Jump to content

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுட்டும், கழுத்தை அறுத்தும் கொலை  - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online |  Tamilnadu News

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர்.

போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக ஐநா சபை கூறியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொலை செய்தனர்.

இந்தப் படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் போக்கா ஹராம் அல்லது ஐஎஸ் அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்கப் பிரிவு இதனைச் செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://athavannews.com/நைஜீரியாவில்-100க்கும்-மேற/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியீடு – பதிலை வழங்கியது அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட்டினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை உத்தியோகப்பூர்வமாக முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் உள்ள விடயங்கள் அண்மையில் கசிந்திருந்த நிலையில், தற்போது உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அந்த அறிக்கைக்கான பதில் நிலைப்பாட்டை அரசாங்கம் நேற்று (புதன்கிழமை) மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட்டினால் முன்வைக்கப்படவுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையில், இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக, மாற்று சர்வதேச பொறிமுறைகள் குறித்து ஆராயுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய முறையில் அவதானம் செலுத்தப்படாதுள்ளமை, மீண்டும் அவ்வாறான மனித உரிமை மீறல்கள் ஏற்படுவதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் நிலைமை, இராணுவமயமாக்கல் உள்ளிட்ட விடயங்கள் கவலையளிப்பதாக உள்ளன எனவும் யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் இந்த அரசாங்கம் தடுக்கும் வகையில் செயற்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளை அதிகரிக்கச் செய்த கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறுவதற்கான சமிக்ஞைகள் உருவாகியுள்ளன என்றும் போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இருதரப்ப்பினரதும் மனித உரிமை மீறல்கள் குறித்து நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது என்றும் இதன் காரணமாக, கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சிறிய முன்னேற்றத்தை, பின்னோக்கிச் செல்வதற்கு செயற்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியினால் முன்னாள் இராணுவ மற்றும் புலனாய்வு பிரிவின் 28 அதிகாரிகள், நிர்வாக பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்த ஆண்டு, போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில், அவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட தரப்பினர் குறித்து ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு அரசாங்கங்கள் நியமித்த வெ்வேறு ஆணைக்குழுக்கள் விசாரணைகளை நடத்தியபோதும் உண்மைகளை நம்பகத்தன்மையை வெளிக்கொண்டுவரவும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தவறிவிட்டன எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தேசிய அளவில் தீர்வு காண்பதற்கான இயலாத நிலையிலும் ஆர்வமற்றத்தன்மையிலும் இருப்பதால், சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கா, சர்வதேச சமூகம் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் ஊக்குவிப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஐ-நா-ஆணையாளரினால்-சமர்ப்/
    • ஜெயலலிதாவின்  மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின் ‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என  அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 2016 டிசம்பர் 5ல்  ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி  27ல் ஜெயலலிதாவிற்கு  நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது. இந்த நான்காண்டு காலமும் ஜெயலலிதாவிற்கு  உண்மையாக இல்லாத இரண்டு நபர்களால் அவரின்  நினைவகம் திறக்கப்படுவது அவருக்கு  செய்யும் துரோகம் ஆகும். இந்தத் துரோகத்தை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள்,  விசுவாசிகள் உணர்வர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் கட்டுப்பணம்  வாங்க பயன்படும் என்பதற்காக  நினைவிடம் கட்டித் திறப்பு விழா செய்கின்றனர். அ.தி.மு.க.வுக்கு மூடு விழா நடத்த மக்கள் தயாராகி விட்டனர். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம்,  கொடநாடு பங்களாவில் நடந்த கொலை,  கொள்ளைக்கு காரணமானவர்கள் என அத்தனை  குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவோம்” எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஜெயலலிதாவின்-மரணத்திற்/
    • பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மொத்தம் 7 ஆயிரத்து 245 இறப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான அதிகூடிய இறப்பு எண்ணிக்கை இது என்றும் ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 10 ல் நான்கு கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி இங்கிலாந்தில் மொத்தம் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 907 இறப்புகள் பதிவாகியுள்ளன என ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. http://athavannews.com/பிரித்தனியாவில்-கொரோனா-த/
    • ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான் 2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் மிக மோசமாக கொரோனா தொற்று பதிவாகிய ஈரான், ரஷ்யா, இந்தியா அல்லது சீனா தயாரித்த தடுப்பூசிகளை மட்டுமே நம்புவதாகவும் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஈரான் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் 2 மில்லியன் டோஸ்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தயாரித்த தடுப்பூசிகளைப் பயன்படுத்த இந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியால் தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ரஷ்ய-தயாரிப்பான-ஸ்பூட்னி/
    • தனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்! தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு ஒரு வணிக பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் தனது அடுக்குமாடி கட்டிடத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டார். இந்த தனிமைப்படுத்தல் காலத்தின் போது அவர் சுமார் ஏழு முறை, கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தனிமைப்படுத்தலின் போது தனது வீட்டை விட்டு வெளியேறுகையில், அயலவர்களில் ஒருவருடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகையானது தாய்வானில் அபராதமாக பிறப்பிக்கப்பட்ட அதிகளவிலான அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 23 மில்லியன் மக்கள் வாழும் தாய்வான் நாட்டில் 890 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 07 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தனிமைப்படுத்தல்-உத்தரவி/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.