Jump to content

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பள்ளிக்கூடமே போகேல்லை பிரின்ஸ்சிபல் ஆக நினைக்குது பரட்டை. நான் சொல்லுறது இண்டு வரைக்கும் ஒரு அரசியல் மேடையே ஏறவில்லை. நினைப்பு முதல்வர்.தமிழ் ஒழுங்காகவே வாயிலை வராது  ஆனால் தமிழ்நாட்டுக்கு முதல்வர் நினைப்பு...சீமானை விஜயலட்சிமியுடன் நக்கலடித்தவர்கள். கூத்தாடி இந்த பரட்டையின் அந்தக்கால காம லீலைகளை யாருக்காவது தெரியுமா? இனி வரும் காலங்களில் எழுத்துருவில் வாசித்து மகிழலாம்.
தமிழ்நாட்டு மக்கள் உண்ணும் உணவை விட கேளிக்கைக்கும் பகட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஆகவே பச்சைத்தமிழன் பரட்டைதான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர்.🤣

main-qimg-abb6ee5ab58887c178a6de776e3edb

நிறைய வரணும் ..மெதுவா பயில்வான் ரங்கநாதன் ஆரம்பித்து போட்டார்.. 👍 படிக்க ஆர்வமாக உள்ளோம் தோழர்..👌

 

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

சங்கிகள் பல ரூபத்தில் வருவார்கள்..
அதில் ரஜினி எனும் Troy குதிரையும் உண்டு..
 
129331406_203209461376272_766478247068845145_n.jpg?_nc_cat=109&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=sgN8AG1KElcAX8VIYja&_nc_ht=scontent-frt3-1.xx&oh=32a27332abc865ac4ca8e94341154876&oe=5FEFFF91
ஒருபக்கம் முன்னாள் பாஜக. மறுபக்கம் முன்னாள் காங்கிரஸ்காரர்.
உண்மையான நடுநிலை மய்யம் தலைவர்தான்💥💥🤘.

Image may contain: 1 person, text that says 'ines Media .in என்னங்க அநியாயமா இருக்கு.. வாடகையெல்லாம் கேட்கிறாங்க.. சிஸ்டம் சரியில்ல.. போருக்கு தயாராகுங்க.. போர்.. போர்.. The Ashram School'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 

அரசியல்வாதியாக இனி என்ன செய்யப்போகிறார் ரஜினி?

spacer.png

 

அ.குமரேசன்

ஒருவழியாக தனது நேரடி அரசியல் நுழைவை அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த். புத்தாண்டு ஜனவரியில் கட்சி தொடங்கப்படும், இந்த ஆண்டு இறுதியில் அது பற்றி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துவிட்டார். இதன் மூலம் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வந்த “வருவார் - வரமாட்டார்” என்ற லாவணிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். “உரிய நேரத்தில் முடிவெடுப்பேன்” என்று மட்டும் சொல்லி, எந்த நேரத்தில் கேட்டாலும் இதைத்தான் சொல்லப்போகிறார், ஒரு பரபரப்பை மட்டுமே தக்க வைக்க முயல்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் தொடர்ந்த நிலையில், இப்படித்தான் இனிமேலும் சொல்லிக் கொண்டிருப்பார் என்று கிட்டத்தட்ட மக்கள் ஒரு சலிப்புக்கு வந்திருந்த கட்டத்தில், இதுதான் உரிய நேரம் என்று இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். ஆக, அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று, காலக் கழிப்புக்கும் பரபரப்புக்கும் பயன்பட்டுவந்த ஜோதிட விவாதங்களை முடித்துக்கொண்டு, இனிமேல் ஒரு அரசியல்வாதியாக என்ன செய்கிறார் என்ற அடிப்படையில் விவாதிக்கலாம். அந்தக் கோணத்தில் மட்டும் ரஜினியின் இந்த அறிவிப்பை இப்போது வரவேற்கலாம்.

அவருடைய அறிவிப்பில் பாராட்டத்தக்க ஒரு கருத்து இருக்கிறது. “சாதிமதச் சார்பற்ற” அரசியல் என்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால் அது பொதுவானது. எந்த ஒரு கட்சியுமே தன்னை சாதிச் சார்புள்ளதாக, மதச் சார்புள்ளதாக அப்பட்டமாக அறிவித்துக் கொண்டதில்லை. ஆனால் சாதிய, மதவாத அரசியலைச் செய்துகொண்டிருப்பார்கள்.

ரஜினியும் தனது அறிவிப்பில், “சாதி மதச் சார்பற்ற” என்பதோடு “ஆன்மீக அரசியல் உருவாகும்” என்று சேர்த்தே சொல்லியிருக்கிறார். ஆன்மீகம் என்பதற்கு பல விதமான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன என்றாலும், ஏதோ ஒரு வகையில் அது மதவாதத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. ரஜினி தனது ஆன்மீக அரசியலைக் குறிப்பாகத் தமிழகத்தில் பெரியாரியத்தை மறுக்கிற ஒரு சித்தாந்தமாகவே முன்வைத்து வந்திருக்கிறார். பெரியார் என்றால் கடவுளை மறுத்தவர் என்ற பழைய சித்திரத்தையே தூசு துடைத்துப் பளபளப்பாக்குகிற வேலையைச் செய்துவந்திருக்கிறார். ‘துக்ளக்’ சோ எவ்வளவு துணிச்சலானவர் என்று புகழ வந்தவர், பெரியார் நடத்திய மூடநம்பிக்கை எதிர்ப்புப் பேரணி பற்றிய ஒரு தவறான தகவலைச் சொன்னார். அதற்கு ஆதாரமில்லை என்று நிறுவப்பட்ட பிறகும் தனது கருத்தை விலக்கிக் கொள்ளவில்லை.

கடவுளை மற, மனிதனை நினை

பெரியாரை எதிர்ப்பது என்பது பெரியார் என்ற தனிப்பட்ட ஒரு மனிதரை எதிர்ப்பது அல்ல. அவர் வளர்த்தெடுத்த பகுத்தறிவு, சமூகநீதி, சாதிப் பாகுபாட்டு எதிர்ப்பு, பெண்ணுரிமை உள்ளிட்ட முற்போக்கான சிந்தனைகளை எதிர்ப்பதே அது. சொல்லப்போனால், “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்” என்று வள்ளுவனைச் சொல்ல வைத்தது முதல், “கடவுளை மற, மனிதனை நினை” என்று பெரியாரைச் சொல்ல வைத்தது வரையில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டிலேயே பகுத்தறிவும் மதச்சார்பின்மையும் கலந்து பிணைந்து வந்திருக்க்கின்றன. “அரியும் சிவனும ஒண்ணு இதை அரியாதவன் வாயிலே மண்ணு” என்றவர்கள் நம் எளிய மக்கள். கல்விக்கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் மற்ற நிறுவனங்களிலும் முன்பு குறிப்பிட்ட பிரிவினரே ஆதிக்கம் செலுத்திய நிலைமை மாறி, இன்று பல பிரிவு முகங்களைப் பார்கக முடிகிறது என்றால், சமூகநீதியை நிலைநாட்டுவதை நோக்கிய அந்தப் பயணத்தில் பெரியாரியப் பாதையை பைபாஸ் செய்துவிட முடியாது.

ஆன்மீக அரசியல், ரஜினி தெளிவுபடுத்த வேண்டும்

தனது இறை நம்பிக்கையைச் சார்ந்துதான் அவ்வாறு யோசித்து சொன்னாரா? அல்லது இப்படி பெரியாரிய எதிர்ப்பின் மூலம் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளவும், பெரியாரியம் என்றால் என்னவென்றே அறியாத மக்களைத் திரட்டி அரசியல் செய்யவும் திட்டமிட்டாரா? தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லிவந்தவர், சமத்துவத்துக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் சமூகநீதிக்காகவும் வெற்றிடமின்றி நிறைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிற இயக்கங்களைச் சிறுமைப்படுத்தி, எஞ்சிய இடத்தில் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளலாம் என்று ஒரு வியூகத்தை வகுத்துக்கொண்டதாகவே தெரிகிறது. அவர் கூறும் ஆன்மீக அரசியலில், மக்களின் மத உணர்வு கிளறிவிடப்படுவதற்கு அங்கீகாரம் உண்டா இல்லையா என்பதை அவர்தான் சந்தேகங்களுக்கு இடமில்லாமல் தெளிவுபடுத்த வேண்டும்.

தன் முடிவை அறிவித்து செய்தியாளர்களிடம் பேசியவர், தான் ஒரு சிறு கருவிதான் என்றார். மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொன்னாலும், யாருடைய கருவி என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. தனது நெருங்கிய அரசியல் ஆலோசகர்களாக யாருடன் பேசுகிறார், யார் யார் அவருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற செய்திகளின் தொடர்ச்சியாக இந்தக் கேள்வி எழுகிறது.

spacer.png

 

முத்தாய்ப்பாக, தொடங்கப்போகும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமித்து அறிவித்தாரோ அவர் அந்த நிமிடம் வரையில் பாஜகவில் இருந்தவர். வெறும் உறுப்பினராக அல்ல, அந்தக் கட்சியின் அறிவுத் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராகவே இருந்தவர். அவர் அந்தக் கட்சியில் இப்படி ஒரு பொறுப்பில் இருந்தார் என்பது ரஜினிக்குத் தெரியாதா, அல்லது அறிவிக்கும் வரையில் அங்கே இருக்கட்டும் என்ற ஏற்பாடா? தனது ரசிகர் மன்றத்தினர் எந்தக் கட்சியையும் ஆதரிக்கலாம் என்று ரஜினி முன்பு சொல்லியிருந்ததன் பொருள் இதுதானோ? ரஜினியின் நியமன அறிவிப்பைத் தொடர்ந்து அவர் அந்தக் கட்சியிலிருந்து விலகியதாகவும், விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாகவும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருப்பதாகவும், அவருடன் கட்சியினர் தொடர்பு கொள்ளக்கூடாது என்று ஆணையிடப்பட்டுள்ளதாகவும் அடுத்தடுத்து செய்திகள் வந்தன.

ஒரு புதிய கட்சி இந்த வழியில்தான் போகும் என்று அது புறப்படுவதற்கு முன்பே முடிவு கட்டிவிட முடியாதுதான். அப்படி முன்கூட்டியே முடிவு செய்து அந்த வழியிலேயே போகட்டும் என்று தள்ளிவிடவும் கூடாதுதான். அரசியல் நிகழ்வுகளில், சமூக நிலைமைகளில், ஒட்டுமொத்தத்தில் மக்களின் பிரச்சினைகளில் என்ன நிலைப்பாடு எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும். மக்களின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாகக்கூடிய சரியான முடிவுகளை ரஜினி கட்சி எடுக்குமானால் உவந்து வரவேற்கலாம், ஊறுவிளைக்கிற பாதகமான முடிவுகளை எடுக்குமானால் கடுமையாக எதிர்க்கலாம்.

ஆனால், பல பிரச்சினைகளில் அவர் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்பதைப் பரிசீலிக்காமலும் இருக்க முடியாது. பொதுவாக அரசுக்கு ஆதரவான, குறிப்பாக மத்திய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே இதுவரையில் எடுத்து வந்திருக்கிறார். இதுவரையில் என்ன பார்வை இருந்தாலும், இனிமேலும் இதே அணுகுமுறைதான் தொடரும் என்றால் அது இவர் கூறியுள்ள சாதிமதச் சார்பற்ற அரசியல் என்ற நோக்கத்திற்கு உண்மையானதாக இருக்குமா? அவர்தான் யோசிக்க வேண்டும்.

அனைத்து வயதுப் பிரிவுகளிலும் கணிசமான எண்ணிக்கையினரின் அன்பையும், பெரியதொரு ரசிகர் கூட்டத்தையும் பெற்ற ஒரு பெரிய நட்சத்திர நடிகர் நேற்று வரையில் சொல்லிவந்த கருத்துகள், மக்கள் நலன்களுக்கு எதிராகவே இருந்தன என்பதைப் போனது போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் இன்றிலிருந்து என்ன சொல்லப்போகிறார் என்பதை அப்படி விட்டுவிட முடியாது.

அரசியல் மாற்றம் நிகழும் என்று கூறியிருக்கிறார். அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் இவரைப் போன்றவர்கள் நுழைவது மட்டுமே அரசியல் மாற்றம் அல்ல. ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே அரசியல் மாற்றம் அல்ல. தொகுதிக் குழுக்களை அமைத்துக் கணக்கெடுப்பது மட்டுமே அரசியல் மாற்றம் அல்ல. மக்களை பாதிக்கக்கூடிய ஒவ்வொரு பிரச்சினையிலும் அக்கறையோடு தலையிடுவது, தீர்வுகளுக்காகக் களமிறங்குவது இவையெல்லாமே அரசியல் மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிற ஈடுபாடுகள்தான்.

ஆனால் ரஜினியோ ஆட்சியோடு மட்டுமே அரசியலை சம்பந்தப்படுத்துகிறார். வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி, தோல்வியடைந்தால் அது மக்களின் தேல்வி என்கிறார். தன்னுடைய வெற்றியையும் தோல்வியையும் மக்களுடையதாகச் சொல்வது தனது கொள்கைகளின் மீதான நம்பிக்கையிலிருந்தா, மக்களுக்காகவே தன்னை ஒப்படைத்துக்கொள்வதிலிருந்தா? தொடங்கவுள்ள கட்சிக்குப் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை, ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றால் அதன்பிறகு என்ன செய்வார்? மக்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று அரசியலைத் துறந்துவிடுவாரா? ஆன்மீகத்தில் துறவறமும் இருக்கிறதே!

எப்போதுமே அரசியல் மாற்றங்கள்

இப்போது விட்டால் எப்போதுமே இல்லை என்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் ரஜினி சார், நீங்கள் விட்டாலும் விடாவிட்டாலும் எப்போதுமே அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன மாற்றங்கள், எப்படிப்பட்ட மாற்றங்கள், எதற்கான மாற்றங்கள் என்று கவனிப்பதே முக்கியம். இருக்கிற நிலையிலிருந்து ஓரடியேனும் முன்னேறிச் செல்வதும் மாற்றம்தான், பின்னால் போவதும் மாற்றம்தான். நம்பிக்கை உரிமை, நம்பாமல் இருப்பதற்கான உரிமை, பண்பாட்டு உரிமை, உழைப்பதற்கான உரிமை, சம வாய்ப்புகளுக்கான உரிமை, கருத்து வெளிப்பாட்டு உரிமை ஆகிய அடிப்படை உரிமைகள் மேலும் மேலும் வலுப்படுத்தப்படுவது தேவையான .மாற்றம். இவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டிய மாற்றம். இந்த இரண்டு வகை மாற்றங்களுக்கான அணிகளில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்கப்போகிறீர்கள்?

அதை எல்லோரும் மதிப்பிடத் தோதாக, முதலில் கட்சியை அமைத்து அதில் உட்கட்சி ஜனநாயகத்துடன் விவாதித்து, அடிப்படைச் சித்தாந்தம், அடைவதற்கான லட்சியங்கள், கடைப்பிடிப்பதற்கான கொள்கைகள் ஆகியவற்றை வரையறுத்து எழுத்துப்பூர்வ ஆவணமாக வெளியிடுங்கள். அது ஜனநாயக உரிமைகளையும், தேசத்து அரசின் மதச்சார்பற்ற மாண்புகளையும், ஆதாரமான அரசமைப்பு சாசன விழுமியங்களையும், சமூக நீதியையும், பாலின சமத்துவத்தையும், பொருளாதார நியாயங்களையும் வேரூன்றச் செய்வதாக இருக்குமானால் மக்கள் சக்தி நீரூற்றி ஆதரிக்கும். வேரில் அமிலத்தை ஊட்டுவதாக இருக்குமானால் மக்கள் சக்தி தடுத்து நிறுத்தும்.

spacer.png

அவரைப் பற்றித் தெரியாதா, இப்போதே கடுமையாக விமர்சிக்க வேண்டாமா என அக்கறையோடு கேட்கும் அன்பான குரல்கள் காதில் விழுகின்றன. ஏற்கெனவே தெளிவான அரசியல் நிலைப்பாடுகளில் நிற்கிற, கருத்துகளில் உடன்பாடு கொண்டிருக்கிற அன்பர்களிடமிருந்து சரியாகச் சொன்னதாகக் கைதட்டல் பெறுவதைக் காட்டிலும், அவர் மீது ஏதோ நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருக்கிற மக்களிடம் (அவர்கள் எவ்வளவு எண்ணிக்கையில் இருந்தாலும்) உரையாடுவது முக்கியம். அவரால் அரசியல் களத்தில் சீர்குலைவுகள் ஏற்பட்டுவிடும் என்ற கவலையும் தேவையில்லை, எதுவும் செய்துவிட முடியாது என்று கண்ணை மூடிக் கொள்ளவும் தேவையில்லை.

 

https://minnambalam.com/politics/2020/12/04/22/What-is-Rajini-going-to-do-now-as-a-politician%3F

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

"லேற்றா வந்தாலும்.. லேற்றஸ்ராக"  வருவேன்.. என்று, ரசனி  சொல்லியபடி..   
வந்த விசுகருக்கும், வயசு 60 க்கு மேல். :grin:

 

காலையில் என்னதொரு அபசகுனமான  கருத்து🤣

60 எல்லாம் எனக்கு  வெகுதூரம்  ராசாக்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

காலையில் என்னதொரு அபசகுனமான  கருத்து🤣

60 எல்லாம் எனக்கு  வெகுதூரம்  ராசாக்கள்🤣

அதானே. 70 தான் அருகில் அப்படிதானே அண்ணா😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு?

ரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு?

 

ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமராஜர் காலத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சியே நடந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகளின் வலுவான சூழ்நிலை தேசிய கட்சிகளை தமிழ்நாட்டு பக்கமே வரவிடாமல் மாற்றி இருக்கிறது.

 
காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் தி.மு.க., அ.தி.மு.க.வை அசைத்து பார்க்க இயலவில்லை. இந்த சூழ்நிலையில்தான் தற்போது ரஜினிகாந்த் அடுத்த மாதம் புதிய கட்சியை தொடங்க போவதாக அறிவித்து இருக்கிறார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும் நீடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரஜினியின் புதிய கட்சி கூட்டணிகளை உடைத்து சிதற வைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கூட்டணி மட்டுமின்றி தமிழகத்தின் அரசியல் அடித்தளமே ரஜினியின் வருகையால் மாறக்கூடும் என்று பல பெரிய கட்சிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. ரஜினி கணிசமான வாக்குகளை பிரிக்க வாய்ப்பு இருப்பதால் அது எந்த பெரிய கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போதைய அரசியல் வல்லுனர்களின் பரபரப்பு விவாதமாக மாறி உள்ளது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை ரஜினியை பா.ஜனதா மூலம் வளைத்து பிடிக்க மறைமுக முயற்சிகள் நடக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் ரஜினி பிடி கொடுப்பாரா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வரும் அ.தி.மு.க. ரஜினியை எப்படி எதிர்கொள்ளும் என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்து 2006-ம் ஆண்டு தேர்தலின்போது தனித்து போட்டியிட்டதால் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். அவர் பிரித்த 8.5 சதவீத வாக்குகள் சுமார் 100 தொகுதிகளின் வெற்றி, தோல்வியை மாற்றி அமைத்தது.

அதே சூழ்நிலையை ரஜினியும் ஏற்படுத்தினால் நிச்சயமாக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி, தோல்வி மாறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த வெற்றி, தோல்வி அ.தி.மு.க.வை பாதிக்குமா, தி.மு.க.வை பாதிக்குமா என்பதில்தான் மாறுப்பட்ட கருத்துக்கள் உள்ளன.

தி.மு.க.வை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை அந்த கட்சியின் அனைத்து தலைவர்களும் 100 சதவீத வெற்றி கிடைக்கும் என்று முழு மனதுடன் நம்பி கொண்டிருந்தனர். ரஜினியின் அறிவிப்புக்கு பிறகு அதில் சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் குறைகளை மக்கள் மத்தியில் சொல்லி எளிதாக ஆட்சியை பிடித்து விடலாம் என்று தி.மு.க. தலைவர்கள் நம்பி கொண்டிருந்தனர். தற்போது அதுமட்டுமே போதாது. கூடுதலாக பாடுபட வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது.

அடுத்து ரஜினி தனித்து போட்டியிடுவாரா? அல்லது கூட்டணி அமைப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக எழுந்துள்ளது.

அவர் தனித்து போட்டியிட்டால் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதில் கேள்விக்குறி உள்ளது. அவர் நடத்திய ரகசிய சர்வேயில் அதற்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்று கூறப்படுகிறது. எனவே ரஜினி கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அவரது கூட்டணியில் கமல்ஹாசன் கட்சியும் இணைந்தால் அவர்கள் இருவரும் சேர்ந்து சுமார் 20 சதவீத வாக்குகளை நிச்சயமாக பிரித்து விடுவார்கள். இது தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளையுமே நேரடியாக பாதிக்கும்.

அப்படி இல்லாமல் ரஜினியை முன்னிறுத்தி பா.ஜனதா புதிய கூட்டணியை உருவாக்கினால் சில சிறிய கட்சிகள் அதில் சேர வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டணியும் சுமார் 10 முதல் 12 சதவீத வாக்குகளை பிரிக்க கூடும். எனவே ரஜினி அரசியலில் எந்த ரூபத்தில் வந்தாலும் ஏதோ ஒரு கட்சிக்கு பாதிப்பு இருக்க போவது நிச்சயம் என்பது உறுதியாகிவிட்டது.

ரஜினியின் புதிய கட்சி மற்றும் கூட்டணி ஆகியவை மட்டுமின்றி ஒவ்வொரு தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர் பலம், பலவீனத்தை பொறுத்தும் வெற்றி, தோல்வி அமையும். தேர்தல் பிரசாரமும் முக்கிய பங்கு வகிக்கும்.

எனவே ரஜினியின் அதிரடியால் ஆட்டம் காணப்போவது எந்த கட்சி என்பது பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தெள்ளத்தெளிவாக தெரிந்து விடும்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/04133729/2126240/Tamil-News-who-affected-Rajinikanth-political-party.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

ரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு?

ரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு?

 

ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமராஜர் காலத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சியே நடந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகளின் வலுவான சூழ்நிலை தேசிய கட்சிகளை தமிழ்நாட்டு பக்கமே வரவிடாமல் மாற்றி இருக்கிறது.

 
காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் தி.மு.க., அ.தி.மு.க.வை அசைத்து பார்க்க இயலவில்லை. இந்த சூழ்நிலையில்தான் தற்போது ரஜினிகாந்த் அடுத்த மாதம் புதிய கட்சியை தொடங்க போவதாக அறிவித்து இருக்கிறார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும் நீடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரஜினியின் புதிய கட்சி கூட்டணிகளை உடைத்து சிதற வைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கூட்டணி மட்டுமின்றி தமிழகத்தின் அரசியல் அடித்தளமே ரஜினியின் வருகையால் மாறக்கூடும் என்று பல பெரிய கட்சிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. ரஜினி கணிசமான வாக்குகளை பிரிக்க வாய்ப்பு இருப்பதால் அது எந்த பெரிய கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போதைய அரசியல் வல்லுனர்களின் பரபரப்பு விவாதமாக மாறி உள்ளது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை ரஜினியை பா.ஜனதா மூலம் வளைத்து பிடிக்க மறைமுக முயற்சிகள் நடக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் ரஜினி பிடி கொடுப்பாரா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வரும் அ.தி.மு.க. ரஜினியை எப்படி எதிர்கொள்ளும் என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்து 2006-ம் ஆண்டு தேர்தலின்போது தனித்து போட்டியிட்டதால் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். அவர் பிரித்த 8.5 சதவீத வாக்குகள் சுமார் 100 தொகுதிகளின் வெற்றி, தோல்வியை மாற்றி அமைத்தது.

அதே சூழ்நிலையை ரஜினியும் ஏற்படுத்தினால் நிச்சயமாக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி, தோல்வி மாறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த வெற்றி, தோல்வி அ.தி.மு.க.வை பாதிக்குமா, தி.மு.க.வை பாதிக்குமா என்பதில்தான் மாறுப்பட்ட கருத்துக்கள் உள்ளன.

தி.மு.க.வை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை அந்த கட்சியின் அனைத்து தலைவர்களும் 100 சதவீத வெற்றி கிடைக்கும் என்று முழு மனதுடன் நம்பி கொண்டிருந்தனர். ரஜினியின் அறிவிப்புக்கு பிறகு அதில் சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் குறைகளை மக்கள் மத்தியில் சொல்லி எளிதாக ஆட்சியை பிடித்து விடலாம் என்று தி.மு.க. தலைவர்கள் நம்பி கொண்டிருந்தனர். தற்போது அதுமட்டுமே போதாது. கூடுதலாக பாடுபட வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது.

அடுத்து ரஜினி தனித்து போட்டியிடுவாரா? அல்லது கூட்டணி அமைப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக எழுந்துள்ளது.

அவர் தனித்து போட்டியிட்டால் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதில் கேள்விக்குறி உள்ளது. அவர் நடத்திய ரகசிய சர்வேயில் அதற்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்று கூறப்படுகிறது. எனவே ரஜினி கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அவரது கூட்டணியில் கமல்ஹாசன் கட்சியும் இணைந்தால் அவர்கள் இருவரும் சேர்ந்து சுமார் 20 சதவீத வாக்குகளை நிச்சயமாக பிரித்து விடுவார்கள். இது தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளையுமே நேரடியாக பாதிக்கும்.

அப்படி இல்லாமல் ரஜினியை முன்னிறுத்தி பா.ஜனதா புதிய கூட்டணியை உருவாக்கினால் சில சிறிய கட்சிகள் அதில் சேர வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டணியும் சுமார் 10 முதல் 12 சதவீத வாக்குகளை பிரிக்க கூடும். எனவே ரஜினி அரசியலில் எந்த ரூபத்தில் வந்தாலும் ஏதோ ஒரு கட்சிக்கு பாதிப்பு இருக்க போவது நிச்சயம் என்பது உறுதியாகிவிட்டது.

ரஜினியின் புதிய கட்சி மற்றும் கூட்டணி ஆகியவை மட்டுமின்றி ஒவ்வொரு தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர் பலம், பலவீனத்தை பொறுத்தும் வெற்றி, தோல்வி அமையும். தேர்தல் பிரசாரமும் முக்கிய பங்கு வகிக்கும்.

எனவே ரஜினியின் அதிரடியால் ஆட்டம் காணப்போவது எந்த கட்சி என்பது பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தெள்ளத்தெளிவாக தெரிந்து விடும்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/04133729/2126240/Tamil-News-who-affected-Rajinikanth-political-party.vpf

 

எல்லாரையும் விட அதிக பாதிப்பு ரஜனிக்குத்தானாமே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

எல்லாரையும் விட அதிக பாதிப்பு ரஜனிக்குத்தானாமே🤣

இருக்கிற மரியாதையும் இல்லாமல் போகப்போகின்றது😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'ரஜினி வருகை...மாறும் தமிழக அரசியல் சூழல்'- அலசும் விமர்சகர்கள்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், ஜனவரி மாதத்தில் புதிய கட்சியைத் தொடங்குவதால், தமிழக அரசியல் சூழலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அரசியல் விமர்சகர்கள் அலசுகின்றனர்.

''ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும்'' என்று அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த். அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்துவரும் தமிழகத்தில், ரஜினிகாந்தின் புதிய கட்சி அறிவிப்பு வருகிற 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறவைக்கிறது.

ரஜினிகாந்த்
 
ரஜினிகாந்த்

இதுகுறித்து, அரசியல் விமர்சகர் கோலாகல ஶ்ரீனிவாசனிடம் பேசியபோது, ``இந்தத் தேர்தல் மட்டுமல்ல... கடந்த 50 ஆண்டுகால அரசியலின் போக்கையே மாற்றியமைத்துவிடும் ரஜினியின் வருகை. 2021 சட்டமன்றத் தேர்தலில், ரஜினி ஆரம்பிக்கக்கூடிய கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் அமையும்.

1972-ல் எம்.ஜி.ஆர் புதிதாக கட்சி ஆரம்பித்தபோது, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதே பிரச்னை இப்போது ரஜினி ரசிகர்களுக்கும் ஏற்படும். அதாவது, தற்போது மற்ற கட்சிகளில் இருந்துவரக்கூடிய ரஜினி ரசிகர்கள், 'இனி, தான் சார்ந்துள்ள கட்சிகளுக்கு விசுவாசமாக இருப்பதா அல்லது தன் தலைவருக்கு விசுவாசமாக இருப்பதா’ என்று.

 

72-ல் 'கட்சியா, எம்.ஜி.ஆரா...' என்ற கேள்வி எழுந்தபோது தி.மு.க-வில் இருந்துவந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவரும், 'எம்.ஜி.ஆர்-தான் முக்கியம்' என்று சொல்லி, அ.தி.மு.க-வுக்கு வந்துவிட்டார்கள். எனவே, தற்போது மற்ற கட்சிகளில் இருந்துவரக்கூடிய ரஜினி ரசிகர்களின் தேர்வும்கூட, ரஜினி பக்கமாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு. எனவே, ஆங்காங்கே பரவிக்கிடக்கும் ரஜினிக்கான வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் வாய்ப்பு ஏற்படும். இது முதல் மாற்றம்.

அடுத்து, பொதுமக்கள் மத்தியில், தி.மு.க-வைப் பிடிக்காதவர்கள் அ.தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வைப் பிடிக்காதவர்கள் தி.மு.க-வுக்கும் வாக்களிப்பது என்ற நிலைதான் நீண்டகாலமாக இங்கே இருந்துவருகிறது. இனி, இந்த நிலை மாறி கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் என 3 முக்கியக் கட்சிகள் இருந்துவருவதைப்போல, தமிழ்நாட்டின் அரசியல் களமும் மும்முனைகளாக மாறும். கடந்த காலங்களில் தேர்தல் சமயத்தில், மூன்றாவது அணி, ஐந்து முனை போட்டிகளெல்லாம்கூட தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. நான் அதைச் சொல்லவில்லை. 3-வது பெரிய அரசியல் சக்தியாக ரஜினிகாந்த் இருப்பார் என்று சொல்ல வருகிறேன்.

மு.க.ஸ்டாலின்
 
மு.க.ஸ்டாலின்

கடந்த 10 ஆண்டுகாலமாக அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்துவரக்கூடிய சூழலில், ஆளும்கட்சி மீதான வெறுப்பு வாக்குகள் இயல்பாகவே தி.மு.க-வுக்குத்தான் போகும். ஆனால், தற்போது அந்த வாக்குகள் ரஜினிகாந்த் பக்கம் திரும்பவே அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல், தி.மு.க-வைப் பிடிக்காமல் அ.தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வைப் பிடிக்காமல் தி.மு.க-வுக்கும் வாக்களித்துக்கொண்டிருந்த பொதுமக்களின் வாக்குகளும் ரஜினிக்குக் கிடைக்கலாம். அதாவது, தமிழக அரசியல் தளத்தில், ரஜினியின் அரசியல் வருகையால் நடைபெறும் இரண்டாவது மாற்றம் இது.

அடுத்து 3-வது மாற்றமாக தி.மு.க, அ.தி.மு.க என்ற இருபெரும் கட்சிகளின் கூட்டணியிடையேயும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது இந்த 2 கட்சிகளின் கூட்டணியிலும் அதிருப்தி மனநிலையோடு தொடர்ந்துவரக்கூடிய கட்சிகளுக்கு ரஜினிகாந்த் கட்சி மிகப்பெரிய மாற்றாக அமையக்கூடும். உதாரணமாக, அ.தி.மு.க கூட்டணியில் தற்போது இருந்துவரக்கூடிய பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க போன்ற கட்சிகளும்கூட ரஜினி பக்கமாக நகரலாம்.

 

ம.நீ.ம-வைப் பொறுத்தவரை,`கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்' என்று அறிவித்துவிட்டனர். எனவே, அவர்கள் ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணிக்குள் வரமுடியாது.

ஆக, ரஜினியின் அரசியல் வருகையால், அவரது ரசிகர்கள், பொதுமக்கள், கூட்டணிக் கட்சிகள் என 3 தளங்களிலும் மாற்றங்கள் நிகழும். இறுதியாக தேர்தலில், ரஜினிகாந்த் மட்டுமே 15%-க்குக் குறையாத எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுவார். கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளோடு சேர்த்து மொத்தம் 28% என்ற அளவுக்குப் போனால், மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். அதாவது, தமிழக சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், 15%-க்கும் அதிகமான வாக்குகள் பிரிந்துவிட்டாலே, தி.மு.க., அ.தி.மு.க என 2 கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காது.

ரஜினிகாந்த்
 
ரஜினிகாந்த்

நாடாளுமன்றத் தேர்தலில், மிகப்பெரிய எண்ணிக்கையில் வாக்குகள் பிரிந்தாலும்கூட, அதனால் ஏற்படுகிற தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால், சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகள் பிரிந்தாலும்கூட அதனுடைய தாக்கம் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும்.

உதாரணமாக கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு, 19.5% வாக்குகளைப் பெற்றது. ஆனாலும்கூட களத்தில் அது பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை எளிதாகக் கைப்பற்றி வெற்றி கண்டது அ.தி.மு.க.

அதேசமயம், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, 6 கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டு வெறும் 6% வாக்குகளை மட்டுமே பிரித்தனர். இதனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வரமுடியாமல் போய்விட்டது. இப்போது மட்டுமல்ல.... கடந்த 2005-ம் ஆண்டு விஜயகாந்த் புதிதாக கட்சி ஆரம்பித்து, 2006-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 8.45 சதவிகித வாக்குகளைப் பிரித்தார்.

கமல்ஹாசன் - விஜயகாந்த்
 
கமல்ஹாசன் - விஜயகாந்த்

இதன் விளைவு... சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில், பெரும்பான்மை இல்லாமலேயே ஒரு கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வர நேரிட்டது. அதாவது, வெறும் 96 தொகுதிகளில் மட்டுமே வென்ற தி.மு.க, கூட்டணிக் கட்சிகள் தயவில் மைனாரிட்டி அரசுதான் அமைத்தது. ஆக, விஜயகாந்த், தனது சக்திக்கு 8.45% வாக்குகளைப் பிரித்ததே இவ்வளவு சேதாரத்தை ஏற்படுத்தினால், ரஜினிகாந்த் எவ்வளவு வாக்குகளைப் பிரிப்பார், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

எனவே, 'தனித்து ஆட்சி அமைப்போம்' என்ற கனவே 2 திராவிடக் கட்சிகளுக்கும் சிதறிப்போகும்... குறிப்பாக தி.மு.க-வின் கனவு சிதறும். இதன் தொடர்ச்சியாக, இந்த 2 கட்சிகளுடனும் கூட்டணியில் இருந்துவரக்கூடிய சிறிய கட்சிகளின் கைகள் ஓங்கும். இந்தச் சூழ்நிலையில், தனது கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைக்கின்ற கட்டாயம் தி.மு.க-வுக்கு ஏற்படும்'' என்கிறார் அவர்.

கோலாகல ஶ்ரீனிவாஸ் - கணபதி
 
கோலாகல ஶ்ரீனிவாஸ் - கணபதி

அரசியல் விமர்சகர் கணபதி, இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``ரஜினிகாந்த் கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறார். அதாவது, 80-களில், 'அரசியல் ஒரு குப்பை; அதில் நான் வரவேமாட்டேன்' என்றார். அதற்கடுத்து, 'எப்போ வருவேன், எப்படி வருவேன் என்றெல்லாம் தெரியாது' என சொல்லிக்கொண்டு வந்தார். கடைசியாக 2017-ல், 'நான் அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்' என்றார். இதைச் சொல்லி 3 வருடங்கள் கழித்து இப்போது, '2020 டிசம்பர் 31-ம் தேதி புதிய கட்சிக்கான தேதியை அறிவிப்பேன்' என்று கூறியிருக்கிறார்.

அதாவது 'புதிய கட்சியை அறிவிப்பேன்' என்று சொல்லவில்லை. புதிய கட்சிக்கான தேதியை அறிவிப்பதாகவும் கட்சியை ஜனவரியில்தான் தொடங்குவதாகவும் கூறியிருக்கிறார். ஆக, இப்போது வரையிலுமே அவரிடம் ஒருவித தயக்கம்-இழுபறி இருப்பதைத்தான் இது காட்டுகிறது. இது முதல் கட்டம்.

அடுத்து, அவர் சொன்னடியே தனிக்கட்சி ஆரம்பித்தால், தனித்து நின்று போட்டியிடுவாரா அல்லது கூட்டணி சேர்வாரா என்ற கேள்வி எழுகிறது. 'ரஜினி கட்சி தொடங்கவேண்டும்; எங்களுடன் கூட்டணி சேரவேண்டும்' என்று அவரை தொடர்ச்சியாக அழைத்துக்கொண்டிருப்பவர்கள் அமித் ஷா, பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மட்டும்தான். ஆக, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியில் ரஜினியை சேர்ப்பார்களா அல்லது பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் ரஜினி தலைமையை ஏற்றுக்கொள்வார்களா என்பதும் நிச்சயம் இல்லை.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
 
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

ரஜினிகாந்த், கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி தனித்து தேர்தலை சந்தித்தார் என்றால், '15% வாக்குகளைத்தான் என்னால் பெறமுடியும்' என்று அவரே கடந்த மார்ச் மாத செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். ஆக, அவரது கணிப்புப்படி தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்து 3-வது இடத்தைத்தான் அவர் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

அதேசமயம், ரஜினிகாந்த் கூட்டணி சேர்ந்து போட்டியிட முடிவெடுத்தார் என்றால், நிச்சயம் அவரோடு பா.ஜ.க-தான் கூட்டணி சேரும். அப்படியொரு கூட்டணி அமைந்தால், பா.ஜ.க-வின் வலதுசாரி சிந்தனைகளுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள், திராவிடம் - தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் ரஜினிகாந்த் கூட்டணிக்கு எதிராகத்தான் திரும்புவார்கள். அது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தி.மு.க கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரையில், 'மதச்சார்பற்றக் கூட்டணி' என்ற வகையில், இடதுசாரி சிந்தனையாளர்களாக இருக்கின்றனர். எனவே, அவர்கள் ரஜினிகாந்த் பக்கம் போவதற்கான வாய்ப்புகள் என்பது மிகமிகக் குறைவு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, 'சமூக விரோதிகள்' என போராட்டக்காரர்களை ரஜினிகாந்த் சாடியபோது, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அவரை மிகக் கடுமையான விமர்சித்தன. எனவே, தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் ரஜினியின் பக்கம் போய் சேருகிற வாய்ப்புகள் மிகக் குறைவு.

அ.தி.மு.க., தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளிலேயே ஊழல் வழக்கு உள்ளிட்ட நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் கட்சிகள் வேண்டுமானால், ரஜினிகாந்த்தோடு போய் சேருகிற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது என் கணிப்பு.

ரஜினிகாந்த்
 
ரஜினிகாந்த்

அரசியல் ரீதியாக தி.மு.க கூட்டணியை உடைக்க எவ்வளவு முயற்சிகள் நடைபெற்ற போதிலும்கூட, காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் என்று கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் வெளிப்படையாகவே சலசலப்புகள் தெரிகின்றன. அண்மையில், 'பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி' குறித்து எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் வெளிப்படையாக அறிவித்த பிறகும்கூட, 'அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்' என்று அமித் ஷா அறிவிக்கவே இல்லை. ஆக, அ.தி.மு.க-வுடனான கூட்டணியை கைவிட்டுவிட்டு, ரஜினிகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, ரஜினி தலைமையிலான ஒரு கூட்டணியை பா.ஜ.க உருவாக்கினால், அது 'அ.தி.மு.க - தி.மு.க' என்ற நிலையிலிருந்து மாறி 'தி.மு.க - ரஜினி' என்ற நிலைக்கு இட்டுச்செல்லுமா என்பதெல்லாம் தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியவரும்'' என்றார் தெளிவாக.

 

 

https://www.vikatan.com/government-and-politics/politics/can-rajinis-political-entry-change-tn-political-scenario

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இருக்கிற மரியாதையும் இல்லாமல் போகப்போகின்றது😂

உடையார்!  சனத்தை ஒரு நாளும் நம்பேலாது. கவர்ச்சிக்கும் லஞ்சத்துக்கும் வாக்களிக்கிற சனம்.

தான் பச்சை தமிழன் எண்டு வேறை சொல்லீட்டார் எல்லோ...😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

main-qimg-abb6ee5ab58887c178a6de776e3edb

நிறைய வரணும் ..மெதுவா பயில்வான் ரங்கநாதன் ஆரம்பித்து போட்டார்.. 👍 படிக்க ஆர்வமாக உள்ளோம் தோழர்..👌

 

தோழர் நீங்கள் இதுக்கு ஏதாவது சொல்லணும்....? 😁

Bild

Bild

Link to comment
Share on other sites

ரஜனிக்காந் தமிழர் இல்லை, எனவே அவருக்கு வாக்களிக்காதீர்கள் என்ற வாதம் ஒரு 5 வீதமானோர் மத்தியில் தான் தமிழ் நாட்டில் எடுபடும். அதுவும் பலனூறு சாதிகளால் பிளவுண்டு இருக்கும் ஒரு சமூகத்தில் தமிழ் என்ற இன அடையாளம் ஒன்றை வைத்து ஒருவரை எதிர்க்க / ஆதரிக்க முடியாது. ரஜனி தன் வாழ்வில் பெரும் பகுதி தமிழ் நாட்டில் வாழ்ந்து உள்ளார். மனைவி வேறு தமிழ் பேசும் பார்ப்பன பெண். அத்துடன் ரஜனி தன் இரண்டு பிள்ளைகளையும் தமிழர்களுக்கு தான் கட்டி வைத்து இருக்கின்றார் என்பதால் தன்னை தமிழராக மக்கள் முன் அடையாளப்படுத்துவதில் இலகுவில் வெற்றி காண்பார்.

கட்சிக்கு என்று ஒரு கொள்கை இல்லாமல், மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்யாமல், மக்களின் பிரச்சனைகளில் அவரது தீர்வு பற்றி எதுவும் சொல்லாமல், பொருளாதாரக் கொள்கை என்ற ஒன்றே இல்லாமல், சினிமா பிம்பம் எனும் ஒரு நூலில் தொங்கும் கோவணத்தை மட்டுமே கட்டிக் கொண்டு ரஜனி நிற்கின்றார். இதனை கருத்தில் எடுத்து சரியான வலுவான எதிர்ப்புக் குரல்கள் வரும் போது அந்த கோவணத்தை புடுங்கி எறிய முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அதானே. 70 தான் அருகில் அப்படிதானே அண்ணா😀

 

இல்லை சகோ

நானே தேவையற்று வயதைக்குறிப்பிட்டதால்  கடுப்பிலிருக்கின்றேன்🤣

எனது அக்காவுக்கு அவரது 60வது  பிறந்தினத்துக்கு அவரது பிள்ளைகள் BMW - X6 பரிசளித்தார்கள்

நானும் வாயை சும்மா வைத்துக்கொண்டிருக்காமல் எனக்கும் எனது  60க்கு புதுக்கார் வரும் என்று எனது  மக்களிடம்  சொன்னேன்.

எனது  கணிப்பின்படி அப்பத்தான் இவர்களை  அந்தநிலைக்கு கொண்டு  வருவேன் என கணித்தேன்

ஆனால் இப்ப அவர்கள் ரெடி

எனக்குத்தான்  60 தூர  நிற்குது???

தேவையா  எனக்கு???🤣

இதில காலங்காத்தால சிறியர் வேற??😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

 

இல்லை சகோ

நானே தேவையற்று வயதைக்குறிப்பிட்டதால்  கடுப்பிலிருக்கின்றேன்🤣

எனது அக்காவுக்கு அவரது 60வது  பிறந்தினத்துக்கு அவரது பிள்ளைகள் BMW - X6 பரிசளித்தார்கள்

நானும் வாயை சும்மா வைத்துக்கொண்டிருக்காமல் எனக்கும் எனது  60க்கு புதுக்கார் வரும் என்று எனது  மக்களிடம்  சொன்னேன்.

எனது  கணிப்பின்படி அப்பத்தான் இவர்களை  அந்தநிலைக்கு கொண்டு  வருவேன் என கணித்தேன்

ஆனால் இப்ப அவர்கள் ரெடி

எனக்குத்தான்  60 தூர  நிற்குது???

தேவையா  எனக்கு???🤣

இதில காலங்காத்தால சிறியர் வேற??😍

கட்டாயம் 60 இல்தான் தரவேண்டும் என்றில்லை, இப்போ 55இலே 60ஐ கொண்டாடுவதுதான் பேஷன் என்று சொல்லி X6 ஐ அமுக்கி விடுங்கள் அண்ணை. அதுவும் இப்ப நல்ல நல்ல மைலேஜ் தரும் எலெக்ட்ரிக் வகையளும் வருகுது.

எனக்கு 67 இல்தான் பென்சன்🤣. எப்படா வரும் என்றிருக்கு, இன்னும் கிட்டதட்ட பாதித்தூரம் போக கிடக்கு. நீங்கள் என் போன்றவர்களை நினைத்து சந்தோசமடையுங்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரியப்பா, எல்லாம் ரசுனி மாதிரியே வயசு போனா ஆட்களா கிடக்கு..! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

கட்டாயம் 60 இல்தான் தரவேண்டும் என்றில்லை, இப்போ 55இலே 60ஐ கொண்டாடுவதுதான் பேஷன் என்று சொல்லி X6 ஐ அமுக்கி விடுங்கள் அண்ணை. அதுவும் இப்ப நல்ல நல்ல மைலேஜ் தரும் எலெக்ட்ரிக் வகையளும் வருகுது.

எனக்கு 67 இல்தான் பென்சன்🤣. எப்படா வரும் என்றிருக்கு, இன்னும் கிட்டதட்ட பாதித்தூரம் போக கிடக்கு. நீங்கள் என் போன்றவர்களை நினைத்து சந்தோசமடையுங்கள்🤣

 

அதிலும் சிக்கல் இருக்கே ராசா

பள்ளிக்கு  அனுப்பிட்டனே...???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசியவர் ரஜனி கட்சியை வழிநடத்தும் முதலாவது நபர்

ரஜினி கட்சி துவங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூனா மூர்த்தி என்பவர் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறவர் என்பது தெரிய வந்துள்ளது.

தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் அர்ஜூனா மூர்த்தி இவர் ஒரு ஐ.டி துறை தொழில் அதிபர் Yeldi Softcom Private Limited என்ற பெயரில் ஐ.டி நிறுவனம் நடத்தும் இவர் அந்நிறுவனத்தை தன் மகள் பொருப்பில் விட்டு விட்டு பாஜகவுக்கு வந்தார்.

ஆர்.எஸ். எஸ் தொடர்புகளைப் பேணும் இவர் பாஜகவில் இணைந்த உடன் இவருக்கு பாஜக அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் என்ற பதவி வழங்கப்படுகிறது. பாஜகவின் ஐ.டி பிரச்சாரங்கள், டிஜிட்டல் ஊடகப் பிரச்சாரங்களை இவர் ஒரு குழுவை வைத்து கவனித்து வருகிறார். கருப்பர் கூட்டத்திற்கு எதிரானப் போராட்டம், வேல் யாத்திரையில் பங்கேற்று கடுமையாகப் பேசியவர் இவர்.

ராமசுவாமி அர்ஜுனாமூர்த்தி என்ற இந்தப் பேர்வளி சாதாரண ஆள் கிடையாது. இவர் இந்த தொழில் நுட்ப நிறுவனத்தைத் தவிர GENIE FOODS LIMITED
ZUJUBI BAZAAR PRIVATE LIMITED
என்ற நிறுவனங்களையும் நடத்திவருகிறார்.

இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் ராமசுவாமி அர்ஜூனாமூர்த்தியின் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் முதலாவது கன்டார்க்டே இலங்கை அரசாங்கத்துடன் தான். 2016 ஆம் ஆண்டு இலங்கை அரசின் தேசிய அபிவிருத்தி (NDB) வங்கியின் பண மாற்று அட்டையைத் தயாரிப்பதற்கான முதலாவது ஒப்பந்ததில் 2 மில்லியன் அமெரிக்க டோலர் பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

spacer.png

 

திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி தனது ரிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இவர், நரேந்திர மோடியே தமிழ் நாட்டை மாற்றுவார் எனவும் பதிவிட்டார். சிவாஜி ராவ் கேக்வர்ட் என்ற தமிழை முழுமையாகப் பேசக் கூடக் கற்றுக்கொள்ளாத ரஜனிகாந் என்ற நடிகரைப் போலவே இவரும் கர்நாடகாக் காரர்.

ஒரு தேசிய இனம் பல்வேறு இனக்குழுக்களை உள்வாங்கியே முழுமையடைவது வரலாறு. தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டு தமிழர்களாகப் பரிணாமடைந்து தமிழ்த் தேசிய இனத்தின் அங்கமாகிவிட்டவர்களை அன்னியப்படுத்தும் அரசியல் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது, இந்த அரசியலை பாரதீய ஜனதாக் கட்சியில் தோற்றுவித்து அதற்கு வலுச் சேர்த்தவர் அர்ஜுனாமூர்த்தி.

spacer.png

 

வீரபாண்டியக் கட்டப்பொம்மன் பரம்பரையை முன்வைத்து சுந்தர(த்) தெலுங்குக் கூடல் என்ற நிகழ்வையும் அமைப்பையும் இவர் உருவாக்கி, பா.ஜா.க இன் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தலைமை தாங்கியவர்.
இப்போது ரஜனியைக் கையாள பா.ஜ.க – ஆர்,எஸ்.எஸ் கும்பலால் உள்நுளைக்கப்பட்டிருக்கிறார்.

இவரைத்தான் ரஜினி தான் துவங்கப் போகும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவித்துள்ளார். பொதுவாக ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சியில் இணைகிறவர்கள் அதை பகிரங்கமாக அறிவித்து முறையாக ராஜிநாமா செய்து விட்டு இன்னொரு கட்சியில் இணைவார்கள். ஆனால் ஆர்ஜூனா மூர்த்தி ரஜினி கட்சியில் இணைந்த பின்னர் இது சர்ச்சைக்குள்ளாக இப்போது பாஜக அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக கூறியிருக்கிறது. அர்ஜூனா மூர்த்தியே தான் ராஜிநாமா செய்து விட்டதாகக் கூறுகிறார். இதில் எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ரஜினியின் அரசியலுக்குப் பின்னால் பாஜக இருப்பது மட்டும் மறைக்க முடியாத அளவுக்கு தெரிகிறது. அடுத்தடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பான செய்திகள் இடம் பெறும்.

 

https://inioru.com/ramaswamy-arjunamurthy-and-shivaji-rao-gaekwad-rajini/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

காலையில் என்னதொரு அபசகுனமான  கருத்து🤣

60 எல்லாம் எனக்கு  வெகுதூரம்  ராசாக்கள்🤣

விசுகர்...  காலையில், உங்களை  "ரென்சன்" பண்ண வைத்ததற்கு காரணமே...
பாஞ்ச்  அண்ணை  தான். அவர் தான்... உங்களையும், தன்னுடன் சேர்க்கச் சொன்னவர். 😜

ஆட்களை... நேரில் சந்தித்தாலே, இப்படியான  தர்ம சங்கடங்களும்,
வரும் என்பதனை, நீங்கள் எதிர் பார்த்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். :grin:

உங்களை... நாம் இருவரும், சந்தித்த இனிமையான நிகழ்வுகள்,
இன்றும்... எம் மனத் திரையில், இனிய நிகழ்வுகளாக உள்ளது. 💖

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

விசுகர்...  காலையில், உங்களை  "ரென்சன்" பண்ண வைத்ததற்கு காரணமே...
பாஞ்ச்  அண்ணை  தான். அவர் தான்... உங்களையும், தன்னுடன் சேர்க்கச் சொன்னவர். 😜

ஆட்களை... நேரில் சந்தித்தாலே, இப்படியான  தர்ம சங்கடங்களும்,
வரும் என்பதனை, நீங்கள் எதிர் பார்த்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். :grin:

உங்களை... நாம் இருவரும், சந்தித்த இனிமையான நிகழ்வுகள்,
இன்றும்... எம் மனத் திரையில், இனிய நிகழ்வுகளாக உள்ளது. 💖

 

அந்த  நாட்களுக்காக  மீண்டும் ஏங்குகின்றேன் சகோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

அந்த  நாட்களுக்காக  மீண்டும் ஏங்குகின்றேன் சகோ

நீங்கள்... கட்டுக் கட்டாக, பெரிய அளவில்  தந்த, தமிழ்  புத்தகங்கள்,
பல  கிலோ  கணக்கில் தந்த... தாமரைக் கிழங்கு என்றும், மறக்க முடியாதவை.  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்... கட்டுக் கட்டாக, பெரிய அளவில்  தந்த, தமிழ்  புத்தகங்கள்,
பல  கிலோ  கணக்கில் தந்த... தாமரைக் கிழங்கு என்றும், மறக்க முடியாதவை.  :) 

உங்கள் சந்திப்பை பற்றி யாழில் எழுதி இருந்தீர்கள் என நியாபகம். அதைப்போல வாத்தியார் அண்ணாவையும் சந்தித்தீர்கள் என எண்ணுகிறேன்.

அதேபோல் ஜீவனின் பல சந்திப்புகள் பற்றிய கட்டுரைகளும். 

இப்படியான பயணக்கட்டுரைகளை, ஒன்று கூடல்களை பற்றி வாசிக்கும் அனுபவமே ஒரு சுகானுபவம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்கள் சந்திப்பை பற்றி யாழில் எழுதி இருந்தீர்கள் என நியாபகம். அதைப்போல வாத்தியார் அண்ணாவையும் சந்தித்தீர்கள் என எண்ணுகிறேன்.

அதேபோல் ஜீவனின் பல சந்திப்புகள் பற்றிய கட்டுரைகளும். 

இப்படியான பயணக்கட்டுரைகளை, ஒன்று கூடல்களை பற்றி வாசிக்கும் அனுபவமே ஒரு சுகானுபவம்தான். 

கோசான்... நீங்கள்,  நல்ல நினைவு  வைத்திருக்கின்றீர்கள். 
விசுகரை... சந்திக்கப் போகும் போது, 
எனது மகனும், மகளும்...  வாகன அனுமதிப் பத்திரம் எடுத்த புதிது என்பதால்...
நீண்ட தூர பயணத்திற்கு, ஒரு அனுபவமாக இருக்கட்டும் என...
அவர்களையும், கூட்டிச்  சென்றேன்.

ஆனால்... நான், பின் இருக்கையில் அமர்ந்து விட்டு,
பொறுமைசாலியான... பாஞ்ச்  அண்ணையை முன் இருக்கையில்,
அமரச் சொல்லி... விட்டு, வாகனம் வேகம் எடுக்க...
எனக்கு.. மனது... "திக், திக்" என்று இருந்தாலும்...

பாஞ்ச்  அண்ணை... அமைதியாக, இருந்து,
வாகனத்தை விட்டு, இறங்கிய பின்... 
சில அறிவுரைகளை  அவர்களுக்கு கூறியது சிறப்பு.

வாத்தியாரை... ஜேர்மன் மண்ணில், பிறந்த தமிழ் குழந்தைகளுக்கு...
தமிழ் பள்ளிக் கூடங்களை... நிறுவிய, மாமனிதர்  நாகலிங்கம் ஐயா அவர்களின்,
இறுதிச் சடங்கில் சந்தித்தேன். 
 
அந்த... இடைவெளியில், நடந்த... ஒரு இனிமையான சந்திப்பு.
நல்ல... பகிடி விடும் ஆள்.. வாத்தியார்.

வாத்தியாரை... சந்திக்கப் போகும் போது...
பாஞ்ச்  அண்ணையின் மகள் தான்.. வாகனம் ஓடியவர்.

எல்லா  நினைவுகளையும்.... மீண்டும் நினைக்கும் போது,
இனம் புரியாத... உணர்வு  ஏற்படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

என்ன கோதாரியப்பா, எல்லாம் ரசுனி மாதிரியே வயசு போனா ஆட்களா கிடக்கு..! 

அப்படியாகவா தெரியுது......😁

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் அனுபவம், அரசியல் தலைவரின் வாரிசு என்று எந்த பின்புலமுமே இன்றி தனியொருவராக கடந்த பத்து ஆண்டுகளாக அரசியல் களத்தில் சோர்வின்றி நிற்கும் ஆற்றல்தான் சீமானின் பலம்.

LB4p7Ki1?format=jpg&name=small

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.