கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,107 பதியப்பட்டது December 1, 2020 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது December 1, 2020 கிழக்கில் தொற்று 235: கொரோனா எகிறுகிறது : நிலைமை கவலைக்கிடம்! Sayanolipavan கடந்த மார்ச் மாதத்திலிருந்து 258 பேர் கிழக்கில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் கிழக்கு சுகாதாரத்திணைக்கள தகவல் மையம் தெரிவிக்கின்றது.இவர்களில் பேலியகொட கொத்தணி மூலமாக இதுவரை 235 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். மினுவாங்கொட கொத்தணி மூலமாக 04பேரும் உள்ளிட்ட ஏனைய இடங்கள் மூலமாக 23பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 88பேரும் கல்முனை பிராந்தியத்தில் 120பேரும் திருமலை மாவட்டத்தில் 16பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 11பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.அக்கரைப்பற்றில் 59 பேரும் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் 60 பேரும் இனங்காணப்பட்டிருந்தனர். அடுத்தபடியாக இறக்காமத்தில் 11பேரும் ஏறாவூரில் 10பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.அம்பாறை மகாஓயா தெஹியத்தகண்டிய மற்றும் கந்தளாய்ப்பிரிவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர் நால்வரும் மினுவாங்கொட கொத்தணிமூலம் தொற்றுக்குள்ளானவர்கள். ஏனைய 187பேரும் பேலியகொட மீன்சந்தைகொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களாவர்.கிழக்கிலுள்ள ஜந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 449கொரோனாத் தொற்றாளர்கள்; சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (30.11.2020) வரை 1214பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 760பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.5பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 14கட்டில்களே எஞ்சியுள்ளன.காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 463பேர் அனுமதிக்கப்பட்டு 314பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 146பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். மூவர் இடமாற்றப்பட்டிருந்தனர்.மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 56 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 101 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 67பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 79 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.இதுவரை கிழக்கில் சந்தேகத்திற்கிடமான 12122பேரில் 445பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. http://www.battinews.com/2020/12/- .html Quote Link to post Share on other sites
nunavilan 3,560 Posted December 1, 2020 Share Posted December 1, 2020 கிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு http://athavannews.com/wp-content/uploads/2020/12/IMG_5238-720x450.jpg கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார். பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அக்கரைப்பற்றில் இன்றுவரை 91 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் இந்த நிலையில், அக்கரைப்பற்றை ஒரு உப கொத்தணியாக உருவாக வாய்ப்பளிக்காதீர்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “திருகோணமலையில் சுகாதார பிராந்தியத்தில் 16 பேரும் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 11 பேரும் மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 88 பேரும் கல்முனை சுகாதர பிராந்தியத்தில் 120 பேர் உட்பட 235 பேருக்கு இன்று முதலாம் திகதிவரை கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது இதில் அக்கரைப்பற்று சந்தையில் தொடர்புபட்ட 91 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், அம்பாறையில் 1361 பேரும் மட்டக்களப்பில் 5287 பேரும் திருகோணமலையில் 1249 பேரும் கல்முனையில் 2776 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் 10673 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளில் இவற்றை அவதானிக்க முடிகின்றது எனவே எதிர்காலத்தில் அங்கு ஒரு கொரோனா உப கொத்தணி உருவாகாமல் இருப்பதற்கு சுகாதார துறையினர், பொலிசார், இராணுவத்தினர், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உட்பட சுகாதார அமைச்சு விடுத்துள்ள சுகாதார வழிமுறைகளை பேணுவதுடன், தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் முடங்கியிருப்பதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்” என மேலும் தெரிவித்தார். கிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு | Athavan News Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.