Jump to content

இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இரு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது.

இன்று மூன்றாவது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

இன்று முதன்முதலாக இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் களமிறங்கியிருக்கும் நடராஜனுக்கு பல விக்கட்டுக்களை வீழ்த்தி மேன்மேலும் புகழ் சேர வேண்டுகிறேன்.

BATSMEN   R B 4s 6s SR
TOTAL (5.4 Ov, RR: 4.58) 26/0  
S Dhawan  not out 16 26 2 0 61.53
Shubman Gill  not out 7 9 1 0 77.77
Extras (nb 1, w 2) 3  
Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

முதல் போட்டி .. துடுப்புகள் ஆரும் பிரித்து மேயாமல் இருக்க வேண்டுவம் .👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கன்னி விக்கட் நடராஜனுக்கு கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நடராஜனுக்கு.....மென்மேலும் விக்கட்டுகளை உடைக்கட்டும்.....!   🏏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அரங்கில் தனது முதல் விக்கெட்டை எடுத்த தமிழன் நடராஜன்!

Screenshot_20201202-151357-1-1.jpg?189db0&189db0

 

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் நடந்து வரும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை தாம் வீசிய ஓவரில் வீழ்த்தினார் நடராஜன்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் தங்கராசு நடராஜன் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று(2) அறிமுகமானார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய வீரர்களின் பட்டியலில் நடராஜன் பெயர் கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி20 என எந்த அணியிலும் இல்லாமல் கூடுதல் பந்து வீச்சாளராகவே அவரது பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது.

பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் நடராஜன் இன்று(2) களமிறக்கப்பட்டார்.

அவரது யோர்க்கர் பந்துவீச்சு பெரிதும் கவனம் பெற்றதுடன் பாராட்டையும் பெற்றார் நடராஜன்.

29 வயதாகும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி, தனது யோர்க்கர் திறமையால் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகினார். இதன் காரணமாக நடராஜன் இந்திய டி20 அணிக்கும் தேர்வாகியுள்ளார்.

 

https://newuthayan.com/சர்வதேச-அரங்கில்-தனது-மு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
JJ Bumrah 9.3 0 43 2 4.52 35 3 1 5 0
T Natarajan 10 1 70 2 7.00 30 7 2 4 1
SN Thakur 10 1 51 3 5.10 29 5 0 0 0
Kuldeep Yadav 10 0 57 1 5.70 26 3 1 0 0
RA Jadeja 10 0 62 1 6.20 31 3 4 0 1

நடராஜன் 10 ஓவர்கள் பந்துவீசி 70 ரண்கள் கொடுத்து 2 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நடராஜன்.

நூல் இல்லாமல் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த முதல் தமிழன் என்று நினைக்கிறேன்.

நூல் கவசம் இல்லாதபடியால் தூக்கி எறிய துடிப்பார்கள். திறமை கைகொடுக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வாழ்த்துகள் நடராஜன்.

நூல் இல்லாமல் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த முதல் தமிழன் என்று நினைக்கிறேன்.

நூல் கவசம் இல்லாதபடியால் தூக்கி எறிய துடிப்பார்கள். திறமை கைகொடுக்கட்டும்.

அற்புதமான டெத் ஓவர் பௌலர். யொக்கர்களை மிக துல்லியமாக வீசக்கூடியவர். தொடர் வாய்ப்புகள் கிடைத்தால் ஒருநாள் , டி20 போட்டிகளில் நல்ல பௌலராக வர வாய்ப்புண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வாழ்த்துகள் நடராஜன்.

நூல் இல்லாமல் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த முதல் தமிழன் என்று நினைக்கிறேன்.

நூல் கவசம் இல்லாதபடியால் தூக்கி எறிய துடிப்பார்கள். திறமை கைகொடுக்கட்டும்.

 

25 minutes ago, Eppothum Thamizhan said:

அற்புதமான டெத் ஓவர் பௌலர். யொக்கர்களை மிக துல்லியமாக வீசக்கூடியவர். தொடர் வாய்ப்புகள் கிடைத்தால் ஒருநாள் , டி20 போட்டிகளில் நல்ல பௌலராக வர வாய்ப்புண்டு!

ஏற்கனவே வயது 29.
இன்னும் சிறிது காலமே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பராபரன் said:

நூலின்றிப் பறக்கும் ஓர் தமிழ்க்காத்தாடி...

வாழ்த்துகள்....

சுருக்கமாகவும் நாகரீகமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

128365115_210257410667017_1166627364230139233_o.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=B7LawFE9dAkAX-nLdH-&_nc_oc=AQl-8-C4JcqCPR-4k8aOKhmpWSD1U_mVyZxPE0TQ8wS3qkoQAcxcTM8TMVWdVfRVKsg&_nc_ht=scontent-frx5-1.xx&oh=7adf0e4110a72721ac3609527fa785c8&oe=5FEC3466

Genius Wow Sticker  Well Done Applause Sticker 

நான் இந்திய அணிக்கு,  சப்போட் பண்ணுறது இல்லை. 
நடராஜனுக்காக... இன்று ஆதரவாளர் ஆகிவிட்டேன்.

 

129093866_4819111804797575_7783158657692757323_o.jpg?_nc_cat=105&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=QVJ_vznUil4AX-InL-F&_nc_ht=scontent-frx5-1.xx&oh=d1005b01a852dfcf09448560d07739ab&oe=5FEEC0C9

 

127778958_1795403483942209_1882442896275782677_o.jpg?_nc_cat=104&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=T3_-BupYrjwAX82GMmE&_nc_ht=scontent-frt3-1.xx&oh=2c313193a532d9078a590160b4c8baca&oe=5FECEEDF

 

128567264_1795291717286719_3396093540191377843_o.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=1XCGQEw-D64AX-rnOeI&_nc_ht=scontent-frx5-1.xx&oh=a505123f56a7640ef199c8e69b0c8e50&oe=5FEF8989

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

வாழ்த்துகள் நடராஜன்.

நூல் இல்லாமல் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த முதல் தமிழன் என்று நினைக்கிறேன்.

நூல் கவசம் இல்லாதபடியால் தூக்கி எறிய துடிப்பார்கள். திறமை கைகொடுக்கட்டும்.

101 % உண்மை .. 8 போட்டிகளில் மட்டும் வாய்ப்பாளித்து இவரை தூக்கிவிட்டார்கள் தோழர் ..

http://m.espncricinfo.com/india/content/player/30157.html

யூசுயூப் யோகனா என்ட பாக்கி 2000 ஆம் ஆண்டில் ஒரு போட்டியில் இவரை பிரித்து மேய அதை சாட்டி அனுப்பிவிட்டார்கள்..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து மழையில் நனையும் தமிழக வீரர் நடராஜன் : அவரது கதை அனைவருக்குமே முன் மாதிரி

வாழ்த்து மழையில் நனையும் தமிழக வீரர் நடராஜன் : அவரது  கதை அனைவருக்குமே முன் மாதிரி

 

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில்  ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற விகிதத்தில் முன்னிலை பெற்றது.


இந்த போட்டியில் தனது  பெரிய பங்களிப்பை கொடுத்து இருந்தார்  ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. 76 பந்துகளில் 92 ரன்களை குவித்தார் அவர். ஆட்ட நாயகன் விருதை பாண்ட்யா பெற்றார்.

ஆட்டநாயகன் விருதினை பெற்ற பின் பேசிய பாண்ட்யா, இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்தவர். அவரது கதை அனைவருக்குமே ஒரு முன் மாதிரி .ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது ஆட்டத்தில் வெற்றி பெற அதிக சிரத்தை எடுக்க  வேண்டி இருக்கும் என கூறினார்.

இந்த போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி உள்ளார் . தனது முதல் சர்வதேச போட்டியிலேயே முக்கியமான  இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார் நடராஜன். 

நடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடராஜன் சர்வதேச மைதானத்தில் களத்தில் பந்து வீச இறங்குவதற்கு முன்பே, ஹர்திக் பாண்ட்யா உள்பட கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவர் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தனர். 

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜனின் அருமையான ஆட்டத்திற்கும் அணிக்கான அவரது பங்களிப்புக்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில்  பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் என திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ர்.
 
 
 
 
 

https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/12/02200829/Aus-vs-ind-3rd-odi-india-finish-with-consolation-win.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நான் இந்திய அணிக்கு,  சப்போட் பண்ணுறது இல்லை. 
நடராஜனுக்காக... இன்று ஆதரவாளர் ஆகிவிட்டேன்.

சிறி உங்களைப் போலவே நானும் இந்தியா தோற்பதில் ஒரு சிற்றின்பம் கண்டேன்.

நடராஜன் இந்த போட்டியில் சேர்க்கப்படுவதாக இருக்கவில்லை.
முதல் இரண்டு போட்டியிலும் தோல்வி.வேகப்பந்து வீச்சாளர் காயம்.
வெளியே இருந்து நடராஜனுக்கு ஆதரவாக எழும்பிய குரல்கள்.
என்று இந்திய அணியை நிர்ப்பந்தப்படுத்தியதாலேயே இந்த போட்டியில் இறக்கப்பட்டுள்ளார்.

மிகவும் ஏழ்மையில் இருந்த நடராஜன் முதல் இருவருடங்கள் சப்பாத்து வாங்க பணம் இல்லாமல் வெறும் காலுடன் விளையாடியதாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Eppothum Thamizhan said:

அற்புதமான டெத் ஓவர் பௌலர். யொக்கர்களை மிக துல்லியமாக வீசக்கூடியவர். தொடர் வாய்ப்புகள் கிடைத்தால் ஒருநாள் , டி20 போட்டிகளில் நல்ல பௌலராக வர வாய்ப்புண்டு!

சர்வதேச முதல் போட்டியிலும் டெத் ஓவர் மிக அருமையாக வீசியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

101 % உண்மை .. 8 போட்டிகளில் மட்டும் வாய்ப்பாளித்து இவரை தூக்கிவிட்டார்கள் தோழர் ..

http://m.espncricinfo.com/india/content/player/30157.html

யூசுயூப் யோகனா என்ட பாக்கி 2000 ஆம் ஆண்டில் ஒரு போட்டியில் இவரை பிரித்து மேய அதை சாட்டி அனுப்பிவிட்டார்கள்..😢

உண்மைதான். 

குமரனுக்கும் டெஸ்ட் விளையாட கிடைக்கவில்லை.

இதுவரைக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஒரு தமிழனும் இந்தியாவை பிரதிநிதிதுவபடுத்தவில்லை.

பெரியாரின் கரங்கள் நீளாத அல்லது நீளமுடியாத துறைகளில் தமிழ்நாட்டு கிரிகெட் கட்டுப்பாட்டு சபையும் ஒன்று. 

அன்றுமுதல் இது சீனி மாமாகளின் கையில்தான்.

என்ன பெரியார் இல்லாவிட்டால் தமிழகத்தின் எல்லா துறையும் இப்படி இருந்திருக்கும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-12-04-10-29-27-282-com-a 

.. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BOWLINGOMRWECON0s4s6sDL Chahar

 
402917.251031Washington Sundar401604.001310Mohammed Shami
 
4046011.50743T Natarajan
 
403037.50711YS Chahal
 
402536.25710

இன்று 20 ஓவர்கள் கொண்ட போட்டியில் 3 விக்கட்டுகளை வீழ்த்திய நடராஜன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மொகமட் சமி 4 ஓவர்கள் போட்டு 46 ரண்கள் கொடுத்து விக்கட் எதுவுமில்லை.

நடராஜன் 4 ஓவர்கள் போட்டு 30 ரண்கள் கொடுத்து 3 விக்கட் வீழ்த்தியுள்ளார்.

முதலாவது   T20 யில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷஹால் – நடராஜன் சிறப்பிக்க; வென்றது இந்தியா!

IMG_20201204_173158-960x540.jpg?189db0&189db0

 

சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ரி-20 தொடரின் முதலாவது போட்டி இன்று (04) கன்பெராவில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி ஷஹால் – நடராஜனின் அசத்தலான பந்துவீச்சு துணையுடன் 11 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் லோகேஸ் ராகுல் 40 பந்துகளில் (51), ரவீந்திர ஜடேயா 23 பந்துகளில் (44*) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் மோசஸ் ஹென்ரிகியூஸ் (22/3), மிச்சல் ஸ்ராக் (34/2) விக்கெட்களை கைப்பற்றினர்.

வெற்றியிலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் அரோன் பிஞ் (45), டி’அர்சி சோர்ட் (34) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜஷ்விந்தர் ஷஹால் (25/3), நடராஜன் (30/3) விக்கெட்களை கைப்பற்றினர்.

https://newuthayan.com/முதலாவது-ரி-20-அவுஸ்திரேலி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் 6.30 நிமிடத்தில் வாழைப்பழம் மாதிரி வந்த பந்தை தவறவிடுகிறார் கோலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார்க்கர் கிங் நடராஜனை ஏன் கொண்டாட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.