Jump to content

டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11-12-2020 டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இஸ்லாமிய நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

 

 

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

`விவசாயிகளுக்காக என் பிறந்தநாளை அர்ப்பணிக்கிறேன்!’ - தந்தைக்கு பதிலடி கொடுத்த யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

`சமீபத்தில், என் தந்தை கூறிய கருத்துகளுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அது அவருடைய தனிப்பட்ட கருத்து' -யுவராஜ் சிங்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் `டெல்லி சலோ’ என்ற பெயரில் டெல்லியின் மூன்று எல்லைகளில் முகாமிட்டுத் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறுகட்ட பேச்சுவாா்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் இன்று, தனது 39-வது பிறந்தநாளை முன்னிட்டு, தனது சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் டெல்லி எல்லையில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்துக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதில், ``நம் வாழ்வின் ஆசைகள் மற்றும் விருப்பங்களை பிறந்தநாளன்று பூர்த்தி செய்துகொள்வோம். ஆதலால், இந்த முறை கொண்டாடுவதைக்காட்டிலும், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் நடத்திவரும் இந்தப் போராட்டத்துக்கு என் பிறந்தநாளை அர்ப்பணிக்கிறேன். விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம், சுமுகமான முறையில் விரைவில் முடிவுகாண வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன்" என்று கூறியிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் சிங்கின் தந்தையும், நடிகருமான யோக்ராஜ் சிங், ``விவசாயிகள் சரியான முறையில் தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடிவருகின்றனர். அதனால், அரசு இந்த விஷயத்தில் உடனடியாகச் செயல்பட்டு ஒரு நல்ல முடிவை எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், தாங்கள் பெற்ற விருதுகளைத் திரும்ப அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய யோக்ராஜ் சிங், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கடுமையாக விமர்சித்ததோடு, இந்துப் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளையும் முன்வைத்தார். இது சர்ச்சையானதை அடுத்து யோக்ராஜ் சிங் மீது வழக்கு பதிவு செய்ததோடு #ArrestYograjSingh என்னும் ஹேஷ்டேக் டிரெண்டானது.

விவசாயிகள் போராட்டம்
 
விவசாயிகள் போராட்டம்

இதற்கு பதிலளிக்கும்விதமாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் யுவராஜ் சிங், ``சமீபத்தில், என் தந்தை கூறிய கருத்துகளுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவருடைய நிலைப்பாட்டிலிருந்தும், கொள்கைகளிலிருந்தும் வேறுபட்டவன் நான். எனக்கும், அவர் கூறிய கருத்துகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையாததால், மக்கள் அனைவரும் அதற்கான பாதுகாப்பு விழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்" என்றும் யுவராஜ் குறிப்பிட்டிருந்தார்.

 

https://www.vikatan.com/news/sports-news/yuvraj-singh-distance-himself-from-his-fathers-statement

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி, விவசாயிகள் போராட்டம்; பதில், இந்தியா-பாக்., விவகாரம்! - போரிஸ் ஜான்சன் சர்ச்சைக்கு விளக்கம்

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன் ( Frank Augstein )

இந்த விஷயத்தில் இங்கிலாந்து அரசாங்கத்தின் தலையீட்டைக் கோருவது நியாயமற்றது. போராட்டங்களைக் காவல்துறை கையாளுதல் இந்திய அரசாங்கத்தின் விஷயம்!

கடந்த புதன்கிழமை (9.12.2020) இங்கிலாந்தின் பிரதமரின் மக்களவை வாராந்தர கேள்விகள் (PMQ) அமர்வின்போது, அந்நாட்டு பிரதமர், இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு வேறு பிரச்னை குறித்து பதிலளித்தது விவாதப் பொருளானது.

இந்தியாவில் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து பிரிட்டிஷ் சீக்கியர்களின் கவலைகளைத் தெரிவித்தார் எதிர்க்கட்சி நிழல் அமைச்சர் தன்மன்ஜீத் சிங் தேசி (Tanmanjeet Singh Dhesi). ``விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியப் பிரதமர் மோடியிடம் 'மக்கள் அனைவருக்கும் அமைதியான முறையில் போராட உரிமை உண்டு. அவர்களை இப்படித் தண்ணீர் பீய்ச்சியும், தடியடியிலும் விரட்டாமல் சுமுகமான முறையில் பிரச்னையைத் தீர்க்க வேண்டுகோள் விடுக்க வேண்டும்" என்று கோரிக்கைவைத்தார். கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்ட போரிஸ், ``எங்கள் பார்வை என்னவென்றால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது குறித்து எங்களுக்கும் கவலைகள் இருக்கின்றன. ஆனால், இவை அந்த இரு அரசாங்கங்களும் தீர்வுகாண வேண்டிய விஷயங்கள்' என்றார்.

விவசாயிகள் போராட்டம்
 
விவசாயிகள் போராட்டம் Rishi Lekhi

இந்த பதிலால் குழப்பமான தன்மன்ஜீத் சிங் தேசி, இதைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஜான்சனை விமர்சித்தார். உலகமே கூர்ந்து பார்க்கும் இந்திய விவசாயிகளின் பிரச்னை குறித்து அறியாதவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து மேலும் சில எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்தைப் பதிவிட்டுள்ளனர்.

 

``இந்த அரசாங்கத்தின் இயலாமை தொடர்கிறது. வெளியுறவுச் செயலாளர் டொமினிக் ராப், உலகம் கண்ட மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றைப் பற்றி பிரதமருக்கு விளக்கத் தவறிவிட்டார்” என்று சக பிரிட்டிஷ் சீக்கிய தொழிலாளர் எம்.பி ப்ரீத் கவுர் கில் கூறியிருக்கிறார்.

``நமது பிரதமருக்கு பஞ்சாப்புக்கும் காஷ்மீருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது என்று தோன்றுகிறது” என்று தொழிலாளர் எம்.பி எமிலி தோர்ன் பெர்ரி குறிப்பிட்டிருக்கிறார்.

கேள்வி, விவசாயிகள் போராட்டம்; பதில், இந்தியா-பாக்., விவகாரம்! - போரிஸ் ஜான்சன் சர்ச்சைக்கு விளக்கம்
 
Frank Augstein

இதற்கு இங்கிலாந்தின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம், ``இந்த விஷயத்தில் இங்கிலாந்து அரசாங்கத்தின் தலையீட்டைக் கோருவது நியாயமற்றது. போராட்டங்களை காவல்துறை கையாளுதல் இந்திய அரசாங்கத்தின் விஷயம்'’ என்று விளக்கமளித்திருக்கிறது.

`இந்தியாவில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களை இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் கவனமாகக் கண்காணித்துவருகிறது. பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் கேள்வி அமர்வின்போது, கேள்வி தவறாகக் காதில் விழுந்ததால்தான் விவசாயிகள் பிரச்னைக்கு பதில் இந்திய பாகிஸ்தான் பிரச்னை குறித்து பதில் கூறினார்” என்று இங்கிலாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்திருக்கிறார்.

 

https://www.vikatan.com/government-and-politics/international/boris-johnson-confuses-farmers-protest-with-indo-pak-dispute

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாக்கிஸ்தானா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாகன போக்குவரத்து முடக்கம்: டெல்லி-நொய்டா எல்லையை திறந்து விட டெல்லி போலீசார் முடிவு

வாகன போக்குவரத்து முடக்கம்:  டெல்லி-நொய்டா எல்லையை திறந்து விட டெல்லி போலீசார் முடிவு

 

விவசாயிகளின் நலன்களை முன்னிட்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளில் ஒரு பிரிவினர் டெல்லி நோக்கிய பேரணியை தொடங்கினர்.

கடந்த நவம்பர் 26ந்தேதி முதல் தொடர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தினால் தலைநகர் டெல்லி முடங்கியுள்ளது.  விவசாயிகளுடன், அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு காணப்படவில்லை.  இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என மத்திய வேளாண் மந்திரி தோமர் கூறியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் இன்று 18வது நாளாக நீடித்து வருகிறது.  இதனை முன்னிட்டு டெல்லி எல்லையில் தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.  ஆளில்லா விமானமும் போராட்ட சூழலை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரை இணைக்கும் சாலை பகுதி அமைந்த சில்லா என்ற இடத்தில் விவசாயிகள் குழு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் கடந்த 2 வாரங்களாக அந்த எல்லை பகுதி மூடப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பகுதி வழியே செல்லும் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.  இதற்கு தீர்வு காணப்படும் வகையில், டெல்லி துணை ஆணையர் (கிழக்கு) ஜஸ்மீத் சிங் தலைமையிலான போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பலன் ஏற்பட்டு உள்ளது.  வாகனங்கள் செல்வதற்கு விவசாயிகள் ஒப்புதல் அளித்து உள்ளனர்.  இதனால், இன்றிரவுக்குள் டெல்லி-நொய்டா எல்லை திறந்து விடப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தினால் சிங்கு, திக்ரி, ஆச்சண்டி, ஜரோடா, பியாவோ மணியாரி மற்றும் நகரின் வெளிப்புற மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைந்த முங்கேஷ்பூர் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள டெல்லி மற்றும் நொய்டா ஆகிய இரு நகரங்களை இணைக்கும் சில்லா எல்லை என 7 எல்லைகள் முழுவதும் மூடப்பட்டு உள்ளன.

இதுதவிர டெல்லி நோக்கி செல்லும் வாகனங்களுக்கான டெல்லி-மீரட் விரைவு சாலையும் மூடப்பட்டு உள்ளது.  இதனால், அந்த பகுதி வழியே டெல்லி நோக்கி செல்லும் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.  தலைநகர் டெல்லிக்கு செல்வோர், சொந்த மாநிலம் திரும்புவோர் என பல்வேறு தரப்பு மக்களும் விவசாயிகளின் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/13155333/Traffic-freeze-Delhi-police-decide-to-open-DelhiNoida.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி- ஆக்ரா சாலையை விவசாயிகள் முடக்கினார்கள்: பெண்களும் போராட்டத்தில் குவிந்தனர்

டெல்லி- ஆக்ரா சாலையை விவசாயிகள் முடக்கினார்கள்: பெண்களும் போராட்டத்தில் குவிந்தனர்

 

புதுடெல்லி:

டெல்லியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் இன்று 18-வது நாளாக நடந்து வருகிறது.

இதுவரை மத்திய அரசுடன் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கி உள்ளனர்.

அவர்கள் டெல்லியில் ஏற்கனவே 4 முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு இருந்தனர். இதன் காரணமாக உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வருவதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஆக்ராவில் இருந்து டெல்லி வரும் சாலையை இன்று விவசாயிகள் முற்றுகையிட்டார்கள். ஆயிரக்கணக்கான டிராக்டர்களை அந்த சாலையில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்த சாலை உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி வரும் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாகும். எனவே டெல்லியில் போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்தது.

நேற்று விவசாயிகள் டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் நாடு முழுவதும் 165 டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் சென்றன.

அடுத்ததாக நாளை விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். இந்த போராட்டம் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது.

இதில் 32 விவசாய சங்கங்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாரதீய விவசாய சங்கத்தின் தலைவர் குர்மீத்சிங் 19-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

முதலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போராட்டத்தில் இப்போது பெண்களும் அதிகளவில் பங்கேற்று வருகிறார்கள். 15-ந் தேதி முதல் இன்னும் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் ஏராளமான விவசாயிகள், வேளாண்மை கடன் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களின் மனைவிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

அவர்கள் டெல்லி எல்லையில் உள்ள திக்ரி என்ற இடத்தில் முற்றுகையில் ஈடுபட இருக்கிறார்கள். பெண்கள் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை விவசாய சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே அரியானா விவசாயிகள் மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரியானா விவசாய சங்கங்களை சேர்ந்த பல பிரதிநிதிகள் நேற்று விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்து பேசினார்கள்.

அப்போது ஒரு மனுவை அவரிடம் கொடுத்தனர். அதில், ‘‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள், விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கின்றன. எனவே இந்த சட்டங்களை ஆதரிக்கிறோம்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/13114538/2158526/Tamil-News-Farmers-may-block-DelhiAgra-road.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை ஒழிந்து விவசாயத்துறை பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என்று விவசாயிகள் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.

எனவே இந்த சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் நேற்று 18-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் திணறி வருகிறது.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், வேளாண் சட்டங் கள் தொடர்பாக மத்திய அரசு வழங்கிய யோசனை களையும் விவசாயிகள் ஏற்கனவே நிராகரித்து விட்டனர்.

அத்துடன் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலை எண் 8-ஐ ஆக்கிரமிக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். அரியானாவின் குர்கான் வழியாக ஜெய்ப்பூரை அடையும் இந்த சாலை, ராஜஸ்தானில் இருந்து டெல்லியை அடையும் முக்கியமான சாலைகளில் ஒன்றாகும்.

இதைப்போல ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர் கள் போன்ற வாகனங்களில் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

எனவே டெல்லிக்கு வரும் சாலைகளில் நேற்று அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அரியானா எல்லையில் விவசாயிகள் முன்னேறுவதை தடுக்க கூடுதல் கான்கிரீட் கட்டைகளும் அடுக்கப்பட்டன. அதே நேரம் சாலையில் போக்குவரத்து தடைபடாமல் இருப்பதையும் உறுதிசெய்தனர்.

விவசாயிகள் போராட்டத்தால் ஏற்கனவே பல சாலைகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், டெல்லிவாசிகளுக்கு தினந்தோறும் போக்குவரத்து ஒழுங்கு முறைகளை போலீசார் அறிவித்து வருகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீசாரின் டுவிட்டர் பக்கத்தில் தினமும் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன.

இது ஒருபுறம் இருக்க டெல்லி-நொய்டா இணைப்புச்சாலையின் சில்லா எல்லை பகுதியில் முகாமிட்டிருந்த பாரதிய கிசான் யூனியன் (பானு) அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர சிங் தோமருடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் இருந்து வெளியேறினர்.

இது குறித்து அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘எங்களின் கோரிக்கைகளை ராஜ்நாத்ஜி கேட்டுக்கொண்டதுடன், அவற்றை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். அவரது பதிலால் திருப்தியடைந்துள்ள நாங்கள், சாலையில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறோம். எனினும் இதன் மூலம் எங்கள் போராட்டம் முற்றுப்பெற்றதாக அர்த்தம் இல்லை’ என்று தெரிவித்தார்.

இவ்வாறு சில்லா எல்லையில் இருந்து விவசாயிகள் வெளியேறியதால் அந்த பகுதியில் நேற்று போக்குவரத்து சீரடைந்தது.

அதே நேரம் சிங்கு, திக்ரி உள்ளிட்ட பிற பகுதிகளில் நடந்து வரும் போராட்டம் பெரும் வீரியமாக தொடர்கிறது.

இதன் ஒரு பகுதியாக, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இது குறித்து, விவசாய அமைப்பு ஒன்றின் தலைவரான குர்னம் சிங் சதுனி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். அதே நேரம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டமும் நடைபெறும். அத்துடன் டெல்லியில் நடைபெறும் போராட்டம் வழக்கம்போல நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருசில பிரிவினர் தங்கள் போராட்டத்தை முடித்துள்ளனர். அவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் போராட்டத்தை நாசப்படுத்த அரசு சதி செய்கிறது’ என்றும் தெரிவித்தார்.

மற்றொரு தலைவரான சிவகுமார் கக்கா, 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருப்பதாகவும், போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாய அமைப்புகள் அனைத்தும் இணைந்தே இருப்பதாகவும் கூறினார்.

மேலும், வருகிற 19-ந் தேதி முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த காலவரையற்ற உண்ணாவிரதத்துக்கு பதிலாக, ஒருநாள் உண்ணாவிரதமாக நாளை (இன்று) நடத்துவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் மனைவி, சகோதரிகள், தாய், மகள்கள் என நூற்றுக்கணக்கான பெண்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலம் டெல்லிக்கு வந்த அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் போராட்டக்களத்தில் இணைந்துள்ளனர்.

இதில் சிலர் தொடர்ச்சியாக போராட்டக்களத்தில் தங்கியிருப்பதுடன், ஒரு சிலர் ஓரிரு நாட்கள் போராட்டத்தில் கலந்து விட்டு ஊர் திரும்புகின்றனர். பின்னர் அங்கு குடும்பப்பணிகளையும், தங்கள் வீட்டு ஆண்கள் மேற்கொண்டு வந்த விவசாய பணிகளையும் கவனித்து விட்டு மீண்டும் போராட்டக்களத்துக்கு திரும்பி வருகின்றனர்.

இது குறித்து சிங்கு எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் லூதியானாவை சேர்ந்த மந்தீப் கவுர் (வயது 53) என்ற பெண் கூறுகையில், ‘விவசாயம் என்பது பாலினம் சார்ந்த தொழில் அல்ல. ஆண்களோ, பெண்களோ யார் பயிரிட்டாலும் எங்கள் வயல்கள் விளைச்சலை கொடுக்கும். ஏராளமான ஆண் விவசாயிகள் இங்கு போராடுகிறார்கள். பின்னர் நாங்கள் எப்படி வீட்டில் இருக்க முடியும்?’ என்று தெரிவித்தார்.

அவருடன் வந்திருந்த சுக்விந்தர் கவுர் (68) என்ற விதவை மூதாட்டி கூறும்போது, ‘எனது சகோதரரும், மருமகனும் பிற விவசாயிகளும் இங்கு இருக்கும்போது, என்னால் வீட்டில் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இங்கு வந்தபிறகுதான் சரியாக தூங்க முடிந்தது’ என்று தெரிவித்தனர்.

75 வயதான தல்ஜிந்தர் கவுர் என்ற மூதாட்டியோ, எங்களின் உரிமைகளை பெறாமல் திரும்பமாட்டோம் எனவும், இதற்காக இந்த இடத்தில் உயிர் போனாலும் கவலையில்லை எனவும் கூறினார்.

போராட்டக்களத்தில் தங்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்த இந்த பெண்கள், கழிவறை வசதிகள் சற்று தொலைவில் இருப்பதுதான் சிறிய குறை என கூறினர். இந்த பெண்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் அமைத்துக்கொடுத்துள்ள கூடாரத்தில் இரவு தூங்குகின்றனர்.

இதற்கிடையே ராஜஸ்தானில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை ராஜஸ்தான்-அரியானா எல்லையான ரிவாரி பகுதியில் அரியானா மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். சாலைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து விவசாயிகளின் வாகனங்களை முன்னேற விடாமல் தடுத்தனர்.

எனவே விவசாயிகள் ரிவாரி எல்லை அருகே ஜெய்சிங்பூர் கேதா என்ற பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு மாநில போலீசாருடன் இணைந்து, துணை ராணுவமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இவ்வாறு விவசாயிகள் போராட்டம் வீரியமாக நடந்து வரும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று சந்தித்து பேசினார். அவருடன் வர்த்தக இணை மந்திரி சோம் பர்காசும் உடன் சென்றார்.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் விவசாயிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பஞ்சாப் போலீஸ் டி.ஐ.ஜி. ராஜினாமா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஐ.ஜி. (சிறைத்துறை) லக்மிந்தர்சிங் ஜாக்கர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/14033622/Farmers-fast-today-Police-concentrate-on-Delhi-border.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சீக்கிய சமூகத்துடனான மோடி உறவு பற்றி ஐந்தே நாளில் 2 கோடி இ-மெயில் அனுப்பிய ரெயில்வே

சீக்கிய சமூகத்துடனான மோடி உறவு பற்றி ஐந்தே நாளில் 2 கோடி இ-மெயில் அனுப்பிய ரெயில்வே

புதுடெல்லி, 

சீக்கிய சமூகத்துடனான பிரதமர் மோடியின் உறவு பற்றி ரெயில்வேயின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி., ஐந்து நாளில் 2 கோடி இ-மெயில்களை அனுப்பி உள்ளது.

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த தருணத்தில், பஞ்சாப்பை சேர்ந்த சீக்கிய சமூகத்துடனான பிரதமர் நரேந்திர மோடியின் உறவும், அவரது அரசு செய்த நன்மைகள் குறித்தும் கடந்த 8-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை ஐந்து நாளில் 2 கோடி இ-மெயில்களை ரெயில்வேயின் அங்கமான இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அனுப்பி உள்ளது. டிக்கெட்டுகளை பதிவு செய்தபோது பயணிகள் அளித்த இ-மெயில் முகவரி அடிப்படையில் இவை அனுப்பப்பட்டுள்ளன.

இந்த இ-மெயிலில் பிரதமர் மோடி மற்றும் சீக்கியர்களுடனான அவரது அரசின் சிறப்பு உறவு என்ற 47 பக்கங்களை கொண்ட சிறிய புத்தகம் அனுப்பப்பட்டுள்ளது.இது இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி என மும்மொழிகளில் அமைந்துள்ளது.


இந்த இ-மெயில்கள் சீக்கிய சமூகத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என வெளியான தகவலை ஐ.ஆர்.சி.டி.சி. மறுத்துள்ளது. இதையொட்டி அந்த நிறுவனம் விடுத்த அறிக்கையில், “எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இ-மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது முதல் நிகழ்வு அல்ல. முன்னதாக இது போன்ற நடவடிக்கைகளை ஐ.ஆர்.சி.டி.சி பொது நலனில் அரசு நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக செய்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், பொது நலனுக்கான தகவல் தொடர்பு உத்தியின் ஒரு பகுதியாக இ-மெயில்களை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என கூறினர்.

முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையைத் தொடர்ந்து 1984-ம் ஆண்டு நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கியது, ஜாலியன்வாலாபாக் நினைவுச்சின்னம், லங்கருக்கு (சீக்கிய உணவு) வரிவிலக்கு, பாகிஸ்தானில் உள்ள தர்பார்சாகிப் குருத்வாராவை இந்தியாவுடன் இணைத்து கர்தார்பூர் பாதை அமைத்தது உள்ளிட்டவை குறித்து 13 தலைப்புகளில் சீக்கிய சமூகத்தினருக்கு மோடியின் அரசு செய்த நன்மைகள் குறித்து அந்த சிறிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/14040520/IRCTC-sends-nearly-2-crore-emails-in-5-days-flagging.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விவசாயிகள் 19வது நாளாக தொடரும் போராட்டம் : டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்

விவசாயிகள் 19வது நாளாக தொடரும் போராட்டம் : டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை ஒழிந்து விவசாயத்துறை பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் இன்று 19-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் திணறி வருகிறது.

போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலை எண் 8-ஐ ஆக்கிரமிக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். அரியானாவின் குர்கான் வழியாக ஜெய்ப்பூரை அடையும் இந்த சாலை, ராஜஸ்தானில் இருந்து டெல்லியை அடையும் முக்கியமான சாலைகளில் ஒன்றாகும்.

இதைப்போல ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர்கள் போன்ற வாகனங்களில் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று  உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கி உள்ளனர். உண்ணாவிரதம் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.போராட்டக்காரர்கள் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தையும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதத்தையும் நடத்துவார்கள் என்று விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளன.

இது குறித்து, விவசாய அமைப்பு ஒன்றின் தலைவரான குர்னம் சிங் சதுனி  செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். அதே நேரம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டமும் நடைபெறும். அத்துடன் டெல்லியில் நடைபெறும் போராட்டம் வழக்கம்போல நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

அதன்படி  டெல்லி எல்லைகளில்  விவசாய அமைப்பு தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்து விட்டதாக அரசு கூறி வருவதை சுட்டுக்காட்டியுள்ள கெஜ்ரிவால், அந்த போராட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு அளித்துள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா என்றும் டெல்லி முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

முக்கிய போராட்ட தளங்களில் ஒன்றான அரியானா-டெல்லி எல்லையில் உள்ள சிங்குவில் முப்பத்து மூன்று  விவசாய  தலைவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு  உள்ளனர். 

டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சவாய் மாதோபூரைச் சேர்ந்த கிசான் மகாபஞ்சாயத்தின் தலைவர் ராம்பால் ஜாட் கூறும் போது  நாங்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறோம். இந்த போராட்டத்தில்  இறந்த 11 பேருக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்த விரும்புகிறோம் என கூறினார்.

காசிப்பூர் (டெல்லி-உத்தரபிரதேசம் ) எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இன்று தேசிய நெடுஞ்சாலை -24  ல் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து பாரதிய கிசான் யூனியனின் ராகேஷ் டிக்கைட் கூறும் போது

எங்களால்  சாதாரண மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.  சில நிமிடங்கள் கூட முக்கியம் என்பதை அவர்கள் ஒருமுறை உணர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என கூறினார். 

விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக காசியாபாத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் போக்குவரத்துக்கு காசிப்பூர் எல்லை மூடப்பட்டுள்ளது. ஆனந்த் விஹார், டி.என்.டி, சில்லா, அப்சரா மற்றும் போப்ரா எல்லைகள் வழியாகமாற்று வழியில் மக்கள் செல்ல டெல்லி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளார்கள். 

அது போல் சிங்கு, ஆச்சண்டி, பியாவ் மணியாரி, சபோலி & மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. லம்பூர், சஃபியாபாத் மற்றும் சிங்கு கட்டண வரி எல்லைகள் வழியாக மாற்று வழிகளை மேற்கொள்ளுங்கள். முகர்பா & ஜி.டி.கே சாலையில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. வெளி ரிங் சாலை, ஜி.டி.கே சாலை மற்றும் என்.எச் -44 ஐ தவிர்க்கவும் என  போலீசார் கூறி உள்ளனர்.

இந்த் நிலையில் டெல்லி - நொய்டா சாலையில் முற்றுகையைக் கைவிட்டுப் போக்குவரத்துக்குத் திறந்தது தொடர்பாக விவசாய சங்கத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. சில்லா என்னுமிடத்தில் பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனியன்று இந்த அமைப்பின் தலைவர் பானு பிரதாப் சிங், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு நடத்தியதை அடுத்துச் சுங்கச்சாவடி முற்றுகையைக் கைவிட்டுப் போக்குவரத்துக்காகச் சாலை திறந்துவிடப்பட்டது. இந்த அமைப்பின் உத்தரப்பிரதேசத் தலைவர் யோகேஷ் பிரதாப் முற்றுகையைக் கைவிட உடன்படவில்லை.

சாலையைத் திறக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யோகேஷ் பிரதாப், அமைப்பின் தேசியப் பொதுச்செயலாளர் சிம்மேந்திரசிங், செய்தித் தொடர்பாளர் சதீஷ் சவுத்ரி ஆகியோர் சங்கத்தில் இருந்து விலகியுள்ளனர்.

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/14131402/Delhi-Farmers-protesting-at-Ghazipur-DelhiUP-border.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
போராட்டத்தால் சிரமம்: பொதுமக்களிடம் விவசாயிகள் மன்னிப்பு கேட்டனர்

போராட்டத்தால் சிரமம்: பொதுமக்களிடம் விவசாயிகள் மன்னிப்பு கேட்டனர்

டெல்லி எல்லைகளில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தால் பல சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலைமையை ஏற்படுத்தியதற்காக பொதுமக்களிடம் விவசாயிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக துண்டு பிரசுரங்கள் அடித்து, ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் அரியானா-ராஜஸ்தான் எல்லையில் நேற்று விவசாயிகள் பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.

அதில், ‘சாலைகளை அடைத்து, சிரமங்களை ஏற்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. ஒரு கட்டாயத்தின் பேரில்தான் நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம். எங்கள் போராட்டம் உங்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியிருந்தால் கரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் விவசாயிகள், ‘நாங்கள் எல்லாரும் விவசாயிகள். மக்கள் எங்களை அன்னமிடுபவர்களாக அழைக்கின்றனர். இந்த நாட்டின் பிரதமரோ புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க பரிசு கொடுத்ததாக கூறுகிறார். இது பரிசு அல்ல, தண்டனை. எனவே இந்த பரிசை உங்களுடனே வைத்திருங்கள். எங்களுக்கு பரிசு தர விரும்பினால், எங்கள் விளைச்சலுக்கு நல்ல விலையை உறுதி செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/15021906/Farmers-Apologise-For-Road-Blockade-Inconvenience.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லியில் இன்று 20-வது நாளாக தொடர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டம்
 

டெல்லியில் இன்று 20-வது நாளாக தொடர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் இன்று 20-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் திணறி வருகிறது.

போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர். இதைப்போல ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர்கள் போன்ற வாகனங்களில் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போரட்டம் மேற்கொண்டனர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 

விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்து விட்டதாக அரசு கூறி வருவதை சுட்டுக்காட்டியுள்ள கெஜ்ரிவால், அந்த போராட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு அளித்துள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா என்றும் டெல்லி முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/15094505/Farmers-struggle-continues-for-the-20th-day-today.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐய்யா கண்ணுக்கு எப்ப கண்ணு  முழிக்குதோ ?

டெல்லி வெதர்  ஒத்து வராது என்கிறார் பார்ப்பம் எது மட்டும் பாய்கிறார் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் பீட்சா பிரியாணி சாப்பிடுகிறார்கள் பாதாம் பிஸ்தா சாப்பிடுகிறார்கள் என குறை கூறுபவர்களே கவனம் கொள்ளுங்கள்.. SAGO விவசாயிகள் தான் போராடுறாங்க பிச்சகாரர்கள் அல்ல. விவசாயிகளை பிச்சகாரங்களா பார்க்கும் அந்த பொது புத்தியை முதல்ல மாத்துங்க. ஒரு பெரும் கொள்கை சார்ந்த போராட்டத்தை சின்ன சின்ன விசயங்களை சொல்லி கொச்சை படுத்த நினைக்காதிங்க- 18 நாளாக டெல்லி போராட்ட களத்தில் இருக்கும் ஊடகவியலாளர் நிரஞ்சன்'

விவசாயி... இதெல்லாம்,  சாப்பிட கூடாதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலுக்கும் விவசாயிகள் போராட்டம்: டெல்லி - சிங்கு எல்லையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் இணைவதாகத் தகவல்

over-2-000-women-likely-to-join-ongoing-protest-at-singhu-border-in-coming-days டெல்லி சிங்கு எல்லையில் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ள விவசாயிகள்: படம் | ஏஎன்ஐ.
 

புதுடெல்லி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 20-வது நாளை எட்டியுள்ளது. டெல்லி-சிங்கு எல்லையில் அடுத்த சில நாட்களில் 2 ஆயிரம் பெண்கள் இணைய உள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியின் பல்வேறு எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 20-வது நாளை எட்டியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 
 
 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய 5 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த 40 தலைவர்கள் நேற்று டெல்லி எல்லையின் பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

1608028896756.jpg

இந்நிலையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில், டெல்லி-சிங்கு எல்லையில் அடுத்த சில நாட்களில் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இருந்து பெண்கள் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதால், அவர்களுக்குத் தேவையான தங்குமிடங்கள், கழிப்பறை வசதி, சமையல்கூடம் ஆகியவற்றைத் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே விவசாயிகள் டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிபூர் உள்ளிட்ட எல்லைகளில் ஆயிரக்கணக்கில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பெண்களும் சேரும்போது போராட்டம் தீவிரமாகும்.

இதுகுறித்துபோலீஸார் தரப்பில் கூறுகையில், “டெல்லி எல்லைகளான சிங்கு, அச்சாண்டி, மணியாரி, சாபோலி, மன்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. வரும் வாகனங்கள் அனைத்தும் லாம்பூர், சாபியாபாத், சிங்கு பள்ளி சுற்றுச்சாலை வழியாக முகார்பாவிலிருந்து ஜிடிகே சாலைக்குத் திருப்பி விடப்படுகின்றன.

ரிங்ரோட் புறச்சாலை, ஜிடிகே சாலை, என்ஹெச்44 ஆகியவற்றில் செல்வதைத் தவிர்க்கமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். காசியாபாத் - டெல்லி இடையிலான பாதை மூடப்பட்டுள்ளது. ஆனந்த் விஹார், டிஎன்டி, சிலா, அப்சலா, போப்ரா எல்லை வழியாகச் செல்ல வாகனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

போராட்டம் தீவிரமடைந்து வருவதால் டெல்லி எல்லைகளில் அதிகமான போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர். தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம், லாரிகள், கன்டெய்னர்கள், இரும்புத் தடுப்புகளும் கொண்டு வரப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தனர்.

 

https://www.hindutamil.in/news/india/611978-over-2-000-women-likely-to-join-ongoing-protest-at-singhu-border-in-coming-days-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: `களமிறங்கும் 2,000 பெண்கள்; நெடுஞ்சாலை மறியல்!’ விவசாயிகள் போராட்டம் தீவிரம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லி விவசாயிகள் போராட்டம் ( AP )

டெல்லி எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் வரும் நாள்களில் போராட்டக் களத்தில் அவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நடைபெற்றுவரும் விவசாயிகள்`டெல்லி சலோ' போராட்டம் 20-வது நாளை எட்டியிருக்கிறது. இந்தப் போராட்டம் நாளுக்குநாள் உச்சம் பெற்று வருகிறது. ஒருபுறம், பல்வேறு தரப்பினர், தங்கள் விருதுகளைத் திருப்பியளித்தும், அரசுப் பணியை ராஜினாமா செய்தும் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்து வருகின்றனர். மறுபுறம், பா.ஜ.க தலைவர்கள் தொடர் போராட்டம் குறித்து பேசிவரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்குமிடையே நடைபெற்ற பல்வேறுகட்ட பேச்சுவாா்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
 
டெல்லி விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப், ஹரியானா மற்றும் அதனையொட்டியுள்ள கிராமங்களிலிருந்து வீட்டுக்கொரு போராளியை டெல்லிக்கு அனுப்ப கிராம மக்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், டெல்லி எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் வரும் நாள்களில் போராட்டக் களத்தில் அவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பெண்களுக்கு வேண்டிய அத்தியாவசியத் தேவைகளும், கூடுதல் தங்கும் இடங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவிலுள்ள பஜ்னா கிராமத்தின் விவசாய சங்கத் தலைவரான ராம்பாபு கடேலியா (Rambabu Katelia) வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

 

இது குறித்து, தகவலறிந்த கிராமத்தினர் பால்டியோ காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, அவரை உடனடியாக விடுதலை செய்யக் கூறி போராடினர். இதற்கு போலீஸார் செவிசாய்க்காததால் பஜ்னா கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், டெல்லியை இணைக்கும் யமுனா நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களைக் கொண்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ராம்பாபு கடாலியாவை போலீஸார் விடுதலை செய்தனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
 
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய ராம்பாபு கடாலியா,``மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி சர்வ்தலே கிசான் சங்கர்ஷ் சமிதியின் (Sarvdaleey Kisan Sangharsh Samiti) சார்பில் கடந்த ஒரு வாரமாக நூதன முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வந்தேன். திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் போராட்டக்களத்துக்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தினை உடனடியாக கைவிடுமாறு தெரிவித்தனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், என்னைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்" என்று தெரிவித்தார்.

 

அவரைத் தொடர்ந்து பேசிய பஜ்னா கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், விவசாய சங்கத்தின் முக்கிய நிர்வாகியுமான ராஜ்குமார் சௌகான், ``விவசாயிகளின் இந்த நாடுதழுவிய போராட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு தொடங்கி, பல்வேறு சிக்கல்கள் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
 
டெல்லி விவசாயிகள் போராட்டம்

எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளை பரீசிலித்து விரைவில் இதற்கு ஒரு நல்ல முடிவைக் கொண்டுவரவேண்டும். இல்லையெனில், இது நாட்டிற்கே பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது." என்று கூறினார்.

போராட்டம் உச்சம் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் டெல்லியின் சிங்கு, மணியாாி, காஸிபூர் உள்ளிட்ட பல்வேறு எல்லைகள் முடக்கப்பட்டு, வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. எல்லையை ஒட்டிய பகுதிகளில் தடுப்புகளும், போலீஸாரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

https://www.vikatan.com/social-affairs/protest/2000-women-from-protesting-farmers-to-join-delhi-chalo-protest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லி விவசாயிகள் போராட்டம்: பிரச்சினைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் -சுப்ரீம் கோர்ட் அறிவுரை

டெல்லி  விவசாயிகள் போராட்டம்: பிரச்சினைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் -சுப்ரீம் கோர்ட் அறிவுரை
 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என கருதி, அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று  அரியானா, பஞ்சாப் மற்றும் பலவேறு மாநிலங்களை  சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லி-நொய்டா சாலையில் அமைந்துள்ள சில்லா எல்லையில் இன்று மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

டெல்லி எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்  தொடர்பாக டெல்லியை சேர்ந்த ரிஷப் சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனு தாக்கல் செய்தார் அந்த மனுவில் 

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அதிக அளவில் கூட்டத்தை கூட்டுவது சட்ட விரோதம். இதனால் கொரோனா தொற்று பரவல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் விவசாயிகள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவ சேவை பெறுவதற்கும், வருபவர்களுக்கும், ஆம்புலன்ஸ் போன்றவைக்கும் இடையூறு விளைவிப்பதாக உள்ளது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு உடனடியாக போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுபோல், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவரும், வக்கீல் ரீபக் கன்சலும் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது  விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி  கேள்வியை எழுப்பியது.  கடுமையான குளிரிலும் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை கேட்க வேண்டும்.

விவசாயிகள் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்  கருத்து தெரிவித்தது. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் எடுபடாது என்றும்  மீண்டும் தோல்வியடையும் என்று சுப்ரீம் கோர்ட்  தெரிவித்தது அதனால் மத்திய அரசின் பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும் இந்த போராட்டம் விரைவில் ஒரு தேசிய பிரச்சினையாக மாறும், பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என கூறியது.

 விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரிய  மனுக்கள் மீது நாளைக்குள் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் டெல்லி, அரியானா மாநில  அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. 

 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/16135442/Farmers-protest-live-updates-SC-says-urgent-resolution.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் - விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்

வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் -  விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்
 

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அடுத்தகட்ட போராட்டங்களை நோக்கி விவசாயிகள் நகர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லி-நொய்டா சாலையில் அமைந்துள்ள சில்லா எல்லையில் இன்று மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் கூறியதாவது:-

வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாகவும் 3 சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

விவசாயிகளின் திடீர் சாலை மறியலால் நொய்டா-டெல்லி சில்லா எல்லையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/16120512/protesting-farmers-block-Noida-Link-Road-towards-Delhi.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் கருத்து

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் கருத்து

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.  

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சமரச குழு அமைக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

இந்நிலையில், இதனை 2-வது நாளாக விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது என்றும் இருப்பினும், போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கிறோம். போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்று தெரிவித்தார். மேலும்  வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி இன்று முடிவு எடுக்கப்படும் என்றார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/17133841/Farm-laws-matter-in-Supreme-Court-CJI-says-we-recognize.vpf

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை : சுப்ரீம் கோர்ட்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை : சுப்ரீம் கோர்ட்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.


அப்போது நீதிபதிகள், மத்திய அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லையா? விவசாயிகள் அமைப்புகள் தரப்பில் யார் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பவர்களின் பெயர்களை தெரிவியுங்கள், ஏனெனில் மத்திய அரசின் பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை என்றால் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நாங்கள் அமைக்கிறோம், இல்லையென்றால் விரைவில் இது நாடு தழுவிய பிரச்சினையாக மாறிவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இன்றும் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது  பஞ்சாப் அரசு சார்பில் வழக்கறிஞர்  கூறும் போது 

பல விவசாயிகள் பஞ்சாபிலிருந்து வந்தவர்கள். ஒரு குழு பேச்சுவார்த்தையை  எளிதாக்க முடியும் என்ற நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு மாநிலத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்த குழுவில் யார் யார்  இருப்பார்கள் என்பதை விவசாயிகள் மற்றும் மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறும் போது  போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்பாலும் முகக்கவசம் அணியவில்லை.  அவர்கள் அதிக அளவில் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது.  அவர்கள் கிராமங்களுக்குச் சென்று அதை அங்கே பரப்புவார்கள். விவசாயிகள் மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று  கூறினார்.

போராட்டங்களுக்கு தீர்வு காணும்வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளிக்க முடியுமா?   என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்  கேள்வி எழுப்பியது  மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் பதில் அளித்தார்.

விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறியதாவது:-

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

விவசாயிகளின் போராட்டம்  மற்றும் குடிமக்கள் அடிப்படை உரிமை குறித்து இன்று நாம் தீர்மானிக்கும் முதல் மற்றும் ஒரே விஷயமாக இருக்கும்.

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது ஆனால்  குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கிறோம்.நகரை தடுத்து வைக்க முடியாது  . எதிர்ப்பின் விதம் நாங்கள்  கவனிக்கும் ஒன்று. குடிமக்களின்  உரிமையை பாதிக்காத வகையில் அதை சற்று மாற்றியமைக்க வேண்டும். போராட்டம் எப்படி நடக்கிறது என்று நாங்கள் மத்திய அரசிடம்  கேட்போம்.

ஒரு போராட்டம்  என்பது சொத்துக்களை அழிக்கவோ அல்லது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவோ செய்யக் கூடாது. மத்திய அரசும்  விவசாயிகளும் பேச்சுவார்த்தை நடத்த  வேண்டும்; ஒரு பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான குழுவைப் பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம். அமைக்கப்படும் குழு  விவசாயிகள்  விவகாரத்தில் ஒரு தீர்வை கண்டறியும்;  இதற்கிடையில் எதிர்ப்பு  தொடரலாம்.

டெல்லியைத் தடுக்கிறார்கள் அங்கு  மக்கள் பசியுடன் இருக்கக்கூடும். விவசாயிகள் நோக்கத்தை பேச்சுவார்த்தை  மூலம் நிறைவேற்ற முடியும். போராட்டத்தில் அமர்ந்திருப்பது உதவாது . விவசாயிகள் வன்முறையைத் தூண்டக் கூடாது. இது போன்று ஒரு நகரை தடுத்து வைக்க கூடாது.

பி சாய்நாத், பாரதிய கிசான் யூனியன் மற்றும் பிறரை உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய மனுக்களை விடுமுறைகால அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/17140736/Supreme-Court-bench-headed-by-Chief-Justice-of-India.vpf

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் மேல் இந்த சிறுமிக்கு இருக்கும் அக்கறை கூட மோடி இல்லை 

 

விவசாயிகளின் புரட்சியில் ஒரு தமிழன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழவர்களுக்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டம் / நாம் தமிழர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு: மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தகவல்

vk-singh-on-farm-laws கலந்துரையால் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பேசினார். அருகில் மாநிலத் தலைவர் முருகன் மற்றும் பலர் உள்ளனர்.
 

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற தலைப்பில் பாஜக சார்பில், வேளாண்மை சட்டங்களை விளக்கும் கலந்துரையாடல் கூட்டம் இன்று (டிச.20) நடைபெற்றது.

கூட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.இளங்கோ வரவேற்றார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், மாவட்டப் பார்வையாளர் பி.எல்.அண்ணாமலை, மன்னார்குடி 'காவிரி' ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது:

"தமிழ் மொழியும், பண்பாடும் வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடிய அளவுக்குப் பெருமைப்படக்கூடியது. ராஜேந்திர சோழனின் சாம்ராஜ்ஜியம் மிகப்பெரியது.

நமது நாட்டு ராணுவ வீரர்கள் 96 சதவீதம் பேர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். ராணுவப் பணி முடிந்ததும், விவசாயத்தை மேற்கொள்கின்றனர். ராணுவ வீரர்களும், விவசாயிகளும் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்தவர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் போற்றப்படுகிறது. முன்பெல்லாம் இங்குள்ள காவிரி பிரச்சினையைப் பற்றிப் பேசி வந்தார்கள், ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு முன்பு வரை எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையைப் பரிந்துரை செய்ய வேண்டும் எனப் பலர் கூறி வந்தாலும், அதை யாரும் அமல்படுத்தவில்லை. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்ததும் அந்த அறிக்கையை கவனமாகப் பரிசீலித்து ஒவ்வொரு திட்டமாக அறிவித்து வருகிறார்.

அதன்படி, முதலில் விவசாயிகளுடைய நிலங்களில் மண் பரிசோதனை திட்டம், இந்தத் திட்டத்தின் மூலம் மண் வளம் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு ஏற்றவாறு பயிர்கள் சாகுபடி செய்வது, உரம் இடுவது என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொடர்ந்து, திருத்தி அமைக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம். இந்தத் திட்டத்தில் விவசாயிகளின் பயிர்கள் பாதித்தாலும், மகசூல் பாதித்தாலும், இருப்பு வைக்கப்பட்ட தானியங்கள் பாதித்தாலும் இழப்பீடு வழங்கப்படுகிறது.

2009-2014 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1,700 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் 3,069 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நல்ல விலை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பருப்பு 1.52 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் 112.06 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் இருப்பு வைத்து, கிடங்குகளில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

தற்போது விவசாயிகளை எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரத்தால் ஏமாற்றி வருவது துரதிர்ஷ்டமானது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களால் நன்மைதான். வெளிச்சந்தையில் என்ன விலை இருக்கிறதோ அங்கு விற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த சட்டத்தில் ஒப்பந்தத்தில் பிரச்சினை என்றால் நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை, அந்தந்த மாவட்ட ஆட்சியரே பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்த விவசாயம் என்பது புதிதல்ல, இந்தியாவில் பல மாவட்டங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டத்தில் நிலம் பறிபோகும் என்ற அச்சம் தேவையில்லை. எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தச் சட்டங்களில் உள்ள நன்மைகளைத் தமிழக விவசாயிகளும், குறிப்பாக டெல்டா விவசாயிகளும்தான் இந்தியாவில் உள்ள பிற விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்".

இவ்வாறு வி.கே.சிங் தெரிவித்தார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்புகையில், "மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கவே விவசாயிகள் முடியாத நிலை உள்ளபோது, எப்படி இந்தச் சட்டத்தில் பிரச்சினையைத் தீர்க்க முடியும்? எனவே, இதற்கென தனியாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டப் பணிகளை இதர பணிகளுக்குப் பயன்படுத்தாமல், விவசாயப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்" எனக் கூறினர்.

அதற்கு வி.கே.சிங் பதிலளித்து விளக்கமளித்தார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் வி.கே.சிங் கூறியதாவது:

"மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவில் பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு அளித்து வருகிறார்கள். சட்டத்தினால் குறைந்தபட்ச ஆதார விலை என்பது பாதிக்கப்படாது. ஏற்கெனவே உள்ள மண்டியில் பாதிப்பு இருக்காது.

வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுகிறது. விவசாய நிலங்களுக்குக் கிடையாது. சட்டத்தின் மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும்.

இச்சட்டத்தின் நோக்கம் விவசாயிகள் பயனடைய வேண்டும். விவசாயிகளின் பக்கம்தான் அரசு உள்ளது. இந்தச் சட்டம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பானது. ஏற்கெனவே இடைத்தரகர்கள்தான் பயன் அடைந்தார்கள். தற்பொழுது இச்சட்டத்தின் மூலம் நேரடியாக இந்தப் பலனை விவசாயிகளே அடைய முடியும்" என்றார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/613748-vk-singh-on-farm-laws-4.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.