Jump to content

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி


Recommended Posts

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி

     by : Dhackshala

http://athavannews.com/wp-content/uploads/2020/11/rajinikanth.jpg

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதன்போது கட்சி தொடங்கலாமா? கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

நிர்வாகிகள் தங்கள் பகுதி நிலவரங்கள் மற்றும் தங்களின் கருத்துக்களை ரஜினியுடன் பகிர்ந்துகொண்டனர். முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன்வைத்துள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ரஜினிகாந்த், ரசிகர்களை நோக்கி கையசைத்தும் வணங்கியும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் நல்ல முடிவெடுத்து அறிவிப்பதாக கூறினார்.

என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவு அளிப்பதாக மாவட்ட செயலாளர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் ரஜினிகாந்த் இதன்போது குறிப்பிட்டார்.

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி | Athavan News

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விரைவிலா...? கிளிஞ்சுது.... போ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அப்படி என்ன முடிவுங்க எடுத்தார்?

அப்புறமா முடிவு எடுக்கிறேன்னு முடிவு எடுத்தார்.
அந்த முடிவுக்கு கட்டுப்படுவோம். 😎

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு ஒதுங்கிட்டீங்களா..!’ - ஆலோசனைக் கூட்டத்தில் கொதித்தாரா ரஜினி?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

``சமூக வலைதளங்களில் விஷுவல் மீடியாவில் பிரசாரம் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை ரஜினி ஏற்றுக்கொள்ளவில்லை. ``அதெல்லாம் முழுமையாகச் சரிப்பட்டு வராது. மக்கள் என்னை நேரில் எதிர்பார்ப்பார்கள்” என்றாராம்.

மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ரஜினி வரும்போது, ஜாலியான மூடில் வந்திருக்கிறார். வந்திருந்த மாவட்டச் செயலாளர்களில் சிலர் பேசும்போது, அவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு டென்ஷன் ஆகிவிட்டாராம்.

ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி
 
ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி

``நான் உங்களை அழைத்தால் இங்கே வந்து நன்றாகப் பேசுகிறீர்கள். ஆனால், ஃபீல்டுக்குப் போனால்... சொதப்பிவிடுகிறீர்கள். உங்களுக்கு அரசியலில் அனுபவம் போதாது. உங்களில் 15% பேரின் செயல்பாடுகள்தான் சரியாக இருக்கின்ரன. பலரது செயல்பாடுகள், வேலைகளில் திருப்தியில்லை. காசு சம்பாதிக்கணும்னு வர்றவங்க என்னை நம்பி இருக்காதீங்க. வேண்டாம்... போயிடுங்க.

 
 

என் பேருக்கு ரொம்ப களங்கத்தை ஏற்படுத்திட்டு வர்றீங்க. அவங்களோட லிஸ்ட்டு என்னிடம் இருக்கு. அதன்படி நடவடிக்கை எடுப்பேன். சரியில்லாத மாவட்ட நிர்வாகத்தை மாற்றப்போகிறேன். புதிய மாநில நிர்வாகிகளை நியமிக்கப்போகிறேன். நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு பலரும் ஒதுங்கீட்டீங்க. மக்கள் நலத் திட்டப்பணிகளைத் தீவிரமாக செய்வீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் சரிவரச் செய்யலை.

ரஜினிகாந்த்
 
ரஜினிகாந்த்

நான் தெருவுக்கு வந்து பிரசாரம் செஞ்சாத்தான் ஜெயிக்க முடியும்னு நினைக்கிறேன். கொரோனா சீஸன் என்பதாலேயே யோசிக்கிறேன்” என்று ரஜினி காட்டமாகப் பேசியதாக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

அப்போது சில மாவட்டச் செயலாளர்கள், ``சமூக வலைதளங்களில் விஷுவல் மீடியாவில் பிரசாரம் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை ரஜினி ஏற்றுக்கொள்ளவில்லை. ``அதெல்லாம் முழுமையாகச் சரிப்பட்டு வராது. மக்கள் என்னை நேரில் எதிர்பார்ப்பார்கள்” என்றாராம்.

ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு, போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்ததும், பத்திரிகையாளர்களிடம் பேசினார். ``அவுங்க கருத்தைச் சொன்னார்கள். என்னோட பார்வையை அவுங்ககிட்ட சொன்னேன். என்ன முடிவு எடுத்தாலும் கூட இருப்போம்னாங்க. என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரமோ முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்” என்றார்.

 

https://www.vikatan.com/news/politics/what-happened-in-rajini-district-secretaries-meeting

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு ஒதுங்கிட்டீங்களா..!’ - ஆலோசனைக் கூட்டத்தில் கொதித்தாரா ரஜினி?

ஒரே ஒரு கேள்விதான்...?

தமிழக முதல்வராக ஆவதற்கு ரஜினிக்கு என்ன தகுதி உள்ளது...?

அவர் ஒரு இந்திய குடிமகன் போன்ற சாமானிய மக்களுக்கும் பொருந்தும் தகுதியை தூக்கி கொண்டு வராமல் தெளிவான பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொசுத்தொல்லை  தாங்கமுடியல சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                               ரசிகன்

maxresdefault.jpg

அடுத்த பிறவியிலாவது மனுசுரா பொறங்கடா..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் முடிவை அறிவிப்பேன்... என,  முடிவை... அறிவித்த ரஜினி. 😜 🤣 

Link to comment
Share on other sites

 ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு

ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு

 

ரஜினிகாந்த் நேற்று முன்தினம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் நடந்த சந்திப்பில் அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தார்கள். நானும் எனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்கள்கூட இருப்போம் என்று கூறினார்கள். நானும் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் இன்று சந்தித்துள்ளார்.

அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பேன் என ரஜினி கூறிய நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

128176925_4140341066028070_9179383276204

அது போன வருசம் .. நான் சொல்லுறது இந்த வருசம் ..

128396938_4140317609363749_5075946017914

tenor.gif 

வாய்ப்பில்ல ராஜா ..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

128429097_2042024269287804_1780543796225

Just now, புரட்சிகர தமிழ்தேசியன் said:

128429097_2042024269287804_1780543796225

hqdefault.jpg

என்ன ஏன்யா இங்க கூட்டி வந்த.?

☺️..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரியில் கட்சி, தேர்தலில் வெற்றி: முற்றுப்புள்ளி வைத்த ரஜினி

spacer.png

 

அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். அதன்பிறகு கடந்த பிப்ரவரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் முதலமைச்சராக மாட்டேன் எனவும், நல்லவர் ஒருவரை முதல்வராக்குவேன் எனவும் தெரிவித்தார். ஆனால், ரஜினிகாந்த்தான் முதல்வராக வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர்.

சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ரஜினி கட்சி ஆரம்பிப்பதும் தள்ளிப்போனது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா காலத்தில் மருத்துவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்துவதாக ரஜினி பெயரில் கடிதம் வெளியானது. அந்த அறிக்கையை மறுத்த ரஜினி, அதில் உள்ள மருத்துவர் ஆலோசனை சம்பந்தப்பட்ட வரிகள் மட்டும் உண்மைதான் என்று தெரிவித்தார். இதனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது.

 

இதனிடையே மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ஆம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தான் என்ன முடிவு எடுத்தாலும் பின்னால் நிற்பதாக நிர்வாகிகள் தெரிவித்தாகவும், தன்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என அவர் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் அரசியல் கட்சி தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 3) முற்றுப் புள்ளிவைத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இணைக்கப்பட்ட அறிக்கையில், “வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்..அதிசயம் நிகழும்” என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்பதை ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.


 

https://minnambalam.com/politics/2020/12/03/31/actor-rajinikanth-anounce-political-party-start-janaury

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான பாஜக பிரமுகர்!

 

spacer.png

பாஜகவில் இருந்து வந்த அர்ஜுன்மூர்த்தியை தான் ஆரம்பிக்கும் கட்சிக்கு நிர்வாகியாக நியமித்துள்ளார் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்து, அதுபற்றிய அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடுவோம் என்ற தகவலை பதிவிட்டிருந்தார். உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரமாட்டேன் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு மிகப்பெரிய பணிகள் நடைபெற வேண்டியுள்ளதுதான் தாமதத்திற்கு காரணம் என விளக்கினார் ரஜினிகாந்த். கட்சிப் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாகத் தெரிவித்த அவர், “கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்திருக்கிறேன். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன்மூர்த்தி நியமிக்கப்படுகிறார்” என்ற முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

 

இந்த நிலையில் அர்ஜுன்மூர்த்தி சில நாட்களுக்கு முன்பு வரை பாஜகவில் இருந்தவர் என்ற தகவலும் வெளிவரத் துவங்கியது. பாஜகவின் அறிவுஜீவிப் பிரிவின் தலைவராக இருந்துவந்த அர்ஜுன் மூர்த்தி, வேல் யாத்திரை போராட்டங்களிலும் தீவிரமாக கலந்துகொண்டார். கடைசியாக கடந்த நவம்பர் 27ஆம் தேதி பாஜகவின் பொதுச் செயலாளராக சி.டி.ரவி பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் பாஜகவிலிருந்து விலகி ரஜினியுடன் கைகோர்த்துள்ளார். பாஜகவின் அறிவுஜீவிப் பிரிவின் தலைவர் என்று வைத்திருந்த ட்விட்டர் பயோவை, தற்போது தலைவருடன் இருக்கிறேன் என Now with Thalaivar என்று மாற்றியுள்ளார் அர்ஜுன்மூர்த்தி. அத்துடன் தலைவருக்கு என் அனேக கோடி வணக்கங்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், தற்போது பாஜகவைச் சேர்ந்தவரையே நிர்வாகியாக நியமித்தது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் அணிச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி, “ரஜினியின் முடிவிற்கு பின்னால் பாஜகவின் தூண்டுதல் இருக்கிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் அரசியல், ஆட்சி மாற்றம் இப்ப இல்லேன்னா எப்பவும் இல்லை தான். ஆனா பாஜகவின் மனசாட்சியாக ரஜினி இருக்க நினைத்தால் மக்களின் மனசாட்சி வேற மாதிரி இருக்கும்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.


 

 

https://minnambalam.com/politics/2020/12/03/37/bjp-leader-join-with-rajinikanth-party

 

Link to comment
Share on other sites

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு

  by : Yuganthini

http://athavannews.com/wp-content/uploads/2020/12/rajani-720x450.jpg

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.

ஆனாலும் அரசியல் கட்சி  ஆரம்பிப்பது  தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல்  அமைதியாக இருந்து விட்டார். விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது, ருவிட்டர் பக்கத்தில் அரசியல் பிரவேசம் குறித்து பதிவேற்றியுள்ளார்.

குறித்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது,  எதிர்வரும்  சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்” என குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு | Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி... தமிழக அரசியல், நல்ல தமாசாக இருக்கப் போகுது. 😄

மீம்ஸ் தயாரிப்பவர்களுக்கு...   “ஓவர் ரைம்”    பார்க்கிற அளவுக்கு, பயங்கர  வேலை இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

இனி... தமிழக அரசியல், நல்ல தமாசாக இருக்கப் போகுது. 😄

மீம்ஸ் தயாரிப்பவர்களுக்கு...   “ஓவர் ரைம்”    பார்க்கிற அளவுக்கு, பயங்கர  வேலை இருக்கு. 🤣

மிகவும் சரி. நல்ல நகைச்சுவைகள் நிச்சயம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

இனி... தமிழக அரசியல், நல்ல தமாசாக இருக்கப் போகுது. 😄

மீம்ஸ் தயாரிப்பவர்களுக்கு...   “ஓவர் ரைம்”    பார்க்கிற அளவுக்கு, பயங்கர  வேலை இருக்கு. 🤣

இவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறக்க போகின்றது, 😭

என்றாலும் இவரின் வருகை BJP தூண்டுதல்களே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி கட்சி அறிவிப்பு.!? கமலுடன் கூட்டணியா.!?யார் காரணம்.!? ரவீந்திரன் துரைசாமி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இனி... தமிழக அரசியல், நல்ல தமாசாக இருக்கப் போகுது. 😄

மீம்ஸ் தயாரிப்பவர்களுக்கு...   “ஓவர் ரைம்”    பார்க்கிற அளவுக்கு, பயங்கர  வேலை இருக்கு. 🤣

Bild

Link to comment
Share on other sites

ரஜனி தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு நடிகரும் மக்கள் மத்தியில் இறங்கி அரசியல் செய்யாமல் தன் போலி கதாநாயக பிம்பத்தை வைத்துக் கொண்டு தேர்தலில் வெல்ல முடியும் என்ற நப்பாசை தகர வேண்டும். இது ரஜனிக்கு மட்டுமல்ல கமலஹாசனுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.