Jump to content

இலங்கையின் பூர்வீகக் குடிகளான... தமிழ் இந்துக்கள், திட்டமிட்டு அவமதிப்பு – தமிழ் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் இந்துக்கள் திட்டமிட்டு அவமதிப்பு – தமிழ்  கட்சிகள் கூட்டாகக் கண்டனம்! | Athavan News

இலங்கையின் பூர்வீகக் குடிகளான... தமிழ் இந்துக்கள்,  திட்டமிட்டு அவமதிப்பு – தமிழ் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்!

கார்த்திகைத் திருநாளன்று, வடக்கு கிழக்கில் தமிழ் இந்துமக்கள் தீபங்களை ஏற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கண்டித்து, தமிழ் தேசியக் கட்சிகள் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசியக் கட்சி, தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளின் சார்பில் மாவை சேனாதிராஜா கையெழுத்திட்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் எனவும் அவர்களுக்கு மிகவும் தொன்மையான மொழி, மத, கலாசார பண்பாடுகள் உண்டு எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரம்பரியமாகவே மத அனுஸ்டானங்களையும், கலாசார பண்பாடுகளையும் மிக இறுக்கமாகப் பின்பற்றி வரும் ஒரு இனமாகவே தமிழ் தேசிய இனம் இலங்கை மண்ணில் வாழ்ந்து வருகின்றது.

அவர்களது கலாசாரப் பண்பாடுகளைப் பற்றிப் பிடிப்பதற்காகவும் அவற்றை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழ் தேசிய இனம் தொடர்ந்தும் போராடி வருகின்றது.

அவற்றைத் தட்டிப்பறிக்க முனைபவர்களுக்கு எதிராக விட்டுக்கொடுப்பு இன்றித் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தமிழ் இந்து மக்களின் பாரம்பரிய மத அனுஸ்டானமான கார்த்திகை விளக்கீட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இலங்கையின்-பூர்வீகக்-குட/

Link to comment
Share on other sites

கொழும்பில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் வடக்கில் ராணுவமும் , போலீசும் இரண்டையும் போட்டு குழப்பிவிடடார்களோ தெரியவில்லை. ஆனால் தமிழ் இந்துக்களை மட்டும்தான் அவர்க அவமானப்படுத்துவர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

கொழும்பில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் வடக்கில் ராணுவமும் , போலீசும் இரண்டையும் போட்டு குழப்பிவிடடார்களோ தெரியவில்லை. ஆனால் தமிழ் இந்துக்களை மட்டும்தான் அவர்க அவமானப்படுத்துவர்களா?

வங்காலையன் ஆக மொத்தத்தில் நீங்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே தான். ஞாயிற்றுக்கிழமை என்ன நடந்தது என்று இங்கு யாழிலேயே உள்ளது. பொறுமையாக வாசியுங்கள்.

***

Link to comment
Share on other sites

4 hours ago, MEERA said:

வங்காலையன் ஆக மொத்தத்தில் நீங்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே தான். ஞாயிற்றுக்கிழமை என்ன நடந்தது என்று இங்கு யாழிலேயே உள்ளது. பொறுமையாக வாசியுங்கள்.

***

மீரா, நானும் நல்லாக வாசித்துதான் எழுதினேன். ****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

மீரா, நானும் நல்லாக வாசித்துதான் எழுதினேன். ****

பிறகேன் குழப்பிவிட்டார்களோ என்று சொதப்புகிறீர்கள்....

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

பிறகேன் குழப்பிவிட்டார்களோ என்று சொதப்புகிறீர்கள்....

குழப்பாமல் என்ன செய்தார்கள்?சொதப்பல் மாதிரித்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Robinson cruso said:

குழப்பாமல் என்ன செய்தார்கள்?சொதப்பல் மாதிரித்தான் தெரியும்.

ஏன் மறுபடியும் சொதப்புகிறீர்கள்? 

சீறிலங்கா இராணுவத்திற்கும் பொலீசுக்கும் 27ம் திகதிக்கும் 29ம் திகதிக்கும் வித்தியாசம் தெரியவில்லை வெள்ளிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

சளாப்பாமல் கருத்தை துணிந்து வையுங்கள்.

“ஆனால் வடக்கில் ராணுவமும் , போலீசும் இரண்டையும் போட்டு குழப்பிவிடடார்களோ தெரியவில்லை“

Link to comment
Share on other sites

6 hours ago, MEERA said:

நான் ஒன்றயும் சொதப்பவில்லை.  நான் எப்போதும் துணிந்து சரியான கருத்தை வைப்பதட்கு தயங்குவதில்லை.

நீங்கள் கடைசி வரியில் எழுதிய வரிகள்தான் எனது கருதும். ஆனால், வீரசேகராவின் நேற்றைய பாராளுமன்ற பேச்சை கேட்ட்டபோது இது வேண்டுமென்று செய்ததாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Robinson cruso said:

நான் ஒன்றயும் சொதப்பவில்லை.  நான் எப்போதும் துணிந்து சரியான கருத்தை வைப்பதட்கு தயங்குவதில்லை.

நீங்கள் கடைசி வரியில் எழுதிய வரிகள்தான் எனது கருதும். ஆனால், வீரசேகராவின் நேற்றைய பாராளுமன்ற பேச்சை கேட்ட்டபோது இது வேண்டுமென்று செய்ததாகவும் இருக்கலாம்.

மீண்டும் குழப்பம் அல்லது சொதப்புகிறீர்கள்.

அந்த வரிகள் நீங்கள் எழுதியது.

எப்படி ஒர் அரசாங்கம் / நிர்வாகம் 27ம் திகதிக்குத் 29ம் தகதிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்க முடியும்.

மறுபடியும் “ இருக்கலாம்” என்று மதில் மேல் பூனையாகவே இருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

மீண்டும் குழப்பம் அல்லது சொதப்புகிறீர்கள்.

அந்த வரிகள் நீங்கள் எழுதியது.

எப்படி ஒர் அரசாங்கம் / நிர்வாகம் 27ம் திகதிக்குத் 29ம் தகதிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்க முடியும்.

மறுபடியும் “ இருக்கலாம்” என்று மதில் மேல் பூனையாகவே இருக்கிறீர்கள்.

மதில்ல எல்லாம் ஒரு பூனையும், பூச்சியும் கிடையாது. நான் எழுதினது உங்களுக்கு விளங்கவில்லை. நேற்றைய வீரசேகராவின் பேச்சின் பின்னர் எண்டுதான் எழுதி இருக்கிறேன். மீண்டும் வாசிக்கவும். மீண்டும் வாசிக்கவும். மீண்டும் வாசிக்கவும். விளங்கிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

மீண்டும் குழப்பம் அல்லது சொதப்புகிறீர்கள்.

அந்த வரிகள் நீங்கள் எழுதியது.

எப்படி ஒர் அரசாங்கம் / நிர்வாகம் 27ம் திகதிக்குத் 29ம் தகதிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்க முடியும்.

மறுபடியும் “ இருக்கலாம்” என்று மதில் மேல் பூனையாகவே இருக்கிறீர்கள்.

வங்காலையான் கூறியது,

தமிழர்கள் எனும்போது அதற்குள் சைவர்கள் மட்டும் அடக்கம் அல்ல. கிறீத்துவர்களும் அடக்கம். தமிழ்க் கிறீத்தவர்களும் கார்த்திகை விளக்கீட்டைச் செய்கிறார்கள். அப்படியிருக்கும்போது தனியே தமிழ் சைவர்களை மட்டும் குறிப்பிட்டுக் கூறுவது சரியானதுதானா ? என்பதுதான்.

(இப்படித்தான் நான் விளங்கிக் கொண்டேன்.. சரியா வங்காலையான்.. ? 😎)

Link to comment
Share on other sites

10 hours ago, Kapithan said:

அதேதான். சரியாக விளங்கிக்கொண்டீர்கள். உங்களுக்கு எனது தமிழ் நல்ல விளங்குது. நன்றி காப்பிதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.