-
Tell a friend
-
Topics
-
0
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மை. பாகித்தானில் முசிலிம்கள் பெரும்பான்மை.... அவர்களின் சமயவாதத்தை சரி என்பீர்களா.. 🤥 தமிழர்களில் வெள்ளார்கள்தான் பெரும்பான்மை.. சாதியமைப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள ஆயத்தமா.. ☹️ இந்த நடுநிலையாளர்களால்தான் இந்த உலகுக்கே அவமானமும் பேரழிவும்.😡 யதார்த்தவாதிகளாம் தாங்கள்... 🤮
-
By உடையார் · பதியப்பட்டது
யாழ் – கொழும்பு ரயில் சேவைகள் வழமைக்கு – முன்பதிவுகளையும் மேற்கொள்ள முடியும் 5 Views நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நீண்ட தூர ரயில் சேவைகள், நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் நேற்று புறப்பட்டன. காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் உத்தரதேவி கடுகதி ரயிலும் காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 மணிக்கு புறப்படும் யாழ்.தேவி ரயில் சேவையும் நேற்று ஆரம்பமாகின. அவ்வாறே கல்கிசையில் இருந்து காலை 5.55 மணிக்கும் கொழும்பிலிருந்து 6.35 மணிக்கும் புறப்படும் யாழ்.தேவி ரயிலும் முற்பகல் 11.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி ரயிலும் நேற்று சேவையை ஆரம்பித்தன. ஏனைய ரயில் சேவைகள் எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும். கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட ரயில் மற்றும் இரவு தபால் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும். அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விவரங்களுக்கு 021- 222 2271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும். பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, ரயிலில் பயணத்தை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். https://www.ilakku.org/?p=39705 -
நீதியின் தோல்வி – சர்வதேச மன்னிப்புச்சபை 29 Views தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உட்பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீதியின் தோல்வி என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக நீதியை வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் தவறியுள்ள இன்னுமொரு கவலை தரும் மைல்கல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கு குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிப்பது குறித்தஆர்வம் எதனையும் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/?p=39697
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.