கருத்துக்கள உறவுகள் goshan_che 2,279 பதியப்பட்டது December 2, 2020 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது December 2, 2020 (edited) கொவிட் தொற்றுக்கு எதிரான பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஐக்கிய இராச்சியத்தின் மருத்து கட்டுப்பாடு அமைப்பு இன்று (02/12/20) காலை பாவனைக்கு ஏற்றதாக அங்கீகரித்துள்ளது. மேற்குலகில் முதலாவது தடுப்பூசி அங்கீகாரம் இதுவாகும். வரும் திங்கள் முதல் முன்னணி மருத்துவ பணியாளருக்கு இத்தடுப்பூசி வழங்கபடும் என எதிர்பார்க்க படுகிறது. https://www.theguardian.com/society/2020/dec/02/pfizer-biontech-covid-vaccine-wins-licence-for-use-in-the-uk Edited December 2, 2020 by goshan_che Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் suvy 7,810 Posted December 2, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 2, 2020 நல்ல செய்தி பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றி கோஷன் சே.....! 1 Quote Link to post Share on other sites
nunavilan 3,560 Posted December 2, 2020 Share Posted December 2, 2020 நல்ல விடயம். ஏனைய நாடுகளும் ஐக்கிய ராட்சியத்தை பின்பற்றும். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் சுவைப்பிரியன் 816 Posted December 2, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 2, 2020 நல்ல விடயம். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,718 Posted December 2, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 2, 2020 பைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்: அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 95 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், பைசர் - பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் எனவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் பைசர் தடுப்பூசியை பொது பயன்பாட்டுக்கு அனுமதித்த முதல் நாடு பிரிட்டன் ஆகும். https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/02131212/UK-First-To-Approve-Pfizer-Vaccine-Covid-Shots-Likely.vpf Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,718 Posted December 8, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2020 பிரித்தானியாவில் முதலாவது கொரோனா மருந்து 90 வயது பெண்மணிக்கு பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. மார்கரெட் கீனன் என்ற 90 வயது பெண்மணிக்கு முதலாவது மருந்து வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் 91வயதாகும் மார்கரெட் கீனன் “இது சிறந்த பிறந்த நாள் பரிசு” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தையடுத்து இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது. https://thinakkural.lk/article/96248 Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.