Jump to content

யாழ்ப்பாணத்தில் வீதியில் கிடந்த நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்தில் சிக்கியவர் பலி

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

neethu-300x160.jpg
யோகநாதன் ஜெகதீஸ்வரன் (43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த இவர் கடந்த தீபாவளி நாளில் (14) வடமராட்சி பகுதிக்குச் சென்று திரும்பி வரும்போது, வல்லைச் சந்தியில், சமயச்சடங்கிற்காக யாரோ உடைத்த நீத்துப் பூசணிக்காயில் மோட்டார் சைக்கிள் சறுக்கிய வேளை, எதிரே வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானார்.

உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணித்தார்.

குறித்த மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

கழிப்பு கழிக்கிறதெண்டு நீத்து பூசணிக்காயை நடு  றோட்டிலை உடைச்சிருக்குதுகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படி நீத்துப் பூசணிக்காயை வெட்டி நடு றோட்டில போடுபவர்களுக்கு நல்ல தண்டனை கொடுக்க வேண்டும் ...வர,வர யாழ்ப்பாணம் மூட நம்பிக்கையின் கூடாராமாய் மாறிட்டு வருது 

Link to post
Share on other sites

தவிர்க்கப்படக் கூடிய விபத்து. வீதிபரிபாலனத்தாரின் கவனக்குறைவும் வாகனமோட்டுவோரின்.. அதிமேதாவித்தனமும் தான் இதற்கு முக்கிய காரணம். 

யாழ்ப்பாணத்தில் மட்டுமா மூடநம்பிக்கை..

லண்டனில் மட்டும் என்னவாம்.

புதுக்கார் வாங்கினால்.. பூசனிக்காய் உடைப்பு.. நாலு சில்லுக்கும் தேசிக்காய் வைச்சு நசுக்கல்.. வீட்டு வாசலில் தேசிக்காய்.. மிளகாய் கோர்த்துக்கட்டல்... இப்படி எத்தனையோ கூத்துக்களை நம்மவர்கள் அரங்கேற்றினமே... 

 • Like 2
 • Haha 1
Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.

கழிப்பு கழிப்பது போன்ற மூடச்செயல்களில் ஈடுபடுவது அவரவர் தனி உரிமை. உங்கள் வீட்டுக்குள் என்ன கறுமத்தையாவது செய்யுங்கள்.

ஆனால் இப்படி வீதியில் போட்டு உடைத்து, கழிப்பு கழித்து ஒரு குடும்பத்தையே சாபத்தில் தள்ளி விட்டவருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

கொலை குற்றம் சாட்ட முடியாவிட்டாலும், கவனயீனம் காரணமாக சாவை ஏற்படுத்தியமைக்கு manslaughter வழக்கு போட்டு உள்ளே தள்ளினால்தான் அடுத்து ரோட்டில் பூசணியை உடைக்கும் போது யோசிப்பார்கள்.

இப்படி எழுதலாம் என்றுதான் நினைத்தேன், பிறகு கொஞ்சம் ஆற, அமர யோசித்துப்பார்த்தால், பிழை ரோட்டு கூட்டுபவர்கள் மீதும் வாகனமோட்டி மீதும்தான் என்று உறைத்தது.

வீதி நெடுகிலும் சிசிடிவி வைத்தும், டிரோன்கள் மூலமும், வீதியில் வீசப்படும் பூசணிகளை அடையாளம் கண்டு அரை மணிக்குள் நீக்கி இருக்க வேண்டும். இப்படி செய்யாமல் விட்டது இலங்கை அரசின் ஒரு அங்கமான ரோட்டு கூட்டுவோரின் பிழை.

இதை தமிழர்கள் மீதான அடக்குமுறையின் ஒரு அங்கம் எனவும் பார்கிறேன். 

அதைபோல, வாகன ஓட்டியும் வீதியில் பூசணி சிதறி கிடந்தால், அப்படியே திரும்பி மாற்றுபாதை வழியாக போய் இருக்கலாம்.

இதை எல்லாம் விடுத்து, மத அனுஸ்டானம் நிமித்தம் பூசணியை வீதியில் விட்டெறிந்தவரை நிந்திப்பது, அவர் தமிழ் இந்து என்பதாலேதான்.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இப்படி நீத்துப் பூசணிக்காயை வெட்டி நடு றோட்டில போடுபவர்களுக்கு நல்ல தண்டனை கொடுக்க வேண்டும் ...வர,வர யாழ்ப்பாணம் மூட நம்பிக்கையின் கூடாராமாய் மாறிட்டு வருது 

யாழ்ப்பாணத்தான்  பூசணிக்காயை வீட்டு முகட்டிலை கட்டிலாலும் சரி ரோட்டிலை போட்டு உடைச்சாலும் சரி அது மோட்டு மூட நம்பிக்கை. அதையே வெள்ளைக்காரன் செய்தால் கலோவின். கலோவின் வாழ்த்துக்கள்.

இலங்கை வீதிகள் ஐரோப்பிய வீதிகள் போல் பாதுகாப்பானது இல்லை. எனவே வாகன ஓட்டுனர்களுக்கு இப்படியானம் இடைஞ்சல்கள் பழக்கப்பட்டதாகவே இருக்கும். நடு ரோட்டில் மாடுகள் நாய்கள் என படுத்திருக்கும் நாட்டில் எதை எதிர்பார்க்கின்றீர்கள்?

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

தவிர்க்கப்படக் கூடிய விபத்து. வீதிபரிபாலனத்தாரின் கவனக்குறைவும் வாகனமோட்டுவோரின்.. அதிமேதாவித்தனமும் தான் இதற்கு முக்கிய காரணம். 

யாழ்ப்பாணத்தில் மட்டுமா மூடநம்பிக்கை..

லண்டனில் மட்டும் என்னவாம்.

புதுக்கார் வாங்கினால்.. பூசனிக்காய் உடைப்பு.. நாலு சில்லுக்கும் தேசிக்காய் வைச்சு நசுக்கல்.. வீட்டு வாசலில் தேசிக்காய்.. மிளகாய் கோர்த்துக்கட்டல்... இப்படி எத்தனையோ கூத்துக்களை நம்மவர்கள் அரங்கேற்றினமே... 

நெடுக்கர்  அதுமட்டுமா ஊரிலை கழிப்பு செய்யும் பச்சை பூசணிக்காய் இங்கு கிழமைக்கு 500 கிலோ தேவை ஆந்திராகாரர்களின் முக்கிய உணவே அதுதான் அத்துடன் கோங்குரா எனப்படும் புளிச்ச கீரை இருந்தால் காணும் அவர்களுக்கு .

கேட்டால் உடம்பு ஊளைச்சதையை குறைக்குமாம் என்கிறார்கள் உண்மையோ தெரியாது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

தவிர்க்கப்படக் கூடிய விபத்து. வீதிபரிபாலனத்தாரின் கவனக்குறைவும் வாகனமோட்டுவோரின்.. அதிமேதாவித்தனமும் தான் இதற்கு முக்கிய காரணம். 

5 hours ago, goshan_che said:

மத அனுஸ்டானம் நிமித்தம் பூசணியை வீதியில் விட்டெறிந்தவரை நிந்திப்பது, அவர் தமிழ் இந்து என்பதாலேதான்.

5 hours ago, குமாரசாமி said:

இலங்கை வீதிகள் ஐரோப்பிய வீதிகள் போல் பாதுகாப்பானது இல்லை. எனவே வாகன ஓட்டுனர்களுக்கு இப்படியானம் இடைஞ்சல்கள் பழக்கப்பட்டதாகவே இருக்கும். நடு ரோட்டில் மாடுகள் நாய்கள் என படுத்திருக்கும் நாட்டில் எதை எதிர்பார்க்கின்றீர்கள்?

திருஷ்டி கழிக்க பின்பற்றப்படும் சில பரிகாரங்கள்...!

ஆயுத பூஜை; சாலைகளில் பூசணி உடைத்து விபத்து ஏற்பட்டால் நடவடிக்கை: போக்குவரத்து போலீஸ் அறிவுறுத்தல் | Action taken in case of accident, pumpkin breaking on roads Advice ...

பூசணிக்காயை வீதியில் உடைத்துவிட்டு, 
அதற்கு சிவப்பு குங்குமம் பூசி விட்டுதான் செல்வார்கள்.
சிவப்பு என்பதன் அடையாளம், பாத்து கவனமாக போகவேண்டும் என்பதை...
எச்சரிக்கை, செய்வதற்காக பூசப் படுவதை, 
வாகன ஓட்டிகள் கவனிக்காமல் இருப்பதால்.. இப்படியான விபத்துகள் ஏற்படுகின்றது. 

 • Haha 1
Link to post
Share on other sites
5 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான்,

வீதி விளக்குகள் இல்லாத நிலையில், மம்மல் அல்லது இருட்டில் வரும் வாகன ஓட்டிகளும் பூசணியை இனம் காணும் வகையில், பூசணியை சுற்றி போக்கஸ் லைட் வைத்திருக்க வேண்டும். அப்படி வைக்காமல் விட்டது வீதிபரிபாலனத்தாரின் அசட்டையையே காட்டுகிறது.

எது எப்படியோ ஒரு வீதியின் பிரதான பயன்பாடு என்ன? பூசனியை போட்டு உடைப்பதுதானே? வீதியை ஏதோ போக்குவரத்துக்கு கட்டியது போல நினைக்கிறார்கள் இந்த வாகன ஓட்டிகள்.

பூசனி உடைக்கும் இடத்தால் கவனகுறைவாக வாகனம் ஓட்டியவர் சாவது அவரது தவறு.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சுவிற்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு மூடன் இப்படி பூசனிக்காயை நடு ரோட்டில் உடைத்து கழிப்பு கழிப்பது போன்ற முட்டாள்கள் மட்டுமே செய்யும் செயலை செய்து ஒரு விபத்தை உண்டாக்கி இருந்தால்  அந்த மூடன் வாழ்ககை முழுவதும் நினைத்து நினைத்து வருந்தும் அளவுக்கு தண்டனையை பெற்று இருப்பான். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

இதற்குத்தான் இலங்கை அரசியலை மாற்றுங்கள் என்கிறோம். ஐரோப்பாவைப்போல் சட்டங்களை அரசியலை கொண்டுவாருங்கள் என்கிறோம்.

Link to post
Share on other sites
36 minutes ago, tulpen said:

சுவிற்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு மூடன் இப்படி பூசனிக்காயை நடு ரோட்டில் உடைத்து கழிப்பு கழிப்பது போன்ற முட்டாள்கள் மட்டுமே செய்யும் செயலை செய்து ஒரு விபத்தை உண்டாக்கி இருந்தால்  அந்த மூடன் வாழ்ககை முழுவதும் நினைத்து நினைத்து வருந்தும் அளவுக்கு தண்டனையை பெற்று இருப்பான். 

தனிமனித பொறுப்புகூறல் அறவே அற்ற சமூகம் நாம். நாம் நடுரோட்டில் அசுத்தம் செய்வோம் ஆனால் நம் மீது ஒரு தவறும் இல்லை, அதை அள்ளாத உள்ளூராட்சி சபை மீதுதான் பிழை என்போம்🤣

இந்த எண்ணபோக்கை மாற்றாதவரை என்ன சட்டம் போட்டும் பலனில்லை. 

ஊரில் இருந்து ஐரோப்பா வந்து பல பத்து ஆண்டுகள் உருண்டோடிய பின்பும், பூசணிக்காயில்தான் பிழை, தோட்டம் வைத்த விவசாயி பூசணியை நீர்தன்மையாக வளர்த்ததுதான் பிழை என எழுதும், பூசணிகாயை நடுரோடில் எறிந்த முட்டாளின் தப்பை கண்டுகொள்ள முடியாத எம் உறவுகளுக்கே எம்மால் சொல்லி விளங்கபடுத்த முடியவில்லை.

இதை போய் இலங்கையில் 24 மில்லியனுக்கு சொல்லி......

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

வீதி விபத்துகள் தொடர்பான செய்திகளில் வரும் இன்னுமொரு கருத்து இன்னும் வரவில்லை: "இனவாத சிங்கள பௌத்த அரசு, வீதிகளை தமிழர் பகுதிகளில் ஒரு shoulder கூட இல்லாமல் வைத்திருப்பதால் தான் இப்படியான விபத்துகள் நடக்கின்றன!" 

(பூசணிக்காயை விடுங்கள், ஏ 9 வீதியை கார்பெற் வீதியாக மாற்றி, வாகனங்களின் வேகம் கூடிய பின்னரும், 20 தொன் ரிப்பர் லொறியை வீதியிலேயே நிறுத்தி வைத்து விட்டு சாரதி சுச்சா போகிற அளவுக்குத் தான் எங்கள் மக்களின் சமூக அக்கறை இருக்கிறது!)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

சரியாக சொன்னீர்கள் கோஷான். 2009 ல் ஜெனீவா பேரணிக்கு சென்ற தமிழர்களின் பஸ் உண்வு அருந்துவதற்காக ஒரு motorway rest area வில் நிறுத்தப்பட்டு பின் புறப்பட்ட பின்னர் சில மீற்றர்களில் அந்த service area  பராமரி்ப்பாளரால்  நிறுத்தப்பட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்துமாறு பணிக்கப்பட்டனர். பார்கக அருவருக்கும்   அளவுக்கு மிக மோசமாக அந்த இடத்தை  ஆக்விகிவிட்டு  செல்ல முற்பட்டவர்கள் அனைவரும் தமக்கு  சுதந்திர நாடு வேண்டி முழக்கமிட சென்றவர்கள். 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதற்குத்தான் இலங்கை அரசியலை மாற்றுங்கள் என்கிறோம். ஐரோப்பாவைப்போல் சட்டங்களை அரசியலை கொண்டுவாருங்கள் என்கிறோம்.

ஏதோ நீங்கள் இலங்கை அரசியலை மாற்றுங்கள் என்று கூற நாங்கள் தான் மாற்றவிடமல் இழுத்து பிடித்து வைத்திருப்பது போலிருக்கிறது உங்கள் கதை.

மகிந்த, கோத்தபாய போன்ற அதி உச்ச இனவெறியர்கள்  பதவிக்கு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திய அரசியல் அறிவிலிகளிடம் நீங்கள்  கேட்டிருக்கவேண்டும் இந்த கேள்வியை. 

Link to post
Share on other sites
37 minutes ago, Justin said:

வீதி விபத்துகள் தொடர்பான செய்திகளில் வரும் இன்னுமொரு கருத்து இன்னும் வரவில்லை: "இனவாத சிங்கள பௌத்த அரசு, வீதிகளை தமிழர் பகுதிகளில் ஒரு shoulder கூட இல்லாமல் வைத்திருப்பதால் தான் இப்படியான விபத்துகள் நடக்கின்றன!" 

(பூசணிக்காயை விடுங்கள், ஏ 9 வீதியை கார்பெற் வீதியாக மாற்றி, வாகனங்களின் வேகம் கூடிய பின்னரும், 20 தொன் ரிப்பர் லொறியை வீதியிலேயே நிறுத்தி வைத்து விட்டு சாரதி சுச்சா போகிற அளவுக்குத் தான் எங்கள் மக்களின் சமூக அக்கறை இருக்கிறது!)

வீதியோரங்களில் சுச்சா போகும் இடங்களை ஏற்படுத்தி கொடுக்காமை அரசாத்தின் பிழை. ஐரோப்பாவில் இருப்பது போல் சேர்விஸ் ஸ்டேசன்களை இலங்கை அரசு ஏன் கட்டவில்லை?

அரசு கட்டித்தரவில்லை என்றால் நாங்கள் நடுவீதியில்தானே போகமுடியும்?

ஏதாவது ஒரு தேனீர்கடையில் ஓரமாக பாதுகாப்பாக நிப்பாடி விட்டு போகலாமே என நீங்கள் கேட்பது புரிகிறது - அதெல்லாம் எமது கலாச்சாரத்துக்கு ஒவ்வாது. 

அதனால் சுச்சா-நிறுத்தத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கு அரசுதான் பொறுப்பு.

தமது பகுதிகளில் மட்டும் வண்டியை பெருந்தெருவில் இருந்து இறக்கி ஓரம் கட்டிவிட்டு சுச்சா போகும் சிங்கள டிரைவர்மார் எமது பகுதியில் இப்படி செய்வது structural genocide இன்னொரு அங்கம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கும் வீதிக்கும்  வித்தியாசம் தெரியாத சனத்திடம் எதை  எதிபார்க்கமுடியும்????

ஒரு உயிர் போச்சு

அஞ்சலிகள்

 • Like 1
Link to post
Share on other sites
1 hour ago, tulpen said:

சரியாக சொன்னீர்கள் கோஷான். 2009 ல் ஜெனீவா பேரணிக்கு சென்ற தமிழர்களின் பஸ் உண்வு அருந்துவதற்காக ஒரு motorway rest area வில் நிறுத்தப்பட்டு பின் புறப்பட்ட பின்னர் சில மீற்றர்களில் அந்த service area  பராமரி்ப்பாளரால்  நிறுத்தப்பட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்துமாறு பணிக்கப்பட்டனர். பார்கக அருவருக்கும்   அளவுக்கு மிக மோசமாக அந்த இடத்தை  ஆக்விகிவிட்டு  செல்ல முற்பட்டவர்கள் அனைவரும் தமக்கு  சுதந்திர நாடு வேண்டி முழக்கமிட சென்றவர்கள். 

நீங்கள் இதை சொல்லும் போது இன்னுமொன்று நினைவில் வந்தது - வெஸ்மினிஸ்டர் போராட்டகாலத்தில் ஓரளவு வயது வந்தவர்கள் சாப்பிட்ட பொருட்களை ஆங்காங்கே போட, அதே போராட்டத்தில் கலந்து கொண்ட இளவயது TYO பிள்ளைகள் bin bagஉம் கையுமாக அவற்றை பொறுக்கி, பொறுக்கி எடுதார்கள். 

ஆனால் 2009 க்கு முன் புலிகள் ஏற்பாடு செய்த மிகபெரிய கூட்டங்களில் கூட மிக ஒழுக்கமாக, நேர்தியாக நடைமுறைள் இருக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

பூசணிக்காயை விடுங்கள், ஏ 9 வீதியை கார்பெற் வீதியாக மாற்றி, வாகனங்களின் வேகம் கூடிய பின்னரும், 20 தொன் ரிப்பர் லொறியை வீதியிலேயே நிறுத்தி வைத்து விட்டு சாரதி சுச்சா போகிற அளவுக்குத் தான் எங்கள் மக்களின் சமூக அக்கறை இருக்கிறது!

சுச்சா போறதுக்கு வீதியோரங்களில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு தூரம் மலசல கூடங்கள் கட்டி ஒழுங்கு செய்வது அரச கடமை. அது பொது மக்களாகிய குப்பன் சுப்பன் வேலையல்ல....வெளிநாடு வந்தும் இந்த அறிவு வரேல்லை எண்டால்.......

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பதிலுக்கு நன்றி ...உடம்பை விட வண்டியை குறைப்பது தான் பிரச்சனையாய் இருக்கு ...காலமை எழும்பி கோப்பி குடிக்காட்டி எனக்கு எந்த வேலையும் ஓடாது ...எதற்கும் பார்ப்பம் 
  • இங்கே UK யில் IT காண்ட்ராக்டர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு மோதல். நாம் ஒரு LTD கம்பெனி ஆரம்பித்து, அதுக்கு தான் எமது பணம் வரும். வருட இறுதியில், வரி கட்டிக்கொள்ளலாம். போனவருடம் ஏப்ரல் 6ம் திகதி முதல், காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு கொடுக்க முதல், நிரந்தர ஊழியர்கள் போல் வரியை கழித்து கொடுக்குமாறு அரசு சொல்லிவிட்டது. அப்படியானால். ஹாலிடே pay, sick pay நிறுவனம் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்க, நிறுவனங்களோ... என்னது..... அது நிரந்தர ஊழியர்களுக்கு தான். உங்களுக்கு இல்லை என்ற.... அப்ப எதுக்கு கழிக்க நிக்குறீர்.... என்று மல்லுக்கட்ட... பிரச்சனை பாராளுமன்று வரை போய், கோரோனோ காரணமாக இந்த வருடம் ஏப்ரல் வரை தள்ளி வைத்துவிட்டார்கள். இந்த இடைபட்ட காலத்தில்,  காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு, linked in, வலைத்தளத்தில் இந்த வரிகளை ஒழுங்கா கொடுங்கோ என்று, இவர் நியாயத்தினை கதைப்போம் போல, புத்தி மதிகளை அள்ளி அடித்துக் கொண்டிருந்தார்கள். இது பொதுவாக பொறுமையாகவே கருதப்பட்டது. நாங்கள், சட்டப்படி கம்பெனி திறந்து, சட்டப்படியே வரி செலுத்துகிறோம். சட்டத்தினை பாராளுமன்றத்தில் மாத்தி கொண்டு வாங்கோ... இருக்கிற சட்டப்படி, வரியை, ஒரு முதலாளி, கழித்தால், அவர் holiday pay, sick pay கொடுக்க வேண்டும். அதுவும் தரமுடியாது. வரியினையும் முதலே கழிப்போம் என்றால் நியாயமும் இல்லை. சட்டமும் இல்லை என்று காண்ட்ராட் வேலை செய்பவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். வெள்ளை காண்ட்ராட் வேலை காரர்கள் சங்கம் வேறு அமைத்து விட்டார்கள். கொரோனா தொடர்வதால், அரசு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
  • முகப்புத்தகம் வந்த பிறகு யாழிற்கு வருவது குறைவு. முகநூலில் சொந்தப்பெயரில் இருப்பதால்  எல்லா உறவுகளையும் இணைக்க முடியாது.
  • நல்ல பெற்றோர்கள் கிடைத்தால் தானே நல்ல பிள்ளை உருவாகும் 
  • இப்போது சீனா கட்டும் சில கொழும்பு திட்டங்களில் வெளியே இருக்கும் பலகையில் சீன மொழி மட்டுமே இருக்கும் பலகைகைளையும் கண்டேன்.  வேண்டும் என்றே வெள்ளவத்தையில் கொழும்பு"துரை" முகம் என்று தமிழில் பிழையாக எழுதி வைத்திருக்கிறார்கள்.  வினை விதைத்தால் திணையா விளையும்?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.