு ஏற்க மறுத்து விட்டன. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மட்டும் சம்மதிப்பதாகவும் தெரிவித்துள்ளன.

டிசம்பர் 3ஆம் திகதி விவசாயிகள் சங்கப் பிர127729888_1753520228157329_2906621155973திநிதிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த முன்னர் புராரி மைதானத்திற்கு விவசாயிகள் செல்ல வேண்டும் என்ற அமித்ஷாவின் வேண்டுகோளை விவசாயிகள் நிராகரித்திருந்தனர். புராரி மைதானம் என்பது திறந்தவெளிச் சிறைச்சாலை போன்றது என்றும் அங்கு செல்ல முடியாது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

தங்களைப் பொறுத்தவரை மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் கோரிக்கை எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் நாளையும் மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல கட்டங்களாக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இன்று (புதன்கிழமை) கூட தமிழ்நாட்டில் 400-500 இடங்களில் விவசாயிகள் சங்கம் விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்தினர்.

இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருவதுடன், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்படியும் கேட்டு பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருவது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/டெல்லி-எல்லையில்-7-ஆவது-நா/

Link to comment
Share on other sites

பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்
 

விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்

பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்றவர்கள் உட்பட பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் போராடும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். மேலும் தில்லிக்கு செல்லும் வழியில் விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் விருதுகளை திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர்.

விருதை திருப்பிக் கொடுக்கும் பட்டியலில் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் கர்தார் சிங், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங் சீமா, அர்ஜூனா விருது பெற்ற பல்விந்தர் சிங் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற ஹாக்கி வீரர் ராஜ்பீர் கவுர் ஆகியோர் உள்ளனர்.

செவ்வாய் அன்று செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுனா விருது பெற்ற கூடை பந்து வீரர் சஜன் சிங் சீமா இந்த தகவலைக் கூறியுள்ளார்.

இந்த வீரர்கள் டிசம்பர் 5-ம் தேதி டெல்லிக்குச் சென்று தங்களது விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.

டெல்லிக்கு செல்வதை தடுக்க போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தியதாக அவர்கள் ஒன்றிய அரசின் மீதும் மற்றும் ஹரியானா அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

38.jpg
விவசாயிகளின் மீது தண்ணீர் வாகனங்கள் கொண்டு பீய்ச்சி அடிக்கப்பட்ட போது
33-1.jpg
விவசாயிகள் போராட்டத்தில் வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகள்
8-1.jpg
விவசாயி ஒருவரை தாக்கும் காவல்துறை

எங்கள் மூத்தவர்களின் தலைப்பாகை தூக்கி எறியப்படும்போது எங்களுக்கு விருதுகள் எதற்கு?

விளையாட்டு வீரர் சீமா பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “நாங்கள் விவசாயிகளின் குழந்தைகள். அவர்கள் கடந்த பல மாதங்களாக அமைதியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒரு வன்முறை சம்பவம் கூட நடக்கவில்லை. ஆனால் டெல்லிக்குச் செல்லும்போது அவர்களுக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

எங்கள் மூத்தவர்கள்  மற்றும் சகோதரர்களின் தலைப்பாகைகள் தூக்கி எறியப்பட்டுள்ளபோது எங்களுக்கு  விருதுகள் மற்றும் மரியாதை எதற்கு? நாங்கள் எங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். இதுபோன்ற விருதுகளை நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் நாங்கள் அதைத் திருப்பித் தருகிறோம்.” என்று கூறினார்.

விளையாட்டு வீரர்கள் போராட்டத்தில் இணைகிறார்கள்

விவசாய சட்டங்களுக்கு எதிரான ‘டெல்லி சாலோ’ அணிவகுப்பின் ஒரு பகுதியாக விவசாயிகள் தலைநகரை நோக்கிச் செல்லும்போது தண்ணீர் பீரங்கிகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியது சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் கோபம் கொள்ளச் செய்துள்ளது.           

“விவசாயிகள் அத்தகைய சட்டங்களை விரும்பவில்லையென்றால், ஏன் மத்திய அரசு அவர்கள் மீது திணிக்கிறது” என்று பஞ்சாப் காவல்துறையில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக ஓய்வுபெற்ற கர்தார் சிங் கேள்வியெழுப்பியுள்ளார். டிசம்பர் 5 ம் தேதி டெல்லி எல்லையில் முன்னாள் வீரர்களும் விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளின் கிளர்ச்சியை ஆதரிக்கும் ஹரியானாவில் உள்ள முன்னாள் வீரர்களையும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் சிங்  பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். விவசாயிகள் போராட்டம் என்பது பொது சமூகத்தின் போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. 

https://madrasradicals.com/politics/punjab-sportspersons-returning-awards-in-support-of-farmers/?fbclid=IwAR1RlEEgfb-JV2JDV3h48EyyGYhMTwepEcRp8zgTlBEEIWWWJ8t_9oj-8x0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் போராட்டம் முழு இந்திய போராட்டமாக மாற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளுக்கு துரோகம்: பத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி முடிவு

விவசாயிகளுக்கு துரோகம்:  பத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி முடிவு

 

வேளாண் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் நோக்கில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளில் ஒரு தரப்பினரிடையே எதிர்ப்பு வலுத்தது.

இதனை தொடர்ந்து இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவானது.


இதன்படி, அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த
விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.  தொடர்ந்து 8வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது.

இதற்கு சுமூக தீர்வு காணப்படும் வகையில், மத்திய வேளாண் மந்திரி என்.எஸ். தோமர் தலைமையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மத்திய அரசு சார்பிலான பேச்சுவார்த்தை நடந்தது.  அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.  தொடர்ந்து போராட்டம் நீடித்தது.

இதனை தொடர்ந்து விவசாய சங்க தலைவர்களை இன்று சந்திப்பதற்கு முடிவானது.  இதன்படி, 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக விவசாய தலைவர்களுடனான பேச்சுவார்த்தை கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கி நடந்து வருகிறது.  இதில், மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அரசு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்திற்கு செல்வதற்கு முன் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி தோமர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறேன் என்று கூறி சென்றுள்ளார்.

இந்த நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கியிருந்த பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார்.  விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது என கூறிய அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விருது தனக்கு வேண்டாம் என கூறியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு மார்ச்சில் பாதலுக்கு நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

 

https://www.dailythanthi.com/News/India/2020/12/03140937/Betrayal-of-farmers-No-Padma-Vibhushan-award-Former.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

இதன்படி, அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த
விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.  தொடர்ந்து 8வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது.

ஏன் தமிழ்நாட்டு விவசாயிகள் கலந்து கொள்ளவில்லை?
யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் தமிழ்நாட்டு விவசாயிகள் கலந்து கொள்ளவில்லை?
யாருக்காவது தெரியுமா?

டெல்லி விவசாயிகள் போராட்டம் / நாம் தமிழர் கட்சி / ntk / தமிழ் தேசியன்

 

விவசாயிகளுக்கு ஆதரவாக கம்பத்தில் வாலிபர் சங்கம் போராட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மத்திய அரசுடனான பேச்சுவாா்த்தை தோல்வி;நாளை மீண்டும் பேச்சு வார்த்தை ,அரசு கொடுத்த மதிய உணவை மறுத்த விவசாய அமைப்பினா்

மத்திய அரசுடனான பேச்சுவாா்த்தை தோல்வி;நாளை மீண்டும் பேச்சு வார்த்தை ,அரசு கொடுத்த மதிய உணவை மறுத்த விவசாய அமைப்பினா்

மத்திய அரசின் புதிய 3 வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து சென்றுள்ள விவசாயிகளை சிங்கு, டிக்ரி எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.இதனால் எல்லையிலேயே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் நடத்தி வருகிறார்கள்.


இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, டெல்லி விஞ்ஞான்பவனில் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாததால், அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தையை வியாழக்கிழமை (நேற்று) நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன் படி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் குழு நேற்று 2 வது கட்ட பேச்சு பேச்சுவாா்த்தை நடத்தியது. சுமாா் 8 மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் நாளை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நேற்றைய பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சாா்பில் அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல், இணையமைச்சா் சோம் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுமாா் 8 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. மீண்டும் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. 

பேச்சுவார்த்தைக்குப்பிறகு செய்தியாளா்களிடம் நரேந்திர சிங் தோமா் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சினையில் அரசு பிடிவாதத்துடன் நடந்துகொள்ளவில்லை. புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக, விவசாயிகள் எழுப்பிய அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் பரிசீலிக்கவும், அதுதொடா்பாக விவாதிக்கவும் அரசு தயாராக உள்ளது.

அவர்களின் முக்கிய கவலை தீா்க்கப்படும்: புதிய வேளாண் சட்டங்களால் அரசின் கொள்முதல் மண்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது விவசாயிகளின் முக்கிய கவலையாக உள்ளது. இந்தக் கவலையைத் தீா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் கொள்முதல் மண்டிகளை வலுப்படுத்தவே அரசு விரும்புகிறது. வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பது தொடரும். வா்த்தகா்கள் தனியாக மண்டி தொடங்குவதை பதிவு செய்வதற்காக, புதிய வேளாண் சட்டத்தில் ஒரு பிரிவைச் சோ்ப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. தற்போதைய நிலையில் முடிவு எதுவும் எட்டப்படாததால், சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும் என கூறினார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்காக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். அவா்களின் போராட்டம் 9-ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

அமைச்சா்களுடனான பேச்சுவாா்த்தையின்போது விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்காக ஒரு வாகனத்தில் மதிய உணவு கொண்டு வரப்பட்டது. அந்த உணவை விவசாய அமைப்பினா் வாங்க மறுத்துவிட்டனா்.

இது குறித்து லோக் சங்கா்ஷ் மோா்ச்சா என்ற விவசாய அமைப்பின் தலைவா் பிரதிபா ஷிண்டே கூறும் போது அரசு சாா்பில் வழங்கப்பட்ட மதிய உணவை எங்கள் பிரதிநிதிகள் சாப்பிட மறுத்துவிட்டனா். எங்களுக்கு சிங்கு எல்லையில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது. எங்களுக்கு உணவளித்து உபசரிப்பதற்குப் பதிலாக, பிரச்சினைகளுக்குத் தீா்வுகாண்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். எங்களுடன் வந்த விவசாயிகள் சாலையில் அமா்ந்து போராடிக் கொண்டிருக்கும்போது, நாங்கள் மட்டும் எப்படி அரசு தரும் உணவைச் சாப்பிட முடியும் என்று கேட்டாா்.

 

https://www.dailythanthi.com/News/India/2020/12/04062318/Government-willing-to-amend-some-provisions-of-new.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் தமிழ்நாட்டு விவசாயிகள் கலந்து கொள்ளவில்லை?
யாருக்காவது தெரியுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய கார்த்தி

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய கார்த்தி

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லைகளிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள், பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும், கொரொனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும்பங்கு என்ற வகையில் பெண்களும் பெருந்திரளாகப் பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது.

நாளும், பொழுதும் பாடுபட்டால் தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு, கழனி மற்றும் பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு, குடும்பத்தாரைப் பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலைதூரம் பயணித்து வந்து தீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது.

கார்த்தி அறிக்கை

தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள், விளைப் பொருள்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்டப் பல பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் உழவர் சமூகம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாக பாதிப்படைவோம் என கருதுகிறார்கள்.

தங்கள் மண்ணில் தங்களுக்கிருக்கும் உரிமையும், தங்கள் விளைப் பொருட்கள் மீது தங்களுக்கிருக்கும் சந்தை அதிகாரமும் பெரும் முதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றம் செய்யப்பட்டுவிடும் என்றும், ஆகவே இந்தச் சட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. ஆகவே, போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு: அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/03192147/2126075/Tamil-Cinema-Karthi-support-to-farmers-protest.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் போராட்டம்; ஜஸ்டின் ட்ரூடோ கருத்து.. கனடா தூதரை அழைத்து எதிர்ப்பைப் பதிவு செய்த இந்தியா!

கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ( Sean Kilpatrick )

டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்து கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய கருத்துகள் இருநாட்டு உறவைப் பாதிக்கும் என இந்தியா கண்டனம் தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் டெல்லி சலோ போராட்டம் 9-வது நாளை எட்டியிருக்கிறது. விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.

விவசாயிகள் போராட்டம்
 
விவசாயிகள் போராட்டம் Manish Swarup

விவசாயிகள் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் நிகழ்வு ஒன்றில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, ``விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும்’’ என்று பேசியிருந்தார். மேலும், போராட்ட சூழல் கவலையளிப்பதாக இருக்கிறது எனவும் ட்ரூடோ கருத்துத் தெரிவித்திருந்தார்.

 

இதற்கு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து, இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வெளியுறவுத் துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு கனட தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
 
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கனட தூதருக்கு சம்மன் வெளியுறவுத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு, அவரிடம் நேரில் இந்த விவகாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. `கனட பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசிவரும் கருத்துகள் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கனட தூதரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர்கள் இதுபோல் தொடர்ந்து பேசிவந்தால், அது இருநாட்டு உறவுகளில் கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/india-summons-canada-high-commissioner-over-justin-trudeaus-comments-on-farmers-protest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் 8-ந் தேதி வேலை நிறுத்தம் விவசாயிகள் அழைப்பு

வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் 8-ந் தேதி வேலை நிறுத்தம் விவசாயிகள் அழைப்பு

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் இன்று 10 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது.


திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால் அண்டை மாநிலங்களுடனான தொடர்பை டெல்லி இழந்து வருகிறது. குறிப்பாக அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்காகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட பாதுகாப்பு அளிப்பதற்காகவும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ந் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர்.

ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், அன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தனால் நேற்று முன்தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமார் 40 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களுடன் மத்திய அரசு பிரதிநிதிகள் (மத்திய மந்திரிகள்) பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரிகள் உறுதியளித்தனர். எனினும் சட்டத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி விவசாயிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கியதால் இந்த பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தது.

எனவே இன்று (சனிக்கிழமை) மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த நிலையில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சனிக்கிழமை (இன்று) நடைபெறும் பேச்சுவார்த்தையில், எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். குறிப்பாக டிசம்பர் 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுப்பது என இன்றைய கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

அன்றைய தினம் அனைத்து சாலைகளின் சுங்கச்சாவடிகளையும் நாங்கள் முற்றுகையிடுவோம் என கூறிய விவசாயிகள், வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் வருகிற நாட்களில் அடைப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே டெல்லி எல்லைகளில் குழுமியிருக்கும் விவசாயிகளால் தினந்தோறும் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து முடங்கி வருகிறது. இதனால் போக்குவரத்து அடைக்கப்பட்டுள்ள சாலைகள், மாற்று ஏற்பாடுகள் போன்றவை குறித்து டெல்லி போலீசார் தினமும் தங்கள் டுவிட்டர் தளத்தில் மக்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் குழப்பமும், பரபரப்பும் நிலவி வரும் நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது.

இந்த் நிலையில் போராட்டத்தின் போது விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறக் கோரி ஜன்னாயக் ஜந்தா கட்சி (ஜேஜேபி) தலைவர் திக்விஜய் சவுதலா உள்துறை அமைச்சர் அனில் விஜ்- யை சந்தித்தார்

திக்விஜய் சவுதலா கூறுகையில், "இந்த விவகாரத்தை ஆராய்வோம் மற்றும் பிரச்சினையை முதலமைச்சருடன் விவாதிப்பேன் என்று உள்துறை அமைச்சர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார்"

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/05074415/Block-All-Roads-To-Delhi-Farmers-Call-For-AllIndia.vpf

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விவசாயிகளுக்காக காசு வாங்காமல் சுப்ரீம் கோர்ட்டில் போராட தயார்: வழக்கறிஞர் தவே பேட்டி

விவசாயிகளுக்காக காசு வாங்காமல் சுப்ரீம் கோர்ட்டில் போராட தயார்:  வழக்கறிஞர் தவே பேட்டி
 

விவசாயிகளின் நலனிற்காக மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


இதன்படி, அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதி பேரணியாக திரண்டனர்.  தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான சங்க உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, விவசாயிகள் எந்த வழக்கிலாவது உயர் நீதிமன்றத்திலோ மற்றும் சுப்ரீம் கோர்ட்டிலோ போராட விரும்புகிறார்கள் என்றால், அவர்களுக்காக காசு வாங்காமல் வாதிட நான் தயாராக இருக்கிறேன்.  விவசாயிகளுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இதுபற்றி மற்றொரு வழக்கறிஞரான பூல்கா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, விவசாயிகளுக்கு சட்டபூர்வ முறையில் உதவ முன்வந்த தவேவுக்கு நாம் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கானது இல்லை என நாட்டின் மூத்த வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள் என்றால் அதுபற்றி அரசு சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/India/2020/12/05053214/Ready-to-fight-in-the-Supreme-Court-without-buying.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லியில் விவசாயிகளுடன், மத்திய அரசு 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது

டெல்லியில் விவசாயிகளுடன், மத்திய அரசு 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது
 

மத்திய அரசின் 3  புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது. டெல்லியின் அனைத்து சாலைகளிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால் அண்டை மாநிலங்களுடனான தொடர்பை டெல்லி இழந்து வருகிறது. குறிப்பாக அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ந் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர். ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், அன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் இன்று 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் இல்லத்தில் மத்திய மந்திரிகள்  அமித்ஷா, ராஜ்நாத்சிங், நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர்  ஆலோசனையில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது பற்றி மத்திய பரிசீலிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/05144858/Round-5-Of-Farmer-Talks-Government-May-Agree-To-Amend.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் பேரணி!

IMG_20201205_212827.jpg?189db0&189db0

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி எல்லைகளிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய விவசாய சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் கார் பேரணி நடத்தினர். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லோயர் மெயின்லேண்டின் சர்ரே பகுதியில் இருந்து வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகம் வரை இந்த பேரணி நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் கார்கள் மற்றும் ட்ரக்குகளில் கோரிக்கை பதாகைகள் மற்றும் கனடா கொடிகளை கட்டியபடி சென்றனர்.

  • 23538250_web1_201210-SUL-Car-rally-india

     

     

https://newuthayan.com/இந்திய-விவசாயிகளுக்கு-ஆத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: டெல்லியில் 11-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: டெல்லியில் 11-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
 
 
புதுடெல்லி,
 
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங் களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர்.202012060958401198_farmers01._L_styvpf.g
 
டெல்லியின் புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளிலும் அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டிருக்கும் அவர்கள் இன்று 11-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
 
இந்த சட்டங்கள் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு முறையை அழித்து, விவசாய துறையை கார்பரேட்டுகளிடம் தாரைவார்க்கும் என அச்சம் வெளியிட்டு வரும் அவர்கள், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
தங்கள் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக வருகிற 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்துள்ள விவசாயிகள், அன்றைய தினம் சாலைகளின் சுங்கச்சாவடியை முற்றுகையிடுவோம் என்றும் அறிவித்து உள்ளனர்.
 
இவ்வாறு தீவிரமடைந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசும் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகிறது. முக்கியமாக கடந்த 1 மற்றும் 3-ந் தேதிகளில் சுமார் 40 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
 
மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், வர்த்தகம் மற்றும் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரியும், பஞ்சாப் மாநில எம்.பி.யுமான சோம் பர்காஷ் ஆகியோர் அடங்கிய மத்திய அரசு பிரதிநிதிகள் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் எத்தகைய முடிவும் எட்டப்படவில்லை.202012060958401198_farmers3._L_styvpf.gi
 
முதலில் இந்த சட்டங்கள் மீதான பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க மத்திய அரசு பரிந்துரைத்தது. பின்னர் இந்த சட்டங்கள் மீதான விவசாயிகளின் கவலைகளும், சந்தேகங்களும் தீர்க்கப்படும் என உறுதியும் அளித்தது. மேலும் மண்டி அமைப்பு மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை தொடர்ந்து இருக்கும் எனவும் மத்திய அரசின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
 
ஆனால் இதை ஏற்காத விவசாயிகள், 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.
 
இந்த சூழலில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான 5-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பர்காஷ் ஆகியோர் சுமார் 40 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இதில் முதலில் முந்தைய பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட அம்சங்கள் குறித்து வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் சுருக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் பேசிய தோமர், ‘விவசாயிகள் பிரச்சினையை சுமுக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. விவசாயிகளின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம், வேளாண் சட்டங்கள் குறித்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்’ என தெரிவித்தார்.
 
பின்னர் மந்திரி சோம்பர்காஷ், விவசாயிகளிடம் பஞ்சாபி மொழியில் பேசினார். அவரும் விவசாயிகளின் அனைத்து கவலைகளையும் போக்க திறந்த மனதுடன் இருக்கிறோம் என கூறினார்.
 
ஆனால் விவசாயிகள் இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் மவுன விரதம் கடைப்பிடித்தனர். அந்த வகையில் சில பிரதிநிதிகள் தங்கள் உதடுகளில் விரலை வைத்திருந்தனர்.
 
மேலும் 3 சட்டங்களும் திரும்ப பெறப்படுமா? இல்லையா? என்ற கேள்விக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என அரசு பதிலளிக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தினர். இதை குறிக்கும் வகையில் ‘ஆம் அல்லது இல்லை’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட காகிதத்தையும் ஏந்தியிருந்தனர்.
 
விவசாயிகளின் இந்த துல்லியமான இந்த கேள்விக்கு மத்திய மந்திரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதே நேரம் விவசாயிகளின் மவுனத்தை கலைத்து அவர்களை பேச வைக்க முயன்றனர். ஆனால் விவசாயிகள் தங்கள் மவுனத்தை கலைக்கவில்லை.
 
இதைத்தொடர்ந்து எந்த வித முடிவும் எட்டப்படாமல் நேற்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. எனினும் மீண்டும் 9-ந் தேதி சந்தித்து 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்.
 
இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாம்மிட்டு போராட்டத்தைத் தொடார்ந்து நடத்தி வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகள் திக்ரியில் டெல்லி-அரியானா எல்லையில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.202012060958401198_farmers4._L_styvpf.gi
 
9-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், 8 ஆம் தேதி அழைப்புவிடுத்தபடி, நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.