Jump to content

டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன்: குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர் சிங்

கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன்: குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர் சிங்
 

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

11-வது நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.  


இந்நிலையில் டெல்லி சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர் சிங் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

எங்களுடைய மூத்த சகோதரரான பஞ்சாப் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் அரியானாவைச் சேர்ந்த இங்கு வந்துள்ளேன்.  மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறாவிட்டால், விளையாட்டுத் துறையில் உயர்ந்த விருதான எனக்கு வழங்கப்பட்ட ராஜீவ் கேல்ரத்னா விருதை மத்திய அரசிடம் நான் திருப்பி அளிப்பேன். விவசாயிகள் ஒற்றுமை எப்போதும் இருக்க வேண்டும், எதிர்காலத்திலும் இருக்க வேண்டும்” என்றார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் விஜயேந்தர் சிங் சேர்ந்தார் என்பது கவனிக்கத்தக்கது. 

 

https://www.dailythanthi.com/News/India/2020/12/06163535/Will-Return-Sports-Award-If-Farm-Laws-Not-Withdrawn.vpf

 

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பதாகைகளுடன் அமைதி காத்த விவசாயிகள்! - மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

பஞ்சாபி மொழியில் பேசிய வர்த்தகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ், பஞ்சாபின் உணர்வுகளை அரசு புரிந்து கொள்வதாகவும், உங்ககளின் அனைத்து கவலைகளுக்கும் திறந்த மனதுடன் தீர்வு காண தயாராக இருக்கிறோம்!

மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய 3 வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். `வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும், ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம்' என்று விவசாயிகள் உறுதியாக இருப்பதால் மத்திய அரசுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. நாடு முழுக்க இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி தொடர்ந்து குவிந்து வருவதால் பாதுகாப்பு அளிக்க போலீஸாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ம் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக இணை அமைச்சர் சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர். ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், அன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதையடுத்து, மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில் நேற்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம்
 
விவசாயிகள் போராட்டம்

இதனிடையே விவசாய சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் பிரதமர் மோடியுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, டெல்லி விக்யான் பவனில், 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட 5 -ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது, சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சாதகமான அம்சங்கள் குறித்த கருத்தையும் வரவேற்பதாகவும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார். அப்போது பஞ்சாபி மொழியில் பேசிய வர்த்தகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ், ``பஞ்சாபின் உணர்வுகளை அரசு புரிந்து கொள்வதாகவும், உங்ககளின் அனைத்து கவலைகளுக்கும் திறந்த மனதுடன் தீர்வு காண தயாராக இருக்கிறோம். விவசாயிகளின் உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

 

4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. தீர்க்கமான முன்மொழிவை வழங்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒப்புக்கொண்ட விவசாய அமைப்புகளின் தலைவர்கள் வரும் 9-ம் தேதி மீண்டும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
 
விவசாயிகள் போராட்டம்

இதையடுத்து பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "இன்று வெவ்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. நாங்கள் ஒரு நியாயமான தீர்வை விரும்பினோம், ஆனால் இன்றைய பேச்சுவார்த்தைகளின் போது அது நடக்கவில்லை. டிசம்பர் 9-ம் தேதி மற்றொரு கூட்டம் நடைபெறும். நாங்கள் விவசாயிகளிடம் அனைத்து பிரச்னைகளையும் விவாதிப்போம்” என்று கூறியுள்ளோம்.

``விவசாய சங்க தலைவர்களிடமிருந்து எங்களுக்கு சில தீர்வுகள் கிடைத்திருந்தால் அது எளிதாக இருந்திருக்கும். அதற்காக நாங்கள் இன்னும் காத்திருப்போம்" என்று தோமர் பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவித்தார். மேலும், தலைநகரை எதிர்த்து முகாமிட்டுள்ள முதியவர்களையும், குழந்தைகளையும் திரும்ப அனுப்புமாறு விவசாய சங்க தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார் தோமர். குளிர்காலம் மற்றும் கோவிட் தொற்றுநோயைக் காரணம் காட்டி வீடு திரும்ப அறிவுறுத்தியதோடு, "எம்.எஸ்.பி. (குறைந்தபட்ச ஆதரவு விலை) தொடரும் என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.

இரு தரப்புக்கும் இடையே எந்த வித முடிவுகளும் எடுக்கப்படாமல் 5-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 6-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 9-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது. 5-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் பெரும்பாலும் அமைதியாக இருந்தனர். தங்கள் கையில், `வேளான் சட்டங்களை ரத்து செய்ய முடியுமா முடியாதா’ என்ற பதாகையை கொண்டு இருந்தனர். இதன் மூலம் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதே ஒரே தீர்வு என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில் விவசாய குழுக்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் வரும் 8-ம் தேதி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.vikatan.com/government-and-politics/agriculture/what-happened-in-farmers-government-meeting

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மேற்கு ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் சீமான் தங்கை! | இந்திய விவசாயிகளுக்காக 

விவசாயிகளுக்கான ஆதரவு கூட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக 'பாரத் பந்த்': தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைப்பு!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக 'பாரத் பந்த்': தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைப்பு!

மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
 
இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. 
 
இந்நிலையில் இன்று விவசாயிகள் அறிவித்த ‘பாரத் பந்த்’ எனப்படும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில் திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, மதுராந்தகம், கும்பகோணம், சீர்காழி, புதுக்கோட்டையில் கடைகள் மூடப்பட்டுள்ளது. 
 
கோவை, மன்னார்குடி, மதுரை, கோபிச்செட்டிபாளையம், மரக்காணம், காஞ்சிபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களிலும் பந்துக்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆர்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த் வட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக  பாரத் பந்த்  வட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
 
புதுடெல்லி
 
3 வேளாண் சட்டங் களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
 
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
விவசாயிகளுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் அனைவரும் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
 
வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.
 
இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
 
‘பாரத் பந்த்’ சமயத்தில் பாதுகாப்பை கடுமையாக்கி, அமைதி பேணப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டு கொண்டு இருந்தது.
 
விவசாயிகளின் இந்த பாரத் பந்த்  வட மாநிலங்களில்  வெற்றிகரமாக நடந்தது.  'பாரத் பந்த்' தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சில தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டன, பாதிக்கும் மேற்பட்டவை திறந்திருந்தன.
 
பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தங்களது போராட்டத்தின் போது முக்கிய சாலைகளைத் தடுத்து மறியலில் ஈடுபட்டனர். 
 
202012081647568783_Bharat-Bandh._L_styvp
 
பஞ்சாப், அரியானா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 
 மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஒடிசாவில் பல இடங்களில் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டன அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.டெல்லியில், அதிக பாதுகாப்பு இருந்தபோதிலும் எல்லைப் பகுதிகளுக்கு அருகே அதிகமான விவசாயிகள் கூடியிருந்ததால் சந்தைகள் பெரும்பாலும் திறந்தே இருந்தன. 
 
 ஜார்க்கண்டில்  இன்று அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன , தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகள் சில பகுதிகளில் மூடப்பட்டன, அதே நேரத்தில் உள்ளூர் போக்குவரத்து சாதாரணமாக நடந்தது.
 
ராஞ்சி, தன்பாத், ஹசாரிபாக், ஜாம்ஷெட்பூர், பாலமு, தும்கா, பொகாரோ, சாஹிப்கஞ்ச் மற்றும் பக்கூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன, ஆனால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெற்றதாக தெரிவிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
அனைத்து மாவட்டங்களிலும் நிலைமை அமைதியாக இருந்ததாக  போலீஸ் டைரக்டர் ஜெனரல் எம்.வி.ராவ் தெரிவித்தார். அனைத்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் பொதுவாக ராஞ்சியில் செயல்பட்டு வந்தன, 
 
காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்காரில் அதன் தலைநகர் ராய்ப்பூர் உட்பட முக்கிய நகரங்கள் வெறிச்சோடி இருந்தன , பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு  இருந்தன, பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கpபட்டது.
 
ஜம்மு காஷ்மீரில் கடைகளும் வணிக நிறுவனங்களும் ஓரளவு திறந்தே இருந்தன. அமைதியான முறையில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜம்மு மாவட்டத்திலோ  அல்லது மாகாணத்தின் பிற இடங்களிலோ  எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், மொத்த மண்டிகள் மூடப்பட்டிருந்தாலும் கடைகள் திறந்து இருந்தன மாநில ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தொண்டர்களிடையே ஆங்காங்கே மோதல்கள் நடந்தன.
 
சண்டிகர் மாநிலத்தின்  பல பகுதிகளில் சாலைகள் மற்றும் ரெயில் தடங்களில் மறியல்கள் நடந்தன பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
 
மராட்டிய மாநிலத்தில் பந்திற்கு , ஆளும் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் ஒருங்கிணைந்து  தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன இதனால் புனே, நாசிக், நாக்பூர் மற்றும் அவுரங்காபாத் போன்ற முக்கிய நகரங்களில் மொத்த சந்தைகள் மூடப்பட்டன. சில்லறை கடைகளும்மூடப்பட்டன். போக்குவரத்து அடியோடு பாதிக்கபட்டது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
 
மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரத் பந்தால் எந்த வித பாதிப்பும் இல்லை.
 
விவசாயிகளின் பாரத் பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில்  பல  இடங்களில்  கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் வழக்கம் போல போக்குவரத்து இயங்கின,   கடைகள் , சந்தை\கள் திறந்து இருந்தன. பாரத் பந்தால் தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பிரகாஷ் சிங் பாதலுடன் பேசிய பிரதமர் மோடி

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பிரகாஷ் சிங் பாதலுடன் பேசிய பிரதமர் மோடி

புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் கடுமையாக எதிர்த்து வருகிறார். டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அரசை சாடி வரும் அவர், தனக்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷண் விருதை திருப்பி அளிப்பதாகவும் அறிவித்தார்.

 
இந்த நிலையில், நேற்று பிரகாஷ் சிங் பாதலுக்கு 93-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பிரகாஷ் சிங் பாதலை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/09041235/2147404/PM-Modi-extends-birthday-greetings-to-Parkash-Singh.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளுடன் அமித் ஷா நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை... இழுபறி நீடிப்பு

விவசாயிகளுடன் அமித் ஷா நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை... இழுபறி நீடிப்பு

புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை 14வது நாளாக இன்றும் தொடர்கின்றனர். விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என பேச்சுவார்த்தையின்போது விவசாய சங்கங்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், மத்திய அரசு சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய தயாராக இல்லை. திருத்தங்கள் செய்யவே விரும்புகிறது. இதனை விவசாய சங்கங்கள் ஏற்கவில்லை. 


 
விவசாயிகளை சமாதானப்படுத்த மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதுவரை 5 சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 6ம் சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே, நேற்று மாலை, உள்துறை மந்திரி அமித் ஷா, விவசாய சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது மத்திய அரசின் நிலைப்பாட்டை அமித் ஷா தெரிவித்தார். இதேபோல் விவசாய சங்க நிர்வாகிகளும் தங்கள் நிலைப்பட்டில் உறுதியாக இருந்தனர். அரசுத் தரப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதாகக் கூறப்பட்டது. ஆனால், விவசாய சங்க நிர்வாகிகளோ 3 வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாக திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்தனர். 

இதனால், அமித் ஷாவுடனான பேச்சுவார்த்தையின்போது எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. வேளாண் மந்திரியுடன் இன்று நடைபெறவிருந்த 6-ம் கட்டப் பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/09092524/2147457/Tamil-News-Farmers-Protest-meeting-with-Amit-Shah.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 14-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 14-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
 

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர். புராரி மைதானம் மற்றும் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26-ந் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டெல்லி முடங்கி வருகிறது.

அரியானா, உத்தரபிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளை விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், இந்த சாலைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தலைநகர் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. இதனால் மாற்று சாலைகளை பயன்படுத்த போக்குவரத்து போலீசார் டெல்லிவாசிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 14-வது நாளாக கொட்டும் பனியிலும் தொடருகிறது. சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குழுமி உள்ளனர். டெல்லியில் திறந்த வெளியில் அவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

விவசாயிகளின் இந்த போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அவர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி நாடு தழுவிய முழு அடைப்பு நேற்று அமைதியாக நடந்துமுடிந்தது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/India/2020/12/09082430/Farmers-protest-at-Singhu-border-against-FarmLaws.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி விவசாயிகள் போராட்டம்: தோல்வியில் முடிந்த அமித் ஷா முயற்சி! -அடுத்த கட்ட நகர்வு என்ன?

அமித்ஷா

அமித்ஷா

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசயிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், இன்று அரசுக்கும் விவசாய குழுக்களுக்கும் இடையே நடைபெற இருந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக இருக்கும் விவசாயிகளுக்கு, நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசிற்கும், விவசாயிகளுக்கும் இடையே சுமூகமான தீர்வு கிடைக்காததால் 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து விவசாய குழுக்கள் சார்பில் நேற்று (டிசம்பர் 8-ம் தேதி) நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டு பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் பந்த் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம்
 
விவசாயிகள் போராட்டம் Manish Swarup

இந்நிலையில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசயிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், இன்று அரசுக்கும் விவசாய குழுக்களுக்கும் இடையே நடைபெற இருந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து பேசினார், வேளாண் சட்டங்களின் சர்ச்சைகளை தீர்ப்பது குறித்த அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. வேளாண் சட்டங்களை திருத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை விவசாயிகள் ஏற்க மறுத்து, முழுமையாக வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இரு தரப்பினரும் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதால்., வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் இன்று நடைபெறவிருந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்
 
விவசாயிகள் போராட்டம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா, "விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்று எந்த சந்திப்பும் நடைபெறாது. விவசாய சங்க தலைவர்களுக்கு ஒரு திட்டம் வழங்கப்படும். இந்த திட்டம் குறித்து விவாதிக்க விவசாய சங்க தலைவர்கள் ஒரு கூட்டத்தை நடத்துவார்கள்" என்று தெரிவித்தார்.

"மத்திய அரசால், விவசாய சங்க தலைவர்களுக்கு அனுப்பப்படும் திட்ட வரைவு தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்த உள்ளோம். அந்த சந்திப்பில் வரைவு குறித்து விவாதிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இன்று மாலை சில விஷயங்கள் தெளிவாகிவிடும் என்று நம்புகிறோம்" என்று பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் (Rakesh Tikait) தெரிவித்துள்ளார்.

 

https://www.vikatan.com/government-and-politics/agriculture/farmers-were-very-strong-to-withdraw-the-three-new-agriculture-laws

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டம்... தயாராகும் தமிழக விவசாயிகள்!

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வலியுறுத்தி டிசம்பர் 14-ம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கவிருக்கிறார்கள்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். போராடிவரும் விவசாயிகளிடம் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
 
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுவருகிறது. ஆனால், மூன்று வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாக வாபஸ்பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில்தான், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8-ம் தேதி இந்தியா முழுவதும் பொதுவேலைநிறுத்தம் நடைபெற்றது. பல மாநிலங்களில் வெற்றிகரமாக பொதுவேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.

 

இத்தகைய சூழலில், டிசம்பர் 9-ம் தேதி மத்திய அரசுக்கும் விவசாயிகள் பிரதிநிதிகளுக்கும் இடையே 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், பொது வேலைநிறுத்தம் நடைபெற்ற டிசம்பர் 8-ம் தேதியன்று விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தை நான்கு மணி நேரம் நீண்டது. மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்க முடியாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். விவசாயிகளோ, தங்கள் கோரிக்கையில் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்கிறார்கள்.

சென்னையில் நடைபெற்ற போராட்டம்
 
சென்னையில் நடைபெற்ற போராட்டம்

டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்துக்கு முன்பாகவே பல மாநிலங்களில் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் மாநில அளவிலான போராட்டத்தை தி.மு.க நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், அடுத்தகட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், டிசம்பர் 14-ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு முடிவுசெய்திருக்கிறது.

ஒருங்கிணைப்புக்குழுவில் சுமார் 50 சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. காத்திருப்புப் போராட்டத்துக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கில் விவசாயிகளைத் திரட்ட முடிவுசெய்திருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் நம்மிடம் தெரிவித்தனர்.

 

https://www.vikatan.com/government-and-politics/agriculture/farmers-organizations-has-decided-to-protest-in-front-of-collectorates

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி கொடுத்த உணவை உண்ண மறுத்த விவசாயிகள்.
கையை நனைத்தால் கதைக்க முடியாது.
சத்தமே இல்லாமல் குளிரில் போராடும் விவசாயிகளுக்கு போர்வை வாங்க ஒரு கோடி கொடுத்த பஞ்சாப் பாட்டுக்காரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் போராட்டம் | முடங்கிய டெல்லி | மக்கள் விரோத பாஜக

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் போராட்டம்; பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன?- புதுச்சேரி இடதுசாரிக் கட்சிகள் கேள்வி

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த இடதுசாரிக் கட்சியினர்.

பஞ்சாப் மாநிலத்தவர் அதிகமாகப் பங்கேற்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன என்று புதுச்சேரி இடதுசாரிக் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடதுசாரிக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்-எல்) தலைவர்கள் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.


அப்போது, இடதுசாரிகள் சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் அளித்த பேட்டி:

"புயல் பாதிப்பு தொடர்பாக மத்தியக் குழுவும் முழுமையாக ஆய்வு நடத்தாமல் பெயருக்கு மட்டுமே ஆய்வு செய்துள்ளது. காரைக்காலில் ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாகூர், மண்ணாடிப்பட்டு போன்ற இடங்களில் மழைநீரால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக நிவாரணம் தரவேண்டும்.

சென்டாக் மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. மருத்துவப் படிப்பு இடங்களுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறி வைக்கின்றனர். இதில் மிகப்பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது. இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அதிக அளவில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன?

புதுச்சேரியிலும் இடதுசாரிகள் அணி வரும் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும். எங்கள் ஆதரவுடைய அணியே வெல்லும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்துறை தனியார்மயம் - விசாரணை தேவை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜாங்கம் கூறுகையில், "புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தலைமைச்செயலர் அஸ்வினி குமார் செயல்பாடுகளில் சந்தேகம் உள்ளது. தனியார் மயமாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசின் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பாமல் புதிய கோப்பை அனுப்பியுள்ளனர்.

மின்துறைக்குப் புதுச்சேரியில் ரூ.1,500 கோடி அசையா சொத்தும், ரூ.800 கோடி டெபாசிட்டும் உள்ளது. அதனால் தனியார் மயமாக்கத்தில் இருவருக்கும் சொந்த லாபம் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் அரசு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/610229-puduchery-left-parties-slams-kiranbedi-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`டெல்லி சலோ’ போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான்! - அமைச்சர் கருத்தால் சர்ச்சை

ரோசாஹேப் தாதராவ் டான்வே

ரோசாஹேப் தாதராவ் டான்வே

மத்திய இணை அமைச்சர் ரோசாஹேப் தாதராவ் டான்வே, வரலாறு காணாத வகையில் நடந்து வரும் இப்போராட்டம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் இருப்பதாகக் கூறி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் மூன்று எல்லைகளில் அவர்கள் நடத்திவரும் போராட்டம் இரண்டாவது வாரத்தைக் கடந்திருக்கிறது. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக இருக்கும் விவசாயிகளுக்கு, நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு தரப்பிலும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைவதால் இதனை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் விவசாய அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்ச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஐந்து கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த செவ்வாய்கிழமை (08.12.2020) அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு எட்டப்படாததால், விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
 
விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில், மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொதுவழங்கல் துறை இணை அமைச்சரான ரோசாஹேப் தாதராவ் டான்வே (Raosaheb Danve), இந்தப் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தின் பத்னாபூர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சுகாதார மையத்தின் திறப்பு விழாவில் அமைச்சர் ரோசாஹேப் தாதராவ் டான்வே கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய அவர், ``டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளைத் தவறான நோக்கில் தூண்டிவிட்டு நாட்டைச் சீர்குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்.

 

முதலில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி குறித்து என்ன கூறப்பட்டது? `அந்த சட்டங்களால் ஆறு மாதங்களில் இஸ்லாமியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்’ என்பதுபோன்ற தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், உண்மையில் என்ன நடந்தது?

விவசாயிகள் போராட்டம்
 
விவசாயிகள் போராட்டம் Manish Swarup

அந்த நோக்கம் வெற்றிபெறாததால், தற்போது விவசாயிகளைத் தூண்டிவிடுகிறார்கள். மோடி இந்த நாட்டின் விவசாயிகளுக்கான பிரதமர். அவர் முடிவுகள் என்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக மட்டுமே இருக்கும்” என்று தெரிவித்தார்.

டான்வேவின் கருத்துகளுக்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அரவிந்த் சாவந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``பா.ஜ.க-வினர் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், தங்களது சுயத்தினை இழந்துவிட்டனர். என்ன பேசுகிறோம் என்ற ஒரு தெளிவின்றி பேசி வருகின்றனர்” என்று விமர்சித்தார்.

 

https://www.vikatan.com/government-and-politics/controversy/ministers-comment-over-delhi-farmers-protest-irks-controversy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

டெல்லி சலோ’ போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான்! - அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இவங்களுக்கு இடி மின்னல் எண்டாலும் பாக்கிஸ்தான் சீனாவைத்தான்  சாட்டுவாங்கள்.😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணை பிளக்கும் நாம் தமிழர் கட்சி / வேளாண் சட்ட எதிர்ப்பு / திருப்பூர் மாவட்டம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு பதிவு செய்யும்; விவசாயிகள் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்: காங்கிரஸ் விமர்சனம்

what-would-a-building-represent-when-it-is-built-after-trampling-democracy-cong-on-new-parl-building கோப்புப்படம்
 

புதுடெல்லி

விவசாயிகள் உரிமைக்காகச் சாலையில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியோ புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஜனநாயகத்தை நசுக்கியபின் புதிய நாடாளுமன்றம் எதைக் குறிக்கப்போகிறது என்று காங்கிரஸ் கட்சி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் ரூ.971 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. 21 மாதங்களில், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:

''விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகச் சாலையில் போராடும்போது, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றம் கட்டும் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்றார் என்ற நிகழ்வை வரலாறு பதிவு செய்யும்.

1607612709756.jpg

பிரதமர் அவர்களே, நாடாளுமன்றம் கற்களாலும், தூண்களாலும் கட்டப்படுவதில்லை. ஜனநாயகத்தை உருவகப்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் கிரகித்துள்ளது.

அரசியல் பொருளாதார, சமூக சமத்துவத்தை உணர்த்துகிறது. இரக்கம், குழுவாக இணைந்து பணியாற்றுபவர்களுக்கான நட்புறவு, அனுபவத்தைப் பகிர்தலை நாடாளுமன்றம் குறிக்கிறது. 130 கோடி மக்களின் ஆசைகளை நாடாளுமன்றம் உணர்த்துகிறது. இந்த உயர்ந்த மதிப்புகளை எல்லாம் மிதித்து நசுக்கிவிட்டுக் கட்டும் கட்டிடம் எதை உணர்த்தப் போகிறது?

நமக்கு உணவு வழங்கும் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகக் கடந்த 16 நாட்களாகச் சாலையில் போராடி வருகிறார்கள். ஆனால், சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் உங்களுக்கு அரண்மனை கட்டுகிறீர்கள். ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது ஒருவரின் விருப்பத்தையும், ஆசைகளையும் நிறைவேற்றுவது அல்ல. பொதுநலத்துடன் மக்களுக்குச் சேவையாற்றுவதாகும்''.

இவ்வாறு சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

1607612749756.jpg

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பர் ட்விட்டரில் கூறுகையில், “சுதந்திரமான ஜனநாயகத்தின் இடிபாடுகளுக்கு இடையே புதிய நாடாளுமன்றத்தின் அடித்தளம் அமைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “தற்போது இருக்கும் நாடாளுமன்றம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அதாவது, மத்தியப் பிரதேசத்தில் மொரேனாவில் உள்ள சவுசாத் யோகினி கோயில் போன்று நினைவில் நிற்கக்கூடியது. ஆனால், தற்சார்பு இந்தியா நாடாளுமன்றம், வாஷிங்டனில் இருக்கும் பென்டகனைப் போல் இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/india/610275-what-would-a-building-represent-when-it-is-built-after-trampling-democracy-cong-on-new-parl-building-2.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லி போக்குவரத்து எச்சரிக்கை: விவசாயிகள் முற்றுகையால் சாலைகள் தொடர்ந்து மூடல்

டெல்லி போக்குவரத்து எச்சரிக்கை: விவசாயிகள் முற்றுகையால் சாலைகள் தொடர்ந்து மூடல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள், டெல்லியின் எல்லை பகுதிகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர், சில்லா ஆகிய இடங்களில் முற்றுகையிட்டுள்ளனர். இதனால், டெல்லியில் உள்ள பல்வேறு சாலைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

 

இதனால், வாகன ஓட்டிகளின் நலனுக்காக டெல்லி போக்குவரத்து போலீஸ், போக்குவரத்து குறித்து டுவிட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், திக்ரி, தான்சா எல்லைகள் மூடப்பட்டு உள்ளன். அங்கு  வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றும், ஜாதிகாரா எல்லை இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு மட்டும் திறக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

அரியானா மாநிலத்துக்கு செல்பவர்கள் பயன்படுத்த வேண்டிய சாலைகளையும் அவர்கள் தெரிவித்தனர்.

அண்டை மாநிலம்  அரியானாவுக்கு பயணிப்பவர்கள் ஜரோடா, தவுரலா, கபாஷேரா, பதுசராய், ராஜோக்ரி என்.எச் 8, பிஜ்வாசன் / பஜ்கேரா, பாலம் விஹார் மற்றும் துண்டஹேரா எல்லைகள் வழியாக செல்ல வேண்டும்  என்று கூறி உள்ளனர்.

 
 
 
பொதுமக்களின் நலனுக்காக விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் - வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

பொதுமக்களின் நலனுக்காக  விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் - வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
 

புதுடெல்லி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள், டெல்லியின் எல்லை பகுதிகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர், சில்லா ஆகிய இடங்களில் முற்றுகையிட்டுள்ளனர். டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டம் 16 வது நாளாக தொடருகிறது.

இந்த நிலையில் பொதுமக்களின் நலனுக்காக  விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இன்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:-

விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், பல ஆண்டுகளாக அவர்களுக்கு செய்யப்பப்ட்டு வந்த அநீதியை போக்கவும் மூன்று வேளாண் சட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு  சிறந்த வாழ்க்கை கிடைக்கவும்  நன்மை பயக்கும் விவசாயத்தில் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக இது செய்யப்பட்டது.

எங்களிடம்  அதிக ஆளும் சக்தி இல்லை  என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், விவசாய தொழிற்சங்கங்களின்  மனதில் ஏதேனும் இருக்கக்கூடும். எனவே, பேச்சுவார்த்தைக்குப் பிறகு சட்டங்களில் சீர்திருத்தங்களைச் செய்ய அரசு தயாராக உள்ளது. பொதுமக்களின் நலனுக்காக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருங்கள்

எங்கள் திட்டத்தில், அவர்களின் ஆட்சேபனைகளுக்கு ஒரு தீர்வை பரிந்துரைக்க நாங்கள் முயற்சி செய்துள்ளோம். அவர்கள் போராட்டத்தை விட்டுவிட்டு விவாதத்தின் பாதையில் செல்ல வேண்டும். அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/India/2020/12/11165503/Agri-minister-urges-farmers-to-end-agitation-in-interest.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் வலுக்கிறது- டெல்லியில் மேலும் குவியும் பஞ்சாப் விவசாயிகள்

போராட்டம் வலுக்கிறது- டெல்லியில் மேலும் குவியும் பஞ்சாப் விவசாயிகள்

 

மத்திய அரசு கொண்டுவந்த 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வடமாநில விவசாயிகள் டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 16-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. இதற்காக விவசாய பிரதிநிதிகளிடம் இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளது.

3 சட்டங்களிலும் பல திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முன்வந்தது. குறிப்பாக 7 அம்ச சமரச திட்டங்களை மத்திய அரசு முன்வைத்தது. ஆனால் அதை விவசாயிகள் ஏற்கவில்லை.

3 சட்டங்களையும் கண்டிப்பாக வாபஸ் பெற்றே தீரவேண்டும் என்று கூறி வருகிறார்கள். அந்த பிரச்சினைக்கு 10-ந் தேதிக்குள் (நேற்று) தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கெடு விதித்திருந்தனர்.

நேற்றுடன் அவர்களுடைய கெடு முடிந்தது. இதனால் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி இருக்கிறார்கள். 14-ந் தேதி டெல்லியை முழுமையாக முற்றுகையிடப் போவதாகவும், டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகள் அதிகளவில் பங்கேற்று உள்ளனர். போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் பஞ்சாப்பில் இருந்து இப்போது மேலும் ஏராளமான விவசாயிகள் டெல்லி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே விவசாயிகள் டிராக்டர்கள் மூலமாக டெல்லி வந்து குவிந்தனர். இப்போது பஸ்கள், வேன்களில் பஞ்சாப் விவசாயிகள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை வயல்வெளிகளில் தொடர்ந்து விவசாய பணிகளை கவனித்து வந்த விவசாயிகளும் பணிகளை நிறுத்திவிட்டு போராட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் போராட்டம் மோசமான நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க மத்திய அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் இதுபற்றி கூறும்போது, ‘‘நாங்கள் திறந்த மனதுடன் விவசாயிகளுடன் பேசி வருகிறோம். அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

ஆனால் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் விவசாயிகள், அடுத்ததாக அனைத்து இடங்களிலும் ரெயில் மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர். அத்துடன் விவசாயிகள் போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

விவசாயிகள் சம்பந்தப்பட்ட விவகாரம், மாநில அரசின் கையில் உள்ளது. எனவே விவசாயிகள் தொடர்பாக எந்த சட்டத்தையும் இயற்றுவதற்கு மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும் பஞ்சாப்பிலும் விவசாயிகள் தனியாக போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/11121158/2147992/Tamil-News-Punjab-farmers-are-ready-for-long-struggle.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளின் பொறுமையைச் சோதித்துப் பார்க்காதீர்கள்: மத்திய அரசுக்கு சரத் பவார் எச்சரிக்கை

don-t-test-tolerance-of-farmers-pawar-tells-centre தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்: கோப்புப் படம்.
 

மும்பை

விவசாயிகளின் பொறுமையைச் சோதித்துப் பார்க்காதீர்கள். நாடு முழுவதும் போராட்டம் பரவும் முன், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் முடிவை விரைவாக எடுங்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி-ஹரியாணா எல்லைப் பகுதிகளான திக்ரி, காஜிபூர், டெல்லி-நொய்டா எல்லையான சில்லா ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரிலும் வெளியிலும் போராட்டம் நடத்தி வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தீர்மானமாக உள்ளனர். வரும் 14-ம் தேதிக்குப் பின் நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் விவசாயிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மும்பையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''விவசாயிகளின் கோரிக்கைகள் மீது மத்திய அரசு உரிய நேரத்தில் முடிவெடுக்காவிட்டால், டெல்லி எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் பரவக்கூடும்.

வேளாண் சட்டங்கள் மீது விரிவான விவாதம் நடத்தியபின் நிறைவேற்றலாம் என எதிர்க்கட்சிகள் கோரிய நிலையில், அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மிகுந்த கவலையளிக்கிறது.

1607683851756.jpg தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.

விவசாயிகள் இன்று உச்சகட்டமாக முதலில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள், அதன்பின் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாம் என்று கூறிவிட்டனர். ஆனால், மத்திய அரசு பிடிவாதமாக தம் நிலைப்பாட்டிலிருந்து மாற மறுக்கிறது. முடிவு சாதகமாகச் செல்வதாகத் தெரியவில்லை. இந்தப் பிரச்சினையில் சிக்கல் மேலும் சில நாட்களுக்கு நீடிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

ஏறக்குறைய 700 டிராக்டர்களில் விவசாயிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து புறப்பட்டு டெல்லி எல்லைக்கு இன்று காலை வந்து சேர்ந்துள்ளனர். இந்தப் போராட்டம் டெல்லி எல்லையோடு தடுக்கப்படுகிறது. ஆனால், சரியான நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் பரவுவதைத் தடுக்க முடியாது.

இந்த தேசத்துக்கு உணவு வழங்குபவர்கள் விவசாயிகள். அவர்களின் பொறுமையைப் பரிசோதித்துப் பார்க்காதீர்கள் என்று மத்திய அரசுக்கு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு நான் தலைவராக வரப்போகிறேன் எனச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது உண்மைக்கு மாறான செய்தி. பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள்.

விவசாயிகள் போராட்டத்துக்குப் பின்புலத்தில் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளன என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே பேசியதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. சிலருக்கு எங்கிருந்து பேசுகிறோம், எப்படிப் பேச வேண்டும், என்ன வேண்டும் என்ற அறிவு இல்லாமல் பேசுவார்கள். இதைப் பெரிதாக நினைக்காதீர்கள். இதுபோன்று பலமுறை இப்படி அவர் பேசியுள்ளார்''.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

 

https://www.hindutamil.in/news/india/610629-don-t-test-tolerance-of-farmers-pawar-tells-centre-2.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கவர்னர் மாளிகையை நோக்கி விவசாயிகள் ஊர்வலம் - போலீசாருடன் வாக்குவாதம்-பரபரப்பு

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கவர்னர் மாளிகையை நோக்கி விவசாயிகள் ஊர்வலம் - போலீசாருடன் வாக்குவாதம்-பரபரப்பு

மத்திய அரசு, 3 புதிய வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது. அதன்படி, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதரவு விலை வழங்கும் நடைமுறை கைவிடப்படும் என்று விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக பஞ்சாப், அரியானா விவசாயிகள் கடந்த 15 நாட்களாக டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய மந்திரிகள் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
 
 
இந்த நிலையில் அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் கடந்த 8-ந் தேதி முழு அடைப்பை விவசாயிகள் நடத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெங்களூருவில் விதான சவுதாவை நோக்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று விவசாய சங்கங்களின் ஐக்கிய போராட்ட குழு சார்பில் அதன் நிர்வாகிகள் குருபூர் சாந்தக்குமார், படகலபுரா நாகேந்திரா ஆகியோரது தலைமையில் விவசாயிகள் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலம் பெங்களூருவில் நடத்தினர்.
 
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கவர்னர் மாளிகையை நோக்கி சென்றது. சுதந்திர பூங்கா அருகே போலீசார் இருப்பு தடுப்புகளை சாலையின் குறுக்கே வைத்து ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் அதையும் மீறி விவசாயிகள் கவர்னர் மாளிகை நோக்கி செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்ததால், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு உண்டானது. அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் உண்டாகி பரபரப்பு நிலவியது. இதுகுறித்து விவசாய சங்கங்களின் ஐக்கிய போராட்ட குழு நிர்வாகி குருபூர் சாந்தக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் டெல்லியில் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதே போல் கர்நாடக அரசு நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்து, விவசாயிகளுக்கு அநீதி இழைத்துள்ளது. இந்த கருப்பு சட்டங்களை மத்திய-மாநில அரசுகள் வாபஸ் பெற வேண்டும். மாநில அரசின் திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினால், நாங்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
 
ஜனதா தளம்(எஸ்), காலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, மாலையில் நில சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. இதன் மூலம் அந்த கட்சி பா.ஜனதாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை வாபஸ் பெறும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.
 
இவ்வாறு குருபூர் சாந்தக்குமார் கூறினார்.
 
அதன் பிறகு விவசாயிகள் சுதந்திர பூங்காவில் ஒன்று சேர்ந்தனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையா தலைமையில் விதான சவுதாவில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு நடைபயணமாக வந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது சித்தராமையா பேசுகையில் கூறியதாவது:-
 
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இது விவசாயிகளின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். கர்நாடக அரசு நில சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்களை யார் வேண்டுமானாலும் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்கள் வசம் செல்லும் நிலை உள்ளது. இதன்காரணமாக விவசாயம் மற்றும் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். தாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் தேவேகவுடா மற்றும் அவரது மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா ஆகியோர் விவசாயிகளுக்கு எதிரான நில சீர்திருத்த சட்ட மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டனர்.
 
பசுவதை தடை சட்டத்தை இந்த அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு தெரியாமல் இதை கொண்டு வந்து ஒப்புதல் பெற்றுள்ளனர். இதை கண்டித்து நாங்கள் இன்று (நேற்று) சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு இங்கு வந்துள்ளோம். இந்த சட்டத்தால் கிராமப்புற விவசாயிகள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வயதான மாடுகளை வைத்துக் கொண்டு விவசாயிகள் என்ன செய்ய முடியும்?. அதை கோசாலைகளில் விட்டால் அதற்கு நீங்கள் தான் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும்.
 
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
 
அதன் பிறகு அவர் விவசாயிகளுடன் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு 10 விவசாயிகளை, போலீசார் தங்களின் ஜீப்பில் கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்றனர். அங்கு கவர்னரை சந்தித்து மனு வழங்க போலீசார் ஏற்பாடு செய்தனர். அந்த விவசாயிகள் கவர்னர் மாளிகை முன் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது பரபரப்பு நிலவியது.
 
அதைத்தொடர்ந்து விவசாயிகள் 10 பேர் கவர்னர் மாளிகைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினர். விவசாயிகளின் ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 
 

https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2020/12/11054612/Demand-withdrawal-of-new-agricultural-laws-Farmers.vpf

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
போராட்டக்களத்தை சமூக விரோதிகள் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்- விவசாயிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

போராட்டக்களத்தை சமூக விரோதிகள் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்- விவசாயிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
 
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 16-வது நாளாக நேற்றும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சிங்கு, திக்ரி, சில்லா உள்ளிட்ட எல்லைகளை விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் போக்குவரத்து முடங்கி வருகிறது.
 
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு, இது தொடர்பாக சில யோசனைகள் அடங்கிய பரிந்துரை ஒன்றை விவசாயிகளுக்கு அனுப்பி வைத்தது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த எழுத்துப்பூர்வ உறுதிமொழி, மண்டிகள் தொடர்வதற்கான வழிமுறைகள் என பல்வேறு பரிந்துரைகள் அதில் அடங்கியிருந்தன.
 
ஆனால் இந்த யோசனைகளை நிராகரித்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர். குறிப்பாக டெல்லி செல்லும் சாலைகள் அனைத்தையும் மூடப்போவதாகவும், ரெயில் மறியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
 
எனினும் இந்த யோசனைகளை பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள மத்திய அரசு, விவசாயிகளின் கவலைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறி வருகிறது.
 
இந்த நிலையில் திக்ரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளில் ஒரு பகுதியினர், சமீபத்தில் மனித உரிமைகள் தினத்தையொட்டி சில கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனர். குறிப்பாக, பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருக்கும் சமூக ஆர்வலர்களை விடுவிக்குமாறு அதில் கோரியிருந்தனர்.
 
இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்கள் தளத்தை சமூக விரோதிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது குறித்த செய்திகளை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:-
 
விவசாயிகள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் சிலர் விவசாயிகளின் போராட்ட சூழலை கெடுக்க முயற்சிக்கின்றனர். எனவே அத்தகைய சமூக விரோதிகள் உங்களின் போராட்டக்களத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் என்றும், இந்த விவகாரத்தில் விழிப்புடன் இருக்குமாறும் விவசாய சகோதரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
 
விவசாயிகளின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது. விவசாயிகளின் கவலைகளை போக்கும் வகையில் யோசனைகள் அடங்கிய திட்டம் ஒன்று அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளுக்கும் அரசு தயாராக இருக்கிறது.
 
இவ்வாறு தோமர் குறிப்பிட்டு இருந்தார்.
 
ஆனால் தங்கள் போராட்டம் அரசியல் சார்பற்றது என விவசாயிகள் கூறியுள்ளனர். தங்கள் போராட்டக்களத்தை பயன்படுத்த பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் தாங்கள் மறுப்பு தெரிவித்ததாக சிங்கு எல்லையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் தெரிவித்தனர்.
 
அதே நேரம் திக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சமூக ஆர்வலர்களை விடுவிக்கக்கோரி பதாகைகள் ஏந்தியிருந்தது குறித்து கேட்டதற்கு, ‘அது, மனித உரிமை தினத்தை அவர்கள் அனுசரித்த முறையாக இருக்கலாம்’ என தெரிவித்தனர்.
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.