Jump to content

லக்ஷ்மி vs குபேரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமா வெங்காயம் வாங்க பக்கத்தில் இருந்த தமிழ் கடைக்கு போயிருந்தேன்... கடையை முற்றிலுமாக நேர்த்தியாக மாற்றி அமைத்து இருந்தார்கள் ... கூடவே காசாளர் மேசையில் 2 பெரிய தங்க நிறத்திலான தொப்பை வண்டியும், மொட்டை தலையுமாய், கோணலாக சிரித்தபடி பெரிய சிலைகள்.  

 திருநீறும் குங்குமமும் , கௌரி காப்புமாய் நெளிந்த கடைக்கார அக்காவிடம் கேட்டேன், இதெல்லாம் யார் என்று. அவர் போட்டாரே ஒரு போடு ..
இவர் தான் குபேரன், இவரை வீட்டில் கொண்டு போய் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்று...
நான்  அவாவிடம்  கேட்டேன் அப்போ; இவ்ளோ நாள் நான் வைத்திருந்த லக்ஸ்மி அக்காவுக்கு என்ன கெதி என்று.

சிலையில் தெரிந்த குபேரனை போல கோணலாய் சிரித்தார். 

அவாவுக்கு சொன்னேன்... இது குபேரனும் இல்லை, குப்பனும் இல்லை.. இது சீனர்கள் வழி வந்த சிரிக்கும் புத்தர் 
இப்படி அநியாயமாய் புதுசு புதுசாய் தமிழர்களிடம் திணிக்கிறீர்களே என்று. 

அவர் கோணல் சிரிப்பு மாறாமல் Bye அண்ணா என்றார். கூடவே  குபேரனும் என்னை பார்த்து நக்கலாய் சிரித்தார். 
ஒன்று மட்டும் உறுதி வீட்டிலே உள்ள லக்ஸ்மி என்னை கவனித்துக்கொள்வார். 

5 minutes ago, Sasi_varnam said:

ம்ம்ம்... குபேரன் படத்தை இணைக்க முடியவில்லை. முடிந்தால் யாராவது இணைத்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

அவசரமா வெங்காயம் வாங்க பக்கத்தில் இருந்த தமிழ் கடைக்கு போயிருந்தேன்... கடையை முற்றிலுமாக நேர்த்தியாக மாற்றி அமைத்து இருந்தார்கள் ... கூடவே காசாளர் மேசையில் 2 பெரிய தங்க நிறத்திலான தொப்பை வண்டியும், மொட்டை தலையுமாய், கோணலாக சிரித்தபடி பெரிய சிலைகள்.

வெங்காயம் வாங்கப்போனாலும் பிலாப்பழம் மாதிரி ஒரு பெரிய விசயத்தை சொல்லியிருக்கிறியள் சசிவர்ணம். இப்ப எங்கடை சனங்கள் வீட்டிலை உந்த சிரிக்கிற சிலையை அடுக்கி வைச்சிருக்கினம்....😁

Vastu Art Store | Buy Vastu Art Products online at best prices |  Paytmmall.com

இந்த சிலையை சீனாக்காரர்தான் கூடுதலாய் வைச்சிருக்கினம்.

這個雕像是中國人添加的。😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவாவுக்கு சொன்னேன்... இது குபேரனும் இல்லை, குப்பனும் இல்லை.. இது சீனர்கள் வழி வந்த சிரிக்கும் புத்தர

கள்ளனோ காடையனோ நமக்கு பணம் வந்தால் சரி...இது தமிழன்டா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவக் கதை ......உள்ளதை சொல்லி இருக்கிறீர்கள்......!   👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.